Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? – 2

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த முறை பாகம் - 1 இனை இணைத்தபோது யாழ். கள நிர்வாகம் அதனை முழுமையாக நீக்கியது. எத்தனையோ தவறான தகவல்களை இதில் வெளியிடும் போது நோர்வே வெளியிட்ட அறிக்கையினை மையமாக வைத்து எழுதப்படுகின்ற கட்டுரையினை நீக்குவதன் மர்மம் புரியவில்லை.

நார்வேயும் அமெரிக்காவும் புலிகளை ஆயுதங்களை கீழே வைக்கச் செய்யும் முயற்சியில் தமக்குள்ளே திட்டம் போடத் தொடங்கியது பிப்ரவரி மாத நடுப்பகுதியில். இது நடைபெற்ற காலப்பகுதியில் ராணுவத்தினால் முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் (தளபதிகள், பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள்) உயிருடன் இருந்தார்கள்.

அமெரிக்க-நார்வே திட்டம் 4 அம்சங்களுடன் உருவாகிவிட்ட நிலைமையில்தான் புலிகளின் சார்பில் கே.பி. என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதன் அல்லது செல்வராசா பத்மநாதனுடன் இந்த ஏற்பாடு பற்றி மேலும் விவாதிக்க விரும்பியது நார்வே. அப்போது மலேசியாவில் தங்கியிருந்த கே.பி.-யுடன் பிப்ரவரி 26-ம் தேதி நார்வே அதிகாரிகள் சந்தித்து தமது திட்டம் பற்றி பேசினர்.

புலிகளின் சார்பாகப் பேசுவதற்கு நார்வே, கே.பி.யை தேர்ந்தெடுத்தது எதற்காக என்பதைத் தெரிந்துகொள்ள முன், இது நடைபெற்ற நாட்களில் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா ராணுவத்துக்கும் இடையிலான யுத்தம், எங்கே நடைபெற்றுக் கொண்டு இருந்தது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

அப்போதுதான் புலிகள் பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ ரீதியில் எந்த நிலையில் இருந்தார்கள் என்று தெரிந்து கொள்ள முடியும். காரணம், யுத்தம் முடிவடைவதற்கு இரண்டரை மாதங்களே மீதமிருந்த சூழ்நிலை அது.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னி பகுதியில் ஸ்ரீலங்கா ராணுவம், 2007-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தரை மார்க்க யுத்தத்தை ஆரம்பித்தது. ராணுவத்தின் 57-வது டிவிஷன் படைப்பிரிவு வவுனியா பகுதியில் தாக்குதலை தொடங்கியது. அங்கே தாக்குதல்களை நடைபெற்றுக் கொண்டிருக்க, செப்டெம்பர் மாதத்தில் இரண்டாவது போர்க்களம் ஒன்றை மன்னார் மாவட்டத்தில் திறந்தது ராணுவம். ராணுவத்தின் அதிரடிப்படை-1 இந்தக் களமுனையில் புலிகளை தாக்கியது.

இந்த இரு முனைகளிலும் புலிகளால் சில மாதங்களுக்கு தாக்குப்பிடிக்க முடிந்தது.

இந்த இரு முனைகளிலும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்க, ஜனவரி 2008-ல், 3-வது போர்க்களத்தை வெலிஓயாவில் திறந்தது ராணுவம். இந்த முனையில் புலகளைத் தாக்கியது ராணுவத்தின் 59-வது டிவிஷன் படைப்பிரிவு.

இப்படியே வெவ்வேறு இடங்களில் போர்க்களங்களை திறப்பதன் மூலம், ஸ்ரீலங்கா ராணுவத்தின் 5 டிவிஷன் படைப்பிரிவுகளும், 3 அதிரடிப்படை படைப்பிரிவுகளும் இணைந்து 8 வெவ்வேறு இடங்களில் தாக்கத் தொடங்கின. புலிகள் ஒவ்வாரு முனையிலும் பின்வாங்கத் தொடங்கினர்.

முதலில் தாக்கத் தொடங்கிய 57-வது டிவிஷன் படைப்பிரிவு மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தலைமையில் கிளிநொச்சி நகரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. 2009-ம் ஆண்டு புத்தாண்டு தினத்துக்கு மறுநாள் (ஜனவரி 2-ம் தேதி) கிளிநொச்சி நகரம் 57-வது படைப்பிரிவால் கைப்பற்றப்பட்டது. புலிகள், பின்வாங்கி முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் சென்றனர்.

மறுபக்கத்தில் 58-வது டிவிஷன் படைப்பிரிவு அடம்பன் டவுனில் தொடங்கி, ஒவ்வொரு இடமாக கைப்பற்றியபடி நகர்ந்தது. முள்ளிக்கண்டல், பரப்பக்கண்டல், பாப்பாமோட்டை என்று இடங்களைக் கைப்பற்றிச் சென்ற இந்த டிவிஷன், பெரியமடு என்ற இடத்துக்கு வந்தபோது, 57-வது படைப்பிரிவும் மற்றொரு பாதையில் இடங்களைக் கைப்பற்றியபடி அங்கு வந்திருந்தது.

பெரியமடுவுக்கு தென்மேற்கே இரு டிவிஷன்களும் இணைந்து கொண்டன.

அதன்பின் 58-வது படைப்பிரிவு விடத்தல் தீவு நோக்கி நகர்ந்து, அதைக் கைப்பற்றியது. தொடர்ந்து, நாச்சிக்குடா, நொச்சிமோட்டை, பூநேரி, பரந்தன், தர்மபுரம், விஸ்வமடு டவுன் என்ற பாதையிலுள்ள அனைத்து இடங்களையும் கைப்பற்றியபின், இந்தக் கட்டுரையில் கே.பி.-யை நார்வே சந்தித்ததாக நாம் குறிப்பிடும் பிப்ரவரி 26-ம் தேதியில் தேவிபுரம் என்ற இடம்வரை வந்துவிட்டிருந்தது.

பிரிகேடியர் சவேந்திர சில்வாவின் தலைமையில் இயங்கிய படைப்பிரிவு அது. (அதிரடிப்படை-1 படைப்பிரிவுதான், 58-வது டிவிஷன் என பெயர் மாற்றப்பட்டிருந்தது)

மற்றொரு திசையில் புலிகளை தாக்கத் தொடங்கியிருந்த 59-வது படைப்பிரிவு, புலிகளின் முன்னகம் முகாமைக் கைப்பற்றியதுடன் தொடங்கி, ஜனவரி 25-ம் தேதி முல்லைத்தீவு டவுனை கைப்பற்றியிருந்தது. மறுமுனையில் 55-வது படைப்பிரிவு நகர்ந்து, சாலை என்ற இடத்தை பிப்ரவரி 5-ம் தேதி கைப்பற்றியிருந்தது.

அதிரடிப்படை-2, புளியங்குளம் டவுனை கைப்பற்றி, அங்கிருந்து நகர்ந்து ஒவ்வொரு இடமாகக் கைப்பற்றியபடியே ஜனவரி 21-ம் தேதி உடையார்கட்டு குளம் அணைக்கட்டை கைப்பற்றியிருந்தது. அதிரடிப்படை-3, மாங்குளத்தில் ஆரம்பித்து, அம்பகாமம் வரை வந்திருந்தது. அதிரடிப்படை-4 ஒட்டிசுட்டான் வரை கைப்பற்றியிருந்தது.

மொத்தத்தில், 2007-ல் பெரிய வன்னிப் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த புலிகள் ஒவ்வொரு முனையிலும் பின்வாங்க நேர்ந்ததில், மிகச் சிறிய பகுதி ஒன்றுக்குள் பெட்டிக்குள் அடைபட்டதுபோல முடக்கப்பட்டு இருந்த நிலையில்தான், பிப்ரவரி 26-ம் தேதி மலேசியாவில் புலிகளுக்காக அதிகாரபூர்வமாக பேசத் தொடங்கினார் கே.பி.

கே.பி. பேசத்தொடங்கிய தினத்தில், 57-வது டிவிஷன் விஸ்வமடு டவுனிலும், 58-வது டிவிஷன் தேவிபுரத்திலும், 59-வது டிவிஷன் முல்லைத்தீவு டவுனிலும், 55-வது டிவிஷன் சாலை கிராமத்திலும், அதிரடிப்படை-2 உடையார்கட்டு குளத்திலும், அதிரடிப்படை-3 அம்பகாமத்திலும், அதிரடிப்படை-4 ஒட்டுசுட்டானிலும் நின்றிருக்க, புலிகளின் போராளிகள் தளபதிகள், தலைவர் உட்பட சிறிய நிலப்பரப்பு ஒன்றில் முற்றுகையில் சிக்கியிருந்தனர்!

கே.பி.-யை புலிகளின் அதிகாரபூர்வ பேச்சாளராக நார்வே ஏற்றுக்கொண்டு அவருடன் பேசியதன் காரணம் என்ன?

இது நடப்பதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பு கே.பி-யை தமது பிரதான ராஜதந்திரியாக அறிவித்திருந்தது. புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் ஒன்றையும் வெளியிட்டிருந்தது (கடிதத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்) இங்கேயும் ஒரு விஷயத்தைக் கவனியுங்கள். யுத்தம் முடிவுக்கு வந்து, புலிகளின் தலைவர்கள் யாரும் தற்போது இல்லை என்ற நிலையில் இந்தக் கடிதம் பற்றிய வெவ்வேறு கருத்துக்கள் வெவ்வேறு தரப்புகளிடம் இருந்து வருகின்றன. ஆனால், குறிப்பிட்ட கடிதம் வழங்கப்பட்ட காலத்தில் அது பற்றிய சந்தேகத்தை யாரும் எழுப்பியிருக்க இல்லை.

இந்தக் கடிதம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த கடிதம் அல்ல. இதன் பிரதிகள் இணையத்தளங்களிலும் அச்சு ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன. யுத்தம் முடிவதற்குமுன், புலிகளின் முக்கியஸ்தர்கள் உயிருடன் இருந்த நிலையில் இந்தக் கடிதம் பகிரங்கப்படுத்தப் பட்டிருந்தது.

அப்போது இந்தக் கடிதம் பற்றி யாரும் சந்தேகத்தைக் கிளப்பவில்லை.

அந்தக் காலகட்டத்திலும், அதற்குப் பிறகு மே மாதம் நடுப்பகுதி வரையிலும், வன்னிக்குள் இருந்த புலிகளின் முக்கியஸ்தர்கள், அதன் தலைவர் பிரபாகரன் உட்பட, வெளியேயுள்ள பலருடன் தொடர்பில் இருந்தனர். அப்போதெல்லாம் இந்தக் கடிதம் பற்றி யாரும் சந்தேகத்தை எழுப்பவில்லை.

இது ஒரு போலியான கடிதமாக இருந்தால், கடிதம் வெளியான உடனேயே புலிகள் மறுத்திருப்பார்கள் (கடிதம் ஜனவரி 2009-ல் வெளியாகியிருந்தது). அதற்குப்பின் சுமார் 5 மாத காலத்தின் பின்னரே யுத்தம் முடிவுக்கு வந்தது. அந்த 5 மாதங்கள் என்பது மறுப்பு தெரிவிப்பதற்கு மிகத் தாராளமான கால அவகாசம்.

இந்தக் காலப்பகுதியில் புலிகளின் பிரதான ராஜதந்திரியாக கே.பி., புலிகளின் தலைவர் பிரபாகரனால் நியமிக்கப்பட்டது குறித்து வன்னிக்கு உள்ளேயிருந்து எந்த மறுப்பும் வரவில்லை. வன்னிக்கு வெளியேயிருந்து எந்த சந்தேகமும் எழுப்பப்படவில்லை.

இந்த உண்மை புரிந்தால், யுத்தம் முடிந்தபின், புலிகள் தரப்பில் இருந்து மறுப்பதற்கு யாருமில்லாத நிலையில், இதே கடிதம் பற்றி எழுப்பப்படும் சந்தேகங்கள் பற்றி, நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம்.

மொத்தத்தில் விடுதலைப்புலிகள் தொடர்பான ராஜதந்திர விவகாரங்களை இலங்கைக்கு வெளியே பேசுவது என்றால், பேசக்கூடிய அதிகாரமுடைய ஒரேயொரு நபர் கே.பி. மாத்திரமே என்பதுதான் அப்போது இருந்த நிலை. நார்வேக்கும் இந்த நிலைப்பாடு புலிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதையடுத்தே, கே.பி.-யுடனான சந்திப்புக்கு நார்வே ஏற்பாடு செய்தது.

புலிகளைப் பொறுத்தவரை யுத்தம் மிகவும் இக்கட்டான நிலையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்படியான நிலையில் நார்வே, கே.பி.-யுடன் என்ன பேசியது என்பது மிக முக்கியமானது. மலேசியாவில் நடைபெற்ற அந்தச் சந்திப்பில் என்ன நடந்தது? இரு தரப்பிலும் யார்யார் கலந்து கொண்டனர்? என்ன பேசப்பட்டது? என்ன முடிவு எடுக்கப்பட்டது?

வெளியே பெரிதாக அறியப்படாத மிக முக்கியமான இந்தத் தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டுமா? கட்டுரையின் அடுத்த பாகத்தில் படிக்கலாம்.

நன்றி: விறுவிறுப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்கு தெரிந்த வரையே போதும் நிர்வாகம் இதையும் தயவு செய்து நீக்கி விடவும். :lol: :lol: :lol:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

எமது தமிழ் மக்கள் எத்தினை இடர் வந்தபோதும் மக்கள் தெளிவாகவவே உள்ளார்கள் விறுவிறுப்புக்கு விளம்பரம் வேனுமென்றால் ரூபவானி தூரதர்சன் அங்கு கொன்டு போய் இந்தகுப்பைகளை கொட்டலாம் இதையும் தயவு செய்து நீக்கி விடவும்.

Edited by purmaal

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சித்தனும் புருமாளும் கட்டுரையை நீக்க வேண்டும் என அவதிப்பட்டு எழுதியிருந்தீர்கள்.

ஆனால், இக்கட்டுரையை அதிகம் பேர் படித்திருக்கின்றனர். உங்களைப் போன்று பலர் எழுதவில்லை. ஏனெனில் பலருக்கு தற்போது உண்மை நிலவரம் புரியத் தொடங்கிவிட்டது.

எத்தனை காலம்தான் பொய்களில் புரண்டு அதனையே நம்பிக் கொண்டிருக்கப் போகின்றீர்களோ தெரியாது. அது உங்கள் விருப்பம்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே வந்து உண்மையைக் கூறினாலும் நீங்கள் நம்பப் போகின்ற கூட்டம் அல்ல.

உண்மைகள் அதிக நாட்கள் உறங்கும் என்பார்கள். ஆனால், பாருங்கள் உண்மையை இவ்வளவு விரைவாக உலகத்துக்கு முன்பாக கொண்டு வந்திருக்கின்றது நோர்வேயின் அறிக்கை. (நோர்வேயையும் துரோகி என்றுதான் இங்கே சிலர் குறிப்பிடுகின்றனர். யாரைத்தான் நீங்கள் துரோகியாக்காது விட்டீர்கள்!?)

வைகோவால்தான் விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்டத் தலைமை (நடேசன், புலித்தேவன் உள்ளிட்டவர்கள்) அழிய வேண்டி வந்தது என்று நோர்வே கூறியிருக்கின்றதே. அதே கூற்றினை அப்போது கே.பி.யும் கூறியிருந்தபோது விழுந்தடித்து மறுதலித்த வைகோ எங்கே? இன்று நோர்வேயின் அறிக்கைக்கு மௌனம் காக்கும் வைகோ எங்கே?

ஏன் புலத்து விடுதலைப் புலிகளின் விசுவாசக் குஞ்சுகளும் அனைத்துலக தொடர்பகத்தின் வால்பிடிப் புலிகளின் ஊடகங்களும் வைகோ தொடர்பில் மௌனம் சாதிக்கின்றார்கள் என்பதனை அறியத்தர முடியுமா?

'குமுதம் றிப்போர்ட்டர்' தொடர்பு கொண்ட போது ஏன் வைகோ பதிலளிக்கவில்லை?

தொடர்ந்து வைகோ, நெடுமாறன், சீமான் உள்ளிட்ட தலைவர்களின் வீர வசன உரைகளையும் பேட்டிகளையும் கேட்டுப் புல்லரித்துச் சிலிர்த்து நிற்பதனை விட்டு போரில் ஊனமுற்ற ஆண்-பெண் போராளிகளுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.

அன்று ஆயுதங்களுக்காக பண உதவிகளை கண்டவன்-கிண்டவன் எல்லாம் வந்து கேட்டபோது பற்றுச்சீட்டினைக் கூட வாங்காது கொடுத்தீர்கள்.

இன்று பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு உதவினால் அதற்கான பற்றுச்சீட்டுக்களை உங்களுக்கு அனுப்பி உதவியினையும் உறுதிப்படுத்தக்கூடிய கடிதங்களை அனுப்பக்கூடிய தொண்டர் நிறுவனங்கள் பல உள்ளன. அவற்றின் ஊடாக உங்கள் உதவிகளைச் செய்ய முன்வாருங்கள்.

யாழில் உள்ள தொண்டர் நிறுவனங்களுக்கு உதவி செய்யாது, வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள். போரின் முதுகெலும்பாக இருந்த இந்த மக்களுக்கு இன்று உதவுவார் யாருமே இல்லை என்பதுதான் சோகம்.

விறுவிறுப்பு

இங்கு கேபியின் ஏஜென்ட் விறுவிறுப்பென்று விடுகிறார் ... கேட்டு புளிச்சுப்போச்சு!! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

30 வருடமாக உலகுக்கும், இலங்கை அரசுக்கும் தண்ணி காட்டிய கே.பி சரியாக போர் முடிந்த பின் இலங்கை அரசிடம் எப்படி இலகுவாக பிடிபட்டார்?? ஒரு திட்டமிட்ட முறையில் இலங்கை அரசிடம் சரணடைந்தார் என்பது தான் பலரது அபிப்பிராயம்.ஏனெனில் சரணடைந்த பல புலிகளின் தலைவர்கள் இருக்கும் போது இவர் மட்டும் கோத்தபாயவின் நெருங்கிய சகாவாக கே.பி எப்படி மாறினார்??.ரமேஸ் அடித்து கொல்லப்படும் அதே நேரம் கே.பி எப்படி சொகுசு வாகனத்திலும்,சொகுசான மாளிகையிலும் இருக்க முடிந்தது. இதனை ஐ.தே.க வினரே போட்டுடைத்தது இங்கு குறிப்பிடதக்கது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் குழந்தைப் பிள்ளைகள் போன்று பதிவு செய்யாதீர்கள்.

மே - 19-க்குப் பின்னர் புலத்தில் உள்ள காஸ்ட்ரோ கும்பலின் செயற்பாட்டாளர்களை இணைந்து பணியாற்ற வருமாறு அழைத்த போது, தமிழ்நெட் ஊடகம் உள்ளிட்டவர்கள் பிற்காலத்தில் கே.பி.யைப் புறக்கணித்த நிலையிலேயே அவர் பலரை தான் இருக்கும் இடத்துக்கு அழைத்து அவர்களுடன் உரையாடி நாடு கடந்த தமிழீழ அரசுச் செயற்பாட்டினை உருவாக்கினார்.

இவ்வாறான நிலையில் கண்டவர்களை எல்லாம் அவர் அழைத்து உரையாடிய போது- 30 வருடமாக தண்ணி காட்டிய புலிகளை மே - 19 ஆம் நாளுடன் முடிவுக்கு கொண்டு வந்த சிறிலங்காப் புலனாய்த்துறையினர், இவர் மேற்கொண்டு வரும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் என நினைக்கின்றீர்களா?

இங்கே நான் கே.பி.யை நியாயப்படுத்தி வாதிட வரவில்லை. வரலாற்றுத் தவறுகளை நாம் சீர்தூக்கி ஆராயாத வரைக்கும்- அதாவது, விடுதலைப் புலிகள் செய்த அனைத்துமே சரி என்று வாதிட்டுக் கொண்டிருந்தால் அடுத்த தலைமுறையும் தொடர்ந்து தவறுகளை இழைத்துக் கொண்டே இருக்கும்.

முன்னைய தமிழ் அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட தவறுகளையே பின்னைய அரசியல் தலைமையாக உருவெடுத்த விடுதலைப் புலிகளும் சரி தற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விட்டுக் கொண்டு இருக்கின்றது என்பதனை மறந்து விடாதீர்கள்.

இதுவரைக்கும் எத்தனையோ பேர் தாம் செய்த தவறுகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு தயாராகவே இல்லை என்பது வேதனையான விடயம்.

தவறுகளைத் திருத்தி ஓர் அணியில் நாம் திரளாத வரைக்கும் இவ்வாறான குதர்க்க வாதங்களைப் பேசிக்கொண்டே அழிய வேண்டியதுதான்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

தானை தலைவரின் தீர்க்க தரிசனத்தினை குறைத்து மதிப்பீட்டவர் தாங்கள் தாங்கள் தான் .. வைக்கோ அவர்கள் தாங்கள் குறிப்பிடும் முன்பும் பின்பும் எக்காலத்திலும் புலிகளுடைய கோட்ட்பாட்டுக்குள் வந்தவர் அல்லர் .. வெளியில் இருந்து ஆதரவு வழங்கி வரும் ஒருவர்..அதற்கும் மேல் ஈழ அகதிகள் இங்கு 1.30000 பேருக்கு மேல் இங்கு உள்ளார்கள் அவர்கள் ஊடாக தலைவர் நாடும் நடப்பும் என்ன என்பது அறியாதவர் அல்ல... அதற்கும் மேல் கிந்தியத்தின் போலி நாடங்களை(போலி பாதிரி மற்றும் இப்போ ஜெயிலில் களி தின்று கொண்டிருப்பவர்) அவர் அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை தெரியாத ஒருவரும் அல்ல... கிந்தியத்தின் ஜல்ஜலாப்பு வேலைகளை அனைத்தும் தானை தலைவர் அறிவார்..

டிஸ்கி:

துப்பாக்கி எடுத்தவனெல்லாம் தீவிரவாதி என ஆராய்து கொண்டு இருக்கும் தற்பொதைய உலக நிலைகளுக்கு ஏறப தானைதலைவர் தன்னை மறைத்து கொண்டு உள்ளார்.. போராட்டத்தினை சர்வதேச தமிழர்களுக்கு திருப்பி விட்டுள்ளார் அதான் உண்மை :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழையகதைகள் வேண்டாம். மன்னிக்கோணும் நிர்மலன்! அணில் ஸ்தானத்திலிருந்து ஒரு சாத்திர கேள்வி? சரி...எல்லாம் நடந்து முடிந்துவிட்டது....இனிவரும் காலங்களில் ஈழத்தமிழரின் நிலை என்ன?யார் தலைமையில் என்ன நடக்கும்?

....இனிவரும் காலங்களில் ஈழத்தமிழரின் நிலை என்ன?யார் தலைமையில் என்ன நடக்கும்?

இதைப்பற்றி எல்லாம் ஏன் கவலை இவர்களுக்கு. சிங்கள பத்திரிகையாளரையே வெட்டி கடலினுள் எறியும் சனநாயக நாட்டில், பரபரப்பாக பத்திரிகை கடை விரிக்க விறுவிறுப்பாக கட்டுரை எழுத முற்படும் தமிழ் 'ரிஷி' களிடம் எல்லாம் இப்படி கேள்விகள் கேட்க கூடாது அண்ணை

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் குழந்தைப் பிள்ளைகள் போன்று பதிவு செய்யாதீர்கள்.

மே - 19-க்குப் பின்னர் புலத்தில் உள்ள காஸ்ட்ரோ கும்பலின் செயற்பாட்டாளர்களை இணைந்து பணியாற்ற வருமாறு அழைத்த போது, தமிழ்நெட் ஊடகம் உள்ளிட்டவர்கள் பிற்காலத்தில் கே.பி.யைப் புறக்கணித்த நிலையிலேயே அவர் பலரை தான் இருக்கும் இடத்துக்கு அழைத்து அவர்களுடன் உரையாடி நாடு கடந்த தமிழீழ அரசுச் செயற்பாட்டினை உருவாக்கினார்.

இவ்வாறான நிலையில் கண்டவர்களை எல்லாம் அவர் அழைத்து உரையாடிய போது- 30 வருடமாக தண்ணி காட்டிய புலிகளை மே - 19 ஆம் நாளுடன் முடிவுக்கு கொண்டு வந்த சிறிலங்காப் புலனாய்த்துறையினர், இவர் மேற்கொண்டு வரும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் என நினைக்கின்றீர்களா?

இங்கே நான் கே.பி.யை நியாயப்படுத்தி வாதிட வரவில்லை. வரலாற்றுத் தவறுகளை நாம் சீர்தூக்கி ஆராயாத வரைக்கும்- அதாவது, விடுதலைப் புலிகள் செய்த அனைத்துமே சரி என்று வாதிட்டுக் கொண்டிருந்தால் அடுத்த தலைமுறையும் தொடர்ந்து தவறுகளை இழைத்துக் கொண்டே இருக்கும்.

முன்னைய தமிழ் அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட தவறுகளையே பின்னைய அரசியல் தலைமையாக உருவெடுத்த விடுதலைப் புலிகளும் சரி தற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விட்டுக் கொண்டு இருக்கின்றது என்பதனை மறந்து விடாதீர்கள்.

இதுவரைக்கும் எத்தனையோ பேர் தாம் செய்த தவறுகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு தயாராகவே இல்லை என்பது வேதனையான விடயம்.

தவறுகளைத் திருத்தி ஓர் அணியில் நாம் திரளாத வரைக்கும் இவ்வாறான குதர்க்க வாதங்களைப் பேசிக்கொண்டே அழிய வேண்டியதுதான்.

உங்களின் பூசி மெழுகலுக்கு நன்றி.ஒரு கேள்வி பத்தாவது தடவையாக கேட்கப்பட்டுள்ளது.வாசித்து விடை அளியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கே.பீ யின் அடிவருடிகளுக்கு களம் அமைத்துக்கொடுக்கப்படுவதை ஏற்கமுடியாது. இக்கட்டுரை உடனடியாக நீக்கப்பட வேண்டும். நான் இந்தக் கருத்துக்குள் வந்ததன் காரணம் னிர்மலன் என்கிற கே.பீ யின் எடுபிடி இணைத்ததை வாசிக்கவல்ல, அதில் என்ன இருக்கிறது என்று அறியக்கூட எனக்கு ஆவலில்லை. குப்பை என்பது எங்கிருந்து வருகிறதென்பதை வைத்துக்கொண்டே அனுமானித்துவிட முடியும்.

முன்னரும் கே.பீ யினூடாக மகிந்தவின் பிரச்சாரதத்தை நாசுக்காக "வன்னி மக்களின் மேல் அக்கறை" என்கிற முகமூடி போர்த்திக்கொண்டு "நேர்டோ" எனும் கோத்தா மற்றும் இராணுவ புலநாய்வுத்துறையினிரால் நடத்தப்படும் அமைப்பிற்காக இங்கே வந்து வக்காலத்து வாங்கிய எடுபிடிதான் நிர்மலன் என்பதை நாங்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறோம்.

இந்தக் கட்டுரை நீக்கப்பட வேண்டும். மகிந்தவுக்கும், அவனது எடுபிடிகளுக்கும் ஆலவட்டம் தூக்கும் எந்த அடிவருடிகளினதும் இணைப்புகளோ அல்லது கட்டுரைகளோ இங்கு களமேற்றப்படுவது தடுக்கப்பட வேண்டும். ஜனநாயகம் என்கிற போர்வையில் நாம் இதுவரை காலமும் சிங்கள உளவாளிகளுக்கு இக்களத்தில் இடம் தந்தது போதும்.

நிழலி, நீங்கள் மட்டுறுத்தனர் தானே?? எப்படி இந்தக்கட்டுரையை அனுமதித்தீர்கள்?? என்ன, ஜனநாயகம், அது, இது என்று சொல்லப்போகிறீர்களா?? நிர்மலன் யார் என்பது உங்களுக்கு உண்மையாகவே இன்னும் புரியவில்லையா?? புரிந்தால், உடனேயே தூக்கவேன்டியதுதானே...இன்னும் எவ்வளவு காலத்துக்கு கே.பீ யின் பசப்பல் வார்த்தைகளை இக்களத்தினுள் உலாவ விடுவதாக உத்தேசம்??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கே.பீ யின் அடிவருடிகளுக்கு களம் அமைத்துக்கொடுக்கப்படுவதை ஏற்கமுடியாது. இக்கட்டுரை உடனடியாக நீக்கப்பட வேண்டும். நான் இந்தக் கருத்துக்குள் வந்ததன் காரணம் னிர்மலன் என்கிற கே.பீ யின் எடுபிடி இணைத்ததை வாசிக்கவல்ல, அதில் என்ன இருக்கிறது என்று அறியக்கூட எனக்கு ஆவலில்லை. குப்பை என்பது எங்கிருந்து வருகிறதென்பதை வைத்துக்கொண்டே அனுமானித்துவிட முடியும்.

முன்னரும் கே.பீ யினூடாக மகிந்தவின் பிரச்சாரதத்தை நாசுக்காக "வன்னி மக்களின் மேல் அக்கறை" என்கிற முகமூடி போர்த்திக்கொண்டு "நேர்டோ" எனும் கோத்தா மற்றும் இராணுவ புலநாய்வுத்துறையினிரால் நடத்தப்படும் அமைப்பிற்காக இங்கே வந்து வக்காலத்து வாங்கிய எடுபிடிதான் நிர்மலன் என்பதை நாங்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறோம்.

இந்தக் கட்டுரை நீக்கப்பட வேண்டும். மகிந்தவுக்கும், அவனது எடுபிடிகளுக்கும் ஆலவட்டம் தூக்கும் எந்த அடிவருடிகளினதும் இணைப்புகளோ அல்லது கட்டுரைகளோ இங்கு களமேற்றப்படுவது தடுக்கப்பட வேண்டும். ஜனநாயகம் என்கிற போர்வையில் நாம் இதுவரை காலமும் சிங்கள உளவாளிகளுக்கு இக்களத்தில் இடம் தந்தது போதும்.

நிழலி, நீங்கள் மட்டுறுத்தனர் தானே?? எப்படி இந்தக்கட்டுரையை அனுமதித்தீர்கள்?? என்ன, ஜனநாயகம், அது, இது என்று சொல்லப்போகிறீர்களா?? நிர்மலன் யார் என்பது உங்களுக்கு உண்மையாகவே இன்னும் புரியவில்லையா?? புரிந்தால், உடனேயே தூக்கவேன்டியதுதானே...இன்னும் எவ்வளவு காலத்துக்கு கே.பீ யின் பசப்பல் வார்த்தைகளை இக்களத்தினுள் உலாவ விடுவதாக உத்தேசம்??

நான் கே.பி.யின் எடுபிடி என்பதற்கான ஆதாரத்தினை பகிரங்கமாக முன்வைக்க வேண்டும். எப்போது பார்த்தாலும் றோவின் ஆள், கே.பி.யின் ஆள், உருத்திராவின் ஆள் என்று கூறிக்கூறியே உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொண்டிருங்கள்.

சிறிலங்கா அரசு, கருத்துச் சுதந்திரத்தினை மறுக்கின்றது என்று புலத்தில் இருந்து கூப்பாடு போடுகிறீர்கள். அப்படியெனில், புலத்தில் இருந்து வெளிவருகின்ற யாழ். இணையத்தளத்தின் ஊடான கருத்துச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நிழலிக்கு கட்டுரையினை நீக்குமாறு அச்சுறுத்தல் விடுகின்றீர்களோ? இதுதான் கருத்துச் சுதந்திரமா?

கருத்துச் சுதந்திரத்துக்கான வரையறை உங்கள் அகராதியில் எதுவரை உள்ளது என்பதனையும் புரிய வைக்க முடியுமா?

முடிவாக நீங்கள் எதனையும் நம்புவதாக இல்லை; எதனையும் செய்வதாகவும் இல்லை. தந்தை செல்வா கூறிய வார்த்தைகள் காலா காலத்துக்குப் பொருந்தும் வகையில் நீங்களும் செயற்படுகின்றீர்கள்.

மீண்டும் தெளிவாகக் கூறுகின்றேன். காலம் யாருக்காகவும் காத்திருக்கப் போவதில்லை. ஏனெனில் வரலாறு ஒருபோதும் தவறான தகவல்களை அளிப்பதில்லை.

அந்த வகையில் குண்டுச் சட்டிக்குள் இருந்தவாறு நீங்கள் குதிரையினை ஓட்டிக்கொண்டே இருங்கள்.

நிர்மலன் நீங்கள் யார் என்பதை நீங்கள் இது காலவரை யாழில் இணைத்த விடயங்களும் உங்களின் கருத்துக்களும் காட்டிக் கொடுத்து விட்டது, இதனை விட வேறு ஆதாரங்கள் தேவை இல்லை.

கேபி சிறிலங்கா அரசின் கைப்பாவை, விறுவிறுப்பு ரிசி ஒரு வியாபாரி, அவர் சிறிலங்கா சென்று கோத்த பாயவை சந்தித்ததௌ அவருக்கும் டி பி எஸ் ஜெயராச் என்னும் வியாபரிக்கும் உள்ள தொடர்பு எல்லாம் எல்லாருக்கும் தெரியும். ஆகவே நீங்கள் எழுதுவதை இங்கு எவரும் ஒரு பொருட்டாகவே எடுக்கப் போவத்தில்லை ஏனேனில் அவை சிறிலங்கா அரச உளவுத் துறையின் பிரச்சாரமாகவே பார்க்கப் படும்.உங்கள் பருப்பு இங்கு வேகாது, உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள். எமக்கும் எமது நேரம் பொன்னானது உங்களைப் போன்றவர்களுக்குப் பதில் எழுதி எமது நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதலையே இங்கு கருத்து எதனையும் எழுதவில்லை, அதனையே நீங்கள் ஒரு வெற்றி போல் சொல்லியதால் இதனை எழுத வேண்டி வந்தது.உங்களைப் போல் ஒரு மூடர் இந்த உலகில் இல்லை.

இதற்க்கு நீங்கள் விபச்சாரமே செய்யலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாரத அறிவாளியே!

மூடர் நீங்களா நானா என்பது அல்ல விடயம். கருத்தினை கருத்தால் எதிர்கொள்ள முடியாத உங்கள் வக்கற்ற தன்மையினை நினைக்கத்தான் சிரிப்பாக இருக்கின்றது.

என்னைத்தான் உங்களுக்கு யார் என்று தெரிந்திருக்காது. சரி, ரிசி கோத்தாவைச் சந்தித்தது டி.பி.எஸ்சின் ஆள் என்பதனை உங்களில் ஒருவராவது சரியான ஆதாரத்துடன் முன்வையுங்கள் அதன் பின்னர் இங்கே கருத்துக்களை பதிவிடுவதனை நிறுத்தி விடுகின்றேன்.

எழுந்தமானமாக சந்தேகப்பட்டுச் சந்தேகப்பட்டுத்தான் 30 வருட போராட்டம் இன்று இந்த நிலைக்கு வந்திருக்கின்றது என்பதனை உங்களைப் போன்றவர்களின் கருத்துக்களே காட்டிக் கொடுக்கின்றதே. என்ன செய்வது உங்களை அறியாமலாயே உங்களின் செய்கைகள் நீங்கள் யார் என்பதனையே காட்டிக் கொடுக்கின்றதே.

  • கருத்துக்கள உறவுகள்

Nirmalan, there are two reasons why we strongly believe that you are a puppet of KP, Hentha Paranawitharana and Gothabaya Rajapaksha.

First one : According to you and your colleuges, KP is a jail bird. Can you please explain how a jail bird can organise and run an organisation call NERDO ? Don't worry about running and organisation, how can a jail bird like KP (the former arms dealer of LTTE) even come out of his cell?? Are you trying to say that he is doing all these on his own without the knowledge of Gothabaya and Army intelligence Chief, Hentha Paranawitharana? Don't be so naive man, in fact, NERDO is tha baby of Def.Sec. Gothabaya Rajapaksha and Army.Intell. Hentha Paranawitharana. It was no secret when a group of Tamil expatriots met KP in front of Hentha Paranawitharana and Gothabaya. Therefore it is clear that anyone who is promoting NERDO is a puppet of Srilankan Army Intelligence. And you are one of them !

Secon one : The editor of Viruviruppu , Rishi was a pro LTTE writer till 2009. He was writing mythical tales about LTTE's special operation tactics and so on. Suddenly the whole thing is changed. I have seen Rishi with Army Intelligence Unit personnel during one of his visits to Srilanka in 2010. And he did not stop there. The visits continued and more and more evidence of his relationship with Army intell surfaced out. Now he has started his business in Srilanka openly. Can you please tell me, how can a strong Pro-LTTE writer start his writing business in Lion's capital ? The truth is Rishi is part of Srilanka Army Intells wide network of false propaganda. The article you have pasted here is taken from one of these propaganda material. Therefore it is clear that you are working for SL Army Inteil. services.

Do you need anymore eveidence to face off your reality??

Try something else mate, we know who you are and where you come from. Good luck !!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Nirmalan, there are two reasons why we strongly believe that you are a puppet of KP, Hentha Paranawitharana and Gothabaya Rajapaksha.

First one : According to you and your colleuges, KP is a jail bird. Can you please explain how a jail bird can organise and run an organisation call NERDO ? Don't worry about running and organisation, how can a jail bird like KP (the former arms dealer of LTTE) even come out of his cell?? Are you trying to say that he is doing all these on his own without the knowledge of Gothabaya and Army intelligence Chief, Hentha Paranawitharana? Don't be so naive man, in fact, NERDO is tha baby of Def.Sec. Gothabaya Rajapaksha and Army.Intell. Hentha Paranawitharana. It was no secret when a group of Tamil expatriots met KP in front of Hentha Paranawitharana and Gothabaya. Therefore it is clear that anyone who is promoting NERDO is a puppet of Srilankan Army Intelligence. And you are one of them !

Secon one : The editor of Viruviruppu , Rishi was a pro LTTE writer till 2009. He was writing mythical tales about LTTE's special operation tactics and so on. Suddenly the whole thing is changed. I have seen Rishi with Army Intelligence Unit personnel during one of his visits to Srilanka in 2010. And he did not stop there. The visits continued and more and more evidence of his relationship with Army intell surfaced out. Now he has started his business in Srilanka openly. Can you please tell me, how can a strong Pro-LTTE writer start his writing business in Lion's capital ? The truth is Rishi is part of Srilanka Army Intells wide network of false propaganda. The article you have pasted here is taken from one of these propaganda material. Therefore it is clear that you are working for SL Army Inteil. services.

Do you need anymore eveidence to face off your reality??

Try something else mate, we know who you are and where you come from. Good luck !!

முதலில் ஆங்கிலத்தினைச் சரியாக எழுதப் பாருங்கள். ஒரு பொய்யை உண்மையாக்க நீங்கள் படும் பாட்டினைப் பார்க்க சிரிப்பாக இருக்கின்றது.

சிறிலங்கா புலனாய்வுத்துறை அதிகாரியின் பெயரையே சரியாக தெரிந்து கொள்ள முடியாத நீங்கள் எல்லாம் எடுப்பார் கைபிடிப் பிள்ளை போலத் செயற்பாடுகின்றீர்கள். செயற்படுங்கள். பிரச்சினையில்லை.

மீண்டும் கூறுகின்றேன். நீங்களாகவே எழுதுவதனையும் கேள்வி கேட்பதனையும் விட்டுவிட்டு ஆதாரபூர்வமாக நிரூபியுங்கள்.

உங்களைப் பற்றி வேண்டுமானால் நான் முழு விபரம் இதில் எழுதவா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிங்களத்தின் உளவாளியை விட எனக்கு ஆங்கிலம் நன்றாகவே தெரியும். ஆனால் அதுவல்ல இப்போது பிரச்சனை. உமது முகம் வெளித்தெரிய ஆரம்பித்துவிட்டது.

என்னைப்பற்றி முழுவதுமாக எழுதப்போகிறீரா, நல்லது, முடிந்தால் எழுதும் பார்க்கலாம், உமது வாய்ச்சவடல்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு, கே.பீ யினாலும் கெந்த பரணவித்தாரணவினாலும், கோத்தாவினாலும் நீர் வழிநடத்தப்படவில்லை என்பதை நிரூபிக்கலாம் பார்ப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரிசி, கோத்தாவைச் சந்தித்ததனையும் டி.பி.எஸ்சின் நண்பர் என்பதனையும் முதலில் ஆதாரபூர்வமாக நிரூபியுங்கள். ஏனெனில், இங்கே சந்தேகங்களையும் ஒருவரைப்பற்றி இல்லாத-பொல்லாதவற்றைக் கூறுபவர் நீங்கள்தான்.

இக்பால் அத்தாஸ், லசந்த விக்கிரமதுங்க போன்ற ஊடகவியலாளர்கள் புலிகள் சார்பாக கட்டுரைகள் எழுதிய போது சிறிலங்கா அரசு அவர்கள் புலிகளின் ஆட்கள் எனக் கூறியதனையும் நீங்கள் நம்பியிருப்பீர்கள் போலத்தான் தென்படுகின்றது.

ஒரு ஊடகவியலாளன் என்பவன் தனக்கு கிடைக்கக்கூடிய தரவுகளை வைத்து எழுதுவான். அதனை வைத்து அவன் இவனின் ஆள் இவன் அவனின் ஆள் என்று குற்றம் சாட்டுவதனை முதலில் நிறுத்துங்கள்.

கருத்தை கருத்தோடு மோதுவதனை விட்டு அவனது தனிப்பட்ட விவகாரங்களில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள்.

மீண்டும் தெளிவாகக் கூறுகின்றேன். ரிசி விடயத்தில் நீங்கள் கூறும் குற்றச்சாட்டுக்களை முதலில் நிரூபியுங்கள். ஏனெனில் நீங்கள் அறிந்த ஆதாரபூர்வ தகவலை நான் உள்ளிட்ட அனைவரும் அறிய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷி கொழும்பிற்குப்போய் அங்கே ராணுவ அதிகாரிகளுடன் நின்று எடுத்த புகைப்படத்தை நான் பார்த்தேன். அது ஒரு இணையத்தில் வந்திருந்தது. அதனை இன்னும் பலரும் பார்த்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

நீங்கள் ரிஷி என்பவர் கொழும்பிற்கே போகவில்லை என்கிறீர்களா?? அவர் போனதை நீங்கள் ஏற்றுக்கொண்டால், புலிகளுக்கு ஆதரவான ஒரு பத்திரிக்கையாளாரால் எவ்வாறு சுதந்திரமாக கொழும்பில் உலாவ முடிந்தது என்பதை விள்க்குவீர்களா?? சிங்களப் புலநாய்வுத்துறைக்குத் தெரியாமல் ரிஷி போய்வந்தார் என்கிறீர்களா?? இல்லை, அவர் ராணுவத்துடன் நின்றெடுத்த புகைப்படத்தை நான் பார்த்தேனே??

அடுத்தது, கே.பீ ஊடாக சிங்கள அரச பயங்கரவாதத்தால் நடத்தப்படும் நேர்டோ பற்றி இங்கே கொண்டுவந்து கட்டுரை இணைத்தது யார்?? நேர்டோ என்பது யாரால் இயக்கப்படுகிறது என்பது உங்களுக்கு உண்மையாகவே தெரியாதா அல்லது நடிக்கிறீர்களா?? ஒரு சூழ்நிலைக் கைதியால் பல மில்லியன் பெறுமதியான திட்டத்தை எப்படி நடாத்த முடியும்? கே.பீ யை வெளிநாட்டிலிருந்து சென்று சந்தித்த வைத்தியர்கள் மற்றும் கல்விமான்கள் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கிறதா?? கே.பீ உடன் ராணுவ புலநாய்வுத்துறையின் இயக்குனர் கெந்த பரண வித்தாரணவும் இருந்தார் என்பதை கேட்டீர்களா?? அல்லது கே.பீ உடனான சந்திப்பில் கோத்தா இடம்பெற்றிருந்ததைக் கேள்விப்பட்டீர்களா?? ஆகமொத்தம் நேர்டோ என்பது புலம்பெயர் தமிழரின் பணத்தைப் பெற சிங்களம் ஆடும் நாடகம் என்பது உங்களுக்குத் தெரிகிறதா இல்லையா??

உங்களுக்கு நேர்டோ யாரென்று தெரிந்திருந்தும் இங்கே வந்து வக்காலத்து வாங்கினீர்கள். அப்படியானால் நீங்கள் அதில் ஒரு அங்கத்தவராக இருக்கவேண்டும் அல்லது ஒன்றுமே தெரியாத அப்பாவியாக இருக்க வேண்டும்.

அதேபோல ரிஷி கொழும்பு சென்றுவருவதை மறுக்கவில்லை என்றால், அவர் எப்படி அங்கே சென்று வருகிறார் என்பதை நீங்கள் தெரிவிக்க வேண்டும். ஒன்றில் அவர் புலிகளுக்கெதிராக எழுதத் தொடங்கியிருக்க வேண்டும் அல்லது அவர் அங்கே போனது கட்டுக்கதையாக இருக்க வேண்டும். ஆனால் அவர் போனதும் உண்மை, இராணுவத்துடன் நின்று படம் எடுத்ததும் உண்மை.

இறுதியாக, என்னைப்பற்றி எழுதப்போவதாக சொன்னீர்கள், இந்த வாய்ச்சவடல் எல்லாம் வேண்டாம். முடிந்தால் எழுதுங்கள், அதை விட்டுட்டு எனது அடி தெரியும், நுனி தெரியும் என்கிற புலுடா எல்லாம் வேண்டாம்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

இக்பால் அத்தாஸ் யாரென்பதையும், லசந்த யாரென்பதையும் நீங்கள் சொல்லி நான் கேட்கத்தேவையில்லை. இருவரும் என்ன செய்தார்கள் என்பதையும் நான் அறிவேன், எதற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்பதையும் நான் அறிவேன்.

ஊடகவியலாளன் தனக்குக் கிடைத்த தகவலை வைத்து எழுதட்டும், அதை யாரும் மறுக்கவில்லை, ஆனால் அவன் எழுதுவதன் நோக்கமென்ன, இப்போது அவனது பிண்ணனி என்னவென்று அறிவது மிகவும் அவசியம். எனென்றால் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வெளிவந்த ஒரு பத்திரிக்கை இன்னும் அதிக லாபபம் வேண்டுமானால் பத்திரிக்கா விபச்சாரமும் செய்யலாம் என்பதை பலமுறை நாங்கள் பார்த்திருக்கிறோம். ரிஷி எல்லாம் உங்களைப் பொறுத்தவரைதான் பத்திரிக்கையாளர், எங்களைப் பொறுத்தவரை ஒரு வியாபாரி. அவ்வளவுதான்.

எது தனிப்பட்ட விடயம், ஒருவனின் எழுத்து ஒரு ஒட்டுமொத்த சமூகத்தினதும் இருப்பைக் கேள்விக்குறியாக்குகிறதென்பது அவனின் தனிப்பட்ட விடயமா??

நான் நிரூபிப்பது இருக்கட்டும், கொழும்பிற்குப் போய் வந்தது உண்மையா இல்லையா என்பதை உங்கள் ரிஷியிடமே கேட்டுவந்து இங்கே சொல்லுங்கள், பிறகு மீதி பற்றிப் பேசலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் படத்தினையாவது இதில் போட்டு விடுங்களேன். அவர் கொழும்புக்குப் போகவில்லை என்று இங்கே நான் வாதிடவில்லையே. நீங்கள் இருக்கக்கூடிய நாட்டில் உள்ளவர்கள் உட்பட பல நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த பலர் யாழ். உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று வந்திருக்கின்றார்கள். அப்படியெனில் அவர்கள் தொடர்பிலும் உங்களுக்குச் சந்தேகம் இருக்கின்றதா?

உங்களுக்குச் சரியான ஆதாரத்தினைச் சமர்ப்பிக்கத் தெரியவில்லை. இதில் விதண்டவாதம் பேச வருகின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

nimalan நீர் யார் என்பது எங்களுக்கு தெரியும் வேசம் கலைந்து விட்டது என்று குத்தி முறிய வேன்டாம் போய் வேறை யாரும் கேனையர் கூட்டம் இருக்கும் அங்கு போய் மன்டை கழுவவும்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒருநேரம் வந்து கேட்பீர்கள் என்று மூக்குச் சாத்திரம் பார்த்தா ரிஷியின் படத்தை எடுத்து வைத்திருப்பேன்?? ஏன்,நீங்களே அவரிடம் அந்தப் படத்தைக் கேட்டுப் பார்க்கலாமே?? ஒரிஜினல் கொப்பி கிடைத்தாலும் கிடைக்கும்.

இன்னும் எனது ரெண்டாவது கேள்விக்கு விடை வரவில்லை, நேர்டோ என்பது யாரால் இயக்கப்படுவதாக நினைக்கிறீர்கள்?? எந்த உதவியும், பக்க பலமும், ஆதரவும், அணுசரணையும் இல்லாமல் சிறைக்குள்ளிருந்து புலிகளின் முன்னால் ஆயுதக் கடத்தல் மன்னன் இயக்குகிறார் என்றா நினைக்கிறீர்கள்?? அதுவும் கோத்தாவினதும், கெந்த பரணவித்தாரணவினதும் கண்களுக்குத் தெரியாமல்??

சீனாவில் கம்யூனிஸ்டுகள் புரட்சி செய்த காலத்தில் மாவோயிஸ்டுகள் புரட்சிக்கு எதிராக கதைத்த அனைவரையும் துரோகிகள் என்று சுட்டுத்தள்ளினார்கள். இன்று கவலையுடன் அதை நினைவு கூர்வதுடன் அன்று விமர்சம் செய்தவர்களை பேசவிட்டிருந்தால் மாவே கலாச்சாரா புரட்சியின் பெயரால் மேலும் பல மில்லியன் மக்களை கொன்றொழித்திருக்க மாட்டார் என்று விசனப்படுகிறார்கள். 1936இல் சீனர்கள் இருந்த நிலையில் இன்று தமிழர்கள். மாவோவுக்கு புரட்சிக்கு பக்கபலமாக நின்றவர்கள் பலரை மாவே தனது பதவி வெறிக்காக துரோகிகளாக்கியது போல் வன்னியில் 4 முக்கிய தலைவர்களின் சதியே இன்று கேபி துரோகியான கதை! ஆனால் அன்று மாவே எப்படி வரலாற்றை தனக்கு சாதகமாக புலுடா ஊடகங்களையும் பயமுறுத்தலையும் பாவித்தாரோ அதே பாணியில் இன்றும் நடைபெறுகிறது. போராட்டம் ஏன் தோற்றது என்ற உண்மைகள் இந்த புலுடா தேசிய ஊடகங்களால் தடுக்கப்படுவதுடன் இன்னுமொரு போராட்டம் வருவதையும் இவர்கள் முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவார்கள். சரி ஒரு உண்மையையாவது கூற உங்களுக்கு வலு உள்ளதூ? கேபி தலைவர் வீரமரணமடைந்ததை என்ற உண்மையை ஏன் மறுதலித்து வருகிறார்கள். இதில் யார் பொய்யரர்கள்? ஆரம்பத்திலேயே கூறிய ஒர பொய் இன்று ஆயிரம் பொய்களாக மாறுவது ஏன்?

Edited by மொட்டை மனிதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.