Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரான்ஸின் விளையாட்டுத் துறையில் தமிழ் இளைஞர் சாதனை! (photo in)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSC_0974-150x150.jpg

பிரான்ஸில் வாழும் தமிழ் இளைஞரான கெவின் வலத்தேசர் (Kevin VALLATHESAR) பாரிஸின் புறநகரான செவி ல றூ chevilly-larue நகரசபையினால் அதி சிறந்த விளையாட்டு வீரனாக மதிப்பளிக்கப்பட்டிருக்கிறார். இது ஈழத்தமிழருக்கு கிடைத்த மற்றுமொரு பெருமையாகும்.

செவி ல றூ விளையாட்டு வீரர்களை கௌரவப்படுத்தும் மாலை விழா ஒன்று அண்மையில் செவி ல றூவில் இடம்பெற்றபோதே இந்த இளைஞர் கௌரவிக்கப்பட்டார்.

2011ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ம் திகதி பிரான்சின் பிராந்தியங்களுக்கிடையிலான மரதன் (Cross Country) ஓட்டப்போட்டி பரிஸ் புறநகர் பகுதியான பொந்தோ கொம்போவில் ( Pontault-Combault ) நடைபெற்றது. இதில் வெற்றியீட்டிய கெவினுக்கு 2010- 2011ம் ஆண்டுக்கான விருதும், 2011ம் ஆண்டுக்கான விளையாட்டுத் துறையின் சிறந்த இளம் சாதனையாளர் விருதும் செவி ல றுவா நகர விளையாட்டுத்துறை அதிபர் லுக் வொல்வோடிச் (Luc volvoditch), மேயர், கிறிஸ்ரியன் ஹெர்வே (Christian Hervy) ஆகியோரால் வழங்கப்பட்டது.

சகதி நிறைந்து, ஒழுங்கற்றிருந்த கடினமான பாதையில் பலதரப்பட்ட அதிக தொகையிலான போட்டியாளர் மத்தியில் கெவின் வலத்தேசர் ஈட்டிய வெற்றி பிரமிப்பை ஏற்படுத்தியதாக அவரது பயிற்சியாளர் ஒலிவியே சப்பல் (Olivier chapell) வியந்து பாராட்டியுள்ளார்.

விளையாட்டுத்துறையில் இளையவரான கெவின் தன்னுடன் போட்டியிட்டவர்களே ஆச்சரியப்படும் வகையில் முன்னணியில் ஓடியதுடன், இறுதிவரை தனக்குப் போட்டியாக இருந்த எட்டுப் பேரையும் பின்தள்ளி இலக்கை அடைந்தது வியந்து பாராட்டும் வகையில் அமைந்திருந்ததாகவும் பயிற்சியாளர் ஒலிவியே குறிப்பிட்டுக் கூறினார்.

2010- 11ம் ஆண்டுக்கான இளம் விளையாட்டு வீரராக கெவின் கௌரவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டிருப்பது விசேடமானதும் அதி மேலானதுமான நிகழ்வு என்று ஒலிவியே சப்பல் தமது செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் மாநில வாரியாகவும் இல் டெ பிரான்ஸ் (Ile de Fraance) பரிஸ் பெரும்பகுதி, பிராந்திய வாரியாகவும் கெவின் வெற்றி பெற்று சம்பியனாகியதுடன் பிரான்சின் முன்னைய சம்பியனை விட அதிக இடைத் தூர வித்தியாசத்தில் வெற்;றி பெற்றிருப்பதும் தேசீய ரீதியில் 5வது இடத்தை வகிப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

‘கெவின் வலத்தேசரின் இந்த வெற்றி அடுத்த ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகளிலும் தொடரும் என்ற நம்பிக்கையை எமக்கு ஏற்படுத்தியிருப்பதுடன் பிரான்ஸ் முழுவதற்குமான சம்பியன் போட்டிகளில் கெவின் வலத்தேசர் பங்கு கொள்வதற்குமான வாய்ப்பினை ஏற்படுத்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று ஒலிவியே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

‘கடந்த ஆண்டில் விளையாட்டுத் துறையில் பல சாதனைகளைப் புரிந்த கெவின் மூத்த போட்டியார்களை வெற்றி கொண்டது பற்றி அவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். இனி வரும் விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் வெற்றி வாகை சூட எமது இனிய நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அதற்கான ஆற்றல், வீரம் அனைத்தும் அவருக்குக் கைகூடும் என்ற நம்பிக்கையுடன் முற்கூட்டிய பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் ஒலிவியே வாழ்த்தியுள்ளார்.

DSC_0955-150x150.jpg DSC_0974-150x150.jpg DSC_09741-150x150.jpg DSC_1420-150x150.jpg

DSC_1421-150x150.jpg DSC_1422-150x150.jpg DSC_1426-150x150.jpg

DSC_1427-150x150.jpg

http://www.tamilthai.com/newsite/?p=727

கெவின் வலத்தேசர் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞனுக்கு வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கெவினுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலாக வந்தவன் என்பதற்காக இன, மத, பேதம் பார்க்காமல் பிரான்சில் கௌரவிக்கிறார்கள்.

இவனது "சொந்த" நாட்டிலோ, வெள்ளை வான் இப்போது இவனை கடத்தி வெற்றி பணத்தை சுருட்டியிருக்கும்.

அது தான் பிரான்ஸ் ஐ. நா. பாதுகாப்பு கவுன்ஸில இருக்குது, ஸ்ரீ லங்கா இலஞ்சம் வேண்டுறதில எண்பத்தி ஆறாவது இடத்தில் நிக்குது.

ஒரு நாடு அதன் கிராமத்து அதிகாரிகளின் திறைமையை பிரதிபலிக்கும்.

கெவின் வலத்தேசர் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெவின் வலத்தேசர் வாழ்த்துக்கள்.

சின்ன வருத்தம் ஒருவரின் பெயரைப்பார்த்தாலே அவர் என்ன இனம் என்பதை அறிய முடியும் ஆனால் உங்களின் பெயரை பார்த்து நீங்கள் தமிழர் என்பதினை அறிய முடியாது,

உங்களின் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற சொல்லவில்லை உங்களின் செல்லப்பெயரையாவது தமிழில் வைத்திருன்தால் என்னை போன்றோர் பெருமை பட்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் கெவின் வலத்தேசர்

  • கருத்துக்கள உறவுகள்

DSC_1427.jpg

DSC_1426.jpg

DSC_1420.jpg

DSC_0955.jpg

http://www.thinakkathir.com/?p=24134

கெவினுக்கு நல்வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கெவினுக்கு வாழ்த்துக்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசு சொல்வது போல எனக்கும் இவரிம் பெயரைப் பார்த்தால் கவலையாகத் தெரிகிறது. யாரோ வெள்ளைக்காரர் தான் பரிசு பெருவதாக இவரின் பெயரைப் பார்க்க தோன்றுகிறது. கிருஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்கள் ஆங்கிலயரின் பெயரையும், இந்து மதத்தினை(சைவ சமயம்) பின்பற்றுபவர்கள் எண் சோதிட மாயையினால் சிங்கள, வட மொழிப் பெயர்களை சூட்டுகிறார்கள். இதனால் தமிழர்களின் சாதனை தெரிந்தோ தெரியாமலோ ஆங்கிலேயர்கள், சிங்களவர்கள், இந்திக்காரர்களுக்குப் போய் சேருகின்றது.

மொழியை(பெயரை) இழந்தால் உங்கள் அடையாளத்தினை இழப்பீர்கள். தமிழர்களுக்கு தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கெவினுக்கு வாழ்த்துக்கள். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.