Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலப்பெயர்வின் பின்னான கடவுள்

Featured Replies

ஊரில் இருக்கும்வரை, என்ன துறையில் கல்வி கற்பது, எந்த ஊரில் வாழ்வது, யாரை மணம் முடிப்பது போன்ற பல்வேறு முடிவுகள் ஒருவகையில் ஏற்கனவே எமக்காக முடிவெடுக்கப்பட்டனவாக இருந்தன. இதில் கடவுள் வழிபாடு கூடத் தப்பி விடவில்லை. ஆனால், புலப்பெயர்வின் பின் பல விடயங்கள் விரிவடைந்து மாறின. கடவுள் நம்பிக்கை என்பதில் கூட பலரது மனங்களில் மாற்றங்கள் நிகழ்ந்தன (மதம் மாறுதல், நாத்திகம் என்பனவற்றை மட்டும் இங்கு குறிப்பிடவில்லை. சிறுபராயம் முதல் கும்பிபட்ட கடவுளைக்கூட கும்பிடுவதில் நிகழ்ந்த மாற்றமும் உள்ளடக்கப்படுகின்றது). இம்முனையில் எனக்குத் தோன்றிய சில விடயங்களைப் பகிருவதற்காக இப்பதிவு.

ஒரு சைவக் குடும்பத்தில் பிறந்து, மதம் மாறாது, நாத்திகன் ஆகாது வாழ்வதால், எனது சமயம் என்ன என்ற கேள்விக்கான எனது பதில் சைவசமயம் என்பதாகவே கருதப்படும். எனினும், எனது கடவுள் நம்பிக்கையினை, எனது வாழ்வில் கடவுளின் பாத்திரத்தினை ஒருவேளை நான் விபரித்தால் அது சைவ சமயத்து வழிபாட்டு முறை என்று ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது கேள்விக்குறியே. இவ்வாறு கூறியதும், யாரோ ஒரு கோப்பறேற் சாமியாரின் பக்தன் ஆகிவிட்டேன் என்று கருதிவிடாதீர்கள். மனிதனை வணங்குவதில் எனக்கு என்றும் உடன்பாடு இருந்ததில்லை. ஆனால் நான் மனிதனை வணங்குவதில்லை என்பதால் மனிதனை வணங்குபவர்கள் அனைவரையும் முட்டாள்கள் என்று அழைத்துவிடுவது முன்னர் எனக்குச் சாத்தியப்பட்டு இப்போது சாத்தியமின்றிப் போயுள்ளது. இது போன்றே, மதம் மாற்றும் கோஸ்டிகளின் இம்சைகளை அனுபவித்ததால் ஒரு கட்டத்தில் பல விடயங்களில் வெறுப்பும் (தொந்தரவால்) பயமும் (ஒருவேளை என்னையும் மாற்றிவிடுவார்களோ) இருந்தது உண்மை. எனினும் தற்போது இம்முனையில் எனது மனநிலை வித்தியாசமாக இருக்கிறது. இதர மதங்கள், கோர்பறேட் சாமியார்கள், கடவுள் வழிபாடு என்பன பற்றிய எனது கருத்தை அறிய விரும்பின் தொடர்ந்து வாசியுங்கள். இல்லையேல் பதிவை இத்தோடு மூடி விடுங்கள்.

கிறீஸ்த்தவம், யூடேயிசம், இஸ்லாம், பௌத்தம் முதலிய மதங்களிற்கும் இந்துக்களிற்கும் இடையில் (சைவம் இந்து முதலான வாதங்களை பதிவின் நீட்சி கருதித் தவிர்க்கின்றேன்) உள்ள முதல் வேறுபாடு நூல்கள். அதாவது, பைபிள், தோறா, குறான், புத்தரின் சிந்தனைகள் என்பன நூல்களாக மற்றையவரிற்கும் கடவுளின் கூற்றாக வழிபாட்டாளர்களிற்கும் இருக்கின்றன. கடவுளின் உலகிற்கான விதிகள் இவை என்ற ரீதியில் மேற்படி நூல்கள் வழிபாட்டாளர்களால் நோக்கப்படுகின்றன. ஒரு விடயம் சார்பில் முடிவெடுக்க முடியாது போயின் தமது சமய நூலின் வழிகாட்டலின் பேரில் பல வழிபாட்டாளர்கள் முடிவெடுப்பார்கள். மொத்தத்தில் கடவுள் என்ற ஒரு சிஸ்றத்தின் இயங்குவிதியினை விபரிப்பதாக மேற்படி நூல்கள் அமைந்து, கடவுள் என்ற சிஸ்ரத்திற்குள் நல்ல ஒரு குடிமகனாக வாழ்வதற்கான வழிமுறைகளை வழிபாட்டாளர்கள் மேற்படி நூல்களில் இருந்து பெற்றுக்கொள்ளுகின்றனர். நூல்கள் என்று வருகையில் அவை புரியப்படும் விதத்தில் வேறுபாடுகளும் சிக்கல்களும் தவிர்க்கமுடியாதன. இ;ப்பிரச்சினையினை எதிர்கொள்வதற்காக, சமயத் தலைவர்கள் தங்களது சமய நூல்களைப் படிப்பதற்குப் பல்கலைக்கழகங்கள் வரை துறைகள் ஒதுக்கப்பட்டு பயிலப்படுகின்றன. தமது சமய நூலினை தமது மதத்தலைவர்கள் விளக்கும் விதத்தில் ஏற்றுக்கொண்டு வழிபாட்டாளர்கள் தொடர்கின்றனர்.

இந்துக்களிற்கு, கடவுள் என்ற சிஸ்ரத்தைப் புரிந்துகொள்வதற்கான முடிந்தமுடிபான நூல் என்று எதுவும் இல்லை. எமக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் தமது இறை உணர்வை வெளிப்படுத்திய முறைகளான: தேவாரம் முதலிய பாடல்கள், புராணங்கள், இதர கதைகள் என்பனவற்றை நாம் அறிந்திருந்தாலும் இவை கடவுளைப் பற்றிய பக்தனின் பதிவுகளாக இருக்கின்றனவே அன்றி கடவுளின் கூற்றுக்களாக அமையவில்லை. நால்வேதங்கள் கூட (அதில் ஒன்றைக் கூட நான் படிக்கவில்லை. அறிந்தவரை) கடவுளால் அருளிச்செய்ததாக உணரப்படவில்லை. அதிகபட்சம் மனிதனின் பதிவுளைக் கடவுள் ஒரு கருவியாக இருந்து எழுதிக்கொடுத்தார் என்பது வரையே இந்துக்களால் ஏற்க முடிந்தது.

கடவுள் என்ற கருத்து ஏறத்தாள அனைத்து மதங்களிலும் மறுமை சார்ந்ததாக சாவின் பின்னர் பலம்பெறுவதாக அல்லது மறுபிறப்புச் சார்ந்ததாகவே பேசப்படுகின்றது என்றபோதும், மறுமை சார்ந்து பேசுவதன் ஊடாக தற்போதைய வாழ்வினை மேம்படுத்தும் உளவியலே கடவுளின் அடிப்படை. புலப்பெயார்வின் பின் கடவுள் என்ற முனையில் ஈழத்தமிழர்கள், குறிப்பாக இந்துக்கள் எதிர்கொள்ளும் பரிணாம மாற்றம் தவிர்க்க முடியாதது. மற்றைய மார்க்கத்தினர் எங்கு சென்றாலும் எத்தனை புலப்பெயர்வுகளை எதிர்கொண்டாலும் கடவுள் அருளியதென்றான நூலும் அதை விளக்கும் மதக்கட்டமைப்பும் அவர்களிற்கு மாறாதது என்பதால் புலப்பெயர்வில் மற்றைய மதத்தவர்கள் இந்துக்கள் அளவிற்குச் சவால்களை எதிர்நோக்கவேண்டியதில்லை. ஆனால் இந்துக்களைப் பொறுத்தவரை, கடவுளை தமக்குள் இருப்பவராக, உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம் என்பதாக முன்னெடுக்கும் வழிமுறை புதிய சூழலில் புதிய சவால்களின் முன்னிலையில் புதிய தெரிவுகளின் மத்தியில், தாம் யார் என்பதிலேயே குளப்பங்கள் நிறைந்துள்ள நிலையில், சிக்கல்கள் மாற்றங்களைச் சந்திப்பது தவிர்க்கமுடியாதது. இந்துக்களிற்குள் மதத்தலைவர்கள் என்பவர்கள் புரியாத பாசையில் பூசையாக்குபவர்களாக இருப்பதனால் ஒரு வெற்றிடம் புதிய சூழலில் ஏற்படுகிறது. உலகில் இன்று கோர்ப்பறேற் சாமியார்களின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு இந்துக்கள் மத்தியில் இருப்பதற்கும் இது ஒரு காரணம் (அனைத்து மதங்களிற்குள்ளும் வியாபாரம் இருக்கிறது என்பதை மறுக்கவில்லை).

ஊரில் இருந்தவரை, நாம் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தலைமுறை தலைமுறையாக எமது முன்னோர்களால் அதே சூழலில் எதிர்நோக்கப்பட்டு வந்தவை. கல்வி என்பது மிகப்பெரும்பான்மையில், சோதனை நோக்கியதாக சான்றிதழ் நோக்கியதாக உத்தியோகம் நோக்கியதாகவே இருந்தது. சிந்தனை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுற்றிக் கிடந்தது. பழகிய பொழுதுபோக்குகள், பழகிய வழமைகள், பழகிய கட்டமைப்புக்கள் என ஒரு வாழ்வு ஒரு பழக்கப்பட்ட அச்சில் பயணித்தது. பழகிய பெருந்தெருக்களில் பயணிக்கையில் எதிர்படும் பழகிய காட்சிகள் மூளையில் பதியாது கண்களில பட்டுச் செல்வதைப் போல, ஊரில் வாழ்வு ஹைவே-பிளைன்ட்ணசுடன் பயணித்தது. புலப்பெயர்வில், வழமைகள் முறிந்தன. பழக்கப்பட்ட பெருந்தெருக்களில் இருந்து இறங்கி புதிய பாதைகளில் செல்வது அவசியமானது. பாதை தவறிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு உள்ளிற்குள் நச்சரித்தபடி இருந்தன. புதிய காட்சிகள் கண்ணில் பட்டமாத்திரத்தில் மூளையிலும் பதிவாகின. சிந்தனை அவசியமாகியது. புதிய சவால்களிற்கு முகம் கொடுக்க நேர்ந்தது. தனிமை அதிகம் உணரப்பட்டது. உடல் உள கழைப்பு அதிகரித்தது. மன உழைச்சல் உணரப்பட்டது. இந்நிலையில் கடவுள் என்பது, வெறுமனே கோவிலிற்குப் போய் ஐயர் மணியடிச்சுப் பூசையாக்கப் பாத்திட்டு, நாலுபேரோடு ஊர்வம்பு கதைச்சிட்டு வாறதாக மட்டும் தொடர்வது போதாதாக மாறியது. உள்ளத்தில் ஒரு தேடலும், அங்கலாய்ப்பும் ஆரத்தழுவப்படுவதற்கான ஏக்கமும் பிறந்தது. உண்மையில் கடவுள் தேவைப்பட்டது.

ஆனால், உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது என்ற மரபில், உள்ளமே என்னவென்பதில் குளப்பமேற்பட்டும், தாம் யார் என்பதில் மலைப்புக்களும் குளப்பங்களும் ஏற்பட்டு, சுதந்திரம் சூறையாடப்பட்டதாக உணர்பவர்களிற்குத் தமது உள்மனதுடன் உரையாடுவது அத்தனை இலகுவில் சாத்தியப்பட்டுவிடாது.

சிலரிற்குப் பள்ளிக்கூடத்தில் வாத்தியார் படிப்பித்தால் மட்டும் விளங்கும். சிலரிற்கு அனுபவக் கல்வி மட்டுமே சாத்தியப்படும். சிலரிற்கு சுயசிந்தனை போதுமானதாக இருக்கும். சிலரிற்கு வாசிப்புப் போதுமானதாக இருக்கும். சிலரிற்கு உற்றார் உறவினர் நண்பர்கள் வடிவில் வழிகாட்டிகள் வாழ்வில் சாத்தியப்படுவர். சிலர் ஏகப்பட்ட குழப்பங்களோடு, எங்கு பதில்களைத் தேடுவது என்று தெரியாதவர்களாக பற்றுவதற்கு ஏதுமற்றவர்களாகத் தனியர்களாகத் தம்மை உணருவர். இ;வ்வாறு வாழ்வுகள் பலதரப்பட்டு வாழ்வின்ன சவால்கள் புலத்தில் பல முனைப்பட்டனவாக விரிகின்றன. இந்நிலையில், தாம் ஏற்கனவே அறிந்த விடயங்களால் ஆறுதலடைய முடியாதோரிற்குக் கடவுள் தேவைப்படுகிறது. ஆனால் கடவுள் தேவை என்று உணர்பவர்களால் கூட சுயமாக கடவுளை தமக்குத் தேவையான அளவில் உணர்ந்து விட முடிவதில்லை. மருந்தகத்தில் அத்தனை மருந்தும் நிறைந்திருந்தும், இன்ன மருந்தை இன்ன அளவில் எடுங்கள் என்ற வைத்தியரின்ன பரிந்துரையும் வைத்தியர் சொன்ன மருந்தை சொன்ன அளவில் எடுத்துக் கொடுக்கும் மருந்தாளரும் தேவைப்படுவதைப் போல, கடவுளை தேவயான அளவில் பரிந்துரைப்பதற்கும் பரிந்துரைக்கப்படும் கடவுளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் பலர் மற்றவர்களைத் தேடத் தொடங்குகிறார்கள். மரபு ரீதியான, கடவுளால் அருளப்பட்ட உத்தியோகபூர்வ நூல் என்று ஏதேனுமோ அத்தகைய நூல்களைக் கரைத்துக் குடித்து விளக்கக் கூடிய மதத்தலைவர்கள் என்று எவரேனுமோ மரபு ரீதியாக அமையப்பெறாத இந்துக்கள் புலத்தில் கோர்ப்பறேட் சாமியார் முதல் எங்கெல்லாமோ பணங்கொடுத்து மருத்துவர்களையும் மருந்தாளர்களையும்; தேடிக்கொண்டிருக்கின்றாhர்கள். இத்தேடலை நையாண்டி பண்ணுவதாலோ நாம் அவ்வாறு தேடவில்லை என்று இருப்பதனாலோ நாம் பெரிய மனிதர்களாகிவிடமுடியாது.

புலத்திற்கும் ஊரிற்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடு கிரமமான செயற்பாடு. ஒரு உணவைத் தயாரிப்பதாயினும் கூட தேவையான பொருட்கள் செய்முறை தொட்டு உணவின் சக்தி மற்றும் சத்துக்களின் விபரம் வரை எழுதி வைத்துக் கிரமமாக நடத்தப்படுவது புலத்தின் வழமை. நாங்கள் ஆட்டிறைச்சிக்கறியினை கைப்பக்குவத்தில் சமைப்பவர்கள். வீட்;டைக் கைப்பக்குவத்தில் கொத்தனார் கட்டக் குடியிருந்தவர்கள். இவ்வாறு ஊரில் மனவெளியின் ஆலாபனைகளை அனுமதிப்பதற்கான சாத்தியம் எமக்கு இருந்தது. புலத்தில் நேரம், பணம் முதலான அனைத்து வளங்களும் மட்டுப்படுத்தப்பட்டனவாக இருக்கையில் வாழ்வு கிரமமானதாக இருக்கவேண்டியது கட்டாயம் ஆகின்றது. மனவெளியின் ஆலாபனைகளைச் சுதந்திரமாக அனுபவித்துக் கொண்டிருப்பது சுதந்திரம். அச்சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கையில் எப்போதும் சாத்தியப்படாது. இந்தவகையில் வாழ்வு ஒரு கிரமாமான தாளத்திற்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டி இருக்கிறது. இவ்வாறு எல்லாத்தையும் கட்டுப்படுத்தப்பட்டதாகக் கிரமமாக வைத்துக்கொண்டு கடவுளை மட்டும் சுதந்திரமான மனவெளி ஆலாபனையில் வைத்துக்கொள்ளலாம் என்று இருக்கமுடியாது. ஏனெனில் சுதந்திரமான மனவெளி என்பதை விரிவது போல் காட்டிச் சுருங்கிக் கொண்டே போகச் செய்வது சந்தைப் பொருளாதாரச் சுமூகம். அந்தவகையில் மட்டுப்படுத்தல்களிற்குள் தேவையான அளவில் கடவுளைக் கடைப்பிடிப்பதற்கு நூல்களும் விற்பன்னர்களும் தேவைப் படுகிறாhர்கள் என்றே தோன்றுகின்றது. புலத்தின் மரபு மற்றைய சமைய வழிமுறைகளில் இருந்து எழுந்தது. எனவே அவர்களிற்கு இந்தப் பிரச்சினை இந்துக்கள் அளவிற்கு எழாது.

இ;ப்படிச் சொன்னதும், எல்லோரையும் மதம் மாறச் சொல்லுகிறேனா எனச் சண்டைக்கு வராதீர்கள். நான் சொல்வதெல்லாம், இந்துக்களும் புலத்தில் தமது வாழ்வு பழக்கப்பட்ட தாளத்திற்குள் கடவுளையும் உள்ளடக்கப் பழகவேண்டும். 25 நாள் விடியவிடியத் திருவிழா என்பது இங்கு சாத்தியப்படாதது. ஊரில் தேர்;த்திருவிழாவிற்குப் போய் வந்த திருப்த்தி புலத்தின் தேர்த்திருவிழாவில் கிடைக்காதிருப்பதாக பலர் உணரக் கூடும். மேளமும் நாதஸ்வரமும் ஊரில் எழுப்பிய மன எழுச்சியையும் ஒருமைப்பாட்டையும் புலத்தில் அனுபவிக்கமுடியாததாய் பலர் உணரக்கூடும். கெட்டி மேளம், பஞ்சாராத்தி, கற்பூர வாசனை, ஓம குண்டம் முதலியனவும் ஊரின் திருப்தியை புலத்தில் தராததாய் எவரேனும் உணரக் கூடும்.

அதற்காக, இல்லாத நூலை கடவுள் சொன்னார் என்று இனிமேல் அச்சில் போடமுடியாது. கடவுளின் மனம் தெரிந்தவர்கள் என உத்தியோகபூர்வ மதத்தலைவர்களை நியமிக்கவேண்டியதில்லை (கோர்ப்பறேன் சாமியின் அடிப்படை அது). ஆனால் அதிகாலை எழுந்து முழுகி, விரதமிருந்து, கோவிலிற்குப் போய் தேவாரம் பாடி ஐயரிற்குத் தட்சணை குடுத்து சமஸ்கிரதத்தில் மட்டுமே கடவுள் காணப்படலாம் என நினைத்து, வேலைப்பழுவால் அவ்வாறு செய்யமுடியாது போனதால உழல வேண்டியதுமில்லை.

கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை உடையவர்கள், தங்களிற்குள் வாரம் ஒருமுறையோ வசதிப்பட்ட வகையிலோ கூடிக் கதைப்பது. தத்தமது மட்டத்தில் தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது (சயமகுரவர் மூவரும் தான் தமது கடவுள் பற்றிய உணர்வினைப் பகிர வேண்டும் என்பதில்லை. சாதாரணமானவர்களும் கடவுளைப் பற்றிப் பேசலாம்). தமது கடவுள் வழிபாட்டுப் பாரம்பரியயத்தை முடிந்தவர்கள் ஆராய்வது. அதைப் பற்றிப் பேசுவது. தமது கடவுள் நம்பிக்கை எங்கு சிதைகிறது என்று தேடுவது, தமக்குள் தமது நம்பிக்கையினைப் பலமாக்குவதில் சாத்தியமான விடயங்கள் தொடர்பில் தேடுவது. மத வேறுபாடுகளைக் கடந்து, கடவுளோடான தமது உணர்வுளை மற்றையவர்கள் பகிர்வதை உள்வாங்குவது, கடவுள் பற்றிய வரையறைகளாக மனம் கற்பனை பண்ணி வைத்திருக்கும் கற்பிதங்களைத் தளர்த்தி கடவுள் என்பதை வரையறை அற்றதாக உணர்வது. மற்றைய மதச் சிந்தனைகள் போதனைகளையும் கேட்க நேரின் அவற்றுள் ஏதாவது தம்முள் அதிர்வுகளை ஏற்படுத்துகிறதா என்று பார்ப்பது—அதற்காக மதம் மாறவேண்டும் என்னபதில்லை. கடவுள் மதங்களைக் கடந்ததை உணர்வது, வெறுப்பு முதலிய மனதின் குவியங்களை ஆராய்வது, சக மனிதனை அவதானிப்பது, தன்னை அவதானிப்பது. கடவுளோடு மனவெளியில் பேசுதல், கடவுள் பற்றிய மனதின் எதிரொலி;ப்புக்களை அவதானித்தல், வாழ்வில் விழிப்பாக இருத்தல், ஒரு பழத்தை உண்ணும் போதும் கூட பழத்தினதும் தனதும் தார்ப்பரியங்களை உணர்ந்தபடி உண்ணுதல் (ரீவி பார்த்தபடி உண்பதற்குப் பதில்), தனது இலக்குகள் ஆசைகளை அவதானித்தல் முதலியன வாழ்வு கட்டுப்பட்டிருக்கும் தாளத்திற்குள் கடவுளைத் தேடக்கூடிய மிகச்சிறிய ஒரு பட்டியல்.

நீங்களும் இம்முனையில் உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஊரில் இருக்கும்வரை, என்ன துறையில் கல்வி கற்பது, எந்த ஊரில் வாழ்வது, யாரை மணம் முடிப்பது போன்ற பல்வேறு முடிவுகள் ஒருவகையில் ஏற்கனவே எமக்காக முடிவெடுக்கப்பட்டனவாக இருந்தன. இதில் கடவுள் வழிபாடு கூடத் தப்பி விடவில்லை. ஆனால், புலப்பெயர்வின் பின் பல விடயங்கள் விரிவடைந்து மாறின. கடவுள் நம்பிக்கை என்பதில் கூட பலரது மனங்களில் மாற்றங்கள் நிகழ்ந்தன (மதம் மாறுதல், நாத்திகம் என்பனவற்றை மட்டும் இங்கு குறிப்பிடவில்லை. சிறுபராயம் முதல் கும்பிபட்ட கடவுளைக்கூட கும்பிடுவதில் நிகழ்ந்த மாற்றமும் உள்ளடக்கப்படுகின்றது). இம்முனையில் எனக்குத் தோன்றிய சில விடயங்களைப் பகிருவதற்காக இப்பதிவு.

ஒரு சைவக் குடும்பத்தில் பிறந்து, மதம் மாறாது, நாத்திகன் ஆகாது வாழ்வதால், எனது சமயம் என்ன என்ற கேள்விக்கான எனது பதில் சைவசமயம் என்பதாகவே கருதப்படும். எனினும், எனது கடவுள் நம்பிக்கையினை, எனது வாழ்வில் கடவுளின் பாத்திரத்தினை ஒருவேளை நான் விபரித்தால் அது சைவ சமயத்து வழிபாட்டு முறை என்று ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது கேள்விக்குறியே. இவ்வாறு கூறியதும், யாரோ ஒரு கோப்பறேற் சாமியாரின் பக்தன் ஆகிவிட்டேன் என்று கருதிவிடாதீர்கள். மனிதனை வணங்குவதில் எனக்கு என்றும் உடன்பாடு இருந்ததில்லை. ஆனால் நான் மனிதனை வணங்குவதில்லை என்பதால் மனிதனை வணங்குபவர்கள் அனைவரையும் முட்டாள்கள் என்று அழைத்துவிடுவது முன்னர் எனக்குச் சாத்தியப்பட்டு இப்போது சாத்தியமின்றிப் போயுள்ளது. இது போன்றே, மதம் மாற்றும் கோஸ்டிகளின் இம்சைகளை அனுபவித்ததால் ஒரு கட்டத்தில் பல விடயங்களில் வெறுப்பும் (தொந்தரவால்) பயமும் (ஒருவேளை என்னையும் மாற்றிவிடுவார்களோ) இருந்தது உண்மை. எனினும் தற்போது இம்முனையில் எனது மனநிலை வித்தியாசமாக இருக்கிறது. இதர மதங்கள், கோர்பறேட் சாமியார்கள், கடவுள் வழிபாடு என்பன பற்றிய எனது கருத்தை அறிய விரும்பின் தொடர்ந்து வாசியுங்கள். இல்லையேல் பதிவை இத்தோடு மூடி விடுங்கள்.

கிறீஸ்த்தவம், யூடேயிசம், இஸ்லாம், பௌத்தம் முதலிய மதங்களிற்கும் இந்துக்களிற்கும் இடையில் (சைவம் இந்து முதலான வாதங்களை பதிவின் நீட்சி கருதித் தவிர்க்கின்றேன்) உள்ள முதல் வேறுபாடு நூல்கள். அதாவது, பைபிள், தோறா, குறான், புத்தரின் சிந்தனைகள் என்பன நூல்களாக மற்றையவரிற்கும் கடவுளின் கூற்றாக வழிபாட்டாளர்களிற்கும் இருக்கின்றன. கடவுளின் உலகிற்கான விதிகள் இவை என்ற ரீதியில் மேற்படி நூல்கள் வழிபாட்டாளர்களால் நோக்கப்படுகின்றன. ஒரு விடயம் சார்பில் முடிவெடுக்க முடியாது போயின் தமது சமய நூலின் வழிகாட்டலின் பேரில் பல வழிபாட்டாளர்கள் முடிவெடுப்பார்கள். மொத்தத்தில் கடவுள் என்ற ஒரு சிஸ்றத்தின் இயங்குவிதியினை விபரிப்பதாக மேற்படி நூல்கள் அமைந்து, கடவுள் என்ற சிஸ்ரத்திற்குள் நல்ல ஒரு குடிமகனாக வாழ்வதற்கான வழிமுறைகளை வழிபாட்டாளர்கள் மேற்படி நூல்களில் இருந்து பெற்றுக்கொள்ளுகின்றனர். நூல்கள் என்று வருகையில் அவை புரியப்படும் விதத்தில் வேறுபாடுகளும் சிக்கல்களும் தவிர்க்கமுடியாதன. இ;ப்பிரச்சினையினை எதிர்கொள்வதற்காக, சமயத் தலைவர்கள் தங்களது சமய நூல்களைப் படிப்பதற்குப் பல்கலைக்கழகங்கள் வரை துறைகள் ஒதுக்கப்பட்டு பயிலப்படுகின்றன. தமது சமய நூலினை தமது மதத்தலைவர்கள் விளக்கும் விதத்தில் ஏற்றுக்கொண்டு வழிபாட்டாளர்கள் தொடர்கின்றனர்.

இந்துக்களிற்கு, கடவுள் என்ற சிஸ்ரத்தைப் புரிந்துகொள்வதற்கான முடிந்தமுடிபான நூல் என்று எதுவும் இல்லை. எமக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் தமது இறை உணர்வை வெளிப்படுத்திய முறைகளான: தேவாரம் முதலிய பாடல்கள், புராணங்கள், இதர கதைகள் என்பனவற்றை நாம் அறிந்திருந்தாலும் இவை கடவுளைப் பற்றிய பக்தனின் பதிவுகளாக இருக்கின்றனவே அன்றி கடவுளின் கூற்றுக்களாக அமையவில்லை. நால்வேதங்கள் கூட (அதில் ஒன்றைக் கூட நான் படிக்கவில்லை. அறிந்தவரை) கடவுளால் அருளிச்செய்ததாக உணரப்படவில்லை. அதிகபட்சம் மனிதனின் பதிவுளைக் கடவுள் ஒரு கருவியாக இருந்து எழுதிக்கொடுத்தார் என்பது வரையே இந்துக்களால் ஏற்க முடிந்தது.

கடவுள் என்ற கருத்து ஏறத்தாள அனைத்து மதங்களிலும் மறுமை சார்ந்ததாக சாவின் பின்னர் பலம்பெறுவதாக அல்லது மறுபிறப்புச் சார்ந்ததாகவே பேசப்படுகின்றது என்றபோதும், மறுமை சார்ந்து பேசுவதன் ஊடாக தற்போதைய வாழ்வினை மேம்படுத்தும் உளவியலே கடவுளின் அடிப்படை. புலப்பெயார்வின் பின் கடவுள் என்ற முனையில் ஈழத்தமிழர்கள், குறிப்பாக இந்துக்கள் எதிர்கொள்ளும் பரிணாம மாற்றம் தவிர்க்க முடியாதது. மற்றைய மார்க்கத்தினர் எங்கு சென்றாலும் எத்தனை புலப்பெயர்வுகளை எதிர்கொண்டாலும் கடவுள் அருளியதென்றான நூலும் அதை விளக்கும் மதக்கட்டமைப்பும் அவர்களிற்கு மாறாதது என்பதால் புலப்பெயர்வில் மற்றைய மதத்தவர்கள் இந்துக்கள் அளவிற்குச் சவால்களை எதிர்நோக்கவேண்டியதில்லை. ஆனால் இந்துக்களைப் பொறுத்தவரை, கடவுளை தமக்குள் இருப்பவராக, உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம் என்பதாக முன்னெடுக்கும் வழிமுறை புதிய சூழலில் புதிய சவால்களின் முன்னிலையில் புதிய தெரிவுகளின் மத்தியில், தாம் யார் என்பதிலேயே குளப்பங்கள் நிறைந்துள்ள நிலையில், சிக்கல்கள் மாற்றங்களைச் சந்திப்பது தவிர்க்கமுடியாதது. இந்துக்களிற்குள் மதத்தலைவர்கள் என்பவர்கள் புரியாத பாசையில் பூசையாக்குபவர்களாக இருப்பதனால் ஒரு வெற்றிடம் புதிய சூழலில் ஏற்படுகிறது. உலகில் இன்று கோர்ப்பறேற் சாமியார்களின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு இந்துக்கள் மத்தியில் இருப்பதற்கும் இது ஒரு காரணம் (அனைத்து மதங்களிற்குள்ளும் வியாபாரம் இருக்கிறது என்பதை மறுக்கவில்லை).

ஊரில் இருந்தவரை, நாம் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தலைமுறை தலைமுறையாக எமது முன்னோர்களால் அதே சூழலில் எதிர்நோக்கப்பட்டு வந்தவை. கல்வி என்பது மிகப்பெரும்பான்மையில், சோதனை நோக்கியதாக சான்றிதழ் நோக்கியதாக உத்தியோகம் நோக்கியதாகவே இருந்தது. சிந்தனை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுற்றிக் கிடந்தது. பழகிய பொழுதுபோக்குகள், பழகிய வழமைகள், பழகிய கட்டமைப்புக்கள் என ஒரு வாழ்வு ஒரு பழக்கப்பட்ட அச்சில் பயணித்தது. பழகிய பெருந்தெருக்களில் பயணிக்கையில் எதிர்படும் பழகிய காட்சிகள் மூளையில் பதியாது கண்களில பட்டுச் செல்வதைப் போல, ஊரில் வாழ்வு ஹைவே-பிளைன்ட்ணசுடன் பயணித்தது. புலப்பெயர்வில், வழமைகள் முறிந்தன. பழக்கப்பட்ட பெருந்தெருக்களில் இருந்து இறங்கி புதிய பாதைகளில் செல்வது அவசியமானது. பாதை தவறிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு உள்ளிற்குள் நச்சரித்தபடி இருந்தன. புதிய காட்சிகள் கண்ணில் பட்டமாத்திரத்தில் மூளையிலும் பதிவாகின. சிந்தனை அவசியமாகியது. புதிய சவால்களிற்கு முகம் கொடுக்க நேர்ந்தது. தனிமை அதிகம் உணரப்பட்டது. உடல் உள கழைப்பு அதிகரித்தது. மன உழைச்சல் உணரப்பட்டது. இந்நிலையில் கடவுள் என்பது, வெறுமனே கோவிலிற்குப் போய் ஐயர் மணியடிச்சுப் பூசையாக்கப் பாத்திட்டு, நாலுபேரோடு ஊர்வம்பு கதைச்சிட்டு வாறதாக மட்டும் தொடர்வது போதாதாக மாறியது. உள்ளத்தில் ஒரு தேடலும், அங்கலாய்ப்பும் ஆரத்தழுவப்படுவதற்கான ஏக்கமும் பிறந்தது. உண்மையில் கடவுள் தேவைப்பட்டது.

ஆனால், உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது என்ற மரபில், உள்ளமே என்னவென்பதில் குளப்பமேற்பட்டும், தாம் யார் என்பதில் மலைப்புக்களும் குளப்பங்களும் ஏற்பட்டு, சுதந்திரம் சூறையாடப்பட்டதாக உணர்பவர்களிற்குத் தமது உள்மனதுடன் உரையாடுவது அத்தனை இலகுவில் சாத்தியப்பட்டுவிடாது.

சிலரிற்குப் பள்ளிக்கூடத்தில் வாத்தியார் படிப்பித்தால் மட்டும் விளங்கும். சிலரிற்கு அனுபவக் கல்வி மட்டுமே சாத்தியப்படும். சிலரிற்கு சுயசிந்தனை போதுமானதாக இருக்கும். சிலரிற்கு வாசிப்புப் போதுமானதாக இருக்கும். சிலரிற்கு உற்றார் உறவினர் நண்பர்கள் வடிவில் வழிகாட்டிகள் வாழ்வில் சாத்தியப்படுவர். சிலர் ஏகப்பட்ட குழப்பங்களோடு, எங்கு பதில்களைத் தேடுவது என்று தெரியாதவர்களாக பற்றுவதற்கு ஏதுமற்றவர்களாகத் தனியர்களாகத் தம்மை உணருவர். இவ்வாறு வாழ்வுகள் பலதரப்பட்டு வாழ்வின்ன சவால்கள் புலத்தில் பல முனைப்பட்டனவாக விரிகின்றன. இந்நிலையில், தாம் ஏற்கனவே அறிந்த விடயங்களால் ஆறுதலடைய முடியாதோரிற்குக் கடவுள் தேவைப்படுகிறது. ஆனால் கடவுள் தேவை என்று உணர்பவர்களால் கூட சுயமாக கடவுளை தமக்குத் தேவையான அளவில் உணர்ந்து விட முடிவதில்லை. மருந்தகத்தில் அத்தனை மருந்தும் நிறைந்திருந்தும், இன்ன மருந்தை இன்ன அளவில் எடுங்கள் என்ற வைத்தியரின்ன பரிந்துரையும் வைத்தியர் சொன்ன மருந்தை சொன்ன அளவில் எடுத்துக் கொடுக்கும் மருந்தாளரும் தேவைப்படுவதைப் போல, கடவுளை தேவயான அளவில் பரிந்துரைப்பதற்கும் பரிந்துரைக்கப்படும் கடவுளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் பலர் மற்றவர்களைத் தேடத் தொடங்குகிறார்கள். மரபு ரீதியான, கடவுளால் அருளப்பட்ட உத்தியோகபூர்வ நூல் என்று ஏதேனுமோ அத்தகைய நூல்களைக் கரைத்துக் குடித்து விளக்கக் கூடிய மதத்தலைவர்கள் என்று எவரேனுமோ மரபு ரீதியாக அமையப்பெறாத இந்துக்கள் புலத்தில் கோர்ப்பறேட் சாமியார் முதல் எங்கெல்லாமோ பணங்கொடுத்து மருத்துவர்களையும் மருந்தாளர்களையும்; தேடிக்கொண்டிருக்கின்றாhர்கள். இத்தேடலை நையாண்டி பண்ணுவதாலோ நாம் அவ்வாறு தேடவில்லை என்று இருப்பதனாலோ நாம் பெரிய மனிதர்களாகிவிடமுடியாது.

புலத்திற்கும் ஊரிற்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடு கிரமமான செயற்பாடு. ஒரு உணவைத் தயாரிப்பதாயினும் கூட தேவையான பொருட்கள் செய்முறை தொட்டு உணவின் சக்தி மற்றும் சத்துக்களின் விபரம் வரை எழுதி வைத்துக் கிரமமாக நடத்தப்படுவது புலத்தின் வழமை. நாங்கள் ஆட்டிறைச்சிக்கறியினை கைப்பக்குவத்தில் சமைப்பவர்கள். வீட்;டைக் கைப்பக்குவத்தில் கொத்தனார் கட்டக் குடியிருந்தவர்கள். இவ்வாறு ஊரில் மனவெளியின் ஆலாபனைகளை அனுமதிப்பதற்கான சாத்தியம் எமக்கு இருந்தது. புலத்தில் நேரம், பணம் முதலான அனைத்து வளங்களும் மட்டுப்படுத்தப்பட்டனவாக இருக்கையில் வாழ்வு கிரமமானதாக இருக்கவேண்டியது கட்டாயம் ஆகின்றது. மனவெளியின் ஆலாபனைகளைச் சுதந்திரமாக அனுபவித்துக் கொண்டிருப்பது சுதந்திரம். அச்சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கையில் எப்போதும் சாத்தியப்படாது. இந்தவகையில் வாழ்வு ஒரு கிரமாமான தாளத்திற்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டி இருக்கிறது. இவ்வாறு எல்லாத்தையும் கட்டுப்படுத்தப்பட்டதாகக் கிரமமாக வைத்துக்கொண்டு கடவுளை மட்டும் சுதந்திரமான மனவெளி ஆலாபனையில் வைத்துக்கொள்ளலாம் என்று இருக்கமுடியாது. ஏனெனில் சுதந்திரமான மனவெளி என்பதை விரிவது போல் காட்டிச் சுருங்கிக் கொண்டே போகச் செய்வது சந்தைப் பொருளாதாரச் சுமூகம். அந்தவகையில் மட்டுப்படுத்தல்களிற்குள் தேவையான அளவில் கடவுளைக் கடைப்பிடிப்பதற்கு நூல்களும் விற்பன்னர்களும் தேவைப் படுகிறாhர்கள் என்றே தோன்றுகின்றது. புலத்தின் மரபு மற்றைய சமைய வழிமுறைகளில் இருந்து எழுந்தது. எனவே அவர்களிற்கு இந்தப் பிரச்சினை இந்துக்கள் அளவிற்கு எழாது.

இ;ப்படிச் சொன்னதும், எல்லோரையும் மதம் மாறச் சொல்லுகிறேனா எனச் சண்டைக்கு வராதீர்கள். நான் சொல்வதெல்லாம், இந்துக்களும் புலத்தில் தமது வாழ்வு பழக்கப்பட்ட தாளத்திற்குள் கடவுளையும் உள்ளடக்கப் பழகவேண்டும். 25 நாள் விடியவிடியத் திருவிழா என்பது இங்கு சாத்தியப்படாதது. ஊரில் தேர்;த்திருவிழாவிற்குப் போய் வந்த திருப்த்தி புலத்தின் தேர்த்திருவிழாவில் கிடைக்காதிருப்பதாக பலர் உணரக் கூடும். மேளமும் நாதஸ்வரமும் ஊரில் எழுப்பிய மன எழுச்சியையும் ஒருமைப்பாட்டையும் புலத்தில் அனுபவிக்கமுடியாததாய் பலர் உணரக்கூடும். கெட்டி மேளம், பஞ்சாராத்தி, கற்பூர வாசனை, ஓம குண்டம் முதலியனவும் ஊரின் திருப்தியை புலத்தில் தராததாய் எவரேனும் உணரக் கூடும்.

அதற்காக, இல்லாத நூலை கடவுள் சொன்னார் என்று இனிமேல் அச்சில் போடமுடியாது. கடவுளின் மனம் தெரிந்தவர்கள் என உத்தியோகபூர்வ மதத்தலைவர்களை நியமிக்கவேண்டியதில்லை (கோர்ப்பறேன் சாமியின் அடிப்படை அது). ஆனால் அதிகாலை எழுந்து முழுகி, விரதமிருந்து, கோவிலிற்குப் போய் தேவாரம் பாடி ஐயரிற்குத் தட்சணை குடுத்து சமஸ்கிரதத்தில் மட்டுமே கடவுள் காணப்படலாம் என நினைத்து, வேலைப்பழுவால் அவ்வாறு செய்யமுடியாது போனதால உழல வேண்டியதுமில்லை.

கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை உடையவர்கள், தங்களிற்குள் வாரம் ஒருமுறையோ வசதிப்பட்ட வகையிலோ கூடிக் கதைப்பது. தத்தமது மட்டத்தில் தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது (சயமகுரவர் மூவரும் தான் தமது கடவுள் பற்றிய உணர்வினைப் பகிர வேண்டும் என்பதில்லை. சாதாரணமானவர்களும் கடவுளைப் பற்றிப் பேசலாம்). தமது கடவுள் வழிபாட்டுப் பாரம்பரியயத்தை முடிந்தவர்கள் ஆராய்வது. அதைப் பற்றிப் பேசுவது. தமது கடவுள் நம்பிக்கை எங்கு சிதைகிறது என்று தேடுவது, தமக்குள் தமது நம்பிக்கையினைப் பலமாக்குவதில் சாத்தியமான விடயங்கள் தொடர்பில் தேடுவது. மத வேறுபாடுகளைக் கடந்து, கடவுளோடான தமது உணர்வுளை மற்றையவர்கள் பகிர்வதை உள்வாங்குவது, கடவுள் பற்றிய வரையறைகளாக மனம் கற்பனை பண்ணி வைத்திருக்கும் கற்பிதங்களைத் தளர்த்தி கடவுள் என்பதை வரையறை அற்றதாக உணர்வது. மற்றைய மதச் சிந்தனைகள் போதனைகளையும் கேட்க நேரின் அவற்றுள் ஏதாவது தம்முள் அதிர்வுகளை ஏற்படுத்துகிறதா என்று பார்ப்பது—அதற்காக மதம் மாறவேண்டும் என்னபதில்லை. கடவுள் மதங்களைக் கடந்ததை உணர்வது, வெறுப்பு முதலிய மனதின் குவியங்களை ஆராய்வது, சக மனிதனை அவதானிப்பது, தன்னை அவதானிப்பது. கடவுளோடு மனவெளியில் பேசுதல், கடவுள் பற்றிய மனதின் எதிரொலி;ப்புக்களை அவதானித்தல், வாழ்வில் விழிப்பாக இருத்தல், ஒரு பழத்தை உண்ணும் போதும் கூட பழத்தினதும் தனதும் தார்ப்பரியங்களை உணர்ந்தபடி உண்ணுதல் (ரீவி பார்த்தபடி உண்பதற்குப் பதில்), தனது இலக்குகள் ஆசைகளை அவதானித்தல் முதலியன வாழ்வு கட்டுப்பட்டிருக்கும் தாளத்திற்குள் கடவுளைத் தேடக்கூடிய மிகச்சிறிய ஒரு பட்டியல்.

நீங்களும் இம்முனையில் உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மதம் என்பதற்கு ஒருவர் "அபினைப் " போன்றது என்று வரையறை செய்கின்றார் . அன்றாட வாழ்வியலில் ஏற்படுகின்ற மன அழுத்தங்களிற்கு வடிகால்களை ஒரு சில மனித மனம் தேடுகின்றது . மறாக , ஒரு சிலர் " நான் யார் " என்று தனிமையில் தம்மைத் தேட வெளிக்கிடுகின்றார்கள் . இறுதியில் அவர்களே மானிட சமூகத்தின் வரலாற்றைப் புரட்டிப்போடுகின்றார்கள் . ( இந்த எடுகோள் தனிய சமயத்திற்கு மட்டுமல்ல எல்லாத் துறைக்கும் பொருந்தும் ) . இந்த அளவிற்கு சமயம் சார்ந்த புலம்பெயர் சமூகத்திற்குண்டான கடமைகளையும் , தத்துவார்த்தரீதியாக யாரும் அலசி ஆராயவில்லை . உங்களிடம் அள்ள அள்ளக் குறையாத அறிவு உள்ளது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம் . நீங்கள் மனதில் எடுக்காவிட்டால் ஒருவிடையத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன் , < இன்னும்ஒருவன் என்றால் புரிந்தும் புரியாத புதிர் என்ற வாசகர் பிரமையை நீங்கள் உடைக்கவேண்டும் > . அதாவது உங்களது மொழிநடை இலகுவானதாக இருந்தால் நல்லது . எனது நல்வாழ்துக்கள் . உங்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கின்றேன் :) :) :) 1.

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுதலாக வாசித்துவிட்டு எழுதுகின்றேன்.

இதை இங்கு பதிவதற்கு காரணம்

நல்லதொரு முயற்சி

ஏனெனில் சுத்த சைவமும் சமயவெறியும் வேறு மதங்களைக்கண்டாலே வெறுத்தொதுக்கும் குடும்பத்திலிருந்து வந்த நான் இங்கு வந்து நண்பர்களுடன் சேர்ச்சுக்கு போகலானேன். இன்று வருடத்தில் முக்கிய நாட்களில்அங்கு போவதை வழமையாக்கிவிட்டேன். அதையே மக்களுக்கும் பழக்கிவிட்டேன்.

இது இந்த அகதி வாழ்வு இழுத்துச்செல்லும் மாற்றம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

மதம் என்பது அதிகார வர்க்கம் தொடர்ந்தும் அதிகாரத்தை நிலைநிறுத்தப் பாவிக்கும் ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட இலாப நோக்கைக் கொண்ட அமைப்பு என்பது சிறு வயதில் இவை என்னவென்று விளங்காதபோதே ஓரளவு விளங்கிய விடயம்.

முன்னர் நிறைய எதிர்ப்புணர்வு இருந்தது. தற்போது தமிழர்கள் கூடுவதற்கு ஒரு பொதுவான இடம் மதவழிபாட்டிடங்கள் என்ற சகிப்புத்தன்மை வந்துவிட்டது. பிறரைச் சுரண்டிவாழும் முதலாளித்துவ அமைப்பில் நமது மதங்களும் ஒரு அங்கம்தானே!

இலண்டனில் உள்ள சைவக் கோயில்களுக்கு சில தடவைகள் போன அனுபவம் இருக்கின்றது. மக்களை நல்வழிப் படுத்தக்கூடிய புராணக்கதைகளை கதாப்பிரசங்கங்கள் போன்று சொல்லுவதை விடுத்து அடுத்து என்ன விரதங்கள், திதிகள் வருகின்றன என்று சொல்லி வருபவர்களிடம் இருந்து பணம் கறப்பதுதான் இங்குள்ள கோயில்களின் நோக்கம். இப்படியான இடங்களில் மன நிம்மதியைத் தேடி மற்றவர்களுடன் மதம் சம்பந்தப்பட்ட ஆரோக்கியமான உரையாடல்களை நடாத்தக் கோயில் பரிபாலகர்கள் கட்டாயம் அனுமதிக்கமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னுமொருவன்ரை கட்டுரையளை வாசிக்கிறதெண்டால் இரண்டுநாள் லீவு எடுத்துப்போட்டுதான் வரோணும். :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின் சிறப்பே அதுதான் மதம் மனிதனை பிடிக்கக்கூடாது. மனிதனும் மதத்தை பிடிக்கக்கூடாது

  • தொடங்கியவர்

உங்கள் அனைவரது கருத்துக்களிற்கும் நன்றி.

கோமகன், கு.சா உங்கள் இருவரது விமர்சனங்களிற்கும் நன்றி—கோமகன் உங்கள் கனிவான பாராட்டிற்கும் நன்றி. கிரமமான ஒழுங்கில் விடயங்களைப் பகிர முனைகையில் நீட்சி. மற்றும் சிக்கல்கள் பிறந்து விடுவது உண்மை தான். சில நூறு பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வைத்து வாசிக்கும் போது இவ்வுணர்வு தோன்றுவதில்லை, ஆனால் ஒரு கட்டுரைக்குள் பேசவேண்டியதை எல்லாம் பேசி விட முனைகையில் தான் இப்பிரச்சினையினைச் சந்திக்க நேர்கிறது. நிச்சயமாக என்னால் இயன்றவரை இம்முனையில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறேன்.

விசுகு நீ;ங்கள் கூறுவது தான் யதார்த்தம். பயங்கள் பல்வேறு காரணங்களால் எங்களிற்குள் போடப்பட்டுள்ளன. ஆனால் சற்று தெளிவும் முதிர்ச்சியும் வருகையில் பயம் விலகி விடுகிறது. எனக்கும் ஒரு உதாரணம் ஞாபகம் வருகிறது, ஹல்லேலூயா என்ற வார்த்தையினை முதன் முதலாக நான் கேள்விப்பட்;டது மதம் மாற்றும் முயற்சிகளின் வாயிலாகவே. அந்த அடிப்படையில், முன்னர் இந்த வார்த்தையினைக் கேட்டாலே ஒரு ஒவ்வாமை எனக்குள் பிறப்பதை உணர்ந்திருக்கின்றேன். ஆனால் இப்போது எனக்கு மிகப்பிடித்த பாடல்களில் ஒன்று கனேடிய கவிஞர் லெனர்;ட் கோஅன் எழுதி இசை அமைத்த--இப்போது பல்வேறு பாடகர்களால் பல்வேறு வடிவங்களில் பாடப்பட்டுள்ள--ஹல்லேலூயா என்ற பாடல். அதன் ஒரு வடிவத்தை இணைத்துள்ளேன் (

)

கிருபன் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. சுரண்டல்கள் முறைகேடுகள் வியாபாரமாக்கல்கள் அடிமைப்படுத்தல் என்ற பல முனைகளில் நடைமுறை தொடரத் தான் செய்கிறது. நானும் கோவிலிற்குச் சென்று பல காலம் ஆகிறது. நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்கள் என்கையிலேயே சிக்கல்களும் பிறந்து தான் விடுகின்றன. எனினும் யாரோ எதையோ செய்கிறார்கள் என்பதற்காக நாங்கள் குறித்த சில விடயங்களை நிராகரிக்கவேண்டும் என்பதில்லை. கோவிலிற்குச் சென்று கடவுளைத் தேடுவது தேவையற்றதாய் கூட இருக்கலாம். மொத்தத்தில் கடவுள் என்ற வார்த்தையின் வரைவிலக்கணம் கூட ஒவ்வொருவரும் தங்களிற்குள் தேடித் தெளியவேண்டியதாகவே இருக்கின்றது.

நீங்கள் கூறுகின்ற மற்றைய விடயமான வயதோடும் அனுபவத்தோடும் பல விடயங்களில் முன்னர் இருந்த ஒவ்வாமைகள் அத்தனை பலமாகத் தொடர்வதில்லை என்பதும் உண்மை தான். புரிந்து கொள்ளல், சகிப்புத் தன்மை என்பன தாமாக வலுப்பெற்று விடுகின்றன. எனக்கும் சில காலம் முன்னர் வரை இலகுவில் முட்டாள்கள் என்று இகழ முடிந்தவற்றை இ;ப்போது அவ்வாறு இலகுவில் இகழ்ந்துவிட முடிவதில்லை. ஒவ்வொரு விடயத்தைப் பற்றியும் சற்று நிதானமாகப் பார்க்கத் தோன்றுகின்றது.

மதம் ஒரு போதை என்பதுபோல் கடவுளும் ஒரு போதைதான் என்பது எனது கடந்தகால தனிப்பட்ட அனுபவம். பயப்படும்போதும் வலிக்கும்போதும் துன்பப்படும்போதும் ஆசைப்படும்போதும் என தேவைகளுக்கு ஏற்ப இந்த போதை அவசியமாகின்றது.மனிதனால் முதன் முதல் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் இதுதான். இதையே ஒரு நிவாரணியாகப் பார்க்கவும் முடியும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. இதுவும் அந்த வகைதான். எந்த வகையான போதைகளை எப்படியெல்லாம் எடுக்கலாம் என்று சொல்வதற்கு இன்னும் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள் ஆனால் எவ்வளவு எடுக்கலாம் என்று கட்டுப்படுத்துவதற்கு யாருமற்ற சமூகங்கள் இந்தப்போதைக்கு அடிமையாகி சிதைந்துபோனது.

கடவுளின் அவசியம் தொடர்பில் ஒவ்வொருவரும் வேறுபடுகின்றார்கள்.

எமது சமூகத்தில் பெரும்பாலும் தூய்மைவாதம் மேலாண்மைவாதம் சார்ந்த போதைக்கு கடவுள் ஊறுகாயாக இருந்துவருகின்றார். சிறுபான்மையாக இந்த ஊறுகாய் நிவாரணியாகவும் இருந்துவருகின்றது.

கடவுள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றுதான். செயற்பாடுகளுக்கும் விழைவுகளுக்கும் கடவுள் காரணப்பொருளாக நீண்டகாலம் இருந்துவந்தார். அனுபவம் இதிலிருந்து என்னை விடுவித்துவிட்டது.இருந்தும் இந்த போதையை அனுபவிப்பதில்லை ஆனால் அவதானித்துக்கொண்டிருக்கவேண்டிய கட்டாயத்திலேயே இந்த சமூகத்தில் வாழமுடியும்.

Edited by sukan

  • கருத்துக்கள உறவுகள்

"ஆசை அறுமின் , ஆசை அறுமின் ஈசனோடாயினும் ஆசை அறுமின்"

உலகின் எந்த மதமாயினும் ஒரு ஆத்மாவின் ஈடேற்றத்திற்காக தனி மனித நல் ஒழுக்கங்கலையே வலியுறுத்துகின்றன.

எந்த மதக் கொள்கைகளிலும் தீயவை கிடையாது, ஆனால் எல்லா மதத்திலும் தீய சிந்தனை உள்ளவர்களும் கலந்தே இருக்கின்றனர்.

ஒரு மரம் இருக்கின்றது. மாமரம் என்று கொள்வோம். அந்த மரத்தில் பூவும் பிஞ்சுமாய் நிறைய காய்கள் இருக்கின்றன. எங்கே நீங்கள் ஒரு காயைப் பறியுங்கள் பார்ப்போம், மரமும் அதை விடாது, காயும் தானாய் வராது.பறித்து எடுத்தால் இரண்டுக்குமே வலியிருக்கும். ஆயினும் அதே காய் கனியானதும் மரமும் அதை வைத்திருக்காது , கனியும் அங்கே தங்கி நிக்காது . இரண்டுமே வலியில்லாமல் பிரிந்து விடும். அது மட்டுமல்ல அந்தக் கனியும் இன்னொரு மரத்தை உருவாக்கும் தகுதியுடன் இருக்கும்.

அப்படியான ஒரு தகுதிக்கு ஆன்மாவை கொண்டு வருவதற்குத் தான் மதங்கள் ஏற்பட்டன.

"நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவைதான் அறியுமோ"

என்று ஒரு சித்தர் கூறினார் என்றால் , அவர் பிறந்த உடன் எழுந்து நின்று அதைக் கூறவில்லை. அவரும் நட்ட கல்லுக்கு நாலு புஸ்பம் சாத்தி தியானித்து மனதைச் செம்மையாக்கி எங்கும், எல்லாமாய் அகன்று விரிந்திருக்கின்ற இறைமையை தன்னுள் உணர்ந்து,அப்புறம்தான் அதைக் கூறுகின்றார்.

அறியாமையில் உழலும் எம் போன்ற பாமரர்களுக்கு மதங்கள் தேவையாகத் தான் இருக்கின்றது.

காரணம் மதத்தையும் , கடவுளையும் கூட விட்டு விடுவதற்காக.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.