Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறுதியான அதிகாரப்பகிர்வு, நம்பகமான விசாரணைகளை வலியுறுத்துகிறது இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

INDIA_EMPLEM.jpg

சிறிலங்கா அரசினால் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள இந்திய அரசு, மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து உறுதியான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு எடுக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பின்னர் அதுபற்றி இந்தியா முதல் முறையாக தனது கருத்தை தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விஸ்ணு பிரகாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியாவின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இந்தியா இன்னமும் ஆய்வு செய்கிறது. ஆனால் முதற்கட்டமாக சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள முடியும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதாக சிறிலங்கா அரசாங்கம் நாடாளுரமன்றத்தில் கொடுத்துள்ள வாக்குறுதியை இந்தியா கவனத்தில் எடுத்துள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளதன் அடிப்படையில், பொதுமக்களின் மரணங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகமானதும், சுதந்திரமானதுமான விசாரணைகள்- ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள்- நடத்தப்பட வேண்டும்.

பல பத்தாண்டுகளாக நடைபெற்ற போரின் காயங்களை ஆற்றுப்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன்மூலம் நீடித்திருக்கக் கூடிய சமாதானத்தை ஏற்படுத்த நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

காணாமல் போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்த விபரங்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான தகவல்கள், மும்மொழி கொள்கையை முன்னெடுத்துச் செல்வது, அனைத்து பணியகங்களிலும் தமிழ் பேசும் அதிகாரிகளை நியமிப்பது, உயர்பாதுகாப்பு வலயங்களை குறைப்பது, சிறிலங்கா இராணுவத்தினரிடம் உள்ள தனியார் காணிகளை திரும்ப ஒப்படைப்பது, வடமாகாணத்தில் குடியியல் நிர்வாகத்தை மீண்டும் கொண்டு வருவது போன்றவை தொடர்பாக எடுக்கப்பட திட்டமிடப்படும் நடவடிக்கைகள் குறித்த விபரங்களை இந்தியா கவனத்தில் எடுத்துள்ளது.

மீள்குடியேற்றம் தொடர்பாக சிறிலங்கா கொடுத்துள்ள வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றுவதும், பொதுமக்கள் தமது இயல்பான வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக இருக்கும் என்று இந்தியா கருதுகிறது.

சிறிலங்காவில் ஏற்பட்ட மோதல்களுக்கு அடிப்படையாக இருந்த காரணங்களை உணர்ந்து கொண்டு அதற்கு தீர்வு காணும் வகையில், ஒரு அரசியல்தீர்வின் மூலம் ஒருமித்த கருத்துடன் கூடிய நல்லிணக்கத்தை சிறிலங்கா அரசு முன்னெடுத்துச் செல்வதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வழிகாட்டியுள்ளது.

இந்த சூழலில், கடந்த காலங்களில் சிறிலங்கா அரசு எமக்கு பலமுறை அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பரந்துபட்டளவிலான அரசியல் பேச்சுக்களை நடத்துவதும், 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மற்றும் அதற்கு அப்பால் செல்வதன் மூலம் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதும் சிறிலங்கா அரசின் கடமையாகும்.

இந்த விடயங்கள் தொடர்பாக சிறிலங்கா முன்னர் பலமுறை இந்தியாவுக்கு வாக்குறுதிகளை அளித்துள்ளது என்றாலும், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு, உண்மையான நல்லிணக்கத்துக்கும் வழிவகுக்கும் என்பதை சிறிலங்கா அரசு உணர்ந்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று இந்தியா நம்புகிறது.

அப்படியான ஒரு இணக்கப்பாட்டை நோக்கி சிறிலங்கா செல்வதற்கு இந்தியா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும்“ என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://www.puthinapp...?20111226105267

  • கருத்துக்கள உறவுகள்

தோற்றுப்போய் உள்ளதும் கெட்ட நிலையில் இருக்கிறது எங்கள் இனம். மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப்ப இராசதந்திரத்துடன் அரசியல் செய்யாவேணும். வேறு வழியில் நாம் என் மண்ணையும் மக்களையும் அடையாளங்களையும் காப்பாற்ற இயலாது. அந்தக் கடமை கூட்டமைப்புக்கு உள்ளது. நாளைய அரசியலை அவர்களால் செய்யமுடியுமோ இல்லையோ தெரியாது. ஆனா; இன்றய அரசியலை அடிப்படையில் அவர்களால் மட்டுமே முன் நகர்த்த முடியும்.

இந்தியாவுக்கும் அமரிக்கா தலைமையிலான மேற்க்கு நாடுகளுக்கும் இடையில் மட்டும்தான் நாம் செயல்பட முடியும். இந்த நாடுகளுக்கு நிபந்தனை விதிப்பதில் எந்த அரசியலும் இல்லை. அத்தகைய அதிதீவிரவாதம் மகிந்த அரசையே நியாயப் படுத்தும். இந்தியா மற்றும் மேற்க்கு நாடுகளது நிபந்தனைகளை நிராகரிக்காமல் அந்த நிபந்தனைகள் செயல் சாத்தியமற்றவை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து இறுதியின் இறுதியில் எங்கள் இலட்சியங்களை முன்னெடுத்துச்செல்ல வல்ல இராசதந்திர அரசியலே இன்று நமக்குத்தேவை.இது தொடர்ந்து பந்தை இராசபக்சவில் பக்கத்தில் போட்டுக்கொண்டிருக்கிற அரசியலாகும். இதை நாம் செய்யவேணும்.

முன்னர் திருகோணமலையை சிங்கள அரசு கைப்பற்ற வாய்ப்பாக அதிதீவிர முகமூடியுடன் சம்பந்தருக்கு எதிராக அரசியல் செய்தார்கள். அதே சக்திகள் அதே பாணியில் சர்வதேசத்தை மகிந்த அரசு வெண்றெடுக்கும் வகையில் சம்பந்தருக்கு எதிராக அதிதீவிர அரசியல் செய்கிறார்கள். சர்வதேசத்தை வென்றெடுப்பதல்ல சர்வதேசத்துக்கு நிபந்தனை விதிப்பதே இவர்களது அரசியலாக இருக்கிறது.

சலசலப்புகளுக்கு அஞ்சி சம்பந்தரின் தலைமை இந்தியாவோடும் அமரிக்கா மேற்குலகோடும் தொடரும் இராசதந்திர அரசியலை கைவிட்டுவிடக்கூடாது.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

தோற்றுப்போய் உள்ளதும் கெட்ட நிலையில் இருக்கிறது எங்கள் இனம்.

கவிஞரே..

தோல்வி.. தோல்வி என்று கேட்டுக் கேட்டே காது புளித்துவிட்டது..! :wub:

புலிகளே அடுத்தகட்டப் போராட்டம் என்பது என்ன என்பதைப் போர் முடியும் முன்னரே மாவீரர் உரை மூலம் அறிவித்துவிட்டார்கள்..! புலிகள் சகாப்தம் முடிந்து நாம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளோம் என்பதே என் எண்ணம்..! ஆகவே இது தோல்வியாகாது..! :rolleyes:

நெற்கதிர் அறுக்கப்பட்டது வயலின் தோல்வியா.. இல்லை அதை விளைவித்த உழவனின் வெற்றியா? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவைப்போன்று இந்தியா விய+கம் வகுக்கத்தெரியவில்லை. அதாவது அமெரிக்கா ஒரு நாட்டின் விடயத்தில் தலையிடும்போது அவர்கள் திசைதிருப்பும் பயணங்களையும் வழிகளையும் கணக்கிட்டு தன்னுடைய பிடியில் இருந்து விலகாமலும் விலகினால் அடித்தொடுக்கவும் திட்டத்தை உலுவாக்கியபின்னரே களத்தில் குதிக்கின்றார்கள். இந்தியா அப்படியல்ல. முதலில் இதை முடிப்போம் பின்னர் திட்டம் வகுப்போம் என்ற ரீதியில் செல்வதால் தான் புலிகளை இந்தியா ஒடுக்கியபின் இலங்கை சீனாவின் கைக்குள் நழுவிவிட்டது. இப்போது இந்தியா சிக்கித்தவிக்கின்றது. இந்தவிடயத்தில் இலங்கை இந்தியாவைவிட முன்நகர்ந்துள்ளது.. இதுவே அமெரிக்காவாக இருந்திருந்தால் இலங்கையின் கதை கந்தல் ஆகியிருக்கும். இது தான் இன்றும் அமெரிக்கா வல்லரசாக இருக்கின்றது.. இந்தியாவிற்கு அளித்த உறுதிமொழியிலிருந்து இலங்கை நழுவிவட்டதால் இந்தியா இப்போது அமெரிக்காவின் துணையை நாடியுள்ளது.. இருந்தும் அமெரிக்கவை வைத்து இலங்கையை அடிபணிய வைக்கும் விடயத்திலும் இந்தியாவிற்குப்பயமுள்ளதால் குழப்பத்தில் இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா இந்தவிடயத்தில் தலையிடுவதால் இந்தியாவும் ஒப்புக்கு ;கதை விடுகிறது.இந்தியா உளசுத்தியாகச் சொல்வதாகத் தெரியவில்லை.உண்மையில. இந்தியா தனஇ கையை விட.டு;.போன பந்தை(சீனாவிடம் பறி கொடுத்த பந்தை) மீட்பதற்கு அமெரிக்காவிற்குபஇ பின்னால் ஒளித்து விளையாடுகிறது. உண்மையில் இந்தியாவிற்கு போர்க் குற்றம் சம்பந்தமான சர்வதேச விசாரணை ஆபத்தானது என்பது நன்றாகத் தெரியும்.

பாதுகாப்பு காரியதரிசி பனித்திராவின் அண்மைய பேச்சுகள் சில புதிய ஊகங்களுக்கான பதைகளை திறந்திருக்கிறது. அதாவது அமெரிக்காவுக்கு இந்தியாவை கண்காணிக்கும் புதிய தேவை ஒன்றிருப்பதை அவர் வெளியிட்டிருக்கிறார். இதை அமெரிக்கா வெளியிட்டதை வைத்து கண்காணிப்பை அமெரிக்கா எப்படி செய்யும் என்பதை நாம் தான் ஊகிக்க வேண்டும். இது அவர்களின் வகைப்படுத்தப்பட்ட ரகசியம் என்பதால் நாம் இந்த ஊகங்களில் எமது கருத்து சரியானது என்றும் மார்தட்ட முடியாது.

இந்தியா மதம் சாரா ஜனநாயக நாடாகவிருந்தாலும் அது இந்து நாடாக நடந்து கொள்வதாகத்தான் சர்வதேச நாடுகள் கணக்கு போடுகின்றன. இந்த நிலையில் இந்து இந்தியா முஸ்லீம் கஸ்மீரை அடக்கியாழ்வதை அவர்கள் எற்றுக்கொள்ளப்போவதில்லை. அதேபோல் மொங்கோலிய இனங்கள் அதிகமாகவாழும் அருணாசலப்பிரதேசம் போன்றவற்றையும் சர்வதேச ரீதியில் நியாயப்படுத்தி தக்கவைப்பதையும் சரவதேசம் அங்கீகரிக்காது. ஆனால் இவற்றின் மற்றைய கரையும் மேற்கு நாடுகளின் நண்பர்கள் அல்ல என்பதால் அவர்கள் அவசரமாக இந்தியாவை உடைத்து பிரித்துவிடும் கைங்கரியங்களில் இறங்கவில்லை. ஆனல் காலம் வரும்போது இவை நடந்தேறும் என்பது இந்தியாவுக்கும் மேலை நாடுகளுக்கும் தெரியும். இதனால் இந்தியா வேண்டுமென்றே ஜனநாயக நாடுகளுடன் மிரண்டு பிடிப்பதையும், உபயோயமற்றதொன்றான கூட்டுசேராஅணி பாகிஸ்த்தான், இலங்கை, ஈரான், ஈராக், சிரியா எகிப்து, கியூபா, லிபியா போன்ற நாடுகளுன் சேர்ந்து கோமாளிக்கூத்தாடுவதையும் தொடர்கிறது. இந்தியாவின் இந்த வேண்டுமென்ற சாக்கடை நாடுகளுடனான சினேகிதமும் ஜனநாயக நாடுகளான மேற்கு நாடுகளுடனான விரோத போக்கையும் பற்றித்தான் பனித்திரா அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இந்த உண்மையில்லாத, ஸ்திரஜனநாயக மற்ற, சந்தேகத்திற்கிடமான இந்தியாவின் அரசியல் கொள்கைகளுக்கு மேலாக, இந்தியா இலங்கையிலும், வியட்நாமிலும் ஏற்படுத்தியிருக்கும் புதிய குழறுபடிகள் தனிபட்டதேவையாக அமெரிக்காவுக்கு இந்தியாவை கவனிக்க வேண்டிய தேவைகளை ஏற்படுத்தியிருக்கு.

அதிபர் ஓபமா பதவிக்கு வரும்போது அமெரிக்கா மத்திய கிழக்கில் ஈடுபட்டிருக்கும் கோழிச்சண்டைகளை நிறுத்தி, நட்பு நாடுகளின் நன்மதிப்பை மீளக்கட்டி, அமெரிக்காவின் உலக ஆளுமையை இன்னும் சில தசாபத்தங்களுக்கு நீடிப்பதும், கனடா மேற்கு ஐரோப்ப போல சமூகசேவைகளிலும் முன்னேறிய நாடாக அமெரிக்கவை மற்றுவதையும் குறிக்கோளாக கொண்டிருந்தார். ஓபாமாவுக்கு பிருத்தானியா, யேர்மனி, நோர்வே, போன்ற நாடுகளில் கிடைத்த அமோக வரவேற்பும், அவருக்கு கிடைத்த நோபல் பரிசும் அமெரிக்கா மேற்கில் தனது நன்மதிப்பை மீள கட்டி எழுப்ப எத்தகைய முயற்சியும் எடுக்க வேண்டியதில்லை என்பதை எடுத்து காட்டியது. அதேநேரம் சில எதிர்பாராத அரசியல் பொருளாதார மாற்றங்களும் ஏற்பட்டன. ஓசாமா மிக எளிதில் மாட்டிக்கொண்டது மட்டுமல்ல, பாகிஸ்தானையும் இழுத்து மீண்டும் அமெரிக்காவின் காலடியில் தள்ளிவிட்டுத்தான் போய்ச்சேர்ந்தார். முபராக் போய்ச்சேர்ந்ததில் அமெரிக்காவுக்கு பெரிய பாதுகாப்பு ஆதாயங்கள் கிடைகாவிட்டாலும், பிரத்தியேகமாக மத்திய கிழக்கில் பாரிய கொள்கை லாபம் ஏற்பட்டது. இரண்டு பிள்ளியன் டொலர்கள் மட்டும் செலவழித்து சர்வாதிகாரிகளுக்கு என்ன நேரும் என்பதை அமெரிக்கா கடாபியின் விடையத்தில் எடுத்து காட்டியது. கடைசிப் பெரிய அரசியல் மாற்றமாக கிம் யங் இல் தனது கடைசிக் காலத்தில் போட்டி பொருளாதார மேலை நாட்டு கல்வி கற்ற மகனை பதவியில் இருத்திவிட்டு இயற்கை எய்தினார். இதில் அமெரிக்கவுக்கு ஏதாவது வெற்றி இருந்தால் அதிபர் ஒமாவுக்கு வந்து சேர சில காலம் பிடிக்கும். இருந்தும் அவரின் காலத்தில் வெளிக்கிளம்பிய பொருளாதார விழுக்காடு அவரின் கனவுகளை பல ஆண்டுகள் பின் தள்ளிவிட்டன. அவர் காங்கிரசில் அடைந்த சுகாதார சீர்திருத்த சட்ட வெற்றி நடைமுறையில் இன்னமும் தோல்வியாகவே இருந்து வருகிறது. ஈரானின் பிரச்சனை பூதாகாரமாகிக் கொண்டு போகிறது. இவற்றை மீறித்தான் அவர் ஆசியநாடுகளில் தனது செல்வாக்கை காட்டி அமெரிக்காவின் ஆளுமையை மீள நிலை நாட்ட வேண்டும். ஆனாலும் பனித்திராவின் பேச்சு இந்தியாவில் அமெரிக்கவின் பாதை என்ன என்பதை பற்றி ஒரு துப்பைகூட கசியவிடவில்லை

சீனாவுடனான போட்டியில் அமெரிக்காவுக்கு நேருக்கு நேர் முட்டி மோதக்கூடிய ஒரு பாதயும் திறந்தேயிருக்கிறது. கொறியா மாநிலங்களில் சீனாவுக்கு ஏற்படகூடிய புதிய தோல்விகள் அமெரிக்கவை இந்த பாதையை தெரிவு செய்ய ஊக்கப்படுத்தும். ஆஸ்திரேலியாவில் தொடங்கியிருக்கும் அமெரிக்க தளம் இதன் முதல் படியாகலாம். ஆனால் இந்தியாவுடன் எப்படி நடந்து கொள்ளும் என்பது புரியாத புதிரே. அமெரிக்காவுக்கு கியடைக்க கூடிய கவர்சிகரமான ஒரு செய்தி, இந்தியாவின் தெற்கில் வசிக்கும் தனித்துவமான இனம் தமிழ் இனம் அரசியல் உரிமைகளில் அடைந்திருக்கும் ஏமாற்றங்கள். தமக்குள் தாம் குட்டுப்பட்டலும் நீதி, நியாயத்தை மதிக்கும் இனம் இந்த தமிழ் சாதி. ஊதியத்தை விரும்பி கடினமாக உழைக்கும் கூட்டம் இந்த தமிழ் கூட்டம். இந்த இரண்டும் அமெரிக்கவின் கொள்கையின் உயிர் நாடிகள். இந்தியாவுடனும் போட்டி பதையை அமெரிக்க தெரிவுசெய்தால், தமிழீழம் பிரிவது, அலலது தமிழ் நாடு பிரிவது இல்லையேல் இரண்டும் பிரிவது அமெரிக்காவுக்கு சாதமாகும். அமெரிக்கவுக்கு, இலங்கையாலும் இந்தியாவாலும் மாற்றந்தாய் பிள்ளைகளாக ஒதுக்க படும் இந்த இனத்தின் சினேகம் சீனாவுக்கும் இந்தியாவுக்கு எதிரான இந்தநூற்றாணடின் மிகபெரிய முதலீடக மாற முடியும்.

இந்தியா, இதுவரை இலங்கை அறிக்கை மட்டும் விட்டு இலகுவில் வெளிநாடுளை ஏமாற்றுவதை பார்த்துவிட்டு இந்த முறை தானும் ஒரு அறிக்கை விட்டு சர்வதேசத்தை ஏமாற்ற பார்க்கிறது. இப்படி அறிக்கைகளில் பாண்டித்தியம் பெற்றிருக்கும் இலங்கையோ சலசலப்பை கேட்டு பயந்தோடாத பனங்காட்டு நரி என்பது நம்ம இத்திய கொள்கை வகுப்பாளர்களாகிய மலையாளிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லைப் போலும். ஒருவருசமிருக்காது பிரதமர் மனமோகன் சிங் பகிரங்கமாக "நாம் சொல்ல இலங்கை கேட்க மறுக்கிறது. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?" என்று இளித்தவயன் போல நின்றுகொண்டு கேட்து. இந்திய அரசின் அதிகாரத்தின் அதியுச்ச நிலையில் வைத்து தனது கையாலாகாத தனத்தை பகிரங்கமாக வெளிப்படுத்திவிட்டு, எத்தனை சதத்திற்கு இந்த அறிக்கையை வெளிநாடுகள் மதிக்க போகின்றன என்று நினத்து வெளியிட்டிருக்கிறார்களோ தெரியாது. ஆனால் இந்த அறிக்கை அமெரிக்காவின் இந்தியா சம்பந்தம்மான அரசியல் கொள்கைகளில் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது. அமெரிக்கா, இந்தியாவை கண்காணிக்க தமிழீழமா, தமிழ் நாடா அல்லது இரண்டுமா என்று தீர்மானிப்பது, எதையும் தான் அடைய எத்தனை சதம் கைச்செலவாகும் என்பதை பொறுத்தென்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு நனைகிறது என ஓநாய் அழுத கதையாக இந்தியாவின்

நாடகத்தை இனியும் நம்ப வேண்டுமா?

இந்திய அமெரிக்க நகர்வுகள் ஒன்றும் தமிழருக்கானதல்ல என்பது இரு நாடுகளின் நிராகரிப்பிலும் அறிக்கையிலுமிருந்து தெரிகிறது. இரு கருத்துக்களுக்குமிடையே இருக்கும் குழப்ப நிலையை வைத்தே இலங்கையைக் கையாள நினைக்கிறார்கள்.

சீனா என்ற விடயத்தை அந்நியப்படுத்துவதற்கு இலங்கை குழப்பத்தில் இருக்க வேண்டியது இவர்களுக்குத் தேவையான வழிமுறை.

  • கருத்துக்கள உறவுகள்

இராஜீவ் காந்திக்கு முன்னரான இந்திய அரசின் பிரச்சனைக்கான தீர்மானம் எடுத்தலைப்பற்றி தென்னிந்திய அரசியல் எழுத்தாளர் நகைச்சுவையாக கூறியது போல தோசைக்கு தயார்படுத்தலுக்கு ஒப்பிட்டு ஒவ்வொரு படிமுறையாக முதலாவதாக பிரச்சனையை ஊறப்போடுவது தொடங்கலாக அந்த பிரச்சனை அசைந்தாடி பின் இறுதியில் பூதாகரமாக மாறிய பின் உடனடி தீர்வு எடுத்தே ஆகவேண்டும் என்ற நிலையை உருவாக்குகின்ற கொள்கைகளை உடைய அரசாக இருந்தது என்று நகைசுவையாக குறிப்பிட்டிருந்தார்.

இராஜிவின் பின் இந்திய கொள்கை வகுப்பு என்பதும் அவ்வாறே செல்கிறது போல் உள்ளது, நடைமுறை ரீதியாக இந்தியாவுக்கு தமிழர் தரப்பை விட்டால் இந்தியாவுக்கு வேறு வழியில்லை என்பதே உண்மை.அதனாலேயே தமிழர் தரப்பு எப்பொதும் இந்தியாவிற்கான கதவை திறந்தே வைத்திருக்கிறது.

அதே நேரம் இந்தியாவுடன் அசிரத்தையாக இருந்தால் கடந்த இரண்டு தசாப்தத்தில் ஏற்பட்டது போல் பேரழிவு ஏற்படவும் நேரலாம்.

சிறிலங்கா அரசினால் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள இந்திய அரசு, மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து உறுதியான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு எடுக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பின்னர் அதுபற்றி இந்தியா முதல் முறையாக தனது கருத்தை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் அறிக்கை வெளிவரும்வரை காத்திருந்த இந்திய மலையாள ராஜதந்திரக் காட்டுமிராண்டிகள், அமெரிக்காவின் நிலைப்பாடு தெரிந்த பின்னர் சுதாகரித்துக் கொண்டு சில அறிக்கைகளை விடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. பாவம் பிச்சைக்காரக் கூட்டம்.

காகம் இருந்து தான் பனம்பழம் விழுந்தது என்று கைகூலிகள் கூக்குரலிடுவர் என்ற நம்பிக்கையும் இருக்கலாம். இந்திய ராஜதந்திரக் காட்டுமிராண்டிகளின் அறிக்கையை ஒருசில கைக்கூலிகள் ஏற்கனவே தூக்கி வைத்து ஆடிப் பார்த்தார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.