Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகங்களுக்கு அறிவுரை சொல்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

daklas.jpg

இனம் சார்ந்து மக்களை கூருணர்ச்சிப்படுத்துவதன் மூலம் தம்மை பிரபல்யப்படுத்த முனையும் ஊடகங்களால் உயிரச்சம் கலந்த நம்பிக்கையற்ற வாழ்க்கை நிலைக்குள் எம்மக்களை தள்ளிவிட முடியுமே தவிர, எம் மக்கள் பாதுகாப்பான நம்பிக்கைதரும் ஒரு சூழலை நோக்கி நகர்வதற்கு இவை ஒருபோதும் உதவப் போவதில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு புதிய நம்பிக்கையுடன், புதியதொரு சூழலில் தம்மை மீளவும் நிலைப்படுத்திக் கொள்ள தேவையான நம்பிக்கையை நம் தமிழ்த் தலைமைகள் வழங்க வேண்டிய ஒரு சூழலில் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை தோற்றுவிப்பதன் மூலம் தம் வாழ்வையே வெறுமையாகவும், வெறுப்பாகவும் சிந்திக்கின்ற ஒரு நிலைமையை இந்த ஊடகங்கள் ஏற்படுத்த முனைகின்றன.

குண்டு சத்தங்கள் ஒய்ந்து போயுள்ள இன்றைய இந்தச் சூழலில் முற்றிலும் மாறுபாடான புதிய சமூக நிலமையொன்றுக்குள் மக்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். யார் எமது இருப்பையும் வாழ்வையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள் என்று நீண்டகாலமாக கூறிவந்தோமோ அவர்களது பாதுகாப்பின் கீழேயே இன்று எமது மக்கள் வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

கூடவே எமக்கான வாழ்வாதார உதவிகள், அடிப்படை தேவைகளுக்காக அவர்களையே சார்ந்து வாழவேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்குள் நம் தேச விடுதலை போராட்டம் எம் மக்களை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. இவ்வாறான ஒரு சூழலில் அதற்குள் வாழும் நம்மவர் ஒவ்வொருவரும் தனித்தனியாகவும் கூட்டாகவும் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தேவையின் நிர்ப்பந்தம் இன்று எம் அனைவரினதும் முன்னாலும் உள்ளது.

இனம் சார்ந்து சிந்திக்க புறப்பட்டதன் விளைவாக முழு நம்பிக்கையையும் நாமே தொலைத்;து விட்டதன் பின்னர் புறத்தே நாம் வாழும் சூழலை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான உத்வேகமும் அதை நோக்கிய சிந்தனை முறைமையுமே எம் அனைவரினதும் முன்னாலுள்ள அவசியத் தேவையாகும்.

இனம், மொழி சார்ந்து தமக்கான வாசகர் வட்டத்தையும் அதனூடான சமூக அணியினையும் சிருஷ்டிக்க முனையும் எமது ஊடகங்கள் இன்றைய நிலையில் பாதுகாப்பான சூழலொன்றை மக்கள் உணர்வதற்கான செய்தி முறைமையை கைக்கொள்ள தம்மை பரிச்சயப்படுத்திக் கொள்வதே சாலப் பொருத்தமான ஒரு செயற்பாடாக இருக்கும்.

அதனை விடுத்து வாசகர்களையும் பொது மக்களையும் கூருணர்ச்சிப்படுத்தும் இந்த எழுத்து முறைமைகள் அவலத்திலிருந்து மீண்டெழ முனையும் எம்மக்களை மீளவும் படுகுழிக்குள் தள்ளி வீழ்த்தும் செயலாகவே அமைந்துவிடும்.

தமது செய்திகளை அல்லது தகவல்களை அறிந்து கொள்ளும் வாசகர்களுக்கு தம்மை நோக்கிய ஒரு பதிவை நிலை நிறுத்த முனையும் இந்த ஊடகங்கள் தம்மை அறியாமலே எம் மக்களின் மனங்களின் அவநம்பிக்கையை தோற்றுவித்து அதன் வழியே பாதுகாப்பற்ற சூழலை சிருஸ்டிக்க முனைவது துரதிஷ்டவசமானதொரு நிகழ்வாகும்.

இதன் தொடர்ச்சியான நிகழ்வுதான் இறுதிப்போர் வரை விரும்பியோ விரும்பாமலோ விடுதலைக்காக அனைத்தையும் இழப்பது என்கிற தொனிப் பொருளில் அனைத்து உயிர் உடமை இழப்புக்களும் அரங்கேறியிருக்கின்றன.

தமிழ் இனத்தின் பெயரால், விடுதலையின் பெயரால் அனைத்தையும் இழப்பது என்கின்ற இந்தக் கோஷம் பயனளிக்காமல் போயிருப்பது போரின் நலன்களை ஒருசாரரும், போரின் இழப்புக்களை மற்றொருசாரரும் எடுத்துக் கொள்ள வேண்டுமென்கிற எம் தலைமைகளின் குறுகலான விருப்பார்வத்தின் விளைவாகும்.

இவை நம் தமிழ் தேசம் எம்மக்களுக்கான நலன்களை அடிப்படை உரிமைகளை நேர்மையாக உண்மையாக வென்று கொள்வதில் எதிர்கொள்ளும் அக நெருக்கடிகளை வெளிப்படுத்தி நிற்கின்றன.

இந்த அகமுரண்பாட்டின் பிரதிபலனாக இருந்த இடத்தினின்றும் ஒருபடி இன்னும் கீழ்நோக்கியே எமது மக்கள் பின்தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனை நம் ஊடகங்கள் பட்டறிந்து உணர்ந்த பின்னும் தமது எழுத்துக்களால் வெறுப்பின் உணர்ச்சி வெளிப்பாட்டிற்குள் எம்மக்களை தள்ளிவிட முயற்சிப்பது தற்கொலைக்கு நிர்ப்பந்திக்கும் செயலாகும்.

ஆகவே எதிர்காலத்தில் இதனை நன்குணர்ந்து கொண்டு எமது மக்களின் நிஜமான விடிவிற்காக இந்த ஊடகங்கள் உழைக்க முன்வர வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கேட்டுக் கொண்டார்.

http://www.saritham.com/?p=46934

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
donkeys_998553i.jpg
  • கருத்துக்கள உறவுகள்

துணிவிருந்தால் மக்கள் முன் ஆயுதம் இல்லாமல் உங்கள் வீரவசனங்களை சொல்லுங்கள் பார்ப்போம்.(இராணுவம் உங்கள் பக்கம் என்பது வேறு கதை)

அமைச்சரின் கருத்தில் பல உண்மைகள் இருக்கின்றது. இனம் சார்ந்த மக்களை கூர் உணர்ச்சிப்படுத்துவதும் அதற்கு அப்பாவி மக்கள் பலியாவதும் இனி நடக்கக் கூடாது. புலம்பெயர்ந்து வேறு நாட்டுக் குடியுரிமைகள் பெற்று பாதுகாப்பாக இருந்துகொண்டு தேசிய உணர்ச்சி வளர்த்தல், அரச கட்டுப்பாட்டில் இருந்துகொண்டு ஊடகத் துறையினூடாக தேசியம் வளர்த்தல் அடயாளத்தேடலுக்காக தேசியம் வளர்த்தல் இப்படியே பப்பாசி மரத்தில் ஏற்றி விடுதல். ஆனால் தாங்கள் எப்போதும் பாதுகாப்பாக இருந்துகொள்ளுதல். பலியாகுதலும் பலியாக்குதலும் வறுமைப்பட்ட அப்பாவி மக்களை. இனி தேசியம் வேண்டுமானாக்கள் சிங்களவனிடம் போய் நேரடியாக வாங்கிக்கொள்ட்டும். என்னுமொருவனை ஏவி விட்டு வாங்குவதை நிறுத்தவேண்டுமென்பதையே இந்தக் கருத்துக்ள் சுட்டிக்காட்டுகின்றது. மேலும் சாதி மதம் பிரதேசவாதம் வர்க்கம் என பிளந்துபட்டுள்ள நிலையை சரிப்படுத்த வக்கற்ற நிலையில் இனம் இனம் என்று பினாத்துவது தற்கொலைக்கு ஒப்பானது என்பதை பேரளிவுகள் பறைசாற்றுகின்றது.

-----------------

துணிவிருந்தால் மக்கள் முன் ஆயுதம் இல்லாமல் உங்கள் வீரவசனங்களை சொல்லுங்கள் பார்ப்போம்.(இராணுவம் உங்கள் பக்கம் என்பது வேறு கதை)

இவரை கொல்வதற்காக மேற்கொண்ட முயற்சியில் இறந்த புலிகள் பலர் தற்கொலைதாரிகள் உட்பட . மண்டையில் போடுவதை கடந்த எதையும் சிந்திக்கமுடியாத நிலையில் தான் தேசியம் இன்னும் இருக்க முனைகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சரின் கருத்தில் பல உண்மைகள் இருக்கின்றது. இனம் சார்ந்த மக்களை கூர் உணர்ச்சிப்படுத்துவதும் அதற்கு அப்பாவி மக்கள் பலியாவதும் இனி நடக்கக் கூடாது. புலம்பெயர்ந்து வேறு நாட்டுக் குடியுரிமைகள் பெற்று பாதுகாப்பாக இருந்துகொண்டு தேசிய உணர்ச்சி வளர்த்தல், அரச கட்டுப்பாட்டில் இருந்துகொண்டு ஊடகத் துறையினூடாக தேசியம் வளர்த்தல் அடயாளத்தேடலுக்காக தேசியம் வளர்த்தல் இப்படியே பப்பாசி மரத்தில் ஏற்றி விடுதல். ஆனால் தாங்கள் எப்போதும் பாதுகாப்பாக இருந்துகொள்ளுதல். பலியாகுதலும் பலியாக்குதலும் வறுமைப்பட்ட அப்பாவி மக்களை. இனி தேசியம் வேண்டுமானாக்கள் சிங்களவனிடம் போய் நேரடியாக வாங்கிக்கொள்ட்டும். என்னுமொருவனை ஏவி விட்டு வாங்குவதை நிறுத்தவேண்டுமென்பதையே இந்தக் கருத்துக்ள் சுட்டிக்காட்டுகின்றது. மேலும் சாதி மதம் பிரதேசவாதம் வர்க்கம் என பிளந்துபட்டுள்ள நிலையை சரிப்படுத்த வக்கற்ற நிலையில் இனம் இனம் என்று பினாத்துவது தற்கொலைக்கு ஒப்பானது என்பதை பேரளிவுகள் பறைசாற்றுகின்றது.

-----------------

இவரை கொல்வதற்காக மேற்கொண்ட முயற்சியில் இறந்த புலிகள் பலர் தற்கொலைதாரிகள் உட்பட . மண்டையில் போடுவதை கடந்த எதையும் சிந்திக்கமுடியாத நிலையில் தான் தேசியம் இன்னும் இருக்க முனைகின்றது.

ஓகே நீங்க சொல்லுவது சரிதான்.................

தேசியம் தேவையானவர்கள் நேரிடையாக போய் சிங்களவனிடம் கேட்கலாம்.

அமைச்சர் என்ன தேவையாய் அமைச்சராய் இருக்கிறார்?

அந்த வேலையை அமைச்சர் செய்தால் ஊடகங்களுக்கு எழுத என்ன இருக்கிறது?

அமைச்சர் என்ன தேவையாய் அமைச்சராய் இருக்கிறார்?

அந்த வேலையை அமைச்சர் செய்தால் ஊடகங்களுக்கு எழுத என்ன இருக்கிறது?

அமைச்சர் மக்களின் தேவை கருதி மக்களுக்கு சேவை செய்ய அமைச்சராய் இருக்கின்றார். அவரால் முடிந்தளவு சேவையை செய்கின்றார்.

// புனரமைக்கப்பட்டு வரும் கைதடி பனைவள அராய்ச்சி நிலையத்தை அமைச்சர் பார்வையிட்டார்!

ஆனையிறவு உப்பளத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

வவுனியா கைத்தொழிற் பேட்டையின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வு!

தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் தொடர்பான கலந்துரையாடல்!

விவசாயிகளின் நலனில் அதிக அக்கறை கொண்டவர் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் - கிளிநொச்சி கமநலசேவை உதவி ஆணையாளர்

யாழ் - கிளிநொச்சி வீதிகள் புனரமைப்பு தொடர்பில் விரிவான கலந்துரையாடல்

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் - அமைச்சர் சந்திப்பு

http://www.epdpnews.com/ /////

இவ்வாறு தொடரும் மக்கள் நலன் சார்ந்த பணிகளை இங்கு எழுத இடம் போதாது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அந்த மத்தியில கூட்டாட்சி மாநிலத்தில மண் ஆட்சியெல்லாம்?

பாப்பா மரத்தில ........... ச்சே கொய்யா மரத்தில ஏத்த சொன்னவைகளோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமைச்சரின் கருத்தில் பல உண்மைகள் இருக்கின்றது. இனம் சார்ந்த மக்களை கூர் உணர்ச்சிப்படுத்துவதும் அதற்கு அப்பாவி மக்கள் பலியாவதும் இனி நடக்கக் கூடாது. புலம்பெயர்ந்து வேறு நாட்டுக் குடியுரிமைகள் பெற்று பாதுகாப்பாக இருந்துகொண்டு தேசிய உணர்ச்சி வளர்த்தல், அரச கட்டுப்பாட்டில் இருந்துகொண்டு ஊடகத் துறையினூடாக தேசியம் வளர்த்தல் அடயாளத்தேடலுக்காக தேசியம் வளர்த்தல் இப்படியே பப்பாசி மரத்தில் ஏற்றி விடுதல். ஆனால் தாங்கள் எப்போதும் பாதுகாப்பாக இருந்துகொள்ளுதல். பலியாகுதலும் பலியாக்குதலும் வறுமைப்பட்ட அப்பாவி மக்களை. இனி தேசியம் வேண்டுமானாக்கள் சிங்களவனிடம் போய் நேரடியாக வாங்கிக்கொள்ட்டும். என்னுமொருவனை ஏவி விட்டு வாங்குவதை நிறுத்தவேண்டுமென்பதையே இந்தக் கருத்துக்ள் சுட்டிக்காட்டுகின்றது. மேலும் சாதி மதம் பிரதேசவாதம் வர்க்கம் என பிளந்துபட்டுள்ள நிலையை சரிப்படுத்த வக்கற்ற நிலையில் இனம் இனம் என்று பினாத்துவது தற்கொலைக்கு ஒப்பானது என்பதை பேரளிவுகள் பறைசாற்றுகின்றது.

-----------------

இவரை கொல்வதற்காக மேற்கொண்ட முயற்சியில் இறந்த புலிகள் பலர் தற்கொலைதாரிகள் உட்பட . மண்டையில் போடுவதை கடந்த எதையும் சிந்திக்கமுடியாத நிலையில் தான் தேசியம் இன்னும் இருக்க முனைகின்றது.

சிங்கள இனவாதத்தின் இந்தக் கூலியை, மக்கள் தம் வாக்குகளால் வெளிப்படுத்திய பிறகுமா? கொள்ளைக் காறனுக்கும், காவல் காறனுக்கும் வித்தியாசம் தெரியாத இந்தத் தரத்தில் உள்ள அறிவுதானா, இங்கே உருண்டு, பிரண்டு போதனை செய்து கொண்டிருப்பது?

இரவும், பகலும் எது வென்று தெரியாத குருடு, நாள் முழுக்க புத்தகம் படிச்ச கதையாய் போச்சுதே!

கொள்ளைக் காறனுக்கும், காவல் காறனுக்கும் வித்தியாசம் தெரியாத இந்தத் தரத்தில் உள்ள அறிவுதானா, இங்கே உருண்டு, பிரண்டு போதனை செய்து கொண்டிருப்பது?

இரவும், பகலும் எது வென்று தெரியாத குருடு, நாள் முழுக்க புத்தகம் படிச்ச கதையாய் போச்சுதே!

யாரை இங்கே காவல்காரன் எங்கிறீங்கள்?

மேலும் உங்களுக்கு ஒருவனைப் பிடிக்காதபட்சத்தில் அவனின் நல்ல கருத்தையும் மறுக்கவேண்டும் என்ற அவசியம் எல்லோருக்கும் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரை கொல்வதற்காக மேற்கொண்ட முயற்சியில் இறந்த புலிகள் பலர் தற்கொலைதாரிகள் உட்பட . மண்டையில் போடுவதை கடந்த எதையும் சிந்திக்கமுடியாத நிலையில் தான் தேசியம் இன்னும் இருக்க முனைகின்றது.

மடியில் கனம் உள்ள திருடன், மடியை காண்பிப்பானா? அப்படியே இவர் சிங்கள இனவாத்தின் கூலியாய் எத்தனை பேரை ஒழித்திருப்பார்? அந்தப் பயம் தான் யாருக்காக பாடுபடுகின்றேன் என்று சொல்லிக்கொள்ளும் அந்த மக்களுக்கு முன்னால் போகும் தைரியத்தைக் கொடுக்காது என்பதே! ஏதோ உலகம் அறியாத அமைதிப் புறாவாக டக்ளஸைக் காண்பித்து கருத்து எழுதுகின்றார்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரை இங்கே காவல்காரன் எங்கிறீங்கள்?

மேலும் உங்களுக்கு ஒருவனைப் பிடிக்காதபட்சத்தில் அவனின் நல்ல கருத்தையும் மறுக்கவேண்டும் என்ற அவசியம் எல்லோருக்கும் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.

விவாத்தில் முரண்பாடு என்பது உடன் படத்தக்கதே. ஆனால் அதிலும் ஒர் அளவு உண்டு. ஆபத்தை, அபயம் என்று காண்பிப்பதும், மீன் பிடிக்கப் பயன்படுத்தும் தூண்டிலின் "புளுவை" ஆகா! அவன் என்ன மனம் படைத்தவன் அவன் மீனுக்கும் இரங்குகின்றான் என்று சொல்லிகின்ற வகை விவாதம் அல்ல அவை ஊழியம்!

இதுக்கெல்லாம் வெறும் பச்சை போட கூடாது.

ஒரு ஓ போடணும்!

இதுதான் நடுநிலைமை என்ற போலி சிர்த்தாந்தத்தை அவிக்கதான் பலர் கிளம்பி உள்ளார்கள்.

எந்த ஊரிலே இருந்து வருகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் டக்லஸ் (இலங்கையராக) மானஸ்தனாக இருந்தால் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுடைய காசே வேண்டாம் என்று எஜமான் ராகபச்செக்கு எடுத்து கூறி நாமே வாழ வைப்பம் என வாழவைத்து இருக்கவேண்டும்.. ஒரு அரசியல் தீர்வையாவது பெற்று தந்திருக்க வேண்டும் .. அதற்கு அவருக்கு தெரவிசு இல்லை அதற்கு இந்த பின்பாட்டு..

போக .. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் அந்த அந்த நாட்டில் இருக்கும் உயர் அதிகாரிகளை(ஆக வேணாம்) சந்தித்து உள்குத்து குத்தி இலங்கைக்கு ஆப்படிக்கும் திறமையும் இல்லை.. அவன் ராஜ பக்சே யாரையும் உள்ளே விடாமல் துள்ளாத மனமும் துள்ளும் டிரவுசர் பாண்டி போல ஊரையே சுற்றி காண்பித்து புனர்வாழ்வு என காசு எண்ணத்தான் போறான்..

டிஸ்கி :

போக ஒற்றுமை இல்லாத இனம் இனம் என கூப்பாடு போடுவது ஈழ தமிழர்கள் ( vs) புலம் பெயர்ந்த தமிழர்கள் என கருத்து எழுதுவதில் இருந்தே இருக்கிறது.. இதில் சாதி என கேப்பில் உள்ளே வேற மேட்டரை இடைக்கிடை விடகூடாது... போக ஆச்சிரியம் என்ன என்றால் அப்புடியே போரில் தங்களின்ட பிள்ளை மாரை எல்லாம் விட்டு விட்டதை போல .... அவர்களே(ஈழ தமிழர்கள்) ஏதும் எழுதாவிட்டாலும் இவர்கள் வெளிநாட்டில் (லைவ் டெலிகாஸ்ட்) குந்தி கொண்டு நோகாமல் கருத்து எழுதுவதுதான் ... ஓ சேட்...

யாரை இங்கே காவல்காரன் எங்கிறீங்கள்?

மேலும் உங்களுக்கு ஒருவனைப் பிடிக்காதபட்சத்தில் அவனின் நல்ல கருத்தையும் மறுக்கவேண்டும் என்ற அவசியம் எல்லோருக்கும் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.

மனித குணம் உள்ள ஒருவன் கூறும் நல்ல தீய கருத்தை ஏற்றுகொள்வதற்கு அப்பால் மனித குணம் அற்ற தீயவன் சொல்லும் நல்ல கருத்தை ஏற்பது அறிவல்ல நண்பரே.........

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சரின் கருத்தில் பல உண்மைகள் இருக்கின்றது. இனம் சார்ந்த மக்களை கூர் உணர்ச்சிப்படுத்துவதும் அதற்கு அப்பாவி மக்கள் பலியாவதும் இனி நடக்கக் கூடாது. புலம்பெயர்ந்து வேறு நாட்டுக் குடியுரிமைகள் பெற்று பாதுகாப்பாக இருந்துகொண்டு தேசிய உணர்ச்சி வளர்த்தல், அரச கட்டுப்பாட்டில் இருந்துகொண்டு ஊடகத் துறையினூடாக தேசியம் வளர்த்தல் அடயாளத்தேடலுக்காக தேசியம் வளர்த்தல் இப்படியே பப்பாசி மரத்தில் ஏற்றி விடுதல். ஆனால் தாங்கள் எப்போதும் பாதுகாப்பாக இருந்துகொள்ளுதல். பலியாகுதலும் பலியாக்குதலும் வறுமைப்பட்ட அப்பாவி மக்களை. இனி தேசியம் வேண்டுமானாக்கள் சிங்களவனிடம் போய் நேரடியாக வாங்கிக்கொள்ட்டும். என்னுமொருவனை ஏவி விட்டு வாங்குவதை நிறுத்தவேண்டுமென்பதையே இந்தக் கருத்துக்ள் சுட்டிக்காட்டுகின்றது. மேலும் சாதி மதம் பிரதேசவாதம் வர்க்கம் என பிளந்துபட்டுள்ள நிலையை சரிப்படுத்த வக்கற்ற நிலையில் இனம் இனம் என்று பினாத்துவது தற்கொலைக்கு ஒப்பானது என்பதை பேரளிவுகள் பறைசாற்றுகின்றது.

-----------------

ம்ம். அமைச்சர்களான கருணாவும் டக்ளசும் மக்களை மீள்குடியேற்றம் செய்ததில் செயற்பட்ட விதம் புல்லரிக்க செய்கிறது.கூட்டமைப்பை குறை கூறுவதிலேயே டக்ளசின் காலம் சில்கிறது.இதற்கு அமைச்சராக தான் இருந்து இப்படி அறிக்கைகள் விட வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.

டக்ளசின் கட்டுப்பாட்டில் உள்ள தீவக பகுதிக்கு கூட்டமைப்பினரை செல்ல விடாமலும் அப்படியே சென்றவர்களை நையப்புடைத்தவர்களும் இன்று ஜனநாயகம் கதைப்பது மிக வேடிக்கையானது.இவர்களின் வதை தாங்காமல் தான் போர் முடிந்து விட்ட பின்பும் தமிழ் நாட்டுக்கு அகதிகளாக இன்றும் செல்லும் நிலையை என்னவென்பது.

தமிழ் மக்களுக்கு நடந்த இனப்படுகொலைகளை உலகறிய இலங்கையில் உள்ள மக்கள் வாய் திறந்தால் என்ன நடக்கும் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.இவற்றை ஐ.நாவோ அல்லது உரியவர்களோடு பேச புலம் பெயர்ந்தவர்களால் தான் முடிகிறது. இதில் எங்கே "ப்ப்பா மரம்" இருக்கிறது??

இவரை கொல்வதற்காக மேற்கொண்ட முயற்சியில் இறந்த புலிகள் பலர் தற்கொலைதாரிகள் உட்பட . மண்டையில் போடுவதை கடந்த எதையும் சிந்திக்கமுடியாத நிலையில் தான் தேசியம் இன்னும் இருக்க முனைகின்றது.

போர் முடிந்து 3 வருடங்களுக்கு மேலாகிறது.இறந்த புலிகள் தவிர ஏனையவர்கள் சரணடைந்தோ, காட்டிக்கொடுத்தோ சிங்கள அரசின் வதை முகாமில் உள்ளார்கள்.இனியும் புலிகள் வந்து கொல்வார்கள் அல்லது அந்த மனநிலையில் உள்ளார்கள் என்று யாருக்கு பம்மாத்து விடுகிறீர்கள்??

உண்மையை சொல்வதானால் டக்ளசின் தாதா அரசியலில் மக்கள் இவரின் மேல் ஆத்திரத்தில் உள்ளார்கள்.எனவே ஆயுததாரிகளின் புடை சூழாமல் இவரால் அரசியல் எப்பொழுதுமே செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமைச்சரின் கருத்தில் பல உண்மைகள் இருக்கின்றது. இனம் சார்ந்த மக்களை கூர் உணர்ச்சிப்படுத்துவதும் அதற்கு அப்பாவி மக்கள் பலியாவதும் இனி நடக்கக் கூடாது. புலம்பெயர்ந்து வேறு நாட்டுக் குடியுரிமைகள் பெற்று பாதுகாப்பாக இருந்துகொண்டு தேசிய உணர்ச்சி வளர்த்தல், அரச கட்டுப்பாட்டில் இருந்துகொண்டு ஊடகத் துறையினூடாக தேசியம் வளர்த்தல் அடயாளத்தேடலுக்காக தேசியம் வளர்த்தல் இப்படியே பப்பாசி மரத்தில் ஏற்றி விடுதல். ஆனால் தாங்கள் எப்போதும் பாதுகாப்பாக இருந்துகொள்ளுதல். பலியாகுதலும் பலியாக்குதலும் வறுமைப்பட்ட அப்பாவி மக்களை. இனி தேசியம் வேண்டுமானாக்கள் சிங்களவனிடம் போய் நேரடியாக வாங்கிக்கொள்ட்டும். என்னுமொருவனை ஏவி விட்டு வாங்குவதை நிறுத்தவேண்டுமென்பதையே இந்தக் கருத்துக்ள் சுட்டிக்காட்டுகின்றது. மேலும் சாதி மதம் பிரதேசவாதம் வர்க்கம் என பிளந்துபட்டுள்ள நிலையை சரிப்படுத்த வக்கற்ற நிலையில் இனம் இனம் என்று பினாத்துவது தற்கொலைக்கு ஒப்பானது என்பதை பேரளிவுகள் பறைசாற்றுகின்றது.

-----------------

இவரை கொல்வதற்காக மேற்கொண்ட முயற்சியில் இறந்த புலிகள் பலர் தற்கொலைதாரிகள் உட்பட . மண்டையில் போடுவதை கடந்த எதையும் சிந்திக்கமுடியாத நிலையில் தான் தேசியம் இன்னும் இருக்க முனைகின்றது.

சுகன் அண்ணா,

ஒரு சாரார் தேசியம் பேசியும்,இன்னொரு சாரார் மாற்றுக்கருத்தும் பேசியும் மக்களை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வருகிறார்களே தவிர

இருசாராரில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல, இருசாராரும் விட்டுக்கொடுப்புக்கு இடமளிக்காத போது இவை எல்லாம் வீண் பேச்சுக்களே?

எப்படி தேசியம் பேசுபவர்களை குற்றம் காண்கிறீர்களோ அதே அளவு தேசியம் பேசுவோருக்கு எதிரான கொலைக்கரங்கள் இவர்களாலும் ஏவப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த உண்மை.

உதயன் பத்திரிகை அலுவலகம்உட்பட பல ஊடகவியலாளர்களின் கொலைக்கு காரணமாக இருந்த டக்ளஸ்சும்,சில கூலிப்படைகளும் ஊடகம்,ஊடகதர்மம் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுக்கு ஒப்பானது. :icon_idea:

சுகன் அண்ணா,

ஒரு சாரார் தேசியம் பேசியும்,இன்னொரு சாரார் மாற்றுக்கருத்தும் பேசியும் மக்களை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வருகிறார்களே தவிர

இருசாராரில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல, இருசாராரும் விட்டுக்கொடுப்புக்கு இடமளிக்காத போது இவை எல்லாம் வீண் பேச்சுக்களே?

எப்படி தேசியம் பேசுபவர்களை குற்றம் காண்கிறீர்களோ அதே அளவு தேசியம் பேசுவோருக்கு எதிரான கொலைக்கரங்கள் இவர்களாலும் ஏவப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த உண்மை.

உதயன் பத்திரிகை அலுவலகம்உட்பட பல ஊடகவியலாளர்களின் கொலைக்கு காரணமாக இருந்த டக்ளஸ்சும்,சில கூலிப்படைகளும் ஊடகம்,ஊடகதர்மம் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுக்கு ஒப்பானது.

இந்த இரு சாராரையும் விட ஊடகங்கள் மக்களை இனம் சார்ந்து கூர் உணர்ச்சிப்படுத்துவது மிக ஆபத்தானது. அதையே அமைச்சர் அருமையாக சொல்லியுள்ளார். அந்தக் கருத்து முக்கியமானது என்பதே எனது நிலைப்பாடு. மற்றபடி அவர்கள் இவர்களையும் இவர்கள் அவர்களையும் போட்டுத்தள்ளியது ஒன்றும் ஆச்சரியமான விடயம் கிடையாது. மேலும் இந்தியாவில் சுப்பிரமணியசாமி தங்கபாலு போன்றவர்கள் அரசியல் செய்வதற்கு விடுதலைப்புலிள் நாமம் எப்போதும் அவசியமானது. அதேபோல் புலத்தேசியவாதிகளுக்கு கருணா டக்ளஸ் அவசியமாக இருக்கின்றனர். தேசியத்தின் வங்குரோத்துநிலை அப்படி உள்ளது. கருணா பார்ட்டிக்குபோய் டான்ஸ் ஆடினால் படினால் கருணாவுக்கு சுதி வருகுதோ இல்லையோ தேசீயத்துக்கு சுதி வருகின்றது. அதைவைத்து ஒருமாதகாலம் தேசீயம் உயிர்ப்புடன் இருக்க முனைகின்றது.

Edited by sukan

அறிவுரை கூறுவது சுலபமான விடயம். அதன்படி சொன்னவரே நடப்பது, கடினமான விடயம்.

மக்களாலேயே தேர்ந்து எடுக்கப்படாத இந்த 'அமைச்சர்', ஒரு கொலையாளி, பத்திரிகையாளைரையே கொலை செய்வித்தவர். பல நாடுகளில் காவல்துரைகளால் தேடப்படுபவர், அனுமதி மறுக்கப்படுபவர்.

அப்படிப்பட்ட ஒரு செல்லாக்காசை சிங்களம் வைத்திருப்பதே அந்த காசுக்கு சுயமான மூளை இல்லாத காரணத்தால் மட்டுமே. ஒருநாள் அந்த இனவாதிகளால் இந்த சட்டவிரோதி தூக்கிஎறியப்படுவான், அநாதரவாக கிடப்பான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இரு சாராரையும் விட ஊடகங்கள் மக்களை இனம் சார்ந்து கூர் உணர்ச்சிப்படுத்துவது மிக ஆபத்தானது. அதையே அமைச்சர் அருமையாக சொல்லியுள்ளார். அந்தக் கருத்து முக்கியமானது என்பதே எனது நிலைப்பாடு. மற்றபடி அவர்கள் இவர்களையும் இவர்கள் அவர்களையும் போட்டுத்தள்ளியது ஒன்றும் ஆச்சரியமான விடயம் கிடையாது. மேலும் இந்தியாவில் சுப்பிரமணியசாமி தங்கபாலு போன்றவர்கள் அரசியல் செய்வதற்கு விடுதலைப்புலிள் நாமம் எப்போதும் அவசியமானது. அதேபோல் புலத்தேசியவாதிகளுக்கு கருணா டக்ளஸ் அவசியமாக இருக்கின்றனர். தேசியத்தின் வங்குரோத்துநிலை அப்படி உள்ளது. கருணா பார்ட்டிக்குபோய் டான்ஸ் ஆடினால் படினால் கருணாவுக்கு சுதி வருகுதோ இல்லையோ தேசீயத்துக்கு சுதி வருகின்றது. அதைவைத்து ஒருமாதகாலம் தேசீயம் உயிர்ப்புடன் இருக்க முனைகின்றது.

இது இன்று தொடங்கின சங்கதியல்ல. தமிழ் வரலாற்று கதைகள் எழுதத்தொடங்கிய நாளிலேயே தொடங்கியது. இந்த ஆளை ஆள் துரத்தும் குரோதம் ஒருவன் எதிரியிடம் சரணாகதி அடையும் மட்டும் தொடரும்,அதையும் தாண்டி தொடர்ந்திருக்கிறது. அதுதான் ரமேசினதும் ஏனைய சரணடைந்த போராளிகளுக்கும் நடந்தது, நடக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இரு சாராரையும் விட ஊடகங்கள் மக்களை இனம் சார்ந்து கூர் உணர்ச்சிப்படுத்துவது மிக ஆபத்தானது. அதையே அமைச்சர் அருமையாக சொல்லியுள்ளார். அந்தக் கருத்து முக்கியமானது என்பதே எனது நிலைப்பாடு. மற்றபடி அவர்கள் இவர்களையும் இவர்கள் அவர்களையும் போட்டுத்தள்ளியது ஒன்றும் ஆச்சரியமான விடயம் கிடையாது. மேலும் இந்தியாவில் சுப்பிரமணியசாமி தங்கபாலு போன்றவர்கள் அரசியல் செய்வதற்கு விடுதலைப்புலிள் நாமம் எப்போதும் அவசியமானது. அதேபோல் புலத்தேசியவாதிகளுக்கு கருணா டக்ளஸ் அவசியமாக இருக்கின்றனர். தேசியத்தின் வங்குரோத்துநிலை அப்படி உள்ளது. கருணா பார்ட்டிக்குபோய் டான்ஸ் ஆடினால் படினால் கருணாவுக்கு சுதி வருகுதோ இல்லையோ தேசீயத்துக்கு சுதி வருகின்றது. அதைவைத்து ஒருமாதகாலம் தேசீயம் உயிர்ப்புடன் இருக்க முனைகின்றது.

புலிகள் அதிகாரம் இருந்த வரை, சிங்களவிசுவாசவாதம், தமிழர்களுக்காக சொல்லிக் கொண்டிருந்த கதை; புலிகளின் பிற்போக்குத்தனமான குறிக்கோள்களே சிங்களக் கனவான்களின் தயாள குணத்தை இறுகியதாக்குகின்றது, அப்படி புலிகள் இல்லாப் பட்சத்தில் அனைதும் சரயாகக் கிடைக்கும் என்பதே. இவர்கள் சொல்லிக் கொண்டிருந்த விசுவாச-வாக்கு!

ஆனால் இன்றைய நிலையில் இப்போதும் அதே விசுவாசம் சிங்களம் மீது சுமப்போர், இந்தப் பழைய பச்சைப் பொய்றை மீள்பதிப்புச் செய்ய முடியாத சூழல். எனவேதான் தமிழ் இனத்தின் மீதான பாதகத்தை ஏவிவிடும் மொத்த விற்பனையாளர். என்ற உண்மை நிலையை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழல் வந்த பிறகு. தங்கள் அடிவருடித்தனத்தை இன்னொரு வகையாக வெளிப்படுத்துகின்றார்கள்!

அது, எம்மினம் மீது சிங்களத்தால் ஏவப்படும் பாதகங்களுக்கு எவர் அவர்களின் கூலி ஆக இருக்கின்றார்களோ, அவர்களை எமது அபயமளிப்பவர்களாக காட்ட முற்படுகின்றமை!

ஐயா! எதிரியை அவன் எதிரியே என்று ஒப்புக் கொண்ட கணக்கின் படி, அவன் கூலியும் எதிரியே என்பதுதானே சமன்பாட்டின் படியான முடிவு! இதுவரை எதிரிகாலில் தமிழரை விழச்செய்ய வாசித்த மகுடி தோற்று விட்டது, ஆதலால் எதிரியின் கூலியின் காலில் விழச்செய்ய மகுடி வாசிக்கின்றீகளா?

சிங்களம், டக்ள்ஸிற்கு கொடுத்த அமைச்சுப் பதவி மக்கள் அவன் மீது கொண்ட வெறுப்பிற்கு சிங்களம் சூடிய மகுடம்!

உங்களுக்கு, டக்ளஸை பிடிக்கலாம், இல்லை கருணாவைப் பிடிக்கலாம். ஆனால் இதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் தனிப்பட்ட எதுவுமே இல்லை. ஆக அவர்கள் வெளிப்படுத்தும் சிங்கள விசுவாசம், அது ஒன்றுதான் உங்களிடம் இருக்கும் காதலுக்கான ஆதாரம்!

தன்னை வைத்தியன் என்று தனக்குத்தானே பட்டம் கொடுத்த பொய்; சாதாரண நிலையில் இருந்த ஒருவன் நோயை சாவுவரை கொண்டு சென்று விட்டது. பொய் இந்த நிலையில் ஆவது சரணடைந்து விட்டால் பறவாய்யில்லை, இப்போது பிணத்திற்கு உயிர் இருப்பதாக சாதித்துக் கொண்டிருக்கின்றது அந்தப் பொய்!

ஆக விவாதம் செய்பவர் அறிவின் தரமும், அவர்தம் பொதுநல ஈடுபாட்டின் அளவும் பிறர் அறிய சான்றிதழ்கள் முன்வைப்பதில்லை. இப்படி பிணத்தை உயிருடையதாக சாதிக்கும் அவர்கள் தேவைகளே எமக்கு அந்த சான்றிதழைத் தருகின்றன!

யார் எமது இருப்பையும் வாழ்வையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள் என்று நீண்டகாலமாக கூறிவந்தோமோ அவர்களது பாதுகாப்பின் கீழேயே இன்று எமது மக்கள் வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கூடவே எமக்கான வாழ்வாதார உதவிகள், அடிப்படை தேவைகளுக்காக அவர்களையே சார்ந்து வாழவேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்குள் நம் தேச விடுதலை போராட்டம் எம் மக்களை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

சட்டங்களால் பத்திரிகைச் சுதந்திரத்தை பறித்து ஆசிரியர்களை தனிப்பட்ட முறைகளில் கொலை செய்வதில் முன்னனியில் நிற்கும் நாடாக உலக அமைப்புக்களால் நிரைப் படுத்த பட்டிருப்பதுதான் இலங்கை. யாழ்ப்பாணத்து பத்திரிகை ஆசியர்களை கொலை செய்து அடக்கிய வீரத்தளம்புகள் தான் அமைச்சர் தன் கைகளில் சுமந்து திரியும் இரத்தக்கறை. சிலமாதங்களுக்கு முன் கூட அமைச்சரின் அடியார்களின் கொலை முயற்சியில் தப்பி வெறும் பயிற்றங்காயகத்திரிபவர் தான் உதயன் குகநாதன். அதாவது அமைச்சர் பத்திரிகைகள் தவறு இழைத்தால் நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என இந்த மாதிரி அறிக்கைக் கூச்சல் போடும் கூட்டத்தவர் அல்ல. அடித்துத் திருத்தும் கை அமைச்சரின் கை.

இப்படியெல்லம் நிச்சய பாதைகள் தெரிந்த அமைச்சர் பின் எதற்காக இந்த நெடுந்தூர பாதயாத்திரையாக அறிக்கை விடும் போராடத்தில் இறங்குகிறார் என்பது கேள்வியே. இந்த அறிக்கை அமைச்சரால் எந்த சந்தர்ப்பத்தில் அல்லது ஏன் வெளியிடப்பட்டது என்பது தெளிவில்லை. ஆனால் அது பெரிதல்ல. இது அமைச்சரின் அறிக்கை இல்லை எனபதுதான் தெளிவு. அதுதான் பெரியது.

இதில் சொல்லப்படும் கருத்துக்கள் களத்தில் சிலரால் இணைக்கப்பட்டு நாம் பலதடவைகள் படித்த வழுதி, யத்தேந்திரா என்பவர்களின் கருதுக்களே. தமிழ் நடையும் அதுவேதான். அப்போ என்ன தான் இது?

சுயாமாக சில முன்னெடுப்பகளை எடுத்துவந்த அமைச்சரும் இப்போ கருணா, பிள்ளையான் போன்ற பலிக்கடா பட்டிக்குள் மெல்ல மெல்ல அடைக்கப்படுகிறார் என்பதே அமைச்சரின் பெயரைப்பாவித்து இந்த கட்டுரை வெளிவிடபட்டிருப்பதின் செயல்ப் பாடாகும். அமைச்சரின் நீண்ட நாள் கனவான வடபகுதி முதலமைசர் பதவி வெறும் இலவம் பழமே என்பது சிறி ரங்கன் அதை கழித்து விடுகிறார் என்ற செய்தி வெளிவந்த போதுதான் தெளிவாக உணரப்பட்டது. அதுபோல் இந்த அறிக்கையும் அரசால் அமைச்சருக்கு மீண்டுமொருமுறை போடப்படும் அடி என்பதுதான் உண்மை.

அடித்துத் திருத்துவது அமைச்சரின் பண்பு. ஆனால் அடித்து அடித்து ஆடவைத்து பார்ப்பது அரசின் பொழுதுபோக்கு.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.