Jump to content

டொராண்டோவில் இன்று


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒண்டாறியோ பிரிமியர் டால்ரன் மைக்கன்ரி திடீர் பதவி விலகல்.ஆசரியர்களின் தொடர் போராட்டம் காரணமா....?

1996 ஆம் ஆண்டு முதல் லிபரல் கட்சியின் தலைவராகவும், 2003 முதல் ஒண்டோரியோவின் பிரிமியராகவும் இருந்து வந்த Dalton McGuinty திடீரென தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். இது கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் ஒரு பேரதிர்ச்சியாக இருந்தது.

இதுவே ஒண்டோரியோவின் அடுத்த பிரிமியரை தேர்ந்தெடுக்கக்கூடிய சரியான நேரம் என்பதால், தான் இந்த பதவியை ராஜினாமா செய்ததாகவும், துடிப்புமிக்க இளைஞர் ஒருவரை அடுத்த பிரிமியராக தேர்ந்தெடுக்க தான் வழிவிடுவதாகவும் செய்தியாளர்களிடம் கட்சி உறுப்பினர்களிடம் அவர் திங்கட்கிழமை மாலை நடந்த ஒரு விருந்து கூட்டத்தில் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

ஆசிரியர்களின் தொடர் வேலை நிறுத்தம், மைனாரட்டி அரசின் சிக்கல்கள் முதலியவற்றை சமாளிக்க முடியாமல் தான் Dalton McGuinty பதவி விலகியதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் இதை Dalton McGuinty மறுத்துள்ளார். குடும்பத்துடன் அதிக நாட்கள் செலவிடுவதற்காகவும், இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காகவும்தான் தான் பதவி விலகியதாக அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

http://www.thedipaar.com/news/news.php?id=53435

  • Replies 427
  • Created
  • Last Reply
Posted

[size=4]இந்த மாநில தலைவர் ஒரு பெரிய அரசியல் கில்லாடி. இவர் பாராளுமன்றத்தை நிற்பாட்டியும் வைத்துள்ளார். சிலவேளை மத்திய அரசின் அரசியலில் குதிக்கலாம்.[/size]

Posted

[size=4]இந்த மாநில தலைவர் ஒரு பெரிய அரசியல் கில்லாடி. இவர் பாராளுமன்றத்தை நிற்பாட்டியும் வைத்துள்ளார். சிலவேளை மத்திய அரசின் அரசியலில் குதிக்கலாம்.[/size]

பொதுத்தேர்தல் வரை சட்ட மன்ற உறுப்பினராகத் தொடரப்போவதாக கூறியது இதற்காக இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சிறந்த பத்து விமான நிறுவனங்கள்.கனடாவில் ஏர்கனடா முதலிடம் பிடித்தது.Smarter Travel website என்ற இணையதளம் உலகில் உள்ள விமான சேவை நிறுவனங்களில் பொழுதுபோக்குடன் கூடிய பயணத்தை தரும் நிறுவனம் எது என்கிற ஆய்வு ஒன்றை சமீபத்தில் எடுத்தது. அதன் அறிக்கை இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் முதலிடத்தை கனடாவின் ஏர் கனடா நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. Virgin America and Lufthansa ஆகிய நிறுவங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பெற்றுள்ளன.

கனடாவின் ஏர் கனடா நிறுவனம் டச் ஸ்கிரீன் வசதியுள்ள டிவி ஒன்றை சீட்டின் பின்புறம் பொறுத்தப்பட்டிருப்பதால், பயணிகள் தங்கள் விருப்பமுள்ள திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிஜின் அமெரிக்கா தனது சேவையில் புதுமையை புகுத்தியுள்ளதாகவும், தனது இசை நூலகத்தில் கிட்டத்தட்ட 3000 வகையான இசைப்பாடல்களும், அமைத்துள்ளதோடு, சீட்டின் மானிட்டரில் இருந்தே தங்களது உணவு மற்றும் பானங்களை வரவழைத்துக்கொள்ளலாம் என்றும், எனவே இதுபோன்ற வசதிகள் பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lufthansa நிறுவனம் இளைஞர்களையும் சிறுவர்களையும் கவரும் வகையில் ஏராளமான இசைகள் அடங்கிய சிடி, ஆடியோ புத்தகங்கள் மற்றும் சிறந்த எப்.எம் ரேடியோக்களை வைத்துள்ளதாக அறிக்கை கூறுகின்றது.http://www.thedipaar.com/news/news.php?id=53575

  • கருத்துக்கள உறவுகள்
Posted

-----

Lufthansa நிறுவனம் இளைஞர்களையும் சிறுவர்களையும் கவரும் வகையில் ஏராளமான இசைகள் அடங்கிய சிடி, ஆடியோ புத்தகங்கள் மற்றும் சிறந்த எப்.எம் ரேடியோக்களை வைத்துள்ளதாக அறிக்கை கூறுகின்றது.http://www.thedipaar.com/news/news.php?id=53575

ஆகா... லுப்(f)ற்தான்சா,

எப்பவும்... இளைய தலைமுறையை கவரும். :)

p_989.jpg

Posted

32.jpgSAUDI-AIRLINES.jpg

உணவுக்கும் உபசரிப்பிற்கும் இவர்களை யாரும் மிஞ்சமுடியாது.பெரிய இருக்கைகள் (BIG SEATS) இருக்கைகளுக்கான அதிக இடைவெளி (LOT OF SPACE)திறந்த வுபே (BUFFET) மற்றும் பலபயணம் செய்துவிட்டு கருத்தெழுதுங்கள்

இங்கும் உங்களுக்கு விரும்பிய பாடல்கள் படங்கள்,விளையாட்டுக்கள் எப்போதே உண்டு.அதைவிட காசாபிளாங்காவின் அன்பும் கிடைக்கும்.தொட்டால் சுட்டு விரல் துண்டுதான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சோறுகறிக்கு சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் மணி எண்டு ஒரு கிளிக்காய்(கிராமம்) ஏறி இறங்கீட்டு வந்தவை சொல்லீனம்....சேவீஸ்சும் அந்தமாதிரியாம்......

Posted

சோறுகறிக்கு சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் மணி எண்டு ஒரு கிளிக்காய்(கிராமம்) ஏறி இறங்கீட்டு வந்தவை சொல்லீனம்....சேவீஸ்சும் அந்தமாதிரியாம்......

சும்மா புழுகி புழுகித்தான் இப்போ இங்கே எல்லாரையும் திருப்பி அனுப்புகிறார்கள்

Posted

[size=3]

stephen_harper_002.jpg[/size][size=3]

கனடாவில் மூன்று நகரங்களில் விரைவில் இடைத்தேர்தல்: பிரதமர் அறிவிப்பு

Oct 23 2012 09:54:37[/size]

[size=3]

கனடாவின் விக்டோரியா, கேல்கரி மற்றும் ஒண்டோரியா நகரங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளதாக பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார்.

விக்டோரியா நகரத்தின் சட்டமன்ற உறுப்பினரான டெனிஸ் சவோயி உடல்நலக் குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

கேல்கரி மையத்தின் சட்டமன்ற உறுப்பினரான கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த லீ ரிச்சர்ட்சன் பதவியிலிருந்து விலகி விட்டார்.

இதே போன்று முன்னாள் கேபினட் அமைச்சராக இருந்த பெவ் ஓடா என்ற பெண் அதிகச் செலவுகள் செய்தார் என்ற விமர்சனம் எழுந்ததையடுத்து, டர்ஹாம் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகினார்.

எனவே இந்த மூன்று இடங்களுக்கும் எதிர்வரும் நவம்பர் மாதம் 26ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார்.

http://ekuruvi.com/election%20in%203%20town[/size]

Posted

[size=3]

mac_ORIGINAL.gif[/size][size=3]

தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை! - மெக்கிண்டி அறிவிப்பு

Oct 24 2012 01:22:00[/size]

[size=3]

தனது முதல்வர் பதவியை டால்டன் மெக்கிண்டி ராஜினாமா செய்ததும் அவர் லிபரல் கட்சி தலைமைப் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அந்த எதிர்பார்ப்பு முடிவுக்கு வந்துள்ளது.

மெக்கிண்டியின் பத்திரிகை செயலாளர் நீயலா பார்டன் செய்தியாளர்களிடம் பேசும் போது, ‘ மெக்கிண்டி லிபரல் கட்சியின் தலைமப் பதவிக்கு போட்டியிடவில்லை’ என்று தெரிவித்தார்.

அவர் போட்டியிட்டிருந்தால் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சவாலான போட்டியாளராக இருந்திருப்பார்.

வருகிற ஜனவரி 26ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநாட்டில் அவர் ஒண்டோரியோ லிபரல் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது.

‘மெக்கண்டியின் ராஜினாமாவும் சட்டமன்றத்தை தள்ளிவைக்கும் முடிவும் கோழைத்தனமானது. அரசின் சர்ச்சைக்குரிய முடிவான எரிவாயு ஆலைகளை இடமாற்றம் குறித்த விவாதத்தை தடுக்கவே இந்த நடவடிக்கைகளில் அவர் இறங்கினார்’ என்று பி.சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் வில்சன் தெரிவித்துள்ளார்.

‘மெக்கண்டியின் அரசுதான் வரலாற்றிலேயே மிக மோசமான அரசாக இருந்தது. நல்ல வேளை அவர் தேசிய அளவில் தலைமைக்கு போட்டியிடவில்லை’ என்றும் அவர் கூறினார்.

45sfdswf854.gif

இனிப்பான செய்தி! பெட்ரோல் விலை 99 செண்டுக்கு வரப் போகிறது!

Oct 24 2012 01:17:33

கடந்த சில நாட்களாக ரொறண்ரோவில் பெட்ரோல் விலை குறைந்துக் கொண்டே வருகிறது. ஆனால் கனடாவின் பிறப் பகுதிகளில் விலை இவ்வளவு குறையவில்லை.

இந்த ரீதியில் விலை குறைந்துக் கொண்டு வந்தால் விரைவில் லிட்டர் 99 செண்டுக்கு வந்து விடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

திங்கள் இரவு சராசரியாக ஒரு லிட்டர் 1.19 டாலருக்கு விற்பனையானது. அஜாக்ஸில் மிகக் குறைவாக 1.13 டாலருக்கும் விண்ட்சரில் அதிகபட்சமாக 1.30 டாலருக்கும் விற்பனையானது.

‘ரோறன்ரோவில் குறைத்தது போல் மற்ற பகுதிகளில் பெட்ரோல் விலை குறைக்கப்படாமல் இருக்கிறது’ என்கிறார் ஜேசன் டோஸ். இவர் காஸ்பட்டி என்ற இணைய தளத்தை டஸ்டின் கூப்பலுடன் இணைந்து நடத்தி வருகிறார்.

இந்த இணையதளத்தில் சந்தை பெட்ரோல் விலைகளை உடனடியாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். எண்ணெய் நிறுவனங்களின் போக்கை அறிந்து கனடாவிலும் அமெரிக்காவிலும் உள்ள சில இணையதளங்களின் உதவியோடு மிகச் சரியான விலையை அவர்களால் கூற இயலுகிறது.

‘ரோறண்ரொ பகுதியில் பெட்ரோல் போடுவது வாடிக்கையாளர்களுக்கு பணம் மிச்சப்படுத்துவதாக இருக்கும். பெட்ரோல் நிலையங்களுக்கு இடையே போட்டி இருப்பதால் விலை குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் விலை குறைப்பு சற்று மெதுவாக தான் நடக்கும்’ என்கிறார் ஜேசன்.

இன்னும் சில நாட்களில் பெட்ரோல் விலை 99 செண்டுகளுக்கு வர வாய்ப்பிருக்கிறதாக இவர் தெரிவிக்கிறார்.

இப்படி விலை குறையும் பெட்ரோலின் விலை புத்தாண்டில் அதிகரித்து கோடையில் உச்சத்தை தொடுமாம்.

சென்ற வருடம் குளிர்காலத்தில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 1.15 டாலர் வரை குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

20cellphone-600.gif

சப்வே ரயில்களில் கைப்பேசி சேவை!

Oct 24 2012 01:14:40

ரொறான்ரோ போக்குவரத்து ஆணையம் சப்வே ரயில்களில் கைப்பேசி சேவையை வழங்கலாம என்று ஆலோசித்து வருகிறது. முதற்கட்டமாக ரயில்நிலைய நடை மேடைகளில் வழங்க இருக்கிறது.

இதற்கான கால அளவு இன்னும் சொல்லப்படவில்லை என்றாலும் இன்னும் இரண்டு வருடங்களில் அனைத்து சப்வே நிலையங்களிலும் இந்த வசதி வந்துவிடும் என தெரிகிறது.

இதனால் பயணிகள் ரயில்நிலையங்களில் கைபேசியை பயன்படுத்த இயலும். ஆனால் குகை வழிகளில் செல்லும்போது பயன்படுத்த இயலாது. ரயில்நிலையங்கள் அருகே இருக்கும் குகைப் பாதைகளில் சில வேளை கைப்பேசி சமிக்ஞைகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அந்த சமயத்திலும் கைப்பேசி பயன்படுத்த இயலும்.

பொது மக்களுக்கு கைப்பேசி சேவை வழங்குவதன் மூலம் போக்குவரத்து ஆணையத்துக்கு வருமானம் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. அறுபத்தோரு பூமியடி ரயில்நிலையங்களில் கைபேசி சேவை வழங்க இருபது வருடங்களுக்கு 25 மில்லியன் டாலர் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது

http://ekuruvi.com/[/size]

Posted

[size=3]

harper-wedding05.gif[/size][size=3]

திருமண ஜோடியுடன் பிரதமர் திடீர் சந்திப்பு!

Oct 26 2012 09:17:49[/size]

[size=3]

மணமகள் ஜோசிலைனையும் மணமகண் பாட்ரிக்கையும் ராக்ளிஃப் பூங்காவில் வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் புகைப்படக்காரர் லாரா கெல்லி. அவர்களுடம் திருமணக் குழுவினரும் இருந்தார்கள். அப்போது பூங்கா சாலையில் மூன்று பெரிய கார்கள் அந்தப் பக்கமாய் சென்று நின்றன.

திரும்பிப் பார்த்த திருமணக் குழுவினரில் ஒருவர் வேடிக்கையாக, ‘ பிரதமர் வருகிறார் போல திருமண ஜோடியைப் பார்க்க’ என்று சொல்ல, உண்மையில் அதுதான் நிகழந்தது.

காரில் இருந்து இறங்கியது கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர். அந்த வழியாக சென்றுக் கொண்டிருந்தவர் திருமணக் குழுவைப் பார்த்ததும் வாழ்த்துவதற்காக நின்றிருக்கிறார்.

பிரதமரைப் பார்த்ததும் திருமணக் குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி.

பிரதமர் வழக்கமான கோட் சூட் உடையில் இல்லாமல் சாதரணமான உடையான் ஜீன்ஸ் சட்டையுடன் ஒரு நீல நிற ஜெர்க்கின் அணிந்திருந்தார்.

திருமண ஜோடியுடன் பிரதமர் இயல்பாய் பேசினார். ‘நீங்கள் முன்பே செய்துவிட்டீர்களா?’ என்று மணமகனிடம் கேட்டார். அதாவது திருமணம் ஏற்கனவே முடிந்து விட்டதா என்ற அர்த்தத்தில். அதற்கு மணமகன், ‘இல்லை இதுதான் முதல் முறை’ என்று பதிலளித்தார். அதாவது இதுதான் முதல் திருமணம் என்ற அர்த்தத்தில்.

திருமணக் குழுவினர் அனைவருடன் படமெடுத்துக் கொண்ட பிரதமருடன் தானும் படமெடுத்துக் கொள்ள வேண்டும் என புகைப்படக்காரரும் விரும்பினார். அவருடனும் இணைந்து படம் எடுத்துக் கொண்டார்.

பிரதமருடன் வந்திருந்த பாதுகாப்பு அதிகாரிகள் இறுக்கமான முகங்களுடன் கண்காணித்துக் கொண்டே இருந்தனர்.

சில நிமிடங்கள் இந்த திடீர் சந்தோஷ சந்திப்பு நடந்தது.

http://ekuruvi.com/[/size]

Posted

[size=5]ஒரு கோடி கையெழுத்து வேட்டை[/size]

[size=4]இரண்டு இலட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் மீது பன்னாட்டு விசாரணை வேண்டியும், தங்கள் தாயக உரிமையைத் தீர்மானிக்க ஐநாவின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் ஒரு கோடி கையெழுத்து வேட்டை.[/size]

[size=4]தமிழகத்தில் தொடக்கப்பட்ட இப்புனித பயணத்தில் கனடியர்கள் வரும் ஒக்டோபர் 12ல் இணைகிறார்கள்.[/size]

[size=4]தமிழகத்தில் இருந்து தமிழின உணர்வாளர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.[/size]

[size=4]Phone: 416-830-7703

Email: media@ncctcanada.ca[/size]

544881_502464893104706_463363445_n.jpg

http://www.facebook.com/canadianncct/photos_stream

Posted

சாந்தி புயல் fபிராங்கிள்ன் என்ற பெயருடன் கனடாவுக்குள் நுளைகிறது. விபரங்களுக்கு:-

http://www.theweathernetwork.com/

Posted

பலத்த மழையால் ஒன்டாரியோவில் உள்ள நகரத்தில் அவசர நிலை அமலாக்கப்பட்டது

[size=4][size=3]October 27th, 2012 [/size][/size]

[size=4]வடகிழக்கு ஒன்டாரியோவில் உள்ள Wawa நகரத்தில் பலத்த மழை தொடர்ந்து அவசர நிலை அமலாக்கப்பட்டுள்ளது.[/size]

[size=4]3000 குடியிருப்புகளைக்கொண்ட அந்த நகரத்தில் வியாழக்கிழமை இரவில் பெய்த பலத்த மழையால் முக்கிய சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து நகரத்தின் மேயரான Linda Nowicki அவசர நிலை உத்தரவை பிறப்பித்தார். அதைத்தொடர்ந்து யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.[/size]

[size=4]மழை ஓய்ந்துவிட்டாலும் நகரத்தில் நெடுஞ்சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. நெடுஞ்சாலையில் உள்ள மோட்டல் ஒன்றும் மழையால் சேதமடைந்தது.[/size]

[size=4]வெள்ளம் பெரிய அளவில் இல்லையென்றாலும் மழை காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.[/size]

[size=4]வெளியிடத்திலிருந்து உதவி நாடப்படலாம் என்றாலும் தற்போது அதற்கான அவசியம் எழவில்லை என்றும் மேயர் அறிவித்துள்ளார்.[/size]

[size=4]தற்காலிகமாக சாலை இணைப்புகளை சரிசெய்வதற்கு சிறிது சமயம் ஆகும் என்றும் மேயர் தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]Rain2.jpg[/size]

9168.jpg

http://local2.ca/ssm/viewarticle.php?id=8153

Posted

[size=4]கனடாவில் வசிக்கும் சிறிலங்கா தமிழ் இளைஞர்கள் இருவர் அமெரிக்க காவல்துறையினரால் கைது[/size] [size=4][ ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012, 02:04 GMT ] [ கனடா செய்தியாளர் ][/size]

[size=4]us_flag.jpgகனடாவில் வசிக்கும் சிறிலங்காவைச் சேர்ந்த இரண்டு தமிழர்கள் அமெரிக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி பணப்பரிமாற்ற அட்டைகளைப் பயன்படுத்தி பல்வேறு வங்கிகளின் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரங்களில் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டியே நியுயோர்க் காவல்துறையினர் இவர்களை கைது செய்துள்ளனர்.

சிவரூபன் ஞானபண்டிதன் (28), ராகவன் பத்மசீலன் (24) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளவர்களாவர்.

இவர்கள் கனடாவின் ஒன்ராறியோவில் வசித்து வந்தவர்கள்.

வெள்ளிக்கிழமை இரவு தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட இவர்களிடம் இருந்து, 257 போலி பணப்பரிமாற்ற அட்டைகள், 55,689 டொலர் பணம், போன்றவற்றை நியுயோர்க் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.[/size]

http://www.puthinappalakai.com/view.php?20121028107207

Posted

[size=3]

storm-11.gif[/size][size=3]

எச்சரிக்கை கிழக்கு கடல் பகுதியில் கடும் புயல்!

Oct 28 2012 09:40:36[/size]

[size=3]

கடும் புயல் காற்று, பேய் மழை

, இரண்டடி உயர பனிப் பொழிவு என பயமுறுத்திக் கொண்டிருக்கிறது சேண்டி சூறாவளி.

அமெரிக்காவின் வட கிழக்குபகுதியிலுள்ள நியுஜெர்சி நகரின் ஷிப்பாட்டம் பகுதியில் தான் இந்த சூறாவளி கடக்க இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையத் தகவல் கூறுகிறது.

கரிபீயன் தீவுகளில் துவங்கி வேகமாக வந்துக் கொண்டிருக்கும் இந்த சூறாவளி வரு செவ்வாயன்று டெலாவேர் கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனுடைய ஆக்ரோஷம் குறைந்தாலும் கிழக்கு கரையை அது கடப்பதற்குள் நிலப்பகுதியில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. சூறாவளி காற்று மணிக்கு 75கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் அதன் சீற்றத்தை 100 கிலோமீட்டர் தள்ளி வசிப்பவர்களாலும் உணர முடியும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அமெரிக்காவின் கனெக்டிகட் மற்றும் நியுஜெர்சி மாநிலங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. சில நாட்கள் மின்சாரம் இல்லாமல் போக வாய்ப்பிருப்பதால் அந்தப் பகுதி மக்கள் தயாராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர். விமானச் சேவை நேரங்களும் மாற்றியமைக்கப்படலாம் என்று தெரிகிறது.

கடந்த முறை பெரிய பாதிப்புக்குள்ளாக்கிய ஐரீன் புயலைவிட இந்த புயல் பலம் வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. ஐரீன் புயல் 15பில்லியன் டாலர் பாதிப்பை ஏற்படுத்தியது.

தெற்கு நியூஜெர்சியை ஒட்டியிருக்கும் தீவுகளில் குடியிருக்கும் மக்களை ஞாயிறு மதியத்துக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு சொல்லியிருக்கிறார்கள்.

http://ekuruvi.com/Northeast%20forecast%20of%20superstorm[/size]

Posted

[size=4]தமிழர்கள் அதிகம் வாழும் டொராண்ரோவில் வரும் இரு நாட்களில் அதிக மழை 50-100 மில்லி மீட்டர்கள் வரை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. [/size]

[size=4]அவதானமாக இருப்பது, குறிப்பாக வாகனம் ஓட்டும்பொழுது, நல்லது. [/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தீவிரமடைந்து வரும் சான்டி புயல்: கனடா மக்களுக்கு எச்சரிக்கை

சான்டி புயல் தீவிரமடைந்து வருவதால், கனடா மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என செஞ்சிலுவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செஞ்சிலுவை சங்கத்தின் இயக்குனர் மைக் மோர்ட்டோன் கூறுகையில்,

சான்டி புயல் தீவிரமடைந்து வருவதால் அடுத்த மூன்று நாட்களுக்கு தேவையான உணவு, மருந்து, குடிநீர் போன்றவற்றை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

வெள்ளம் ஏற்பட்ட பிறகு இடப்பெயர்ச்சி தேவைப்பட்டாலோ, மின்தடை ஏற்பட்டாலோ அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஒவ்வொருவரும் தம்முடைய அவசர உதவி பெட்டியில் 4 லிட்டர் தண்ணீர், கெட்டு போகாத உணவு, மின் விளக்கு, பணம், மருத்துவ முதலுதவி பெட்டி, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தேவையான மருந்து போன்றவற்றை வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது வீசும் இந்த புயல் கடந்த 1988ஆம் ஆண்டுக்கு பிறகு வீசும் இரண்டாவது பெரிய புயல் என கனடா வானிலை ஆய்வாளர் கிரேக் லார்க்கின்ஸ் தெரிவித்தார்.

www.Tamil4.com

Posted

[size=4]கையில் கொஞ்சம் பணம், வீட்டில் மெழுவர்த்தி; உலர் உணவு; போன்றன, வாகனத்தில் எரிபொருள் என்பன அடுத்த மூன்று நாட்களுக்கு வைத்திருப்பது நல்லம். [/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சேண்டி புயல் காரணமாக கனடாவில் வாழும் மக்கள் அடுத்து வரும் 72 மணி நேர நெருக்கடியை சந்திக்க தயாராகி வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக உணவு மற்றும் மருந்து பொருட்களை வாங்குவதற்காக ஒண்டோரியோ நகரங்களில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருகின்றனர்.

இந்த சேண்டி புயல் காரணமாக 50 செமீ வரை கனமழையும், மணிக்கு 90 கி.மீ வரை பலத்த சூறைக்காற்றும் வீசக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. எனவே தாழ்வான, பாதுகாப்பற்ற பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுக் கொண்டு இருகின்ற்னர்.

Southern Ontario, southern Quebec and southwestern Maritimes ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. இம்மழை நாளை செவ்வாய்க்கிழமையும் நீடிக்கும் என Environment Canada இன்று அதிகாலை 1.44க்கு விடுத்த ஒரு அறிக்கையில் தெரிவிக்கின்றது.

மணிக்கு 90 கி.மீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று southern Ontario, western Lake Ontario, the Niagara escarpment, Lake Huron and Georgian Bay ஆகிய பகுதிகளில் இன்று திங்கட்கிழமை முதல் வீசக்கூடும் எனவும் மணிக்கு 80 கி.மீ வேகத்துடன் கூடிய காற்று Southwestern Nova Scotia பகுதிகளில் வீசக்கூடும் என Environment Canada அறிவித்துள்ளது.

Air Canada, WestJet and Porter Airlines ஆகிய விமான நிறுவங்கள் தங்களது விமானப்போக்குவரத்தை பெரும்பாலும் ரத்து செய்துவிட்டதால், பயணிகள் விமானப் பயணத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்காவிற்கு செல்லும் விமானங்கள், மற்றும் அமெரிக்காவில் இருந்து வரும் விமானங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. Toronto's Pearson International Airport இணையதளத்தில் கிட்டத்தட்ட 100 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.thedipaar.com/news/news.php?id=53997

Posted

கையில் கொஞ்சம் பணம், வீட்டில் மெழுவர்த்தி; உலர் உணவு; போன்றன, வாகனத்தில் எரிபொருள் என்பன அடுத்த மூன்று நாட்களுக்கு வைத்திருப்பது நல்லம்.

அத்துடன் குழந்தைகளுக்கான உணவும் பாலும் முக்கியம். இவற்றுடன் காச்சல் மருந்து (அட்வில். ரலனோல்), முதலுதவிக்குரிய பொருட்கள் என்பனவும் அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் அவசர தேவைக்கு குழந்தைகளுக்கு உரிய உணவுப் பொருட்கள்,பால் மற்றும் நோயாளிகளுக்கு உரிய மருந்துகள் உலர் உணவுப் பொருட்கள் flash light,வாகனம் வைத்திருப்போர் வாகனதிற்குள் ஒரு அவசர திறப்பு,சில்லறையாக தேவைக்கு பணம் 5.10.20 டொலர்கள்.மற்றும் அத்தியாவசியப் பொருட்களை தேவைக்கு ஏற்ப வைத்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.கூடியவரைக்கு மெழுகு திரி பாவிப்பதை தவிர்க்குமாறு தற்போது தொலைக் காட்சியில் சொல்லிக் கொண்டு இருந்ததை காணக் கூடிதாக இருந்தது... தேவை அற்ற தீ விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ளும் வண்ணம் மெழுகுதிரிக்கு பதிலாக flash light பாவிக்க சொல்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.