Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்களைக் கடத்தும் தமிழீழ அரசு (நா.க.த.அ)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்களைக் கடத்தும் தமிழீழ அரசு (நா.க.த.அ)

சாத்திரி (ஒரு பேப்பர்)

புலிகள் அமைப்பானது ஆயுதங்களை மௌனிப்பதாக விடுத்த அறிக்கையினை அடுத்து அந்த அமைப்பும் செயலிழந்து போனதன் பின்னர். உலகத் தமிழர்கள் அனைவருமே மிகுந்த எதிர் பார்ப்போடும் . நம்பிக்கைகளோடும் எதிர்பார்த்திருந்த நாடு கடந்த தமிழீழ அரசு தோற்றம் பெற்று இரண்டு ஆண்டுகள் கழிந்ததோடு மட்டுமல்லாது .அதன் மூன்று பாராளுமன்ற அமர்வுகளும் நடைபெற்று முடிந்துவிட்டன. இலங்கைத் தீவில் ஆயுதப் போர் முடிவிற்கு வந்ததுமே தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவும், சாத்வீக வழியிலான போராட்டங்களை நடாத்தி தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஒரு அமைப்பு அவசியமானது அது நாடுகடந்த தமிழீழ அரசே என வலியுறுத்தி அந்த அமைப்பு உருவாகுவதற்கு மட்டுமல்லாது. அதன் நோக்கங்கள் அதன் தேவைகள் என்ன என்பதோடு அதன் அவசியத்தையும் புலம்பெயர்ந்து வாழும் தழிழர்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதற்கு ஒரு பேப்பர் குழுவினரோடு இணைந்தும், தனியாகவும். பரப்புரைகளையும் பல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருந்தேன். அதன் ஆரம்ப காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் அனைத்துலகத் தொடர்பகம் நாடுகடந்த அரசை பகிரங்கமாக எதிர்த்தவேளைகளில். நாடுகடந்த அரசிற்கு ஆதரவாக அதன் பிரச்சாரப் பத்திரிகை போன்று ஒரு பேப்பர் செயற்பட்டது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டும். ஆனால் நாடுகடந்த அரசின் தேர்தல்கள் நடைபெற்று அதன் முதலாவது பாராளுமன்ற அமர்வும் நடந்து முடிந்த பின்னர். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் செயற்பாடுகளில் உள்ள குறைகளையும். இன்று ஈழத்தமிழினம் உள்ள நிலையில் இந்த உறுப்பினர்களின் செயற்பாட்டு வேகம் போதவில்லையென்பதையும். ஒரு பேப்பர் சுட்டிக்காட்டத் தவறியதில்லை.

அதே நேரம் நாடுகடந்த அரசால் தாயகத்தில் உள்ளவர்களிற்கு பெரிதாக ஒன்றும் செய்யமுடியாது என்பதனை அனைவராலும் ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால் சர்வதேச நாடுகளில் அதனால் எத்தனையோ பணிகளை செய்யமுடியும். இலங்கையரசின் போர்குற்றங்களை வெளிக்கொண்டு வரலாம். இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலங்களை வைத்து இலங்கையரசின் மீது வழக்குகள் தொடுக்கலாம். வழக்கு என்றதும் தான் ஞாபகத்திற்கு வருகின்றது. இலங்கையரசு மீது வழக்கு தொடர்வது பற்றி உருத்திரகுமார் மற்றும் மதியுரைஞர் குழுவினைச் சேரந்த சிறிஸ்கந்தராசா (சிறீயண்ணா, சுவீடன்) ஆகியோரோடு உரையாடிக்கொண்டிருந்தபொழுது நான் சொன்ன விடயம். அதிகாரத்திலிருக்கும் ராஜபக்சமீது வழக்கு தொடர முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ராஜபக்சவிற்கு கொஞ்சமும் குறையாத இனப்டுகொலையை செய்த சந்திரிக்கா மீதாவது ஒரு வழக்கை பதிவு செய்யுங்கள். அதற்கான ஆதாரங்கள் உள்ளன குறைந்தபட்சம் பதவியில் இல்லாத ஒருவரையாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்னறத்தில் நிறுத்துவன் மூலம் தற்சமயம் பதவியில் இருப்பவர்களாவது தங்கள் பார்வையை மாற்ற சந்தர்ப்பம் உண்டுடென்று கூறியிருந்தேன். பார்க்கலாம் என்கிற பதில்தான் கிடைத்தது. இன்றுவரை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அடுத்தடுத்து அறிக்கைகள் மட்டுமே வெளியாகின. கொசாவோவிலும். தென் சூடானிலும் தூதரகம் திறப்பதாக கூட செய்திகள் வெளியாகின. தூதரகம் திறக்கத் தேவையில்லை ஒரு அறையை வாடைகைக்கு எடுத்து அலுவலகமாக்கியிருக்கலாம். ஏன் ஒரு கொட்டிலையாவது போட்டு கொடியை ஏத்தியிருந்தாலும். அதன் படத்தை அண்ணாந்து பார்த்தாவது ஆசுவாசப்பட்டிருப்போமே. அதை விடுவோம், நா.க.த. அரசின் மூன்றாவவது பாராழுமன்ற அமர்வின் கூட்டத் தொடர் அண்மையில் நடைபெற்றது. அதன் முதலாவது நாள் அமர்வில் இலங்கையரசை கிடுகிடுக்க, கலங்கடிக்க அதிரடியான தீர்மானங்களாவது ஏதாவது நிறைவேறும் என அதன் நேரலை ஒளிபரப்பை ஆவலுடன் இணையத்தில் பார்த்துக்கொண்டிருந்த பல உசார் மடையர்களில் நானுமொருவன். ஆனால் கூட்டத்தின் இறுதியில் எல்லாருக்கும் பசிக்கிறது எட்டுமணிக்குத்தான் சாப்பாடு வரும் என்கிற தீர்மானத்துடன் முதலாம்நாள் அமர்வுகள் முடிவடைந்திருந்தது. நானும் கொட்டாவி விட்டபடி போய்சாப்பிட்டு விட்டு படுத்துவிட்டேன்.

கடந்த மாவீரர் தினத்தில் கூட நா.க. த. அரசு ஒரு தவறான முடிவெடுத்திருந்தது; அதாவது இறுதி யுத்தத்தில் வன்னியில் தலைவருடன் இருந்து தப்பி வந்தவர்கள் என்பவர்களுடன் கூட்டுச் சேர்ந்து ஜரோப்பா எங்கும் மாவீரர்தின நிகழ்வுகளை இரண்டாக்கியிருந்தனர். இரண்டு வருடத்தில் இவர்களின் சாதனை என்று இதனைத்தான் சொல்லலாம். புதியதாய் வந்தவர்கள் பற்றியும் அதனை பின்நின்று இயக்கும் வினாயகம், சுபன் போன்றவர்கள் பற்றியும் போதுமான விபரங்கள் நா.க.த. அரசின் பிரதமரிற்கு எம்மால் வழங்கப்பட்டிருந்தது என்பதனையும் குறிப்பிட வேண்டும்.

கடைசியாய் வந்த செய்தி இலங்கைக்கு குண்டு போட்ட உருத்திரகுமார். உள்ளே போய் செய்தியை படித்தால். ஆபிரிக்க நாடுகளில் எமது உறவை வளர்த்துள்ளோம்.தென்னாபிரிக்காவில் உள்ள பல நாடுகளுடன் தமது தூதரகங்களை திறந்து தமது நட்புறவை பேணும் நிலையில் இவை முனைந்துள்ளனவாம்.தென்னாபிரிக்காவின் ஆழும் தேசிய காங்கிரசின் 100 வது ஆண்டு கொண்டாட்டத்திற்கே நாடுகடந்த அரசு அழைக்கப்படவில்லை என்பது சோகமான விடையம். ஆனால் அதே கொண்டாட்டத்திற்கு உலகத்தமிழர் பேரவைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அழைப்பிதழ் போனது மட்டுமல்லாமல் அவர்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசு பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது தனிப்படட்ட காரணங்களிற்காக தென்னாபிரிக்கா போகவில்லையாம். உள்நாட்டு பாதுகாப்பென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளிநாட்டு பாதுகாப்பென்றால் உலகத்தமிழர் பேரவை இமானுவேல் அடிகளார். இரண்டு அமைப்பில் உள்ளவர்களிற்கும் பாதுகாப்பு பிரச்சனை உள்ளதுதான். அண்மையில் கூட இந்தியாவிற்கு முறையாக விசா பெற்று சென்றிருந்த இமானுவேல் அடிகளார் இந்தியாவிற்குள் நுளைய முடியாமல் திருப்பியனுப்பப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருந்தார். இப்படி பல அச்சுறுத்தல்களிற்கு மத்தியில்தான் இந்த அமைப்புக்கள் தங்களாலான பணிகளை முன்னெடுக்கின்றனர். ஆனால் உருத்திர குமார் அவர்கள் பாதுகாப்பை காரணம் காட்டி அமெரிக்காவிற்குள் மட்டுமே மாறி மாறி பயணம் மேற்கொள்வதால் உலகம் முழுவதும் நாடுகடந்த தமிழீழ அரசினை பலப்படுத்தி அதனை சரியான பாதையில் இட்டுச்செல்ல முடியாது.

அது மட்டுமல்லாது நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்கள் என்பவர்கள் ஒவ்வாரு தேர்தலின் போதும் மக்காளால் மாற்றப்படுவார்கள் மாற்றப்படவேண்டும். அதன் பிரதமர் கூட மாற்றப்படுவார். ஆனால் நாடுகடந்த தமிழீழ அரசு என்பது நிலையாக இருக்கும்.இருக்கவேண்டும். எனவே நாடுகடந்த தமிழீழ அரசு உறுப்பினர்கள் மீதான எமது விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் உடனடியாகவே அது நா. க. த. அரசின் மீதான எதிர்ப்பு அல்லது அதன்மீதான காழ்ப்பை நாம் காட்டுகின்றோம் என நினைப்பது தவறு. வுpமர்சனங்களை ஏற்றுக்கொண்டு நா.க.த.அசின் பிரதிநிதிகள். தங்களை திருத்திக்கொண்டு சரியான பாதையில் அந்த அமைப்பினை வழிநடாத்தவேண்டும். இல்லையேல் காலப்போக்கில் இதுவும் தனிநபர் துதிபாடும் அமைப்பாக மாறுவதோடு இறுதியில் தலைவனும் நானே தொண்டனும் நானே என்கிற இந்தியவின் சுப்பிரமணிய சுவாமியின் கட்சி மற்றும் இலங்கையில் ஆனந்தசங்கரியின் கட்சி போன்றதொரு நிலைக்கே நாடுகடந்த தமிழீழ அரசும் தள்ளப்படும்.

இறுதியாக நாடுகடந்த தமிழீழ அரசின் ஆரோக்கியமான செயற்பாடுகளை தட்டிக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல். அதன் தவறான பக்கங்களை தட்டிக்கேட்பதற்கும் ஒரு பேப்பர் குழுமம் தயங்காது என்பததை தெரிவித்துக்கொளகிறேன்;.

< அது மட்டுமல்லாது நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்கள் என்பவர்கள் ஒவ்வாரு தேர்தலின் போதும் மக்காளால் மாற்றப்படுவார்கள் மாற்றப்படவேண்டும். அதன் பிரதமர் கூட மாற்றப்படுவார். ஆனால் நாடுகடந்த தமிழீழ அரசு என்பது நிலையாக இருக்கும்.இருக்கவேண்டும். எனவே நாடுகடந்த தமிழீழ அரசு உறுப்பினர்கள் மீதான எமது விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் உடனடியாகவே அது நா. க. த. அரசின் மீதான எதிர்ப்பு அல்லது அதன்மீதான காழ்ப்பை நாம் காட்டுகின்றோம் என நினைப்பது தவறு. வுpமர்சனங்களை ஏற்றுக்கொண்டு நா.க.த.அசின் பிரதிநிதிகள். தங்களை திருத்திக்கொண்டு சரியான பாதையில் அந்த அமைப்பினை வழிநடாத்தவேண்டும். இல்லையேல் காலப்போக்கில் இதுவும் தனிநபர் துதிபாடும் அமைப்பாக மாறுவதோடு இறுதியில் தலைவனும் நானே தொண்டனும் நானே என்கிற இந்தியவின் சுப்பிரமணிய சுவாமியின் கட்சி மற்றும் இலங்கையில் ஆனந்தசங்கரியின் கட்சி போன்றதொரு நிலைக்கே நாடுகடந்த தமிழீழ அரசும் தள்ளப்படும். >

உம்.............. நல்ல கேள்வி , யோசிப்பார்களா ? இதைத் தான் என்னுடைய பாட்டனார் காலத்தில இருந்து பாக்கின்றேன் . வடிவங்கள் மாறுகின்றதே ஒழிய உள்ளுடன் என்னவோ ஒன்று தான் . இதனால் இந்த ஜனநாயகம் , கத்தரிக்காய் , புடலங்காய் என்றால் ஒருவித ஒவ்வாமை . மேலும் , தென் சூடனில் நாடுகடந்த அரசினால் தூதரகம் துறக்கப்பட்டது என்ற பத்திரிகைச் செய்தி அண்மையில் பார்த்தேன் , அதுபற்றி சாத்திரியாரும் ஒரு பேப்பர் குழுமமும் என்ன நினைக்கின்றீர்கள் :unsure: :unsure: :icon_idea::icon_idea:1 ?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பணியைச்செய்திருக்கிறது ஒரே பேப்பர்.

அதிலும் இன்னொன்றையும் சேர்த்திருந்தால் அது பூரணமாகியிருக்கும்

அவர்களை அவர்களது வேலையைச் செய்ய விட்டோமா? :( :( :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

< அது மட்டுமல்லாது நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்கள் என்பவர்கள் ஒவ்வாரு தேர்தலின் போதும் மக்காளால் மாற்றப்படுவார்கள் மாற்றப்படவேண்டும். அதன் பிரதமர் கூட மாற்றப்படுவார். ஆனால் நாடுகடந்த தமிழீழ அரசு என்பது நிலையாக இருக்கும்.இருக்கவேண்டும். எனவே நாடுகடந்த தமிழீழ அரசு உறுப்பினர்கள் மீதான எமது விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் உடனடியாகவே அது நா. க. த. அரசின் மீதான எதிர்ப்பு அல்லது அதன்மீதான காழ்ப்பை நாம் காட்டுகின்றோம் என நினைப்பது தவறு. வுpமர்சனங்களை ஏற்றுக்கொண்டு நா.க.த.அசின் பிரதிநிதிகள். தங்களை திருத்திக்கொண்டு சரியான பாதையில் அந்த அமைப்பினை வழிநடாத்தவேண்டும். இல்லையேல் காலப்போக்கில் இதுவும் தனிநபர் துதிபாடும் அமைப்பாக மாறுவதோடு இறுதியில் தலைவனும் நானே தொண்டனும் நானே என்கிற இந்தியவின் சுப்பிரமணிய சுவாமியின் கட்சி மற்றும் இலங்கையில் ஆனந்தசங்கரியின் கட்சி போன்றதொரு நிலைக்கே நாடுகடந்த தமிழீழ அரசும் தள்ளப்படும். >

உம்.............. நல்ல கேள்வி , யோசிப்பார்களா ? இதைத் தான் என்னுடைய பாட்டனார் காலத்தில இருந்து பாக்கின்றேன் . வடிவங்கள் மாறுகின்றதே ஒழிய உள்ளுடன் என்னவோ ஒன்று தான் . இதனால் இந்த ஜனநாயகம் , கத்தரிக்காய் , புடலங்காய் என்றால் ஒருவித ஒவ்வாமை . மேலும் , தென் சூடனில் நாடுகடந்த அரசினால் தூதரகம் துறக்கப்பட்டது என்ற பத்திரிகைச் செய்தி அண்மையில் பார்த்தேன் , அதுபற்றி சாத்திரியாரும் ஒரு பேப்பர் குழுமமும் என்ன நினைக்கின்றீர்கள் :unsure: :unsure: :icon_idea::icon_idea:1 ?

உண்மையில் அது தூதரகம் அல்ல அங்கு ஒரு பல்கலைக்கழகம் அமைத்து தருவதாகவே நாடுகடந்த அரசு புதிதாய் உருவான தென்சூடானிற்கு தெரிவித்திருந்தது. அதனை தாங்கள் தூதரகம் திறக்கப் போவதாக நாடுகடந்த அரசின் பிரதிநிதி ஒருவர் அவசர அறிக்கை விட்டதுமே தென் சூடான் எங்களிற்கு பல்கலைக்கழகம் வேண்டாம்.பிச்சை வேண்டாம் நாயை பிடி.என்று சொல்லி விட்டார்கள்.

கடைத்தெருவில் இரு வயோதிபர்கள் ...

ஒருவர் ... எந்த நாட்டிலும் பிரதமர்தான் அடுத்த ஜனாதிபதியாக வருவது வழமை! அவ்வாறே அமெரிக்காவிலும் ஜனாதிபதி ஒபாமாவின் காலம் முடிய, அங்கு(அமெரிகாவில்) இருக்கும் ஒரே பிரதமரான(அங்கு பிரதமர் எனும் பெயரில் வேறொருவரும் இல்லை) உருத்திராதான், அடுத்த ஜனாதிபதி ஆவார்! அது மட்டும் அவர் ஒன்றும் செய்யாமல் பொறுமையாக இருக்கிறார்! ஜனாதிபதியானவுடன் எம் பிரட்சனைக்கு முடிபு கட்டுவார்!!! அது மட்டும் நாம் எல்லோரும் பொறுமையாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!!

மற்றவர் ... :icon_mrgreen:

Edited by Nellaiyan

நினைத்தேன் வந்தாய் நூறு வயது......... அவ்வ்..:p

நாடென்ன செய்தது நமக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்கு

நீ என்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு

நான் ஏன் பிறந்தேன் (தாய்) நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் என்று நினைத்திடு என் தோழா!!

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடென்ன செய்தது நமக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்கு

நீ என்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு

நான் ஏன் பிறந்தேன் (தாய்) நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் என்று நினைத்திடு என் தோழா!!

நாடு நமக்கு என்ன செய்தது என்று யாரும் கேட்கவில்லை நாடுகடந்த அரசு ஏதாவது செய்யுமா என ஏங்குகிறார்கள்

நாடு நமக்கு என்ன செய்தது என்று யாரும் கேட்கவில்லை நாடுகடந்த அரசு ஏதாவது செய்யுமா என ஏங்குகிறார்கள்

நியாயமான ஏக்கம் :):):) 1 .

Edited by கோமகன்

சாஸ்திரியார் சொல்வது உண்மைதான். நாடு கடந்த அரசின் தேர்தல் காலத்தில் அதற்காக சுவிஸ்சில் உழைத்தவன் நான். ஆனால் இப்பதான் தெரியுது இது விழலுக்கு இறைத்த நீர் என்று. அந்த இமானுவேல் அடிகளார்,உலகத்தமிழர் பேரவை செய்யும் வேலை திட்டத்தில் ஒரு விதம் கூட இந்த நாடு கடந்த அரசு செய்யவில்லை என்பது ஊர் அறிந்த உண்மை. ஆனால் தமிழர்கள் மத்தியில் பல குழப்பங்களை மட்டுமே இது செய்துவருகிறது. அடுத்தவன் செய்யும் வேலைக்கு இவர்கள் உரிமை கோருவது மட்டுமே இப்ப நடக்கிறது.

இப்ப கூட சுவிஸ்ல் பங்குனி 5 திகதி ஐநா முன்றலில் இலங்கை அரசிற்கெதிரான பேரணி நிகழ்வு ஒழுங்கு படுத்தி இருக்க (பெல்யியத்தில் இருந்து நடையாக ஒருவர் வருகிறார்) , இதை குழப்பும் விதமாக இவர்கள் மாசி மாதம் ஒரு ஒன்று கூடலை செய்கிறார்கள். இதெல்லாம் எங்கே போய் முடியுமோ தெரியாது. அமெரிக்காவில் இந்த ஒன்று கூடலை செய்யலாம் தானே? எங்கெல்லாம் குழப்ப முடியுமோ அங்கெல்லாம் குழப்பத்தை செய்கிறார்கள். ஆடும் வரை ஆட்டம் நடக்கட்டும் ஏதாவது நன்மை நடந்தா சரி .....

இப்ப கூட சுவிஸ்ல் பங்குனி 5 திகதி ஐநா முன்றலில் இலங்கை அரசிற்கெதிரான பேரணி நிகழ்வு ஒழுங்கு படுத்தி இருக்க (பெல்யியத்தில் இருந்து நடையாக ஒருவர் வருகிறார்) , இதை குழப்பும் விதமாக இவர்கள் மாசி மாதம் ஒரு ஒன்று கூடலை செய்கிறார்கள்.

எங்கெல்லாம் குழப்ப முடியுமோ அங்கெல்லாம் குழப்பத்தை செய்கிறார்கள்.

... இது மட்டுமல்ல ... இம்முறை மாவீரர்நாள் என்று புலமெங்கும் நடைபெற்ற குழப்பங்களின் .... தலைமைச்செயலகம் எனும் பெயரில் திடீரென தோன்றியோர் ஆடிய கூத்தின் ... சூத்திரதாரிகள் இந்த நா.க.த.அரசாங்கத்தினரே!

நானும் ஒரு சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

ந.க.த.அ. தேர்தல் நடைபெற்ற வேளையில் அதில் வேட்பாளர்கள் என்று பார்த்தால் இளையவர்கள் மிக மிக குறைவு. எதற்க்கு இளையவர்கள் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றால் அவர்களின் அந்தந்த நாட்டு மொழி அறிவு. எனக்கு தெரிந்த ஒரு சில இளையவர்களை வேட்பாளராக நிற்க கேட்டிருந்தேன். இங்கு இதுவரை காலமும் பணியாளர்களின் அணுகுமுறை மற்றும் தவறான ஒரு சில செயற்பாடுகளுமே காரணமாக இருந்தது. ஆனால் அனைவருக்குமே தாம் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பல இளையவர்கள் வேறு புதிய அமைப்புகளில் சேர்ந்து வேறு வேலைதிட்டங்களில் செயல்பட்டார்கள். ஒரு சிலர் மக்களவையில் வேட்பாளரானர்கள்.

இங்கு யார் சரி யார் தவறு என்பதை விடுவோம். ஆனால் ந.க.த.அ. தொடங்கிய காலம் தொட்டே பல திசைகளிலிருந்து அவர்களுக்கு எம்மவர்களிடமிருந்தே விமர்சனங்கள் வந்தன. எம்மவர்களின் பிரச்சனையிலயே அவர்களின் காலமும் ஓடிவிட்டது. அவர்களும் எம் மீது உள்ள குற்றச்சாட்டை நாம் செயலால் மூறியடிப்போம் என்ற எண்ணமும் இல்லாதவர்களாகவே உள்ளார்கள். எமக்குள் பொய் பிரச்சாரங்களும் எமக்குள்ளயே அரசியலையும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களை குறை சொல்வதும் சரியா பிழையா என்றும் என்னால் உறுதியாக சொல்லமுடியாது. அவர்களின் வேட்பாளர்களில் பலர் வெறும் வாய் பேச்சில் வீரர்களாகவே உள்ளார்கள். ஏன் நான் வசிக்கின்ற இடத்தில் தேர்தலில் நிற்பதற்க்கே ஆட்கள் இல்லை. அனைத்து பணியாளர்களும் ஓடி ஒழித்துக்கொண்றார்கள். இறுதியில் சிவனே என்று போய் கொண்டிருந்த ஒருவரை பிடித்து பெயரிற்க்கு நிறுத்தப்பட்டது. இப்படி பல வேட்பாளர்கள் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். இது போனறவர்களை வைத்து ந.க.த.அ. பயணிப்பது கடினமே.

ந.க.த.அ.த்தின் மீது எனக்கிருந்த கொஞ்ச மதிப்பும் இந்த புத்தாண்டுடன் செத்து விட்டது. IBCயில் வினாடிக்கு வினாடி பிரதமர் பிரதமர் என்று யால்றா அடித்தது கடுப்பேத்தியது.

எமது தலைவரையே தேசிய தலைவர் என்று சொல்வதற்க்கு அவர் எத்தனை ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் எம்மவர்களிற்குள் நாமே அரசியல் செய்வதற்க்கு ஒரு பிரதமர் தேவையில்லை. அதுமட்டுமல்லாமல் அந்த பதவியை செயல் மூலம் வென்றெடுக்க வேண்டும்.

இந்த தூதரகம் திறப்பதால் என்னத்தை இவர்கள் சம்பாதிக்கப்போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இவர்கள் தூதரகம் திறக்கும் நாடுகளில் முதலில் வேலை செய்வதற்க்கு ஆட்கள் இருக்கிறார்களா என்பதே கேள்விக்குறி.

இவர்கள் இதுவரை சாதித்ததை விட சிறு சிறு அமைப்புகளும் தனிநபர்களும் சாதித்தது அதிகம் என்றே நான் நினைக்கின்றேன்.

யாழ்அன்பு நான் நினைத்ததையே சொல்லியதால் அவரிற்க்கு ஒரு பச்சை. :D

Edited by கருத்து கந்தசாமி

நீதிக்கான நடைப் பயணம் 05.02.2012

nadaiapayanam-1000.jpg

உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி சாத்திரி. நீங்கள் தொடர்ந்தும் இவ்வாறான ஆக்கங்களும் கருத்துக்களும் தொடர்ந்து எழுத வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஆகவே மக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய கடமைப்பாடு அவர்களுக்குண்டு. அதனைப் பல உறுப்பினர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. பிழைகளையும் தவறுகளையும் சுட்டிக் காட்டும்போதுதான் அவர்கள் திருந்த முடியும். அதையும் மீறி அவர்கள் பொறுப்பின்றி நடப்பார்களேயானால் அடுத்த தேர்தலில் அவர்கள் போட்டியிட முடியாதபடி செய்யுங்கள். அதேபோல், நாங்களும் பார்வையாளர்களாக இல்லாமல் பங்காளிகளாகவும் மாற வேண்டும்.

இதுவரை காலமும் அவர்களுக்குள் இரு பிரிவுகள் இருந்தது. இப்போதுதான் அவை களையப்பட்டு உருப்படியாக ஒரு அமர்வை செய்து முடித்தார்கள். ஆனால், அதற்குள் இப்போதும் கறுப்பாடுகள் இருக்கின்றன. அதுமட்டுமின்றி, அதன் உறுப்பினர்கள் வௌ;வேறு நாட்டை வதிவிடமாகக் கொண்டவர்கள். இதற்கு முன்னர் அவர்கள் ஒருவரையொருவர் அறியாதவர்கள். அவர்களின் பின்புலங்களும் வௌ;வேறானவை. அவர்களுக்குள் புரிந்துணர்வு வருவதற்குக் கால அவகாசம் தேவை. உங்கள் உங்கள் நாடுகளிலுள்ளவர்களை நீங்கள் அவதானித்துக் கொண்டிருங்கள். மக்கள் அவதானிக்கிறார்கள் என்று தெரிந்தாலே அவர்களும் அவதானமாக நடந்து கொள்வார்கள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் எதிர்காலம் மக்கள் கையிலேயே உள்ளது. மக்கள் கையிலேயே இருக்கவும் வேண்டும். ஆகவே, உங்களால் முடிந்த பங்களிப்பை அவர்களுக்குச் செய்யுங்கள். அவர்களின் செயற்பாடுகளைக்; கேள்வி கேட்பதும் அதில் அடங்கும். உதாரணமாக, அமைச்சரோ உறுப்பினரோ தவறாக நடக்க முற்படுவராயின் அதனைச் சுட்டிக் காட்டுங்கள். அதற்கான சரியான விளக்கம் கிடைக்காதுவிடின், அல்லது தொடர்ந்தும் அதே பிழையை விடுவார்களாயின். அவர்களைப் பற்றி அந்த அரசாங்கத்திற்கு முறையிடுங்கள். அதற்கும் பதில் இல்லாது விடின், பகிரங்கப்படுத்துங்கள். அதைவிடுத்து, நாம் குறைகளையே எப்போதும் கூறிக் கொண்டிராது அவற்றைக் களையும் விதத்தையும் சிந்தித்து செயற்படுவோம். அக்கறை உள்ளவர்கள் பார்வையாளர்களாக மட்டும் இருக்காமல் பங்காளர்களாகவும் மாறுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் இருப்பின் இங்கே நேரடியாகவே கேட்கலாம்.மகிந்த அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் அனைத்து சக்திகளுக்கும் தார்மீக ஆதரவு கொடுப்போம்.

http://twitter.com/tgte_us

By Email send your comments or message to info@TGTE-US.org.

If you would like to talk to any delegate or any member call at (212) 290-2925.

You are also welcome to write to us. Please send your mail to:

Transnational Government of Tamil Eelam -USA

875 Avenues of Americas, Suite 1001

New York, NY 10001

நாடு நமக்கு என்ன செய்தது என்று யாரும் கேட்கவில்லை நாடுகடந்த அரசு ஏதாவது செய்யுமா என ஏங்குகிறார்கள்

உலகில் உள்ள 193 நாடுகளில் 20-25 வரையான அரசுகளே ஒரு ஆளுமை உள்ள கட்டமைப்பை தம்வசம் வைத்துள்ளன. அதலானாலேயே அவர்கள் கையேந்தும் நாடுகளாக உள்ளனர்.

நாடுகடந்த அரசு செய்யும் ஒரு மிகப்பெரிய பங்களிப்பு என்னவென்றால் எம்மிடம் 'ஒரு ஆளுமையான, மேற்குலகத்திற்கு சார்பான கட்டமைப்பு உள்ளது' என்பதை செய்கையளவில் காட்டிவருவது.

ஒரு தருணத்தில் மேற்குலகம் எம்மை அங்கீகரிக்கும் வேளை வரும்பொழுது அவர்கள் இவர்களை அணுகும் சாத்தியம் நிறையவே உள்ளது. இவ்வாறே ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியாவில் செய்தனர்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசு என்பது நாம் எல்லோரும் சேர்ந்ததுதான்

அதன் வளர்ச்சியிலும் அதன் தொழிற்பாடுகளிலும் இது வரை நாம் செய்தது என்ன என்ற கேள்வியை நாம் எம்மை நோக்கி முதலில் கேட்கவேண்டும். ஒருவரில் சுமையைச்சுமத்திவிட்டு வாழாதிருப்பதை நாம் தொடருவோமாயின் மீண்டும் மீண்டும் இதுபோல நம்மை நாமே கேள்விக்கு ஆளாக்குவதைத்தவிர வேறு எதையுமே நாம் சாதிக்கப்போவதில்லை.

நான் மீண்டும் மீண்டும் எழுதுவதால் சிலர் இதை தவறாக புரிந்து கொள்ளக்கூடும். தயவு செய்து வெளியிலிருந்து பார்ப்பதை நிறுத்துங்கள். உள்ளே வாருங்கள். ஆயிரம் வேலைகள் கிடக்கின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சில நிமிட வேலைகளைப்பொறுப்பெடுங்கள். பெரும் விருட்சங்களை நாம் கடக்கலாம்.

நேற்று கனடா கந்தசாமி கோயிலில் நடந்த முப்பெரும் விழாவுக்கு ( திருவள்ளுவர் பிறந்த நாள்,தமிழர் புதுவருடம், பொங்கல் நாள்) சென்றிருந்தேன். கனடா தமிழர் படைப்பாளிகள் கழகம் மற்றும் உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் ஆகிய அமைப்புக்களால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த நிகழ்வு தமிழ் பெயர்களை எமது பிள்ளைகளுக்கு சூட்ட ஊக்கம் செய்யும் அங்கத்தையும் கொண்டிருந்தது.

இதில் கனடாவின் நாடு கடந்த அரசின் உறுப்பினர் இருவர் கூட வந்திருந்து தமது அமைப்பின் செயற்பாடுகள் அடங்கிய ஒரு புத்தகத்தையும் தமது 'நாளுக்கு ஒரு டாலர்' என்ற திட்டத்திற்கு உதவியும் வந்த மக்களை அணுகி கேட்டதை காணக்கூடியதாக இருந்தது.

அந்த திட்டத்தில் இணைந்த பின்னர் அவர்களிடம் சில கேள்விகளை கேட்கலாம் என உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த திட்டத்தில் இணைந்த பின்னர் அவர்களிடம் சில கேள்விகளை கேட்கலாம் என உள்ளேன்.

ஆக்கபூர்வமான

எமது இலட்சியத்துக்கு நன்மை பயிர்க்கும்

ஒற்றுமையைப்பலப்படுத்த........................... தேவையான கேள்விகளையும் ஆலோசனைகளையும் எல்லோரும் கேட்கவேண்டும். அவர்களும் அவற்றை ஏற்று ஆராய்ந்து நடக்கவேண்டும். அதற்கு முன் அவர்களை சந்தேகக்கண்ணோடு பார்ப்பதையும் நாம் ஏதும் செய்யாது இருந்து கெகாண்டு அவர்களை ஏவுவதையும் தவிர்க்கவேண்டும். இதுவே எனது நிலை.

நான் இதையே செய்கின்றேன். நேற்றும் அவர்களைச்சந்தித்தேன்.

பல பிரிவுகளாக நிற்கும் பலரும் கை கொடுத்ததைக்கண்டேன். பின்னர் ஒவ்வொருத்தராக கதைத்தபோது என்றோ ஒருநாள் நாமெல்லாம் ஒரு இடத்தில் சந்தித்து ஒன்றாக நடக்கவேண்டிடியவர்கள் தானே என்றனர்.

வீட்டுக்கு வெளியால் இருந்து கல்லெறியலாம் என்பதற்காக கல்லை மட்டுமே எறியகூடாது. உள்ளுக்குள் இருந்து கல்லெறி வேண்டாமல் நடக்க உதுவுவதே தாயக மக்களுக்கு இன்று தேவையாக உள்ளது.

ஆக்கபூர்வமான

எமது இலட்சியத்துக்கு நன்மை பயிர்க்கும்

ஒற்றுமையைப்பலப்படுத்த........................... தேவையான கேள்விகளையும் ஆலோசனைகளையும் எல்லோரும் கேட்கவேண்டும். அவர்களும் அவற்றை ஏற்று ஆராய்ந்து நடக்கவேண்டும். அதற்கு முன் அவர்களை சந்தேகக்கண்ணோடு பார்ப்பதையும் நாம் ஏதும் செய்யாது இருந்து கெகாண்டு அவர்களை ஏவுவதையும் தவிர்க்கவேண்டும். இதுவே எனது நிலை.

நன்றி.

இந்த அமைப்பில் உள்ளவர்கள் செய்வது எல்லாம் சரியாவோ இல்லை பிழையாகவோ இருக்காது. ஆனால் அவர்களுடன் சேர்ந்து உதவி வேலைசெய்யும்பொழுது அவர்களும் அவற்றை ஏற்று இணங்கி நடக்க அதிகவாய்ப்புக்கள் உள்ளன.

அதுவே ஆரோக்கியமான பங்களிப்பாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நா.க.த.அரசு இங்கிலாந்து மதியுரைஞர் குழு வசந்தன் அவர்கள் ஸ்கைப்பில் தொடர்பு கொண்டிருந்தார். காரணம் இந்தவார ஒரு பேப்பரில் நான் எழுதிய கட்டுரை பற்றிகதைத்தர். தூதரகம் திறக்கின்றோம் என அவசர குடுக்கை தனமாக பிரான்சில் உள்ள பிரதிநிதி அறிக்கை விட்டு தவறு என்று ஒத்துக்கொண்டதோடு தங்களிடம் இன்னமும் குறைகள் உள்ளது திருத்த முயற்சிக்கிறோம். என தெரிவித்தார் அதே நேரம் நா.க த.அரசில் இதுவரை யாரும் முழு நேர ஊழியர்கள் இல்லை இதுவரை எல்லாருமே தங்கள் வேலை முடிய சனி .ஞாயிறு நாளில் பொழுது போக்காகவே நா.க.த.அரசின் வேலைகளை செய்கிறார்கள். எனவே அதற்கு சம்பளத்துடன் முழுநேர ஊழியர் ஒருவர் அதேநேரம் வாங்குகிற சம்பளத்திற்கு அர்ப்பணிப்புடன் வேலை செய்பவர் ஒருவரை நியமிக்கும்படி கூறியிருந்தேன்.

ஏற்றுக்கொண்டார். மாசிமாதம் நா.க.த.அரசு இங்கிலாந்திலும் ஜெனிவாவிலும் ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதற்கு மருத்துவர் மற்றும் மனிதவுரிமைவாதி எலன் சாண்டாராவை சிறப்பு விருந்தினராக ஏற்பாடு செய்து தரும்படி கேட்டிருந்தார். முடிந்தவரை என்னாலான உதவி கிடைக்கும் என்று கூறியிருந்தேன்.

Edited by sathiri

நா.க.த.அரசு இங்கிலாந்து மதியுரைஞர் குழு வைத்தியர் வசந்தன் அவர்கள் ஸ்கைப்பில் தொடர்பு கொண்டிருந்தார். காரணம் இந்தவார ஒரு பேப்பரில் நான் எழுதிய கட்டுரை பற்றிகதைத்தர். தூதரகம் திறக்கின்றோம் என அவசர குடுக்கை தனமாக பிரான்சில் உள்ள பிரதிநிதி அறிக்கை விட்டு தவறு என்று ஒத்துக்கொண்டதோடு தங்களிடம் இன்னமும் குறைகள் உள்ளது திருத்த முயற்சிக்கிறோம். என தெரிவித்தார் அதே நேரம் நா.க த.அரசில் இதுவரை யாரும் முழு நேர ஊழியர்கள் இல்லை இதுவரை எல்லாருமே தங்கள் வேலை முடிய சனி .ஞாயிறு நாளில் பொழுது போக்காகவே நா.க.த.அரசின் வேலைகளை செய்கிறார்கள். எனவே அதற்கு சம்பளத்துடன் முழுநேர ஊழியர் ஒருவர் அதேநேரம் வாங்குகிற சம்பளத்திற்கு அர்ப்பணிப்புடன் வேலை செய்பவர் ஒருவரை நியமிக்கும்படி கூறியிருந்தேன்.

ஏற்றுக்கொண்டார். மாசிமாதம் நா.க.த.அரசு இங்கிலாந்திலும் ஜெனிவாவிலும் ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதற்கு மருத்துவர் மற்றும் மனிதவுரிமைவாதி எலன் சாண்டாராவை சிறப்பு விருந்தினராக ஏற்பாடு செய்து தரும்படி கேட்டிருந்தார். முடிந்தவரை என்னாலான உதவி கிடைக்கும் என்று கூறியிருந்தேன்.

இப்படியான ஆக்கபூர்வமான செயற்பாடுகள் காலத்தின், மக்களின் தேவை.

நன்றி சாத்திரியார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.