Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனியாவின் தவிப்பு (பாகம் 1 இருந்து 5வரை)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு

533_stream.jpg

பாகம் 1

செவ்வானம் சிவந்து! கதிரவன் வரும்போது இவள் .....

யாருக்காக காத்திருந்தாள்?.....அப்படி என்னதான் நோக்கிறாள் ! காலை முதல் மாலை வரை, யார் இந்த பெண் ! இவள்தான் ..... இனியா.

இவள் ஏக்கம் எல்லாம் ஒரே ஒரு ஓசைக்காக அதுதான் தொலைபேசியின் ஓசை ......

அது அவளுக்கு இதயத்தை மெல்ல மெல்ல தட்டி வருடி எழுப்பும் இனிய சுவாசக்காற்று காற்று மட்டும் தானா உலகில் உள்ள அத்தனை வாசமலர்கள் எல்லாவற்றையும் ஒன்றாய் வருடகூட்டினால் எப்படி வாசம் வீசுமோ அவ்வளவு ஒரு புன்சிரிப்பின் உதடுகள் ......

உதடுகள் மட்டும்தானா ! .....? வானத்தில் உள்ள நட்சத்திரங்களின் கண்கள் கூட அவள் கண்ணின்மேல் காதல் கொள்ளும் அவளின் அழகு

இவளின் மனதோ சமுத்திரம் போல் பரந்து வழைந்து குனிந்து மாசுபடாமல் கவர்ந்து கொள்ளும் சுவாகம்

இனி .......

இவள் தன் வீட்டில் செல்லப்பிராணி ஜீவ ராசிகளின் மத்தியிலும் இயற்க்கை அன்னையின் கோல மலர்களின் இடையிலும் (மத்தியில்) தன்னை மறந்து இசை என்ற இன்ப வெள்ளத்தில் மிதக்கும் போது

Radio.jpg

கொட் மச்சி FM இல் ......

உன்மார்பில் விழிமூடி தூங்குகின்றேன் தினமும் கனவில்,......

உன் ஆசை முகம் தேடி ஏங்குகின்றேன் விடியும் பொழுதில் .....

என்ற பாடல் ஒலிக்கும் அத்தருணத்தில் ஒரு மணியின் ஓசை கேட்டது

இவள் மனதோ சிறகுகள் இல்லாமலே இருப்பதுபோன்று வேகமாக பறந்து வந்து போணை எடுத்த்தாள் மறுகையோ அவள் தன் கூந்தலை வருடியபடியே ஹலோ ....... ஹலோ ......ஹலோ

3496d1201168323-sony-ericsson-s500i-mobile-phone-456.jpg

என கேட்டபோது எனக்கு வலம்புரி சங்கின் ஓசை போல் மிக அழகிய இயற்க்கை கொண்ட ஓசை உள்ள காற்றின் வடிவில் ஹலோ ..... ஒரு வேத சுவாசம்

இதுதான் என் வாழ்வின் முதல் தூறல் என நினைத்தேன் ஆனால் ஹலோ இனியா என ஒலி வாங்கியது என் காதில்.

அப்போது என் சிநேகிதி அச்சயா என்னடி ..... எப்படி ...என்னால் நம்ப முடியவில்லை சுகமா ? என கேட்டேன்

அதற்க்கு அச்சயா: நம்பித்தான் ஆகவேண்டும்! எனக்கு திருமணம் ஆகிவிட்டது திடீர் திருமணம் என .....

சொறியடி என்னால் வரமுடியவில்லை எனக்கு பார்ப்பதற்கு கூட கொடுத்து வைக்க வில்லை

அச்சயா: பரவாயில்லை எனக்கு இந்த நட்புத்தான் என்வாழ்வில் இளைப்பாறும் ஓர் ஆலைமரம் .....

(அவள் பேச்சில் ஒரு சலனம் உள்ளதை நான் உணர்ந்தேன்)

ஏய் ... அச்சயா உலகத்தில உள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும் ஒரு அன்பு காட்ட உறவு இருக்கும் அது அம்மா அப்பாவாகவும் இருக்கும் அல்லது உடன்பிறப்பாகவோ அன்றி சிநேகிதராகவோ ... அன்றி இதுவும் இல்லையென்றால் இயற்கையின் மடியில் இருந்து சுமைகளை சொல்லி சுகம் காணலாம் டோன் வெறி

இனியாவின் தாயார் : இனியா !.....இனியா !!

இதோ வரம்மா ....

தொடரும் ......

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

தொடக்கம் வாசிக்க கவர்ச்சியாக வாசகனை கவரும்போல் உள்ளது..உங்களது படைப்பா தமிழரசு..?அப்படியென்றால் பாராட்டுக்கள்.. யாழில் கதை எழுதுபவர்கள் காதல்க் கதைகளைத் தொடுவது குறைவு..நானும்தான்..ரமணிச்சந்திரன் வகைக் கதைகளை நினைவுபடுத்துகின்றன இந்தக் கதையின் தொடக்கம்..நல்லாயிருக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடக்கம் வாசிக்க கவர்ச்சியாக வாசகனை கவரும்போல் உள்ளது..உங்களது படைப்பா தமிழரசு..?அப்படியென்றால் பாராட்டுக்கள்.. யாழில் கதை எழுதுபவர்கள் காதல்க் கதைகளைத் தொடுவது குறைவு..நானும்தான்..ரமணிச்சந்திரன் வகைக் கதைகளை நினைவுபடுத்துகின்றன இந்தக் கதையின் தொடக்கம்..நல்லாயிருக்கு....

நன்றி சுபேஸ்,

இது எனது கன்னி படைப்புத்தான், இதன் தொடர்ச்சி வெகு விரைவில் .......

இந்த கதையை தொடர்வதக்கு உங்களின் பேராதரவு வேண்டும் தருவீர்கள் என நம்புகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

P1010014.JPG

பாகம் 2

இனியா ..... இனியா

யாரம்மா .... போனில் ?

அது அச்சயா ....

அச்சயாவா ! நல்லா இருக்கின்றாளா ?

ஓம்... அம்மா அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது...

யார் மாப்பிளை ?

அதை நான் கேட்க்கவில்லை, ஆனால் .... வெளிநாட்டில் இருந்து வந்தவரத்தான் திருமணம் செய்திருக்கின்றாள்.....

அது சரி ... நேற்று உனக்கு ஒரு பொடியனின் போட்டோ காட்டினேன் பிடித்திருக்கோ ?

(இனியா வெட்கத்துடன் சிரிக்கிறாள் )

ஹி ..... ஹி அம்மா புடித்திருக்கு ஆனால் ....

என்ன பிள்ள .... அனா ... ஆவன்னா எண்டு உனக்கு வயதோ 26 , எல்லா பிள்ளைகளையும் கரை சேர்த்தாச்சு நீ தான் எனது கடைக்குட்டி என்ன .... செல்லம் சொல்லான ......

அம்மா முதலில் நீங்களும் அப்பாவும் சந்தோஷமாக இருக்கவேணும் இதுவே எனது முதல் ஆசை.

ஏன் .... ராசாத்தி இப்படி சொல்லுகிறாய் ... எதுக்கு ,

இல்லை அம்மா, அப்பா ஒரு ஹாட் பேசன் நீங்களோ டைபர்றிக் பேசன் என் சகோதரங்கள் எல்லாம் வெளிநாட்டில் இப்போது நானும் திருமணம் முடித்து போனால் உங்களை யார் கவனிப்பார்கள் !?

(அந்த நேரத்தில் இனியாவின் அப்பா)

பிள்ளா நீங்கள் கோவிலுக்கு போகவில்லையா ? அப்பா .... என் தெய்வங்களே நீங்கள் இருவரும்தான், (என்ன்று கூறிக்கொண்டு இருக்கையில் )

தாயார்: இப்ப இப்படித்தான் சொல்லுவீர்கள் பிறகு கணவரே கண்கண்ட தெய்வம் என, புகளுவீர்கள் .

அம்மா .... (ஆசையோடு தாயின் தோழை இறுக்க அணைத்து முத்தமிட்டாள் கன்னத்தில்)

ஆ .... அப்பா நீங்கள் முன்பு எழுதியதுபோல் இப்போதும் கதை, கவிதைகள் எழுதலாம்தானே ? உங்களுக்கும் பொழுது போக்காக இருக்கும்

தந்தை : அம்மாச்சி யாரம்மா என் கதையை ரசிப்பது ?

அப்பா நாங்கள் ரசிப்பதில்லையா ?

தந்தை : (தந்தையார் சிரிப்புடன் ) ஹி ... ஹி நீ இன்னும் சின்ன பிள்ளையாகவே இருக்கின்றாயாட...

ஏன் அப்பா .....?

இல்லையடா செல்லம் .... அப்பா கடந்த முப்பது வருடமாக இதையெல்லாம் நானே எழுதி நானே ரசித்தேன், உன் அம்மாவுக்கோ ரசிப்பதற்கு நேரம் இல்லை அவளுக்கு வீட்டு வேலையை பார்க்கவே நேரம் சரியாகி விடும் அப்படியிருந்தும் பத்துக்கும் மேற்பட்ட நாடகங்களை பல மேடை ஏற்றி எனக்கு மக்கள் மத்தியில் பெரும் புகழும் செல்வாக்கையும் தேடித்தந்தன இருந்தாலும் மேலும் என்னால் தொடர ..... (என்றவாறே சிந்திக்கின்றார் )

கவலைப்படாதேங்கோ அப்பா, நீங்கள் உங்களின் பெற்றோரை சிறு வயசில் இழந்ததினால் உங்கள் உறவு காரர் யாரும் உங்களை கை கொடுத்து முன்னிறுத்த வில்லை அப்படி அவர்கள் செய்திருந்தால் இன்றைக்கு ஒரு இன்னும் புகழ் பெற்ற பிரபல எழுத்தாளனாக திகழ்ந்து இருப்பீர்கள்

தாயார் : இனியா நாங்கள் ஒரு தடவை அச்சயா வீட்டுக்கு போவோமா .....?

அம்மா நாளைக்கே போகலாம். (என்று சொன்ன பொது )

work.6480711.1.flat,550x550,075,f.my-two-baby-dogs.jpg

தொலைபேசியின் சினுக்கள் போல் அவளின் நாய்க்குட்டிகளான ஜிம்மியும் சிங்காவும் வெளிவாசலில் சத்தமிட்டது .......

தொடரரும் ..........

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

கிராமத்து பேச்சு வழக்கில் "இனியா " தொடர்ந்து ..........வரவேண்டும். உங்கள்முயற்சிக்கு பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிராமத்து பேச்சு வழக்கில் "இனியா " தொடர்ந்து ..........வரவேண்டும். உங்கள்முயற்சிக்கு பாராட்டுக்கள்

நிலாமதி நன்றி,

உங்களைப்போன்றோரின் பாராட்டுகளும் உச்சாக படுத்தலுமே என்னை தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்குவிக்கும்.

தொடருங்கோ

புத்தன் நன்றி,

தொடர்ந்து வாசித்து கருத்தெளுதுங்கள்.

நல்ல ஆரம்பம் தமிழரசு. தொடருங்கள். வாசிக்க காத்திருக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆரம்பம் தமிழரசு. தொடருங்கள். வாசிக்க காத்திருக்கிறேன்.

நன்றி ஈஸ்,

நான் தொடர்ந்து எழுதுவதற்கு உங்களின் ஆதரவு வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு

533_stream.jpg

கதை ஓப்பினிங் நல்லாயிருக்கே தொடருங்கள்.

உங்களிடம் இவ்வளவு திறமையா தமிழ் அரசு ??? விடாது தொடருங்கள் . அப்போது தான் சரளமான எழுத்து நடை வரும் :) :) :) ( பாகம் இரண்டு ) 1 .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை ஓப்பினிங் நல்லாயிருக்கே தொடருங்கள்.

நன்றி சாத்திரி,

நீங்கள் பெரிய எழுத்தாளர் உங்களவுக்கு என்னால் எழுத முடியாது ஆனால் முயற்சிக்கின்றேன்.

உங்களிடம் இவ்வளவு திறமையா தமிழ் அரசு ??? விடாது தொடருங்கள் . அப்போது தான் சரளமான எழுத்து நடை வரும் :) :) :) ( பாகம் இரண்டு ) 1 .

நன்றி கோமகன்,

உங்களவுக்கு திறமை என்னிடம் இல்லை இது எனது முதலாவது கதை இதற்க்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே தொடரை தொடர்வதா ? இல்லை இடையில் விடுவதா ?? முடிவுக்கு வர முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

casa-de-mita-front-gate.jpg

பாகம் : 3

அம்மா ..... அம்மா , இங்கே ஓடிவாங்கோ .....யார் வந்திருக்கினம் என்று பாருங்கோ.....

தாயார் : என்ரபிள்ளை தினா இன்செருங்கோ பிள்ளை தினகரன் வந்திருக்கின்றான் என்ற பிள்ளை இளைச்சுபோட்டான் என்னய்யா திடீரென்று..... எங்கே என் மருமகள் பிள்ளைகள் ?

தினா : அம்மா நான் பிசினஸ் விசயமாக வந்தேன் அப்படியே உங்கள் எல்லோரையும் பார்க்க வேனும்போல் இருந்தது ...... (என்று சொன்னவாறே தந்தையின் கன்னங்களை மெதுவாக தடவி கண்களில் நீர் கசிய தந்தை தாய் இருவருக்கும் தெரியாமல் மெதுவாக கடைக்கண்களை துடிக்கின்றான்)

அண்ணா மிக நீண்டகாலத்துக்கு பிறகு நாங்கள் ஒன்றாக சாப்பிடப்போகின்றோம் என்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது !

005%20Rice%20and%20Curry.jpg

தினா : தங்கச்சி வாழ்க்கையில் சந்தோஷமானதும் அற்புதமானதுமாதுமான வாழ்க்கை அம்மா அப்பா சகோதரமென ஒன்றாய் சாப்பிட்டு கலகலப்பாக வாழும் வாழ்க்கையும் இதில் இருக்கும் சந்தோஷமும் வேறு எதிலும் கிடையாது .....

இப்ப உங்களுக்கு தெரியாது காலங்கள் செல்லச்செல்ல தெரியவரும் ........

இதற்க்கு காரணம் எங்கள் அம்மா அப்பாதான் ....

அண்ணா நீங்கள் வெளிநாடு போயிருந்தும் இந்த மண்வாசனையை மறக்கவில்லை .....

தினா : (கிண்டலாக) நாம் அரச பரம்பரை அல்லவா ...

அண்ணா ......(காதுகளை கெட்டியாக பிடித்து உலுப்பியவாறு)

அன்பினிலே அன்பினிலெ ஆலயம் கண்டெனே

அன்னங்களின் கைகளிலே ஜீவனும் நாந்தானே

பாசத்திலே வாசம் தரும் பூவனம் நீதானே

நெசத்திலே ராகம் தரும் வீனயும் நீதானே......

எனப்பாடி மகிழ்ந்து (துள்ளிக்குதித்தனர்)

தினா : இனியா,..... அம்மா அப்பாவை திடீர்ரென காணோம் ....

(ரகசியமாக ) அண்ணா இங்கே வாங்கோ என்ன இருவரும் மிகவும் சலிப்பாக கதைக்கினம் அப்படி என்னதான் ......?!

தாயார் : இன்செருங்கோ பிள்ளை இன்னும் கொஞ்ச நாள் கூட லீவில வந்திருந்தால் நல்லாயிருக்கும் .....

தந்தை : அவனுக்கு என்ன பிரச்னையோ! எல்லாப்பிள்ளைகளையும் வெளிநாடு அனுப்பி போட்டு நாங்கள் அனாதைகள் போல்தான் இருக்கவேணும் என்றவாறே ..

இசையால் இணைந்தோம் இதயம் கலந்தோம் ......

ஈர் உயிர் ஒன்றென்று நாமிருந்தோம் ......

என இந்தவரிகளை (கிண்டலாக ) உச்சரித்தார்,

தினா : ம் ... ஆகா .... ஓகோ ...செம பாசமில்லையா, இனியா ...கண்ணு படப்போகுது

செம காமடி என்ன ஒரு கெமிஸ்ரி சூப்பர் .....

இனியாவின் தொலைபேசியில் ஒலிக்கிறது ( சொட்ட சொட்ட நனைய வைத்தாய்

சொல்லாமல் கொதிக்க வைத்தாய்..

எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்..

கிட்ட தட்ட கரைய வைத்தாய்..)

தொடரும் .......

Edited by தமிழரசு

நல்லா இருக்கு... தொடருங்கள்.:)

பாசங்களின் இனிமையான தவிப்பினை உணர்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இசையும் கதையும் போல..........இடையிடயே பாடல்வரி ....நன்றாக் போகிறது தொடருங்கள்..............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு... தொடருங்கள். :)

பாசங்களின் இனிமையான தவிப்பினை உணர்கின்றேன்.

நன்றி கவிதை,

உங்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு தொடர்கின்றேன் .

இசையும் கதையும் போல..........இடையிடயே பாடல்வரி ....நன்றாக் போகிறது தொடருங்கள்..............

உங்களின் கருத்துக்களுக்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Mango%20Tree.jpg

பாகம் 4

ஹலோ ... மாமா நான் புகழ் கதைக்கின்றேன் எப்படி இருக்கின்றீர்கள் ?

தந்தை : யார் புகழோ கதைக்கிறது ...

புகழ் : ஓம் மாமா, சுகமாக இருக்கிறியளோ ?

தந்தை : ஓம் ...ஓம் கொஞ்சம் இருங்கோ மாமி பக்கத்தில் இருக்கின்றாள் கொடுக்கின்றேன் .....

தாயார் : புகழ் சுகமாக இருக்கின்றீர்களா ?

புகழ் : ஓம் மாமி நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் ?

தாயார் : ... ம் ... சுகம்தான்

புகழ் : (நிறைந்த எதிர்பார்ப்பு கனவுகளுடன் ........’’விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்

முன்னே முன்னே

தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்

பெண்ணே பெண்ணே

அடி இது போல் மழைக் காலம்

என் வாழ்வில் வருமா’’ என எண்ணங்களில் வரிகள் ஓடிக்கொண்டிருந்தது )

இனியா எங்கே .... எப்படி இருக்கின்றா ?

தாயார் : ஏன் நீங்கள் போட்டோ பார்க்கவில்லையோ ?

புகழ் : பார்த்தேன் , இனியாவுடன் ஒருதடவை கதைக்கலாமோ ....!?

தாயார் : இல்லைத்தம்பி முறைப்படி எல்லா சம்பிரதாயங்களையும் செய்தபின் கதைக்கலாம்தானே, ......

புகழ் : (நல்ல சென்டிமென்ட் மாமி ம் ....... நடக்கட்டும் நடக்கட்டும் என ..... மனதுக்குள் ... புழுங்குகின்றார் )

சரி ...மாமி திரும்ப போண்எடுக்கிறான் .

அம்மா இன்றைக்கு பின்னேரம் அண்ணா வெளிக்கிடுகிறார்

தாயார் : நீ .. என்ன சொல்ல போகிறாய் என்று எனக்கு தெரியும் உனது தவிப்பும் எனக்கு விளங்கும்,

அப்படியொன்றும் இல்லை , அண்ணாவுடம் நிறைய மாற்றங்கள் தெரிகின்றது .....!

தாயார் : அதுவும் எனக்கு தெரிகிறது, ம் .... கடவுளே என்பிள்ளை சுகமாகச்சென்று மருமகள் பிள்ளைகளுடன் சந்தோஷமாக இருக்கோணும்

தினா : அம்மா .... அம்மா, நான் உங்களின் மடியில் சிறிது நேரம் தூங்கலாமோ ? எனக்கு தூங்க வேணும் போல இருக்குது (அவ்வாறே இருந்தபடி.....

'காலையில் தினமும் கண்

விழித்தால் நான் கைதொழும்

தேவதை அம்மா அன்பென்றாலே

அம்மா என் தாய்போல்

ஆகிடுமா குழு: அம்மா….. இமை

போல் இரவும் பகலும் எனை

காத்த அன்னையே உனது அன்பு

பார்த்த பின்பு அதைவிட

வானம் பூமி யாவும் சிறியது')

எனக்கு மன கஸ்ரம் வரும்போதெல்லாம் உங்களிடம் கதைக்க வேண்டும் போல் தோறும், அப்படியிருந்தும் சில தடவை வாய் விட்டு தனிமையில் கதைத்திருக்கின்றேன்.

அது ஏன் அம்மா ....?

தாயார் : என்ரயப்பு தினா .... ஏன் இப்படி ? .....

தினா : ( தாயாரின் கைகளை புடித்தபடி) இந்தக்கைதானே எங்களை கஸ்ரப்பட்டு வளர்த்தது எள்ளு பா இடித்து சாப்பாடு செய்து இதுமாட்டுமோ என்னும் எவ்வளவோ சொல்லலாம், ....

ஏன் ... அப்பா மட்டும் சும்மா இருந்தாரா ...? எங்களை வளர்ப்பதற்கு கடையில் பட்ட கஸ்ரம் எவ்வளவோ சொல்லிக்கொண்டிருக்கலாம் என்னதான் இருந்தாலும் உங்களுக்கு ‘நிகர்’ யாரும் இல்லை.

அண்ணா வான் வந்துவிட்டது ...

தினா : சரி நான் வெளிகிடப்போகின்றேன் ....

தாயார் : சரி ஐயா பார்த்து போட்டுவாங்கோ....

தந்தை : பிள்ளை தினகரன் (ஏக்கத்துடன் கூப்பிடுகிறார்)

தினா : அ .... அப்பா ....சொல்லுங்கோ...

தந்தை : அப்பு .. நான் ஒன்று கேட்பேன் பெசமாட்டியோ ஐயா ...

தினா : என்ன அப்பா ஏன் தயக்கம் (என கேட்டவாறே அப்பாவின் தோள்களை அணைத்தவாறு ) சொல்லுங்கோ ....

ஒரு வேளை ..... எனக்கு ..ஏதாவது நடந்தால் வருவியோ அப்பு ,....

தினா : (கண்களின் நீர் கசிய தேகம் குலுங்க அப்பாவுக்கு பக்கத்தில் நின்ற அம்மாவின் கையை பிடித்தவாறே தன்னை கட்டுப்படுத்த முடியாமல் விம்மி .... விம்மி அழுகிறான் )

தாயார் : வெளிக்கிடும் போது அழக்கூடாது , இனியா ... தண்ணீர் கொண்டுவாம்மா,

(தண்ணீரை எடுத்து கொண்டுவந்து அண்ணனிடம் கொடுக்கிறார் )

தாயார் : குடியப்பு .... சரி கவலைப்படாதே போயிட்டுவாப்பு,

தினா : சரி அப்பா .....அம்மா... தங்கச்சி போட்டு வருகிறேன் (என்று சொன்னவாறே கையை அசைத்து வானை நோக்கி செல்கிறார் ).

1291017676_142373257_4-TOYOTA-HIACE-GRANDIA-Vehicles-1291017676.jpg

தொடரும் ........

நான் ஒரு பாதையென்றால் , நீங்கள் வேறு ஒரு பாதை நன்றாக உள்ளது . தொடர்ந்து எழுதுங்கள் . அப்பொழுது தான் சரளமான எழுத்து நடைவரும் . வாழ்த்துக்கள் தமிழரசு :):):) 2 .

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்கு குளிர்ச்சியாய் வாயூறும் மாங்காய் .......

கண் கலங்கும் .....தாய் தந்தைப்பாசம்....அழகான நினவு மீட்டல்

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு பாதையென்றால் , நீங்கள் வேறு ஒரு பாதை நன்றாக உள்ளது . தொடர்ந்து எழுதுங்கள் . அப்பொழுது தான் சரளமான எழுத்து நடைவரும் . வாழ்த்துக்கள் தமிழரசு :):):) 2 .

தொடர்ந்தும் நான் கதை எழுத ........ ஊக்கம் அளிக்கும் உங்களுக்கு நன்றிகள்.

கண்ணுக்கு குளிர்ச்சியாய் வாயூறும் மாங்காய் .......

கண் கலங்கும் .....தாய் தந்தைப்பாசம்....அழகான நினவு மீட்டல்

தொடர்ந்தும் நான் கதை எழுத ...... ஊக்கம் அளிக்கும் உங்களுக்கு நன்றிகள்

இது முற்று முழுதான சமூகக்கதை இதில் நான் பாசத்துக்கு முன்னுரிமை கொடுக்க இருக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

MG_4248-1-595x396.jpg

பாகம் 5

சிலமாதங்களின் பின் இனியாவிற்க்கும் புகழுக்கும் பெரியவர்களினால் நிச்சயம் செய்யப்படுகின்றது, ஊர் சுற்றம் சூழ கலகப்பாக முடிந்ததின் பின் உறவுகள் எல்லோரும் தங்களின் வீடு திரும்பினர் அச்சயா மட்டும் இருக்கின்றாள்,

அச்சயாவும் இனியாவும் கிணத்தடியில் இருந்தவாறே மனதுவிட்டு பேச தொடங்கினர் அருகில் இவளுக்கு பிடித்த ஜீவன் களனா லவ் பேட்ஸ் நாய்க்குட்டி புறாக்கள் கோழிகள் இவையெல்லாம் இவளின் கதையை நோக்கி செவி சாய்த்தவாறே தங்களுக்குள் பேசி சிரிக்கின்றன ....

மாசிமாத லேசான பனித் தூறல்களோ இவள் வீட்டு பூந்தோட்டத்தில் உள்ள பூக்களின் முத்தமிட்டு கதை பேசி பூத்து குலுங்கி சிரிக்கின்றன ........

4949417141_97d4cec5ec.jpg

அச்சயா அன்றைக்கு நீங்கள் என்னுடன் பேசும்போது ஏன் ஒருமாதிரி பேசினாய் உனது திருமணத்தில் ஏதாவது குழப்பமா? உனது கணவர் எப்படி ? பிடித்திருக்கா ?

அச்சயா : நீ கேட்பதற்கு பதில் என்னால் சொல்ல முடியும் சற்று சங்கடமாக இருக்கு இருந்தாலும் எனது உயிர் தோழிக்கு சொல்லாமல் விடுவேனா ? ..... எனது கணவர் மிகவும் நல்லவர் இருந்தாலும் அவருக்கு உறவுகள் மீது அளவுகடந்த பாசம் அது தப்பில்லை பாசம் என்ற போர்வையில் ஏமாளியாக இருக்கின்றார்.

அப்படி என்ன நடந்தது (கேட்டவாறே அவள் அருகில் செல்கின்றாள்)

அச்சயா : ஏன் இனியா என்னை உனக்கு நல்லா தெரியும் நான் யாருக்கும் கெடுதல் செய்ததில்லை எனக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் இல்லை ... இருந்தும் திருமணமான பின்பு மாமி வீட்டுக்கு சென்ற அங்கு தங்கியபோது இரவு எனது கணவர் தனது நபர்களை சந்திப்பதற்காக வெளியில் சென்றிருந்தார் அவ்வேளையில் இரவு போசத்தின் பின் எல்லோரும் உறங்குவதற்காக படுக்கை அறைகளுக்கு சென்றனர் அதில் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது ...... (அழுகையுடன் ) ஹோல்லுக்குள் தனிமையில் இருந்தேன், அப்போது எனது கணவர் வந்தார் அவரால் எதுவும் பேசமுடியவில்லை என்னை ஒரே ஒருவார்த்தை மட்டும் கேட்டார் .

அச்சயா முதலில் மன்னித்துகொள்ளு ..... எனக்கு இப்படி நடக்கும் என்று தெரியாது என்னை நீங்கள் நம்புகின்றீர்களா ? என்று கேட்டார் ......

அதற்க்கு நான் சொன்னேன் என்னைப்பொறுத்தவரையில் இதுதான் வாழ்க்கை அல்ல நான் உங்களை நம்புகின்றேன் என கூறினேன் இதுமட்டுமல்ல என்னும் எவ்வளவோ சொல்லலாம் .....

சரி...... எனது கவலையை விடு ...... உனக்கு நாளை பிறந்தநாள் ஞாபகம் இருக்கிறதோ ? நாளைக்கு என்ன ஸ்பெசல் ?

வழமையானதுதான் என்ன ... இந்த முறை ஒருவர் புதிதாக இணைந்துள்ளார் அவர் யார் என்று தெரியும்தானே ....

அச்சயா : ம் .... ஓகே .... நாளை பார்ப்போம் என்னதான் ஸ்பெசல் என்று ....சொல்லும் போதே ....

(இனியா வெட்கத்துடன் ) வா அச்சயா ரேடியோ கேட்போம் .......

(ரேடியோவில்)

மல்லிகையே மல்லிகையே

மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு

தாமரையே தாமரையே

காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு

உள்ளம் கவர் கள்வனா குறும்புகளில் மன்னனா

மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா

அவன் முகவரி சொல்லடி .....

kuruvi_05022009_2.jpg

தொடரும் .......

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆர்வத்துக்கு என் பாராட்டுக்கள் :D

மாமா, மாமி , மச்சிமாரைப் பத்தியும் கொஞ்சம் எழுதுங்கோவன்.

கதை இனிமையாக இருக்கு. இனி வருவது என்ன என்ற தவிப்பில் நான் மச்சான்.

எழுதுடா மச்சி உண்மையில நல்லா இருக்கு.

குடும்பத்திலயும் இனத்திலயும் பாசம் குறைஞ்சதாலதான் இப்ப நாம சிரிக்கிறதுக்கும் யொசிக்கவேண்டி இருக்குது.

பாசத்தை உணர்த்துர மாதிரி இன்னும் நல்லா எழுதுடா மச்சி.

டா பொட்டுக் கூப்பிட்டதுக்கு தப்பா நினைச்சுக் கொள்ளாதையுங்கோ மச்சி. அதுவும் ஒரு பாசத்திலதான். :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு

தாய் தந்தை அண்ணன் தம்பி அக்கா தங்கை

பாசங்கள் மிகவும் ஆழமானவை.

அதையே தொட்டு எழுவதால் உங்களின் படைப்பிற்கு

இன்னும் நிறைய வரவேற்புக் கிடைக்கும்.

தொடர்ந்து எழுதுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆர்வத்துக்கு என் பாராட்டுக்கள் :D

நன்றி நிலாமதி,

தொடர்ந்து கருத்துக்கள் எழுதுங்கள் .....

மாமா, மாமி , மச்சிமாரைப் பத்தியும் கொஞ்சம் எழுதுங்கோவன்.

கதை இனிமையாக இருக்கு. இனி வருவது என்ன என்ற தவிப்பில் நான் மச்சான்.

எழுதுடா மச்சி உண்மையில நல்லா இருக்கு.

குடும்பத்திலயும் இனத்திலயும் பாசம் குறைஞ்சதாலதான் இப்ப நாம சிரிக்கிறதுக்கும் யொசிக்கவேண்டி இருக்குது.

பாசத்தை உணர்த்துர மாதிரி இன்னும் நல்லா எழுதுடா மச்சி.

டா பொட்டுக் கூப்பிட்டதுக்கு தப்பா நினைச்சுக் கொள்ளாதையுங்கோ மச்சி. அதுவும் ஒரு பாசத்திலதான். :)

நன்றி மச்சான்,

உங்களின் எரிபாப்பு நிச்சயம் நிறைவேறும் மச்சான் மச்சாள் மாமி மாமா என்று எல்லோரும் வருவார்கள் கதை பற்றி விமர்சனம் எழுதுங்கள் மச்சான்.

தமிழரசு

தாய் தந்தை அண்ணன் தம்பி அக்கா தங்கை

பாசங்கள் மிகவும் ஆழமானவை.

அதையே தொட்டு எழுவதால் உங்களின் படைப்பிற்கு

இன்னும் நிறைய வரவேற்புக் கிடைக்கும்.

தொடர்ந்து எழுதுங்கள்

நன்றி வாத்தியார்,

உங்களைப்போன்றோரின் கருத்துக்கள் எனக்கு உற்சாக பானம் அது என்னும் கதையை மெருகேற்றும் என்றால் அது மிகையாகாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.