Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிகத்திறமையான மாணவியை நான் யாழ்ப்பாணத்தில் சந்தித்தேன்!- அப்துல் கலாம் (Video)

Featured Replies

இவ்வாறு திறமைவாய்ந்த மாணவியை நான் முன்னர் ஒருபோதும் சந்தித்தது கிடையாது என்று ஆச்சரியப்படுத்திய யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவியின் முழுமையான காணொளி

நான் யாழ்ப்பாணத்துக்கு சென்று இந்துக் கல்லூரி மாணவர்களை சந்தித்து உரையாடிய போது மாணவி ஒருவர் பொறுப்புள்ள பிரஜையாக திகழ நான் என்ன செய்யவேண்டும் என என்னிடம் கேள்வியெழுப்பினார். அவ்வாறு திறமைவாய்ந்த மாணவியை நான் முன்னர் ஒருபோதும் சந்தித்தது கிடையாது என்று இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர். அப்துல் கலாம் தெரிவித்தார்.

அம்மாணவி தொடுத்த வினாவிற்கு பதிலளித்த நான் அந்த பதிலைத் திருப்பிக் கூறுமாறு தெரிவித்தேன். உடனடியாக அவர் அதனை திருப்பிக்கூறினார். அவ்வாறு மிகத் திறமையான மாணவியை நான் சந்தித்தது யாழ்ப்பாணத்தில் தான் என்று இந்திய டாக்டர். அப்துல் கலாம் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்து உரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய அப்துல் கலாம், தான் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் இந்துக் கல்லூரியில் சந்தித்து உரையாடிய மாணவர்களின் திறமை தொடர்பாகவும் புகழாரம் சூட்டினார்.

நேற்று முன்தினம் காலை இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்த அப்துல் கலாமிடம் ஆறு மாணவ மாணவிகள் கேள்விகளை எழுப்பினர். அதில் சிறு மாணவன் ஒருவன் ஐயா நீங்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தமையையிட்டு நான் மிகவும் பெருமையடைகின்றேன். உங்களைப் போன்று நானும் வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என வினவினான்.

அந்த மாணவனது இந்தத் திடீர் வினா சபையார் அனைவரையும் கவர்ந்ததுடன் பலரது கரகோசத்தையும் பெற்றது. அதற்கு பதிலளித்த அப்துல் கலாம் நீ கடின உழைப்பாளியாகவும் இலட்சிய தாகமுடையவனாகவும் நேர்மையாளனாகவும் விடாமுயற்சி உடையவனாகவும் இருந்தால் உனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

இதேவேளை மாணவி ஒருவர் பொறுப்புள்ள பிரஜையாக திகழ நான் என்ன செய்ய வேண்டும் என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கலாம்,

உனது இதயத்தில் நேர்மை இருந்தால் உனது செயலில் அழகு இருக்கும். செயலில் அழகு இருந்தால் வீட்டில் அமைதி இருக்கும். வீட்டில் அமைதி இருந்தால் நாட்டில் அமைதி இருக்கும். நாட்டில் அமைதியிருந்தால் உலகில் சமாதானம் இருக்கும் என ஆங்கிலத்தில் அவர் கூறியதை அப்படியே குறித்த மாணவி திருப்பிக் கூறியதை டாக்டர் கலாம் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தார்.

(Where there is righteousness in the heart there is beauty in the character

When there is beauty in the character there is harmony in the home

When there is harmony in the home there is an order in the nation

When there is an order in the nation there is peace in the world)

thx

http://newjaffna.com

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு பதிலளித்த அப்துல் கலாம் நீ கடின உழைப்பாளியாகவும் இலட்சிய தாகமுடையவனாகவும் நேர்மையாளனாகவும் விடாமுயற்சி உடையவனாகவும் இருந்தால் உனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றார்

அப்படி இருப்பவன் பயங்கரவாதி ஜயா, உங்கள் அகராதியில்....

Children-in-Vanni.jpg மிகத்திறமையான மாணவியை நான் யாழ்ப்பாணத்தில் சந்தித்தேன்!- அப்துல் கலாம்1

சந்திப்பிங்க...சந்திச்சிருப்பிங்க...........

ஏன் அது .....impossible?

possible தானே!ம்

போகமொதல்ல... இந்த படம் எங்கே சுட்டாங்கன்னு,,,

விசாரிச்சிங்களா லூசு விஞ்ஞானி!? :(

Edited by அறிவிலி

கலாம் மாத்திரமல்ல இன்னும் பல VIP கள் தமிழர் பிரதேசத்திற்கு வந்து செல்ல வேண்டும்.

இதனால் அங்குள்ள எம் மக்கள் மீது சிங்களம் செய்யும் / செய்ய இருக்கும் இனச்சுத்திகரிப்பு ஓரளவிற்க்காவது குறைய வாய்ப்புள்ளது.

சிங்களம் கலாம் வருகையை குழப்ப முயன்றது. இதற்குத்தான் யாழ் இந்து மாணவர்களை எச்சரிக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. மாணவ‌ர்களும் போஸ்டர்களுக்கு எதிராக நடந்தால், அதாவது கலாமிற்கு எதிர்ப்புக் காட்டினால் அதை தனக்குச் சாதகமாக்க நினைத்தது. ஆனால் யாழ் மாணவ சமுதாயம் புத்திசாலித் தனமாக நடந்து கொண்டுள்ளது.

30 வருட யுத்த காலத்தில் எம் பிரதேசங்களில் நடந்த கொடுமைகள் வெளி உலகிற்கு தெரியாமற் போனதற்கு இப்படி பல தலைவர்கள் அங்கு வராமையும் ஒர் காரணம்.

மக்கள் அவலம் வெளியே தெரிய வேண்டும். அதுவும் தீர்மானங்களை எடுக்க வல்ல, தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்த வல்ல தலைவர்களைச் சென்றடைய வேண்டும்.

அந்த வகையில் யாழ் மாணவ சமுதாயம் சந்தர்ப்பத்தை நல்ல முறையில் பாவித்துள்ளது. பாராட்டுக்கள்.

பார்க்க பெருமையாக இருக்கின்றது,நாம் இன்னமும் நாமளே போட்ட சிறு வட்டத்திற்குள் உழண்டுகொண்டு.

இப்போ நாட்டில் சொல்கின்றார்களாம் புலம் பெயர்ந்தவன் சும்மா இருந்தா காணும் சிங்களவனை நாங்கள் பார்த்துகொள்கின்றோம் என்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரு நாட்டில இருக்கிற டக்கிளஸ் கோஸ்டியா? அல்லது சோத்து பாசல் கோஸ்டியா?

:lol: :lol: :lol:

இப்போ நாட்டில் சொல்கின்றார்களாம் புலம் பெயர்ந்தவன் சும்மா இருந்தா காணும் சிங்களவனை நாங்கள் பார்த்துகொள்கின்றோம் என்று.

1. நாங்கள் வாசிக்கும் செய்திகள் அவ்வாறு சொல்லவில்லையே. கூட்டமைப்பு முதல் பத்திரிகைகள் வரை புலம்பெயர் சமூகமும் தாமும் இணைந்து போராடவேண்டும் என்றல்லவா கேட்கிறார்கள்.

2. கலாம் மாதிரி இல்லது சுயாதீனமாக போய் வரும் தமிழர்கள் அல்லாதவர்களே அங்கே 'இராணுவ கொடிய ஆட்சி' நடக்கின்றது என அல்லவா சொல்லுகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் மாணவி.   அவள் கோடி மக்களை கொத்தாக கொல்ல அணு குண்டு செய்த சாத்தானை சந்தித்தாள்.

  • கருத்துக்கள உறவுகள்

கலாம் மாத்திரமல்ல இன்னும் பல VIP கள் தமிழர் பிரதேசத்திற்கு வந்து செல்ல வேண்டும்.

இதனால் அங்குள்ள எம் மக்கள் மீது சிங்களம் செய்யும் / செய்ய இருக்கும் இனச்சுத்திகரிப்பு ஓரளவிற்க்காவது குறைய வாய்ப்புள்ளது.

சிங்களம் கலாம் வருகையை குழப்ப முயன்றது. இதற்குத்தான் யாழ் இந்து மாணவர்களை எச்சரிக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. மாணவ‌ர்களும் போஸ்டர்களுக்கு எதிராக நடந்தால், அதாவது கலாமிற்கு எதிர்ப்புக் காட்டினால் அதை தனக்குச் சாதகமாக்க நினைத்தது. ஆனால் யாழ் மாணவ சமுதாயம் புத்திசாலித் தனமாக நடந்து கொண்டுள்ளது.

30 வருட யுத்த காலத்தில் எம் பிரதேசங்களில் நடந்த கொடுமைகள் வெளி உலகிற்கு தெரியாமற் போனதற்கு இப்படி பல தலைவர்கள் அங்கு வராமையும் ஒர் காரணம்.

மக்கள் அவலம் வெளியே தெரிய வேண்டும். அதுவும் தீர்மானங்களை எடுக்க வல்ல, தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்த வல்ல தலைவர்களைச் சென்றடைய வேண்டும்.

அந்த வகையில் யாழ் மாணவ சமுதாயம் சந்தர்ப்பத்தை நல்ல முறையில் பாவித்துள்ளது. பாராட்டுக்கள்.

கலாமின் பயணப்பாதை..

கொழும்பிற்கு உல்லாச விமானத்தில் வருகை.

உல்லாச விடுதியில் தங்கல்.

சிங்கள அரச மாளிகைகளில் வரவேற்பும் விருந்தும்..!

சிங்கள மேட்டுக்குடி முதன்னிலைப் பள்ளிகளில் மேடை போட்டுப் பேச்சு...! (இன ஐக்கியம்.. மொழி ஐக்கியம்.. ஒன்றுபட்ட சிறீலங்கா.. சிங்களத்திலும் சிற்றுரை..!)

அப்படியே.. யாழ்ப்பாணத்திற்கு விமானத்தில் பறப்பு..!

குளிரூட்டிய காரில் யாழ் வருகை..!

மீண்டும்.. உல்லாச விடுதியில் ஓய்வு..!

அப்புறம் யாழ்ப்பாணத்தில் போர் அடையாளம் காண முடியாத பாதைகளூடு.. பயணம்..!

யாழ் பல்கலைக்கழகம்.. இந்துக் கல்லூரி.. ஒரு இரண்டு மைல் தொலைவுக்குள்.. ஓடியாட்டம்..!

சோடினைகளும்.. அலங்கார உடை அணிந்தோரும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை..!

கலாம்.. 1940 இல் வசித்த ஒரு ஆசிரியனை பற்றிய நினைவு கூறல்..! (உண்மையில் அப்படி ஒருத்தர் இருந்தாரோ என்பதே உறுதிப்படுத்தப்பட முடியாத விடயம்.)

மீண்டும்.. அதே போர் அடையாளம் காண முடியாத பாதையூடு.. பலாலி.. கொழும்பு என்று பயணம்..!

இதன் மூலம் கலாம்.. என்ன இன அழிப்புச் சம்பந்தப்பட்ட விடயத்தை கண்டறிந்திருப்பார்..???!

நாங்களா கற்பனை செய்யக் கூடாது. ஏனெனில் கலாமின் வருகை தொட்டு.. அவர் பின்னாடி நிழலாகத் தொடர்ந்தவர்.. சந்திர சிறீ என்ற ஒரு சிங்கள பேரினவாத தமிழினப் படுகொலையாளன். அவர் இனப்படுகொலையின் அடையாளங்களை.. தாக்கங்களை கலாம் உணர கலாமையும் அனுமதிக்கவில்லை.. உணர்த்த மக்களையும் அனுமதிக்கவில்லை.

இந்த இடத்தில்.. வி ஐ பி க்களின் வருகை.. எப்படி நாம் ஒரு 62 ஆண்டு காலமாக இன அழிவை சந்தித்து நிற்கிறோம் என்பதை அடையாளம் காட்ட முடியும்...????!

கலாம் போரால் பாதிக்கப்பட்ட ஒரு குக்கிராமத்திற்கு போயிருக்கிறாரா...???! போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லி இருக்கிறாரா..??! இல்லை.

நான் அந்த இடத்தில் இருந்திருந்தால்.. கலாமின் போதனையை கேட்டிருக்கமாட்டேன். போடாங் கொய்யாலா என்றிட்டு போயிருப்பேன். இவரை விட சிறந்த போதனைகளை எங்கள் தேசிய தலைவர்.. மற்றும்.. விவேகானந்தர் போன்றவர்கள் இளைஞர்களுக்கு தந்துள்ளனர்.

இவரின் வருகையின் நோக்கம்.. பிளவு படாத இந்திய தேசியம்.. அதன் உயிர்ப்புக்காக.. பிளவு படாத சிறீலங்காவின் இருப்பு. அவரின் நாட்டின் நிம்மதிக்காக நாம் நிம்மதியை உரிமையை தொலைத்து வாழ வேண்டும் என்ற போதனை.. தான் கலாமின் தொனியில் தெரிகிறதே அன்றி அவரிடம் போர் பற்றிய தாக்கங்களுக்கு காரணம்.. காரியம்.. தேடும் நோக்கம் இருக்கவில்லை என்பது நிகழ்ச்சிகளை சரியாக கண்காணிப்பின் தெரிய வரும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

யாரு நாட்டில இருக்கிற டக்கிளஸ் கோஸ்டியா? அல்லது சோத்து பாசல் கோஸ்டியா?

:lol: :lol: :lol:

இவ்வளவு அழிவுகளுக்கு பின்பும் நாட்டில் இருப்பவர்கள் .

ஓடிவந்த பரதேசிகள் அல்ல .உங்களுக்கெல்லாம் சந்தோசமான செய்தியொன்று சம்பந்தன் பிள்ளையானுடன் பேச்சு வார்த்தைக்கு தயாராகின்றார் .சங்கரி,சித்தார்த்தன் அடுத்து பிள்ளையான் ,பிடித்து வெளியில் விட்டது இரண்டு கஜேந்திரர்களும் பத்மினியும் ,இவைகளை பார்த்துக்கொண்டு இணையத்தில் வந்து குத்துவதை தவிர உங்களுக்கு வேறு தெரிவு இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

யாரு நாட்டில இருக்கிற டக்கிளஸ் கோஸ்டியா? அல்லது சோத்து பாசல் கோஸ்டியா?

:lol: :lol: :lol:

நேற்று யாழில் உறவினர் ஒருவருடன் பேசக் கிடைத்தபோது சொன்னார், கையில் துவக்கு இல்லாட்டில் டக்ளஸ், பொளட், கலாம் எல்லாருக்கும் சனம் செருப்பால அடிச்சிருக்கும் எண்டு..! நீங்கள் வேறை..!! :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

உள்ளுக்க விட்டு அடிக்கபோகுது என்று சொன்ன அதே நண்பரா ?

கையில துவக்கில்லாவிடில் முழு இயக்கத்திற்கும் சனம் 84களிலேயே அலுவல் பார்த்திருக்கும் .நல்ல விளக்கமானவர்கள் தான் நண்பர்கள் போல.

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

அவராவது பறுவாயில்லை உள்ளுக்க விட்டு அடிச்ச முன் அனுபவங்களை வைச்சு சொல்லி இருப்பார். இது மீன்பிடிப்படகில இந்துசமுத்திரத்தில நின்று கொண்டு.. வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்று எவ் எம் மைக்கில முழங்கித் தள்ளிட்டு அப்படியே இராமேஸ்வரத்துக்கு ஓடிப்போன... சோத்துப் பாசல் கூட்டம் போல தமிழீழம் அமைப்போம் என்று கனவு காண வைக்கல்லையே..! இன்று அதனாலும் தான் தமிழக மீனவர்களுக்குப் பிரச்சனை..! :lol::D:icon_idea:

உமாமகேஸ்வரன் வாத்தியார் விசிறி போல...

இந்தப் பாட்டுப் போட்டதோட சரி.. அவர் போராட்டத்தை வென்றிட்டு.. தமிழீழம் அமைச்சிட்டு.. ஆவியாகிப் போயிட்டார்..! என்ன அவரின் தோழர்கள் இதில சொல்லப்படுகின்ற அத்தனை கொடுமைகளையும் இன்றும் செய்வதுதான் இன்னும் கொடுமை..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்க்க பெருமையாக இருக்கின்றது,நாம் இன்னமும் நாமளே போட்ட சிறு வட்டத்திற்குள் உழண்டுகொண்டு.

இப்போ நாட்டில் சொல்கின்றார்களாம் புலம் பெயர்ந்தவன் சும்மா இருந்தா காணும் சிங்களவனை நாங்கள் பார்த்துகொள்கின்றோம் என்று.

அர்ஜுன் அண்ணா,

நான் நாட்டில் தான் இருக்கின்றேன் . இங்குள்ள மக்களின் மனநிலை நீங்கள் சொல்வது போல் இல்லை.

Edited by ஆண்டவன்

  • கருத்துக்கள உறவுகள்

சோத்து பார்சல்.. சோத்து பார்சல்... என்றால் என்ன..? நானும் பிரியாணி பார்சல் .. புளியோதரை பார்சல் ...லெமன் ரைஸ் பார்சல் .. புரோட்டா பார்சல் எல்லாம் கேள்விபட்டிருக்கிறேன்..இது புதுசா இருக்கு..? ஒரு கோஸ்டியாக உக்கார்ந்து வெறும் சோற்று பார்சல் ரெடி பண்னுவார்களா? அவர்கள்தான் சோர்த்து பார்சல் கோஸ்டியா?

சம்பந்தனும் சுரேசும் நாட்டில் தான் இருக்கின்றார்கள் .அவர்களும் கலாமிற்கு கை கொடுத்துத்தான் இருக்கின்றார்கள் ,அவர்களைத்தான் மக்கள் தேர்தலில் வெல்லவும் வைத்தார்கள்.

முப்பது வருட கனவை கலைப்பது என்பது கடினம் தான் ,

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குப் போட்டதற்காக.. சம்பந்தனும் சுரேசும்.. கைகொடுக்கிற ஆக்கள் எல்லாம் மக்களின் விருப்புக்குரிய ஆக்கள் என்ற அர்த்தப்படுத்தல்.. மிகவும் கோமாளித்தனமானது..! அதுமட்டுமன்றி.. சம்பந்தனும்... சுரேசும்.. மக்களைக் கேட்டுக் கொண்டு கை கொடுப்பதும் இல்லை..! மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தது.. விடுதலைப்புலிகளின் மக்கள் விருப்புள்ள அரசியல் நிலைப்பாடுகளோடு அவர்கள் ஒன்றிப் பயணிப்பதை மக்கள் அங்கீகரிப்பதால் தான். அதை மீறினால்.. சுரேஸ் பழையபடி இருந்த இடத்திற்கே போக நேரிடும். சம்பந்தனுக்கும் அதுதான் கதி..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

சம்பந்தனும் சுரேசும் நாட்டில் தான் இருக்கின்றார்கள் .அவர்களும் கலாமிற்கு கை கொடுத்துத்தான் இருக்கின்றார்கள் ,அவர்களைத்தான் மக்கள் தேர்தலில் வெல்லவும் வைத்தார்கள்.

முப்பது வருட கனவை கலைப்பது என்பது கடினம் தான் ,

நனவுலகில்

cartoon2(201).jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோத்து பார்சல்.. சோத்து பார்சல்... என்றால் என்ன..? நானும் பிரியாணி பார்சல் .. புளியோதரை பார்சல் ...லெமன் ரைஸ் பார்சல் .. புரோட்டா பார்சல் எல்லாம் கேள்விபட்டிருக்கிறேன்..இது புதுசா இருக்கு..? ஒரு கோஸ்டியாக உக்கார்ந்து வெறும் சோற்று பார்சல் ரெடி பண்னுவார்களா? அவர்கள்தான் சோர்த்து பார்சல் கோஸ்டியா?

குடும்பத்துக்கு பத்து பத்து சோத்து பாசல் தாங்கோ தமிழீழம் வாங்கி தாறம் என்று போட்டு, சோத்து பாசலை வாங்கி விழுங்கிபோட்டு காம்பில படுத்து கிடந்ததுகள், ரா காறன் சோத்து பாசலும் ஒரு தீவும் தாறன் என்றவுடன் மாலை தீவை பிடிக்க வெளிக்கிட்ட சோத்துபாசல்காரரின் கதை அது

:lol: :lol: :lol:

அதை சொன்னால் அவர்களுக்கு பத்திக்கிட்டு வருகிறது ரோசம், ரோசம் வருவதாக கூறுவது வெறும் நடிப்பு :icon_idea: :icon_idea: :icon_idea:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்க்க பெருமையாக இருக்கின்றது,நாம் இன்னமும் நாமளே போட்ட சிறு வட்டத்திற்குள் உழண்டுகொண்டு.

இப்போ நாட்டில் சொல்கின்றார்களாம் புலம் பெயர்ந்தவன் சும்மா இருந்தா காணும் சிங்களவனை நாங்கள் பார்த்துகொள்கின்றோம் என்று.

பசில், கோத்தா தமிழருக்காக என்ன சொல்லிக் கொண்டிருக்கின்றார்களோ? அதை விட மேலாகத்தானே நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பீர்கள்!

ஆமை முயலோடு போட்டி போடுவதை முயற்சி என்று பாராட்டலாம், ஆனால் தோல்விக்காக போட்டியிடுவதை தொழிலுக்காக என்பதை அன்றி வேறொன்றும் காரணமாகாது!

பைத்தியத்திற்கு சுற்றம் பைத்தியமாய் தெரிவதை யிட்டு சுற்றம் பரிதாபப்பட மட்டும்தான் முடியும்!

தங்கள் அருள் வாக்கிற்கு எதிர்காலம் கட்டுப்படுமோ, இல்லையோ என்பது அல்ல எமது கவலை! அது கடந்தகாலத்திற்கே நடக்காத கதைசொல்லும் பொய்வாக்கு அல்லவா? அங்கே இருக்கின்ற உண்மையின் அளவுதானே, உங்கள் எதிர்கால வாக்கின் நம்பகத்தன்மைக்கும் ஒரு அளவாக இருக்கப் போகின்றது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளுக்க விட்டு அடிக்கபோகுது என்று சொன்ன அதே நண்பரா ?

கையில துவக்கில்லாவிடில் முழு இயக்கத்திற்கும் சனம் 84களிலேயே அலுவல் பார்த்திருக்கும் .நல்ல விளக்கமானவர்கள் தான் நண்பர்கள் போல.

ஐயா! உங்களிடம் இருக்கும் விளக்கத்திற்கு "நாலு புத்தகம் படித்தவன் நான்" என்ற உங்கள் கூற்று, பிறருக்கு கொடுத்த விளக்கத்தை விடவா இது பெரிய விளக்கம்?

கலாமின் பயணப்பாதை..

கொழும்பிற்கு உல்லாச விமானத்தில் வருகை.

உல்லாச விடுதியில் தங்கல்.

சிங்கள அரச மாளிகைகளில் வரவேற்பும் விருந்தும்..!

சிங்கள மேட்டுக்குடி முதன்னிலைப் பள்ளிகளில் மேடை போட்டுப் பேச்சு...! (இன ஐக்கியம்.. மொழி ஐக்கியம்.. ஒன்றுபட்ட சிறீலங்கா.. சிங்களத்திலும் சிற்றுரை..!)

அப்படியே.. யாழ்ப்பாணத்திற்கு விமானத்தில் பறப்பு..!

குளிரூட்டிய காரில் யாழ் வருகை..!

மீண்டும்.. உல்லாச விடுதியில் ஓய்வு..!

அப்புறம் யாழ்ப்பாணத்தில் போர் அடையாளம் காண முடியாத பாதைகளூடு.. பயணம்..!

யாழ் பல்கலைக்கழகம்.. இந்துக் கல்லூரி.. ஒரு இரண்டு மைல் தொலைவுக்குள்.. ஓடியாட்டம்..!

சோடினைகளும்.. அலங்கார உடை அணிந்தோரும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை..!

கலாம்.. 1940 இல் வசித்த ஒரு ஆசிரியனை பற்றிய நினைவு கூறல்..! (உண்மையில் அப்படி ஒருத்தர் இருந்தாரோ என்பதே உறுதிப்படுத்தப்பட முடியாத விடயம்.)

மீண்டும்.. அதே போர் அடையாளம் காண முடியாத பாதையூடு.. பலாலி.. கொழும்பு என்று பயணம்..!

இதன் மூலம் கலாம்.. என்ன இன அழிப்புச் சம்பந்தப்பட்ட விடயத்தை கண்டறிந்திருப்பார்..???!

நாங்களா கற்பனை செய்யக் கூடாது. ஏனெனில் கலாமின் வருகை தொட்டு.. அவர் பின்னாடி நிழலாகத் தொடர்ந்தவர்.. சந்திர சிறீ என்ற ஒரு சிங்கள பேரினவாத தமிழினப் படுகொலையாளன். அவர் இனப்படுகொலையின் அடையாளங்களை.. தாக்கங்களை கலாம் உணர கலாமையும் அனுமதிக்கவில்லை.. உணர்த்த மக்களையும் அனுமதிக்கவில்லை.

இந்த இடத்தில்.. வி ஐ பி க்களின் வருகை.. எப்படி நாம் ஒரு 62 ஆண்டு காலமாக இன அழிவை சந்தித்து நிற்கிறோம் என்பதை அடையாளம் காட்ட முடியும்...????!

கலாம் போரால் பாதிக்கப்பட்ட ஒரு குக்கிராமத்திற்கு போயிருக்கிறாரா...???! போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லி இருக்கிறாரா..??! இல்லை.

நான் அந்த இடத்தில் இருந்திருந்தால்.. கலாமின் போதனையை கேட்டிருக்கமாட்டேன். போடாங் கொய்யாலா என்றிட்டு போயிருப்பேன். இவரை விட சிறந்த போதனைகளை எங்கள் தேசிய தலைவர்.. மற்றும்.. விவேகானந்தர் போன்றவர்கள் இளைஞர்களுக்கு தந்துள்ளனர்.

இவரின் வருகையின் நோக்கம்.. பிளவு படாத இந்திய தேசியம்.. அதன் உயிர்ப்புக்காக.. பிளவு படாத சிறீலங்காவின் இருப்பு. அவரின் நாட்டின் நிம்மதிக்காக நாம் நிம்மதியை உரிமையை தொலைத்து வாழ வேண்டும் என்ற போதனை.. தான் கலாமின் தொனியில் தெரிகிறதே அன்றி அவரிடம் போர் பற்றிய தாக்கங்களுக்கு காரணம்.. காரியம்.. தேடும் நோக்கம் இருக்கவில்லை என்பது நிகழ்ச்சிகளை சரியாக கண்காணிப்பின் தெரிய வரும்..! :icon_idea:

கலாமின் வருகையின் நோக்கம், அவரை அங்கு கொண்டு போனவர்களின் நோக்கம்.. இதெல்லாம் அங்குள்ளவர்களுக்குத் நன்றாகத் தெரியும். கேட்டான் தானே ஒரு கேள்வி ? :D

சிங்களவர்களைப் பற்றி கலாமைவிட எம்மவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே கலாமின் போதனைகள் எந்தளவுக்கு எடுபடும் ?

கலாம் அங்கு வந்து போவதின் மூலம் அந்த மக்களின் பிரச்சனைகளோட ஏதோ ஒரு வகையில் தொடர்பு பட்டு விட்டார். இது தான் தேவை. உங்கள் பிரச்சனைகளை நான் அறிவேன் என்று வேற சொல்லியிருக்கிறார்.

இப்படி, தலைவர்கள் இம்மக்கள் மேல் கரிசனை கொண்டுள்ளார்கள் என்ற எண்ணம், சிங்களம் இவர்கள் மேல் இனச்சுத்திகரிப்பை மேற்கொள்ள ஓரளவிற்க்காவது தடையாக இருக்கலாமல்லவா ? அந்த மக்களிற்கு வேறு எந்தவித பாதுகாப்புமில்லை.

Edited by esan

உங்கள் கருத்தில் நியாயம் இருக்கின்றது. ஆனால், புலிகளின் காலத்தில் கூட வந்தார்கள் சமாதானம் பேசினார்கள், பின்னர் 140,000 + மக்கள்

கொல்லப்படும் பொழுதும் , 300,000 + மக்கள் அடைத்து வைக்கப்பட்ட பொழுதும், இன்றும் அவர்கள் மௌனமாக இருக்கின்றார்கள். அதனால், மக்கள் மத்தியில் இவ்வாறு வந்து செல்பவர்கள் 'அங்கே தமிழர்களுக்கு எல்லாவற்றையும் சிங்களம் செய்துகொடுத்து பாதுகாக்கின்றது' என்று சொல்லுவார்களோ என்ற பயமே மேலாங்கி உள்ளது.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க பெருமையாக இருக்கின்றது,நாம்

இன்னமும் நாமளே போட்ட சிறு வட்டத்திற்குள் உழண்டுகொண்டு.

இப்போ நாட்டில் சொல்கின்றார்களாம் புலம் பெயர்ந்தவன் சும்மா இருந்தா

காணும் சிங்களவனை நாங்கள் பார்த்துகொள்கின்றோம் என்று.

குறள் 1334 & 1335. :lol: :lol:

.

கலாம் வருகையால் எமக்கு நட்டத்தைவிட இலாபம் தான் அதிகம்.

நாம் தொடர்ந்து நிலங்களைப் பறிகொடுக்க முடியாது. இதற்கு சிங்கள இனவாதம் எம்முடைய பிரதேசங்களில் சுதந்திரமாக தன் இனவாதச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஏதாவது ஒருவகையில் தடைகளை ஏற்படுத்த வேண்டும்.

எல்லாத்திற்கும் கருப்புக் கொடி காட்டிக் கொண்டிருந்தால் இன்னும் 10 - 20 வருடங்களில் வட கிழக்கில் தமிழரைவிட சிங்களவர்கள் தான் அதிகம் இருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.