Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னி முருகனுக்கு எண்ணைகாப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி முருகன் ஆலயம் கட்டி 12 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது.எதிர் வரும் 29 ஆம் திகதி (நாளை) கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது.27ஆம் திகதி  பிற்பகல் 2 மணி தொடக்கம் அடுத்த நாள்பகல் 2மணி வரை எண்ணை காப்பு வைக்கும் வைபவம் நடை பெற்றது.மக்கள் திரள் திரளாக வந்து எண்ணை காப்பு வைத்தார்கள்.சிட்னியில் வாழும் 90% வீதமான சைவர்கள் நிச்சமாக கலந்து கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.முதியோர் நடக்கமுடியாத சூழ்நிலையிலும் பிள்ளைகளின் உதவியுடன் வந்திருந்தார்கள்.அந்த மூலஸ்தானத்துக்கு உள் சென்று முருகனை தொட வேண்டும் என்றால் இன்னுமொரு 12 வருடங்கள் காத்திருக்க வேண்டும் ஆகவே கிடைத்த சந்தர்ப்பத்தை மக்கள் பயன் படுத்தி கொண்டார்கள் .

முருகனை தொடார்தீர்கள் பாதத்தில் சிறு துளி எண்ணையை இட்டால் போதுமானது என ஆலய அதிகார வர்க்கம் அதட்டிகொண்டிருந்தது ,இருந்தாலும் மக்கள் விடவில்லை முருகனை நன்றாகவே எண்ணையில் குளிப்பாட்டினார்கள் ,முருகனின் முடியில் இருந்து கால்வரை எண்ணையால் அபிசேகம் செய்தார்கள்.

ஆலய அதிகார வர்க்கம் முதலே முருகனுக்கு வடிவாக எண்ணையால் அபிசேகம் செய்து விட்டு பின்பு சாதாரண பக்தர்கள் செல்லும்பொழுது பல தடைகளை விதித்தார்கள்.

12 வருடத்துக்கு ஒரு தடவை 24 மணித்தியாலம் மக்கள் தமது விருப்படி முருகனை தொட்டு வழிபாடு செய்ய விட முடியாத ஆலய அதிகார வர்க்கம் எப்படி ஒரு சமுதாயத்தை புலத்தில் வாழவிடும்?

அரசியல் என்றால் எம் மக்கள் ஒதுங்கிவிடுகிறார்கள்,உரிமை போராட்டம் என்றாலும் ஒதுங்கி விடுகிறார்கள்,ஆனால் பக்தி என்று வரும் பொழுது மக்களை அழைக்காமலயே ஒன்றுகூடிவிடுவார்கள் அது ஏன்?பயமா?புலத்தில் வாழும் இளைஞர்கள் கூட பக்தி என்றால் மந்திரிக்கப்பட்ட வர்கள் போல நடந்து கொள்கிறார்கள்.

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி முருகன் ஆலயம் கட்டி 12 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது.எதிர் வரும் 29 ஆம் திகதி (நாளை) கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது.27ஆம் திகதி பிற்பகல் 2 மணி தொடக்கம் அடுத்த நாள்பகல் 2மணி வரை எண்ணை காப்பு வைக்கும் வைபவம் நடை பெற்றது.

அரசியல் என்றால் எம் மக்கள் ஒதுங்கிவிடுகிறார்கள்,உரிமை போராட்டம் என்றாலும் ஒதுங்கி விடுகிறார்கள்,ஆனால் பக்தி என்று வரும் பொழுது மக்களை அழைக்காமலயே ஒன்றுகூடிவிடுவார்கள் அது ஏன்?பயமா?புலத்தில் வாழும் இளைஞர்கள் கூட பக்தி என்றால் மந்திரிக்கப்பட்ட வர்கள் போல நடந்து கொள்கிறார்கள்.

யாழ் வண்ணார் பண்ணை பெருமாள் கோவில் கும்பாபிசேகத்திற்கு நான் சின்னப் பிள்ளையாக இருக்கும் போது அம்மா கூட்டிக் கொண்டு போனாங்க. கடவுளே.. எத்தனை வகை திரவியங்களால் அந்தச் சிலையை குளிக்கவாத்துக்கிட்டே இருந்தாங்க. இந்தா முடியப் போகுது என்று நினைக்க.. அடுத்தது வந்து கொண்டே இருக்கும். அடிக்கடி தீபாராதனை வேற நடத்துவாங்க.

என் மனசில தீபாராதனையை கண்டால் மகிழ்ச்சி பொங்கும். ஏனெனில் தீபாரதனையோட எல்லாம் முடிஞ்சு கோயில் பூட்டுறது தானே வழமை. ஆனால்.. இது அப்படியல்ல. ஒவ்வொரு தீபாராதனைக்குப் பிறகும் புதுப் புது அயிட்டமா வரும்.. குளிப்பாட்ட. ஒருக்கா.. அம்மணமா விட்டு குளிப்பாட்டுவாங்க.. அப்புறம்.. பட்டு உடுத்தி மீண்டும் அதே திரவியங்களால்.. அப்புறம் நகை போட்டு.. மீண்டும் குளிப்பாட்டல்.. அப்பப்பா.. இப்ப நினைச்சாலும் நித்திரை கண்ணைக் கட்டுது..!

அதுக்குள்ள சங்கீத பூசனம் ஒன்று.. திருப்பித் திருப்பி அதே வரிகளை ஆயிரம் தரம் படிச்சுக் கொண்டு.. கொலைவெறியே வந்திச்சு. என்ன செய்யுறது சின்னப் பொடியனாச்சே.. அடக்கிக்கிட்டது தான்.

இன்றும் எனக்குப் பிடிக்காத இரண்டு முக்கிய விடயங்களில்... கும்பாபிசேகமும்.. சங்கீத பூசனங்களின்.. இசைக்கச்சேரியும் அடங்கும். நான் அதே கும்பாபிசேக நிகழ்வில தான்.. முதல் தடவை இசைக்கச்சேரியில கொண்டு போய் இருத்தி வைக்கப்பட்டன்.. கொஞ்ச நேரம்.. விடுப்பு பார்த்தன். அப்புறம் செம போர்.. ஏண்ம்மா.. இந்தாளுக்கு சரியா பாட்டு வராதோ.. அடிக்கடி.. பிழை விட்டு விட்டு திருப்பி திருப்பி படிக்குதே.. இதையெல்லாமா உட்கார்ந்திருந்து கேப்பாங்க.. என்று அம்மாவை பார்த்துக்கேக்க.. அவா.. ஒரு நுள்ளு நுள்ளிப் போட்டு.. முழிச்சுப் பார்க்க.. நான் சட்டென்று.. வாயை பொத்திட்டு நிலத்தை பார்த்து வெறிச்சது தான்..!

அதுதான் கடைசியும் முதலுமா நான் போன.. இம்சை பிடிச்ச கும்பாபிசேக நிகழ்வு. அன்று தொலைத்த நித்திரையை இன்னும் தேடிக்கிட்டே இருக்கிறன்..! :lol:

மேலும்.........................

புலம்பெயர் தமிழர் வீடு ஒன்றில்..

விருந்தினர்: என்ன நீங்கள் ஜி ரி வி நியூஸ் போடல்லையோ..

வீட்டு உரிமையாளர் (தமிழர்): நாங்க பிள்ளையள் நிற்கேக்கப் போடுறதில்ல.. செய்தியில வாற ஊர்ப் படங்களைப் பார்த்து பயந்து போயிடுங்கள்... அதுதான்.

விருந்தினர்: இல்லை.. இன்றைக்கு லண்டன் முருகன் தேர் நிகழ்ச்சி போடுறாங்களாம்..

வீட்டு உரிமையாளர்: அப்படியே.. எனக்கு தெரியாமல் போச்சே. எங்க பார்ப்பம்... எங்கோ ஒரு மூலைக்குள் கிடந்த ரிமோட்டை தேடிப் பிடிச்சு சனலை மாற்றிக் கொண்டு... பிள்ளையள்.. இஞ்ச ஓடிவாங்க அப்பு சாமி கும்பிடுங்கோ...!

(இப்படி இருக்கிற எம்மவர் வீடுகளில்.. பக்தி முத்தாம.. இன உணர்வா முத்தும்..!) :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

போனால் போகட்டும் புத்தன்! அந்த நாள் முதல் இதுதான், சிட்னி முருகனின் நிலைப்பாடு!

அது தான், வர்க்க பேதம்!

எங்களுக்கெல்லாம், நல்லூர்க் கந்தன் அல்லது, சந்நிதிக் கந்தன் போதும்!

நீங்கள் நம்ப மாட்டீர்கள்!

நல்லூரில் இன்னும் அருச்சனைச் சீட்டு, ஒரு ரூபாய் தான்!

சிட்னி முருகன் எனது அப்பாவுக்கு அருச்சனை செய்ய முப்பதைந்து வெள்ளிகள் கேட்கிறார்!

அருச்சனையோ, பத்தோடு பதினொன்றாகத் தான் நடக்கும்!

ஏதோ ஐஸ்வரிய ராய்க்கு, அல்லது அமலா பாலுக்கு எண்ணெய் தடவிறதைத் தவறவிட்ட மாதிரி! :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(இப்படி இருக்கிற எம்மவர் வீடுகளில்.. பக்தி முத்தாம.. இன உணர்வா முத்தும்..!) :lol::icon_idea:

நிச்சம் பக்திதான் முந்தும்...நன்றிகள் நெடுக்ஸ் உங்கள் கருத்து பகிர்வுக்கு...

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

<p>

போனால் போகட்டும் புத்தன்! அந்த நாள் முதல் இதுதான், சிட்னி முருகனின் நிலைப்பாடு!

அது தான், வர்க்க பேதம்!

சில ஆலய அதிகாரவர்க்கத்தினருக்கு சிட்னி முருகன் அவையளின்ட சொந்தம் என்ற நினைப்பு நன்றிகள் புங்கையுரான்

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணெயிலை எப்பிடி காப்பு செய்வார்கள். :o

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறேன் என கோவிக்காதீங்கோ புத்தன் நீங்கள் எண்ணெய் காப்புக்கு போய் எண்ணெய் வைக்கவில்லையா?

நானும் போனான் பாருங்கோ..சரியான சுத்து மாத்து, அங்கை ஒரு குடுமியர், வடிவான இந்தியாக்கார பெட்டையாள் வந்தால், ஸ்பெசல் தரிசனம் காட்டினார், இன்னும் ஒருவர் தன்னோடை சீட்டு பிடிக்கிறாக்களுக்கு குறுக்கால கொண்டை எண்ணைக காப்பு வைக்க பண்ணினார். நான் நாலு மணித்தியாலம் வரிசையில நிண்டு களைத்து போனேன்.இப்படி குறுக்கால போய் எண்ணை வைத்து என்ன புண்ணியம் வேண்டப்போயினமோ, எனக்கு தெரியல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எண்ணெயிலை எப்பிடி காப்பு செய்வார்கள். :o

அந்த வைபவத்தை எப்படி சொல்லுவது?சிட்னியில் அதிகம் பேர் எண்ணைகாப்பு என்றுதான் சொல்லுகிறார்கள்...என்னுடைய உறவுக்கார சிறுவன் சொன்னான் "I went to massage the god"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறேன் என கோவிக்காதீங்கோ புத்தன் நீங்கள் எண்ணெய் காப்புக்கு போய் எண்ணெய் வைக்கவில்லையா?

ஒரு ஆளுக்கு $5 கொடுத்து 3 மணித்தியாலம் வரிசையில் நின்று குடும்பத்துடன் போய் எண்ணை காப்பு வைத்தேன்...இங்கு நான் எண்ணைகாப்பு வைப்பது பிழை என சொல்லவரவில்லை அங்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதை சுட்டி காட்டியுள்ளேன்..மக்களின் ஆசைகளுக்கு எதிராக இவர்கள் செயல்படுவதை சுட்டி காட்டினேன்,அதிகார வர்க்கம் தாங்கள் மட்டும் வடிவாக எல்லாம் செய்து போட்டு எனையோர் செய்யும் பொழுது தடுப்பது குற்றம் என சொல்ல வந்தேன்...ரதி கருத்து பகிர்வுக்கு நன்றிகள் ரதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் போனான் பாருங்கோ..சரியான சுத்து மாத்து, அங்கை ஒரு குடுமியர், வடிவான இந்தியாக்கார பெட்டையாள் வந்தால், ஸ்பெசல் தரிசனம் காட்டினார், இன்னும் ஒருவர் தன்னோடை சீட்டு பிடிக்கிறாக்களுக்கு குறுக்கால கொண்டை எண்ணைக காப்பு வைக்க பண்ணினார். நான் நாலு மணித்தியாலம் வரிசையில நிண்டு களைத்து போனேன்.இப்படி குறுக்கால போய் எண்ணை வைத்து என்ன புண்ணியம் வேண்டப்போயினமோ, எனக்கு தெரியல்ல.

பொன்னி இவங்கன்ட தொல்லை தாங்க முடியல்ல நாங்களும் கிறுக்கிறோம் பல வருடங்களாக அவங்களும் கண்டுகொன்டமாதிரி தெரியல்ல...

  • கருத்துக்கள உறவுகள்

sydney முருகனுக்கு வாழ்த்துக்கள்............

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

ஆன்லைனில் எண்ணெய் வார்க்க ஏதும் வழிகள் இருந்தால் அறிய தரவும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆன்லைனில் எண்ணெய் வார்க்க ஏதும் வழிகள் இருந்தால் அறிய தரவும்.

ஒரு தளம் பத்து வருடங்களுக்கு முன்னால் இருந்தது..! ஒன்லைனில் தேங்காய் உடைக்கலாம்.. தீபாராதனை காட்டலாம்..! பாடல்கள் ஒலிக்கலாம்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணெயிலை எப்பிடி காப்பு செய்வார்கள். :o

கருங்கல்லால் செய்யபட்ட சிலைகள், அதிக வெப்பத்திலும், குளிரிலுமிருந்து , வெடித்தோ அல்லது சிதைந்தோ போகாமலிருக்க, எண்ணைப்படலம், ஒரு பாதுகாப்புக் கவசம் அளிப்பதால், அதை எண்ணைக் காப்பு, என அழைக்கிறார்கள் என எண்ணுகின்றேன்!

Edited by புங்கையூரன்

புங்கையூரானின் அவதாரிலும் எண்ணைக்காப்பு போட்டு, பாதுகாப்பு கவசத்துடன் யாழில் உலாவிற மாதிரி இருக்கு. :D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

<p>

sydney முருகனுக்கு வாழ்த்துக்கள்............

என்ன சுண்டல் ,சிட்னி முருகன் கலியாணம் கட்டினவரே?

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆன்லைனில் எண்ணெய் வார்க்க ஏதும் வழிகள் இருந்தால் அறிய தரவும்.

இது வரையுமில்லை ...இது நல்ல ஜடியாவா இருக்கு நீங்கள் ஆரம்பியுங்கோ....ஆனால் வருமானம் 12 வருடத்திற்கு ஒரு தடவைதான் கிடைக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தளம் பத்து வருடங்களுக்கு முன்னால் இருந்தது..! ஒன்லைனில் தேங்காய் உடைக்கலாம்.. தீபாராதனை காட்டலாம்..! பாடல்கள் ஒலிக்கலாம்..! :D

அட எனக்கு தெரியாமல் போய்விட்டது...

புங்கையூரானின் அவதாரிலும் எண்ணைக்காப்பு போட்டு, பாதுகாப்பு கவசத்துடன் யாழில் உலாவிற மாதிரி இருக்கு. :D:lol:

புங்கையூரான் சிட்னியிலும் பாதுகாப்பு கவசத்துடந்தான் உலா வருகிறார்

புத்தன், சிட்னி முருகன் தனியார் கோயில? அவர்கள் அதிகாரம் செய்தால் நீங்கள் எல்லோரும் சேர்த்து அதிகாரத்தை இலலாதொழிப்பது தானே?

சிட்னியில வேற கோயில் இல்லயோ? (நீங்கள் ஒண்ட ஆரம்பிச்சு நானே ராசா நானே மந்திரி என இருக்கலாம் ;) சும்மா பகிடிக்கு...)

ஆன ஒண்டு எங்கட ஆக்கள் கோயிலுக்கும் இந்தியருக்கும் நல்லா காசு கொடுப்பினம் :)

பக்த கோடிகள் எல்லொரும் பணம் போட்டு கட்டிய கோயில் இது தனிநபர் கோவில் அல்ல ஆனால் ஒரு சிலர் கொமிட்டியில் இருந்து கொண்டு தங்களது கோவில் என்ற நினைப்பில் அதிகாரம் ..சண்டித்தனம் செய்கிறார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் கோயில் பிரச்சனை சிட்னியில் மட்டுமல்ல உலகத்தில் ஈழத் தமிழர் இருக்கும் எல்லா இடத்திலும் இருக்குது...எனக்கும் இங்கு நடக்கிறதைப் பார்த்தால் கோபம் வருகிறது தான் ஆனால் பேசாமல் அமைதியாக இருக்கிறதே நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் பொங்கி எழுந்தால் போல ஏதாச்சும் நடந்திடுமாக்கும்............

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக்காலத்தில் கவனிப்பார் அற்று இருக்கும் கோவில்களை திருத்த புனருத்தானம் செய்து கும்பாபிசேகம் 12 முறைக்கு ஒரு வைப்பார்கள். புலம் பெயர்ந்த நாடுகளில் கோயில்கள் எல்லாம் பழுதடையாமல் நன்றாகத்தான் இருக்கும். முள்ளிவாய்க்கால் அவலம் நடைபெற்ற போது வீதிக்கு வராத பலர் கோயில் என்றவுடன் விடிய விடிய எண்ணெய்க்காப்பு செய்ய 3,4 மணித்தியாலம் நின்றிருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் கோயில் பிரச்சனை சிட்னியில் மட்டுமல்ல உலகத்தில் ஈழத் தமிழர் இருக்கும் எல்லா இடத்திலும் இருக்குது...எனக்கும் இங்கு நடக்கிறதைப் பார்த்தால் கோபம் வருகிறது தான் ஆனால் பேசாமல் அமைதியாக இருக்கிறதே நல்லது.

மன நிம்மதிக்கு கோவிலுக்கு போவார்கள் ஆனால் இங்கு உள்ள அதிகாரவர்க்கம் (புறம்போக்குகள்)அந்த நிம்மதியை கெடுத்து போடுங்கள்

ம்ம் பொங்கி எழுந்தால் போல ஏதாச்சும் நடந்திடுமாக்கும்............

ஒன்றும் நடக்காதுதான் ...அதற்காக சும்மா இருக்கவும் ஏலாது ..உங்களை மாதிரி,என்னை மாதிரி இளசுகள்(கி .கி..கி) பொங்கி எழுவது போல நடிக்கலாமல்ல

அந்தக்காலத்தில் கவனிப்பார் அற்று இருக்கும் கோவில்களை திருத்த புனருத்தானம் செய்து கும்பாபிசேகம் 12 முறைக்கு ஒரு வைப்பார்கள். புலம் பெயர்ந்த நாடுகளில் கோயில்கள் எல்லாம் .

12வது வருடத்தில் கொமிட்டியில் அங்கத்துவராக வரவேண்டும் என பலர் காத்திருந்தாக கேள்வி பட்டேன் ...அப்பு ..உண்மையே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.