Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்டாலின்... அழகிரி... வைகோ?- திமுகவுக்கு அடுத்த தலைமை யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

07-stalin-azhari-vaiko.jpeg

சென்னை: கருணாநிதிக்குப் பின் திமுகவுக்கு அடுத்த தலைமை யார்... இந்தக் கேள்வி திமுகவினர் மத்தியில் மட்டுமல்ல... கட்சி சாராத தமிழ் உணர்வாளர்கள் பலருக்கும் உள்ளது.

காரணம், யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தமிழக அரசியலில் திமுகவின் ஆளுமை அப்படி!

கருணாநிதிக்குப் பின் திமுகவுக்கு அடுத்த தலைமை யார்? என்ற கேள்வியை முன் வைத்து 'குமுதம் ரிபோர்ட்டர்' வாரமிருமுறை இதழ் நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில், முக ஸ்டாலினே தலைமைக்குத் தகுதியானவர் என்று 58 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலினுக்கு இன்று வரை தலைமைப் பதவி கிடைக்காமலிருக்க முக்கிய காரணம் என்று சித்தரிக்கப்படும் அழகிரிக்கு 12 சதவீத ஆதரவு மட்டுமே இருப்பதாக அந்தப் பத்திரிகை கருத்து தெரிவித்துள்ளது.

திமுகவிலிருந்து பிரிந்து போய், தனிக்கட்சி நடத்தி வரும் வைகோவை 8 சதவீதம் பேர் திமுக தலைமைக்கு தகுதியானவர் என்று கருத்து கூறியுள்ளார்களாம்!

இந்த சர்வேயில் இன்னும் இருவர் உண்டு. தயாநிதி மாறன் மற்றும் கனிமொழி!

தயாநிதிக்கு 5 சதவீத ஆதரவும், கனிமொழிக்க 3 சதவீத ஆதரவும் உள்ளதாக அந்த பத்திரிகை கூறியுள்ளது. இது கனிமொழி ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. காரணம், கனிமொழியின் 'திகார் தியாகத்துக்கு' கட்சியில் பெரிய பதவியை பரிசாகத் தர வேண்டும் என்று அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் வெளிப்படையாகக் கூறிவந்தார். கருணாநிதியும் அதுகுறித்து யோசிப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த சர்வேயை வெளியிட்டுள்ளனர்.

இதன் மூலம் கருணாநிதிக்குப் பின் திமுகவின் அடுத்த தலைவர் முக ஸ்டாலின்தான் என்பது உறுதியாகிறது என இந்த சர்வே முடிவு கூறுகிறது.

2007ல் இதே கேள்வியை வைத்து தினகரன் நடத்திய சர்வே மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் நினைவிருக்கலாம்!

http://tamil.oneindia.in/news/2012/02/07/tamilnadu-successor-dmk-stalin-gets-58-pc-azhagiri-aid0136.html

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதிக்குப் பின்னர் தி மு க உடைய நிறைய வாய்ப்புக்கள் உண்டு.

எல்லாம் மதுரைவீரன் கையில் தங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதிக்குப் பின்னர் தி மு க உடைய நிறைய வாய்ப்புக்கள் உண்டு.

எல்லாம் மதுரைவீரன் கையில் தங்கியுள்ளது.

கருணாநிதி இன்னும் 20 வருசம் தாக்குப் பிடிப்பார் போலுள்ளது.

அதுக்கிடையில் ஸ்டாலினும், அழகிரியும் பொல்லுப் பிடித்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி இன்னும் 20 வருசம் தாக்குப் பிடிப்பார் போலுள்ளது.

அதுக்கிடையில் ஸ்டாலினும், அழகிரியும் பொல்லுப் பிடித்து விடுவார்கள்.

:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

வைக்கோவுக்கு நிறைய வாய்ப்பு உண்டு.

திமுக வெடிக்கும்போது

அதற்குள் இருக்கும் குடும்ப ஆதிக்கத்தை எதிர்ப்போரும் மாற்றத்தை வரவேற்போரும் வைகோவிடம் செல்வர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி இன்னும் 20 வருசம் தாக்குப் பிடிப்பார் போலுள்ளது.

அதுக்கிடையில் ஸ்டாலினும், அழகிரியும் பொல்லுப் பிடித்து விடுவார்கள்.

ஸ்டாலினும், அழகிரியும் இறந்தாலும் கறுப்புக்கண்ணாடிகருணாநிதி இறக்காது இது .......

தி மு க வில் எல்லோரும் இறந்தாலும் இது போகாது அப்படியொரு கிருமி ^_^

வைக்கோவுக்கு நிறைய வாய்ப்பு உண்டு.

திமுக வெடிக்கும்போது

அதற்குள் இருக்கும் குடும்ப ஆதிக்கத்தை எதிர்ப்போரும் மாற்றத்தை வரவேற்போரும் வைகோவிடம் செல்வர்

சாத்தியக்கூறுகள் நிறைய உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

02.jpg 05.02.12 கவர் ஸ்டோரி

ர்வேயின் படிவத்தைப் படித்த இளைஞர் ஒருவர் “குஷ்புவுக்கு ஒரு சான்ஸ் தரணும் சார். தேர்தல் பிரசாரத்தின் போது பலர் வருவாங்க. அவங்க ஆதரிக்கிற கட்சி ஜெயிச்சா அரசியலில் ஒட்டிட்டு இருப்பாங்க. இல்லே ன்னா ஓடிடுவாங்க. நம்ம ஊர் வடிவேலு அதுக்கு நல்ல உதாரணம். ஆனால் குஷ்பு அப்படியில்ல. தோல்வியிலும் து வண்டுடாம நிற்கிறாங்க’’ என குஷ்புவை புகழ்ந்து தள்ளிவிட்டார்.

தி.மு.க. அனுதாபிகளான ஐம்பது வயதைத் தாண்டிய சிலர் “ கொஞ்ச நாளைக்கு பேராசிரியருக்கு கட் சியின் தலைவர் என்கிற வாய்ப்பை கண்டிப்பா தரணும்’’ என்றனர்.

“உதயநிதி ஸ்டாலின் சினிமா ஸ்டார் போல இருக்கிறார். இளைஞரணிக்குத் தலைமையேற்க அவர்தான் தகுதியான ஆள். கட்சி யூத்தா இருக்கணுமில்லையா!’’ என்றார்கள் பலர்.

அடுத்த தலைமைப் பொறுப்புக்கு யார் என்ற கேள்வியில் வைகோ பெயரைப் பார்த்து பலர் அதிர்ச்சியானாலும், பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பலர் அவரது பெயரை டிக் செய்தனர். அண்ணா உருவாக்கிய க ட்சியை வளர்க்கத் தகுதியானவர் இவர்தான் என்றனர்.

02a.jpg

02b.jpg

02c.jpg

-குமுதம் ரிபோர்ட்டர் 05.02.2012

  • கருத்துக்கள உறவுகள்

02.jpg 09.02.12 கவர் ஸ்டோரி

தி.மு.க.வின் பொதுக்குழு கூடும் முக்கியமான சூழ்நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் வகையில் கடந்த இதழில் ஒரு சர்வே எடுத்து, அதன் முடிவுகளை அறிவித்திருந்தோம்... அதில் தி.மு.க.வின் அடுத்த தலைமைக்கு யார் தகுதியானவர் என்பதில் ஆரம்பித்து, கனிமொழிக்கு கட்சிப் பதவி கொடுக்கலாமா, இளைஞர் அணிக்குத் தலைமை ஏற்க யார் தகுதியானவர், அரசியலிலிருந்து கருணாநிதி ஓய்வு பெறலாமா... என பல கேள்விகளுக்கான முடிவுகளைத் தெரிவித்திருந்தோம்...

சர்வே முடிவுகள் வெளியான பிறகு அது குறித்து தி.மு.க.வைச் சேர்ந்தவர்களும், அரசியல் ஆர்வலர்களும், வாசகர்களும் தங்களது பாராட்டுக்களையும் ஆதங்கங்களையும் கொட்டித் தீர்த்துவிட்டார்கள். இன்னும் சிலர் கோபத்தோடு தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர். ‘‘தி.மு.க.வை விட்டு வைகோ பிரிந்து சென்று நீண்டகாலமாகிவிட்டது. இந்நிலையில் அவரை எதற்கு தி.மு.க. தலைமைப் பதவிக்கு ஏற்றவர்கள் பட்டியலில் சேர்த்தீர்கள்?’’ என்று கோபித்துக் கொண்டார்கள் அவர்கள். அதேபோல் ம.தி.மு.க.வைச் சேர்ந்த சிலரும் ‘‘தி.மு.க.வே வேண்டாம் என்றுதானே எங்கள் தலைவர் அக்கட்சியிலிருந்து பிரிந்து தனிக்கட்சி கண்டார். அவரை ஏன் அதில் சேர்த்தீர்கள்’’ என்றார்கள். வேறு சிலர், ‘‘அண்ணா காலத்திலிருந்து திராவிட கருத்துக்களுக்காகத் தோள் கொடுத்து வரும் வைகோவால், தி.மு.க. தலைமைப் பொறுப்பை ஏற்க முடியுமோ இல்லையோ; அந்தப் பதவிக்குத் தகுதியானவர்தான் அவர்!’’ என்றனர்.

02a.jpg

வைகோவை அடுத்து மிகவும் விமர்சிக்கப்பட்ட பெயர் குஷ்பு. ‘‘கட்சியில் சேர்ந்த மிகக் குறுகிய காலத்துக்குள்ளாகவே தலைமை அளவுக்கு அதிகமாக அவருக்கு பாப்புலாரிட்டி கொடுத்து வருகிறது. இந்நிலையில் நீங்கள்வேறு அவர் பெயரையும் சேர்த்துவிட்டீர்கள்’’ என்று சிலர் சினந்தனர். வேறு சிலரோ, அவரது பாப்புலாரிட்டியையும் சின்சியாரிட்டியையும் குறித்துச் சொல்லி, சேர்த்தது சரிதான் என்றனர்! ‘‘கட்சியை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல பொதுக்குழு கூட உள்ள நேரத்தில் எங்களுக்கு சரியான வாய்ப்பைத் தந்திருக்கிறீர்கள்’’ என்று நடுநிலையான தி.மு.க.வினர் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

இன்னும் சிலர், ‘‘அடுத்த தலைமைக்குத் தகுதியானவர் யார் என்ற சர்வேயில் கனிமொழிக்கும் மூன்று சதவிகிதம் கிடைத்திருக்கிறது, குஷ்புவுக்கும் மூன்று சதவிகிதம் கிடைத்திருக்கிறது. அப்படி என்றால் குஷ்புவும் கனிமொழியும் ஒன்றா?’’ என்று காரம் காட்டினர். அதேபோல் கட்சிப் பதவி எதையும் வகிக்காத உதயநிதி ஸ்டாலினையும் துரை தயாநிதியையும் ஏன் இளைஞர் அணிக்கான பதவிக்குச் சேர்த்தீர்கள் என்றும் கேள்விகள் எழுப்பினர். ஆனால் பெரும்பாலான தொண்டர்களின் எண்ணம் இளைஞர் அணி தலைமைப் பொறுப்புக்கு உதயநிதி ஸ்டாலின் என்பதாகவே இருக்கிறது.

02b.jpg

இதற்கிடையே, தி.மு.க. தரப்பில் சிலர் குழப்பம் விளைவிப்பதற்காகவே இந்த சர்வே எடுக்கப்பட்டதாக கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். ரிப்போர்ட்டரின் நோக்கம் ஒருபோதும் குழப்பம் விளைவிப்பதாக இருந்தது கிடையாது. இந்த சர்வேயிலும் அப்படித்தான். பொதுக்குழு கூடும் நேரத்தில் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள், பிற கட்சியைச் சார்ந்தவர்கள் என பல தரப்பினரின் கருத்துக்களை வெளியிட்டால் அது அக்கட்சி சில முடிவுகளை எடுக்க உதவியாக இருக்கும் என்ற நல்ல நோக்கத்தில்தான் சர்வேயை வெளியிட்டோம்...

பலவிதமான ரியாக்ஷன்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில், மேலும் சில சர்வே முடிவுகள் இந்த இதழிலும் தொடர்கிறது...

? தி.மு.க.வில் அடுத்து தலைமையேற்க தகுதி கொண்டவராக அனைத்துத் தரப்பினரும் சேர்ந்து ஸ்டாலினுக்கு 58 சதவிகித வாக்குகளை அளித்திருந்தது குறித்து கடந்த இதழிலேயே சொல்லியிருந்தோம்... அதேபோல் அவருக்கு படிக்காதவர்களை விட படித்தவர் மத்தியில் அதிக வாக்குகள் கிடைத்திருக்கிறது. ஆனால் அரசு ஊழியர்களின் ஆதரவைக் காட்டிலும் தனியார் நிறுவன ஊழியர்களின் ஆதரவே அதிகமாக இருக்கிறது!

? கனிமொழிக்கும் அதேபோல் படித்தவர்கள் மத்தியிலேயே அதிக ஆதரவு! அவருக்கு கட்சிப் பதவி கொடுக்கலாமா என்பது குறித்து கேட்ட கேள்விக்கு 26 வயதிலிருந்து 40 வயது வரையிலானவர்களே அதிகம் கைகொடுத்திருக்கிறார்கள். கட்சியைப் பொறுத்தவரை தி.மு.க.வைச் சேர்ந்தவர்களே அதிக ஆதரவு தந்திருக்கிறார்கள். பிற கட்சிகளைச் சார்ந்தவர்களிடம் அவ்வளவு ஆதரவைப் பெறவில்லை கனிமொழி.

02c.jpg

? அரசியலிலிருந்து கருணாநிதி ஓய்வு பெற வேண்டுமா என்ற கேள்வியை தி.மு.க.வினர் என்று எடுத்துப் பார்த்தால், அவர்கள் அதை அவ்வளவாக ரசிக்கவில்லை. பிற கட்சியினரும், எந்த கட்சியைச் சேராதவர்களுமே ஒய்வு பெற வேண்டும் என்று சொல்கிறார்கள்.

? காங்கிரஸ் & தி.மு.க. கூட்டணி தொடர வேண்டுமா? என்ற கேள்வியைப் பொறுத்தவரையில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் தொடர்வதே நல்லது என்று பதில் அளித்துள்ளார்கள்.

? தி.மு.க. இளைஞரணிக்கு யார் தகுதியானவர் என்ற கேள்வியைப் பொறுத்தவரையில் கனிமொழிக்கு கட்சிக்குள் இருந்தும் குஷ்புவுக்கு தி.மு.க.வை சாராதவர்களிடம் இருந்தும் அதிக ஆதரவு கிடைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கும் கட்சிக்காரர்களிடமிருந்தே அதிக ஆதரவு கிடைத்துள்ளது.

-குமுதம் ரிபோர்ட்டர் 09.02.2012

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாநிதியின் பூதவுடல் சுடுகாடுபோகமுன்.........அவர்குடும்பத்துக்குள்.....அவர்கட்சிக்குள்....பல சொப்பன நிகழ்வுகள் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியின் பூதவுடல் சுடுகாடுபோகமுன்.........அவர்குடும்பத்துக்குள்.....அவர்கட்சிக்குள்....பல சொப்பன நிகழ்வுகள் நடக்கும்.

06.jpg 12.02.12 வம்பானந்தா

‘‘அம்மணி, ‘சர்வே’ என்றாலே அரசியல் கட்சிகளுக்கு வேப்பங்காய்தான்...’’ -சிரித்துக்கொண்டே வரவேற்பு அறைக்குள் என்ட்ரி கொடுத்தார் வம்பானந்தா!

‘‘ஓ, மதுரை சம்பவமோ..?’’ எடுத்துக் கொடுத்தார் சிஷ்யை.

‘‘அதே.. அதே..! தி.மு.க. உள்கட்சிப் பதவிகளில் யாருக்கு பலம் இருக்கிறது என்பதை அறிய சர்வேயை வெளியிட்டோம். அது வெளி வந்ததுமே அக்கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்திலேயே சீற்றம் ஏற்பட்டுவிட்டது.. பொதுக்குழு கூடிய அடுத்த நாளிலும் அது எதிரொலித்தது. அதேபோல் ம.தி.மு.க.வும் ‘சர்வே மூலம் தி.மு.க.வுக்குள் உட்க ட்சிப் பூசலை உருவாக்க ம.தி.மு.க. தலைவரையும் அதில் இணைத்திருக்கிறார்கள் என்று சொல்லி மதுரை உயர்நீதிமன்றம் முன்பு அக்கட்சியைச் சேர்ந்த சில வழக்கறிஞர்கள் நமது இதழை எரித்திருக்கிறார்கள். உண்மையில் யாரையும் காயப்படுத்துவது என்பது நமது நோக்கம் அல்ல.. தொண்டர்களின் பல்ஸை பார்ப்பதற்காகத்தான் இந்த சர்வே. இது புரிந்தால் சரி...’’ என்ற வம்பானந்தா டேபிளில் கிடந்த தி.மு.க.வின் பொதுக்குழு பற்றி நமது நிருபர் கொடுத்த செய்தியை மேய்ந்துவிட்டு தொடர்ந்தார்...

‘‘பொதுக்குழு படலத்துக்குப் பின் தனது வாரிசுகள் மீது கருணாநிதிக்கு கடும் கோபமாம்.’’

‘‘என்ன கோபமாம்?’’

‘‘பொதுக்குழுவுக்கு முதல்நாள் உயர்மட்ட செயல்திட்டக் குழு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் மூன்று முறைக்கு மேல் மாவட்டச் செயலாளராக இருப்பவர்கள், அடு த்த தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள். இதனை வீரபாண்டி ஆறுமுகம் கடுமையாக எதிர்த்துப் பேசியிருக்கிறார். இதற்கு மூத்த மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். இதை சற்றும் எதிர்பாராத ஸ்டாலின் ஆதரவாளர்கள் அமைதியாக இருந்துவிட்டனர். கூட்டம் முடிந்ததும் தனது ஆதரவாளர்களிடம் ஸ்டாலின் கோபித்துக் கொண்டாராம். இது அடுத்த நாள் பொதுக்குழுவில் எதிரொலித்தது. வீரபாண்டியாருக்கு எதிராக ஸ்டாலின் ஆட்கள் குழப்பம் செய்தனர். அவர்களை ஸ்டாலின் கட்டுப்படுத்தவில்லை என்று கருணாநிதிக்கு வருத்தமாம். அதனால்தான் அவர் பேசும்போது, ‘தமிழகம் முழுதும் சுற்றி வாக்குப் பிச்சை எடுத்து தலைவர் பதவியில் நீடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. வேண்டுமானால் அடுத்த பொதுக்குழுவில் தலைமைக் கழக தேர்தலை அறிவித்து வாக்குப்பதிவு நடத்தலாம். யாருக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்’ என்று சொன்னார். அதோடு பொதுக்குழு முடிந்ததும் காரில் ஏறச் சென்ற தந்தைக்கு உதவியாக அவரது கையை ஸ்டாலின் பிடிக்க, அவரது கையை உதறிவிட்டு கருணாநிதி சென்றுவிட்டாராம். அதோடு, ‘கட்சியை அவரையே நடத்திக்கச் சொல்லுங்க’ என்று மூத்த தலைவர்களிடம் கோபமாகச் சொன்னாராம். இது ஸ்டாலின் ஆதரவாளர்களை ரொம்பவே அப்செட் ஆக்கிவிட்டதாம்.’’

‘‘அடடா!’’

‘‘ஸ்டாலினும் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். இந்த வருத்தத்தில்தான் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கவில் லை என்கின்றனர் ஸ்டாலின் ஆதரவாளர்கள்.’’

‘‘அப்படியா!’’

‘‘பொதுக்குழு முடிந்ததும் ஸ்டாலின் ஆதரவாளர்கள் யாரும் தாக்கிவிடக் கூடாது என்று வீரபாண்டியாரை தனது காரிலேயே ஏற்றிச் சென்றிருக்கிறார் கருணாநிதி. அப்போது தனக்கு நேர்ந்த அவமானத்தைப்பற்றி தலைவரிடம் நா தழுதழுக்கப் பேசிய வீரபாண்டியார், ‘நான் எத்தனையோ சவால்களை கட்சிக்காக எதிர்கொண்டவன். அப்படிப்பட்ட என்னை உங்கள் முன்னிலையிலேயே அவமானப்படுத்திவிட்டார்கள். இனியும் நான் மாவட்டச் செயலாளர் பதவியில் தொடரத்தான் வேண்டுமா? நான் ராஜினாமா செய்கிறேன்.’ என்று கசப்போடு சொன்னாராம்..’’

‘‘என்ன சொன்னாராம் கருணாநிதி?’’

‘‘‘ராஜினாமானு நீயே சொல்லிட்டா ரெண்டு பேரும் சேர்ந்தே ராஜினாமா பண்ணிடுவோம்’னு சொன்னாராம்... ஆனால் இது வீரபாண்டியாரை சமாதானம் செய்வதற்குச் சொன்னதாகவே கட்சியினர் சொல்கிறார்கள். ஏற்கெனவே வைகோ வெளியேறிய சமயத்தில் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று கருணாநிதி சொன்னார். அதைத் தொடர்ந்து கட்சியினர் அவரை வற்புறுத்தினர். வைகோவை வெளியேற்ற அவர்கள் ஒப்புக்கொண்டதும், அறிவிப்பை வாபஸ் பெற்றார். அதேபோல தினகரன் பத்திரிகை எரிப்புச் சம்பவம் நடந்த போதும் இது போன்ற அறிவிப்பை சட்டசபையில் வெளியிட்டார். எதிர்க்கட்சித் தலைவர்களும், கட்சித் தலைவர்களும் அவரை சமாதானப்படுத்த, ‘நான் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டும்’ என்ற உறுதியைப் பெற்றுக்கொண்டார். அதேபோல இப்போது வீரபாண்டியாரை சமாதானப்படுத்தவே இவ்வாறு சொன் னதாகச் சொல்கிறார்கள்’’ என்ற வம்பானந்தா, சங்கரன்கோவில் இடைத்தேர்தல் குறித்து தி.மு.க.வில் நடந்த விஷயங்களுக்குள் போனார்.

‘‘பொதுக்குழுவுக்கு அடுத்த நாள் நெல்லை நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கருணாநிதி, அன்பழகன், அழகிரி, மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். கூட்டத்தின்போது கானாவைக் காய்ச்சி எடுத்துவிட்டாராம் அழகிரி. ‘இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் போட்டி போட்டு களத்தில் இறங்கிவிட்டார்கள். மாவட்டச் செயலாளர் என்ற முறையில் நாம என்ன செய்யப்போகிறோம்? இதுபற்றி உங்க மாவட்டத்தில் என்ன நடந்தாலும் எனக்கு நீங்க சொல்றது இல்லை. மாலைராஜா கட்சியில் இருந்து விலகியதைக்கூட நீங்க என்கிட்ட சொல்லவே இல்லை. உங்களுக்குள் என்ன பிரச்னை? நான் பேசி தீர்த்திருப்பேனே?’னு வெடித்தாராம்.’’

“அடடே!’’

“கருப்பசாமி பாண்டியன், மாலைராஜா குறித்த குற்றச்சாட்டுக்கு மட்டும் ‘அப்ப நான் ஜெயிலில் இருந்தேன்’ என்று சொன்னாராம். ‘நான் ஜெயிலுக்கு வந்து உங்களைப் பார் த்தேன்ல... அப்ப சொல்லியிருக்கலாமே?’ என்று பதிலுக்கு கடிந்தாராம். அப்போது பேராசிரியர் குறுக்கிட்டு, ‘தென்மண்டல பிரச்னைகளை முதல்ல, கட்சித் தலைமைக்கு சொல்றீங்களோ இல்லையோ அழகிரிகிட்ட சொல்லுங்க’ என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்தாராம். இக்கூட்டத்தில் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது என முடிவெடுத்து பிப்ரவரி 13-ம் தேதிக்குள் விருப்ப மனுவை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எப்படியும் இந்தத் தேர்தலில் தி.மு.க. ஜெயிக்க வேண்டும் என அழகிரி கங்கணம் கட்டியிருக்கிறாராம்.’’

-குமுதம் ரிபோர்ட்டர்

குண்டம்மா அல்லது ஆமை இறந்தால் மட்டுமே டமிழ் நாட்டில் ஒரு விடிவு பிறக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரைக்கும் கனிமொழிக்கு அந்த தகுதியிருக்குது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப் பொறுத்த வரைக்கும் கனிமொழிக்கு அந்த தகுதியிருக்குது

கொள்ளை அடிக்கிற தகுதியா??

:lol: :lol: :lol: :lol:

கொள்ளை அடிக்கிற தகுதியா??

:lol: :lol: :lol: :lol:

தகுதி இருந்தால் ஆக முடியாது. அது இல்லாட்டில் தான் தமிழ் நாட்டில் ஆக முடியும்.

கனிமொழிக்கு 2 கவணராமே உண்மையா? அப்படி என்றால் அப்பாவின் பெயரை காப்பாத்திவிட்டார். :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகுதி இருந்தால் ஆக முடியாது. அது இல்லாட்டில் தான் தமிழ் நாட்டில் ஆக முடியும்.

கனிமொழிக்கு 2 கவணராமே உண்மையா? அப்படி என்றால் அப்பாவின் பெயரை காப்பாத்திவிட்டார். :D :D

ஏன் கருனா நிதிக்கும் இரண்டு அப்பாவா?

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன்புவரை

நான் மிகவும் மதிப்பு வைத்திருந்த ஒருவர் கனிமொழி அவர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன்புவரை

நான் மிகவும் மதிப்பு வைத்திருந்த ஒருவர் கனிமொழி அவர்கள்.

இந்த கனிமொழியின் அரசியல் பிரவேசம் ஈழ தமிழ் அனுதாபி என்ற வகையிலேயே இருந்தது அதன்பின்பு ஈழத்தமிழினம் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்ட போது அமைதியாக இருந்து கருவறுத்தவர் இந்த கனிமொழி என்பது அனைவரும் அறிந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.