Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துருப்பிடித்த துப்பாக்கியின்... முதல் வேட்டு!!!

Featured Replies

che_guevara_gun_400_090119.jpg

நிகழ்காலம்,எதிர்காலம் என எல்லாமே...

நமக்கு... இறந்தகாலமாய்த்தான் இருந்தது!

ஆறுதலுக்காய் ஆதரிக்க யாரும் அருகிருக்கவில்லை!

அரவணைக்கக் கூட ... தம் அனுகூலம் பார்த்தார்கள்!!

அனாதை நாய்களைவிட... அநியாயமாய் அழிந்தோம் நாம்!!

எங்களுக்காய் குரல்கொடுக்க யாருமில்லையே!? என்ற...

ஏக்கத்தவிப்பின் துர்ப்பாக்கிய முடிவாய்த்தான்,

துப்பாக்கியையும் சுமையாய்ச் சுமந்தோம்!!!

துப்பாக்கி வேட்டுக்கள் எமைக் கொன்றுபோட்டபோதெல்லாம்...

அதுக்கான அதே சத்தத்துடன் அடங்கின பல பொழுதுகள்!!!

"ஆயுதம்" என்பதும் தற்காத்துக்கொள்ளவென காத்துக்கிடந்த காலம்போய்,

பேராயுதங்கள் போராயுதத்தினால்... நம்மைத் தின்றபோது...

உயிராயுதங்களும் உணர்வோடு மெளனித்துப் போயின போல்!?

கரிகாலன் தாங்கிய நம் ஆயுதத்தை... காலன் தின்ற சரிதத்தை,

காலங்காலமாய் கருத்தாய் சுமந்தால்... சிவந்தமண் சிரிக்கும் ஒருநாள்!!!

மெளனமாகிப்போன துப்பாக்கிகள்........ ஊமையாகிப் போய்விடவில்லை!

விழ விழ தொடர்ந்து அடித்தால் ....... யாருக்கும் கோபம்வரும்!!!

"இயலாமை" என்றோன்று.... எத்தனை நாளைக்கு எனைத் தடுக்கும்???

அத்துமீறலும் அநியாயமும் நியாயப்படுத்தும் நிலமொன்றில்...

என்னைக் கொஞ்சம்...... சுதந்திரமாகப் பேச விடுங்கள் !!!

மெளனித்துப்போன நான்... ஊமையில்லை!

சில வருடங்களாய்... துரு வடித்து அழுகின்றேன்!!

வன்முறையும் பயங்கரவாதமும் எனக்கு வெகுதூரம்...!

என் இனத்தின் விடியல் மட்டும்.... என் கனவில் தினமும்!! - ஆனால்,

நான் பேச... என் கனவில்கூட அனுமதியில்லையாம் எனக்கு!!!

எம் குறியென்பது இலட்சியம் மட்டுமேயன்றி,

குறிதவறிய குறிகளுக்கானதாய் இருக்காது இம்முறையும்!

வழிதவறிய பாதையை இன்னொருமுறையும் எடுக்கோம்!!

நெறிமுறை தவறாத வழியோடு... பட்டனுபவம் படிப்பித்த பாடத்தோடு,

பாதம் பதிக்க... பாதகர் இல்லாத பாதை வேண்டும்!!!

என்னையும் அடிமையாக்கிய என் இனமே...!

என்னைக் கொஞ்சம் பேச விடு!!

மூச்சுப்போனபோது பொறுத்த நீ... மூச்சுத்திணறும்போது,

கொஞ்சம் பொறுத்துக் கொள்!!

என் மூச்சுப் பேச்சுக்கும் கொஞ்சம் வாய்ப்புக்கொடு!!!

நேரகாலம் வரும்போது... என் வார்த்தைகள் காத்திருக்காது!

நேரடியாய் நெற்றிப்பொட்டை தேடிவரலாம்!!

பேரிடியாய்த்தான் இருக்கும் இந்த...

துருப்பிடித்த துப்பாக்கியின் முதல்வேட்டு!!!

மீண்டும் வெடிப்பது... மீண்டும் உங்களுக்காகத்தான்!

வெடிக்கும் அதிர்வில் துருவெல்லாம் கழன்றுவிழ...

மீண்டுமொருமுறை, முதன்முதலாய் ஒரு தோட்டா...

மாண்டு போனவரின் மானங்காக்கவென ...

வேகமாய் பயணிக்கும் பாதையில்,

எதுவரினும் துளைக்கும் என் வார்த்தைகள் - கவனம் !!!

துருப்பிடித்த துப்பாக்கிகளின் வேட்டு வெளிச்சத்தில்தான்...

எம் வாழ்வும் விடியும் என்ற நிலை வரும்!!!

துருப்பிடித்த துப்பாக்கியின் இழுவிசை மட்டுமல்ல...

எம் விடியலும் எம் கைவிரல் நுனியில்தான்!!!

இழுக்கும்போது அதிரும் - கவனம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

மெளனமாகிப்போன துப்பாக்கிகள்........ ஊமையாகிப் போய்விடவில்லை!

விழ விழ தொடர்ந்து அடித்தால் ....... யாருக்கும் கோபம்வரும்!!!

"இயலாமை" என்றோன்று.... எத்தனை நாளைக்கு எனைத் தடுக்கும்???

அத்துமீறலும் அநியாயமும் நியாயப்படுத்தும் நிலமொன்றில்...

என்னைக் கொஞ்சம்...... சுதந்திரமாகப் பேச விடுங்கள் !!!

நன்றி கவிதைக்கு

தொடரட்டும் தங்கள் பணி

நிமிர்க எம் இனம்

< மெளனமாகிப்போன துப்பாக்கிகள்........ ஊமையாகிப் போய்விடவில்லை!

விழ விழ தொடர்ந்து அடித்தால் ....... யாருக்கும் கோபம்வரும்!!!

"இயலாமை" என்றோன்று.... எத்தனை நாளைக்கு எனைத் தடுக்கும்???

அத்துமீறலும் அநியாயமும் நியாயப்படுத்தும் நிலமொன்றில்...

என்னைக் கொஞ்சம்...... சுதந்திரமாகப் பேச விடுங்கள் !!! >

< இழுக்கும்போது அதிரும் - கவனம்!!! >

மனதின் வலிகள் வாயில் கவியாய்.............. , தொடருங்கள் கவிதை :(:( 1 .

எமது இனத்தின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாக கவிதையாக வடித்திருக்கிறீர்கள். வேதனைகளின் வேட்டுக்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் தெறிக்கிறது. இன் நிலை மாறும் என்று நாம் நம்புவோம் . விடிந்திடும் விரைவில் என்றே நம்பிக்கை கொள்வோம் . அருமையான வரிகளிற்கு எனது வாழ்த்துக்களும், நன்றிகளும்.....என்றென்றும்...

  • கருத்துக்கள உறவுகள்

<img />

மெளனமாகிப்போன துப்பாக்கிகள்........ ஊமையாகிப் போய்விடவில்லை!

விழ விழ தொடர்ந்து அடித்தால் ....... யாருக்கும் கோபம்வரும்!!!

"இயலாமை" என்றோன்று.... எத்தனை நாளைக்கு எனைத் தடுக்கும்???

அத்துமீறலும்  அநியாயமும்  நியாயப்படுத்தும் நிலமொன்றில்...

என்னைக் கொஞ்சம்...... சுதந்திரமாகப் பேச விடுங்கள் !!!

மெளனித்துப்போன நான்...  ஊமையில்லை!

சில வருடங்களாய்... துரு வடித்து அழுகின்றேன்!!

வன்முறையும் பயங்கரவாதமும் எனக்கு வெகுதூரம்...!

என்  இனத்தின் விடியல் மட்டும்....    என் கனவில் தினமும்!!  - ஆனால்,

நான் பேச... என் கனவில்கூட அனுமதியில்லையாம் எனக்கு!!!

சிலர் சுதந்திரமாகப் பேச அனுமதிக்கப்பட்டால் பலர் பேசமுடியாமற் போய்விடும்.கவிதைக்கு நன்றி

  • தொடங்கியவர்

விசுகு:

நன்றி கவிதைக்கு

தொடரட்டும் தங்கள் பணி

நிமிர்க எம் இனம்

மிகவும் நன்றி விசுகண்ணா!

என்னால் இயன்றவரைக்கும்..... என் கடமையை என் தாய்மண்ணிற்கும் என் இனத்திற்கும் செய்தே தீருவேன்!

ஏனெனில்.........

"நமது எதிர்கால சந்ததிக்கு, நாம் தலை குனிந்து பதில் சொல்லும் நிலைமை வந்து விடக்கூடாது"

( இந்த வரிகளை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கா..? ) :)

Edited by கவிதை

உண்மைதான் ஒரு இனத்தின் விடுதலை தான் பல பிரச்சனைக்கு தீர்வு. எல்லோரும் எம் இனம் விடுதலை பெற உழைப்போம்.

வாழ்த்துக்கள் கவிதை வாழ்த்துக்கள் கவிதைக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நேரகாலம் வரும்போது... என் வார்த்தைகள் காத்திருக்காது!

நேரடியாய் நெற்றிப்பொட்டை தேடிவரலாம்!!

பேரிடியாய்த்தான் இருக்கும் இந்த...

துருப்பிடித்த துப்பாக்கியின் முதல்வேட்டு!!!

மீண்டும் வெடிப்பது... மீண்டும் உங்களுக்காகத்தான்!

துப்பாக்கிகள் துருப்பிடிக்கலாம், கவிதை!

ஆயினும் அதைக் கையாளும் விரல்கள், நடுக்கம் காணாதவரை, துப்பாக்கியின் குறி தவறாது!

விரல்களில் நடுக்கத்தை ஏற்படுத்த, ஆயிரம் சக்திகள்!

அவற்றை வெல்லும் நாளே, நாம் எம்மையும், எதிரிகளையும் வெல்லும் நாளாக அமையும்!!!

தொடருங்கள், உங்கள் படைப்புக்களை!!!>>

  • தொடங்கியவர்

< இழுக்கும்போது அதிரும் - கவனம்!!! >

மனதின் வலிகள் வாயில் கவியாய்.............. , தொடருங்கள் கவிதை :(:( 1 .

மனதில் வலியாய் உணர்வதுதான் வார்த்தையில் வரியாய் வருகின்றது!

மிக்க நன்றி கோ! :)

  • தொடங்கியவர்

எமது இனத்தின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாக கவிதையாக வடித்திருக்கிறீர்கள். வேதனைகளின் வேட்டுக்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் தெறிக்கிறது. இன் நிலை மாறும் என்று நாம் நம்புவோம் . விடிந்திடும் விரைவில் என்றே நம்பிக்கை கொள்வோம் . அருமையான வரிகளிற்கு எனது வாழ்த்துக்களும், நன்றிகளும்.....என்றென்றும்...

எமது இனத்தின் நிலைப்பாட்டினை வெறும் வரிகளில் தெறிக்கவிட்டால் போதாது கல்கி!

நாங்கள் செய்யவேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன. ஆனால் இன்னும் நாம்.... வெறும் எழுத்துக்களில் தட்டிக்கொண்டிருக்கும் "தடவிகள்"!

ஏதாவது ஒரு படி முன்னேற.... 'இந்த நிமிசம் வரைக்கும் யாருமே யோசிக்கவில்லை என்ற ஒரு விடயம்' ............. கலங்கவைக்கின்றது! :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது இனத்தின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாக கவிதையாக வடித்திருக்கிறீர்கள். வேதனைகளின் வேட்டுக்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் தெறிக்கிறது. இன் நிலை மாறும் என்று நாம் நம்புவோம் . விடிந்திடும் விரைவில் என்றே நம்பிக்கை கொள்வோம் . அருமையான வரிகளிற்கு எனது வாழ்த்துக்களும், நன்றிகளும்.....என்றென்றும்...

  • தொடங்கியவர்

சிலர் சுதந்திரமாகப் பேச அனுமதிக்கப்பட்டால் பலர் பேசமுடியாமற் போய்விடும்.கவிதைக்கு நன்றி

ஒரு தமிழன் பேசினால்தான் தப்பு.அதையே எல்லாத் தமிழனும் உரக்கப் பேசினால்.........? ஆனால், அதற்கு தயார்படுத்தப்பட்ட நிலையில்கூட தமிழர்கள் இல்லை என்பதனை...ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்! உண்மையைச் சொல்லப் போனால், சுயநலன்களோடு மட்டும் கட்டிப்பிடித்து உறவாடும் தமிழருக்கு ஈனமான உணர்வுகள் வருமேயன்றி இனவுணர்வுகள் எங்கே வரப்போகின்றது?!!!

சுதந்திரமாக ஒருத்தர் பேசினாலும் எடுபடாத காலம் இது.

ஒரு துப்பாக்கி முனையில்....... அவை ஊமையாக்கப்படும்.

ஆனால், தமிழரின் ஒட்டுமொத்தக் குரலின் முன்னால்.............

எத்தனை துப்பாக்கிகள் குறிபார்க்கும்? எத்தனை துப்பாக்கிகள் துணிந்து தம் வெடிவாய் பேசும்??

புரட்சி என்பது........

ஒன்றில் ஆரம்பித்து... நூறாகி, ஆயிரமாகி, லட்சமாகும்....!!!

அதுவரை........ காத்திருப்பதும், அதை இன்றே அடைவதும் உங்கள் கைகளில்தான்!

தங்களின் காத்திரமான கருத்துக்கு மிக்க நன்றி வாத்தியார்! :)

  • தொடங்கியவர்

உண்மைதான் ஒரு இனத்தின் விடுதலை தான் பல பிரச்சனைக்கு தீர்வு. எல்லோரும் எம் இனம் விடுதலை பெற உழைப்போம்.

வாழ்த்துக்கள் கவிதை வாழ்த்துக்கள் கவிதைக்கு

ஒரு இனத்தின் விடுதலை என்பதில் மட்டுமில்லை... அந்த இனத்தின் வளர்ச்சியிலும் பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

சிலவேளைகளில்...... அந்த அபரிதமான வளர்ச்சியே அதற்கான விடுதலையைப் பெற்றுக் கொடுக்கலாம்.

அந்த வகையில் ஒவ்வொரு படியினையும் முன்னேற்றப்பாதை நோக்கியதாக வைக்கவேண்டியது எமது கடமையாக இருக்கின்றது.

அதை நேர்த்தியாகப் பண்ணின்....... விடுதலை வெகு தூரத்தில் இல்லை!

மிக்க நன்றி யாழன்பு! :)

  • தொடங்கியவர்

துப்பாக்கிகள் துருப்பிடிக்கலாம், கவிதை!

ஆயினும் அதைக் கையாளும் விரல்கள், நடுக்கம் காணாதவரை, துப்பாக்கியின் குறி தவறாது!

விரல்களில் நடுக்கத்தை ஏற்படுத்த, ஆயிரம் சக்திகள்!

அவற்றை வெல்லும் நாளே, நாம் எம்மையும், எதிரிகளையும் வெல்லும் நாளாக அமையும்!!!

தொடருங்கள், உங்கள் படைப்புக்களை!!!>>

எத்தனை கோடி சக்திகள் வந்தாலும்... அந்த சக்திகளால் எத்தனை நாளைக்கு தமிழரை அடக்கியாளமுடியும்???

இத்தனை தியாகங்களை செய்த பின்னும்... ஒரு இனம் இழிநிலை என்பதனை தானாகவே தேடிச்செல்லுமென்றால்........

அதை விடக் கேவலமான ஒன்று வேறெதுவும் இல்லை.

"நான் தமிழன்" என்று சொல்வதற்கு ஒவ்வொரு தமிழனும் வெட்கப்படவேண்டிய இழிநிலை ஏற்படும்! :(

தன்மானமுள்ள தமிழராய் தலைநிமிர்ந்து நிற்க..... நாம் மீண்டும் எழவேண்டியது அவசியமானது! அது காலத்தின் கட்டாயமும் கூட!

தங்களின் கருத்துக்கு.... மிக்க நன்றி புங்கையூரன்! :)

  • தொடங்கியவர்

நன்றி ஜீவா!

உங்களுடைய "கையெழுத்து வாசகம்" எனக்கு பிடித்திருக்கின்றது.

பழி சொல்லுற உலகத்துக்கு வழி சொல்லத்தெரியாது...

ஏனெனில்,

வழிதெரிந்த இனத்திற்கு,,, பழிதீர்க்கத் தெரியாது!

பழிதீர்த்த பாதகர்க்கு,,, பதில் சொல்ல இயலாது!

விழி மூடிய மறவர்கள்... வழிகூடத் தெரியாது!

குழி தோண்டி புதைத்த,,, மொழி மானம் அறியாது!

Edited by கவிதை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.