Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் ஒருவர் சம்பந்தப்பட்டு கனடாவில் இடம்பெற்ற ஒரு விபத்தும் அதன் பின்னான இனவாத / நிறவெறி கருத்துகளும்

Featured Replies

கீழே உள்ள வீடியோவில் கனடாவின் நெடுஞ்சாலையில் விபத்து ஒன்று நடக்கின்றது. அதி வேக நெடுஞ்சாலையில் தமிழர் ஓட்டி வந்த கார் ஒன்று திடீரென பின்னால் உருண்டு முன்னால் வந்த காரை இடிக்கின்றது. வந்த தமிழர் இது முன்னால் வந்த காரால் ஏற்படுத்தப்பட்ட விபத்து என்று சாதிக்க முயல்கின்றார். ஆனால் இந்த சம்பவம் முழுதும் முன்னால் வந்த விபத்துக்குள்ளான காரில் உள்ள வீடியோ கமரா மூலம் எடுக்கப்படுகின்றது. அதன் மூலம் தவறு தமிழரில்தான் உள்ளது என்று இலகுவாக இனம் காண முடிகின்றது. இது இன்ஸூரன்ஸ் பணம் பெறுவதற்காக வேண்டும் என்றே (அந்த தமிழரால்) ஏற்படுத்தப்பட்ட விபத்தாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இந்த வீடியோவை விபத்துக்குள்ளானவரின் காரது உரிமையாளர் யூரியூபில் தரவேற்றம் செய்ய, கடும் இனவாதக் கருத்துகள் மழையாக பொழியப்படுகின்றன. இந்த செய்தியை இன்று டொரன்டோ ஸ்ராரும் வெளியிட, மேலும் பல நூற்றுக்கணக்கானோர் பங்கெடுத்து விவாதப் பொருளாக்கியுள்ளனர்

என் அவதானங்கள் / முடிவுகள்

1. இந்த விபத்து வேண்டும் என்றே செய்யப்பட்ட விபத்து. ஒரு அதி வேக நெடுஞ்சாலையில் பின்னால் ஒரு கார் திடீரென உருள சாத்தியம் இல்லை

2. இப்படியான fake accidents மூலம் பணம் சம்பாதிப்பது இங்கு அடிக்கடி நடக்கும் ஒன்று.

3. விபத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படும் தமிழருக்கு கடந்த 4 வருடங்களில் 26 விதி மீறல் குற்றச்சாட்டுகள் உள்ளனவாம்

Toronto Star இன் செய்தி

YouTube video of minor accident on 401 sparks onslaught of threats, racism

Kate Allen and Zoe McKnight

STAFF REPORTERS

Once upon a time, angry fender-bender victims who wanted to allege the other guy was an idiot or a crook were limited to an audience of family and friends.

But as two GTA motorists are finding out, all it takes in 2012 to transform a minor car accident into a reputation-threatening debacle is a dashboard camera, YouTube and the so-called wisdom of crowds.

Last Thursday, Ajax resident Raguruban Yogarajah and Mississauga student Herman Sham were involved in a fender-bender on the 401. Neither dispute that while they were stopped in cramped rush-hour traffic, Yogarajah’s black Honda Acura rolled backwards and bumped Sham’s Subaru.

Sham believes Yogarajah was trying to scam him, and 130,000 YouTube viewers largely agree.

But Yogarajah says it was a genuine mistake. He’s worried for his family’s safety since venomous — and sometimes racist — commenters started posting his personal information online. “I work two jobs. I don’t need to go scamming for $500 to live my life,” says Yogarajah.

Sham, 24, a photography student, captured Thursday’s fender-bender on a $40 dashboard camera.

The next day, he uploaded the footage to YouTube with the title “The reason why you need a dash camera (scam foiled).” In the video, he added word bubbles alleging Yogarajah demanded $500 on the spot to pay for the damage.

“Please be aware of these fake accident(s),” Sham wrote online.

Viewers — more than 125,000 in the last 36 hours — have added a running commentary of vitriol, threats and racism.

One called Yogarajah a “scumbag” and posted his home address in Ajax. “Don’t underestimate technology and the power of the internet,” the commenter wrote.

Yogarajah is worried and scared.

He says the first thing he told Sham was, “Did you bump into me or did I bump into you?” His car is a manual, and he says it probably rolled backward when he distractedly took his foot off the brake.

The video doesn’t seem to show Yogarajah’s reverse lights come on. He points to this as proof he didn’t reverse, while YouTube commenters use it as proof he disconnected them and his tail lights in advance. In the sunlight’s glare, it’s impossible to tell if either was working.

Yogarajah doesn’t deny he is at fault for the collision. But he got frustrated at the scene because, he says, Sham insisted Yogarajah had reversed on purpose. So Yogarajah called police himself (a move Sham admits was “weird”).

Yogarajah, 26, works at a bank during the week and as a telecommunications sales rep on the weekends, helping support his extended family. He says he saved up for three years to buy his car and wouldn’t think of damaging it for $500.

He does, in fact, have a lengthy rap sheet of Highway Traffic Act offences — 26 in four years — but most are for licence plate issues and speeding, and he has no criminal history. He believes police stop him more frequently than others because they are suspicious of a young man of colour driving a nice car.

The YouTube video clearly shows Yogarajah’s licence plate. Since it was posted, web denizens have posted not only his address but his sister’s, where she lives with her three children.

He says he’s spoken to the Toronto police and the RCMP on six occasions about the online threats, but all have said they have no jurisdiction over YouTube and some were dismissive of his safety concerns.

Sham says he wasn’t trying to ruin Yogarajah’s reputation. He only wanted other drivers to be aware that dashboard cameras can be useful for insurance purposes.

He says he believes now that Yogarajah may have accidentally put the car in neutral, and not intentionally reversed, though he still maintains Yogarajah asked for money. “I really don’t want to screw him, or anything.”

Sham’s car damage is minor.

“It would have been solved if he just gave me a chance to talk to him,” says Yogarajah.

“It’s a minor scratch. All this trouble for no reason.”

http://www.wheels.ca/columns/article/802748

  • Replies 50
  • Views 4.6k
  • Created
  • Last Reply

சரி பிழை யாரில் உள்ளது என்பதை காவல்துறையும் காப்புறுதி நிறுவனங்களும் முடிவுசெய்யட்டும்.

இதில் இனவாத கருத்துக்களை இடமே இல்லை. யோகராசாவை அவரின் பழைய பதிவுகளை வைத்து அவமதிப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

விபத்து ஏற்பட்டால் அதன் தாக்கத்தை வைத்தே

யாருடைய தவறு எனக் கண்டுபிடித்துவிடலாமே.

முன்னோக்கிச் செல்ல வேண்டிய வாகனம் பின்னோக்கி வந்ததால்

முன்னோக்கிப் பின்னாலே வந்த வாகனத்துடன் மோதியது.

  • கருத்துக்கள உறவுகள்

தப்புச்செய்தவர் எவராயினும் தப்பு தப்புத்தான்

ஆனால் அதற்கான குரல்களில் வளர்ச்சியடைந்த பல இனங்களைக்கொண்ட நாடுகளில் கூட இதுபோன்ற இனவாதக்கருத்துக்கள் பறந்துவருகின்றன என்பது எம் மண்ணையும் அதன் தேவையையும் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துவதாகவே அமைகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சரி பிழை யாரில் உள்ளது என்பதை காவல்துறையும் காப்புறுதி நிறுவனங்களும் முடிவுசெய்யட்டும்.

சாதாரணமாக சட்டப்படி முன்னால்செல்லும் வாகனத்துக்கு பின்னால் செல்லும் வாகனக்காறர்தான் இடைவெளி எடுத்துச்செல்லவேண்டும். அந்த இடைவெளியின் அளவு காரின் வேகத்துக்கு அமைய மாறுபடும். எனவே இதில் பின்னால் சென்றவரே பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது.(சாட்சி இல்லாதவிடத்து)

வாகன விபத்தை பகுப்பாய்வு செய்யகூடிய நிபுணர்களே இந்த விபத்தை பலகோணங்களில் பார்த்து தவறை தீர்மானிக்கலாம். வீடியோவை பதிவு செய்பவர் அதை தனிப்பட சான்றாக வைத்திருக்காமல் onlineஇல் போட்டு அவரசப்பட்டு உள்ளார். onlineஇல் வீடியோ ஒன்றுக்கு கிடைக்கக்கூடிய பாராட்டை காப்புறுதி விடயத்தில் தனக்கு சாதகமான விடயமாக அவர் ஒருபோதும் கொள்ளமுடியாது. பின்னால் சென்றவர் முன்னால் சென்ற வாகனத்திற்கு ஏன் மிக அருகாக சென்றார், விபத்து ஏதும் நிகழலாம் என அறிந்தும் அதை தவிர்ப்பதற்காக மாற்று வழிகளை ஏன் கையாளவில்லை இவ்வாறு பலவிதமாக பார்க்கப்படலாம். பின்னால் சென்ற வாகனம் வீடியோ பதிவு உள்ளது எனும் துணிவில் தானாக விரும்பி ஏற்றுக்கொண்ட விபத்துப்போல் சந்தேகிக்க வேண்டி உள்ளது. வயதில் இளையவர் ஆகையால் பின் விளைவுகள் பற்றி சிந்திக்காமல் இங்கு அவர் அவசரப்பட்டு உள்ளார் என்றே தோன்றுகின்றது. பகுப்பாய்வின் முடிவில் இதே வீடியோ அவருக்கு எதிராகவும்/அவருக்கு எதிரான சாட்சியாகவும் மாறக்கூடும். அதேவேளை ஹைவேயில் வாகனங்கள் ரிவர்ஸ் செய்வது குற்றம்/சட்டவிரோதமானது ஆகும்.

  • தொடங்கியவர்

சாதாரணமாக சட்டப்படி முன்னால்செல்லும் வாகனத்துக்கு பின்னால் செல்லும் வாகனக்காறர்தான் இடைவெளி எடுத்துச்செல்லவேண்டும். அந்த இடைவெளியின் அளவு காரின் வேகத்துக்கு அமைய மாறுபடும். எனவே இதில் பின்னால் சென்றவரே பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது.(சாட்சி இல்லாதவிடத்து)

வீடியோ சாட்சியின் படி, . பிரேக் அடித்து நின்ற வாகனத்தை பின்னால் போன வாகனம் இடித்து இருந்தால், முன் நிற்கும் வாகனத்தின் பிரேக் விளக்குகள் சிவப்பு நிறத்தில் எரிந்து இருக்கும். அதே நேரம், முன்னால் வந்த வாகனம் reverse இல் வந்து இருந்தால் reverse விளக்குகள் எரிந்து இருக்கும். ஆனால் வீடியோவில் இவை இரண்டும் எரியவில்லை.

இதன் சேதம் 500 டொலரை விடக் குறைவு என்பதால், பொலிஸ் இதை ஒரு வழக்காக கொள்ளாது. ஆனால் இன்சூரன்ஸ் கம்பெனி இதனை பின்னால் வந்த சாரதியில் தவறு என்று எடுத்து புள்ளிகளை குறைத்து (demerit points) அடுத்த தவணை காப்புறுதியை புதுப்பிக்கும் போது காப்புறுதி பணத்தை அதிகளவுக் அதிகரிக்கும். வீடியோ சாட்சியம் இருந்ததல், பின்னால் வந்த வாகனத்தின் சாரதி தப்பித்து விட்டார் இந்த பிரச்சனையில் இருந்து

ஆனால், பாதிக்கப்படபோவது யோகராஜா தான். யுரியூபில் அவரது விலாசத்தை வேறு போட்டுள்ளார்கள்

யோகராசா அவர்கள் நல்ல ஒரு சட்டத்தரணியை அணுகி மற்றையவர் இவருடைய தனிப்பட்ட தகவல்களை இணையத்தளத்தில் அனுமதியின்றி தரவேற்றம் செய்தமைக்காக 'நட்ட ஈடு' கேட்கவேண்டும். இவ்வாறு செய்தமையின்

காரணமாக யோகராசாவுக்கு பயமுறுத்தல், நித்திரை கொள்ள பிரச்சனை, வேலையில் பிரச்சனை என அவருக்கு நிகழக்கூடிய பல பாதிப்புக்களுக்கு நட்டஈடு பெறவேண்டும்.

இப்படியான ஐடியாக்களும் கொடுப்பீர்களா நீங்கள்?

சொல்லவே இல்லையே....? :lol::icon_idea: :icon_idea:

இப்படியான ஐடியாக்களும் கொடுப்பீர்களா நீங்கள்?

சொல்லவே இல்லையே....? :lol::icon_idea: :icon_idea:

இப்படி செய்வதெல்லாம் இங்கே சர்வ சாதாரணம் :D

(இன்னும் இருக்கு .. ஐடியாக்கள் :icon_idea: )

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி செய்வதெல்லாம் இங்கே சர்வ சாதாரணம் :D

(இன்னும் இருக்கு .. ஐடியாக்கள் :icon_idea: )

இந்தப்பிரச்சினை இந்தளவுக்கு வந்ததே அங்கு நடக்கும் இது போன்ற சர்வ சாதாரணங்களினால் தானே..??? :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

வேகப் பாதையில் கார் பின்நோக்கி வருவதற்குரிய விளக்குகள் எரியவில்லை.பிரேக் விளக்குகளும்; எரியவில்லை.இந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ருந்த கார் ஒன்று ஏற்றத்தில் நிற்கும் பொழுது நியூட்ரலில் கியர் இருந்தால் பின் நோக்கி உருளச் சந்தர்ப்பம் இருந்திருக்கும்.(ஓட்டோமற்றிக் எப்படி என்று தெரியவில்லை.)ஆனால் வேகப்பாதையில் ஏற்றத்திலும் பின்நோக்கி உருள பெரிதாகச் சந்தர்ப்பம் இல்லை.தமிழரது கார் இருபக்கமும் செல்லும் கார்களை விட மெதுவாகச் சென்றிருந்தால் தொடர்பு வேகம் காரணமாக (பௌதிகம்)பின் நோக்கிச் செல்வது போலத் தோற்றமளிக்கும். சரியான சாட்சியம் இல்லாதவிடத்து தமிழருக்கே தீர்ப்பு சாதகமாக அமையச் சாத்தியமுள்ளது.காரணம் பின்னால் சென்றவர்

1.வேகமாகச் சென்றிருக்கலாம்.

2.குறைந்த இடைவெளியில் சென்றிருக்கலாம்.

3.போதிய அவதானத்துடன் செல்லவில்லை.

வீடியோ ஆதாரம் பெரிதாக எடுபடும் போல் தெரியவில்லை.

எனது யார் குற்றம் செய்தாலும் குற்றம் குற்றமே.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான ஐடியாக்களும் கொடுப்பீர்களா நீங்கள்?

சொல்லவே இல்லையே....? :lol::icon_idea: :icon_idea:

விசுகு, அகோதா சொல்வது பகிடியில்லை. நீங்கள் அமெரிக்க தொலைக்காட்சிகளில் போகும் "கொப்ஸ்" (cops) என்ற நிகழ்ச்சியைப் பார்த்தாலே தெரியும். உண்மையாகவே துரத்திப் பிடித்து சந்தேக நபர்களைக் கைது செய்யும் காட்சிகளைக் காட்டுவார்கள். அதில் கூட கைது செய்யப் படுபவரின் வாகன இலக்கத்தை மறைத்து விட்டுத் தான் காட்டுவார்கள். காரணம் இப்படி யூ ரியூப்பில் முகம் மறைத்துக் கொண்டு துவேஷம் கக்கும் பேர்வழிகளால் சந்தேக நபர் பாதிக்கப் படக் கூடாது என்பதேயாகும். வாகனம் பின்னால் வருகிறது என்பதும் நிரூபிக்கப் படவில்லை. அவர் எழுத்தில் குறிப்பிடும் சம்பாஷனை உண்மையாகவே பதிவாகவும் இல்லை. இந்த நிலையில் இது ஒருவரின் தனிப் பட்ட மதிப்பிற்கும் பாதுகாப்பிற்கும் குந்தகம் செய்யும் செயலாகத் தான் பார்க்க வேண்டும். பணத்திற்காக இல்லா விட்டாலும் இந்த விஷயத்தை யாரும் இனிச் செய்யாமலிருக்கவாவது யோகராசா ஒரு சட்டத்தரணியின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது என் கருத்து.

இந்தப்பிரச்சினை இந்தளவுக்கு வந்ததே அங்கு நடக்கும் இது போன்ற சர்வ சாதாரணங்களினால் தானே..??? :( :( :(

இது நல்ல கேள்வி.

நாங்கள் நேர்மையாக கடைசியில் ஏமாறும் நிலைமையும் உள்ளது, இப்படி எனக்குத்தெரிந்த பலர் ஏமாந்துள்ளனர்.

உதாரணத்திற்கு இங்கே பச்சை மாறி சிவப்பு விழ முதல் நீங்கள் இடப்புரம் திரும்பலாம். ஒரு வெள்ளை பெண்மணி அவ்வாறு தவறாக சிவப்பு முழுமையாக விழமுதல் வாகனத்தை எடுத்து எனது நண்பரின் காரை அடிக்க, அவ தனது பிழை என்று ஒத்துக்கொள்ள, பின்னர் வாகனத்தை ஓரமாக நகர்த்தி காவல்துறை வர, அவ இவர்தான் சிவப்பில் வந்தார் என 'பிளேட்டை' மாற்றிவிட, காவல்துறை அந்த பெண்ணை நம்பியது, நண்பரில் நிலை அந்தோ :(

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நான் நேர்மையைக்கடைப்பிடித்து 500,000 டொலர்களை எனது காப்புறுதிப்பணத்திலிருந்து இழந்திருக்கிறேன்...:(

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல கேள்வி.

நாங்கள் நேர்மையாக கடைசியில் ஏமாறும் நிலைமையும் உள்ளது, இப்படி எனக்குத்தெரிந்த பலர் ஏமாந்துள்ளனர்.

உதாரணத்திற்கு இங்கே பச்சை மாறி சிவப்பு விழ முதல் நீங்கள் இடப்புரம் திரும்பலாம். ஒரு வெள்ளை பெண்மணி அவ்வாறு தவறாக சிவப்பு முழுமையாக விழமுதல் வாகனத்தை எடுத்து எனது நண்பரின் காரை அடிக்க, அவ தனது பிழை என்று ஒத்துக்கொள்ள, பின்னர் வாகனத்தை ஓரமாக நகர்த்தி காவல்துறை வர, அவ இவர்தான் சிவப்பில் வந்தார் என 'பிளேட்டை' மாற்றிவிட, காவல்துறை அந்த பெண்ணை நம்பியது, நண்பரில் நிலை அந்தோ :(

பாதிக்கப்பட்டவர்களின் நேரடி வாக்குமூல விசாரணை அடிப்படையில்

வெள்ளைத் தோலின் வாக்குமூலத்திற்கு எதிராக கறுப்பர்களின்

வாக்குமூலம் எடுபடாது .

இதுவும் நிறவெறி தான்

பொதுவாக வாகன விபத்துக்களில் பாதிக்கப்படும்பொழுது காப்புதி நிறுவனங்கள் பணத்தை செலுத்தி விட்டு , பின்னர் மாதக்கொடுப்பனவை கூட்டி தமது இலாபத்தை சரி செய்துகொள்ளுவார்கள்.

இப்படி எம்மவரில் சிலரும் செய்யும் (வேணுமென்றே செய்யும் 'விபத்துக்கள்') எமது சமூகம் மீதும் சேறு பூசினாலும், இதனால் கொடுத்த இலாபம் அடைவார்கள் : தமிழரல்லாத சட்டத்தரணிகள், முறிவுகளுக்கு மருந்துபோடும் வைத்தியர்கள், வரிப்பணம் பெறும் பல தரப்பட்ட அரசுகள். இதனால் அரசும் தெரிந்து தெரியாதமாதிரி கண்ணை மூடி இருக்கின்றது :o

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நான் நேர்மையைக்கடைப்பிடித்து 500,000 டொலர்களை எனது காப்புறுதிப்பணத்திலிருந்து இழந்திருக்கிறேன்... :(

நல்ல பழக்கம்

இது நல்ல கேள்வி.

நாங்கள் நேர்மையாக கடைசியில் ஏமாறும் நிலைமையும் உள்ளது, இப்படி எனக்குத்தெரிந்த பலர் ஏமாந்துள்ளனர்.

உதாரணத்திற்கு இங்கே பச்சை மாறி சிவப்பு விழ முதல் நீங்கள் இடப்புரம் திரும்பலாம். ஒரு வெள்ளை பெண்மணி அவ்வாறு தவறாக சிவப்பு முழுமையாக விழமுதல் வாகனத்தை எடுத்து எனது நண்பரின் காரை அடிக்க, அவ தனது பிழை என்று ஒத்துக்கொள்ள, பின்னர் வாகனத்தை ஓரமாக நகர்த்தி காவல்துறை வர, அவ இவர்தான் சிவப்பில் வந்தார் என 'பிளேட்டை' மாற்றிவிட, காவல்துறை அந்த பெண்ணை நம்பியது, நண்பரில் நிலை அந்தோ :(

ஏமாறுதல் என்பதை விட விபரம் இன்மை என்று கூறலாம். வாகன சாரதிகள் தமது வாகனம், வீதி போக்குவரத்து, விதிமுறைகள், விபத்துக்கள், சட்டங்கள், நடைமுறை பிரச்சனைகள் இவை பற்றிய பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். வழமையில் ஒரு விபத்து ஏற்படும் போது சம்மந்தப்பட்ட வாகனங்களிற்கு சேதம் ஏற்பட்ட /அடிபட்ட இடத்தை, ஆழத்தை/தன்மையை, அத்துடன் வீதியின் அமைப்பு, அத்துடன் சம்மந்தப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் இவற்றை வைத்தே தவறு எங்கு ஏற்பட்டிருக்கலாம் / எவரது தவறு என்று கண்டறிய முடியும். காவல்துறையினருக்கு இதில் அதிக அனுபவம் காணப்படும். அவர்கள் ரிக்கட் கொடுப்பதற்கு முன்னர் சாரதி அனுமதி பத்திரத்தில் குறிப்பிட்டவர்கள் சம்மந்தப்பட்ட பழைய சம்பவங்களையும் பார்ப்பார்கள். விபத்தில் தவறுதலாக ரிக்கட் கொடுக்கப்பட்டால் அதை சலென்ச் பண்ணவும் முடியும். ஒருவர் இங்கு பேக்காட்டப்பட்டு உள்ளார் என்றால் அவருக்கு விபரங்கள் ஒன்றும் தெரியவில்லை/தகுந்த முறையில் பேசத் தெரியவில்லை/அந்த நேரத்தில் ஏற்படக்கூடிய உளவியல் அதிர்ச்சி இவை காரணமாக அமையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோவை பல தரம் பார்த்த பின்னர் ரகுறூபன் யோகராஜா தான் பிழை விட்டிருக்கிறார் எனப் புரிகிறது.

காரணங்கள்

1) பின்னால் நிற்கும் கார் அசையவில்லை. அத்துடன் வாகனம் இடிக்க முதல், முன்னை நிக்கும் கார் பினால் உருளுவதை எச்சரிக்க பின்னால் நிற்கும் கார் ஹோர்ன் அடிக்கிறது.

2) முன்னால் நிக்கும் காரின் பிரேக் விளக்குகள் எரியவில்லை. அவ்வாறு விளக்குகள் இல்லாத வாகனத்தை வீதியில் ஓட்டுவது அவுஸ் சட்டப் படி குற்றமாகும். அதாவது முன்னால் நிற்கும் கார் பின் விளக்குகள் எரியாத காரணத்தால் "வீதி தகுதி" (road worthy) யை இழக்கிறது.

3) வழமையான வீதி சட்டப் படி பின்னால் இருந்து இடித்தால் (rear ending) பினால் போகும் சாரதியின் பிழை. இதன் போது முனால் நிக்கும் கார் அசையக் கூடாது. இங்கு முன்னாள் நிக்கும் கார் பின்னோக்கி அசைகிறது.

வழமையாக insurance fraud செய்பவர்கள் கைக்கொள்ளும் முறை வேக வீதிகளில் அல்லது மிகுந்த வாகன நெரிசலில் பின்னால் வருபவர் எதிர் பார்க்காத நேரம் சடுதியாக பிரேக் அடித்து பின்னால் வருபவரை தங்களை இடிக்கச் செய்வது.

  • தொடங்கியவர்

ஏமாறுதல் என்பதை விட விபரம் இன்மை என்று கூறலாம். வாகன சாரதிகள் தமது வாகனம், வீதி போக்குவரத்து, விதிமுறைகள், விபத்துக்கள், சட்டங்கள், நடைமுறை பிரச்சனைகள் இவை பற்றிய பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். வழமையில் ஒரு விபத்து ஏற்படும் போது சம்மந்தப்பட்ட வாகனங்களிற்கு சேதம் ஏற்பட்ட /அடிபட்ட இடத்தை, ஆழத்தை/தன்மையை, அத்துடன் வீதியின் அமைப்பு, அத்துடன் சம்மந்தப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் இவற்றை வைத்தே தவறு எங்கு ஏற்பட்டிருக்கலாம் / எவரது தவறு என்று கண்டறிய முடியும். காவல்துறையினருக்கு இதில் அதிக அனுபவம் காணப்படும். அவர்கள் ரிக்கட் கொடுப்பதற்கு முன்னர் சாரதி அனுமதி பத்திரத்தில் குறிப்பிட்டவர்கள் சம்மந்தப்பட்ட பழைய சம்பவங்களையும் பார்ப்பார்கள். விபத்தில் தவறுதலாக ரிக்கட் கொடுக்கப்பட்டால் அதை சலென்ச் பண்ணவும் முடியும். ஒருவர் இங்கு பேக்காட்டப்பட்டு உள்ளார் என்றால் அவருக்கு விபரங்கள் ஒன்றும் தெரியவில்லை/தகுந்த முறையில் பேசத் தெரியவில்லை/அந்த நேரத்தில் ஏற்படக்கூடிய உளவியல் அதிர்ச்சி இவை காரணமாக அமையலாம்.

இதில் சம்பந்தப்பட்ட யோகராஜா 4 வருடத்தில் 26 தடவை போக்குவரத்து விதிகளை மீறி இருக்கின்றார் என்று சொல்கின்றார்கள். அவர்கள் சொல்வதில் உண்மை இருந்தால் நிச்சயம் இவரில் தான் அதிக சந்தேகம் கொள்ள வேண்டி வருது. 4 வருடத்தில் 26 என்பதை நினைத்து பார்க்கவே முடியவில்லை...

நாங்கள் இதில் சம்பந்தப்பட்டவர் தமிழர் என்பதால் அவர் மீது கொஞ்சம் கூடுதலாக அக்கறை கொள்கின்றோம்...

இந்த ஒளிப்பதிவில் வரும் சந்தேகங்கள்

- இது இந்தமாதம் ஒன்பதாம் திகதி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இருவரும் வெறும் மேற்சட்டை அணிந்தவண்ணம் உள்ளனர். வீதியின் ஓரத்திலும் இது குளிர்காலம் மாதிரி தெரியவில்லை

- பின்னர் என்ன நடந்தது? காவல்துறை வந்தனாரா?

- இதில் இவர்கள் இருவரும் சேர்ந்து 'வாகனத்தில் "கமராவை" பூட்டுங்கள்' என்பதை ஊக்குவிக்கும் விளம்பரம் போன்று உள்ளதா??

  • கருத்துக்கள உறவுகள்

2. இப்படியான fake accidents மூலம் பணம் சம்பாதிப்பது இங்கு அடிக்கடி நடக்கும் ஒன்று.

insurance நிறுவனமே இப்படிப்பட்டவர்களுக்கு insurance செய்ய யோசிப்பினம்!

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண வேகத்தில் சென்று கொண்டிருந்த யோகராஜாவின் வாகனம் 7 வது வினாடியிலிருந்து தனது வேகத்தை குறைப்பதை... இடது, வலது பக்க வாகனங்களின் வேகத்தோடு ஒப்பிடும் போது.... பளிச்செனெ தெரிகின்றது. தனது வேகத்தை குறைப்பதற்கு யோகராஜா பிரேக் பிடிக்காமல்... கியரை, நியூற்றலுக்கு மாற்றி வேகத்தை குறைத்திருக்கலாம். அல்லது கியரை படிப்படியாக கீழே மாற்றியிருக்கலாம். சாலை தடங்கல் இல்லாத, நிலையில்... அவர் தனது வேகத்தை குறைத்ததற்கான காரணம் என்ன? தனது வாகனத்தில் பழுது என்றால்... உடனடியாக எச்சரிக்கை விளக்குகளை போட்டிருக்க வேண்டும். எனக்கு என்னவோ.... நம்மாள் வேணுமெண்டு செய்த மாதிரி இருக்குது.

மற்றும் படி, யோகராஜவின் தனிப்பட்ட விலாசத்தை, இணையத்தில் பதிந்ததற்கு அந்த (சீனக்)கனடியனிடம், நல்லாய் கறந்து போட்டு... விட வேணும்.

இதில் சம்பந்தப்பட்ட யோகராஜா 4 வருடத்தில் 26 தடவை போக்குவரத்து விதிகளை மீறி இருக்கின்றார் என்று சொல்கின்றார்கள். அவர்கள் சொல்வதில் உண்மை இருந்தால் நிச்சயம் இவரில் தான் அதிக சந்தேகம் கொள்ள வேண்டி வருது. 4 வருடத்தில் 26 என்பதை நினைத்து பார்க்கவே முடியவில்லை...

நாங்கள் இதில் சம்பந்தப்பட்டவர் தமிழர் என்பதால் அவர் மீது கொஞ்சம் கூடுதலாக அக்கறை கொள்கின்றோம்...

இப்போது அந்தவீடியோவை பார்க்க முடியவில்லை. பிரைவேட் என்று சொல்கின்றது. உண்மையில் நடந்தது என்ன என்று சம்மந்தப்பட்டவர்களுக்கே தெரியும். பலர் ரிஸ்க் எடுத்து தவறான வகையில் வாகனத்தை ஓடுகின்றார்கள். வீதியில் எல்லா வகையான ஆட்களையும் காண்கின்றோம். எம்மை பாதுகாத்து கொள்ளவேண்டியது எமது பொறுப்பு. மேலதிக அவதானத்துடன் ஓடுதல், அத்துடன் நடைமுறை அனுபவங்களையும் நாம் விருத்தி செய்யவேண்டும். Demerit point systemஇல் எந்த நிலையில் அவர் உள்ளார் என்றும், காப்புறுதி நிலவரங்கள் எப்படி கையாளப்படுகின்றன என்பவை அவருக்கே தெரியும். ரிக்கட் கிடைத்தாலும் பரவாயில்லை விரைவாக லைசன்ஸ் இருக்கும்வரை ஓடுவோம் என்று வாகனம் ஓடுபவர்களும் உள்ளார்கள். Demerit point systemஇன் படி அவர் மோசமாக ஓடி இருந்தால் லைசன்ஸ் சஸ்பென்ஸ் பண்ணு பட்டிருக்க வேண்டும். தொடர்ந்து லைசன்ஸ் உடன் ஓடுகின்றார் என்றால் ரிஸ்க் எடுத்து சிறிய சிறிய தவறுகளுக்காக ரிக்கட்டுக்களை அவர் பெற்று இருக்கலாம் (உ+ம் ஸ்பீடிங்க்). எல்லா வகையான ஆட்களும் உள்ளார்கள். இது Finance Management போன்றதே. அவரவர் தமது தனித்துவமான வழிகளை கையாளுகின்றார்கள். புகைபிடித்தல் உடலுக்கு ஆகாது என்று சொன்னாலும் புகைபிடிப்பவர்கள் உள்ளார்கள். இதுபோன்றதே.

Edited by போக்குவரத்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.