Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் -நூல் வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புத்தக வெளியீடு பற்றி சில கேள்விகள் எழுகின்றன:

- ஏன் இந்தக்காலகட்டத்தில் இவ்வாறான ஒரு புத்தகம் வெளியிடப்படுகின்றது?

- இந்த புத்தக வெளியீட்டு மூலம் எமது தாயக மக்களின் வாழ்வியலில் முன்னேற்றம் காணமுடியுமா?

- யாரை நோக்கி இந்தப்புத்தகம் எழுதப்படுகின்றது? புலம்பெயர் சமூகத்தை இலக்கு வைத்தா?

- இந்தப்புத்தகம் மூலம் மேலும் பிளவுகளை புலம்பெயர் சமூகத்தில் உருவாக்கலாமா?

புத்தக வெளியீட்டை நிறுத்தமுடியாத இயலாமை தொக்கி நிற்கின்றது!

கேள்விகளுக்கு விடை கிடைத்தால் தெளிவு பிறக்கும்தான். ஐயரின் தொடர் யாழிலும் இருக்கு. அதைப் படிக்காமல் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டிருப்பது முன்கூட்டியே ஐயர் எழுதியது குழப்பத்தை விளைவிக்கத்தான் என்ற அனுமானத்தின் அடிப்படையில்தான் உங்களிடம் எழுகின்றது. நீங்களாகவே படித்து உங்கள் கேள்விகளுக்கு விடை தேடிக் கொள்ளுங்கள். அது நேரவிரயம் எனின் இப்படிக் கேள்விகள் எழுப்புவதும் நேரவிடயம்தான்.

  • Replies 108
  • Views 9.1k
  • Created
  • Last Reply

புத்தக வெளியீட்டை நிறுத்தமுடியாத இயலாமை தொக்கி நிற்கின்றது!

கேள்விகளுக்கு விடை கிடைத்தால் தெளிவு பிறக்கும்தான். ஐயரின் தொடர் யாழிலும் இருக்கு. அதைப் படிக்காமல் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டிருப்பது முன்கூட்டியே ஐயர் எழுதியது குழப்பத்தை விளைவிக்கத்தான் என்ற அனுமானத்தின் அடிப்படையில்தான் உங்களிடம் எழுகின்றது. நீங்களாகவே படித்து உங்கள் கேள்விகளுக்கு விடை தேடிக் கொள்ளுங்கள். அது நேரவிரயம் எனின் இப்படிக் கேள்விகள் எழுப்புவதும் நேரவிடயம்தான்.

கேள்விகள் கேட்பது தெளிவுக்குத்தானே.

வாசித்த உங்களுக்கு தெளிவு இருந்தால் பதில் தரலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் கேட்பது தெளிவுக்குத்தானே.

வாசித்த உங்களுக்கு தெளிவு இருந்தால் பதில் தரலாமே.

தெளிவு இருப்பதால்தான் ஐயரின் புத்தகத்தை ஆவணமாகக் கருதுகின்றேன் என்று எழுதியிருந்தேன். மற்றையவர்களின் கருத்துக்கள் மூலம் மட்டும் ஒரு புத்தகத்தில் என்ன இருக்கின்றது என்று அறிய முற்படுவது புத்தக விமர்சனங்களை மட்டும் படித்து புத்தகத்தைப் படித்ததாக கருதிக்கொள்வதற்கு ஒப்பானது.

எதையும் ஆழமாக வாசித்தால் சரியான தெளிவு உங்களுக்கும் வரும். படிப்பதற்கு முயற்சி எடுக்காமலே சந்தேகங்களை வைப்பதும் ஒரு வகையில் குழப்பகரமான நடவடிக்கைதான். இப்படியான செய்கைகள் மூலம் தமிழர்களை தமது விடுதலையை நோக்கி நகர்த்த முற்படுவதை வடகொரிய "ஜனநாயகத்துடன்"தான் ஒப்பிடத்தோன்றுகின்றது!

தெளிவு இருப்பதால்தான் ஐயரின் புத்தகத்தை ஆவணமாகக் கருதுகின்றேன் என்று எழுதியிருந்தேன். மற்றையவர்களின் கருத்துக்கள் மூலம் மட்டும் ஒரு புத்தகத்தில் என்ன இருக்கின்றது என்று அறிய முற்படுவது புத்தக விமர்சனங்களை மட்டும் படித்து புத்தகத்தைப் படித்ததாக கருதிக்கொள்வதற்கு ஒப்பானது.

எதையும் ஆழமாக வாசித்தால் சரியான தெளிவு உங்களுக்கும் வரும். படிப்பதற்கு முயற்சி எடுக்காமலே சந்தேகங்களை வைப்பதும் ஒரு வகையில் குழப்பகரமான நடவடிக்கைதான். இப்படியான செய்கைகள் மூலம் தமிழர்களை தமது விடுதலையை நோக்கி நகர்த்த முற்படுவதை வடகொரிய "ஜனநாயகத்துடன்"தான் ஒப்பிடத்தோன்றுகின்றது!

- ஏன் இந்தக்காலகட்டத்தில் இவ்வாறான ஒரு புத்தகம் வெளியிடப்படுகின்றது?

- இந்த புத்தக வெளியீட்டு மூலம் எமது தாயக மக்களின் வாழ்வியலில் முன்னேற்றம் காணமுடியுமா?

- யாரை நோக்கி இந்தப்புத்தகம் எழுதப்படுகின்றது? புலம்பெயர் சமூகத்தை இலக்கு வைத்தா?

- இந்தப்புத்தகம் மூலம் மேலும் பிளவுகளை புலம்பெயர் சமூகத்தில் உருவாக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் வெளியீடு நடைபெறுவதால்

நல்ல வரவேற்புக் கிடைக்கும்.

அத்துடன் ஆயிரக்கணக்கில் பிரதிகளும் விற்பனையாகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

<p>

யாழில் ஒரு 10 ஆயிரம் பேர் வாசித்து இருப்பார்களா?

ஆனால் லண்டனிலும் கனடாவிலும் யாழுக்கு வராதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

நீங்கள் தப்பாக விளங்கிட்டீங்கள் நான் சொல்ல வந்தது என்னவென்டால் ஏற்கனவே இணையத்தில் வந்து யாழில் உள்ள சிலர் அதை வடிவாய் வாசித்து விட்டார்கள் ஆவணப்படுத்த வேண்டிய தேவை இருந்தால் இணையத்தில் வந்ததையே ஆவணப்படுத்தலாமே ஏன் நூலக வேண்ட வேண்டும் என்பது தான் என் கேள்வி...இதே வேளை நுணாவிலான் சொன்ன மாதிரி மேலதிக சேர்க்கை நூலில் இருக்குமோ தெரியாது.

<p>

- ஏன் இந்தக்காலகட்டத்தில் இவ்வாறான ஒரு புத்தகம் வெளியிடப்படுகின்றது?

- இந்த புத்தக வெளியீட்டு மூலம் எமது தாயக மக்களின் வாழ்வியலில் முன்னேற்றம் காணமுடியுமா?

- யாரை நோக்கி இந்தப்புத்தகம் எழுதப்படுகின்றது? புலம்பெயர் சமூகத்தை இலக்கு வைத்தா?

- இந்தப்புத்தகம் மூலம் மேலும் பிளவுகளை புலம்பெயர் சமூகத்தில் உருவாக்கலாமா?

அகூதா எத்தனை பேர் புத்தகம் எழுதுகிறார்கள்,வெளியிடுகிறார்கள் சயந்தன் கூட அண்மையில் தனது நூலை வெளியிட்டு இருந்தார்...எல்லோரும் மக்களது நலனை நோக்கமாக வைத்தாக புத்தகம் எழுதுகிறார்கள் இல்லைத் தானே...உங்களுக்கு வாசிக்க விருப்பம் என்டால் வேண்டி வாசித்து விட்டு கருத்தை எழுதுங்கள் குறைந்த பட்ச‌ம் இணையத்தில் வந்ததை முழுமையாக வாசித்து விட்டு கருத்தை எழுதலாம்...என்னைப் பொறுத்த வரை அவர் புலியைப் பற்றியோ,தலைவரைப் பற்றியோ தப்பாக எழுதவில்லை,எழுதவும் மாட்டார் என நினைக்கிறேன்...நீங்கள் அவருடைய புத்தகம் வெளி வந்தால் ஏதோ புலிக்கு அவமானம் வந்து விடும் என நினைப்பதே உங்களுக்கு கிடைத்த தோல்வியும்,அவருக்கு கிடைத்த வெற்றியுமாகும்...முடிந்தால் அந்த நூலை வேண்டி வாசியுங்கள் இல்லா விட்டால் அதை தூக்கி பிடிக்காதீர்கள்.

புத்தகம் யாரும் எழுதுவதோ இல்லை வெளியிடுவதோ அவரவர் உரிமை. நான் கேட்டது என்னவென்றால் இதனால் சமூகத்திற்கு என்ன நன்மை என்று ஒரு பொதுவான கேள்வி (அதற்கு இன்னும் பதில் இல்லை). அதை விடுத்து நான் அவர் அதில் என்ன எழுதுகின்றார்? இல்லை யாரை எவ்வாறு விமர்சிக்கின்றார்? என கேட்கவில்லை, அதற்கு எனக்கு உரிமையும் இல்லை என எண்ணுகிறேன்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் போராட்ட வரலாற்றில் இவ்வளவு நாளும் நடந்தவை யாதென

அறிந்து அதனை விமர்சித்து அலசி ஆராய்ந்து அடுத்த போராட்ட கட்டத்திற்கு

அதைப் படிப்பினையாக எடுத்தக் கொண்டு இன்னுமொரு போராட்டத்தை ஆரம்பிக்கலாம்

என்ற தொனியில் யாரோ எங்கோ கேட்ட மாதிரி ஒரு ஞாபகம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

- ஏன் இந்தக்காலகட்டத்தில் இவ்வாறான ஒரு புத்தகம் வெளியிடப்படுகின்றது?

- இந்த புத்தக வெளியீட்டு மூலம் எமது தாயக மக்களின் வாழ்வியலில் முன்னேற்றம் காணமுடியுமா?

- யாரை நோக்கி இந்தப்புத்தகம் எழுதப்படுகின்றது? புலம்பெயர் சமூகத்தை இலக்கு வைத்தா?

- இந்தப்புத்தகம் மூலம் மேலும் பிளவுகளை புலம்பெயர் சமூகத்தில் உருவாக்கலாமா?

கடைசி வரையும் பதில் வராது, ஏனெனில் விடை 0 (பூச்சியமாக) இருக்கும் போது எப்படி பதில் வரும். விடையும் 0(பூச்சிசமாகத்தான்) இருக்கும்.

நீங்கள் எல்லாம் சண்டை போடுகின்றீர்கள். யார் இந்த ஐயர்???? ஆரம்ப கால உறுப்பினர் என்றால் இறுதி வரை புலிகளோடு இருக்காதவரா?? யாராவது தெரிந்தவர்கள் எழுதுங்கோ!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி எல்லாம் கிடக்கட்டும் ஒரு புத்தகத்தின்ரை விலை என்னவாம்?

புத்தகம் அச்சடிச்சு வெளியிடுறவைன்ரை நோக்கம் என்னவாம்?சமூக சிந்தனையோ இல்லாட்டி அதுதானோ????????

சமூக சித்தனை அல்ல புலம்பெயர் தமிழரில் சுமூகமற்ற நிலையேற்றபடவேண்டும் என்ற, சிந்தனைதான்

  • கருத்துக்கள உறவுகள்

விடைகள் மிகவும் இலகுவானவை. சரியா/பிழையா என்பதை ஊகத்தின் அடிப்படையில் நீங்கள் சொல்ல வெளிக்கிட்டால் உங்களின் நம்பகத்தன்மைதான் பாதிக்கும் அகூதா!

- ஏன் இந்தக்காலகட்டத்தில் இவ்வாறான ஒரு புத்தகம் வெளியிடப்படுகின்றது?

ஒரு ஆயுதப் போராட்டம் விடுதலையை நோக்கி ஆரம்பித்து தோல்வியில் முடிந்துவிட்டது. அதன் ஆரம்ப வரலாறுகளை தமிழர்கள் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும், போராட்டத்தின் உந்துசக்தியாகத் திகழ்ந்தவர்கள் எத்தகைய மனவோட்டங்களை அந்தக் காலத்தில் கொண்டிருந்தார்கள், முரண்பாடுகளை எவ்வாறு கையாண்டார்கள் என்பதையெல்லாம் அறிந்தால் தற்போதைய அரசியல் பிளவுகளின், கொள்கைப் பிளவுகளின் அடிப்படையை விளங்கிக் கொள்ளமுடியும். எனவே ஆயுதப் போராட்டம் அஸ்தமித்த இந்தக் காலகட்டத்தில்தான் வரலாறுகளை ஆவணப்படுத்தவேண்டும்.

வேலியைத் தாண்ட முடியாவிட்டாலும் வேலியைத் தாண்டக் கூடிய இளைய சமூகத்தை தோளில் ஏற்றி வேலிக்கு மறுபக்கம் கொண்டு சேர்க்க வரலாற்றில் இருந்து படிக்க எத்தனையோ விடயங்கள் உள்ளன. அதாவது சில்லுகளை மீண்டும் மீண்டும் கண்டுபிடிப்பதைத் தவிர்க்கவேண்டும். இத்தகைய நோக்கங்கள் இருப்பதாக நான் எண்ணுகின்றேன்.

- இந்த புத்தக வெளியீட்டு மூலம் எமது தாயக மக்களின் வாழ்வியலில் முன்னேற்றம் காணமுடியுமா?

ஆம். அடிப்படையான விடயங்கள் மேலே தரப்பட்டுள்ளது.

- யாரை நோக்கி இந்தப்புத்தகம் எழுதப்படுகின்றது? புலம்பெயர் சமூகத்தை இலக்கு வைத்தா?

தமிழர்களைத்தான். அதில் புலம் பெயர்ந்தவர்கள், தாயகத் தமிழர்கள் என்று பிரிக்கவேண்டிய அவசியமில்லை. எனினும் புத்தகம் தாயகத்தில் பரவலாகக் கிடைக்குமா தெரியவில்லை.

- இந்தப்புத்தகம் மூலம் மேலும் பிளவுகளை புலம்பெயர் சமூகத்தில் உருவாக்கலாமா?

இல்லை. விளக்கம் தேவையில்லை என்று நினைக்கின்றேன்.

நான் ஐயரின் உத்தியோகபூர்வமான அல்லது உத்தியோகப் பற்றற்ற குரல்தரவல்ல அதிகாரி இல்லை!

விடைகள் மிகவும் இலகுவானவை. சரியா/பிழையா என்பதை ஊகத்தின் அடிப்படையில் நீங்கள் சொல்ல வெளிக்கிட்டால் உங்களின் நம்பகத்தன்மைதான் பாதிக்கும் அகூதா!

மீண்டும் சொல்லுகின்றேன் கேள்விகள் கேட்கும் உரிமையை தடுக்காதீர்கள், மற்றும் கேள்வியை உங்களுக்கே ஏற்றமாதிரி திசை திருப்பி பதில் எழுதாதீர்கள்.

- ஏன் இந்தக்காலகட்டத்தில் இவ்வாறான ஒரு புத்தகம் வெளியிடப்படுகின்றது?

- இந்த புத்தக வெளியீட்டு மூலம் எமது தாயக மக்களின் வாழ்வியலில் முன்னேற்றம் காணமுடியுமா?

- யாரை நோக்கி இந்தப்புத்தகம் எழுதப்படுகின்றது? புலம்பெயர் சமூகத்தை இலக்கு வைத்தா?

- இந்தப்புத்தகம் மூலம் மேலும் பிளவுகளை புலம்பெயர் சமூகத்தில் உருவாக்கலாமா?

ஜயர் ஏன் புத்தகம் எழுதக் கூடாது?

போராட்டத்தின் ஆரம்பத்தில் எப்படி செய்ற்பட்டார்கள் சேர்ந்து தொடங்கியவர்கள் ஏன் பிரிந்தார்கள் எனபவற்றை தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளோருக்காக.

இந்த புத்தகத்தால் ஒரு பிரிவும் வரபோவதில்லை அந்த புத்தகத்தால் தமிழ்மக்கலை பிரிக்க முடியாது ஆனால் புலிகளின் மாவீரர்நாளையே பிரித்து செய்தவர்களை கேக்க வேண்டிய கேள்வி...

சரி இப்ப எழுதக்கூடாது என்றால் எப்ப தான் எழுதவேண்டும்?

ஜயர் இப்ப எழுதினால் தானே ஜயரின் வயதில் இருப்பவர்கள் அந்தே நேரத்தில் என்ன நடந்தது என்று உண்மையை கூறலாம் அல்லது ஜயரின் தகவல்கள் தவறானது என்று மறுக்கவாது முடியும்.

இன்னும் 30 40 வருடத்துக்கு பின் 80 ஆண்டுக்கு முன் நடந்த போராட்டங்களின் குழறுபடிகள் யாருக்கும் தெரியாது சொல்லவும் ஆள் ஈல்லை அதை மறுகவோ அல்லது உண்மையான தகவல் தான் என்று ஆமோதிப்பதுக்கு சமந்தப்பட்டவர்கள் இருக்க மாட்டார்கள்.

அதுசரி எல்லாம் கிடக்கட்டும் ஒரு புத்தகத்தின்ரை விலை என்னவாம்?

புத்தகம் அச்சடிச்சு வெளியிடுறவைன்ரை நோக்கம் என்னவாம்?சமூக சிந்தனையோ இல்லாட்டி அதுதானோ????????

முடிந்தால் கோர்டன் வைசின் ஒரு புத்தகத்தை வாங்கி ஐ.நா. மனித உரிமை பிரதிகளுக்கு அனுப்பி வைத்தால் - அது காலத்தின் கடமையாகும் என்பது எனது பணிவான கருத்து.

நீங்கள் எல்லாம் சண்டை போடுகின்றீர்கள். யார் இந்த ஐயர்???? ஆரம்ப கால உறுப்பினர் என்றால் இறுதி வரை புலிகளோடு இருக்காதவரா?? யாராவது தெரிந்தவர்கள் எழுதுங்கோ!

- எனக்குத்தெரியாது. ஆனால், புலம்பெயர் நாட்டில் இவர் இருப்பார் என்றால் எந்த நாட்டில் உள்ளார் என அறிய ஆவலாய் உள்ளேன்.

- ஒரு ஆரோக்கியமான கேள்விகளை கேட்பது சண்டையல்ல. அதற்கான ஆக்கமான பதில்களை தருவதே பண்பும், இந்தக்களத்திற்கு சிறப்பும். மாறாக 'எதை வைத்து தாயக மக்களுக்கு புலிகளை ஆதரிகின்றார்கள்?' என்று பதில் எழுதியவரை கேட்பதும் (புலிகளை தாயகத்தில் மக்கள் வெறுக்கின்றார்கள் என்று கூறியவரை விட்டுவிட்டு )

- கேள்வி கேட்பதை 'ஊகத்தில் கேட்பதாக' வர்ணிப்பதும்

- கேள்விகளை 'வட கொரிய' சனநாயகம் என ஏளனம் செய்வதும்

- கேள்விகளுக்கு கேள்விகளை பதிலாக தருவதும்

எந்த இலக்கையும் அடையாது.

புத்தகம் யாரும் எழுதுவதோ இல்லை வெளியிடுவதோ அவரவர் உரிமை. நான் கேட்டது என்னவென்றால் இதனால் சமூகத்திற்கு என்ன நன்மை என்று ஒரு பொதுவான கேள்வி

ஒரு புத்தகத்தாலோ அல்லது ஒரு படைப்பாலோ ஏற்படும் சாதக பாதகங்கள் அது வெளியிடப்பட்ட அந்த நிமிடத்திலோ அல்லது அன்றோ வெளித் தெரியப்போவதில்லை. ஒரு பிரதி சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றிய மதிப்பீட்டுக்கு கால அளவுகள் மாறுபடும். எந்த படைப்பினதும், வரலாற்று ஆவணத்தினதும் எதிர்வினைகள் கூட கால காலத்துக்கு எழுப்பப்பட்டு அந்த படைப்பின் முழுமையை பூர்த்தி செய்யும். இப்படி இருக்கையில், நீங்கள் மின் switch ஒன்றை போட்டவுடன் வீட்டின் மின் விளக்கு உடனே எரிவது போன்று ஒரு படைப்பின் தாக்கம் பற்றிய குறைந்த பட்ச அவகாசத்துக்கு கூட காத்திராமல் இதில் தீமைதான் இருக்கு என்று காட்ட ஒற்றைக் காலில் நின்ற்கின்றீர்கள். அகூதா உங்கள் இந்த திரிக்கான பதில்களின் சாரம்சமாக தெரிவது, இப் புத்தகத்தின் வெளியீட்டை நீங்கள் (அதன் உள்ளடக்கம் பற்றிய எந்தவித வாசிப்பும் இன்றி) கேள்வி கேட்க விரும்புவதே...

Edited by நிழலி

கேள்விகளை கேட்டு ஒரு தெளிவு இருந்தால் தான் தானே வெளியீட்டு நிகழ்வுக்கு வரவேண்டும்.

வந்த பின் 'ஏண்டா இதற்கு வந்தோம்?' என இருக்கக்கூடாது, அதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சொல்லுகின்றேன் கேள்விகள் கேட்கும் உரிமையை தடுக்காதீர்கள், மற்றும் கேள்வியை உங்களுக்கே ஏற்றமாதிரி திசை திருப்பி பதில் எழுதாதீர்கள்.

கேள்விகள் சரியாக இருந்தால் இப்படி மயக்கம் உங்களுக்கே வந்திருக்குமா! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

- எனக்குத்தெரியாது. ஆனால், புலம்பெயர் நாட்டில் இவர் இருப்பார் என்றால் எந்த நாட்டில் உள்ளார் என அறிய ஆவலாய் உள்ளேன்.

- ஒரு ஆரோக்கியமான கேள்விகளை கேட்பது சண்டையல்ல. அதற்கான ஆக்கமான பதில்களை தருவதே பண்பும், இந்தக்களத்திற்கு சிறப்பும். மாறாக 'எதை வைத்து தாயக மக்களுக்கு புலிகளை ஆதரிகின்றார்கள்?' என்று பதில் எழுதியவரை கேட்பதும் (புலிகளை தாயகத்தில் மக்கள் வெறுக்கின்றார்கள் என்று கூறியவரை விட்டுவிட்டு )

- கேள்வி கேட்பதை 'ஊகத்தில் கேட்பதாக' வர்ணிப்பதும்

- கேள்விகளை 'வட கொரிய' சனநாயகம் என ஏளனம் செய்வதும்

- கேள்விகளுக்கு கேள்விகளை பதிலாக தருவதும்

எந்த இலக்கையும் அடையாது.

இதே களத்தில் உள்ள விடயத்தை வாசிக்கமாட்டேன் என்று அடம் பிடித்துக்கொண்டு எனது பதில்களை ஏளனம் என்று சொல்ல முற்படுவதும் நியாயமல்ல. வடகொரிய சனநாயகத்தை நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பது உங்கள் கருத்துக்களில் இருந்து புரியக்கூடியதாக உள்ளது. அதாவது ஜனநாயகம், கருத்துச் சொல்லும் உரிமைகள் எல்லாம் நமக்கு விரும்பியவாறு அமையவேண்டும் என்ற சித்தாந்தம் இன்னம் மறையவில்லை. நாம் ஜனநாயகவாதிகள் என்று தொண்டை கிழியக் கத்தினாலும் எவரும் சட்டை செய்யவில்லையே என்று ஏன்தான் கவலைப்படுகின்றோம்!

  • தொடங்கியவர்

ஐயரின் 'ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்' நூல் வெளியீடு Toronto வில் இன்று சிறப்பாக நடைந் தேறியது. கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் எமது நன்றி. இந் நூல் குறித்து செழியன், குமரன், அருள்மொழிவர்மன், ரஃமான் ஜான் ஆகியோர் கருத்துரை வழங்கினர். அதைத்தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெற்றது. பல்வேறு அரசியல் பின்புலம் கொண்டவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்

நானும் கலந்துகொண்டேன். பல்வேறு அரசியல் பின்புலம் கொண்டவர்களும் கலந்துகொண்டத்துதான் இதன் சிறப்பு.சிலர் மட்டும் அரசியல் கதைத்தார்கள்,பலர் ஐயரின் பதிவை பற்றியே விமர்சனம் வைத்தார்கள் ஏறக்குறைய எல்லோருமே பொய்மை அற்ற பதிவு என ஏற்றுக்கொண்டார்கள்.கிட்லரின் சலூட் பற்றி சிறு மனஸ்தாபம் பலர் மத்தியில்.

நான் அரசியலற்று ஐயரின் பதிவில் இருப்பவர்களில் நான் சந்தித்தவர்கள் பற்றி சிறு குறிப்பு சொன்னேன். உமா ,நாகராசா,குமணன்,ராகவன்,அன்டன் மாஸ்டர் ,ராம்,ஜான் பற்றியும் அவர்களுடன் பகிர்ந்த சம்பவங்களுடன் ஐயரின் பதிவும் மாறுபடவில்லை என்பதை சொன்னேன்.

இது தொடரவேண்டும் என்பதே பலரினதும் அவா. (சகாராவையும் சந்தித்தேன்)

Edited by arjun

ஐயரின் 'ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்' நூல் வெளியீடு Toronto வில் இன்று சிறப்பாக நடைந் தேறியது. கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் எமது நன்றி.

எமதுன்னா? யார் சார்பில யாருக்கு நன்றி அர்ஜுன் அண்ணா??

அப்புறம்...ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் என்னு தலைப்பு வேறையா?

எனது பதிவுகள் என்று பில்ட் அப் கொடுக்க,,,ஐயர் அப்பிடி என்ன பிரளயத்தை ,, போராட்ட வரலாற்றில் ஏற்படுத்தினார்? ஒரு முன்னாள்போராளி எங்கிற தகமையை தவிர்த்து?

பிரபா பக்கமும் இல்லாம, உமா பக்கமும் இல்லாம, ஆக்சுவலி இவ்ளோ நாளா எங்கே இருந்தார் என்றுகூட தெரியாம...(ஏன் இப்போகூட பலருக்கு அவர் எங்கே இருக்கார்னு கூட தெரியாது)

ஒரு ஆலமரம் சரிந்ததுபோல எமதுபோராட்டம் வீழ்ந்தவுடனே,, வந்துட்டாங்கடா ,, ஆளுக்கு ஆள் அந்தியேட்டிக்கு கல்வெட்டு படிக்குறவன் ரேஞ்சில.. வரலாறுபேச!

அவரு ஒண்ணும் தப்பாவே சொல்லலியா? இருக்கும் இருக்கும்......

கிருபன் இணைச்சத நானும்தான் வாசிச்சேன்... நோகாமல் நொங்கு திங்கிறமாதிரி.....

பிரபாகரன ஒரு கொடுரமான இராணுவ கொள்கை கொண்டவர் என்கிறதே,, மறைமுகமா அவர் சொல்லிகிட்டு போறது,, அவர் பதிவு முழுக்க,, இடைக்கிடை அப்பப்போ,, அவர் நல்லவர் , கொள்கைவாதி,, தனிய நின்றபோதும் கலங்கவில்லைனு,,, சப்பைகட்டு வேறு.! அதை 2010 க்கு அப்புறமா ஓடிவந்து ஐயர் சொல்லி தெரியவேண்டிய நிலமையில், எந்த புலிதேசத்தவனும் இல்ல.. எல்லாருமே அறிந்ததுதான்!

உண்மையான போராளி எங்கிறவன்,, அவன் முன்னாளோ/ இன்னாளோ......ஒரு பாரிய பின்னடைவின்பின், அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது பத்தியே சிந்திப்பான்,,தனக்கு பிடிக்காத போராட்ட முனைப்புக்கள் அழிந்தொழிந்தால்,,, தனக்கு பிடித்த இன்றைய நகர்வுடன் கை கோர்ப்பான்!

இப்டி புத்தகம் அடிச்சுவிட்டு ,, பழைய வரலாறுபேசி கல்லாவ நிரப்ப பார்க்கமாட்டான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.