Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா கிரிக்கெட் அணித்தலைவர் மஹேல - ரவுடி?

Featured Replies

இலங்கையில் சிங்களவர்கள் காட்டும் ரவுடித்தனத்தை ஒஸ்ரேலியாவில் சிறிலங்கா கிரிக்கெட் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன காட்டியதால் அவருக்க போட்டி ஊதியத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஓஸ்ரேலியா அடிலெய்ட் நகரில் இன்று நடைபெற்ற ஒஸ்ரேலியாவுடனான போட்டியின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்டமைக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியின்போது பர்வீஸ் மஹரூவ் வீசிய பந்தொன்று துடுப்பாட்ட வீரரின் இடுப்புக்கு மேல் உயர்ந்தால் நடுவர் புரூஸ் ஒக்ஸன்போர்ட், அப்பந்தை நோபோலாக அறிவித்தார். இதனால் நடுவருடன் மஹேல ஜயவர்தன வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடுவருக்கு அடிக்க கையை ஓங்கினார். கேவலமான வார்த்தைகளால் ஏசினார்.

இந்நிலையில் மஹேலவின் நடவடிக்கையான ஒழுங்குவிதிகளின் 2.1.3 ஆவது பிரிவை மீறுவதாகும் என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இப்போட்டியின் பின்னர் ஐ.சி.சி. சிறப்பு மத்தியஸ்தர் குழாமைச் சேர்ந்த கிறிஸ் புரோட்டினால் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மஹேல ஜயவர்தன ஏற்றுக்கொண்டதாகவும் அதனால் சம்பிரதாய விசாரணைகள் தேவைப்படவில்லை எனவும் ஊடக அறிக்கையொன்றில் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

‘எந்தவொரு சூழ்;நிலையிலும் நடுவரின் தீர்ப்பை மதிப்பதுடன் ஏற்றுக்கொள்ளவும் வேண்டுமென ஐ.சி.சி. ஒழுங்குவிதிகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதால் மஹேல ஜயவர்தனவின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது’ என கிறிஸ்புரோட் தெரிவித்துள்ளார்.

mahla5.jpgmahela9.jpgmahlea5.jpg

http://thaaitamil.com/?p=11831&utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3-%25e0%25ae%25b0%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25a9%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%259f

  • கருத்துக்கள உறவுகள்

மகெல ஐயவர்த்தனா நடுவர்களிடம் வாக்குவாதப்பட்டது உண்மை. ஆனால் நடுவரை அடிக்க கையை உயர்த்தவில்லை. பொதுவாக எல்லா நாட்டு விளையாட்டு வீரர்களும் துடுப்பாட்டப் போட்டியில் உணர்ச்சிவசப்படுவதுண்டு. நடுவர்களுடன் வாக்குவாதப்படுவதுண்டு.

தமிழ் ஊடகங்கள் இச்செய்தியை பெரிது படுத்தி எழுதியிருக்கிறது.

நான் முழு மட்சும் பார்த்தேன் .மவுருபின் பந்து இடுப்புக்கு மேல்தான் வீசினார் ,அதை கிளாக் அடிக்க அம்பயர் சிக்ஸ் காட்டினார் ஆனால் அது பவுண்டரி பின் அம்பயர் முடிவை மாற்றிவிட்டு அதன் பின் நோ போல் என்றார் ,நானென்றால் அடித்திருப்பேன் நல்லவேல்லை மேகலா வாக்குவாததுடன் விட்டார் .

இதே மைதானத்தில் தான் முரளி ஏறிகின்றார் என்று தொடங்கினார்கள் ,இன்று எறிபோல் சொன்ன அம்பயர் எமர்சன் சொல்லுகின்றார் அவுஸ்திரேலிய கிரிக்கெட் மேலிடம் சொல்லித்தான் தான் அப்படி சொன்னாராம் என்று .நியூசிலாந்துடன் கடைசிபந்தை உருட்டிப்பூட்டவர் ரவர் சப்பல்.அவுஸ்திரேலியன் முழு அழாப்பிகள்.

  • தொடங்கியவர்

அன்றொரு காலத்தில் துடுப்பெடுத்தாட்டம் 'ஜென்டில் மென் கேம் (Gentlemen Game) ' என வர்ணிக்கப்பட்டது.

இன்றைய நாட்களில் போர்குற்றவாளிகளினதும் சூதாட்டக்காரர்களினதும் விளையாட்டாகிவிட்டது.

வீரம்,தியாகம் என்ற எங்கட போராட்டம் வியாபாரம் ஆகிய மாதிரி.

  • கருத்துக்கள உறவுகள்

<p>

நான் முழு மட்சும் பார்த்தேன் .மவுருபின் பந்து இடுப்புக்கு மேல்தான் வீசினார் ,அதை கிளாக் அடிக்க அம்பயர் சிக்ஸ் காட்டினார் ஆனால் அது பவுண்டரி பின் அம்பயர் முடிவை மாற்றிவிட்டு அதன் பின் நோ போல் என்றார் ,நானென்றால் அடித்திருப்பேன் நல்லவேல்லை மேகலா வாக்குவாததுடன் விட்டார் .

இதே மைதானத்தில் தான் முரளி ஏறிகின்றார் என்று தொடங்கினார்கள் ,இன்று எறிபோல் சொன்ன அம்பயர் எமர்சன் சொல்லுகின்றார் அவுஸ்திரேலிய கிரிக்கெட் மேலிடம் சொல்லித்தான் தான் அப்படி சொன்னாராம் என்று .நியூசிலாந்துடன் கடைசிபந்தை உருட்டிப்பூட்டவர் ரவர் சப்பல்.அவுஸ்திரேலியன் முழு அழாப்பிகள்.

மகெல தான் செய்ததற்கு மன்னிப்புக் கேட்கிறார்.Jayawardene said after the match that he wasn't disputing the no-ball, only that the umpires took too long to call it. "I think I was the culprit, dragging it for too long. I thought initially the umpire didn't make a call, and took too long," Jayawardene said. "I had no issue with the no-ball. waist high or whatever. But I felt that after Michael (Clarke) had spoken to him, that's when he had made the call. So I have been fined for that. That puts something in my report. That's all." http://www.espncricinfo.com/commonwealth-bank-series-2012/content/current/story/556441.html

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டில் இது எல்லாம் சகஜம்...யாரப்பா சவுன்ட் விடுகிறது அவுஸ்ரேலியா அழாப்பிகள் என்று.....அவுஸ்ரேலியா அழாப்பிகளா இருந்தாலும் எனது ஆதரவு அவுஸ்ரேலியாவுக்குத்தான் ....ஆனால் மனித உரிமை மீறலில் அழாப்பிகள் அல்ல.....

  • கருத்துக்கள உறவுகள்

நான் முழு மட்சும் பார்த்தேன் .மவுருபின் பந்து இடுப்புக்கு மேல்தான் வீசினார் ,அதை கிளாக் அடிக்க அம்பயர் சிக்ஸ் காட்டினார் ஆனால் அது பவுண்டரி பின் அம்பயர் முடிவை மாற்றிவிட்டு அதன் பின் நோ போல் என்றார் ,நானென்றால் அடித்திருப்பேன் நல்லவேல்லை மேகலா வாக்குவாததுடன் விட்டார் .

இதே மைதானத்தில் தான் முரளி ஏறிகின்றார் என்று தொடங்கினார்கள் ,இன்று எறிபோல் சொன்ன அம்பயர் எமர்சன் சொல்லுகின்றார் அவுஸ்திரேலிய கிரிக்கெட் மேலிடம் சொல்லித்தான் தான் அப்படி சொன்னாராம் என்று .நியூசிலாந்துடன் கடைசிபந்தை உருட்டிப்பூட்டவர் ரவர் சப்பல்.அவுஸ்திரேலியன் முழு அழாப்பிகள்.

அம்பயர் பந்து வான்வழி எல்லைக் கோட்டைக் கடந்ததாக எண்ணி.. சிக்ஸ் காட்டிறதும்.. பின்னர் சந்தேகத்தில் ரீபிளேயில் சரி பார்க்கிறதும்.. முன்னைய முடிவை திரும்பப் பெறுவதும்.. ஒன்றும் புதிதல்லவே. அதில் எங்கே அழாப்பல் உள்ளது..??!

மேலும்.. நோ போலை சிக்ஸுக்கோ.. பவுண்டரிக்கோ யாரும் அடிக்கக் கூடாது என்ற சட்டம் இல்லையே..???! அங்கீகரிக்கப்பட்ட உயரத்தை தாண்டி.. தலைக்கு மேலால் போகும் பவுண்ஸரைக் கூட சிக்ஸுக்கு தட்டி ரன் எடுத்த போதிலும் நோபோல் அறிவிப்பது உண்டு தானே..!

மேலும்.. அம்பயர்களின் முடிவுக்கு ஏன் அவுஸ்திரேலிய அணியை திட்டுகிறீர்கள். சிறீலங்கா சிங்கள அணி மட்டும் ஏதோ நேர்மையா விளையாடிக் கொண்டு திரியுற மாதிரி எல்லோ இருக்கு உங்கட கதை..! தோல்வியை சகிக்க முடியாத மனநோய் பிடித்த அணி சிறீலங்கா அணியும்.. அதன் ரசிகர்களும்..!

முரளிதரனின் பந்து வீச்சுத் தொடர்பில் அவுஸ்திரேலியர்கள் மட்டுமல்ல.. இந்தியர்களும்.. பல்வேறு நாட்டினரும் சந்தேகம் கொண்டிருந்தனர். உண்மையில் முரளிதரனுக்கு கையில் வளைவு தானா அல்லது.. உருவாக்கினதா..???! அந்த வளைவை வைச்சே.. தம்பிச்சிட்டார் அவர்..! அதுக்குள்ள.. ஏதோ...திறமா வெட்டி விழுத்தினதா... ஒரு கதையளப்பு ஏன்..???!

அதுசரி.. மாங்குளத்தில் சர்வதேச கிரிக்கெட் ஸ்ரேடியம் கட்டப் போறன் என்று அளந்து திரிஞ்சார் முரளிதரன்.. அதுக்கு என்னாச்சாம்..?????????! விளையாட்டு வீரர்கள் விளையாட்டோட நிற்கனும்.. அரசியல்வாதிகளுக்கு பேரினவாதத்திற்கு காவடி தூக்கப்படாது. தூக்கினாப் பிறகு அவையை விளையாட்டு வீரரா பார்க்கவும் முடியாது..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

வீரம்,தியாகம் என்ற எங்கட போராட்டம் வியாபாரம் ஆகிய மாதிரி.

கோழைகள் ஒரு சிலரால் வீரம்,தியாகம் என்ற எங்கட போராட்டம் வியாபாரம் ஆக்கிய மாதிரி.

மகெல ஐயவர்த்தனா நடுவர்களிடம் வாக்குவாதப்பட்டது உண்மை. ஆனால் நடுவரை அடிக்க கையை உயர்த்தவில்லை. பொதுவாக எல்லா நாட்டு விளையாட்டு வீரர்களும் துடுப்பாட்டப் போட்டியில் உணர்ச்சிவசப்படுவதுண்டு. நடுவர்களுடன் வாக்குவாதப்படுவதுண்டு.

தமிழ் ஊடகங்கள் இச்செய்தியை பெரிது படுத்தி எழுதியிருக்கிறது.

என்னபா கன்தபு கச்சி மாறிடார் போலகிடகு :unsure:

அம்பயர் பந்து வான்வழி எல்லைக் கோட்டைக் கடந்ததாக எண்ணி.. சிக்ஸ் காட்டிறதும்.. பின்னர் சந்தேகத்தில் ரீபிளேயில் சரி பார்க்கிறதும்.. முன்னைய முடிவை திரும்பப் பெறுவதும்.. ஒன்றும் புதிதல்லவே. அதில் எங்கே அழாப்பல் உள்ளது..??!

மேலும்.. நோ போலை சிக்ஸுக்கோ.. பவுண்டரிக்கோ யாரும் அடிக்கக் கூடாது என்ற சட்டம் இல்லையே..???! அங்கீகரிக்கப்பட்ட உயரத்தை தாண்டி.. தலைக்கு மேலால் போகும் பவுண்ஸரைக் கூட சிக்ஸுக்கு தட்டி ரன் எடுத்த போதிலும் நோபோல் அறிவிப்பது உண்டு தானே..!

மேலும்.. அம்பயர்களின் முடிவுக்கு ஏன் அவுஸ்திரேலிய அணியை திட்டுகிறீர்கள். சிறீலங்கா சிங்கள அணி மட்டும் ஏதோ நேர்மையா விளையாடிக் கொண்டு திரியுற மாதிரி எல்லோ இருக்கு உங்கட கதை..! தோல்வியை சகிக்க முடியாத மனநோய் பிடித்த அணி சிறீலங்கா அணியும்.. அதன் ரசிகர்களும்..!

முரளிதரனின் பந்து வீச்சுத் தொடர்பில் அவுஸ்திரேலியர்கள் மட்டுமல்ல.. இந்தியர்களும்.. பல்வேறு நாட்டினரும் சந்தேகம் கொண்டிருந்தனர். உண்மையில் முரளிதரனுக்கு கையில் வளைவு தானா அல்லது.. உருவாக்கினதா..???! அந்த வளைவை வைச்சே.. தம்பிச்சிட்டார் அவர்..! அதுக்குள்ள.. ஏதோ...திறமா வெட்டி விழுத்தினதா... ஒரு கதையளப்பு ஏன்..???!

அதுசரி.. மாங்குளத்தில் சர்வதேச கிரிக்கெட் ஸ்ரேடியம் கட்டப் போறன் என்று அளந்து திரிஞ்சார் முரளிதரன்.. அதுக்கு என்னாச்சாம்..?????????! விளையாட்டு வீரர்கள் விளையாட்டோட நிற்கனும்.. அரசியல்வாதிகளுக்கு பேரினவாதத்திற்கு காவடி தூக்கப்படாது. தூக்கினாப் பிறகு அவையை விளையாட்டு வீரரா பார்க்கவும் முடியாது..! :):icon_idea:

நான் எழுதியதைத்தான் மேகல சொல்லியிருக்கின்றார் .

என்ன நடந்தது என்றே தெரியாமல் நெடுக்ஸ் வைத்த பிரசங்கம் நன்றாக இருந்தது .உந்த சீரிசுக்கு action replay இல்லை .எதையும் எழுத முதல் என்ன நடந்தது என்று சற்று தெரிந்த பின் எழுதுவது நல்லது.

விளையாட்டும் வேறு அரசியலும் வேறு!

யாரும் எப்படியும் அரைக்கலாம் தமிழனின் தலையில், தமிழனும் கூட :wub:

  • கருத்துக்கள உறவுகள்

வீரம்,தியாகம் என்ற எங்கட போராட்டம் வியாபாரம் ஆகிய மாதிரி.

இதில் உங்களின் (ஆட்களின்) பங்கு நிறையவே உண்டு என்று சொன்னால் மிகையாகாது. right!!!

  • தொடங்கியவர்

நான் முழு மட்சும் பார்த்தேன் .மவுருபின் பந்து இடுப்புக்கு மேல்தான் வீசினார் ,அதை கிளாக் அடிக்க அம்பயர் சிக்ஸ் காட்டினார் ஆனால் அது பவுண்டரி பின் அம்பயர் முடிவை மாற்றிவிட்டு அதன் பின் நோ போல் என்றார் ,நானென்றால் அடித்திருப்பேன் நல்லவேல்லை மேகலா வாக்குவாததுடன் விட்டார் .

இதே மைதானத்தில் தான் முரளி ஏறிகின்றார் என்று தொடங்கினார்கள் ,இன்று எறிபோல் சொன்ன அம்பயர் எமர்சன் சொல்லுகின்றார் அவுஸ்திரேலிய கிரிக்கெட் மேலிடம் சொல்லித்தான் தான் அப்படி சொன்னாராம் என்று .நியூசிலாந்துடன் கடைசிபந்தை உருட்டிப்பூட்டவர் ரவர் சப்பல்.அவுஸ்திரேலியன் முழு அழாப்பிகள்.

விதிமுறைகளை மதிக்கத்தெரியாதவனை பாராட்டி அவனுக்கு சார்பாக நீங்கள் காட்டும் ரவுடித்தனம் உங்கள் துடுப்பாட்ட பக்குவத்தை படம் பிடித்து காட்டியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா விளையாட்டு வீரர்களும்,தலைவர்களும் உணர்ச்சி வசப்படுவதும்,சண்டை பிடிப்பதும்,விதி முறைகளை மீறுவதும் காலங் காலமாக நடக்கிறது ஆனால் நீங்கள் என்னவோ[இங்கு தான்] மகேல தான் முதல்,முதலாக விதி முறைகளை மீறி பாரிய குற்றம் செய்த மாதிரி எழுதுவதை நினைக்க சிரிப்பாக இருக்கிறது

ரதிகு எதின வயசபா???????????? :rolleyes:

  • தொடங்கியவர்

எல்லா விளையாட்டு வீரர்களும்,தலைவர்களும் உணர்ச்சி வசப்படுவதும்,சண்டை பிடிப்பதும்,விதி முறைகளை மீறுவதும் காலங் காலமாக நடக்கிறது ஆனால் நீங்கள் என்னவோ[இங்கு தான்] மகேல தான் முதல்,முதலாக விதி முறைகளை மீறி பாரிய குற்றம் செய்த மாதிரி எழுதுவதை நினைக்க சிரிப்பாக இருக்கிறது

அவர் இதற்கு பதிலளிக்க மாட்டார் :D

வீரம்,தியாகம் என்ற எங்கட போராட்டம் வியாபாரம் ஆகிய மாதிரி.

அரசியல் விளையாடு வேறவேற என்டுஎழுதிபோடு அன்கிள் என்னபா இன்கஇடம் மாறி அடிகிறார்???????????????? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

<p>

ரதிகு எதின வயசபா????????????

என்ட வயசை தெரிந்து கொண்டு என்னடா செய்யப் போகிறாய்?

<p>

<span style="font-family: lucida sans unicode,lucida grande,sans-serif"><span style='font-size: 14px;'>அவர் இதற்கு பதிலளிக்க மாட்டார்

"அவர்" என்று யாரை சொல்கிறீர்கள்?...நான் தமிழ் ஊடகங்களையும்,ஏதோ மகேல இனி இல்லை என்ட மாதிரி தப்பு செய்து விட்டார் என யாழில் எழுதும் சிலரைப் பார்த்துத் தான் கேட்டேன்...சில நேரம் நான் வடிவாய் பொருள் பட எழுதவில்லையோ தெரியவில்லை
  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதியதைத்தான் மேகல சொல்லியிருக்கின்றார் .

என்ன நடந்தது என்றே தெரியாமல் நெடுக்ஸ் வைத்த பிரசங்கம் நன்றாக இருந்தது .உந்த சீரிசுக்கு action replay இல்லை .எதையும் எழுத முதல் என்ன நடந்தது என்று சற்று தெரிந்த பின் எழுதுவது நல்லது.

நீங்கள் எழுதியற்குத் தான் எழுதி உள்ளேன். நான் சிறீலங்கா விளையாடும் எந்தப் போட்டியையும்ம் ஊரில் உள்ள போதும் பார்க்கிறதில்ல.

ஏதோ.. சிக்ஸ் என்று டிக்கிளே பண்ணினதை.. சரி பார்த்து மாற்றக் கூடாது என்ற கணக்காவும்.. அதற்காக மத்தியஸ்தருக்கு அடிச்சிருப்பன் என்ற கணக்காவும் தாங்கள் எழுதியற்குத் தான் என் பதில். உங்கட காலத்தில யாழ்ப்பாணத்திலும் மத்தியஸ்தருக்கு அடிக்கிறவையாம். ஆனால் இது சர்வதேச கிரிக்கெட். புலிகள் காலத்திலும் பிக் மச் எல்லாம் விளையாடினது தான். ஒரு அசம்பாவிதமும் நடந்ததில்ல. அமைதியாக எல்லாம் நடந்து முடியும்..!

ஆனால் இந்த ஆண்டு.. ஜவ்னா கொலிச்.. பற்றீக்ஸ் மச்சில கல்லெறிஞ்சு.. சிங்களப் பொலிஸ் வந்து பாதுகாப்பு கொடுத்திச்சாம். இப்படித்தான் நீங்களும் அந்தக் காலத்தில செய்திருப்பியள். அதெல்லாம் இப்ப யாழ்ப்பாணத்தில சிங்களவனின் நிர்வாகத்தில நடக்கலாமே ஒழிய.. சர்வதேச அரங்கில் நடத்த முடியாதுண்ண. கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டு விளையாடனுமே தவிர மகேலவிற்காக விதிகளை மத்தியஸ்தர் மாற்ற முடியாது. :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

என்னபா கன்தபு கச்சி மாறிடார் போலகிடகு :unsure:

தமிழ் ஊடகத்தில் மகெல ஐயவர்த்தனா நடுவரை அடிப்பதற்கு கையினை உயர்த்தினார் என்று செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். அப்படி உயர்த்தி இருந்தால் அவர் குறைந்தது 5, 6 போட்டிகள் விளையாட தடை கிடைத்திருக்கும். அடித்திருந்தால் அவர் சிலவருடங்கள் சர்வதேச போட்டியில் விளையாட முடியாமல் போகலாம். ஒருவர் கையினை உயர்த்தாமல் ஏன் எதிரி நாட்டவன் என்பதற்காக பொய் செய்திகளை வெளியிடுகிறார்கள். இதனால் எங்களுக்கு என்ன இலாபம். நான் 2009ல் அமெரிக்காவில் லான்சிங் என்ற இடத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு ஒன்றில் கலந்து கொண்டேன். சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிராக கவனயீர்ப்பினை நடாத்தினார்கள். அதற்கு எதிர்த்து தமிழர்கள் நாங்கள் கவனயீர்ப்பினை நடாத்தினம். 2 மணித்தியாலம் முடிய சிங்களவர்கள் கவனயீர்ப்பினை முடித்து சென்று விட்டார்கள். நாங்களும் அத்துடன் நிறுத்தி வீட்டுக்கு செல்ல வெளிக்கிட்டோம். உடனே தமிழ் ஊடகங்களில் தமிழர்களின் கவனயீர்ப்பு நிகழ்ச்சியினால் சிங்களவர்கள் தங்களது கவனயிர்ப்பு நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டார்கள் என்று செய்தி வெளியிட்டார்கள். உண்மையில் அங்கு நடந்தது என்னவென்றால் அவ்விடத்தில் சிங்களவர்கள் கவனயீர்ப்பு நிகழ்ச்சி நடாத்த 2 மணித்தியாலம் தான் வழங்கப்பட்டது. அதன்பிறகு சீனா நாட்டவர்களின் நிகழ்ச்சி ஒன்று அங்கே நடக்க இருந்தது.

நான் முழு மச்சும் பார்த்தேன், மஹேல வாக்கு வாதத்தில் ஈடு பட்டரே ஒழிய கையை ஒண்டும் தூக்கவில்லை. நடுவர் அந்த இடத்தில் பிழை விட்டது உண்மை. பந்து bat ல பட்ட உடனேயே "no ball" சொல்லியிருக்க வேணும். வடிவாக அவதானித்தால் இந்த CB series முழுவதும் நடுவர்கள் பல தவறுகள் விட்டிருக்கிறார்கள். பின்னர் அதே மச்சில் டில்சானின் அவுட்டை குடுக்காத போதும் அவர்களும் கொஞ்சம் கடுப்பாகினார்கள். ICC யும் நடுவர்களும் எத்தனையோ தரம் பக்கச் சார்பாக நடந்திருக்கிறார்கள் எனவே இது சாதாரணமானது. மஹ்ரூபின் ஓவரை பார்த்தால், முதல் மூண்டு பந்துகளுக்கும் சரியான அடி விழுந்தது நாலாவது பந்தும் கூவிக் கொண்டு எல்லைக்குப் போனாப் பிறகு no ball சொல்ல மஹேல கோவமடைந்தது சாதாரண விஷயம். no ball இல்லை எண்டு யாருமே கூறவில்லை. சொன்ன timing தான் பிழை. உந்த தமிழ் ஊடகக்காரர் ஐரோப்பிய உதை பந்தாட்டம் பார்க்க வேணும். அப்ப தெரியும் கையை தூக்கினா எப்பிடி இருக்கும் எண்டு. Manchester United, Chelsea போன்ற பெரிய கழக வீரர்கள் கூட ரெப்ரிக்கு அடக்கிற மாதிரி போய் கதைத்து இருக்கிறார்கள்.

தமிழ் ஊடகங்கள் இப்பிடி செய்திகளை திரித்து சுவையூட்டி வெளியிடுவதால் எதிர் காலத்தில் உண்மையான செய்திகளை வெளிவிடும் போது கூட அந்த செய்திகளின் நம்பகத் தன்மை குறித்து கேள்விகள் வரும்.

  • தொடங்கியவர்

'ரௌடி' - இது ஆங்கில சொல்

சரி, இதன் வரைவிலக்கணம் என்ன? - A rough, disorderly person

நடந்தது எங்கே? விளையாட்டில்

விளையாட்டில் - நடுவர் தீர்ப்பே இறுதியானது.

நடந்தது என்ன ? - நடுவரின் தீர்ப்பை ஒரு அணியின் தலைவர் விவாதித்தால் பணிக்கப்பட்டார்.

கேள்வி : இதில் எங்காவது எதையாவது தமிழ் ஊடகம் ஊதிப்பெருப்பித்துள்ளதா?

பதில்: பொதுவாக விளையாட்டு செய்திகளை தமிழ் ஊடகங்கள் ஆங்கில செய்திகளை மொழிபெயர்த்தே போடுகின்றன. அந்த ரீதியில் இவ்வாறான ஆங்கில செய்தியை அவர்கள் சரியாகவே மொழி பெயர்த்துள்ளனர்.

'

Jayawardene was found to have breached Article 2.1.3 of the ICC Code of Conduct, which relates to "showing dissent at an umpire's decision during an international match".'

http://sports.in.msn.com/cricket/india_australia_2011/article.aspx?cp-documentid=5899606

  • கருத்துக்கள உறவுகள்

இப்போட்டியின்போது பர்வீஸ் மஹரூவ் வீசிய பந்தொன்று துடுப்பாட்ட வீரரின் இடுப்புக்கு மேல் உயர்ந்தால் நடுவர் புரூஸ் ஒக்ஸன்போர்ட், அப்பந்தை நோபோலாக அறிவித்தார். இதனால் நடுவருடன் மஹேல ஜயவர்தன வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடுவருக்கு அடிக்க கையை ஓங்கினார். கேவலமான வார்த்தைகளால் ஏசினார்.

http://thaaitamil.co...%25e0%25ae%259f

கேள்வி : இதில் எங்காவது எதையாவது தமிழ் ஊடகம் ஊதிப்பெருப்பித்துள்ளதா?

பதில் - ஆம். நான் சிவப்பு கோடிட்டிருக்கும் பகுதி ஊதிப பெருப்பிக்கப்பட்ட பகுதி.

Jayawardene was found to have breached Article 2.1.3 of the ICC Code of Conduct, which relates to "showing dissent at an umpire's decision during an international match".'

இதன் தமிழாக்கம் "சர்வதேச போட்டி ஒன்றின் போது நடுவரின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமை" என்று தான் வரும்.

இப்போது நீங்கள் சொன்ன கருத்தை கூட நான் ஏற்றுக்கொள்ளவில்லை, மறு கருத்தை தெரிவிக்கிறேன் இதன் மூலம் நான் ரவுடி என்று பொருள் படுமா?

dis·sent (dibreve.gif-sebreve.gifntprime.gif)

intr.v. dis·sent·ed, dis·sent·ing, dis·sents

1. To differ in opinion or feeling; disagree.

2. To withhold assent or approval.

n.

1. Difference of opinion or feeling; disagreement.

2. The refusal to conform to the authority or doctrine of an established church; nonconformity.

3. Law A justice's refusal to concur with the opinion of a majority, as on a higher court. Also called dissenting opinion.

  • தொடங்கியவர்

பதில் - ஆம். நான் சிவப்பு கோடிட்டிருக்கும் பகுதி ஊதிப பெருப்பிக்கப்பட்ட பகுதி.

இதன் தமிழாக்கம் "சர்வதேச போட்டி ஒன்றின் போது நடுவரின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமை" என்று தான் வரும்.

However, the umpire adjudged it as a no-ball quite late and Mahela was unhappy with the decision.

He was then seen having an animated discussion with both the on-field umpires, Asad Rauf and Bruce Oxenford, who later laid out charge against the Lankan skipper.

Jayawardene admitted the offence and accepted the proposed sanction offered to him by ICC match referee Chris Broad.

"The actions of Mahela Jayawardene were unacceptable as the ICC code clearly states that whatever may be the situation, you have to always respect and accept an umpire's decision," said Broad.

"It is understandable that Mahela Jayawardene felt disappointed after Farveez Maharoof's delivery, which had been dispatched for a boundary, was also declared as a no-ball for a full toss above waist height.

"But as one of the senior most players in world cricket today and also as the captain of his side, Jayawardene must maintain a certain level of self-control and clearly his actions went beyond what would be deemed acceptable. That said, Jayawardene pleaded guilty to the offence and apologised for his actions," he added.

1. He was then seen having an animated discussion with both the on-field umpires,

இதில் தலைவர் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டார் எனக்கூறப்பட்டுள்ளது. பொதுவாக ஆங்கிலத்தில் தகாத வார்த்தைகள் பிரயோகிக்கப்படுவது வழமை. எனவே 'தகாத வார்த்தைகள்' பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்பதை மறுக்க முடியாது

2. Jayawardene pleaded guilty to the offence and apologised for his actions

தனது பிழையை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளது அவரது நடத்தை தவறு என்பதை அவரே ஏற்றுள்ளார் எனகூறப்படுகின்றது.

தமிழ் ஊடக செய்தியில் தவறு இல்லை என்றே கருதுகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.