Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாவில் அமெரிக்கா பரிந்துரைக்கப்போகும் தீர்மானம் 13 ஆம் திருத்தச் சட்டத்தினைக் காட்டிலும் குறைவானது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவாவில் அமெரிக்கா பரிந்துரைக்கப்போகும் தீர்மானம் 13 ஆம் திருத்தச் சட்டத்தினைக் காட்டிலும் குறைவானது

ஜெனீவா மனிதவுரிமை மாநாட்டில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட இருப்பதாகக் கூறப்படும் தீர்மானம் பற்றிய குறிப்பொன்றின்படி, அத்தீர்மானம் 13 ஆம் திருத்தச் சட்ட மூலத்தினைக் காட்டிலும் மிகவும் குறைவான உரிமைகளையே தமிழர்களுக்குப் பரிந்துரைத்துள்ளதாக அறியப்படுகிறது.

இதன் படி ஒன்றுசேர்ந்த வடக்குக் கிழக்கு மாகணங்கள் என்று 13 ஆம் திருத்தச் சட்டத்தினில் கூறப்பட்டிருக்கையில், அமெரிக்காவின் தீர்மானமோ வெறும் வடக்கில் மட்டுமே இராணுவ விலகல் எனும் கோரிக்கையை முன்வைக்கிறது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக்கொள்வதன் மூலம், அமெரிக்கா சிங்களப் பயங்கரவாதிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு கண்துடைப்பு அறிக்கைக்கு சர்வதேச அங்கீகாரம் தேடித் தந்திருப்பதோடு, சிங்களப் போர்க்குற்றவாளிகளை சர்வதேச விசாரணைகள் என்பதிலும் இருந்து காப்பாற்றியிருக்கிறது. மேலும் தமிழர்களுக்கென்று ந்நிதியானதொரு தீர்வொன்றை அரசியல் யாப்பின் திருத்தமொன்றின் மூலம் கொண்டுவரவேண்டிய அழுத்தத்திலிருந்தும் அது சிங்களத்தைக் காப்பாற்றியிருக்கிறது.

சிங்களத்தின் கண்துடைப்பு அறிக்கைக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கும்படி ஐ.நா மனிதவுரிமை அமைப்பினைக் கேட்டுக்கொள்ளும் இந்தத் தீர்மானம், இன்னொரு வருட காலத்தின்பின்னர் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி அறிக்கை சம்ர்ப்பிக்குமாறும் அது ஐ. நா வைக் கோருகிறது.

ஏற்கனவே பெயரளவில் இருக்கும் மாகாணசபை அமைப்பினை தமிழர்களிடம் திரும்பத் தர எத்தனிக்கும் இந்தத் தீர்மானம், மறுபுறம் திட்டமிட்ட இனவழிப்பினை தங்குதடையின்றி தொடர சிங்களத்திற்கு அனுமதியும் வழங்கியிருக்கிறது. மேலும் இந்தத் தீர்மானம், ஐ.நா வோ அல்லது வேறெந்த சர்வதேச அமைப்போ போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையொன்றிற்கு இலங்கையைத் தள்ளுவதிலிருந்தும் தடுக்கிறது.

ஆக, சிங்களத்தைப் பொறுத்தவரை அதற்கு எரிச்சலை உண்டாக்கிய ஒரே விடயம் என்னெவெனில், இதுவரை அது சொல்லிவந்த உள்நாட்டு விவகாரம் எனும் எல்லையைத் தாண்டி இன்று இப்பிரச்சினை சர்வதேசத்தில் விவாதிக்கப்பட்டிருப்பதுதான்.

நாடுகளுக்கிடையேயான உஅவுகளை ஆதாரம் காட்டிச் சிங்களம் தானே கூறிய தீர்மானங்களை சாக்குப் போக்குச் சொல்லி செய்யாமல் விடும் என்பது நிச்சயமாக்கப்பட்டுள்ள இத்தருணத்தில், ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை எந்தவொரு சாதகமான தீர்வும் எட்டப்படும் சாத்தியங்கள் முற்றாகவே அற்றுப்போகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இனவழிப்பில் காத்திரமான பங்கேற்று இன்று ஏதுமறியா அப்பாவிபோல கண்துடைப்புத் தீர்மானமொன்றைக் கொண்டுவரும் அமெரிக்க நிர்வாகத்திற்கு அப்பாவித் தமிழர்கள் சிலர் வாழ்த்தும் நன்றியும் கூறியிருப்பதும் இங்கே நோக்கத்தக்கது.

1980 களில் இனநெருக்கடிக்குத் தீர்வாக ஜே.ஆர் - அமெரிக்கக் கூட்டு கொழும்உ - அமெரிக்கத் தமிழரான ஏ.ஜே. வில்சன் ஆலோசனைப்படி மாவட்ட சபைகள் திட்டத்தினை முன்வைத்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

இன்றைய அமெரிக்க தீர்மானம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடென்பது விவாததிற்குரியது. தமிழ்நாட்டு புத்திஜீவிகள் சிலரின் கருத்துப்படி தென்னாசியாவின் தெற்குக் கோடியில் இன்னுமொரு திபெத் உருவாவதை அவர்கள் கவலையுடன் பார்க்கிறார்கள். ஆனால் விபரமறிந்த உயரதிகாரிகளின் கருத்துப்படி இந்தியாவின் தெற்குக் கோடியில் இடம்பெற்றுவரும் பெரும்பாலான சீன ஊடுருவல்கள் இந்தியாவின் மெளன சம்மதத்துடந்தான் நடந்த்தேறிவருகின்றன.

தமிழின அழிப்பில் தான் ஆற்றிய பங்கிற்கான வெகுமதிகளை இந்தியா வெட்கமின்றி வெளிப்படையாகவே இன்று இலங்கையிடம் கேட்கத் தொடங்கியுள்ளது. இந்து நாளேட்டின் செய்திப்படி இந்தியா மற்றைய நாடுகள் தமது எண்ணெய் அகழ்வை ஆரம்பிக்கும் முன்னர் தானே இலங்கையின் கடற் பிராந்த்யத்தில் எண்ணெய் அகழ்வில் ஈடுபட வேன்டும் என்று இலங்கையை வற்புறுத்தியிருக்கிறது. இந்துவின் கருத்துப்படி, சர்வதேச கண்டனங்கள், உள்நாட்டு விமர்சங்களையெல்லாம் துச்சமென மதித்து இனவழிப்பில் இலங்கைக்கு முற்றான ஒத்தாசை வழங்கி பல்லாயிரக்கணக்கான மக்களையும் அவர்களது உரிமைப் போராட்டத்தையும் அழிக்கத் துணை நின்றதற்குச் சன்மானமாக தனது கோரிக்கைகளுக்கு சாதகமான பதிலை இலங்கை வழங்கவேண்டுமென்று வலியுறுத்தி வருகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த புத்தி சீவி ஒருவரின் தகவல்ப்படி சுமார் 3 லட்சம் தமிழர்களை சித்திரவதை செய்வதற்காக அமைக்கப்பட்ட முற்கம்பி வேலி முகாம்களின் முட்கம்பிகள் கூட இந்தியாவிலிருந்துதான் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. உயர்மட்ட திகாரிகளின் செல்வாக்கின் மூலம் இந்த முட்கம்பி வியாபாரம் நடந்தேறியுள்ளது.

தமிழ்நாட்டுப் பத்திரிக்கைகளின் தகவல்ப்படி, சர்வதேசத்தில் அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானம் பற்றிய பரபரப்பு நீடித்து வருகையில், இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் இதுபற்றிய எந்தவிதமான மெல்லிய சலனமும் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது. இப்படியொரு தீர்மானம் கொன்டுவரப்படுவதே இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்குத் தெரியாது. அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் வெத்துவேட்டு தீர்மானம் பற்றிய விளக்கம் தமிழ்நாட்டுக்கே இதுவரை சரியாகத் தெரியாத போது, ஏனைய மாநிலங்களுக்கு அது போய்ச் சேர்வதென்பது சாத்தியமற்றதுதான்.

அமெரிக்காவினால் கொன்டுவரப்படப்போகும் இத்தீர்மானம் தமிழர்களுக்கு ஆறுதலைத் தருமா அல்லது ஏற்கனவே முற்றான இனவழிப்பொன்றினை சந்தித்துவரும் அவர்களை மேலும் படுகுழியில் தள்ளுமா என்கிற கெள்வி அரசிய வட்டாரங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டு அரசியலென்பது மற்றையவர்களின் திட்டங்களுக்கேற்பச் செயற்படாமல் தனக்கென்று ஒரு திட்டத்தினை வகுத்துக்கொள்வது இன்று மிகவும் அவசியமானது.

நன்றி தமிழ்நெட்

US-resolution binds Tamils to less than the 13th Amendment

[TamilNet, Thursday, 08 March 2012, 07:01 GMT]

A draft resolution that appears in media reports as has been tabled by the USA at Geneva UNHCR, while specifying the ‘constructive’ LLRC recommendations that has to be implemented, talks of only de-militarizing the North but not the East and confines the model of political solution to undefined devolution of powers to the provinces and not to the North-East homeland of Eezham Tamils. While internationally binding Tamils to further dilution of the already inadequate provisions of the Indo-Lanka Agreement, the US-resolution giving international endorsement to LLRC-implementation bails out Sri Lankan state and its regime from international investigations of the genocidal crimes and from the need of any constitutional restructure of the unitary state.

The resolution ‘encourages’ the UNHCR to provide ‘advice and technical assistance’ to such a hoodwink, the steps of which too will be decided by Sri Lanka, and requests the UNHCR to present a report after a year, at the 22nd session.

While limiting, specifying and binding Eezham Tamils to seek political settlement only within the provincial model that is already existing in the unitary constitution, the imbalanced resolution on the other hand gives much scope, freedom and time to the manoeuvrings of the genocidal state.

The resolution also seals and binds the UN or any other international organisation from pursuing the case of Sri Lanka any further.

The only irritant in the resolution projected by Sri Lanka is that for the first time the state requires to comes under official international scrutiny by a UN body.

But, while Sri Lanka as a state could always manipulate every step of international scrutiny through bilateral ‘give and take’ or opportunistic alignments in the

international bodies

, the Eezham

Tamil

nation without state has no guarantees to get anything.

The game of farce enacted by the ultimate saviour and the genocidal state is ingeniously camouflaged to the gullible. Hats off to the ‘management’ of the deception, as we see sections of Tamils are already ‘thanking’ the Obama Administration.

In the early 1980s, to diffuse stress on the Sri Lankan state and on the Jeyawardane regime, the USA with the help of Colombo-US Tamils like AJ Wilson tried with the ‘District Councils’.

India’s stand on the current US-resolution is a much-debated topic.

Sections of academics in Tamil Nadu worry that another Tibet should not come in the southern part of South Asia. But informed diplomatic circles say that many of the Chinese inroads into the region take place with the silent nod of India.

India is explicitly shameless in expecting returns from Sri Lanka for its complicity in the genocide.

“India is persuading Sri Lanka to allocate

oil exploration

blocks in the waters that separate them as it considers the location too strategically important to allow companies from other nations to base themselves in this area.,” The Hindu said on Tuesday.

“New Delhi expects a favourable response after having stood by Sri Lanka during its annihilation of the LTTE's military structure even though sections of the world community and Indian domestic public opinion assailed the security forces for

human rights

abuses,” The Hindu feature further said.

A Tamil Nadu academic on Wednesday exposed that even the barbed wires that kept the Eezham Tamils in the crime-filled detention camps have gone from India, from some businessmen having access to corridors of power.

Sections of media in Tamil Nadu lament that while much debate goes on internationally on the US-resolution at Geneva, the various states within India, outside of Tamil Nadu have no idea on what is going on.

How to expect the other states in India to take a stand, when the nuances of the US-staged farce is neither understood nor explained properly even in Tamil Nadu?

Whether the US-resolution getting passed in the UNHRC would relieve or further plunge the already traumatised Eezham Tamils is the question that is seriously debated in their political circles.

Polity in Tamil Nadu may have to think of its own paradigm in creating currents rather than being carried away in the waters of others.

* * *

Pro-US lobbyists among Tamils claim ‘success’ in bringing out the draft resolution. But the differences between an earlier ‘leaked’ draft and the ‘finally’ tabled draft, show the failures resulting from passive lobbying without an enlightened mass movement.

The US resolution appeared in Sunday Times in Colombo on Wednesday, as the version that has been finally tabled in the UNHRC at Geneva, follows:

US_draft_resolution_07_03_2012_97169_445.jpg

* * *

An earlier version of the draft resolution that was leaked and was being circulated in the media two weeks back follows. Note the changes that have occurred between the two drafts:

For comparison purposes, additional texts are indicated by

underlines

and removed texts are shown by

delete

marks.

Guided by the Charter of the United Nations, the Universal Declaration of Human Rights, the International Covenants on Human Rights, and other relevant instruments,

Reaffirming that States must ensure that any measure taken to combat terrorism complies with their obligations under international law, in particular international human rights, refugee and humanitarian law, as applicable,

Noting the Report of Sri Lanka’s Lessons Learnt and Reconciliation Commission (LLRC) and its findings and recommendations, and acknowledging its possible contribution to Sri Lanka’s national reconciliation process,

Welcoming the constructive recommendations contained in the LLRC report, including the need to credibly investigate widespread allegations of extra judicial killings and enforced disappearances, de-militarize the north of Sri Lanka, implement impartial land dispute resolution mechanisms, reevaluate detention policies, strengthen formerly independent civil institutions, reach a political settlement involving devolution of power to the provinces, promote and protect the right of freedom of expression for all, and enact rule of law reforms,

ExpressingNoting with concern that the LLRC report does not adequately address serious allegations of violations of international law, and expressing serious disappointment that the Government of Sri Lanka has not fulfilled its relevant legal obligations and stated commitment to initiate credible and independent investigations and prosecutions of those responsible for such violations,

1. Calls on the Government of Sri Lanka to implement the constructive recommendations in the LLRC report and additionally to take immediateall necessary additional steps to fulfill its relevant legal obligations and statedcommitment to address serious allegations of violations of international law by initiatinginitiate credible and independent investigationsactions to ensure justice, equity, accountability and prosecutions of those responsiblereconciliation for such violations,all Sri Lankans,

2. Requests that the Government of Sri Lanka present a comprehensive action plan before the 20th session of the Human Rights Councilas expeditiously as possible detailing the steps the Government has taken and will take to implement the LLRC recommendations and also to address alleged violations of international law,

3. Encourages the Office of the High Commissioner for Human Rights and relevant special mandate holdersprocedures to provide, and the Government of Sri Lanka to accept, advice and technical assistance on implementing those steps. steps and requests the Office of the High Commissioner for Human Rights to present a report to the Council on the provision of such assistance at its twenty-second session.

வடக்கனும் கிழக்கனும் சேரவே முடியாதா?

- நன்றி இரகுநாதன் மொழிபெயர்ப்பிற்கு.

தமிழின அழிப்பில் தான் ஆற்றிய பங்கிற்கான வெகுமதிகளை இந்தியா வெட்கமின்றி வெளிப்படையாகவே இன்று இலங்கையிடம் கேட்கத் தொடங்கியுள்ளது. இந்து நாளேட்டின் செய்திப்படி இந்தியா மற்றைய நாடுகள் தமது எண்ணெய் அகழ்வை ஆரம்பிக்கும் முன்னர் தானே இலங்கையின் கடற் பிராந்த்யத்தில் எண்ணெய் அகழ்வில் ஈடுபட வேன்டும் என்று இலங்கையை வற்புறுத்தியிருக்கிறது. இந்துவின் கருத்துப்படி, சர்வதேச கண்டனங்கள், உள்நாட்டு விமர்சங்களையெல்லாம் துச்சமென மதித்து இனவழிப்பில் இலங்கைக்கு முற்றான ஒத்தாசை வழங்கி பல்லாயிரக்கணக்கான மக்களையும் அவர்களது உரிமைப் போராட்டத்தையும் அழிக்கத் துணை நின்றதற்குச் சன்மானமாக தனது கோரிக்கைகளுக்கு சாதகமான பதிலை இலங்கை வழங்கவேண்டுமென்று வலியுறுத்தி வருகிறது.

இந்திய பல வழிகளில் ஏமாறி இல்லை தானே ஏமாந்தது. இங்கே இந்த கச்சாய் எண்ணெயை தானே பெற வேண்டும் என கேட்கிறது, காரணம் அதையும் சீனாவுக்கு இழந்துவிடாமல் இருக்க.

ஆனால், கூட்டமைப்பு தமிழருக்கு நியாயமான தீர்வை இந்திய பெற்றுத்தந்தால் 'எல்லா வளமும் உங்களுக்குத்தான்' என பேரம் பேசுவதில் தவறில்லை.

அமெரிக்காவினால் கொன்டுவரப்படப்போகும் இத்தீர்மானம் தமிழர்களுக்கு ஆறுதலைத் தருமா அல்லது ஏற்கனவே முற்றான இனவழிப்பொன்றினை சந்தித்துவரும் அவர்களை மேலும் படுகுழியில் தள்ளுமா என்கிற கெள்வி அரசிய வட்டாரங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

கடலில் தத்தளிப்பவன் யார் தனக்கு கயிறை வீசிகிறான் எனப்பார்ப்பதில்லை, முதலில் உயிர் வாழவே எண்ணுகிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அற்பத் தீர்மானத்தையும் சிறிலங்கா தூக்கிக் குப்பையில் எறியும்.அமெரிக்கா கடும் நிலைப்பாட்டை எடுக்க வைக்க சிறிலங்காவே வழிவகுக்கும்.ஏனெனில் சீனா,ரஸ்சியா அதன் பலமான நண்பர்கள்.இந்தியா வேண்டாமென்று சிறிலங்கா உதைத்து தள்ளினாலும் அந்த வண்டியில் நானும் ஏறிக்கொள்கிறேன் என்று தொற்றிக் கொள்ளும் வெட்கம் கெட்ட நாடு என்று சிறிலங்காவுக்குத்தெரியும்.

இந்த அற்பத் தீர்மானத்தையும் சிறிலங்கா தூக்கிக் குப்பையில் எறியும்.அமெரிக்கா கடும் நிலைப்பாட்டை எடுக்க வைக்க சிறிலங்காவே வழிவகுக்கும்.ஏனெனில் சீனா,ரஸ்சியா அதன் பலமான நண்பர்கள்.இந்தியா வேண்டாமென்று சிறிலங்கா உதைத்து தள்ளினாலும் அந்த வண்டியில் நானும் ஏறிக்கொள்கிறேன் என்று தொற்றிக் கொள்ளும் வெட்கம் கெட்ட நாடு என்று சிறிலங்காவுக்குத்தெரியும்.

இந்த அற்பத் தீர்மானத்தையும் சிறிலங்கா தூக்கிக் குப்பையில் எறியும்.அமெரிக்கா கடும் நிலைப்பாட்டை எடுக்க வைக்க சிறிலங்காவே வழிவகுக்கும்.ஏனெனில் சீனா,ரஸ்சியா அதன் பலமான நண்பர்கள்.இந்தியா வேண்டாமென்று சிறிலங்கா உதைத்து தள்ளினாலும் அந்த வண்டியில் நானும் ஏறிக்கொள்கிறேன் என்று தொற்றிக் கொள்ளும் வெட்கம் கெட்ட நாடு என்று சிறிலங்காவுக்குத்தெரியும்.

அதுக்கு மகிந்தா தொடர்ந்து ஆட்சியில் இருந்து மீண்டும் சேர முடியாத முரன்பாட்டை மேற்குலகத்துடன் ஏற்படுத்த வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு மகிந்தா தொடர்ந்து ஆட்சியில் இருந்து மீண்டும் சேர முடியாத முரன்பாட்டை மேற்குலகத்துடன் ஏற்படுத்த வேண்டும்...

அப்போ

மகிந்தஆட்சிக்கு வந்தது சரி என்கிறீர்களா சசி???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொத்ததிலை அமெரிக்கா செய்தது சிங்களம் போட்ட LLRC எனும் கேலிக்குரிய கோட்டை நேர் கோடு ஆக்கி விட்டது தான். போர்குற்றம், இனவழிப்பு, தீர்வு ... எல்லாத்துகும் ஒரு பெரிய ஆப்பு விழுந்திருக்கு.

அப்போ

மகிந்தஆட்சிக்கு வந்தது சரி என்கிறீர்களா சசி???

இல்லை வர விட்டு இருக்க கூடாது ஆனால் வந்துவிட்டார் சரி இனி அவரை வைத்தே மேற்குலகத்தின் ஆதரவை பெறவேனும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிவு இணையத்தளத்திற்குவந்த ஓர் வாசகரின் மனக்குமுறல் உள்ளிட்ட மின்னஞ்சல்.

பதிவும் சேர்ந்து மக்களை முட்டாள்களாக்கட்டும்!

தமிழ் அரசியல்வாதிகளின் அரசியல் வங்குரோத்து! சிறிலங்காவுக்கு ஆதரவாக மாறிய ஜெனீவா பிரகடனம்.

வணக்கம்!

முன்னர் எழுதிய கடிதத்தை தொடர்ந்து மீண்டும் எழுத வேண்டிய நிர்பந்தம் எழுந்துள்ளது. ஐ.நா வில் தற்போது அமெரிக்கா தனது தீர்மான நகலை சமர்ப்பித்துள்ளது. முன்னர் ஊடகங்களுக்கு கசிந்த நகலை விட மேலும் திருத்தங்களுடன் அது கையளிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்திலேயே TNA உட்பட உலகத்தாலும் தமிழர்களாலும் நிராகரிக்கப்பட்ட LLRC இன் அறிக்கையை அது வரவேற்கிறது. அதற்கு அங்கீகாரம் கொடுத்து உப்புச்சப்பற்ற 13 வது திருத்தச் சட்டத்துக்கும் குறைவான ஏற்கனவே நடைமுறையிலுள்ள மாகாண சபையை தீர்வாகவும் மறைமுகமாக பரிந்துரைக்க விழைகிறது.

ஏற்கனவே கசிய விடப்பட்ட அமெரிக்க மாதிரித் தீர்மானத்தில் இருந்த ஒரு சில சர்வதேச நியமங்களுக்குள் சிறிலங்காவை தள்ளிவிடக்கூடிய வார்த்தைப்பிரயோகங்களையும் நீர்த்துப்போகச் செய்து உண்மையிலேயே தமிழர்களுக்கு எதிரான ஒற்றையாட்சி ஸ்ரீலங்கா அரசைப் பாதுகாக்கும் ஒரு தீர்மானமாகவும், எதுவித சர்வதேச விசாரணை தொடர்பான எதிர்கால கோரிக்கைகளையும் அனைத்துலகப் பரப்பில் முடக்கி, இல்லாமல் செய்து விடக்கூடியதாகவும் இத்தீர்மானம் அமைகிறது.

ஏற்கனவே கசியவிடப்பட்ட மாதிரியில் குறித்திருந்த கால அவகாசம் குறித்த நிபந்தனையில் இருந்தும் ஸ்ரீலங்கா அரசை விடுவித்து, காலக்கெடுவை ஐ.நா சபையின் மனித உரிமை அமைப்புக்கு மாத்திரமே இந்த தீர்மானம் வழங்குகிறது. அதுவும் ஒரு வருடம் பின்தள்ளிப் போடப்பட்டுள்ளது.

அத்துடன் மூன்று விடயங்களை ஸ்ரீலங்கா அரசு செய்ய வேண்டுமெனக்கோருகிறது,

1 ) ஸ்ரீலங்கா அரசானது அனைத்து "ஸ்ரீலங்கன்" மக்களும் நீதியான சம அந்தஸ்துடன் வாழ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,

2 ) ஸ்ரீலங்கா அரசானது, LLRC அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதட்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளையும் பட்டியல் படுத்த வேண்டும்,

3 ) ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பும் ஏனைய இது தொடர்பான அமைப்புகளும் LLRC இல் கூறப்பட்ட நல்ல விடயங்களை நடை முறைப்படுத்துவதட்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் ஸ்ரீலங்கா அரசுக்கு வழங்கி உதவ முன்வரவேண்டும், எனவும் ஸ்ரீலங்கா அரசு இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இத்தீர்மானம் கூறுகிறது.

இது தமிழ் மக்களுக்கு ஆதரவான தீர்மானமா? அல்லது இனப்படுகொலை புரிந்த தமிழர்களது உரிமைகளை மறுத்து தமிழர் தாயகத்தை கபளீகரம் புரியும் சிறிலங்காவுக்கு ஆதரவான தீர்மானமா? மகிந்த சிந்தனையில் உருவான "LLRC " அறிக்கைக்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கி, இனப்படுகொலை குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்காவை தப்ப வைக்கும் தீர்மானமல்லவா இது? மக்களே முடிவு செய்யுங்கள்.

இத்தீர்மானத்தை தமிழ் அமைப்புகள் ஏன் ஆதரித்தன? இவர்களது அரசில் வந்குரோதொத்து தனத்தயல்லவா இது காட்டியுள்ளது. உலக சமுதாயத்தின் முன் எமது கோரிக்கைகளை முன் வைக்கக் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தையும் இழக்கச்செய்தது மட்டுமள்ள, முள்ளிவாய்க்கால் படுகொலைகளைகளையும் அழிவுகளையும் நியாயப்படுத்தும் எதிரியின் பொறிமுறைக்கு அங்கீகாரம் பெற்றுக்கொடுத்தும், தொடர்ந்து நடக்கும் இனப்படுகொலைகளை, மறைமுகமாக அங்கீகரித்தும், தமிழர் நிலங்களை பறிப்பதை அங்கீகரித்தும் தமிழர் தலைமைகள் துரோகம் இழைத்துள்ளன.

ஆயுத பலமின்றி அரசியல், தார்மீக பலத்தை மட்டும் நம்பியிருந்த தமிழினத்தை தமது அரசியல் உறுதியற்ற, அடிவருடும் போக்குடன் ஆதரித்து அறிக்கைகள் விட்ட அமைப்புகளும் எதிர்த்து தமிழரது நிலைப்பாட்டை கூறாத அமைப்புகளும் உள்ளடங்கும் TNA , GTF , மக்களவைகள் , BTF , TGTE ,TGTE ஜனநாயக அணி போன்ற சகல தமிழ் அமைப்புகளும் அதல பாதாளத்தில் தள்ளி விட்டுள்ளன.

ஜனநாயகத்தை பேணும் மேற்கு நாடுகளிலே தமது நாட்டின் கொள்கைக்கோ மக்களின் விருப்புகளுக்கோ எதிரான இத்தகைய செயற்பாட்டில் அரசியல்வாதிகளோ கட்சிகளோ யாரும் ஈடுபட்டால் ஊடகங்கள் கொதித்து எழும். அவ்வரசியல்வாதிகள் மக்களுக்கு பதில் கூற முடியாமல் உடனேயே தமது பதவிகளை துறந்து வீடு செல்லவேண்டி வரும். ஆனால் உயிரையும் உடமைகளையும், இரத்தத்தையும் , சதையையும் கொடுத்து கட்டி வளர்த்த உரிமைப்போராட்டத்தை மிக இலகுவில் ஆதிக்கசக்திகளிடம் தாரைவார்த்து விட்டு ஒன்றுமே நடக்காதது போல் உலவும் அரசியல்வாதிகள் எம்மினத்தில் மட்டுமே உள்ளார்கள். மக்களிடம் இவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக்கேட்பது மட்டுமில்ல எதிரிக்கு தமது சாணக்கியத்தால் பலம் சேர்க்கும் நடவடிக்கைகளை விட்டு அரசியலை துறந்து ஒதுங்கி விடுதலே நல்லது. "உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரமாவது செய்யாமல் இரு" என்பது இதற்கு தகுந்த தமிழ்ப் பழமொழி.

தமிழர் அரசியலை இனி இளைய சமுதாயமே முன்னெடுக்க வேண்டும் எனும் யதார்த்தத்தை முள்ளிவாய்காலின் பின்னான இந்த 3 ஆண்டுகால தமிழர் அரசியல் செயல்பாடுகள் பட்டவர்த்தனமாக காட்டி நிற்கிறது. இதை உணர்ந்து இளையவர்கள் தமிழர் அரசியலை வழி நடத்த முன்வருவது காலத்தின் கட்டாயமாகி விட்டது.

இப்படிக்கு

பாமரத்தமிழன்

Edited by Vily

ஜெனீவாவில் அமெரிக்கா பரிந்துரைக்கப்போகும் தீர்மானம் 13 ஆம் திருத்தச் சட்டத்தினைக் காட்டிலும் குறைவானது

உண்மை. ஆனால், இந்த தீர்மானம் வரும் வரை நாம் எதையாவது, எந்த ஒரு உரிமையையாவது இல்லை நீதியை வென்றெடுத்தோமா? இல்லை மாறாக தீயென சிங்களம் இருப்பதையும் அழித்து வருகின்றது.

எம்மிடம் எதுவுமே இல்லை எம் மக்களை காப்பாற்ற.

எனவே அந்தவகையில் இந்த அமெரிக்க தீர்மானம் ஒரு புதிய சிறு நம்பிக்கையை தந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பற்றிக்கொள்ளலாம். இல்லை வேறு ஒன்றிற்காக காத்திருக்கலாம். இல்லை கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி எமது இலக்குகளை நோக்கி மெல்ல மெல்ல நகரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தோழர்களுக்கு என்றுமே நான் சப்போட்டு.. பல தறுதலைகள் ஆச்சோ ஒச்சோ என திரியுதுகள் .. அதுகளை நாளை கவனித்து கொள்ளுவேன்.. எல்லாமே நான் தெளிவாக நான் சொல்லிட்டு வாறன்.. இதில் கூத்தமைப்பு பங்கேற்று.. சொறிலங்கா இதுவரை கிழித்தெறியப்பட்ட ஒப்பந்தங்களை காட்டி சர்வதேச கண்காணிப்பு வேண்டும் என கூறலாம் இல்லையா..? இங்கிட்டு இருந்து இன்லேட்ன்டு லெட்டர் போட்டால் யாருக்கு உதவும் .. குறைந்த படசம் நேரில் சந்தித்து பேசினால்தன்ப்பா மரியாதை இருக்கும்.. அவன் நல்லிணக்க குழு நிறைவேறி விட்டது என்றால் நீங்கள் எல்லாம் குச்சு மிட்டாய் சாப்பிடுவீர்களா...?

இராஜதந்திரம் என்பது ஆயுதம் ஏந்தப்படாத யுத்தம். இங்கே இவர்கள் செய்தது சரியா இல்லை பிழையா எனக்காலம் விரைவில் சொல்லும்.

ஆயுத பலமின்றி அரசியல், தார்மீக பலத்தை மட்டும் நம்பியிருந்த தமிழினத்தை தமது அரசியல் உறுதியற்ற, அடிவருடும் போக்குடன் ஆதரித்து அறிக்கைகள் விட்ட அமைப்புகளும் எதிர்த்து தமிழரது நிலைப்பாட்டை கூறாத அமைப்புகளும் உள்ளடங்கும் TNA , GTF , மக்களவைகள் , BTF , TGTE ,TGTE ஜனநாயக அணி போன்ற சகல தமிழ் அமைப்புகளும் அதல பாதாளத்தில் தள்ளி விட்டுள்ளன.

இந்த அமர்வு முடிந்த பின்னர் இதன் பிரதிநிகளை சந்தித்து கேள்விகளை கேட்கவேண்டும். இவர்கள் ஏன்இந்த நிலைப்பாட்டை எடுத்தார்கள் என்ற காரணம் அப்பொழுது தெளிவாக்கப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

<p>சர்வதேச அரசியலில் ... இப்படியான பொன் போன்ற வாய்ப்பு வரும்போது சொறிலங்கா அரசின் .. 1823 ஆம் ஆண்டில் இருந்து சிங்க்ள அரசின் தமிழின விரோத போக்கை துகிலிருக்கும் வாய்ப்பை பயன் படுத்தி இருக்க வேண்டும்.. கூத்தமைப்பு அல்லக்கை பேமானீஸ்... நாளை கிந்தியா குடுக்கும் ரிவிட்டில் தான் எல்லாமே இருக்கு.. அப்பயும் திருந்தாதுகள்  .. தறுதலைகள்..  அவரை கொடி தேசமாம் ஒரே சிப்புதான்.. :D :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

தமிழ்னெட் ஏதோ இலங்கை 13ம் திருத்ததை அமூல் படுத்த அதை அமெரிக்கா மறுபது போல் எழுதுகிறது. ஒன்று 13ம் திருத்தம் இந்தியாவின் தொடக்கம். அதை இந்தியா என்றைக்குமே அமூல் படுத்த இலங்கையை கேட்கவில்லை. இரண்டு அமெரிக்கா அதையேன் கட்டி அழவேணும். அதன் பின் வந்த 19ம் திருத்தம் 13றை சட்ட விரோதமாக்குகிறது. வடக்கு-கிழக்கு பிரிக்க பட்டுவிட்டது. அதன் பின் எதற்கு அமெரிக்காவிடம் 13ம் திருத்தத்தை எடுத்து செல்ல வேண்டும்.

13ம் திருத்தத்தை கொண்டுவந்த இந்தியாவே தமிழரை ஏய்க்க புதிதாக ஏதாவது வேணுமென்று நினைத்து 13 + க்கு போவிட்டது(கிருஸ்ணா 13+ஐ கூட்டமைப்பு நாடாளு மன்ற குழுவிடம்தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றுவிட்டார்). ஆனால் எதற்கு தமிழ்னெட் இந்த கைவிடப்பட்ட 13ந்திருத்தத்தை பாவித்து பிரேரணையை எதிர்க்க முயல்கிறது. கூட்டமைப்பு நாடளுமன்ற தெரிவுக்குழுவுக்கு போக விரும்பவில்லையாம். தமிழ் நெட்டிடம் இந்த 13+ பெற்றுக்கொள்ள வேறு முறைகள் இருக்கா?. 13+ செனெட் சபை என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்னெட்டுக்கு தெரியுமோ தெரியவில்லை. எனது அபிப்பிராயம் இந்த செனெட் சபை 13+ விட அமெரிக்காவின் பிரேரணை 1000 மேல்.

அமெரிக்கா இந்த பிரேரணை மூலமாக எந்த ஒரு அரசியல் தீர்வையும் பரிந்துரைக்க முயவில்லை. LLRC இன் அறிக்கையை அது ஏதாவது ஒரு அரசியல் அமைப்பை தமிழருக்கு பரிந்துரைப்பதாக வியாக்கியானப் படுத்த முடியாது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து கூத்தமைப்பை விடுங்கள் அல்லது இந்த மேனா மினுக்கி சுமந்திரனை விடுங்கள் ( குடிக்க கூழ் இல்லாத தேசத்தில் குளிப்பதற்கு அத்தர் கேக்குதாம்) ஏண்டா அவனவன் ஏர் ஓட்டி திரியுறான் இவன் கோட்டு சூட்டு.. தறுதலை.. மக்களைத்தான் மக்கள் பிரதிநிதி பிரதி பலிக்கவேண்டும்... இவன் ஒண்னாம் நம்பர் தறுதலை போல தெரியுது.. இவன் சரியில்லை... சிங்களடத்துனைடய நயவஞ்சக திட்டங்களை இந்த மாதிரி சபையில் தெளிவாக எடுத்துரைக்க யாரும் இல்லை.. குறைந்த பட்சம் நல்லிணக்க குழு என்று வரையறுக்கபட்ட அமெரிக்கவினால் கொண்டு வர பட்ட தீர்மானத்திற்கு சர்வதேச கண்காணிப்பு வேண்டும் என யாரும் கோர இல்லை... அவன் சிங்களவன் 3050 வருடம் அவகாசம் கேட்டால் அங்கிட்டு யாராவது இருப்பார்களா அப்பூ.. ஆமாம் அனைத்தினையும் டெலிகிராம் தந்தி வழியாக நிறைவேற்றி விட்டோம் என ஜால் ஜலாப்பு சொல்லுங்கள்

ஆங்கிலம் ஏன் தமிழ் கூட வாசிக்க தெரியாதவர்களால் 13 ஆவது திருத்த சட்டத்தை பற்றி கதைத்து என்ன பிரயோசனம் .இலங்கை -இந்திய ஒப்பந்தம் அளவு தீர்வு இனி யாராவது எடுத்தால் நான் தீக்குளிக்கின்றேன் .(வேண்டாம் என்றால் பரவாயில்லை வெங்காயங்கள் அதை அமுல படுத்த நினைத்தவரை கொலை வேறு செய்தார்கள் )

அமெரிக்கா பணியாரம் தரும் வாங்கி சாப்பிடுங்கோ .

யாரும் யாருக்கும் எதையும், அது பயிற்றங்காய் பணியாரம் என்றாலும், இலவசமாக தரப்போவதில்லை.

'புலிகளால் தான் மேற்குலகமும் இந்தியாவும் செந்த ஒரு அரசியல் தீர்வையும் முன்வைக்காமல் உள்ளது' என்பது சிலரின் கருத்தாக முள்ளிவாய்க்காலுக்கு முன்னராக இருந்தது. ஆனால், இன்று கூட்டமைப்பை, தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கும் கட்சியை, ஒரு பொருட்டாகவே இந்தியா மதிக்கவில்லை. ஆக, தவறு எங்கே உள்ளது என்பது தெளிவாகின்றது.

இப்படியொரு தலைப்பைப் போட்டு, பொருத்தமற்ற முட்டாள்த் தனமான விவாதமொன்றை முன்வைக்கும் அளவுக்கு தமிழ் ஊடக அரசியல் விமர்சகர்கள் / ஊடகவியலாளர்கள் இருப்பது தமிழினத்தின் சாபக் கேடு.

ஜெனீவாவுக்கும் 13 ஆம் திருத்தச் சட்ட மூலத்திற்கும் என்ன சம்பந்தம்?

ஜெனீவாவில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு பற்றியா பேசுகிறார்கள்? அப்படியானால் தமிழ் தரப்பின் பிரதிநிதித்துவம் இல்லாமல் எப்படி பேச முடியும்?

போர்க்குற்றம் சம்பந்தமான இதை ஆரம்பமாகக் கொண்டு, தமிழர் எதிர்பார்க்கும் முழுமையான அரசியல் தீர்வுக்கு தேவையான மனோபாவத்தை ஏற்படுத்த வேண்டியது தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் கடமை. இதை (இங்கு ஒருசிலர் கூறுவது போல் மேட்டுக்குடி மனோபாவத்துடன் விடப்படும்) ஆதரங்களைற்ற அறிக்கைகள், கடிதங்கள் மூலம் ஏற்படுத்த முடியாது.

கிடைக்கும் சந்தர்ப்பங்கள் அனைத்தையும் முழுமையாக பயன்படுத்த வேண்டும். பல தரப்பினரை சந்திக்க வேண்டும் - தமிழர் எதிர்பார்க்கும் முழுமையான அரசியல் தீர்வுக்கு வலுச்சேர்க்கும், ஆதரங்களுடன் தயாரிக்கப்பட்ட ஆவணங்களை உடன் கொண்டு சென்று விநியோகிக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.