Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ வழிவகை செய்வதே நமது நோக்கம் : கலைஞருக்கு மன்மோகன்சிங் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க. தலைவர் கலைஞருக்கு பிரதமர் மன்மோகன்சிங் நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், ‘’ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி மார்ச் 9-ந் தேதியிட்ட தாங்களின் கடிதத்துக்கு இந்த பதில் கடிதம் அனுப்பப்படுகிறது.

இலங்கை வாழ் தமிழர்களின் நல்வாழ்வு, பாதுகாப்பு, முன்னேற்றம் இவற்றில் இந்தியா உயர் முக்கியத்துவம் கொடுத்து வருவதை நீங்கள் அறிவீர்கள். கடந்த 2009-ல் இனப்போர் முடிவுக்கு வந்ததும் அங்குள்ள தமிழ்களுக்கு அரசியல் ரீதியானதீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் இலங்கை அரசை இந்தியா இடைவிடாமல் வலியுறுத்தி வருகிறது.

இடம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் விரைவிலேயே சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். அவர்களுக்கு தேவையான மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவசரகால சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச அமைப்பின் மூலம் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

போரில் பாதிக்கப்பட்ட அனைத்து தமிழ் குடும்பங்களுக்கும் மனிதாபிமான உதவிகளை செய்ய வேண்டும். தமிழர் பகுதியில் இயல்பு நிலை திரும்ப தேவையான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மறுவாழ்வு நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்திய அரசும் தேவையான உதவிகளை செய்து வருகிறது. வீடு கட்டி கொடுத்தல், கல்வி, சுகாதாரம், தொழில் பயிற்சி, விவசாயம், கட்டிடங்களை மறுசீரமைப்பு செய்தல் போன்ற திட்டங்களில் இந்தியாவும் பங்கெடுத்துள்ளது.

இந்தியா மேற்கொண்ட முயற்சிகளால் தமிழர் பகுதியில் இயல்புநிலை திரும்பி உள்ளாட்சி தேர்தலும் நடைபெற்றுள்ளது. இலங்கை அரசு மேற்கொண்டு வரும் மறுவாழ்வு திட்டங்கள் தொடர்பான அறிக்கையை இந்திய அரசு வரவேற்றுள்ளது.

மனித உரிமைகள் மீறல் தொடர்பாக, சுதந்திரமான, விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதை குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று நாம் இலங்கை அரசை மீண்டும் வலியுறுத்தி உள்ளோம். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

நமது குறிக்கோள் எல்லாம் இலங்கை தமிழர்களின் எதிர்காலத்தை பற்றிய தாகவே எப்பொழுதும் இருந்து வருகிறது. இலங்கை தமிழர்கள் சமத்துவம், கவுரவம், சமநீதி, சுயமரியாதையுடன் வாழ வழிவகை செய்வதே நமது நோக்கம் ஆகும்’’ என்று எழுதியுள்ளார்.

http://www.nakkheera...ws.aspx?N=72233

கண்டதுகள் நிண்டதுகள் எல்லாம் சுயமரியாதையைப் பற்றி பேசுதுகள்.

இவனுக்கு சுயமரியாதை இருந்தால் எப்போதோ ஒரு காட்டுமிராண்டி நாட்டின் பிரதமர் நாற்காலியை விட்டு ஓடியிருப்பான்.

வாக்குறுதிகளை அள்ளி வீச இலங்கையிடம் பாடம் கற்றவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாய்க்குள், இலையான் போவது கூடத் தெரியாத 'உன்னிப்பு' அவதானம்!

48134-1_26_126201023917123_16.jpg

Edited by புங்கையூரன்

செருப்பை அரியணையில் வைத்து ஆண்ட நாடு இந்தியா ... செருப்புகள் பேசியதில்லை-அப்போதும்,இப்போதும்

வருகின்றன தேர்தலில் காங்கிரசு மன்மோகன்சிங் சுயமரியாதையுடன் வாழ வழிவகை செய்வதே நமது நோக்கம்.

எட தொப்பி முதலில் உனது மாநில மக்களை சுய மரியாதையுடன வாழ வை. பிறகு பார்ப்பம் தமிழரை பற்றி.

கடிதம் எழுதினவனே ஒரு எட்டப்பன், அவனுக்கு பதில் வேறு.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களின் விடிவை நாங்கள் பார்ப்போம்...............

அங்கால உங்களின் மீனவர்களை அவன் போட்டு தள்ளுறான் (ஊழலுக்கு இடையில்) நேரம் இருந்தால் அதை கொஞ்சம் எட்டிப்பார்க்கவும்.

இப்படிக்கு

உலக தமிழன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.