Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'காத்திருப்பேன்.. ' 17 வயது மாணவனைக் கடத்திக் கைதான 37 வயது ஆசிரியை பிடிவாதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல் கலைக்கு வெளியே மாணவியைக் காதலிக்கும் ஒரு பேராசிரியர் பல்கலையில் அம்மாணவிக்கு விசேட கவனம் காட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டு. இதைத் தடுக்கவே இந்த நடைமுறை. நான் இருக்கும் பல் கலையில் நேரடியாக தான் வகுப்பெடுக்காத ஒரு மாணவியை (மாணவிக்கு வயது 30) க் காதலித்த பேராசிரியர் "நாம் காதலர்கள் அல்ல" என்று வாக்கு மூலம் கொடுத்த பின்னர் தான் அவரைப் பணி நீக்கம் செய்யாமல் விட்டார்கள். இருந்தாலும் மாணவியை வேறொரு பிரிவிற்கு மாற்றி விட்டார்கள். இது நான் கண்ட இரண்டாவது சம்பவம், கடந்த 7 வருடங்களுக்குள்.

வெளியில் நடந்தது பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்ததால் வந்த பிரச்சனை இது. வெளியில் நடப்பதை வெளியிலேயே வைத்துக் கொண்டிருந்தால்.. பல்கலைக்கழகம் எதுவும் செய்ய முடியாது தானே..! பல்கலைக்கழக விதிமுறைகள் அதன் எல்லைக்குள் மட்டும் தானே தவிர தனிநபர்களை அது எப்போதும் கண்காணிக்கும் கட்டுப்படுத்தும் என்பது மிகைப்படுத்திய தகவலாகவே இருக்கும்..!

மேற்படி சம்பவத்திலும்.. ஆசிரியை மாணவனை சந்தித்தது என்னவோ பள்ளியில். ஆனால் அவரோடு சுய விருப்பின் அடிப்படையில் நெருங்கிய தொடர்பைப் பேணியது பள்ளிக்கு வெளியில். இந்த இடத்தில் பள்ளி நிர்வாகம் ஆசிரியையை தண்டிக்க வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை..! :icon_idea:

பல்கலைக்கழகங்களில் வேலை செய்யும் பொது, சக ஊழியருடன் காதல்/ தொடர்பு என்றாலும் line manager க்கு அறிவிக்க வேண்டும் என்ற கோட்பாடும் உள்ளது.

வெளியில் நடப்பதை அங்கு அறிவிக்க வேண்டும் என்ற சட்டம் இருப்பதாக நினைக்கவில்லை. பல்கலைக்கழகத்துக்குள் வெளியில் இருக்கும் தொடர்பை பேண முற்படும் நிலையில் அது பல்கலைக்கழக விதிக்கு உட்படலாமே தவிர... வெளியில் நடப்பதை கட்டுப்படுத்தும் கண்காணிக்கும் அதிகாரம் பல்கலைக்கழகங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உப்புடியான சில்லறை வேலையளுக்கு எங்கடை ஊரிலை எண்டால் சட்டம் என்கையில் :lol: ......இஞ்சை வெளிநாடுகளிலை எண்டால் வயது கூடினவர் அஞ்சாறுவருசம் உள்ளுக்கு........வயது குறைஞ்சவர்ருக்கு நன்னடத்தை காம்பிலை காய்ஞ்சபாணும் ஒருகட்டி பட்டரும்.........ஒரு பிள்ளையின் விடயத்தில் நற்பழக்கங்களையும்,நற்சிந்தனைகளையும் ஊட்டி வளர்க்கும் பொறுப்பு குருவுக்கு மட்டுமே.தாய் தந்தை குரு இதுதான் ஒரு மனிதனுக்கு ஆரம்பப்பாடம்....வேலியே பயிரை மேய்ந்த கதையிது :):icon_idea:

பல்கலைக்கழகத்திலோ... பாடசாலையிலோ.. தொழில்நிறுவனத்திலோ.. உறவு கொள்ள எவருக்கும் அனுமதியில்லை.

ஆனால் அதற்கு வெளியில் எவரும் குறித்த வயதெல்லையை தாண்டியவர்களாகவும் சுயவிருப்போடும் வைத்துக் கொண்டால் அதை சட்டம் தடுக்காது..!

இங்கும் கூட.. அந்த ஆசிரியை - மாணவன் பள்ளிக்கூடத்துக்கு வெளியில் ஆணும் பெண்ணுமே தவிர.. ஆசிரியை - மாணவன் என்று சட்டம் சொல்லுமா..????! :icon_idea::rolleyes::unsure:

பள்ளிக் கூடத்துக்கு வெளியிலும் உறவு வைத்து இருக்க கூடாது.

அதாவது தன்னிடம் படிக்கும் மாணவனுடன் டிஸ்க்கோவுக்கு போய் ஆடிப்போட்டு ரோட்டிலும் பார்க்க்கிலும் படுக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக் கூடத்துக்கு வெளியிலும் உறவு வைத்து இருக்க கூடாது.

அதாவது தன்னிடம் படிக்கும் மாணவனுடன் டிஸ்க்கோவுக்கு போய் ஆடிப்போட்டு ரோட்டிலும் பார்க்க்கிலும் படுக்க முடியாது.

பள்ளிக் கூடத்துக்கு வெளில செய்யுறதை பள்ளிக்கூடத்துக்கு போன் பண்ணிச் சொல்லிப்புட்டுத்தானே செய்யப் போறாங்க. போய் வேற வேலையைப் பார்ப்பீங்களா..!!! :lol::D

பள்ளிக் கூடத்துக்கு வெளில செய்யுறதை பள்ளிக்கூடத்துக்கு போன் பண்ணிச் சொல்லிப்புட்டுத்தானே செய்யப் போறாங்க. போய் வேற வேலையைப் பார்ப்பீங்களா..!!! :lol::D

முயலுக்கு 3 கால் என்பவனுக்கு ஓரளவு எடுத்துச் சொல்லலாம் ஆனால் முயலுக்கு காலே இல்லை அது பறந்துதான் போறது என்பவனுக்கு எப்படியும் புரியவைக்க முடியாது...........

முயலுக்கு 3 கால் என்பவனுக்கு ஓரளவு எடுத்துச் சொல்லலாம் ஆனால் முயலுக்கு காலே இல்லை அது பறந்துதான் போறது என்பவனுக்கு எப்படியும் புரியவைக்க முடியாது...........

:lol: :lol: :D :D

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்களை நெடுக்கு தானே பரீட்சித்துத் தான் நம்புவார் போல. இறுதியாக இப்ப நடந்து கொண்டிருக்கிற ஒரு சமபவத்தை மட்டும் சொல்லுவதோடு இந்கக் "கல்லில நாருரிக்கிற" :rolleyes: வேலையில இருந்து நானும் விலகிறன். பள்ளிக்கு வெளியில கூட ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டுமென்ற எதிர் பார்ப்பு வெறும் எதிர் பார்ப்பல்ல என்பதைக் காட்டும் ஒரு செய்தி இது.

Utah professor says he's innocent of child porn charges

Smith, 47, is a professor of material science and engineering at the University of Utah. He has been placed on administrative leave pending resolution of the criminal case, the school said.

"Professor Smith deserves a full and fair investigation into this issue," the school said in a statement. "The University of Utah, however, has no tolerance for viewing or possessing of child pornography by any of its employees, regardless of where it occurs."

He will be fired if the allegations are proved to be true, the school said.

ஜஸ்ரின்..

குழந்தை ஆபாசக் காட்சிகள், காணொளிகள் யார் எங்கே வைத்திருந்தாலும் உள்ளே போகவேண்டியதுதான்..! ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்துவிட்ட மாணவரும் ஆசிரியரும் கல்விக்கூடத்திற்கு வேளியே தப்புத்தண்டா செய்வது கனேடியச் சட்டங்களின்படி தவறில்லை..! அப்படி ஒரு சட்டத்தை இயற்றுவதும் கனேடிய யாப்பின்படி அடிப்படை சுதந்திர மீறலாகும்..!

ஆனால் பல்கலைக்கழகங்கள் வேலை ஒப்பந்தங்களில் இப்படியானல் நிர்ணயங்களைச் செய்துகொள்ளலாம்..! ஏனென்றால் மாணவரும், ஆசிரியரும் நெருங்கிப்பழகுவது Conflict of Interests க்கு வழிவகுத்துவிடும்..! ஆனால் சட்டப்படி குற்றமாகாது..! வேலை பறிபோகலாம்..! :rolleyes:

ஆம் இசை. நான் சொன்னதையே எனக்குத் திருப்பிச் சொல்கிறீர்கள்! என் முதற் கருத்தே இது தான்: "நாட்டின் சட்டம் தடுக்காது; தண்டிக்காது, ஆனால் எல்லாப் பல்கலைகளிலும் கல்லூரிகளிலும் நடத்தைக் கோவையின் படி இந்த உறவு தடுக்கப் பட்டுள்ளது-அது கல்லூரிக்கு வெளியேயோ உள்ளேயோ" . நெடுக்கு இதைத் தான் நம்ப மாட்டேன் என்கிறார்.

மேலும் நான் இணைத்த செய்தியின் விளக்கம் இது தான்: வேலையிடத்திற்கு வெளியே விமானத்தில் அவர் சிறுவர் ஆபாசப் படம் பார்த்த போது தான் கைது செய்யப் பட்டார். இது சட்ட விரோதம் சரி. வேலையிடத்தில் நடக்காத விடயத்திற்கு ஏன் அவரை வேலையை விட்டுத் தூக்க வேண்டும்? ஆசிரியர்கள் மேல் தனி நபர் சுதந்திரம் கொண்ட நாடுகளில் கூட சில ஒழுக்க ரீதியான எதிர் பார்ப்புகள் இருக்கு என்பதைக் காட்டவே இந்தச் செய்தி. மற்ற படி சிறுவர் ஆபாசம் குற்றம், ஆசிரியர் மாணவர் உறவு சட்டப் படி குற்றமில்லை.

ஜஸ்ரின்..

குழந்தை ஆபாசக் காட்சிகள், காணொளிகள் யார் எங்கே வைத்திருந்தாலும் உள்ளே போகவேண்டியதுதான்..! ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்துவிட்ட மாணவரும் ஆசிரியரும் கல்விக்கூடத்திற்கு வேளியே தப்புத்தண்டா செய்வது கனேடியச் சட்டங்களின்படி தவறில்லை..! அப்படி ஒரு சட்டத்தை இயற்றுவதும் கனேடிய யாப்பின்படி அடிப்படை சுதந்திர மீறலாகும்..!

அந்த குறிப்பிட்டவயது எத்தனை வயது? இங்கு ஹைஸ்கூல் மாணவர்களுடன் (16/17 வயது பருவத்தினர்) தகாத (?) உறவுவைத்த ஆசிரிய, ஆசிரியைகள்பற்றிய பல செய்திகள் வந்துள்ளன. நீங்களும் பார்த்திருப்பீர்கள். முறைப்பாடு வந்ததுமே அவர்களிற்கு கிடைக்கும் தண்டனை வேலையால் தூக்குவதுதான். பலகலைக்கழக தரத்தில் விதிவிலக்காக நீங்கள் சொல்லுமாறு அமையலாம். ஹைஸ்கூல் என்றால் அது பள்ளி உள்ளேயா அல்லது வெளியேயா என்று பார்க்கமாட்டார்கள். வேலைபோய்விடும்.

ஜஸ்ரின்..

குழந்தை ஆபாசக் காட்சிகள், காணொளிகள் யார் எங்கே வைத்திருந்தாலும் உள்ளே போகவேண்டியதுதான்..! ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்துவிட்ட மாணவரும் ஆசிரியரும் கல்விக்கூடத்திற்கு வேளியே தப்புத்தண்டா செய்வது கனேடியச் சட்டங்களின்படி தவறில்லை..! அப்படி ஒரு சட்டத்தை இயற்றுவதும் கனேடிய யாப்பின்படி அடிப்படை சுதந்திர மீறலாகும்..!

ஆனால் பல்கலைக்கழகங்கள் வேலை ஒப்பந்தங்களில் இப்படியானல் நிர்ணயங்களைச் செய்துகொள்ளலாம்..! ஏனென்றால் மாணவரும், ஆசிரியரும் நெருங்கிப்பழகுவது Conflict of Interests க்கு வழிவகுத்துவிடும்..! ஆனால் சட்டப்படி குற்றமாகாது..! வேலை பறிபோகலாம்..! :rolleyes:

இசை ஜஸ்டின் நீங்கள் இருவரும் சொல்வதே எனது கருத்தும். பல்கலைகழகமோ பாடசாலையோ நீங்கள் வெளியில் என்ன செய்கிறீர்கள் என்று உங்கள் தனிப்பட்ட வாழ்கையை நோண்ட மாட்டார்கள். ஆனால் சம்பத்தப்பட்ட மாணவரோ/மாணவியோ அல்லது வேறு எவரோ நிர்வாகத்துக்கு போட்டு கொடுத்தால் வேலையிலிருந்து தூக்கி விடுவார்கள்.

அமெரிக்காவில் லாரி கிங்கின் ஒரு மனதை தொடும் பேட்டி. அதில் 16 வயது மாணவனுடன் 30 வயது ஆசிரியை கொண்ட காதல் உறவை பெற்றோர் போட்டு கொடுக்க ஆசிரியை சிறை சென்று

8 வருடங்களின் பின் சிறையில் இருந்து வருகிறார். அந்த மாணவன் அந்த ஆசிரியைக்காக காத்திருந்து அவரை திருமணம் செய்து குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறான். அந்த பேட்டியில் அவர்கள் இருவரும் தமது அனுபவங்களை லாரி கிங்குடன் பகிர்ந்து கொண்டனர். மிகவும் மனதை நெகிழ வைத்த பேட்டி. அவர்களுக்கு இடையில் இருக்கும் அந்த அற்புதமான காதல் உணர்வு அன்னியோன்யம் அவர்கள் பேசும் போது மிக அழகாக வெளிப்பட்டது.

அது மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது.

உண்மைக் காதல் வயது இனம் சதி மதம் அந்தஸ்து படிப்பு பார்த்து வருவதில்லை.

அந்த உண்மை காதல் கல்யாணம் என்கிற சமூக கட்டுப்பாட்டின் பேரில் கட்டும் தாலியிலும்

கையெழுத்து போடும் சில வெற்று கடதாசிகளிலும் உயிர் வாழ்வதில்லை. அந்த உண்மை காதல் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் ஆன்மாவை ஆழமாக ஊடறுத்து செல்லும் அந்த அற்புதமான உணர்வில் உயிர்வாழ்கிறது. அதனை ஓஷோ தியானத்தில் ஏற்படும் சமாதியனுபவத்தின் (enlightment ) பரவச நிலைக்கு ஒப்பிடுகிறார். காதலினால் சாகாமல் இருத்தல் கூடும் ஆதலினால் உலகத்தீரே காதல் செய்வீர் என்றான் பாரதி.

டங்குவார் அண்ணா உங்கள் காதல் அனுபவம் எப்படி?

காதல் பரவச நிலையிலும்(orgasm ) தியான பரவச நிலையிலும் மூளையின் நரம்புகலங்களில் உருவாகும் endorphin மற்றும் நரம்பு கல வலையமைப்பில் அதன் மீளியங்கு தன்மையில்(Neural Network pattern & Synaptic Plasticity) ஏற்படும் மாறுதல் பற்றி ஒப்பீடு ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

நீங்கள் நித்தியானந்தாவுக்குச் சொந்தக்காரரா? :D:lol:

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் இசை. நான் சொன்னதையே எனக்குத் திருப்பிச் சொல்கிறீர்கள்! என் முதற் கருத்தே இது தான்: "நாட்டின் சட்டம் தடுக்காது; தண்டிக்காது, ஆனால் எல்லாப் பல்கலைகளிலும் கல்லூரிகளிலும் நடத்தைக் கோவையின் படி இந்த உறவு தடுக்கப் பட்டுள்ளது-அது கல்லூரிக்கு வெளியேயோ உள்ளேயோ" . நெடுக்கு இதைத் தான் நம்ப மாட்டேன் என்கிறார்.

ஓ.. உங்கட அல்வாவை உங்களுக்கே கிண்டிக் குடுத்திட்டனா?? :lol: சாரி.. :icon_mrgreen:

அந்த குறிப்பிட்டவயது எத்தனை வயது? இங்கு ஹைஸ்கூல் மாணவர்களுடன் (16/17 வயது பருவத்தினர்) தகாத (?) உறவுவைத்த ஆசிரிய, ஆசிரியைகள்பற்றிய பல செய்திகள் வந்துள்ளன. நீங்களும் பார்த்திருப்பீர்கள். முறைப்பாடு வந்ததுமே அவர்களிற்கு கிடைக்கும் தண்டனை வேலையால் தூக்குவதுதான். பலகலைக்கழக தரத்தில் விதிவிலக்காக நீங்கள் சொல்லுமாறு அமையலாம். ஹைஸ்கூல் என்றால் அது பள்ளி உள்ளேயா அல்லது வெளியேயா என்று பார்க்கமாட்டார்கள். வேலைபோய்விடும்.

ஓ.. :rolleyes: நல்லவேளை நான் ஆசிரியர் வேலை பார்க்கேல்ல.. :icon_mrgreen:

டங்குவார் அண்ணா உங்கள் காதல் அனுபவம் எப்படி?

எந்தக் காதல் அனுபவம்?? :unsure:

ஓ.. உங்கட அல்வாவை உங்களுக்கே கிண்டிக் குடுத்திட்டனா?? :lol: சாரி.. :icon_mrgreen:

ஓ.. :rolleyes: நல்லவேளை நான் ஆசிரியர் வேலை பார்க்கேல்ல.. :icon_mrgreen:

எந்தக் காதல் அனுபவம்?? :unsure:

உங்கள் teenage காலங்களில் உங்களுக்கு கல்வி கற்பித்த ஏதாவதொரு டீச்சர் மேல் உங்களுக்கு ஒரு crush ஏற்பட்டதுண்டா? அந்த அனுபவம் பற்றி கேட்கிறேன். நீங்கள் அந்த அனுபவத்தை வெளியில் சொல்லியோ அல்லது டீச்சருடன் ஓடியோ இருக்க மாட்டீர்கள் என நிச்சயமாக நம்புகிறேன். :D:D :D :D:icon_mrgreen:

என்ன Crush?? :D நெல்லிக்கிரஷ் தான் பிடிச்சிருந்தது..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு, வந்து வாய்ச்சதெல்லாம் மீசை முளைச்ச வாத்தியார்.

ஒரு, பொம்பிளை ரீச்சரையும், மருந்துக்கும் காணேல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு, வந்து வாய்ச்சதெல்லாம் மீசை முளைச்ச வாத்தியார்.

ஒரு, பொம்பிளை ரீச்சரையும், மருந்துக்கும் காணேல்லை.

எல்லாம் ஆளை அறிஞ்சு தான் வேறை என்ன

  • தொடங்கியவர்

எங்களுக்கு, வந்து வாய்ச்சதெல்லாம் மீசை முளைச்ச வாத்தியார்.

ஒரு, பொம்பிளை ரீச்சரையும், மருந்துக்கும் காணேல்லை.

சிறி அண்ணாவோடை ஒப்பிடேக்கை நான் கொடுத்துவைத்தவன்.இருந்தாலும் லேசிலே சிரிக்க மாட்டினம் கண்டியளோ.வெடு சுடு என்றுதான் நிற்பார்கள்.பல்கலைகழகத்தால் நேரே சுடச்சுட வருவார்கள்.பின்பு பயிற்சிக்கலாசாலை போய் வருவார்கள்.அப்போது விளங்கவில்லை..இப்போ என்றால் வெடு சுடு கேசுகள்தான் டக்கெண்டு விழுந்துவிடும் என்று தெரியும்.தங்களின் இயலாமையைத்தான் எங்களுடன் ஏறி விழுகிறவர்கள் என்று ஒரு பெண் நண்பி சொல்லித்தான் தெரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்கு, வந்து வாய்ச்சதெல்லாம் மீசை முளைச்ச வாத்தியார்.

ஒரு, பொம்பிளை ரீச்சரையும், மருந்துக்கும் காணேல்லை.

என்ரை சோகக்கதை அதையேன் பேசுவான்......பள்ளிக்கூடத்திலை கணக்கு சொல்லித்தந்தது கலியாணம் கட்டாத ரீச்சர்........இவனுக்கு கணக்கிலை பிரச்சனை எண்டுபோட்டு பெத்துவளர்த்தவையள் ரியூசனுக்கு விட்டால் அங்கையும் அதே பிரச்சனை.....இப்ப என்ன பிரச்சனையெண்டால் வீட்டுகணக்கு பாக்கிறதுக்கு கைவிரல் பத்தும் கால்விரல் பத்தும் தேவைப்படுது :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.