Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிதர்சனம்.கொம் இன் பொறுப்பற்ற செய்தி

Featured Replies

ஜீவன் கற்பித்த இடம் Harvey Mudd College. :lol: :lol:

  • Replies 248
  • Views 30.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:roll: :roll:

¯ÁìÌ þÐ ´ýÚìÌ ´ýÚ Óý¡¸ ¦¾Ã¢ÂÄ¡õ. ¬É¡ø þÐ þÃñÎõ ¦Åù§ÅÚ context இல் எழுதப்பட்டவை. "தெரிவு செய்வதற்கு" மாணவரின் விருப்பம் கருத்திலெடுக்கப்படுவதில்லை. ஆனால் "செயற்படுவதற்கு" மாணவர் ஒத்துழைப்பு தேவை(இல்லாவிட்டால் நீண்டநாளைக்கு நிலைக்க முடியாது) என்பதே அந்த இரண்டு விடயங்கள்.

முழுதாக நான் எழுதியதை வாசிக்காமல். ஆங்காங்கே சிதறிக்கிடப்பதை cut & paste செய்வதால் நீர் பெரிய கண்டுபிடிப்பைச் செய்ததாக நினைக்க வேண்டாம்.

இதில் நகைப்புக்குரிய விடயம் என்னவென்றால் நிதர்சனம் மேற்படி கட்டுரையை "who is this fool" என்ற தலைப்பின் கீழ் பிரசுரித்துள்ளது. ஜீவனை "fool" என்று அழைக்குமளவிற்கு இந்தக் கட்டுரையாசிரியரிடம் என்ன கல்வித்தகமை இருக்கிறது என அறிய விரும்புகிறேன் (நிச்சயமாக இந்தக்கட்டுரையாளர் ஒரு குறைகுடம் என்பது தெளிவாகிறது)

தமிழ் மகன்

ஊடகம் என்றால் என்னவென்று தெரியாத ஒரு சிலரால் நடத்தப்படுவதே நிதர்சனம்; இணைத்தளம். அதில் எப்படியும் செய்திகள் வரும். அந்தத் தளச் செய்தியை விட்டுவிட்டு யாதார்த்தத்திற்கு வாருங்கள்.

ரட்ணஜீவன் கூலின் நியமனத்தையடுத்து, எழுந்துள்ள கண்டனக் குரல்களைப் பாருங்கள், மாணவர் சமூகம் அதனை ஏற்கமுடியாது என அறிக்கை விட்டுள்ளது. தமிழ் கூட்டமைப்பின் சார்பில் ஈழவேந்தன் மகிந்தவிற்கு எச்சரிக்கை விட்டுள்ள்hர்.

அiவிட இந்தப்பக்கத்தில், ரட்ணஜீவன் கூலின் தமிழர் போராட்டத்திற்கு எதிரான வேலைகள் தொடர்பான தகவல்களும் தரப்பட்டுள்ளன.

அப்படியிருந்தும், நீங்கள் ஏன் அவரிற்கு இன்னும் வக்காளத்து வாக்குகிறீர்கள் என்பதுதான் புரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரட்ணஜீவன் கூலின் நியமனத்தையடுத்து, எழுந்துள்ள கண்டனக் குரல்களைப் பாருங்கள், மாணவர் சமூகம் அதனை ஏற்கமுடியாது என அறிக்கை விட்டுள்ளது. தமிழ் கூட்டமைப்பின் சார்பில் ஈழவேந்தன் மகிந்தவிற்கு எச்சரிக்கை விட்டுள்ள்hர்.

அiவிட இந்தப்பக்கத்தில், ரட்ணஜீவன் கூலின் தமிழர் போராட்டத்திற்கு எதிரான வேலைகள் தொடர்பான தகவல்களும் தரப்பட்டுள்ளன.

அப்படியிருந்தும், நீங்கள் ஏன் அவரிற்கு இன்னும் வக்காளத்து வாக்குகிறீர்கள் என்பதுதான் புரியவில்லை.

காரணம் ஒரு கல்விமான் அவரது சகோதரர் செய்யும் காரியங்களுக்காக எமது சமூகத்திலிருந்து வீணே புறந்தள்ளக்கூடாதென்பதுதான். அவருக்கு எதிராகக் கூச்சலிடும் அனேகமானவர்களுக்கு இச்சகோதரர்கள் இருவருக்கும் இடையிலான வித்தியாசம் தெரிந்திருக்கவில்லை, வெறுமனே last name ஐ வைத்து எடை போடுகிறார்கள் என்பதுதான் எனக்கு இருக்கும் concern. இந்த விவாதத்தை முதலிலிருந்து வாசித்தீர்களானால் உண்மை புலப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களில் பேராசிரியர் குமாரவடிவேலினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவானது யாழ். பல்கலைக்கழத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு சிபார்சு செய்தது.

எனினும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் சிபார்சினை நிராகரித்தே ஜனாதிபதி பேராசிரியர் இரத்தின ஜீவன்ஹூலை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆறாவது புதிய துணைவேந்தராக நியமித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்குகிறார்கள் இல்லை இனத்துவேசம் காட்டுகிறார்கள் என்று முன்னாள் துணைவேந்தர் மோகனதாசும் அரசியல்வாதிகளும் குற்றம் சாட்டும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு கூட ஹூல் வேண்டாம். தமிழ் மக்களுக்கும் யாழ். பல்கலைக்கழகத்துக்கும் ஹூல் கூடாது என்று முடிவெடுக்கிறது. மானிய ஆணைக்குழுவுக்கு நிதர்சனம் ஒரு நன்றிக்கடிதம் எழுதலாமே?

துணைவேந்தராக ஹூலை நியமித்ததன் மூலம் ஏற்படவுள்ள விளைவுக்கு ஜனாதிபதியே பொறுப்பு

ஈழவேந்தன் எம்.பி. தெரிவிப்பு

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் இரத்தின ஜீவன் ஹூல் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் குடாநாட்டில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுமென சுட்டிக் காட்டியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.ஈழவேந்தன், இதனை ஜனாதிபதியால் கூட கட்டுப்படுத்த முடியாத நிலையேற்படுமெனவும் எச்சரித்துள்ளார்.

ஈழவேந்தன் ஐயா மட்டுமா இதைச்சொன்னார்? கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தர் பினாட்டுவகை இதை 2000ம் ஆண்டே சொல்லிவிட்டார். ஹூலின் வேலையை நீடிக்க மறுத்து அவர் வெளியிட்ட அறிக்கையில் ஹூல் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானவர் என்பதால் அவருக்கு வேலையை நீடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். இதோ கீழே ஆங்கிலத்தில்.

Recently the Vice Chancellor of the Colombo University, Prof. Pinnaduwage, refused an extension of service to Prof. Jeevan Hoole on the grounds he is a "security risk".

Media & the Tamil Struggle UTHR(J) - a mouthpiece of Sri Lankan government, V.Thangavelu

Canada, 11 August 2000, http://www.tamilnation.org/media/tamil/thangavelu2.htm

ஹூல் எவ்வளவு பேருக்கு எதிரி பாருங்கள்.

ஆக எனது ஆலோசனை ஹூல் யாழ்ப்பாணம் போவது ஆபத்து. முட்டள்கள் அதிகமான பிரதேசம். யார் யாரை மண்டையில் போடுகிறார்கள் என்று தெரியாமலே மாறி மாறி போடும் இடம்..

ஹூல் அவர்களே!!

அதற்குள் நீங்கள் அச்சேற்றிய உடைந்த பனையை எழுதிய இராஜினிக்கு நடந்ததை மறந்துவிடாதீர்கள்.

உண்மையில் யாழ். பல்கலைக்கழகம், பல்கலைக்கழகமாக இயங்கிய வரலாறே இல்லை. நல்ல கண்டுபிடிப்புகளோ ஆய்வுகளோ அங்கே நடப்பதில்லை.

நீங்கள் போக வேண்டிய இடம் வன்னி தொழில்நுட்பக்கல்லு}ரி. சிறப்பாக நடத்துகிறார்கள். இன்னுமொரு MIT யை உருவாக்க ஒத்துழைத்த பெருமை உங்களை சாரும். இந்த முட்டாள்களுக்கு உங்கள் நாட்டுப்பற்றை விளங்கப்படுத்தி மினக்கடாமல் வன்னியில் போய் விளங்கப்படுத்துங்கள். புூரணபாதுகாப்புடன் கேட்டதெல்லாம் தருவார்கள். தாராளமாக கட்டி எழுப்புங்கள் உலகின் சிறந்த பல்கலைக்கழகத்தை.

அதே வேளை இந்த மனிதஉரிமை, அது, இது என்று யாராவது அறிக்கை எழுதிவிட கேட்டால், தாராளமாக ஆசை தீர எழுதுங்கள். ஆனால் யாருக்கும் தெரியாமல் பத்திரமாக தமிழ்ச்செல்வனிடம் மட்டும் கொடுத்து விடுங்கள். கொப்பி கூட வைத்திருக்காதீர்கள். மீறினால் பாம்பு கடிக்கும். வன்னிக்காட்டில் பாம்புகள் அதிகம். மறக்காதீர்கள்.

நாரதர்,

நீரே இதை வாசித்தபின் தான் இங்கே பிரதிபண்ணியிருப்பீர் என நினைக்கிறேன். ஜீவன் அவர்கள் முறிந்த பனை எனும் நூலை ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் வெளியிட உதவி செய்தவரேயன்றி வேறெதுவும் செய்யவில்லை. அவர் புத்தகத்தை எழுதவுமில்லை அதன் உள்ளடக்கத்திற்கு அவர் பொறுப்பாளியும் இல்லை. ஒரு தமிழன் எழுதிய புத்தகம் ஹாவார்ட்டில் வெளிவந்தால் அது எல்லாருக்கும் பெருமைதானே என்ற வகையில் தான் செயல்பட்டார். நீர் அந்தநேரத்தில் ஒரு அறிஞராக இருந்து நீர் எழுதிய புத்தகம் ஹாவார்ட்டில் வெளிவர அவரது உதவியை நாடியிருந்தால் இதே உதவியைத்தான் செய்திருப்பார்.

ஹாவார்ட் உலகிலேயே top ten பல்கலைகளில் ஒன்று என்பது எல்லாரும் அறிந்தது. அந்தப் பல்கலையிலேயே விரிவுரையாளராயிருக்குமளவுக

ஜூட் தந்த இணைப்பில் மேலும் தகவல்கள் உள்ளன அவை முக்கியமானவை, அதனால் முழுவதையும் இங்கு இடுகிறேன்.

This refers to the UCAN news story "Sri Lanka Human Rights Group accuses Church of supporting separatist Tamil Groups"(UCAN - August 2, 2000)

In the first place this human rights group UTHR (J) is an organization which does not speak for or on behalf of the teachers of the University of Jaffna.

The Vice Chancellor of the Jaffna University had disowned this organisation as non-existent. The resolution passed at the 142nd Meeting of the Council of University of Jaffna held on January 18, 1992 stated thus-

"It has been brought to the notice of the council of University of Jaffna that a publication titled 'Human Rights in Jaffna' has been put in the name of the University Teachers for Human Rights-Jaffna Branch. The council wishes to inform the public that this publication is neither a publication of the University of Jaffna nor any of its teachers are associated with this publication".

This being the case it is unethical for this so called human rights group to project itself as a group representing the teachers of the Jaffna University. This human rights group consisting of two siblings Rajan Hoole and Jeevan Hoole and one Sri Tharan represent no body but themselves. Sri Tharan is employed as a lecturer at the Moratuwa University, while Prof. Jeevan Hoole is attached to the Faculty of Engineering of the University of Colombo...

Recently the Vice Chancellor of the Colombo University, Prof. Pinnaduwage, refused an extension of service to Prof. Jeevan Hoole on the grounds he is a "security risk". Sometime last year, Rajan Hoole and his wife were arrested by the security forces on a "search and round-up" security operation of suspected Tigers in Colombo, then taken and locked up at one of the police station in the city for several hours and treated very shabbily before some influential people rescued them.

These incidents demonstrate the fact that even Tamil supporters of President Chnadrika Kumaratunga are considered "suspects" and "security risks" and treated persona non-grata by sections of Sinhalese officialdom.http://www.tamilnation.org/media/tamil/thangavelu2.htm

மதிப்பிற்குரியவர்களே வணக்கம்!

தங்களின் ஆதங்கங்கள் எமக்கு புரிகின்றது. நீங்கள் ஒருசாரர் ரட்ணஜீவன் கூலின் நியமனத்திற்காக குரல் கொடுக்கின்றீர்கள். ஆனால் மற்றையவர்கள் தடுக்கின்றார்கள். ஏன்? அவ்வாறு செய்வதற்கான காரணம் என்ன? சிந்தித்தோமா?

இவ்விடயத்தை இணையவலையில் ஏற்றிய தமிழ் மகனின் (மகான்) கருத்தென்ன? ஆழ நாம் நோக்கினோமா? அவர் சொல்ல வரும் விடயம் யாதென பார்த்தோமா? அவர் எழுதுவதற்கெல்லாம் நாமும் பதில் எழுதியும் அவர் இன்னும் மேற்தட்டு (படிப்பை) நிலையிலிருந்து இறங்காமல் வீம்பிற்காக வாதம் செய்வதை அவரின் கருத்துக்கள் பிரதிபலிப்பதாக கருதுகின்றேன். மேற்படி தமிழ்மக(h)ன் கூலின் மாணவன் என்பது மட்டும் எனக்கு தெரிகின்றது. குருவிற்காக மதிப்பளிக்கும் அவர் பாங்கு மெச்சத்தக்கது. அதற்காக பசுவிற்கு கொம்பு ஏன் தலையில் இருக்கின்றது. முதுகில் இருந்தால் என்ன? என வாதம் பண்ணுவதும் சரியில்லை. குடும்பத்தில் கணவனோ அன்றி மனைவியே சரியில்லை என்று கண்டால் பேசித்தீர்க்கப்பார்ப்போம். அன்றி பிரிந்து வாழப்பார்ப்போம். அதைப்போன்றே யாழ் மாணவர் சமுதாயமும் தற்போது வேண்டிநிற்கின்றது. திரு. கூலவர்களுக்கு இதுவரைக்கும் யாழ் மண்ணின்மேல் இல்லாத பற்று இப்போ வரக்காரணம் என்ன? தான் பிறந்த மண்பற்று இல்லையென சொல்ல வரவில்லை. யாழ் மாணவர்களின் கல்வித்தகமைபற்றிய ஆர்வம் இல்லாதது ஏன்? பேராதனையில் சேரமுடிந்த அவருக்கு ஏன் பிறமாவட்டங்களில் சேர முடியவில்லையா? அல்லது பிற மாவட்டங்களில் வேலை செய்ய முடியவில்லையா? எத்தனை கோடிகளை துறந்து இலங்கை வந்திருந்தாலும் தாயகத்திற்கு எதிராக இப்பொதும் கருத்துடையவராக இருப்பின் அவரின் சேவை தேவையில்லை. அவர் எப்படி படித்து முன்னுக்கு வந்தாரோ அதேபோன்று தமிழ் மாணவர் சமுதாயமும் முன்னுக்கு வரும். நான் நினைக்கின்றேன் 1999ம் ஆண்டு யாழ் இந்துக்கல்லு}ரியில் பயின்ற மாணவன் இளங்குமரன் என்பவர் கூல்போன்றே கணிதத்துறையில் பயின்று இதுவரை எடுக்கமுடியாத அளவிற்கு 397 புள்ளிகள் பெற்று இலங்கை ரீதியில் முதன்மை பெற்றிருக்கின்றார். இவர் தற்சமயம் அவுஸ்ரேலியாவில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கின்றார

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலான மாணவர்களினதும், தமிழ் மக்களினதும் எதிர்ப்புக்குக் கூலின் நியமனம் உள்ளாகும், யாழ் பலகலைக் கழகத்தில் குழப்பங்கள் உருவாகி கல்வி தடைப்படும் என்பதை நன்கறிந்தே மகிந்த கூலிற்கு உபவேந்தர் நியமனம் வழங்கி உள்ளார்.

தமிழர்களின் கல்வி நடவடிக்கைகளை குழப்பவேண்டும், யாழ் பல்கலைக் கழகத்தில் தேசியத்திற்கு ஆதரவான செயற்பாடுகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே சிங்கள ஆளும் வர்க்கத்தின் நோக்கம் என்பது ஓரளவு மூளையுள்ளோர்க்கும் தெரிந்த விடயம்.

ஜே.வி.பி க்கும் ராஜன் கூலிற்கும் உள்ள தொடர்புகளை பின்வரும் கட்டுரை தெளிவாக்குகின்றது. ஜீவன் கூலுக்கும் இது பொருந்தலாம்.

http://www.sangam.org/taraki/articles/2006...ni.php?uid=1561

யாழ். பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்குகிறார்கள் இல்லை இனத்துவேசம் காட்டுகிறார்கள் என்று முன்னாள் துணைவேந்தர் மோகனதாசும் அரசியல்வாதிகளும் குற்றம் சாட்டும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு கூட ஹூல் வேண்டாம். தமிழ் மக்களுக்கும் யாழ். பல்கலைக்கழகத்துக்கும் ஹூல் கூடாது என்று முடிவெடுக்கிறது. மானிய ஆணைக்குழுவுக்கு நிதர்சனம் ஒரு நன்றிக்கடிதம் எழுதலாமே?

ஈழவேந்தன் ஐயா மட்டுமா இதைச்சொன்னார்? கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தர் பினாட்டுவகை இதை 2000ம் ஆண்டே சொல்லிவிட்டார். ஹூலின் வேலையை நீடிக்க மறுத்து அவர் வெளியிட்ட அறிக்கையில் ஹூல் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானவர் என்பதால் அவருக்கு வேலையை நீடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். இதோ கீழே ஆங்கிலத்தில்.

Recently the Vice Chancellor of the Colombo University, Prof. Pinnaduwage, refused an extension of service to Prof. Jeevan Hoole on the grounds he is a "security risk".

Media & the Tamil Struggle UTHR(J) - a mouthpiece of Sri Lankan government, V.Thangavelu

Canada, 11 August 2000, http://www.tamilnation.org/media/tamil/thangavelu2.htm

ஹூல் எவ்வளவு பேருக்கு எதிரி பாருங்கள்.

ஆக எனது ஆலோசனை ஹூல் யாழ்ப்பாணம் போவது ஆபத்து. முட்டள்கள் அதிகமான பிரதேசம். யார் யாரை மண்டையில் போடுகிறார்கள் என்று தெரியாமலே மாறி மாறி போடும் இடம்..

ஹூல் அவர்களே!!

அதற்குள் நீங்கள் அச்சேற்றிய உடைந்த பனையை எழுதிய இராஜினிக்கு நடந்ததை மறந்துவிடாதீர்கள்.

உண்மையில் யாழ். பல்கலைக்கழகம், பல்கலைக்கழகமாக இயங்கிய வரலாறே இல்லை. நல்ல கண்டுபிடிப்புகளோ ஆய்வுகளோ அங்கே நடப்பதில்லை.

நீங்கள் போக வேண்டிய இடம் வன்னி தொழில்நுட்பக்கல்லு}ரி. சிறப்பாக நடத்துகிறார்கள். இன்னுமொரு MIT யை உருவாக்க ஒத்துழைத்த பெருமை உங்களை சாரும். இந்த முட்டாள்களுக்கு உங்கள் நாட்டுப்பற்றை விளங்கப்படுத்தி மினக்கடாமல் வன்னியில் போய் விளங்கப்படுத்துங்கள். புூரணபாதுகாப்புடன் கேட்டதெல்லாம் தருவார்கள். தாராளமாக கட்டி எழுப்புங்கள் உலகின் சிறந்த பல்கலைக்கழகத்தை.

அதே வேளை இந்த மனிதஉரிமை, அது, இது என்று யாராவது அறிக்கை எழுதிவிட கேட்டால், தாராளமாக ஆசை தீர எழுதுங்கள். ஆனால் யாருக்கும் தெரியாமல் பத்திரமாக தமிழ்ச்செல்வனிடம் மட்டும் கொடுத்து விடுங்கள். கொப்பி கூட வைத்திருக்காதீர்கள். மீறினால் பாம்பு கடிக்கும். வன்னிக்காட்டில் பாம்புகள் அதிகம். மறக்காதீர்கள்.

கூல் சகோதரர்கள் இதுவரை தொழில் புரிந்த யுத்த பிரதேசத்தில் இல்லாத தென்பகுதி பல்கலைக்கழகங்களில் நடத்தி முடித்த நல்ல ஆய்வுகள் கண்டுபிடிப்புகள் என்ன என்று ஏதாவது தகவல்கள் தர முடியுமா?

உம்முடைய "கூலுக்குத்தான் எத்தனை எதிரிகள்" என்ற ஒப்பாரிக்கு பதில்:

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=17301

சர்ச்சையைக் கிளப்பியுள்ள நியமனம்!

அஜாதசத்ரு

இராணுவக் கெடுபிடி மற்றும் ஆயுதம் தாங்கிய பல்வேறு தரப்பினரின் அச்சுறுத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கல்விச் செயற்பாடுகள் முழுமையாக செயலிழந்துள்ள நிலையில் யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனம் மீண்டுமொரு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆறாவது துணைவேந்தராக பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட இலத்திரனியல் பேராசிரியர் இரத்தினஜீவன் ஹூல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம், பல்கலைக்கழக ஊழியர் சங்கம் உட்பட வடக்கு, கிழக்கு கல்விச்சமூகம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன், இந்த நியமனத்தை தம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு அண்மையில் நடைபெற்றபோது பேராசிரியர்களான எஸ்.கந்தசாமி, ஆர்.குமாரவடிவேல், இரத்தினஜீவன் ஹூல் ஆகியோர் முறையே தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்களில் பேராசிரியர் ஆர்.குமாரவடிவேலை யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்கு சிபார்சு செய்தது.

எனினும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிபார்சினை நிராகரித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இரத்தினஜீவன் ஹூலை யாழ். பல்கலைக்கழகத்தின் ஆறாவது துணைவேந்தராக நியமித்து பெரும் சர்ச்சையொன்றை எதிர்கொண்டுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, தமிழ் மாணவர்களின் விருப்பதிற்கு முற்றிலும் நேர்மாறானதோர் போக்கொன்றையே கடைப்பிடித்துள்ளதாகவும் இந்த நியமனத்தை தாம் ஒருபோதும் ஏற்கப்போவதில்லையென்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பெரும் நெருக்கடிகளுக்கும் அவலங்களுக்கும் மத்தியில் கட்டிக்காக்கப்பட்டுவரும் தமிழ் மாணவர்களின் கல்வியை சீரழிக்கும் நோக்குடனேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவே நாம் கருதவேண்டியுள்ளது.

எனவே, தமிழ்ச் சமூகத்தின் உணர்வுகளுக்கு முற்றிலும் எதிர்மாறான இந்த நியமனத்தை ரத்துச் செய்யாவிட்டால் யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது.

தமிழ் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை சீர்குலைக்க முற்படும் இவ்வாறான நடவடிக்கைகளை உடனடியாக கைவிட்டு சமாதான முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.

அதேநேரம், யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனம் தொடர்பான செய்தி வெளியான வியாழக்கிழமையன்றே ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை நேரடியாக சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்ததுடன் இந்த நியமனத்தை உடன் ரத்துச் செய்யுமாறும் கோரியுள்ளனர்.

இரத்தினஜீவன் ஹூல் யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் மாணவர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பான நிலைமையொன்றைத் தோற்றுவித்துள்ளது.

அது மட்டுமன்றி, இந்த நியமனமானது யாழ்.குடாநாட்டின் தற்போதைய இயல்புநிலைமையைக்கூடச் சீரழித்துவிடலாமென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் அமைக்கப்பட்டுள்ள படையினரின் காவலரண்கள், அதிகரித்துள்ள படையினரின் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் போன்ற காரணங்களால கல்விச் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலையிலுள்ள யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம் மீளமுடியாத மீண்டுமோர் நெருக்கடியான நிலைமையை தோற்றுவித்துள்ளது என்பதையும் தமிழ்க் கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போன்ற பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தீர்க்கமானதோர் முடிவெதையும் எடுக்காமலிருப்பது வடக்கு,கிழக்கு கல்விச் செயற்பாடுகளில் பெரும் பாதகமானதோர் நிலைமையை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாமென்றே கருதப்படுகின்றது.

இராணுவ கெடுபிடிகள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் மட்டுமன்றி, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உள்ளக செயற்பாடுகளும் சீராக இயங்கமுடியாத ஒரு நிலைமையே காணப்படுகின்றது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினர் நல்லூரிலுள்ள போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு அலுவலகத்திற்கு மகஜர் கையளிப்பதற்காக ஊர்வலமாகச் சென்ற வேளையில் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு துணைவேந்தர், விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தையடுத்தே கல்விச் செயற்பாடுகள் முற்றாக சீர்குலைந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைவிட, திருகோணமலை உட்துறைமுக வீதியில் வைத்து 5 தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு இரு மாதங்கள் கழிந்துள்ள நிலையிலும் அது தொடர்பாக பல விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கொழும்பிலிருந்து பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதிபெற்று திருகோணமலைக்குச் சென்ற விசேட அதிரடிப்படையினரே 5 தமிழ் மாணவர்கள் மீதான படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை நேரடியாகச் சந்தித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தபோதும்கூட அது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

மாறாக, அந்த 5 மாணவர்களும் அரச படையினராலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பதை நிரூபிக்கும் வகையில் புகைப்படமெடுத்து வெளியுலகிற்கு வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளர் சுகிர்தராஜன் சில தினங்களில் படுகொலை செய்யப்பட்டார்.

சாவகச்சேரி பகுதியிலுள்ள பல பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், படைத்தரப்பினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இதெல்லாவற்றிற்குமப்பால் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் பலர் கடந்த சில மாதங்களாக அங்கிருந்து படிப்படியாக வேறிடங்களுக்கு அச்சம் காரணமாக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதாகவும் அறிய வருகிறது.

வடக்கு, கிழக்கில் தமிழ்ச் சமூகத்தினர் மீதான கல்விச் செயற்பாடுகளில் இவ்வாறானதோர் நெருக்கடியான நிலைமைகள் தோன்றியுள்ள இவ்வேளையில்தான் யாழ். பல்கலைக்கழகத்தின் ஆறாவது துணைவேந்தராக இரத்தினஜீவன் ஹூல் நியமனம் பெற்று மீண்டுமோர் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளார்.

பேராதனைப் பல்கலைகழகத்தின் சிரேஷ்ட இலத்திரனியல் பேராசிரியரான இரத்தினஜீவன் ஹூல், பல்கலைக்கழக மனித உரிமைகளுக்கான ஆசிரியர் சங்கம் யாழ்ப்பாணம் (UTHR) என்ற அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளரான ராஜன் ஹூல் ,என்பவரின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.thinakural.com/New%20web%20site...2/Article-3.htm

முறிந்தபனை மரம் என்ற புத்தகத்தை எழுதியவர்களுக்கும் சரி அதை தனது goodwill & influence பயன்படுத்தி மேற்கத்தேய பிரசுரிப்பாளர்களின் பெயரில் (ஒரு credibility injection கொடுக்க முயற்சித்து)பிரசுரித்தவர்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரட்ணஜீவன் கூல் முறிந்த பனைமரத்தை எழுதியவிர்களில் ஒருவர் அல்ல அதை புத்தகமாக பிரசுரிக்க உதவியவர் மாத்திரமே

ம்ம்ம்ம்ம்.... "அவர் பிள்ளையை பெறவில்லையாம், ஆனால் பிள்ளையை வளர்க்கிறாராம்!!!" :roll:

  • கருத்துக்கள உறவுகள்

அகற்றப்பட்டுள்ளது.

.....

அகற்றப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஜே.வி.பி. செல்வாக்கு செலுத்த இரட்ணஜீவன் ஹூலின் நியமனம் வழிவகுக்கலாம்.

UTHR என்ற அமைப்பு ஜே.வி.பி.காலத்தில் (19980/90)ஜே.வி.பி.க்கு ஆதரவான களனி பல்கலைக்கழக சிங்கள பிரிவு பேராசிரியரும் இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் கழக செயலாளருமான ஹேமா குணதிலக்கவினால் ஜே.வி.பி.யின் கரந்துறை அமைப்பாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த தகவல் 15 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் வெளிவந்துள்ளது.

Three Mules and Sister Rajani

அதே வேளை சிறிதரன் யாழ்ப்பாணத்தில் ஒரு தனியான இயக்கத்தை மனிதஉரிமைகள் சமூக அநீதிகளுக்கு எதிரான அமைப்பாக வழிநடத்தினார். Who is this Fool?

அந்த அமைப்பு உண்மையில் ஜே.வி.பி.யின் யாழ். கிளைக்கான அத்திவார அமைப்பாகும். இராஜினி திரணகமவும், சிறிதரனும், ராஜன் ஹூலும் UTHR யாழ் பிரிவை இந்த அமைப்புடன் இணைந்த அமைப்பாக நடத்தினர். இராஜினி திரணகமவின் கணவர் திரணகம ஒரு முக்கிய ஜே.வி.பி. அங்கத்தவர். தென்பகுதியில் அவரை இராணுவம் தேடியதால் யாழ்ப்பாணத்தில் ஒழிந்திருந்தார்.

சிவராம் (தாராக்கி) ஜே.வி.பி. பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி சில நாட்களில் கொல்லப்பட்டார். இந்த கட்டுரையில் ஜே.வி.பி. எப்படி ஊடுருவி மக்களை தன்பக்கம் கவருகிறது என்று விளங்கப்படுத்தி இருந்தார். "The writing is on the wall, and it is in red", By: Taraki, Source: Daily Mirror - April 13, 2005

ஜே.வி.பி. தாங்கள் ஜே.வி.பி. என்று சொல்லிக்கொண்டு தமக்கு செல்வாக்கில்லாத இடத்தில் பிரவேசிப்பது குறைவு. அவர்கள் அந்த பிரதேசத்துகிகு என்று ஒரு அமைப்பை உருவாக்கி இந்த பிரதேசத்தின் நியாயமான பிரச்சினைகளை எதிர்கொள்ள ஆரம்பிப்பார்கள். இந்த அமைப்பு வலுப்பெற்றதும் ஜே.வி.பி. கொஞ்சம் கொஞ்சமாக இவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். வடக்கு கிழக்கில் பிரச்சினை மனிதஉரிமைகளாகும்.

ரட்ணஜீவன் ஹூல் துணைவேந்தரானால் சிறிதரன், திரணகம ஜே.வி.பி. மீண்டும் புதிய அல்லது பழைய இயக்கங்களின் பெயரில் தோன்றி, மக்களுக்கு நல்லது செய்வதாக காட்டி யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளுக்கு மாற்று தலைமையை அல்லது போட்டித்தலைமையை ஏற்படுத்தும் சாத்தியம் பெருமளவில் உள்ளது.

இந்த திட்டம் நன்கு தெரிந்த மகிந்த இராஜபக்ச பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு மாறாக ஹூலை நியமித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் ஹூல் அங்கத்தவர். அவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு போதிய பணம் ஒதுக்காவிட்டால் சண்டை பிடிப்பார், வழக்கு போடுவார், அரசியல் செல்வாக்கு பாவித்து சிக்கல் தருவார் என்று எண்ணியே, அப்பாவியான செல்வாக்கோ, முதுகெலும்போ இல்லாத (ஆனால் நல்ல ஆசிரியர்) குமாரவடிவேலை பரிந்துரைத்தது. ஜே.வி.பி மகிந்தவுக்கு, ரட்ணஜீவன் ஹூல் தமது நியமன தெரிவு என்று சொல்லியிருக்க வேண்டும். ஆக ரட்ணஜீவன் ஹூல் யாழ்ப்பாணத்தில் போட்டித்தலைமையை உருவாக்கி, தமிழீழ தாகத்தை அழிக்க, வழிதிறக்கும் திறவுகோலாக நியமனமாகிறார்.

கீழேயுள்ள குறளின்படி இப்பொருளே மெய்பபொருளாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹூல் அவர்களே!!

அதற்குள் நீங்கள் அச்சேற்றிய உடைந்த பனையை எழுதிய இராஜினிக்கு நடந்ததை மறந்துவிடாதீர்கள்.

உண்மையில் யாழ். பல்கலைக்கழகம், பல்கலைக்கழகமாக இயங்கிய வரலாறே இல்லை. நல்ல கண்டுபிடிப்புகளோ ஆய்வுகளோ அங்கே நடப்பதில்லை.

நீங்கள் போக வேண்டிய இடம் வன்னி தொழில்நுட்பக்கல்லு}ரி. சிறப்பாக நடத்துகிறார்கள். இன்னுமொரு MIT யை உருவாக்க ஒத்துழைத்த பெருமை உங்களை சாரும். இந்த முட்டாள்களுக்கு உங்கள் நாட்டுப்பற்றை விளங்கப்படுத்தி மினக்கடாமல் வன்னியில் போய் விளங்கப்படுத்துங்கள். புூரணபாதுகாப்புடன் கேட்டதெல்லாம் தருவார்கள். தாராளமாக கட்டி எழுப்புங்கள் உலகின் சிறந்த பல்கலைக்கழகத்தை.

சரியான யோசனை. ஹூல் இதைப்பார்ப்பாரா என்பதே இப்போதைய எனது சந்தேகம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த முட்டாப்பயலுகளோட மாரடிக்கிறத விட்டு ஹூல் ஐயா விலகிக்கொள்வதுதான் நல்லது. எனக்குத்தெரியும் நீங்க வந்தா பல்கலக்கழகத்தின், குறிப்பா விஞ்ஞான பீட வளர்ச்சிக்கு உதவுவீங்க. பொறியியல் பீடம் ஒன்றை நிறுவும் நடவடிக்கைகளை முன்னெடுப்பீங்க. ஆனா இந்தப்பயலுகளுக்கு அது எங்க புரியப்போகுது. பேசாம குடும்பத்தோட அமெரிக்கா வந்து சந்தோசமா இருங்க. அவங்கள் பொங்கல் விழாவும் ஊர்வலமும் நடத்தி முடியுமெண்டா தங்கட பல்கலைக்கழக கல்வித்தரத்தை உயர்த்தட்டும்.

ட்

இந்த முட்டாப்பயலுகளோட மாரடிக்கிறத விட்டு ஹூல் ஐயா விலகிக்கொள்வதுதான் நல்லது. எனக்குத்தெரியும் நீங்க வந்தா பல்கலக்கழகத்தின், குறிப்பா விஞ்ஞான பீட வளர்ச்சிக்கு உதவுவீங்க. பொறியியல் பீடம் ஒன்றை நிறுவும் நடவடிக்கைகளை முன்னெடுப்பீங்க. ஆனா இந்தப்பயலுகளுக்கு அது எங்க புரியப்போகுது. பேசாம குடும்பத்தோட அமெரிக்கா வந்து சந்தோசமா இருங்க. அவங்கள் பொங்கல் விழாவும் ஊர்வலமும் நடத்தி முடியுமெண்டா தங்கட பல்கலைக்கழக கல்வித்தரத்தை உயர்த்தட்டும்.

இது நல்ல ஒரு யோசனை போயிட்டு வாங்க சாமி. :P :P :P ச்ப்ப்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முட்டாப்பயலுகளோட மாரடிக்கிறத விட்டு ஹூல் ஐயா விலகிக்கொள்வதுதான் நல்லது. எனக்குத்தெரியும் நீங்க வந்தா பல்கலக்கழகத்தின், குறிப்பா விஞ்ஞான பீட வளர்ச்சிக்கு உதவுவீங்க. பொறியியல் பீடம் ஒன்றை நிறுவும் நடவடிக்கைகளை முன்னெடுப்பீங்க. ஆனா இந்தப்பயலுகளுக்கு அது எங்க புரியப்போகுது. பேசாம குடும்பத்தோட அமெரிக்கா வந்து சந்தோசமா இருங்க. அவங்கள் பொங்கல் விழாவும் ஊர்வலமும் நடத்தி முடியுமெண்டா தங்கட பல்கலைக்கழக கல்வித்தரத்தை உயர்த்தட்டும்.

இதோடா,,, ஜோவ் என்ன யாழ் பல்கலைகழகம் நேற்றா ஆரம்பிச்சாங்க? இவ்வளவு நாளும் யாழ் பல்கலைகழகத்தை கூலா நடத்தி உலக தரம் வாய்ந்த பல்கலைகழகமாக மாற்றினாரு? அங்க படிக்கிற மாணவர்களே அவரை எதிர்க்கிறாங்க இவர் ஒருத்தர் தூக்கிபிடிக்கிறார்,,,, :evil: :evil:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதிப்பிற்குரியவர்களே வணக்கம்!

தங்களின் ஆதங்கங்கள் எமக்கு புரிகின்றது. நீங்கள் ஒருசாரர் ரட்ணஜீவன் கூலின் நியமனத்திற்காக குரல் கொடுக்கின்றீர்கள். ஆனால் மற்றையவர்கள் தடுக்கின்றார்கள். ஏன்? அவ்வாறு செய்வதற்கான காரணம் என்ன? சிந்தித்தோமா?

இவ்விடயத்தை இணையவலையில் ஏற்றிய தமிழ் மகனின் (மகான்) கருத்தென்ன? ஆழ நாம் நோக்கினோமா? அவர் சொல்ல வரும் விடயம் யாதென பார்த்தோமா? அவர் எழுதுவதற்கெல்லாம் நாமும் பதில் எழுதியும் அவர் இன்னும் மேற்தட்டு (படிப்பை) நிலையிலிருந்து இறங்காமல் வீம்பிற்காக வாதம் செய்வதை அவரின் கருத்துக்கள் பிரதிபலிப்பதாக கருதுகின்றேன். மேற்படி தமிழ்மக(h)ன் கூலின் மாணவன் என்பது மட்டும் எனக்கு தெரிகின்றது. குருவிற்காக மதிப்பளிக்கும் அவர் பாங்கு மெச்சத்தக்கது.

மன்னிக்கவும். நான் ஒரு நாள்கூட அவரது மாணவராக இருந்ததில்லை. இன்னும் ஏன் நான் அவரை ஒரேயொரு முறைதான் சந்தித்திருக்கிறேன்.

அதற்காக பசுவிற்கு கொம்பு ஏன் தலையில் இருக்கின்றது. முதுகில் இருந்தால் என்ன? என வாதம் பண்ணுவதும் சரியில்லை. குடும்பத்தில் கணவனோ அன்றி மனைவியே சரியில்லை என்று கண்டால் பேசித்தீர்க்கப்பார்ப்போம். அன்றி பிரிந்து வாழப்பார்ப்போம். அதைப்போன்றே யாழ் மாணவர் சமுதாயமும் தற்போது வேண்டிநிற்கின்றது. திரு. கூலவர்களுக்கு இதுவரைக்கும் யாழ் மண்ணின்மேல் இல்லாத பற்று இப்போ வரக்காரணம் என்ன? தான் பிறந்த மண்பற்று இல்லையென சொல்ல வரவில்லை. யாழ் மாணவர்களின் கல்வித்தகமைபற்றிய ஆர்வம் இல்லாதது ஏன்? பேராதனையில் சேரமுடிந்த அவருக்கு ஏன் பிறமாவட்டங்களில் சேர முடியவில்லையா? அல்லது பிற மாவட்டங்களில் வேலை செய்ய முடியவில்லையா?

ஆமாம் முடியவில்லை. காரணம் இலங்கையில் பொறியியல் பீடம் பேராதனை மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகங்களில் மட்டுமே இருக்கிறது.

எத்தனை கோடிகளை துறந்து இலங்கை வந்திருந்தாலும் தாயகத்திற்கு எதிராக இப்பொதும் கருத்துடையவராக இருப்பின் அவரின் சேவை தேவையில்லை. அவர் எப்படி படித்து முன்னுக்கு வந்தாரோ அதேபோன்று தமிழ் மாணவர் சமுதாயமும் முன்னுக்கு வரும். நான் நினைக்கின்றேன் 1999ம் ஆண்டு யாழ் இந்துக்கல்லு}ரியில் பயின்ற மாணவன் இளங்குமரன் என்பவர் கூல்போன்றே கணிதத்துறையில் பயின்று இதுவரை எடுக்கமுடியாத அளவிற்கு 397 புள்ளிகள் பெற்று இலங்கை ரீதியில் முதன்மை பெற்றிருக்கின்றார். இவர் தற்சமயம் அவுஸ்ரேலியாவில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கின்றார
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோடா,,, ஜோவ் என்ன யாழ் பல்கலைகழகம் நேற்றா ஆரம்பிச்சாங்க? இவ்வளவு நாளும் யாழ் பல்கலைகழகத்தை கூலா நடத்தி உலக தரம்

உலக தரம்?.... ஹாஹா :lol::lol::)

ஞாயிறு 12-03-2006 17:59 மணி தமிழீழம் [நிருபர் செந்தமிழ்]

ரட்ணஜீவன் கூல் பதவியேற்பாரானால் மாணவர் போராட்டங்கள் வெடிக்கும் - கலைப்பீடம் எச்சரிக்கை.

மாணவர்களின் மன உணர்வுகளை கவனத்தில் எடுக்காது பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி ஏற்பாரேயானால் பெரியளவிலான மாணவர் போராட்டங்கள் வெடிக்கும் என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் எஸ்.புருசோத்தமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்சமூகத்துக்கும், தமிழ் மாணவர்களுக்கும் துரோகம் இழைத்த பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் எமது பல்கலைகழகத்தின் துணைவேந்தராக வருவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் தேசிய விரோதியான ரட்ணஜீவன் கூலை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிப்பதன் மூலம் தமிழ் மாணவர்களது கல்வியையும் தேசிய உணர்வுகளையும் மழுங்கடிக்க முயல்கிறார். இதனை எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று தெரிவித்துள்ள யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் புருசோத்தமன.

பல்கலைக்கழக சமூகத்தினதும் மாணவர்களினதும் மனஉணர்வுகளுக்கு மதிப்பளிக்காது பேராசிரியர் கூல் ஜனாதிபதியின் விருப்பப்படி துணைவேந்தர் ஆசனத்தில் அமர முற்படுவாரேயானால் அவருக்கு எதிரான போராட்டங்களில் மாணவர்கள் குதிப்பதை எவராலும் தடுக்க முடியாது என்றார்.

நன்றி>புதினம்

இந்த முட்டாப்பயலுகளோட மாரடிக்கிறத விட்டு ஹூல் ஐயா விலகிக்கொள்வதுதான் நல்லது. எனக்குத்தெரியும் நீங்க வந்தா பல்கலக்கழகத்தின், குறிப்பா விஞ்ஞான பீட வளர்ச்சிக்கு உதவுவீங்க. பொறியியல் பீடம் ஒன்றை நிறுவும் நடவடிக்கைகளை முன்னெடுப்பீங்க. ஆனா இந்தப்பயலுகளுக்கு அது எங்க புரியப்போகுது. பேசாம குடும்பத்தோட அமெரிக்கா வந்து சந்தோசமா இருங்க. அவங்கள் பொங்கல் விழாவும் ஊர்வலமும் நடத்தி முடியுமெண்டா தங்கட பல்கலைக்கழக கல்வித்தரத்தை உயர்த்தட்டும்.

மேற்குறிப்பிட்ட உமது புலம்பலில் இருந்து தெரிவது, நீர் ஈழத்தில் இருந்து வெகு தூரத்தில் தனிமையில் இருந்து ஈழத்தைப் பற்றிய கற்பனை உலகில் இருப்பது.கூலின் பின் புலம் பற்றியோ யாழ் பல்கலைக் கழகத்திற்கு அவர் அனுப்பபடுவதன் அரசியல் சதி பற்றியோ எதுவித அறிவோ இன்றி மற்றவரை முட்டாள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ,ஒரு அடிமுட்டாள் என்று.

நான் முன்னரே கூறியபடி எமக்கோ அல்லது யாழ்ப் பல்கலைக் கழகத்திற்கோ விடிவைத் தருவது எமது தேசிய விடுதலயே அன்றி வேறொன்றும் அல்ல.இதன் பாற்பட்டு போராடும் முன்னணி சக்தியாக உள்ள யாழ் மாணவர்களை நிர்வாகதினூடாக தனிமைப் படுத்துவது, போராட்டத்தின் உக்கிரத்தை மழுங்கடிக்கும் வகையான நடவடிக்கைகளை பல்கலைக் கழகத்திற்குள் மேற் கொள்வது,பல்கலைக் கழ்கத்தை அபிவிருத்தி செய்வது என்ற போர்வையில் சிறிலங்கா அரசாங்கத்தின் பிடியை பல்கலைக் கழக மாணவர் மத்தில் வலுப்படுத்துவது போன்ற இன்னொரன்ன நோக்குடனயே இந்த நியமனம் இடம்பெறுகிறது.கூல் வந்தால் ,அரசாங்கத்தின் காசு வரும் தான் ,பல்கலைக் கழகம் அபிவிருத்தி செய்யப் படும் தான் இதற்காக நாம் கொடுக்கும் விலை எமது தேசிய விடுதலைப் போரட்டாமாகத் தான் இருக்கும்.இதற்காகவா ஆயிரம் ,ஆயிரம் மாவீரர் தம் இன்னுயிரை ஈந்தனர்?

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பொங்கு தமிழ் போராட்டத்தை எள்ளி நகையாடியதன் மூலம் , நீர் உம்மை வெகுவாக அடயாளம் காட்டி உள்ளீர். இதற்கு மேலும் உம் போன்றவரின் கருத்துக்கு பதிற் கருத்து எழுத வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

கூல் ஐயாவுக்கும் ,உம் போன்ற அறிவிலிகளுக்கும் நல்ல பாடம் வெகு விரைவில் புகட்டப்படும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஞாயிறு 12-03-2006 17:59 மணி தமிழீழம் [நிருபர் செந்தமிழ்]

ரட்ணஜீவன் கூல் பதவியேற்பாரானால் மாணவர் போராட்டங்கள் வெடிக்கும் - கலைப்பீடம் எச்சரிக்கை

இந்தக்கலைப்பீடத்தை factory என்றுதான் விஞ்ஞானம் கற்கும் மாணவர்கள் அழைப்பார்கள். இவர்கள் பல்கலைகழகம் வருவதே ஒரு பொழுதுபோக்கிற்குத்தான். ஆராயச்சி கண்டுபிடிப்பு என்றால் எதுவுமே தெரியாது.

நீர் சாம்பல் மேட்டிலென்றாலும் தமிழீழம் கிடைத்தால் சரி என்று நினைப்பவர். நான் தமிழீழம் உலகிலேயே ஒரு சிறந்த, வளர்ச்சிபெற்ற நாடாக வரவேண்டும் என்ற அவாவினால் கருத்துக் கூறுபவன். என்னைப்பொறுத்தவரை தலைவர் தமிழீழத்தைப் பெற்றுத்தருவார் என்ற அசையாத நம்பிக்கை உண்டு. ஆனால் அந்த ஈழம் சிறந்த முறையில் உருவாக்க நிறையப்பேரின் ஒத்துழைப்புத் தேவை. அவர்களில் ஒருவர் ஹூலாக இருந்தால் நன்றாக இருக்குமென்பதுதான் எனது எண்ணம்.

இங்கு இந்து மதத்திற்கு எதிரா ரட்ணஜீவன் எழுதியதால் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது என்ற அனாவசியமான கீழ்த்தரமான எதிர்ப்பிரச்சாரத்தை தவிர்த்தால் நல்லம். பேராசிரியர் ஆய்வு ஆராச்சி என்று பந்தாபண்ணினால் மாத்திரம் காணாது, கொஞ்சம் அறிவுபூர்வமாக உங்கள் நிலைப்பாட்டை வைக்க முயற்சிக்கவும், கல்வியின் பெயரால் மக்களை ஏமாத்துவதை தவிர்க்கவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.