Jump to content

யாழ். கள்ளுக்குடியர்களின் வினோதமான கோரிக்கை! காணொளி இணைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தவறணைகளையோ.. பார்களையோ காலையில் திறப்பதை நிறுத்த வேண்டும். மாலையில் 5 தொடக்கம் 10 மணி வரை திறக்க மட்டும் அனுமதி அளிப்பதோடு.. தவறணைகள்.. பார்களை சரியான சுகாதார முறைப்படி அமைப்பதோடு வாடிக்கையாளர்களுக்கு கே எவ் சி.. மக்டொனால்ட் போன்ற தரத்துக்கு சுகாதாரமாகவும்.. வசதியாகவும் வந்து மது அருந்திச் செல்ல வசதிகளை செய்து தந்து.. அனுமதிப்பதோடு.. ஒருவர் அவரது உடல்நலத்துக்கு ஏற்ற வகைக்கு மட்டுமே மது அருந்த அனுமதிக்கப்பட வேண்டும். அளவுக்கு மிஞ்சி மது அருந்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

மேற்கு நாடுகளில் இருந்து காசு.. ஆடம்பரம்.. எல்லாம் கொண்டு போற எம்மவர்கள்.. அங்குள்ள உடல்நலம் சுகாதாரம்.. சுத்தம் சார்ந்த பழக்க வழக்கங்களை மட்டும் அறிமுகம் செய்ய பிந்தங்கி நிற்கின்றனர்.

எம்மிடம் வளமான இயற்கை உண்டு. அதனைப் பயன்படுத்தி உல்லாசப் பயணிகளையும் கவரும் வகையில்.. மதுபான சாலைகளை மீள ஒழுங்கமைத்து.. சரியான சுகாதாரத்தோடு சுத்தப் பராமரிப்போடு வைத்திருக்க சட்டங்கள் இயற்ற வேண்டும். தவறுவோர் மீது மது விற்பனை அனுமதியை பறிமுதல் செய்ய வேண்டும். பெரும் தண்டமும் அறவிடப்பட வேண்டும்.

இதன் மூலமே குடியை.. கெளரவமாகவும்.. உடல்நலத்திற்கு.. குடும்ப நலத்திற்கு.. சமூக நலத்திற்கு பாதிப்பற்ற வகையில் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்...!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கன காலத்திற்குப் பிறகு, பழைய யாழ்ப்பாண நினைவுகளைக் கண் முன் கொண்டு வந்தமைக்கு நன்றிகள் புலவர்!

இருந்தாலும், அந்தப் பனங்குத்தியும், சிரட்டையும் பிளாவும் இல்லாதது ஒரு மாதிரியாத் தான் கிடக்குது!

எல்லாத்துக்கும் ஆசைப் படக் கூடாது தானே!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கள்ளு என்பது உழைப்பாளிகளின் சோர்வைப் போக்கும் அற்புத மருந்து.11மணியில் இருந்து திறப்பதே நல்லது.சாராய பார்களை மாலை 5 மணிக்குப்பின் திறக்கச்சொல்லலாம்.பிளாவும் சிரட்டையும் இல்லாதது நெரடாக இருக்கிறது.நெடுக்கரின் சுத்தம் பேணும் கருத்தை ஆதரிக்கிறேன். சாகிவனின் னருத்துமாதிரி கருத்துக்கள் வரும் என்றும் எதிர்பார்த்தேன்.

சின்னக்குட்டியர் குமாரசாமி ஆகியோரின் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்!!!!!!!!!!!!

Posted

கள்ளு என்பது உழைப்பாளிகளின் சோர்வைப் போக்கும் அற்புத மருந்து.11மணியில் இருந்து திறப்பதே நல்லது.சாராய பார்களை மாலை 5 மணிக்குப்பின் திறக்கச்சொல்லலாம்.பிளாவும் சிரட்டையும் இல்லாதது நெரடாக இருக்கிறது.நெடுக்கரின் சுத்தம் பேணும் கருத்தை ஆதரிக்கிறேன். சாகிவனின் னருத்துமாதிரி கருத்துக்கள் வரும் என்றும் எதிர்பார்த்தேன்.

சின்னக்குட்டியர் குமாரசாமி ஆகியோரின் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்!!!!!!!!!!!!

யாழ் குடி மன்னர்களின் கருத்துக்கு என்னை கருத்து கூற அழைத்தமைக்கு புலவர் பெருமானுக்கு எனது நன்றிகள் ....21 வயதில் புலம் பெயர்வரையும் நான் மதுவை தொடவில்லை என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் ...குடியோடு கும்மாளம் போட வைக்கும் பல்கலைகழக சூழலில கூட குடிக்கவில்லை என்றது எனக்கே ஆச்சரியம் ..புலம் பெயர்ந்த பிறகு புலம் பெயர் சூழல் தந்த மன அழுத்தங்கள் தனிமை வேறு பல காரணிகளால் அளவுக்கு மீறி மதுவை நுகர்ந்தேன் என்பதை ஒப்புக்கொள்ளும் அதே வேளை ,குடி மன்னனாகிய பின் கள்ளின் மகிமையை பலர் சொல்லக்கேட்டு ,,கள்ளடிக்க வேண்டும் என்ற கனவுகளோடு பல காலம் இருந்தேன். அதை நான் இலங்கை சென்ற பொழுது அனுபவித்து பார்க்க முயற்சி செய்தேன் ...நன்றாக இருந்தது ,,,ஆனால் வெளிநாட்டு பன்றி வாழ்க்கைக்கு பழக்க பட்டு உள்ளூரில் வாழ விருப்பம் இருக்க முடியாது இருப்பது போல் ..கள்ளும் அவ்வளவு ஒத்து கொள்ளவில்லை எனக்கு ......பெரிசுகள் சொல்லக்கேள்வி கள்ளு குடித்தால் மருத்துவன் தேவை இல்லை என்று ..எதுவும் அளவோடு இருந்தால் ..நல்லது..அதில் ஒரு பெரியவர் கூறுகிறார் உடன் கள்ளு நல்லது ..செல்ல குடித்தால் அதன் பலாபலனை அனுபவிக்க முடியாது என்று இந்த விசயத்தையும் அந்த காலங்கள் பெரிசுகள் சொல்ல கேட்டு இருக்கிறேன் ...அதனால் காலையில் திறப்பது அவசியம் என்ற கோரிக்கை நியாயமாக படுகிறது .....யாழ்குடி மன்னர்களின் செவ்வி நன்றாக இருந்தது ..யாழ் கள குடி மன்னர்கள் சார்பில் எனது பாரட்டை தெரிவித்து கொள்ளுகிறேன்... :lol: :

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிமேல் யாழ் கள்ளுக் கொட்டிலில் பெண்களும் இருந்தும் குடிக்க கூடியவாறு வச‌திகள் செய்யுமாறு தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன்

Posted

காலையில் 6 மணிக்கும் மதுபானக் கடைகளை திறக்கலாம். தலைவனும் தலைவியும் நன்றாகத் தண்ணியடித்து வாழ்க்கையை அனுபவிக்கலாம். பிள்ளைகளும் இவர்களுடன் சேர்ந்து அனுபவிக்கலாம்.

எனக்கென்னவோ இங்குள்ள இணைப்பின்படி, இந்தக் குடி நல்லதாய் படவில்லை. உழைத்து குடும்பத்தை கவனித்த பின் தனது அலுப்புத் தீர சில மணித்துளிகளில் அனுபவித்து குடிப்பது மாதிரி தெரியவில்லை. அழியப் போவது எதிர்காலக் குருத்துக்கள்.

பிழையிருந்தால் மன்னிக்கவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.