Jump to content

வலிகளை மட்டும் சுமந்து


Recommended Posts

பதியப்பட்டது
01
 
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர்ப்பிரதேசம் விடுதலைப்போராட்டத்திற்கு மிக முக்கிய பங்காற்றிய பிரதேசங்களில் ஒன்றாகும். மேஜர் கணேஸ், லெப் கேணல் புலேந்தியம்மான் காலம் தொடக்கம் அந்த மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்பை வைத்து, பல உதவிகளைச் செய்து, போராட்ட அமைப்பு வளர்ச்சியடைய காரணமாக இருந்திருக்கிறார்கள். அந்த கிராமத்தின் பெரும்பான்மையானோர் இறுதிவரை விடுதலைப்போராட்டத்தோடு பயணித்திருக்கின்றார்கள். அதற்காக அவர்கள் இழந்தது ஏராளம்.
 
இக்கிராமத்தில் ஒரு போராளி குடும்பம் இருந்தது. அக்குடும்பத்தில் தந்தை, தாய், மூன்று பெண்பிள்ளைகள் இரண்டு ஆண்கள் என ஏழுபேரைக் கொண்ட குடும்பம். அதில் மூன்றாவது மகன்தான் தன்னைப் போராட்டத்தில் (காந்தன் புனைபெயர்) இணைத்திருந்தான். 
 
2002 இற்குப் பின்னரான சமாதான காலப்பகுதி, போராளிகள் தங்களைத் அடுத்த கட்டத்திற்கு தயார்ப்படுத்திக் கொண்டிருந்த அதேவேளை தங்களுக்குத் தெரிந்த போராளிகளின், மாவீரர்களின் வீடுகளுக்குச் சென்று வருவார்கள்.
 
அவ்வாறே காந்தனின் வீட்டிற்கும் போராளிகள் சென்று வருவார்கள். அந்தக் குடும்பத்தினரும் போராளிகள் வரும்போது அன்பாக உபசரிப்பார்கள். அவ்வாறான சந்தர்ப்பத்தில் அக்குடும்பத்தின் மூத்த இரண்டு பெண்கள் மீது இரண்டு போராளிகள் காதல் வயப்பட்டனர். சம்பந்தப்பட்ட போராளிகளான வேலவன், குமரன் (புனைபெயர்) தலைமையிடம் தாம் காதலிப்பது பற்றிய விடயத்தைத் தெரியப்படுத்தினர். இயக்கத்தின் விதிமுறைகளுக்கு இணங்க காதலை ஏற்றுக்கொண்டதுடன் அவர்களுக்கு உரிய காலத்தில் திருமணம் செய்துவைப்பதாகவும் சொல்லப்பட்டது. 
 
காலம் நகர்ந்து கொண்டிருந்தது. 2006 ம் ஆண்டு நாலாம்கட்ட ஈழப்போர் திருமலையிலிருந்து தொடங்குகின்றது. சிங்களப்படை சம்பூர் பிரதேசத்தின் மீது கிபிர் விமானம், ஆட்லறிப் பீரங்கிகளைக் கொண்டு கடுமையான தாக்குதலை மேற்கொண்டது. இந்தக் கோரத்தாக்குதலில் பல மக்கள் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தனர். சம்பூர், கூனித்தீவு, ஈச்சிலம்பற்றை உள்ளடங்கலாக அப்பகுதியைச் சேர்ந்த நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்து, வாகரையில் அமைந்திருந்த வைத்தியசாலையில் அடைக்கலம் தேடிக்கொண்டனர். அங்கு அடைக்கலம் தேடியவர்களில் காந்தனின் குடும்பமும் ஒன்று.
 
வாகரையிலும் அசாதாரண சூழலே நிலவிக் கொண்டிருந்தது. இராணுவம் வாகரைப்பகுதியைக் கைப்பற்றும் நோக்குடன் தாக்குதல்களை ஆரம்பித்தது. தொடர்ச்சியான செல்த்தாக்குதல்கள், உணவுத்தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு என இறுகிப்போயிருந்த அந்தச்சூழலில், நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வைத்தியசாலையின் குறுகிய நிலப்பரப்பிற்குள்  தொடர்ந்திருப்பது கடினமாகியது. தொற்று நோய் அபாயம் என பல அடிப்படை வாழ்வியல் அசௌகரியங்களைச் சந்தித்தனர். எனவே பலர் மீன்பிடி வள்ளங்களில் மட்டக்களப்பு வாழைச்சேனைப்பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றனர்.
 
காந்தனின் குடும்பமும் மீன்பிடி வள்ளத்தில் இடம்பெயர்ந்து வாழைச்சேனைக்குச் செல்லத் தீர்மானித்தது. கடல் சீரற்று இருந்த போதும் உயிரைக்காப்பாற்ற வேறுவழியில்லாததால் ஆபத்தான கடற்பயணத்தை எதிர்கொள்ள தயாராகினர். 
 
எல்லோரையும் ஏற்றிக் கொண்டு வள்ளம் அலைகளுடன் போராடிச் சென்று கொண்டிருந்தது.  திடீரென எழும்பிய இராட்சத அலை வள்ளத்தை கவிட்டு விட்டது. பக்கத்தில் வந்தவர்கள் பாய்ந்து, கவிழந்துபோன வள்ளத்தில் இருந்தவர்களைக் காப்பாற்றினர்கள். ஆனால் காந்தனின் தந்தையும் தாயும் கடலுக்குள் மூழ்கிவிட்டனர். நீண்டு விரிந்துபோய் இருந்த அந்தக்கடலின் எந்தப்பகுதியிலும் அவர்களின் தலைதெரியவில்லை. அந்தக் குடும்பத்தில் மீதமிருந்த மூன்று பெண்களையும் ஒரு பையனையும் காப்பாற்றி வாழைச்சேனையில் விட்டுவிட்டனர்.
 
தந்தையையும் தாயையும் இழந்து திக்குத் திசை தெரியாமல் உறைந்துபோய் இருந்த அந்த நால்வரும் வாழைச்சேனையின் அகதிமுகாம் ஒன்றில் அடைக்கலம் தேடினர்கள். சம்பூரைச் சேர்ந்தவர்கள் அந்த நால்வரையும் அகதிமுகாமிற்கு அழைத்துச் சென்றிருந்தனர். அவர்களின் பாதுகாப்பில்தான் நால்வரும் முகாமில் இருந்தார்கள்.
 
தாய், தந்தையின் பாதுகாப்பில் வளர்ந்த அவர்களால் அநாதரவாக நிற்கின்றோம் என்பதை சீரணிக்க முடியவில்லை. பெற்றோர்கள் அற்ற நிலையில் அடுத்தகட்டம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாத ஒரு சூனியத்திற்குள் தள்ளப்பட்டிருந்தார்கள்.
 
அதேவேளை சம்பூர், வாகரைப் பகுதிகள் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்ததைத் தொடர்ந்து, திருமலையில் இருந்த படையணிகள் பின்வாங்கி வன்னியை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. இதனால் காந்தனுடனோ அல்லது வேலவன் குமரனுடனோ தொடர்பு கொள்ள முடியவில்லை.
 
முகாமில் ஒரு பாதுகாப்பற்ற சூழலிலேயே வாழ வேண்டியிருந்தது. ஏனெனில் இராணுவப் புலனாய்வாளர்கள் போராளி, மாவீரர் குடும்பங்களை இனம் காணும் வேலைகளிலும் ஈடுபட்டனர். இதனால் யாராவது சொல்லிக்கொடுத்துவிடுவார்களோ என்ற பயத்தின் காரணமாக, நால்வரும் அவசியமற்று வெளியில் தலைகாட்டுவது கூட இல்லை. பெற்றோரின் இழப்பு ஒருபுறம், காந்தன், வேலவன், குமரன் எப்படியிருக்கிறார்கள் என்ற நிலைதெரியாது நிம்மதியற்று, உறக்கமற்று ஏக்கத்துடன் தவித்தார்கள். அவர்களைச் சந்திப்போமா? இல்லையா? இனி எப்படி எதிர்காலத்தைச் சந்திக்கப்போகின்றோம்? போன்ற கேள்விகளிற்கு விடை தெரியாமல் அவர்களின் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
 
மறுபுறம், சம்பூர், வாகரையில் இருந்து புறப்பட்ட அணிகள் வன்னிக்கு வருவதில் பாரிய சவால்களைச் சந்தித்துக் கொண்டிருந்தன.  இரண்டு இரவுகள், இரண்டு பிரதான வீதிகளைக் கடந்து திரியாய்ப்பகுதிக்கு வந்து சேர்ந்தனர். திருமலை அணியுடன் மட்டக்களப்பு அணிகளும் வந்து சேர்ந்துவிட்டது. எனவே பெரியளவிலான அணிகள் வன்னிக்கு செல்வதைத் தடுப்பதற்கு கடற்படைக் கலன்களும் புல்மோட்டைக் கடற்பரப்பை நிறைத்திருந்தன. அணிகளை ஏற்ற வந்த கடற்புலிப்படகுகள் கடுமையாகச் சண்டையிட்டு அணிகளை ஏற்றி வன்னியில் இறக்கிக் கொண்டிருந்தன.
 
அதேவேளை, ராடர்களில் கடற்புலிகளின் படகுகள் எந்த இடங்களில் அணிகளை ஏற்றுகின்றன என்ற தகவலை எடுத்து அப்பகுதிகளுக்கு இடைவிடாத செல்தாக்குதலை நடாத்திக் கொண்டிருந்தது இராணுவம். இந்த இக்கட்டான கடற்பயணத்தில்தான் காந்தன், வேலவன், குமரன் ஆகியோரும் வன்னியை நோக்கிப் புறப்பட்டிருந்தார்கள். வேலவன் மற்றும் குமரன் பயணித்துக்கொண்டிருந்த கடற்புலிப்படகு இடையில் டோறாப்படகின் தாக்குதலை எதிர் கொண்டது. கடுமையாக சண்டையிட்டுக் கொண்டே வன்னிக்கடற்பரப்பிற்கு வந்துசேர்ந்துவிட்டனர்.
 
காந்தன் சொர்ணம் அண்ணையுடன் நின்றவர். அவர்களும் அதன் பின் புறப்பட்ட வண்டியில் கிளம்பிவிட்டார்கள். வழக்கம்போலவே அவர்களின் படகும் கடற்படையின் கடுமையான தாக்குதலை எதிர்கொண்டு வன்னியை வந்து கொண்டிருந்தது. இடையில் நடந்த உக்கிரமான கடற்சண்டையில் காந்தன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான். தாயும் தந்தையும் உறங்கிப்போன கடலோடு காந்தனும் சங்கமமாகிவிட்டான்.
 
வன்னிக்கு வந்த பின்னர், காந்தனது குடும்பத்தின் நிலைமையை அறிந்த தளபதி சொர்ணம் அண்ணை, சில ஆதரவாளர்களைத் தொடர்பு கொண்டு அந்த நான்கு பேரையும் வன்னிக்கு வரவழைத்தார்.
 
அவர்களிற்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைந்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பு தளபதி சொர்ணம் அண்ணைக்கு ஏற்பட்டது. தாய், தந்தையை இழந்த அவர்களிடம் சகோதரன் காந்தனுக்கு என்ன நடந்தது? என்று சொல்ல முடியாத இக்கட்டான நிலை. எனவே, அவரையும் வேறு சிலரையும் திருமலைக் காட்டிற்குள் ஒருவேலையாக விட்டுவிட்டு வந்திருக்கிறன் என்று ஒரு பொய்யைச் சொல்லிவைக்கவேண்டிய கட்டாயம்.
 
பின்னர் தலைவருடன் கதைத்து அவர்கள் மூத்தவர்கள் இருவருக்கும் திருமணம் நடாத்தி வைக்கப்பட்டது. அது ஒரு வகையில் சிறிய ஆறுதலையும் பாதுகாப்பையும் கொடுத்தது. என்றாலும் அண்ணா எப்பவருவார் என திருமலைப் போராளிகளைக் காணும்போது மட்டுமல்ல தளபதி சொர்ணம் அண்ணையிடமும் கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அந்தப் பொய்யைச் சிலகாலமே தக்கவைக்க முடிந்தது.
 
குடும்பத்தைப் பொறுப்பெடுத்த, வேலவன்  நிர்வாக வேலைத்திட்டத்திலும் குமரன் பயிற்சி வழங்கும் வேலைத்திட்டத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 
 
2008 போர் வன்னியிலும் உக்கிரமடையத் தொடங்கியது. மன்னாரில் சண்டையைத் தொடங்கிய இராணுவம் தொடர்ந்து முன்னேறி பூநகரி வரை கைப்பற்றி, பின் கிளிநொச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. பெரிய நிலப்பரப்பில் நகர்ந்த படையினரைத் தடுப்பதற்காக எல்லாப்போராளிகளும் களத்தில் இறக்கப்பட்டனர். 
 
அந்தச்சமயம் நிர்வாக வேலைத்திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த வேலவனுக்கும் அறிவியல் நகர்ப்பகுதியில் இராணுவத்தை தடுத்து நிறுத்தும் அணியில் தளபதியுடன் இணைந்து செயற்படுதவற்கு அழைப்பு வருகின்றது. 
 
தொடரும் .............!  
 
Posted

நேர்த்தியான உங்கள் எழுத்துநடை பாராட்டுதலுக்கு உரியது.. அந்த எழுத்தின் சாரம் வரலாற்றில் பதியப்படவேண்டியது..!

Posted
02.
 
களத்தளபதியின் கட்டளைப்பீடம் பாதுகாப்பு வேலியில்(லைனில்) இருந்து வெகு அருகில் அமைந்திருந்தது. அடிக்கடி சண்டை நடக்கும் அந்த லைனுக்குரிய கள நிர்வாக வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார் வேலவன். அப்போது அங்கு நடைபெற்ற ஒரு சண்டையில் எதிரியின் ஆர்.பி.ஜீ செல் இவர் இருந்த இடத்திற்கு அருகில் பட்டு வெடித்தது. அதில் பறந்த செல்லின் பீஸ் தலையில் பட்டு லெப் கேணல் வேலவன் வீரச்சாவடைந்தார்.
 
வழமையாக வேலவன் வெள்ளிக்கிழமை பிந்நேரம் வீட்டிற்குச் சென்று திங்கட்கிழமை அதிகாலை மீண்டும் பணிக்குத் திரும்புவார். சிலவேளைகளில், வேலை அதிகமாக இருந்தால் சனிக்கிழமை வீட்டிற்கு வருவார். வேலவன் வீரச்சாவடைந்தது வெள்ளிக்கிழமை. வேலவனது மனைவிதான் வீட்டிற்கு மூத்தவர். அவரது தங்கைகுடும்பமும் வேலவன் வீட்டிற்கு அருகிற்தான் வசித்துவந்தார்கள். அந்தக்கிழமை வேலவன், குமரன் இருவரும் வரவில்லை. எனவே ஏதோ முக்கிய வேலையாக வரவில்லை என நினைத்து எப்படியும் நாளை வருவார்கள் என்ற நம்பிக்கையில் நல்ல சாப்பாடு கொடுக்க எண்ணி சமைத்துக் கொண்டிருந்தார்கள். அந்தநேரங்களில் களமுனைகளில் சாப்பாடு சீராக இருக்காது
.
மதியச்சாப்பாட்டை தயார்செய்து கொண்டிருக்கும் போது குமரனும் வேறு சிலரும் வீட்டிற்கு வந்தனர். அங்கு வழமையாகப் போராளிகள் சென்று வருவதால் வழமையாக உபசரிப்பதைப்போல் ‘வாங்கோ என வரவேற்ற குமரனின் மனைவி எங்கை வேலவன் அத்தான் வரவில்லையோ? ஏன் ஏதேனும் வேலையாக நிற்கின்றரா?’ எனக் கேட்டார்.
 
குமரனும் வேலவனும் நல்ல நண்பர்கள். குமரனின் மௌனமும் அவரது கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரையும் பார்த்த வேலவனின் மனைவி அதிர்ச்சியடைந்து மூர்ச்சையாகி விழுந்து விட்டார். 
 
ஏனெனில் இது அவர்களுக்கு நாலாவது இழப்பு. அதுவும் இரண்டு ஆண்டுகளில். வேதனையில் துடித்தார். அடுத்தடுத்த மரணம், இடப்பெயர்வு, இழப்பு. அதுவும் தமிழ்ப் பெண்களில் சிலர் ஆண்களைச் சுற்றியே தங்களிற்கான வாழ்க்கையின் நம்பிக்கைகளையும் சந்தோசங்களையும் கட்டிவைத்திருப்பார்கள். அது உடையும்போது வெடிக்கும் அழுகையையும் வேதனையையும் துடைப்பதற்கு எந்த சக்தியாலும் முடியாது. அவருக்கு ஒரு குழந்தையுமிருந்தது. இந்த சமூகத்தில் தனதும், தனது குழந்தையினதும், தங்கை, தம்பியினதும் எதிர்காலம் என்ன? என்ற விடையில்லாக் கேள்விகள் அவரை மூர்ச்சையடைய வைத்துவிட்டது.  
 
ஆற்ற முடியாமல் அழுதுகொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் ‘எங்கட குடும்பத்தின்ர நிலை தெரிஞ்சும், ஏன் அவரை கொண்டு போய் சண்டையில விட்டனீங்கள், நாங்கள் என்ன செய்வோம்’ என்று ஆற்றாமையில் கதறியபோது, அவரின் தவிப்பின் உச்சம், அதில் இருந்த எல்லோரது மனங்களிலும் ஆழமாக இறங்கியது.
 
இராணுவம் தொடர்ந்து  முன்னெறிக் கொண்டிருந்தான். குமரன் மாஸ்டர் சண்டைக்களங்களில் நேரடியாக இல்லாவிட்டாலும் தொடந்து பணியாற்றிக் கொண்டிருந்தார்.
 
புதுக்குடியிருப்புப் பகுதியைத்தாண்டி, மாத்தளன் பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டது. சண்டை இறுதிக்கட்டத்தை அண்மித்துக் கொண்டிருந்தது. இந்த தருணத்தில்  வேலவனின் மனைவி, பிள்ளை, தங்கையை திருலைக்கு கப்பலில் அனுப்பி வைத்தனர். அவர்கள் அங்கு முகாமில் தஞ்சமடைந்தனர். குமரனுடன் மனைவி பிள்ளை, தம்பியும் நின்றனர்.
 
அந்தச்சமயத்தில் திருமலைக்குச் சில படையணிகளை நகர்த்துவதற்கான திடீர் முடிவு எடுக்கப்பட்டது. படையணிகள் செல்லும் போது அணிகளை இறக்கும் ஒழுங்கு, தங்கவைப்பது, உணவுகள் ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளை ஒழுங்கமைப்பதற்கு அனுப்பவிருந்த அணியில் குமரனும் இடம்பெற்றிருந்தார்.
 
குமரனுக்கும் அந்தக் குடும்பத்திற்கும் அது கடினமானதொரு தருணமாக இருந்தது. இப்போது அந்த குடும்பத்திற்கு இருக்கும் ஓரே ஆறுதல் அவர் மட்டுந்தான். குமரனுக்கும் ஒரு குழந்தை. முள்ளிவாய்க்காலை இராணுவம் நெருங்கிய நேரம் கடுமையான செல்லடி, பங்கருக்குள்ளேயே வாழ்க்கையை நடாத்தவேண்டியிருந்தது. பங்கரை விட்டு வெளியில் சென்று திரும்பி பங்கருக்கு வரும் வரையிலும் உயிர் இருக்குமா! என்பது உறுதிப்படுத்த முடியாத நிலையிருந்த காலப்பகுதி. 
 
குமரனுக்கும் சங்கடமான நிலை. நான் திருமலை போனால் இவர்கள் எவ்வாறு சமாளிப்பார்கள். ஏதாவது நடந்தாலும் உடனடியாக ஒன்றும் செய்ய முடியாது. தான் போகலாமா! வேண்டாமா! என்று முடிவெடிக்க முடியாமலிருந்தார். மனைவியின் கண்களில் ஏக்கம். காந்தனின் வீரச்சாவு சிலகாலத்தின் பின் தெரிவிக்கப்பட்டிருந்ததால், குமரனுக்கும் ஏதாவது ஆகிவிடுமோ? எனப்பயந்தார். 
 
ஆனால் சொர்ணம் அண்ணையோ தைரியமாக ‘நீ போ, இந்த வேலையை உன்னால மட்டும் தான் சரியாக ஒழுங்குபடுத்த முடியும், அதோட இங்க நிலைமை சிக்கலாகிக் கொண்டு போகுது, உன்ர குடும்பநிலைமையும் எனக்கு விளங்குது. நான் முயற்சி செய்து, அவர்களை வள்ளத்தில் ‘றிங்கோ’ அனுப்பி விடுறன்’ என்றார்.
 
முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களில் விடுதலைப்போராட்டம் நின்று கொண்டிருந்தது. தனக்கான பொறுப்பின் அவசியத்தை உணர்ந்த குமரன் தனக்குத் தரப்பட்ட கட்டளையை நிறைவேற்றத் தயாரானார்.  கடலில் பயணித்து திருமலை செல்வது சுலபமானதல்ல என்பதும் தெரியும். அதேவேளை தனக்கான பணியை முதற்கடமையாகக் கொண்டார்.
 
எனவே குடும்பத்திற்கு நம்பிக்கையூட்டிவிட்டு  மனைவியிடம் விடைபெற்று, தாடியை இழுத்து விளையாடிக் கொண்டிருந்த கைக்குழந்தையிடம் முத்தத்தில் பிரிவைச் சொல்லிப் புறப்பட்டார். அவரை கண்ணீருடன் வழியனுப்பி விட்டு, கவனமாக போய்ச் சேரவேண்டும் என்று பங்கருக்குள் கோணேஸ்வரக் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டு, தூக்கமற்றிருந்தன அந்த உயிர்கள்.
 
வழமையாகத் திருமலைக்குச் செல்லும்போது,  கடற்புலிகளின் தாக்குதல் படகுகளும் இணைந்து சென்று அணிகளை இறக்கி விட்டுவரும். அந்த நேரத்தில் அதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. முள்ளிவாய்க்காலின் இறுதிக்கிழமைகளில் நின்று கொண்டிருந்தன அணிகள். எனவே ராடரில் தெரியாது என நம்பப்படும் படகில் தான் அவர்கள் புறப்பட்டார்கள். அந்த நேரத்தில் பல மக்கள் மீன்பிடிப்படகுகளில் திருமலை மற்றும் யாழ்ப்பாணத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். எனவே சாதாரண படகிலேயே இவர்களும் புறப்பட்டார்கள். ஆனால், அடுத்தநாள் வரை படகுகளில் சென்ற போராளிகளின் தொடர்பு கிடைக்கவேயில்லை. லெப்.கேணல் குமரனும் ஏனையோரும் வீரச்சாவடைந்துவிட்டனர் என ஊகிக்க முடிந்தது. மறுநாள் காலை குமரனின் மனைவி குழந்தையை தம்பியுடன் விட்டு விட்டுகடுமையான செல்லடிக்கு மத்தியிலும் முகாமிற்கு வந்து, ‘குமரன் றிங்கோ போய்ச் சேர்ந்து விட்டாரா’ என பரிதவிப்புடன் கேட்டார்.
 
என்ன பதில் சொல்வது, சங்கடத்துடன் ‘போட் போயிட்டுது, இன்னும் தொடர்பு கிடைக்கவில்லை’ என்று சொன்னார்கள். அவர் அவர்களை ஆழமாகப்பார்த்தார். மௌனத்தைப் பதிலாக்கினாள். அவரின் பார்வையின் ஆழத்தையும் மௌனத்தையும் அவர்களால் எதிர் கொள்ள முடியவில்லை. கண்ணீர் கண்களை நிரப்ப, உதடுகள் துடிதுடிக்க, பெருமூச்சை விட்டு விட்டு, கீழே வெறித்துப்பார்த்தார். சாவுகள் மலிந்த பூமியாக விளங்கிய முள்ளிவாய்க்காலின் மரண ஓலங்கள் மனதைக் கடுமையாக்கியதோ என்னவோ மீண்டும் தலையை நிமிர்த்தி தழுதழுத்த குரலில் தமது இருப்பிடத்தைச் சொல்லி ‘தொடர்பு கிடைத்தவுடன் சொல்லுங்கோ அண்ணா’ என சொல்லிவிட்டுச் செல்லத்திரும்பினார். ‘செல் கடுமையாக அடிக்கிறான் பார்த்துப்போங்கோ’ எனகூறிய போது ‘சரி’ என விரக்தியுடன் தலையாட்டிச் சென்றார்.
 
தாய், தந்தையை இழந்த பின், நால்வரும் பெரிய கனவுகளோடும் எதிர்பார்ப்புக்களோடும் வன்னிக்கு வந்து வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். வன்னியில் இருந்து திரும்பும் போது முள்ளிவாய்க்கால் வரை பட்ட கடினங்கள், வேதனைகளுடன் இரண்டு கைக்குழந்தைகளையும் கொண்டு  அகதிமுகாமில் தஞ்சமடைந்தனர். குமரனுக்கு என்ன நடந்தது என்பதை  அறிந்து கொண்டபோது அழுவதற்கு கண்ணீரும், திராணியும் இருந்திருக்குமோ! தெரியவில்லை.
 
இன்று ஈழத்தின் ஒரு ஓரத்தில் தங்களது காதலின் அன்புப்பரிசாக, நினைவுகளாக இருக்கும் அந்தக் குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர் அந்தச் சிறுவயது விதவைகள். அவர்களின் அமைதியான ஆனந்தமான வாழ்க்கையை நான்காம் ஈழப்போர் நிரந்தரமானதொரு துன்பியல் நிலைக்குள் தள்ளிவிட்டது. தாய், தந்தையின் உடல்கள் வாகரைக்கடலிலும் காந்தன், குமரனது உடல்கள் புல்மோட்டைக்கடற்பரப்பிலும் சங்ககமாகிவிட்டன. வேலவனின் உடல் வன்னி மண்ணில் அடையாளமிழக்கப்பட்ட துயிலுமில்ல விதைகுழி மண்ணில் விதைக்கப்பட்டிருக்கின்றது.
 
ஒரு புலம் பெயர் தமிழ் உணர்வாளர் தன்னாலியன்ற உதவிகளைச் செய்து அந்தக் குடும்பத்தைப் பராமரிப்பதாக கேள்விப்படுகின்றேன். அந்த நல்ல உள்ளத்திற்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
Posted

இசைக்கலைஞன், அலைமகள்  கருத்துக்களிற்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதை எழுதுவது, எவருக்கு ஆறுதல் கூறுவது, எனத் திகைக்கின்ற ஒரு நிலையில், ஏற்படும் ஒரு வெறுமையோன்றே கண் முன் விரிகின்றது!

 

உங்கள் எழுத்துக்கள், சம்பவங்களை அவற்றின் நிகழ் காலத்திற்கே அழைத்துச் செல்கின்ற போதும், 'தொடருங்கள், வாணன்' என்று மட்டுமே, என்னால் எழுத முடிகின்றது!

Posted

நிஜம்தான் புங்கையூரான், 

 

மனதை அழுத்துகின்ற சம்பவங்கள் ஏதோ ஒரு வெறுமைக்குள் தள்ளிவிடுகின்றன. உங்களுடன் பகிரும்போது அழுத்தங்கள் குறைவதுபோல ஒரு உணர்வு. கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட உங்களுக்கு உளமார்ந்த நன்றிகள்.

Posted

என்னத்தை எழுதுவது என்றும் தெரியவில்லை..! எல்லோருக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதை எழுதுவது, எவருக்கு ஆறுதல் கூறுவது, எனத் திகைக்கின்ற ஒரு நிலையில், ஏற்படும் ஒரு வெறுமையோன்றே கண் முன் விரிகின்றது!

உங்கள் எழுத்துக்கள், சம்பவங்களை அவற்றின் நிகழ் காலத்திற்கே அழைத்துச் செல்கின்ற போதும், 'தொடருங்கள், வாணன்' என்று மட்டுமே, என்னால் எழுத முடிகின்றது!

Posted

 தங்களின் பகிர்வுக்கும் எழுத்துக்கும் மிக்க நன்றி.

தொடர்ந்து எழுதுங்கள் வாணன்.:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதை எழுதுவது, எவருக்கு ஆறுதல் கூறுவது, எனத் திகைக்கின்ற ஒரு நிலையில், ஏற்படும் ஒரு வெறுமையோன்றே கண் முன் விரிகின்றது!

 

உங்கள் எழுத்துக்கள், சம்பவங்களை அவற்றின் நிகழ் காலத்திற்கே அழைத்துச் செல்கின்ற போதும், 'தொடருங்கள், வாணன்' என்று மட்டுமே, என்னால் எழுத முடிகின்றது!

 
Posted

இசைக்கலைஞன், விசுகு,கவிதை,SUNDHAL  கருத்துக்களிற்கு நன்றி

Posted

:(  மூன்றாவது பந்திக்குப் பிறகு வாசிக்க முடியவில்லை  :( அதனால் வாசிக்கவில்லை :(

Posted

 எமது இனம் சந்தித்த ஆயிரமாயிரம் அவலங்களில் சிறிய சம்பவம்,   இயலும் போது வாசியுங்கள். 

Posted

அலை பூதக்கண்ணாடி போடுங்கள் ................ :D 


இணைப்பிற்கு மிக்க நன்றி சகோ ...

Posted

எமக்கு ஒரு நாடு வேண்டும் என்பதற்காக இப்படி எத்தனையோ குடும்பங்கள் தம்மையே அழித்திருக்குது.அவர்கள் ஆண்டவருக்கு சம்மானவர்கள் போற்றலுக்கு உரியவர்கள்.அவர்களது ஈடு செய்ய முடியாத தியாகத்தை கொஞ்சப் பேர் தாங்கள் நல்ல வேசம் போட கையில் எடுத்தது தான் கொடுமையிலும் கொடுமை

Posted

எல்லாத் தியாகங்களயும் வியாபாரமாக்கியவர்களை எப்பிடி சொல்வது??

Posted

அலைமகள், தமிழ்ச்சூரியன், sunmoon  கருத்துக்களிற்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எமக்கு ஒரு நாடு வேண்டும் என்பதற்காக இப்படி எத்தனையோ குடும்பங்கள் தம்மையே அழித்திருக்குது.அவர்கள் ஆண்டவருக்கு சம்மானவர்கள் போற்றலுக்கு உரியவர்கள்.

 

அவர்களது ஈடு செய்ய முடியாத தியாகத்தை கொஞ்சப் பேர் தாங்கள் நல்ல வேசம் போட கையில் எடுத்தது தான் கொடுமையிலும் கொடுமை

 

 

இந்த  ஆதங்கமும்  மனவருத்தமும்  அநேகமாக  எல்லா தமிழருக்கும்  உண்டு.

இங்கு  நான் தமிழர்  என்றே குறிப்பிடுகின்றேன்.

 

ஆனால் அதே  தமிழர்களிலிருந்து தான் ஆண்டவர்களும் வந்தார்கள்  என்பதையும்  நாம் மறந்துவிடக்கூடாது.

எல்லா  இனங்களிலும  இது உள்ளது தான். ஆனால்  நல்லவற்றையும் தேவையானவற்றையும்   நாம் எடுத்துக்கொண்டு இலக்கு நோக்கி  பயணிப்பதே சிறந்தது.  தலைவர் அதையே  செய்தார்.  அவரால் முடிந்தது.  எம்மால்  ஏன் முடியவில்லை  என  ஒவ்வொருவரும்  தம்மை  நோக்கி கேள்விகளை  முன் வைக்கணும்  முதலில்.

 

அதைவிடுத்து

அழுது கொண்டிருப்பதோ

குறைபிடித்து அல்லது குறை  கூறிக்கொண்டு வாழாதிருப்பதோ  எனது இனத்துக்கு   மேலும்  மேலும்  பின்னடைவுகளையே  தரும்  என்பதை  நாம்  மறந்துவிடக்கூடாது

Posted

இவற்றை எல்லாம் வாசிக்கும் போது வெற்றியோ தோல்வியோ போர் முடிந்ததை எண்ணி சந்தோசப்படவேண்டிக்கிடக்கு .

புலம்பெயர்ந்தவன் புல்லரிக்குது என்று சொறிந்து விட்டு படுத்துவிடுவான் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவற்றை எல்லாம் வாசிக்கும் போது வெற்றியோ தோல்வியோ போர் முடிந்ததை எண்ணி சந்தோசப்படவேண்டிக்கிடக்கு .

புலம்பெயர்ந்தவன் புல்லரிக்குது என்று சொறிந்து விட்டு படுத்துவிடுவான் .

 

போர் முடிவுக்கு வந்தது எல்லோருக்கும்  சந்தோசமே

அதில்  எந்த  மாற்றுக்கருத்தும  எவருக்கும் இருக்க  இடமில்லை

ஆனால் போரை  தமிழன்  எப்பொழுதும  விரும்பியதில்லை

அது எம்மீது  திணிக்கப்பட்ட போர்

அதற்காக  நாம்  இழந்தவை  ஏராளம் ஏராளம்

போர் முடிந்தும் இழந்து கொண்டிருப்பவை   ஏராளம் ஏராளம்

இதற்குத்தான்  ஒரு தீர்வை  வேண்டி  நிற்கின்றோம்

 

இதில் தான்

தேசத்தை  விரும்புவனுக்கும்

புலி  வாந்தி  எடுப்பவனுக்கும்  உள்ள அடிப்படைப்பிரிவை  சாதாரணமாகவே  மக்களால் அறிந்து கொள்ளமுடிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
உண்மைகளை அப்படியே காட்சி படுத்துகிறீர்கள் வாணன்.
எங்கள் விடுதலைப்போராட்ட வரலாறு ஒப்பற்ற தியாகங்களையும்,
வீரத்தையும் உள்ளடக்கிக்கியது.அந்த வரலாற்றின் பக்கங்களை 
முடிந்தவரை தொடர்ந்து பதிவிடுங்கள். 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன லியோ அண்ணா நீங்கள் எழுதிட்டு வந்தத நிறுத்திடீங்க? யாராலும் மிரட்ட பட்டீர்களா?

Posted

 

உண்மைகளை அப்படியே காட்சி படுத்துகிறீர்கள் வாணன்.
எங்கள் விடுதலைப்போராட்ட வரலாறு ஒப்பற்ற தியாகங்களையும்,
வீரத்தையும் உள்ளடக்கிக்கியது.அந்த வரலாற்றின் பக்கங்களை 
முடிந்தவரை தொடர்ந்து பதிவிடுங்கள். 

 

 

கருத்துக்கு நன்றி லியோ அண்ணை

Posted

வாணன், லியோ மாதிரி இடையில் எழுதுவதை நிறுத்தமாட்டீர்கள் என்று நம்புகின்றோம்!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவர்களுக்கு தானே பா.உ பட்டத்தை மக்கள் கொடுத்திருக்கினம் பிறகு ஏன் கலா பட்டம் வேணும் என்று அடம் பிடிக்கினம்
    • 25 கோடி அமெரிக்க டாலர்கள் என்பது சிறிய தொகை........... 2000 கோடி இந்திய ரூபாய்கள். உதாரணமாக, தமிழ்நாடு டாஸ்மாக்  விற்பனை வரி மற்றும் கலால் வரியாக மட்டும் கடந்த ஒரு வருடத்தில் பெற்ற தொகை: 45855 கோடிகள். புத்தகத்திலேயே இவ்வளவு இருக்கின்றது என்றால், தமிழ்நாட்டிலேயே அரசியல்வாதிகளின் பெட்டகங்களுக்கு எவ்வளவு போகும்.............. அசாத்திற்கு அவரது பங்காக கடைசி வருடத்தில் கூட சில பில்லியன் டாலர்கள் கிடைத்ததாக, அந்த மருந்துப் பொருள் விற்பனை மூலம், தகவல் வெளியாகி இருந்தது. அசாத்தும் , குடும்பமும் அதை ரஷ்யாவிற்குள் கொண்டு போயிருக்கமாட்டார்கள். பெரும் தொகையை  வேறு எங்கோ அனுப்பி இருக்கின்றார்கள்.................. அவர்களின் உயிர்களுக்கு அதுவேதான் உத்தரவாதம் ஆகக்கூட இருக்கலாம்.................     
    • தேர்தல் கால கூட்டங்களில் ரணில், ஒரு நகைச்சுவை சொல்லி தானே சிரித்தார். சஜித் ஆங்கிலம் பேசினால் வெள்ளைக்காரன் சிரிப்பானாம். நாட்டை ஆளுவது, சிங்கள மக்களை ஏமாற்றி. இதில யார் ஆங்கிலம் பேசினாலென்ன, சிரித்தாலென்ன? அந்த மக்களோடு உண்மையயை பேச முடியவில்லை இவர்களால். அதை எண்ணி வெட்கப்படவேண்டும். இதே போல் ரணில் லண்டனுக்கு சென்றிருந்தபோது, தமிழ் மகன் ஒருவர் ஆங்கிலத்தில் கேள்விகேட்டபோது அவரது ஆங்கிலத்தை நையாண்டி செய்து நீங்கள் தமிழிலே பேசுங்கள் நான் விளங்கிக்கொள்கிறேன் என்று சொல்லி சிரித்தார். அவர் தமிழில் சொன்னபோது, ஏதும் விளங்காமல் தான் சொன்ன நையாண்டியை நினைத்து பேசியவரை பார்க்காமல், சுற்றியிருந்தவரை பார்த்து சிரித்தார். இவருக்கு தன் தந்திரத்தில், மற்றவரை கேலி செய்து மட்டம் தட்டுவதில்  அபார நம்பிக்கை, மகிழ்ச்சி  எங்கள் கோசானைப்போல.  அதுவே கவிழ்த்தும் விட்டது இவரை.     
    • வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் நோக்கம்தான்( context) அவற்றை நல்லதாகவோ கெட்டதாகவோ மாற்றுகிறது. வார்த்தைகள் முற்றிலும் குற்றமற்றவைகள் ஆகும்.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.