செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
லண்டனை சேர்ந்த 12 வயது பாடசாலை மாணவி ஒருவர் தனது 13 வயது காதலன் மூலம் குழந்தையொன்றை பிரசவித்துள்ளதை அடுத்து, பிரித்தானியா நாட்டில் இளம் வயதிலேயே பாட்டியான தகுதியை தனது 27 வயது தாயாருக்கு பெற்றுத் தந்துள்ளார். அங்குள்ள ஆரம்பநிலை பாடசாலையில் படித்து வரும் குறித்த சிறுமி, தனது வீட்டின் அருகில் வசிக்கும் 13 வயது சிறுவனிடம் நெருங்கிப் பழகியுள்ளதுடன் அதன் விளைவாக கர்ப்பமடைந்த நிலையில் கடந்த வாரம் குழந்தையை பிரசவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது மகளுக்கு பிறந்த குழந்தையுடனும், மகளுடனும், புகைப்படமொன்றில் தோன்றிய அந்த பெண்ணின் தாயார் (இளவயது பாட்டி) பெற்றோர் இருவரும் ஒற்றுமையாக இருந்து குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இத…
-
- 0 replies
- 594 views
-
-
சேருவில பகுதியில் தங்கச் சுரங்கம் குறித்து விரிவான ஆய்வு Digital News Team 2021-01-12T17:29:46 சேருவில பகுதியில் பாரிய தங்கச் சுரங்கம் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சேருவில பகுதியில் தங்கம், இரும்பு மற்றும் செப்பு குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ளுமாறு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 1970 ஆம் ஆண்டிலும் இந்த பகுதி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜசிங்க தெரிவித்தார். தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள விதத்தில் சேருவில பகுதி நூற் றூக்கு சுமார் 90 சதவீதம் வனத்துறைக்குச் சொந்தமானத…
-
- 2 replies
- 594 views
-
-
ஆங்கிலம் பேசவில்லை என்பதற்காக ஆசிரியரொருவர் மாணவனொருவனை அடித்துகொன்ற சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின், தெலுங்கனா மாநிலம் திருமலைகரி கிராமத்தில் வசித்து வந்த, இராமவத் சந்து என்று கிராமவாசிகளால் அறியப்பட்ட 6 வயது சிறுவனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சிறுவன், தனியார் பாடசாலையில் கல்விகற்று வந்துள்ளான். இந்நிலையில் ஒருநாள் பாடசாலைக்கு நேரம் கடந்து சென்றுள்ளான். இதனால் கோபமடைந்த ஆசிரியை, கைகளால் மாணவனை தாறுமாறாக அறைந்துள்ளார். இது தவிர மாணவனது தாய் மொழியான தெலுங்கு மொழியை பாடசாலையில் பேசியதற்காக, ஆங்கிலம் பேசத்தெரியாதா என்று கேட்டு சிறுவனது தலையை சுவரிலும் முட்டியுள்ளார். பாடசாலை முடிந்து வீடு திரும்பிய சிறுவனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அத…
-
- 3 replies
- 594 views
-
-
தெற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர் தனது வீட்டில் சில கோழிகளை வளர்த்து வந்தார். கோழிகளைப் பராமரிப்பது, அவற்றுக்குத் தேவையான பணிகளையும் அவரே கவனித்து வந்துள்ளார். கோழி முட்டைகளை எடுப்பதற்காக வீட்டின் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள கூண்டுக்குச் சென்று அங்கிருந்த முட்டைகளை எடுத்துள்ளார். இதைக் கவனித்த சேவல் ஒன்று அவரது கால் நரம்புகளில் கொத்தியுள்ளது. அவரைத் தொடர்ந்து அங்கிருந்து நகரவிடாமல் காலில் கொத்தியுள்ளது. அந்தப்பெண் வெரிகோஸ் வெயின் என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர். இந்த நோய்த் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் காலின் தொடைப்பகுதிகளுக்குக் கீழ் நரம்புகள் முடிச்சு போட்டு இருப்பதுபோல் இருக்கும். இதன் காரணமாகக் கால் பகுதியில் ரத்த ஓட்டத்தில் பாத…
-
- 0 replies
- 594 views
-
-
16 ஆம் லூயி மன்னன் கொல்லப்பட்டதை சித்தரிக்கும் படம் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயியின் இரத்தக் கறை படிந்துள்ள துணி ஒன்று தம்மிடம் உள்ளது என்பதை கிட்டத்தட்ட உறுதியாக சொல்ல முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருநூறு ஆண்டுகளுக்கும் முன் பிரஞ்சு புரட்சி நடந்தபோது கிளர்ச்சிக்காரர்களால் கிலட்டின் இயந்திரத்தில் வைத்து தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டவர் மன்னர் பதினாறாம் லூயி ஆவார். இந்தத் துண்டியில் இருக்கும் ரத்தத்தின் மரபணுத் தகவலும், லூயிக்கு முன்னாள் வாழ்ந்த பிரஞ்சு மன்னன் ஒருவரின் பதப்படுத்தப்பட்ட சடலத்தின் மண்டை ஓட்டின் மரபணுத் தகவலும் கணிசமான அளவில் பொருந்திப்போகிறது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். பதினாறாம் லூயி பாரிசில் தலைதுண்டிக்கப்பட்டுக் கொல்ல…
-
- 1 reply
- 594 views
-
-
யாழ்ப்பாணம், தென்மராட்சி நுணாவில் A - 9 வீதியில் கார் ஒன்றின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் நான்கு வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதோடு,மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கியப் பயணித்த கார் ஒன்றின் டயர் வெடித்து, திருத்த வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவநேரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உட்பட ஐவர் காரில் பயணித்துள்ளனர். அவர்களில் நான்கு வயதுடைய சிறுவன், 35 வயதுடைய பெண் ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். ஏனையவர்கள் மூவரும் படு…
-
- 3 replies
- 593 views
-
-
அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் தீப்பற்றி எரிந்த வீட்டுக்கு விரைந்து சென்ற தீயணைப்புப்படையினரை சினப்பர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வீட்டு உரிமையாளர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று அதிகாலையில் றேசெஸ்ரர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீப்பற்றி எரிவதாக தொலைபேசி மூலம் தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு விரைந்த தீயணைக்கும் படையினரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எரிந்து கொண்டிருந்த வீடு மற்றும் காரின் உரிமையாளரே, துப்பாக்கிச்சூட்டை நடத்தினார்.வீட்டை தீவைத்து எரித்து விட்டு அவர் பாதுகாப்பான இடம்ஒன்றில் நிலையெடுத்திருந்து சினப்பர் துப்பாக்கியால் ஒவ்வொருவராக சுட்டார். இந்தச் சம்பவத்தில் நியுயோர்க் பகுதி தீயணைக்கும் படையைச் சேர்ந்த இருவர் ம…
-
- 4 replies
- 593 views
-
-
திருமணமான பெண்ணுடன் போப் இரண்டாம் ஜான் பாலுக்கு நட்பு போப் இரண்டாம் ஜான் பால் அவர்கள் திருமணமான ஒரு பெண்ணுடன் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நட்புரீதியில் தொடர்பில் இருந்தார் என்பதை பிபிசி கண்டறிந்துள்ளது. போலிஷ் அமெரிக்கப் பெண்மணி ஆனா-தெரீசா அம்மையருடன் போப் இரண்டாம் ஜான் பால் அவ்வகையில் நூற்றுக்கணக்கான கடிதங்களை கண்டுபிடித்துள்ள பிபிசி, அந்தக் கடிதங்கள் மூலம் அவருக்கு அந்தப் பெண்மணியுடன் நட்புரீதியிலான தொடர்பு குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன எனக் கூறுகிறது. தத்துவ அறிஞரான போலிஷ் அமெரிக்கப் பெண்மணி ஆனா-தெரீசா டிமெய்னியென்காவுக்கு போப் இரண்டாம் ஜான் பால் எழுதியக் கடிதங்கள், போலந்தின் தேசிய நூலகத்தில் பொதுமக்களின் பார்வைய…
-
- 3 replies
- 593 views
-
-
300வருடங்கள் பழமை வாய்ந்த இங்கிலாந்து மன்னனின் உல்லாச விடுதி மக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் எட்டாவது மன்னனான ஹென்றியே இந்த உல்லாச மாளிகைக்கு சொந்தக்காரர் ஹென்றி மன்னனால் கட்டப்பட்ட இது முன் எப்போதும் காணப்படாத மிக அபூர்வமான கலை அம்சங்களைக் கொண்டதாக காணப்படுவதாக கட்டிடக் கலைஞர்கள் கூறுகின்றனர். இந்த உல்லாச மாளிகை 150 வருடங்களுக்குப் பின்னர் அளிக்கப்பட்டது. இதன் பின்னர் 50வருடகால ஆய்வுக்குப் பின்னர் மீட்கப்படடது. இதனை மீண்டும் புணருத்தாபனம் செய்ய தமக்கு 1250 மணிநேரம் சென்றதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது 2.2மீற்றர் நீளமும், 1.2மீற்றர் அகலமும் கொண்டது. கவர்ச்சியான வண்ணப் பலகைகளாலும், நுண்ணிய அலங்காரங்களால் மெருகூட்டப்பட்ட பளிங்கு, பிலாஸ்டிக…
-
- 0 replies
- 593 views
-
-
புனே நகர தொழிலதிபர், 1.27 கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்க சட்டையை அணிந்து, புத்தாண்டை கொண்டாட உள்ளார். இதற்காக அவர், 3.25 கிலோ எடையில், புதிய தங்க சட்டையை உருவாக்கியுள்ளார். புனே அருகே உள்ள, பிம்ப்ரி என்ற இடத்தை சேர்ந்தவர், தத்தா புகே. சிட்பண்ட் தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி, சீமா, புனே நகர மாநகராட்சி கவுன்சிலர்; தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஏற்கனவே, 5 கிலோ எடையில் கழுத்து, கை மற்றும் இடுப்பில், தங்க நகைகளை அணிந்து வலம் வரும் தத்தா, 2013ம் ஆண்டை புதுமையாக கொண்டாட விரும்பினார். இது வரை யாருமே செய்யாத வகையில், தங்க சட்டை அணிந்து, புத்தாண்டை கொண்டாட விரும்பிய அவர், அதற்காக 3.25 கிலோ தங்கத்தை கொடுத்தார். பதினைந்து பொற்கொல்லர்கள், 15 நாட்கள் உழைத்…
-
- 7 replies
- 593 views
-
-
சென்னை:நீண்ட நேரம் சேட்டை செய்த ஜோதிடரை, யானை தூக்கி வீசியது. பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். பட்டாபிராம் அணைக்கட்டுசேரியைச் சேர்ந்தவர், கணேசன், 33; ஜோதிடர். மாலை, மனைவி சரஸ்வதியுடன், பட்டாபிராம் பெருமாள் கோவிலுக்குச் சென்றார். அங்கு, முகலிவாக்கத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட, சுபத்ரா என்ற யானையும் இருந்தது. யானையின் அருகில் செல்வதும், வருவதுமாக கணேசன் இருந்துள்ளார். இதைப் பார்த்த அவரது மனைவி, "யானையை எதுவும் செய்ய வேண்டாம்' என, எச்சரித்துள்ளார்.சிறிது நேரம் கழித்து, போதையில் வந்த கணேசன், மீண்டும் யானையின் வாலைப் பிடித்து இழுப்பது, அதன் முன் ஆட்டம் போடுவது என, சேட்டை செய்துள்ளார்.பாகன் சந்தானம், பலமுறை எச்சரித்தும், கணேசன…
-
- 0 replies
- 593 views
-
-
சுற்றுலா தளமாக்கப்படும் மோடி தேத்தண்ணீர் விற்ற இடம்... ஏழை மகனுக்கு புகழாரம்..! பிரதமர் நரேந்திர மோடி தேத்தண்ணீர் விற்ற இடம் சுற்றுலா இடமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மோடி இளம் வயதில் தான் தேத்தண்ணீர் விற்றதாக அவரே கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் தேத்தண்ணீர் விற்க பயன்படுத்திய இடம் ஒரு சுற்றுலா இடமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குஜராத்தில் உள்ள வாட்நகர் ரயில் நிலையத்தில்தான் தேத்தண்ணீர் விற்பனை செய்து வந்தார். கடந்த காலங்களில் அவர் கணிசமான நேரத்தை செலவிட்ட ஸ்ராலை ஒரு சுற்றுலா இடமாக மாற்ற மாநில அரசு இப்போது முடிவு செய்துள்ளது. அதன் பழமையை மாற்றாமல் இந்த ஸ்ரால் ஒரு சுற்றுலாத் தளமாக்கப்பட உள்ளது. இது தொடர்…
-
- 1 reply
- 593 views
-
-
இது ஒரு கசப்பான உண்மை.. பள்ளி இறுதித் தேர்வில் முதன்மையாக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுபவர்கள் பொறியாளர்களாகவோ,மருத்துவர்களாகவோ ஆகிறார்கள். இரண்டாம் நிலையில் மதிப்பெண்கள் பெறுபவர்கள் தேர்ச்சி அடைந்து ,M.B.A. படித்து மேலாளர்கள் பதவி பெற்று முதல் தரத்தில் தேறியவர்களுக்கு மேல் அதிகாரிகளாக வருகிறார்கள். மூன்றாம் நிலையில் தேர்ச்சி அடைபவர்கள் அரசியலில் நுழைந்து அமைச்சர்களாக ஆகி முதல் இரண்டு நிலைகளில் தேறியவர்களை தங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்துக் கொள்கிறார்கள். படிப்பே ஏறாமல் தேர்வில் தோல்வி அடையும் சிலர் ரவுடிகள்,,தாதாக்கள் ஆகி மேலே உள்ள மூன்று தரப்பினரையும் நடுநடுங்க வைக்கின்றனர். பள்ளிக்கூடம் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்காதவர்கள் பெரிய சுவாமிகளாகவும்,குருக்களாக…
-
- 2 replies
- 593 views
-
-
தமிழ் ஈழத்தின் துயர் நிறைந்த இனப்படுகொலையின் "கறுப்பு அடையாளமாக" சர்வதேச அரங்கில் புளக்கத்தில் இருப்பது. "முள்ளிவாய்க்கால்" உலகத்தால் என்றும் மறக்க முடியாத 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஆசிய இனப்படுகொலை - சிங்கள இனவெறி அரசால் நடத்தப்பட்ட மிகப்பெரிய மனித அவலமும் படுகொலைகளைத் தாங்கிய முள்ளிவாய்க்கால் என்ற பெயரும் அந்த நிலப்பிரதேசமும் உலகத்தின் மனக்கண்ணின் முன் என்றும் அழியாதவை. அவை ஒருபுறம் இருக்க, போர் முடிவுக்கு வந்த கையோடு கொலைக்களத்திலிருந்து தத்தளித்து தப்பி வெளியேறிய ஈழத்தமிழர்களின் வாழ்விடங்களை பறித்து தமிழர் அடையாளங்களை அழிக்க ஸ்ரீலங்கா சிங்கள அரசு தெரிவுசெய்த இடங்கள் பல இருந்தாலும், நிலப்பறிப்பின் குறியீடாக முன்னிலைப்படுத்தப்பட்டது "முறிகண்டி", …
-
- 0 replies
- 593 views
-
-
லெபனான், இஸ்ரேலிய அழகுராணிகளிடையே செல்பீ புகைப்படத்தால் மோதல் 2015-01-20 11:48:05 பிரபஞ்ச அழகுராணி போட்டிகளில் பங்குபற்றும் லெபனான் மற்றும் இஸ்ரேலிய அழகு ராணிகளுக்கிடையில் புகைப்படமொன்று தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 63 ஆவது பிரபஞ்ச அழகு ராணி போட்டிகள் தற்போது அமெரிக்காவில் நடைபெறு கின்றன. 88 நாடுகளின் அழகுராணிகள் இப் போட்டிகளில் பங்குபற்றுகின்றனர். இவர்களில் லெபனான் சார்பாக பங்குபற்றும் சாலி கிறேய்க் மற்றும் இஸ்ரேல் சார்பாக பங்குபற்றும் டொரோன் மெட்டலோன் ஆகியோருக்கு இடையிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது. செல்பீ புகைப்படமொன்றே இந்த மோதலுக்கு காரணம். லெபானான், இஸ்ரேல், ஜப்பான், ஸ்லோவேனியா நாடுகளின் …
-
- 6 replies
- 593 views
-
-
கான்பெர்ரா: ஆஸ்திரேலிய நாட்டின், புதிய தென் வேல்ஸ் பகுதியில் டாப் லோடர் இருக்கும் வாஷிங் மெஷினுக்குள் மாட்டிக் கொண்டு மூன்று மணி நேரம் தத்தளித்த வாலிபரை தீயணைப்புத் துறையினர் காப்பாற்றியுள்ளனர். இதனை தீயணைப்புத் துறை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. இதுவரை தீயணைப்புத் துறை செய்திராத வகையில், முதல்முறையாக வாஷிங் மெஷினுக்குள் மாட்டிக் கொண்ட வாலிபரை காப்பாற்றியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வாஷிங் மெஷினின் வெளிப்பகுதியை முற்றிலுமாக நீக்கிவிட்டு, பின்னர் அதன் டிரம்மை உடைத்தெடுத்து, அந்த வாலிபரைக் காப்பாற்றியுள்ளனர். வாஷிங் மெஷின் பாகங்கள் அனைத்தும் தனித்தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு அந்த வாலிபர் காப்பாற்றப்பட்டார். வாஷிங் மெஷினை விட்டு வெளியே வந்ததும்…
-
- 3 replies
- 592 views
-
-
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்! பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட சீன அரசாங்கத்தின் முயற்சியாக நாடு தழுவிய ரீதியில் மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைகளின் பெற்றோருக்கு ஆண்டுக்கு 3,600 யுவான் (£375; $500) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகைகள், குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவைச் சமாளிக்க சுமார் 2 கோடி குடும்பங்களுக்கு உதவும் என்று அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. திங்களன்று (28) அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், பெற்றோருக்கு ஒரு குழந்தைக்கு மொத்தம் 10,800 யுவான் வரை வழங்கும். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு மக்கள்தொகை நெருக்கடியை எதிர்கொள்வதால், அதிக குழந்தைகளைப் பெறுவதை ஊக்குவிப்பதற்காக சீனா முழுவதும்…
-
-
- 15 replies
- 592 views
- 2 followers
-
-
24 மணித்தியாலம் பட்டினியில் இருந்த பொன்சேகா திகதி: 11.02.2010 // தமிழீழம் இராணுவ காவல்துறையினரால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ காவல்துறையினரால் வழங்கப்பட்ட நீரையோ, ஆகாரத்தையோ எடுக்காமல் 24 மணித்தியாலம் பட்டினியில் இருந்துள்ளார். ஆறு மணித்தியாலங்களுக்கு ஒருதடவை உட்கொள்ளவேண்டிய மாத்திரைகளையும் உட்கொள்ளாத அவர் தனது மனைவி அனோமா கொண்டுவந்திருந்த உணவு மற்றும் மாத்திரைகளை உட்கொண்டு அவருடன் மூன்று மணித்தியாலங்கள் உரையாடியுள்ளார். நன்றி..........சங்கதி
-
- 0 replies
- 592 views
-
-
தமிழகத்தில், ஸ்மார்ட் தொலைபேசி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்ற தொலைபேசி கடைக்காரரின் அறிவிப்பு, வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஆடம்பர பொருளான தங்கத்தின் விலையைப் போன்று, மக்களின் அத்தியாவசிய தேவைப் பொருளான வெங்காயத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வருகிறது. இந்தியாவில், தற்போது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 200 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே உள்ள 'எஸ்.டி.ஆர் மொபைல்ஸ்' எனும் தொலைபேசி விற்பனை கடை, ‘ஸ்மார்ட் தொலைபேசி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்’ என, அதிரடி சலுகை ஒன்…
-
- 4 replies
- 592 views
-
-
நடத்தையில் சந்தேகம்.. தூக்க மாத்திரை கொடுத்து மனைவிக்கு மொட்டையடித்த கொடூர கணவன். உத்தரப்பிரதேசத்தில் கணவனும் அவரது தம்பியும் மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து மொட்டையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சித்ரவதைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இந்த வன்கொடுமைகளும் சித்ரவதைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த வாரம் டெல்லியில் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டார். அதேபோல் ராணுவ மேஜரின் மனைவி மற்றொரு ராணுவ அதிகாரியால் கொலை செய்யப்பட்டார்.இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் கட்டிய மனைவிக்கு தூக்குமாத்திரை கொட…
-
- 0 replies
- 592 views
-
-
இரண்டாம் உலகப் போர் முடிவில் ஜக்கிய நாடுகள் சபை எனப்படும் ஜநா 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்று வரை பல ஏற்றத் தாழ்வுகளோடு செயற்படுகிறது. ஜநா அமைப்பில் ஜந்து அடிப்படைப் பிரிவுகள் இருக்கின்றன. 1. ஜநா பொதுச் சபை -General Assembly. உறுப்பு நாடுகளின் விவாத அரங்காகவும் தீர்மானங்கள் நிறைவேற்றும் களமாகவும் இடம்பெறுகிறது. 2. ஜநா பாதுகாப்பு சபை -Security Council உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பொறுப்பான அமைப்பு. இதில் ஜந்து நிரந்தர உறுப்பு நாடுகளும் பத்து தற்காலிக உறுப்பு நாடுகளும் உறுப்புரிமை வகிக்கின்றன. 3. பொருளாதார மற்றும் சமூக மன்றம் -Social and Economic Council இதை எக்கோசொக் (Ecosoc) என்றும் அழைப்பார்கள். உலகப் பொருளாதார சமூக ஒத்துழைப்பிற்கான மன்றமாகவும் மேம்…
-
- 0 replies
- 592 views
-
-
உலகில் அதிக நேரம் மக்கள் உறங்கும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், இலங்கை 3ஆவது இடம் பிடித்துள்ளது. உலகில் உள்ள 60 நாடுகளின் சராசரியாக உறங்கும் அளவினை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சிக்கமைய இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கை வாழ் மக்கள் 8.1 மணிநேரம் உறங்குவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆய்வின்படி 12 மணி நேரத்துடன் பல்கேரியா 1ஆவது இடத்திலும் 10.2 மணிநேரத்துடன் அகோலா 2ஆவது இடத்திலும் காணப்படுகின்றன. இதேவேளை எமது அண்டை நாடான இந்தியா 42ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/301159
-
-
- 5 replies
- 592 views
- 1 follower
-
-
சவுதி அரேபியாவில், 90 வயது தந்தைக்கு, அவரது பிள்ளைகள், மறுமணம் செய்து வைத்துள்ளனர். சவுதி அரேபியாவின், மேற்கு பகுதியில் வசிப்பவர் பதிஸ் அல் தகாபி, 90. நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவரது மனைவி, சமீபத்தில் காலமானார்.அவர் உயிரோடு இருந்த போதே, கணவனை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். ஆனால், தகாபி மறுத்து விட்டார். தகாபிக்கு, ஏழு மகன்களும், ஐந்து மகள்களும் உள்ளனர். தாயின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, தந்தைக்கு இவர்கள், இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக, குழந்தை இல்லாத, 53 வயது, விதவையை தேர்வு செய்து, தந்தைக்கு மணம் முடித்துள்ளனர். தந்தைக்கு திருமணம் செய்து வைத்ததன் மூலம், தாயின் கனவை நிறைவேற்றி விட்டதாக, ஐந்து மகள்களு…
-
- 5 replies
- 591 views
-
-
ஆண்கள் தொட்டால் மின்சாரத்தால் தூக்கி வீசும் உள்ளாடை கண்டுபிடிப்பு: பெற்றோர் உட்பட பொலிஸிற்கும் தகவல் செல்லும் விந்தை..! பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்துவிட்ட நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை தவிடுபொடியாக்க எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவிகள் உடைகளை கண்டுபிடித்துள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களை இடிப்பது, மார்பகங்களை இடிபதும் கூட்டத்தில் மறைந்து விடுவது போன்ற கொடுமைகள் தினமும் அரங்கேறுகின்றன. பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்துவிட்ட நிலையில் அண்மையில் மீ டூ இயக்கம் சமூக வலைதளங்களில் தீவிரமாகியிருக்கிறது. மேலும், பெண்களின் மார்பை தவறான எண்ணத்தோடு பிடித்தால் இந்த உள்ளாடை 3800 க…
-
- 2 replies
- 591 views
-
-
எதிர்வரும் இரண்டாம் திகதி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரை இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் அங்கு பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த இடமளிக்குமாறு பிரித்தானியப் பொலிசாரிடம் ஏற்பாட்டாளர்களால் அனுமதி கோரப்பட்டிருந்தது. அதற்கான அனுமதி தற்போதைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. தற்போதைய நிலையில் ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆரம்ப கட்ட பிரச்சார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதுடன், இன்று லண்டன் நகரமெங்கும் அது தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் பகிரப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இவற்றுக்கு மேலதிகமாக பாரிய பதாகைக…
-
- 1 reply
- 591 views
-