Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.

  1. மாவீரர் தினம் 2015 நினைவுகளும், நிகழ்வுகளும் நம் தேசத்திட்காய் உயிர்நீத்த உறவுகளுக்கு மரியாதை செலுத்துமுகமாக இத்திரியை ஆரம்பித்துவைக்கின்றேன். வித்தாகிப்போன மாவீரச்செல்வங்கள் பற்றிய குறிப்புக்கள், மாவீர்களுக்குரிய சிறப்புப்பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் 2015 மாவீரர்தின நிகழ்வுகளை இத்திரியில் என்னுடன் இணைந்து பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். இம்முறை யாழில் மாவீர்கள் தினத்தை பற்றிய கதையே இல்லாதது பெரும் வருத்தத்தை கொடுக்கின்றது. ------- நன்றி

      • Like
    • 69 replies
    • 17.3k views
  2. கிட்டு மாமா உள்ளிட்ட 10 மாவீரர்களினதும் நினைவு நாள் கடந்த 16ம் திகதி கடந்து போனது. இந்தியச் சதியில் இந்து சமுத்திரத்தில் தற்கொடை செய்து தன்னையே தாய் மண்ணிற்காய் தந்த இந்த வீரர்களை எப்படி மறந்தீர்கள்..?! மறக்க முடியாத தியாகங்கள் இவை. நினைவு வீரவணக்கம்.

  3. கடந்த மூன்று தசாப்த காலத்திற்கு மேலாக தமிழீழப் போராட்ட வளர்ச்சிக்கும் அரசியல் இராசதந்திர நகர்வுக்கும் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்றதோடு, ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராகவும் திகழ்ந்துள்ளார். ஈழத்தமிழன் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும், இராசதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்தியவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். 14.12.2006 அன்று சுகவீனம் காரணமாக இங்கிலாந்தில் இறுதியெய்தினார். அன்ரன் பாலசிங்கம் அவர்களுடைய சரித்திரம், http://www.tubetamil.com/watch-daily-tamil-news-online/tamil-eelam/history-of-bala-anna-3.html

  4. யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ். இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப் பயணத்தில் தளபதி ராதா ஆகினார். கல்லூரியில் படிக்கும் காலத்திலும், பின்னரும் தான் ராதா எப்போதும் அழகான ஆடம்பரமற்ற உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர். இதனால் யாழ். வீதிகளில் உந்துருளியில் உலா வந்த ராதாவைப் பார்ப்பவர்கட்கு அவர் ஓர் அரச மேலாளரைப் போலவோ அல்லது மருத்துவரைப் போலவோ தோன்றினாரே அன்றி வேறு வகையான பார்வையைக் கொடுக்கவில்லை. அமைதியும் கவர்ச்சியும் கொண்ட அவர…

      • Like
    • 15 replies
    • 2.1k views
  5. தமிழர் இதயங்களில் உறைந்திருக்கும் தமிழ்ச்செல்வன் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் இன்றும் தமிழ் மக்களின் மனங்களில் வீற்றிருக்கின்ற நித்தியப் புன்னகை அழகன். தமிழ்மக்களின் விடுதலைக் கனவைச் சுமந்து விடுதலைப் போரில் பயணித்த ஆயுத - அரசியல் போராளியான இவர் ஏழுவருட காலங்கள் வரையில் ஆயுதப் போராளியாகவும், இருபத்தியொரு வருட காலம் அரசியல் போராளியாகவும் உலகத் தமிழ்மக்கள் மத்தியில் வலம் வந்தவர். விடுதலைப் போராட்டத்தின் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தனக்கிட்ட பொறுப்பைத் தமிழினத்தின் கட்டளையாக ஏற்று புயலாகச் செயற்பட்டதோர் இராஜதந்திரப் போராளியான தினேஷ் என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்ச்செல்வன் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி அதிகாலைவேளைப் பொழுதில் விமானப் படையினரின் குண்டு வீச்சுத் தாக…

  6. மண் வீழ்ந்த எம் மறத்திகளுக்காக…. அன்னை மண்மீட்புக்காய் அணிவகுத்த தங்கையரே இன்னுயிரை ஈந்தீர் எமக்காய் உம் வாழ்வளித்தீர் பொல்லாப் பகையின் புறங்காணப் போரிட்ட மெல்லியலார் நீங்கள் விதிமாற்றப் பாடுபட்டீர் உங்கள் நினைவெம்மை ஒரு போதும் நீங்காது செங்களத்தில் ஆடிய உம் தீரம் மறக்காது நெஞ்சை நிமிர்த்தி நேர் வந்த குண்டேந்த அஞ்சாது நின்றீர் அக்காலம் போனதுவே! எம்மினத்து மாதர் இரும்பொத்த நெஞ்சினர் ஓர் இம்மியளவும் இதயம் பயமறியா வீரத்தாய்மார்கள் விடுதலையைக் காதலித்து ஆரத்தழுவிய எம் அக்காமார் தங்கையர்கள் வாழ்ந்தார்கள் ஓர்கால் வரலாறெமக்குண்டு தாழ்ந்தாலும் அன்று தமிழீழத் தாய்மண்ணில் வெற்றிக் கொடிநாட்டி விரட்டிப் பகைதன்னை கொற்றவைகளாகக் குலங்காத்தார் எம் பெண்கள் என்று பெருமிதத்தோ டியம்புதற்…

    • 2 replies
    • 2.6k views
  7. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற தளபதி கேணல் ராயூ அவர்கள் புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார். ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுரியமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்துமுடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும். ஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும…

  8. 16.08.1994 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தில் வீரகாவியமான முதற்பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 18ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் “அபித” கட்டளைக் கப்பல் மற்றும் டோறா பீரங்கிப் படகு என்பவை16.08.1994 அன்று கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியினால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டன. எட்டரை மணிநேரத்தில் சுமார் 35 கி.மீட்டர்கள் தூரத்தை நீந்தி காங்கேசன்துறை துறைமுகத்தை அடைந்த கப்டன் அங்கயற்கண்ணியினால் சிறிலங்கா கடற்படையின் மேற்படி கடற்கலங்கள் தாக்கி மூழ்கடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நெஞ்சில் நிற…

  9. கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலி மறவர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்...கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில் வசித்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல்கள் அளித்தும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கு அதிகாரிக…

  10. பிரிகேடியர் பால்ராஜ். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார். தமிழீழத்தின் இதயபூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார். இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார். இந்தியப்படை வெளியேற்றத…

  11. புளியங்குளம் பற்றிய இராணுவ அபிலாசைகளுடன் படைத்தலைமை இருந்த வேளை , படையினருக்கு ஒரு பேரிடி தாண்டிக்குளத்தில் விழுந்தது. 10.06.1997 அன்று தாண்டிக்குளம், நொச்சிமோட்டைப் பகுதிகள் மீது உள்நுழைந்து தாக்கும் ஒரு அதிரடித்தாக்குதலை புலிவீரர்கள் நிகழ்த்தினர். ஆக்கிரமிக்கப்பட்ட பாதிப்பகுதி மீது புலிகள் தாக்குவர் என்பதை படையினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தாக்குதலுக்காக புலிகள் தெரு செய்த இடங்களை சிங்களத் தளபதிகள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஓமந்தையையும் அதற்க்கு வடக்காகவும் புலிகள் தாக்குதலை எதிர்பார்த்திருந்த படையினருக்கு வவுனியாவின் வாசலிலேயே அடி விழுந்தது அதிர்ச்சியூட்டும் தாக்குதலாய் அமைந்துவிட்டது. ஐயசிக்குறுய் படையின் கட்டளை தலைமையகம் தாண்டிக்குலத்திலேயே அமைந்திருந்த…

  12. சிவகுமாரன் - ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகர்த்தா முத்துக்குமார் தியாகி சிவகுமாரன் தனது உடலையும் உயிரையும் தமிழ் மண்ணிற்குக் கொடையாக்கி 41 வருடங்களாகின்றன. அவன் தொடங்கி வைத்த ஆயுதப் போராட்டம் விருட்சமாக வளர்ந்து வந்த நிலையில் பிராந்திய, சர்வதேச வல்லரசுகளின் உதவியுடன் அதுவும் அழிக்கப்பட்டுவிட்டது. ஆயுதப் போராட்டம் தான் அழிக்கப்பட்டதே தவிர தமிழ்த் தேசிய அரசியல் அழிக்கப்படவில்லை. அது ஆழ வேரூன்றிய மரம். இன்று இதனையும் அழிப்பதற்கு அகரீதியாகவும் புறரீதியாகவும் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இந்நிலையில் தியாகி சிவகுமாரன் பற்றிய மீளாய்வு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பதற்கு பெரிதும் உதவக்கூடியதாக இருக்கும். சிவகுமாரனின் பங்களிப்பு பற்றிய மீளாய்வுக்கு தமிழ் மக்களின் அரசியல்…

  13. தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 41ஆம் வீரவணக்க நாள் இன்றாகும் [Friday 2015-06-05 07:00] தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தருணத்தில் சயனைட் அருந்தி 05.06.1974ம் ஆண்டு அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முதற் தற்கொடையாளர் தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 41ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். "தமிழீன ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வி தரப்படுத்தலை வீசியபொழுது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்டவர்" தியாகி பொன் சிவகுமாரன் மறைந்த நாளாகிய ஆனி 5ற்கு மறுநாள் ஆனி 6ஆம் நாள் தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தி தாயகம் அடங்கலாக தமிழீழ மக்கள் வாழும் தேசங…

  14. தமிழீழ தாயக விடுதலைப் போரில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் வீரவணக்க திருவுருவப்படங்கள் அவர்கள் வீரச்சாவைத் தழுவிய நாட்களில் இப்பக்கத்தில் அவர்களின் பதிவு செய்யப்படும். (படங்களிற்கு கீழேயுள்ள இணைப்பில் சென்று அம் மாவீரர் தொடர்பான மேலதிக விபரங்களைப் பார்க்கலாம்) சனவரி 3ம் நாளில் மடிந்த மாவீரர்களின் ஒளிப்படங்கள் http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=118&cid=14640 http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=118&cid=14641 http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=118&…

    • 2 replies
    • 7.2k views
  15. உலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம் பெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும், போராட்ட குணத்தையும் விததுச்சென்ர ஈகப்பேரொளி முருகதாசன், சுவிஸ்லாந்தில் ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித அவையின் முன்றலில் முன்பாக 2009 மாசி 12ம் தேதி அன்று இரவு இன அழிப்பிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்றக்கோரி 7பக்கங்களுக்கு’உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்’ என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தமிழீழத்தின் விடியளுக்காகா தீயில் வீரகாவியமான ஈகப்பேரொளி வர்ணகுலசிங்கம் முருகதாசன் அவர்களின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ஈகைப்பேரொளி முருகதாசன் உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள் என் இனத்தின் அழிவைத் தடுத்து நிறு…

    • 0 replies
    • 1.7k views
  16. ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட்டு 12-02-2015 உடன் ஆறு ஆண்டு பூர்த்தி கொள்கின்றது. தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ஊடகப் பணியினை தொடங்கினார். மட்டக்களப்பினை பூர்வீகமாகக் கொண்ட அவர் தந்தையின் பணி நிமிர்த்தம் யாழ்ப்பாணம் மண்டதீவில் வசித்து தன…

  17. Started by karu,

    வீரம் பிறந்ததடா.... வீரம் பிறந்ததடா தமிழ் ஈழமண் மீதினிலே - வரி வேங்கை எழுந்ததடா வல் வெட்டித் துறையினிலே ஆரத்தில் ஆல விடத்தினைக் கட்டிய ஆண்மைக் குமரனடா - பெரும் ஆபத்தையே பனியாக மதித்திட்ட ஆதித்ய சோதியடா சீலத்தில் வாய்மையில் போர்ப்படை கட்டிய சிந்தனையாளனடா - எங்கள் செந்தமிழன் பிரபாகரன் என்கின்ற செல்வக் குமரனடா இந்தியச் சூதினை எட்டியுதைத்திட்ட எங்கள் தலைவனடா - தமிழ் விந்தியந் தொட்டுக் குமரி வரையெனும் விதியை மறுத்தவன் டா செந்தமிழ் ஈழ மணித்திரு நாட்டைச் செதுக்கிய சிற்பியடா - ரத்தம் சிந்திச் சிந்தித் தமிழ் மானத்தைக் காத்திடச் சீறிய வேங்கையடா. குட்டக் குனிந்த தமிழன் நிமிர்ந்து குதறிட வைத்தவன் டா - அட எட்டுத்திசையிலும் ஈடிணையற்ற - எம் ஈழத்தலைமகன் டா து…

    • 0 replies
    • 1.4k views
  18. மாவீரர் நினைவாக இம்மாதம் உருவாக்கப்பட்ட பாடல் ( மின்னஞ்சலில் ரூபன் சிவராஜா அனுப்பிவைத்தது) பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா பாடியோர்: நிரோஜன் (தமிழீழ பாடகன்), ஹேமா இசை: வேந்தன் தயாரிப்பு: தென்றல் படைப்பகம் காட்சித் தொகுப்பு: வாகீசன் தேவராஜா

  19. காற்றுள்ள வரை வாழும் காவியம் மேஜர் சிட்டு July 31st, 2014chiddu இயற்பெயர் – சிற்றம்பலம் அன்னலிங்கம் பிறந்த இடம் – வடமராட்சி கிழக்கு உடுத்துறை வீரனாய் – 04.11.1971 – வித்தாய் – 01.08.1997. கடலும் கடல்சார்ந்த அழகையும் கொண்ட உடுத்துறைக் கிராமத்தில் 04.11.1971 அன்று சிற்றம்பலம் தம்பதிகளின் கடைசி மகனாக வந்துதித்தான் அன்னலிங்கம். 9வது குழந்தையாக 5அண்ணன்களுக்கும் 3அக்காக்களுக்கும் கடைக்குட்டியாக வீட்டின் செல்லப் பிள்ளையாகப் பிறந்தவன். பெருமையோடு அவனை எல்லோரும் கொண்டாடிக் கொள்ளும் அளவுக்கு அவனது குழந்தைக்காலம் வித்தியாசமானது. 12வயதில் புலிவீரனாக தடியால் துப்பாக்கியை வடிவமைத்து விளையாட்டுக் காட்டிய பிள்ளையவன். ஆரம்பக்கல்வியை உடுத்துறை மகாவித்தியாலயத்தில் கற்றவன் க.…

      • Like
    • 1 reply
    • 2.1k views
  20. விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான விக்ரர் இயக்கத்தின் தலை சிறந்த போர் தளபதிகளில் ஒருவராவார். மன்னார் பிராந்தியத் தளபதியாகப் பணியாற்றிய விக்ரர் 12.10.1986 அன்று அடம்பன் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 28 ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும். யாழ். குடாநாட்டுக்கு அது புதிய காட்சியாக இருந்தது. ஒவ்வொரு ஊர்களின் ஊடாகவும், கிராமங்களின் வழியாகவும், நகரங்களின் ஊடாகவும் அந்த வீரனின் இறுதி ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. வீதிகளின் இருமருங்கிலும் மக்கள் வரிசையாக நின்று தமது தோட்டங்களிலும்,முற்றங்களிலும் பூத்திருந்த மலர்களை கொண்டுவந்து அவனின் உடல்தாங்க…

    • 5 replies
    • 1.5k views
  21. இன்று (10/1/14) அன்புத் தம்பி பாலச்சந்திரனின் 16வது பிறந்தநாள்.. தமிழீழ தேசத்தின் மீது இனவெறியர்களும், ஏகாதிபத்தியங்களும் நடத்திய போரில் இனவிடுதலை கோரிக்கையான தனித்தமிழீழ கோரிக்கையை மனதில் ஏந்தி போரிட்டு வீரமரணம் அடைந்த போராளிகள் மற்றும் தமிழீழ மக்களின் உருவகமாக இருப்பவன் பாலச்சந்திரன்.. இனப்படுகொலைக்கு ஆளான தமிழ் மக்களின் ஒட்டுமொத்த சாட்சியாக இருக்கின்றான் பாலச்சந்திரன். பால் முகம் மாறாத அந்த பாலகனின் முகம் இங்கு தூங்கி கிடந்த அண்ணன்களை வீறு கொண்டு எழவைத்திருக்கின்றது வீரம் தெறிக்கும் அவனது விழிகள் ஈழச்சுடரை எமது கைகளில் திணித்து இனத்தின் விடுதலையை நோக்கி ஓடவைத்திருக்கின்றது. பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு அவன் சுட்டு கொல்லப்பட்ட காட்சிகள், பாதுகாப்பான இடங்கள் என அறிவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.