Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிழைகள் நீக்க ஒரே வழி இதுதான்

    • 0 replies
    • 2.4k views
  2. தமிழ் மாதங்கள் வழக்குச் சொல் தூயதமிழ் தை _ சுறவம் மாசி _ கும்பம் பங்குனி _ மீனம் சித்திரை _ மேழம் வைகாசி _ விடை ஆனி _ இரட்டை ஆடி _ கடகம் ஆவணி _ மடங்கல் புரட்டாசி _ கன்னி ஐப்பசி _ துலை கார்த்திகை _ நளி மாரகழி _ சிலை தமிழ் கிழமைகள் ஞாயிறு _ ஞாயிறு திங்கள் _ …

  3. வீரன் - ஆண்பால். வீரி / வீராங்கனை - பெண்பால் போராளி - ஒரு நாட்டில் ஓர் இனத்தின் மீது மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகளை எதிர்த்து அந்தினத்தின் விடுதலைக்காக போராடும் வீரனையோ (அ) வீராங்கனையோ குறிக்கும் சொல். பண்டைய காலத்தில் தமிழகத்தில் இருந்த படைவீரர்களுக்கான ஒத்த சொற்கள்: வீரர்களைக்(soldier) குறிக்கும் பொதுச் சொற்கள் :- 'கலிங்க வீரர்கள்' SHIELD BEARER: பரிசைக்காரன் தேவன் வெட்டுப்படை வீரர்கள் :- வாளினை படைக்கலமாகக் கொண்டவன் - வாளி, வாள்வீரன், வாளேந்தி, வாளாளன் வாளுழவன் - வாளை உடைய உழவன்(மக்கள் படை) கொங்கவாளர் - கொங்கவெள்ளம் என்னும் ஒருவகை கொடுவாளினைப் பயன்படுத்துவோர் சொட்டையாளன் - …

  4. பொதுவாக இணையவெளியில் தமிழ் எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழை சார்ந்து பரிட்சயமான ஒரு கூச்சல் இருக்கிறது. மேலோட்டமாய்ப் பார்க்கையில் இந்தக் கூச்சல் நியாயமானதாகத் தான் தெரிகிறது. இருப்பினும், இந்தக் கூச்சலை நிராகரிப்பதற்கும் ஏராளமான நியாயங்கள் தெரிகின்றன. அந்த வகையில் இந்தப்பதிவு எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழை சார்ந்து அமைகிறது. புதிவிற்குள் செல்லமுன்னர் இதயசுத்தியாக ஒன்றைக் கூறவேண்டும். பதிவெழுதுவதற்காக இதை எழுதவில்லை. இந்த முனையில் உண்மையில் இவ்வாறு தான் எனக்குப் படுகின்றது. யாரேனும் இந்தப் பார்வை தவறு என்பதனை காத்திரமான கருத்துக்கள் கொண்டு தெரியப்படுத்தினால் மனதார மகிழ்வேன். மாறிக்கொள்வேன். சங்க கால இலக்கியத்தை வாசித்து ரசிப்பதற்கு என்னால் முடியாது. காரணம் எனக்கு …

  5. கிரேக்கச் சிந்தனை - எஸ்.வி. ராஜதுரை (`எக்ஸிஸ்டென்ஷியலிசம்' என்ற நூலிலிருந்து ) பண்டைய கிரேக்க - ரோமானிய ஞானத்தின் அடிப்படைப் பண்பு மனிதனை ஒரு முழுமைக்குள் வைத்து அவனைப் பற்றிய வரையறுப்பை வழங்கியது தான். இம்முழுமையுடன் மனிதனுக்குள்ள உறவு, அதில் அவன் வசிக்கும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதன் பற்றி விளக்கத்தை இந்த ஞானம் வழங்கியது. இந்த முழுமை பேரண்டமாக இருக்கலாம். நகர-அரசாக இருக்கலாம். இயற்கையாக இருக்கலாம். அல்லது ஒரு கருத்தாக்க அமைப்பாகவும் இருக்கலாம். இதில் எதுவாயினும் அதில் மனிதனுக்குரிய இடம் இன்னது தான் என வரையறுத்துக் கூறப்பட்டது. பண்டையக் கிரேக்கனின் பேரண்டத்தில் ஒவ்வொன்றுக்கும் நிலையான இடம் உண்டு; கதிரவன், நிலா, விண்மீன் ஆகியவை போலவே, மனிதனுக…

    • 2 replies
    • 2.3k views
  6. முத்தொள்ளாயிரத்தில் பேயும் பேய் மகளும்.! மனித உயிரியல் மற்றும் இயற்பியல் இயங்கு விதிகளுக்குக் கட்டுப்படாத சில அதீத நம்பிக்கைகளில் பேய், பிசாசுகள் குறித்த நம்பிக்கையும் ஒன்று. பேய், பிசாசுகள் குறித்த நம்பிக்கைகளுக்கும் மதங்களுக்கும் இடையறாத தொடர்பு உண்டு. ஆன்மா, பாவம், புண்ணியம், மறுபிறப்பு முதலான கருத்தாக்கங்களின் பின்னணியிலேயே பேய் நம்பிக்கை உயிர் வாழ்கிறது. இறந்தவர்களின் ஆன்மாவே ஆவி. அகால மரணத்தால் உடலைவிட்டு நீங்கிய உயிரே ஆவியாக உலவுகிறது. இத்தகு ஆவிகளே பேய்கள். இறந்தவர்கள் தமது வாழுங்காலத்தில் நிறைவேறாத ஆசைகள…

    • 1 reply
    • 2.3k views
  7. கயமூழ்கு மகளிர் கண்கள். தலைவன் தன்னைவிட பரத்தையரையே பெரிதும் விரும்புகிறான். இதைத் தோழிக்குத் தெரியக்கூடாது என்று மனதுக்குள்ளே மறைக்கிறாள் தலைவி. தலைவனோடு ஊடல்கொள்ள தலைவிக்கு இது போலப் பல காரணங்கள் இருந்தாலும், அவற்றைத் தன் மனதில் கொள்ளாமல் தோழி வாயிலாக வந்தமை ஏற்றுத் தலைவனின் தவறை மறந்தாள் மறைத்தாள். உப்பங்கழியில் நெய்தல் மலர்கள் மலர்ந்துள்ளன. அம்மலர்களின் காம்பு இலைகளுக்கு மேல் உயரமாக வளர்ந்துள்ளது. அலைபெருக்கெடுத்து வரும்போதெல்லாம், நெய்தல் மலர்கள் நீருள் மறைந்து மறைந்து தோன்றுகின்றன. இக்காட்சி, குளத்திலே குளிக்கும் போது நீருள் மூழ்கி மூழ்கி எழும் பெண்களின் கண்களைப் போலவே காட்சியளிக்கின்றன. கண்களல்லாத நெய்தல் மலரானது, மகளிர் கண்கள் போலக் காட்சி தருகிறது. க…

  8. மலையாளிகள் இனி தமிழையும் கற்றுக் கொள்ள வேண்டும். (truecopythink.media தளத்தில் வெளியான மலையாள கட்டுரையின் தமிழாக்கம்) சிஹாபுத்தீன் பொய்த்தும்கடவு (மலையாள எழுத்தாளர்) தமிழாக்கம் களியக்காவிளை ஷினு (Shinu R S) மலையாளத்திற்கும் ஆங்கிலத்திற்கும் அடுத்தபடியாக நாம் கல்விநிலையங்களில் பிரதான துணைமொழியாக கற்றுக்கொள்ள வேண்டியது தமிழ் மொழிதான் என்பது எனது அபிப்பிராயம். ஏனென்றால், தமிழ்தான் நமது பாரம்பரியத்தின் மொழி. கேரளாவின் நீண்ட கலாச்சாரத்தின் சரித்திர உள்ளுணர்ச்சியாக இருப்பது தமிழ். நமது மொழியின் உயிர் வேறு எந்த மொழியையும் விட தமிழில்தான் குடி கொள்கிறது. வட இந்தியாவிலிருந்து பாய்ந்து வந்த ஆரியமயமாக்கத்திற்கு எதிராக வியக்கத்தக்க வி…

  9. தமிழர் பண்பாட்டில் கள் .. திருமணம் முடித்து குடும்பத்துடன் நலமாய் வாழ்பவனை ‘அவன் குடியும் குடித்தனமுமாய்’ இருக்கின்றான் என்று கூறும் வழக்கம் நம்மிடையே மரபாக உள்ளது. அதேபோன்று குடிக்கு அடிமையான ஒருவனைக் கூறுவதற்கும் மேற்கண்ட வாசகத்தையேக் கிண்டலாகச் சொல்வதும் உண்டு. இன்று மதுவிலக்கு பற்றிப் பரவலாகப் பேசப்படுகிறது. அவற்றால் ஏற்படும் சமூகச் சீர்கேடுகள் குறித்துப் பல ஆர்வலர்களும், அமைப்பினரும் குரல் கொடுக்கின்றனர். பெண்களேக் கூட பல மதுக்கடைகளின் முன் நின்று போராடுவது குடி எத்தனை குடிகளை மூழ்கடிக்கின்றது, மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றது என்பதற்கு அடையாளம். இந்தச் சூழலில் தமிழரின் குடி கலாச்சாரம் குறித்துப் பேசுவது அவசியமாகிறது. அதாவது சங்ககாலத்தில் இருந்த குடி கலாச்…

    • 1 reply
    • 2.3k views
  10. அனல் மேலே பனித்துளி அலைபாயும் ஒரு கிளி மரம் தேடும் மழைத்துளி இவை தானே இவள் இனி இமை இரண்டும் தனித்தனி உறக்கங்கள் உறைபனி…. எந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ ..... ஒரு சிறு வலி இருந்ததவே இதயத்திலே உனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே உதிரட்டுமே உடலின் திரை… எல்லா மொட்டிதழல்களும் மலர்வதற்குதான் குவிந்து காத்திருக்கிறது... எந்தக் காற்று அலாவுமோ என்ற ஏக்கத்தில்!. காற்றுகளுக்கு அலாவுதலின் அளவைச் சொல்லிக் கொடுப்பார் யாருமில்லை. இருந்தாலும் தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கும்போது ஏதேனும் ஒரு மொட்டு மலர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் இசைக்காகவும், இன்குரலுக்காகவும் இந்தப் பாடலின் இனிமையில் இளைப்பாறிச் செல்பவர்கள் அநேகம்....! ஆனால்…

  11. "பண்டைய இலக்கியத்தில் மரணம்" [திருக்குறள், தேவாரம் & திருவருட்பா] மக்கள் மரணம் பற்றி அறிய ஆவலாகவும் அதேநேரம் கவலையாகவும் உள்ளார்கள். ஏனென்றால், 1] ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, அவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்ககள் மற்றும் அன்பானவர்களுக்கு, அது ஒரு வேதனையை கொடுத்து, அவர்களின் அன்றாட வாழ்க்கையை ஓரளவு முன்னையதில் இருந்து சீர்குலைகிறது அல்லது மாற்றி அமைகிறது, 2] வாழ்க்கையின் முழுமையற்ற அபிலாஷைகள் [Incomplete aspirations of life], 3] மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்ற விளக்கம் இல்லாமை ஆகும். மரணத்தின் கருத்தைப் பற்றிய ஆழ்ந்த புரிதல், பதட்டத்தைக் குறைப்பதற்கும் மரண பயத்…

  12. #சும்மா என்பது சும்மா #இல்ல ! நாவலர் நெடுஞ்செழியன்ஒரு சொற்பொழிவில் "சும்மா" என்ற தலைப்பில் பேசினார். அதை இப்போது படிங்க! *உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து இருந்த இடமே தெரியாமல் போயிருக்கின்றன!* *தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப் படுத்திக்கொண்டிருக்கின்றது*. *"சும்மா" சொல்லுவோம் தமிழின் சிறப்பை!!* *அடிக்கடி நாம் பயன்படுத்தும் வார்த்தை தான், இந்த "சும்மா".* *அதுசரி "சும்மா" என்றால் என்ன?* *பேச்சுவழக்குச் சொல்லாக இருந்தாலும், தமிழ்மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு வார்த்தை தான் இந்தச் "சும்மா".* *"சும்மா" என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15 க்கும்…

  13. முன்னோர்கள் உரைத்த பல சித்தரெல்லாம் முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய்விட்டார் நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்; சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்; தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்; பலர் புகழும் இராமனுமே ஆற்றில் வீழ்ந்தான் நாணத்தை, கவலையை, சினத்தை, பொய்யை அச்சத்தை, வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும். மிச்சத்தைப் பின் சொல்வேன் சினத்தை முன்னே வென்றிடுவீர் பூமியில் மரணமில்லை - பாரதி நாணம், கவலை, சினம் பொய் அச்சம் வேட்கை போன்ற அழுக்குகள் எல்லாம் போய் விட்டால் எஞ்சியிருக்கப்போவது என்ன? சுத்தமான மனது ஒன்றுதானே. சுததமான இதயத்தால் இந்த பூமியில் மரணத்தை வென்றிடலாம்...!! இன்றைய பொழுது இனிதாக அமைய என் வாழ்த…

  14. அண்மையில் தாயகத்தில் ஒரு புத்தக கடையில் கண்டேன்.

    • 15 replies
    • 2.2k views
  15. DanDora - Hi5News # ‪# வட இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற விஜயன் என்ற இளவரசன்தான், முதல் சிங்கள அரசை நிறுவியவன் என்று, சிங்களரின் வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது. இந்தியாவின் இதிகாசங்களான “ராமாயணம்”, “மகாபாரதம்” போன்றது பாலி மொழியில் எழுதப்பட்ட “மகாவம்சம்” என்ற நூல். இதை தங்களின் வேத புத்தகம் போல சிங்களர்கள் மதிக்கிறார்கள். இதை தங்கள் “வரலாறு” என்று சிங்களர்கள் கூறினாலும், நம்ப முடியாத கட்டுக் கதைகளும் இதில் உண்டு. விஜயன் இலங்கையில் சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் – இலங்கையின் முதல் சிங்கள மன்னன் விஜயன் என்று மகாவம்சம் கூறுகிறது. விஜயன் பற்றி மகாவம்சத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:- “வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் ஒரு காலத்தில் லால…

    • 1 reply
    • 2.2k views
  16. சான்றாண்மை - சுப. சோமசுந்தரம் தற்காலத்தில் சான்றாண்மை எனும் சொல் அறிவுக் களத்தில் சிறந்து நிற்றலையே குறிக்கிறது. பரிமேலழகர் காலத்திலேயே இப்பொருள் மட்டும் குறிக்கும் வழக்கம் பரவலாக ஏற்பட்டிருக்க வேண்டும். "ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" (குறள் 69; அதிகாரம்: மக்கட்பேறு) எனும் பொய்யாமொழிக்கு உரை சொல்ல வந்த பரிமேலழகர் "தன் மகன் கல்வி கேள்விகளால் நிறைந்தான் என்று அறிவுடையார் சொல்லக் கேட்ட தாய் தான் அவனைப் பெற்ற பொழுதை விட மகிழ்வாள்" என்றுரைக்கக் காணலாம். மணக்குடவர் 'சான்றோன்' என்பதனை விரித்துரையாமல் குறளில் உள்ளவாற…

  17. திருவள்ளுவர் திருநாளும், தொல்காப்பியர் திருநாளும் தமிழ்ச் சங்க இலக்கியங்களையும், அவை மருவிய காலச் சூழலையும், கல்வெட்டுக்களையும் ஆராயும் தமிழறிஞர்கள் திருக்குறள் சங்கம் மருவிய காலமாகிய கி.பி. நான்காம் நூற்றாண்டு வாக்கில் உருவாகிய நூலெனவும், வள்ளுவர் சமண சமயம் சார்ந்தவர் என்பது துறவு, புலால் உண்ணாமை போன்றவற்றை வலியுறுத்துவதாலும், கடவுள் வாழ்த்து அதிகாரத்தாலும் சான்று காட்டியுள்ளனர். சமணர்கள் என்றைக்குமே வள்ளுவதேவர் அருளிய தமிழ்மறையை “எம் ஓத்து” என்று கொண்டாடுகின்றனர். களப்பிரர் காலத்தில் தமிழில் சிரமண சமயங்களின் கொடை மிகுதியானது. அப்போதைய சமணக் காப்பியம் சிலப்பதிகாரமும், பெளத்தர்களின் காப்பியம் மணிமேகலையும் சிறந்த ஆதாரங்கள். பதினெண் கீழ்க்கணக்கில் சிறந்த குறளும், நாலடியா…

  18. முன்னோர் மொழி பொன்னே போல் - சுப.சோமசுந்தரம் அறநெறிகளும் உவமைகளும் மீண்டும் மீண்டும் இலக்கியங்களில் மாறுதலின்றி கையாளப்படுவதும் எடுத்தாளப்படுவதும் தொன்று தொட்ட நிகழ்வே. இவற்றில் ஒருவரைப் பார்த்துதான் இன்னொருவர் எழுத வேண்டும் என்றில்லை. இடமும் காலமும் மாறுபடாத போது அறநெறிகள் மாறுபட வாய்ப்பில்லை. மங்கை நல்லாளின் ஒளிரும் முகம் மதிமுகமாய் பாமரனுக்கும் தோன்றும். அதனை முழுநிலவெனச் சொல்வதற்கு ஒரு புலவனிடம் இன்னொரு புலவன் கேட்க வேண்டியதில்லை. ஆனால் ஒரு புலவனின் ஒரு குறிப்பிட்ட வருணனையோ கூற்றோ அவனுக்கு முந்தையோரை நினைவு படுத்துதல் உண்டு. அவ்வாறான சில இடங்களில் அம்முந்தைய கூற்று கல்வி கேள்விகளிற் சிறந்த இப்புலவனுக்குத் தெரியாதிருக்க வாய்ப்பில்லை என்று அறுதியிட்டுச் சொல…

  19. “சேஎய் குன்றம்;…. குலைக் காந்தட்டே” “சேஎய் குன்றம்;…. குலைக் காந்தட்டே” என்பது குறுந்தொகை முதற்பாடலில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலின் துறைக் குறிப்புகள் துறையாசிரியர்களாலும் உரையாசிரியர்களாலும் இரண்டு விதமாகக் குறிக்கப்பட்டுள்ளன. அவையாவன, 1. தோழி கையுறை மறுத்தது 2. தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது என்பனவாகும். ஒருபாடலுக்கு ஒரு துறைக் குறிப்பு மட்டுமே இடம்பெற வேண்டும் என்பதில்லை. ஒரு பாடல் ஒன்றிற்கு மேற்பட்ட துறைக்குறிப்புகளைப் பெறும் போது அப்பாடல் பன்முக நோக்கில் பொருள் தரும் சிறப்புடையதாகிறது. எனினும், இப்பாடலுக்கு கூறப்படும் வேறுபட்ட இரு துறைகளுள் பெரிதும் ஏற்புடையது எது? என்பதை ஆராய்தல்; இக்கட்டுரையின் நோக்கமாகும். குறுந்தொகை முதற்பாடல் “செங்களம் படக்க…

  20. ஆங்கிலம் துரித கதியில் நவீன சொற்களை உருவாக்க பின்னிற்பதில்லை. கூகிள் தேடற்பொறியில் தேடுவது கூகிளிங் என்று வினையாகக் கூட சொல்லப்படும் நிலை.. ஆங்கில அகராதியில் கூட. அதுபோல்.. செல்பி. தமிழும்.. அதற்கு சளைத்ததல்ல. யாழ் பிளாக்குகளுக்கு.. குடில்கள் என்ற பெயரை அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரியது. வலைப்பூக்கள் என்று இன்று பெரிதாக அறியப்படுகின்றன. அதே போல் பேஸ்புக்..மூஞ்சிப் புத்தகம்.. யாழில் முன்மொழியப்பட்டு.. இப்போ முகநூல் என்றாகி நிற்கிறது. செல்பிக்கும் யாழில் தமிழ் பெயர் வைப்பமே... எங்கள் முன்மொழிவுகள்.. சுயமி.. அல்லது முகமி... நீங்களும் முன்மொழிந்து தமிழ் நவீனமாக உதவுகள்.. உறவுகளே..!

    • 8 replies
    • 2.1k views
  21. தமிழின் இலக்கண, ஒலிப்பியல், மரபு முறைகளுக்கு அமைய அமைந்த பெயர் தமிழ்ப் பெயர் ஆகும். ஒரு நபரின் பெயர் அவரின் பின்புலத்தை எடுத்துக்காட்டுவதாக அமையும். ஒரு அடிமைக்கு அவரின் ஆண்டையே பெயர் வைக்கும் உரிமையைப் பெறுகிறான். அதனால் அடிமைப் பெயர்களை (Slave names) பல கறுப்பின மக்களும், காலனித்துவ அரசால் வேற்று நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட தென்னிந்திய மக்களும் தாங்க வேணியதாகிற்று. அதே போல் அண்மைக்காலம் வரை தமிழ்ச் சூழலில் பல பெயர்கள் சாதி href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF">சாதியையும்'>http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF">சாதியையும் சேர்த்துக் குறித்து நின்றன. பிள்ளை, ஐயர், படையாச்சி போன்ற பெயர் இணைப்புகள…

  22. உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம். உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம். அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த ...அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத…

    • 4 replies
    • 2.1k views
  23. கலாநிதி செல்லத்துரை சுதர்சன் http://www.arayampathy.lk/research/458-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D

  24. வணக்கம், சூரியன், சந்திரன், உதயம் இதெல்லாம் தமிழ் சொல்லுகள் இல்லையாம்; வடமொழிச் சொல்லுகளாம். இப்பிடி வழமையில பயன்படுத்துகிற சொற்களில அரைவாசிக்கு மேல வடமொழிச் சொல்லுகளாம். ஓர் தமிழ் அறிஞருடன் கதைச்சபோது சொன்னார். அவருடன் தொடர்ந்து நான் தமிழில் (?) உரையாடிய போது இப்பிடிச் சொன்னார்: தமிழில இருக்கிற பலவித கிளைகளை பாவிச்சு தேவையான அளவுக்கு புதிய தமிழ்ச் சொல்லுகளை உருவாக்கலாமாம். உதாரணமாக, ஆங்கிலத்தில இருக்கிற குளோரபில் - Chlorophyll எனப்படுகிற சொல்லிண்ட அர்த்தத்தை புரிந்து அதற்கு நிகராக தமிழில பச்சையம் என்று ஓர் சொல் உருவாக்கப்பட்டதாம். காந்தம் எண்டுறது தமிழ்ச்சொல் இல்லையாம். நான் கேட்டன் அப்ப அதுக்கு என்ன தமிழ்சொல்லு எண்டு. அவரால் உடனடியாக பதில் சொல்ல முட…

  25. 47 வகை நீர்நிலைகள் 01. அகழி - (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட� �ட நீர் அரண் 02. அருவி - (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது 03. ஆழிக்கிணறு -(Well in Sea-shore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு 04. ஆறு -(River) - பெருகி ஓடும் நதி 05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம் 06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு 07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை 08. ஊற்று - (Spring) பூமிக்கடியிலிருந� �து நீர் ஊறுவது 09. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம் 10. ஓடை -(Brook)அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுத…

    • 3 replies
    • 2.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.