தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
தமிழில் வெளியான முதல் புத்தகத்தின் நகலைக் காணலாமா? நூல்களின் கால இயந்திரத்தில் பயணிக்க ஆசைப்படுபவர்கள், கன்னிமாரா நூலகத்தில் நடந்து வரும் '500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அரிய நூல்கள் கண்காட்சி'யில் கலந்துகொள்ளலாம். நம் வரலாற்றுடன், நூல்களின் பரிணாம வளர்ச்சியையும் காணும் வண்ணம், நூல்களை மலையாக அடுக்கி வைத்திருந்தார்கள். தமிழ், ஆங்கிலம், இந்தி எனப் பல்வேறு மொழிகளைச் சார்ந்த நூல்கள் இந்த அரிய வகை நூல்கள் கண்காட்சியில் உள்ளன. தமிழில் வெளியான முதல் புத்தகத்தின் நகல் நம்மை வரவேற்கிறது. காந்தி பிறப்பதற்கு முன்பே இந்தியாவைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள் கண்ணாடிப் பெட்டிகளில் இருந்துகொண்டு கதை சொல்கின்றன. பிரிட்டிஷ் மாணவர்கள் தமிழகத்தில் நடத்திய ஆய்வ…
-
- 0 replies
- 797 views
-
-
தாலாட்டுப் பாடத்தெரியுமா? தாயின் கருவறையில் இருக்கும்போது அவளின் இதயத்துடிப்பையே தாலாட்டாகக் கேட்டுவந்த குழந்தை மண்ணுலகிற்கு வந்தவுடன் அந்த பாட்டுக் கேட்காமல் திருதிருவென விழிக்கிறது. சில நேரம் அழுகிறது. குழந்தையைத் தாய் தூக்கியவுடன் அழுகை நின்றுபோகிறது. குழந்தையைத் தூக்கிக்கொண்டே வைத்திருக்கமுடியுமா? அதனால் தான் பழந்தமிழர் கண்டறிந்தனர் தாலாட்டு என்னும் சீராட்டை! நான் சிறுவனாக இருந்தகாலத்தில் பல வீடுகளிலும் தாலாட்டுப் பாடும் ஓசை கேட்டிருக்கிறேன்.. நான் வளர வளர தாலாட்டின் பரிணாமமும் வளர்ந்துவந்திருக்கிறது. முதலில் திரைப்படப்பாடலைத் தாலாட்டாகப் பாடினார்கள்.. அடுத்து வானொலி...தொலைக்காட்சி...சிடி..டிவிடி..அலைபேசி... என இந்தக் காலத்துக் குழந்தைகளும் 'இவர்கள் பாடும…
-
- 6 replies
- 1.6k views
-
-
நாங்கள் எவ்வளவதான் தமிழ்.. தமிழ்.. என முழங்கினாலும் பலருக்கு நகைப்பாக இருக்கும் எதிர்த்து வாதம் செய்வார்கள். வெளிநாட்டுக்காரர்கள் சொன்னால் வாய்பிளந்து பார்ப்பார்கள். இங்கே இந்த ஒளிப்பதிவில் அலெக்ஸ் கொலியர் சொல்வதை கேளுங்கள். இவர் அமெரிக்காவின் மிகப்பெரும் ஆராய்ச்சியாளர், பேராசிரியர், இவர் தனது பட்டறையில் மற்றவர்களுக்கு விளக்குகிறார் இப்படி, ஒரு காலத்தில் உலகில் ஒரே ஒரு மொழிதான் நாம் அனைவரும் பயண்படுத்தியுள்ளோம் அந்த மொழி தமிழ் என அழகாக எழுதியும் காட்டுகின்றார். ஒளிப்பதிவில் 1:38.00 நிமிடத்தில் இருந்து பாருங்கள் அவரது குரலும் அவர் எழுதுவதும் தெளிவாக தெரியும். http://youtu.be/ZegXpXm4bug தமிழ் உலகை ஆண்ட மொழி, உலகிற்கு ந…
-
- 9 replies
- 6.6k views
-
-
மறைக்கப்பட்ட மெய் முகங்கள்- கோபிகா நடராசா. written by admin August 3, 2025 மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டே, அழகைப் பேணுவது என்பது மனித வாழ்வின் ஓர் அங்கமாக இருந்துவருகிறது. கற்காலத்தில் குகைச் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்களில் இருந்து, இக்காலத்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செல்ஃபிக்கள் வரை, மனிதர்கள் தங்கள் உருவத்தைப் பற்றியும். அதை அழகாகக் காட்ட வேண்டும் என்பதைப் பற்றியும் எப்போதும் அக்கறை கொண்டிருந்துள்ளனர். நாகரிகத்தின் வளர்ச்சிக்கேற்ப, அழகு குறித்த வரையறைகளும், அதை அடையும் வழிமுறைகளும் தொடர்ந்து மாறிக்கொண்டே வந்துள்ளன. இந்த நீண்ட பயணத்தில், இயற்கையோடு ஒன்றிய பாரம்பரிய அழகு முறைகளிலிருந்து, இன்றைய நவீன தொழில்நுட்பம் சார்ந்த அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவ அணுகும…
-
- 0 replies
- 489 views
-
-
மார்க்சீயமும் தமிழ் இலக்கியமும் : ஒரு வரலாற்றுக் கணக்கெடுப்பு - எம். ஏ. நுஃமான் - -------------------------------------------------------------------------------- மார்க்சியம் உலகைப் புரிந்துகொள்வதற்கான ஒரு தத்துவம் என்ற வகையிலும், உலகை மாற்றுவதற்கான ஒரு வழிமுறை என்ற வகையிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து உலகில் பெரும் செல்வாக்குச் செலுத்திவருகிறது. மானுட விழுமியங்களை நோக்கிய மனிதனின் முழுமையான வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் சகல தளைகளையும் உடைத்து உண்மையான மனித விடுதலையைப் பெற்றுத்தரும் ஒரு தத்துவமாக அது கருதப்படுகிறது. பூரண விடுதலைக்குத் தடையாக இருக்கும் தனியுடைமை, வர்க்க முரண்பாடு, சுரண்டல் ஆகியவற்றைக் களைந்து பொதுவுடைமை, சமத்துவம், சமூ…
-
- 8 replies
- 5.6k views
-
-
தமிழ் இலக்கணம் தொடர்பான மின் நூல்களை பதிவிறக்கம் செய்ய: http://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு%3Aதமிழ்_இலக்கணம் #நூலகம் # Grammar #Tamil #Language #தமிழ் #தமிழ்மொழி#தமிழர்
-
- 3 replies
- 6k views
-
-
மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு சடங்குகள் வளமும் நலமும் வேண்டி மக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகையச் சடங்குகள் வாழ்வியல் சடங்குகள் எனப்படுகின்றன. பிறப்புச் சடங்கு, பூப்புச் சடங்கு, திருமணச் சடங்கு, போன்றவை மங்கலச் சடங்குகள் என்றும் இறப்புச் சடங்கை அமங்கலச் சடங்கு என்றும் பகுத்துள்ளனர். சமுதாயத்தில் இறப்பு என்பது ஒரு துக்க நிகழ்ச்சியாகவும், இறப்பு நடந்த வீட்டார் தீட்டுப்பட்டவர்களாகவும் கருதப்படுகின்றனர். இத்தீட்டினைச் சடங்குகளால் மட்டுமே போக்க முடியும் என்ற நம்பிக்கையில் பல்வேறு செயல்பாடுகள் நிகழ்த்தப்படுகின்றன. இச்சடங்குகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் புனிதத் தன்மை வாய்ந்தவையாகவும் தனித்த அர்த்தமுடையவையாகவும் கருதப்படுகின்றன. இக் கட்டுரை மள்ளர் இன மக்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 2 replies
- 803 views
-
-
"தேடிச் சோறு நிதந் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" என்ற பாரதியாரின் கவிதை வரிகள் தனி ஒரு கவிதையாக உள்ளதா அல்லது கவிதையொன்றின் பகுதியாக உள்ளதா? தெரிந்தவர்கள் அறியத் தாருங்கள்.. பி.கு. இக் கவிதை வரிகள் கமல் நடித்த "மகாநதி" படத்திலும் வந்ததாக ஞாபகம்.
-
- 0 replies
- 1.8k views
-
-
-
-
- 1 reply
- 4.6k views
-
-
தமிழன் என்றால் இப்படிதான் வாழவேண்டும் என்று வழிகாட்டிய கவிஞர் . இன்று இருந்திருந்தால் தமிழீழ விடுதலைக்கே ஒரு வெண்பா பாடி இருப்பார் அவரைப்பற்றி மீள்நினைவுகளை தெரிந்தவர்கள் இங்கே பதியுங்களேன்
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழில் இருந்து கடன் வாங்கப்பட்ட ஆங்கில வார்த்தைகள்!
-
- 1 reply
- 1.4k views
-
-
திருஞானசம்பந்தர் தேவாரம் சமணர் பெண்களைக் வன்புணரச் சொல்லுகிறதா? பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் "பெண்ண கத்தெழில் சாக்கியப் பேய்அமண், தெண்ணர் கற்ப ழிக்கத்திரு வுள்ளமே" என திருஞான சம்பந்தர் சமணப் பெண்களை வன்புணர இறைவனிடம் வேண்டுவது ஏன்? வரலாறு நெடுக மதம் என்பது வன்முறை சார்ந்தே வளந்திருக்கும்போது அது அன்பை போதிக்கிறது என பொய்யுரைகள் புகல்வதேன்? மேற்கண்ட வினா 'Quora' தமிழ் தளத்தில் வினவப்பட்டு, பலநாட்கள் கழித்தே என் கண்ணில்பட்டது. ஐயம் வினவுவதற்குப் பதிலாக, தீர்ப்பை எழுதிவிட்டு, குற்றப்பத்திரிக்கை வாசிக்கும் தொனியில் இரு…
-
- 6 replies
- 8.6k views
-
-
நானும் என் துணைவியும் சில காலம் சென்னையில் வாழும்படி நேர்ந்தது. நான் எனது தூய தமிழில் பேசுவதற்கு கொஞ்சம் தயங்கிய காலப்பகுதி அது. அதையும் மீறிச் சிலவேளை என் இயல்பு மொழியில் நான் பேசினால் “என்ன நீங்கள் மலையாளம் பேசுறிங்களா?” எனச் சிலரும் “நீங்கள் ரொம்ப அழகாய் சிங்களத் தமிழ் பேசுறிங்க” என வேறு சிலரும் பேசுவதைக் கேட்டு அவர்களுக்கு விளக்கம் சொல்லி அலுத்துப்போய் ஒருவாறாக சென்னைத் தமிழைப் பேசக் கற்றுக் கொண்டேன். சென்னைத் தமிழ் ரொம்ப அழகானதுதான் அதற்காக என் தாய்த்தமிழை ‘’சிங்களத் தமிழ்’’ என்று சொல்லும் அவர்களை என்னால் எப்படி ஏற்க முடியும்? இது நடந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன, அமெரிக்காவுக்கு வந்ததற்கு பின் தமிழரைக் காணும்போதெல்லாம் என் தூய தமிழில் உரையாடுவதற்கு நா…
-
- 0 replies
- 785 views
-
-
இராவணன் இயற்றிய நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் விபரம் 1. உடற்கூறு நூல் 2. மலை வாகடம் 3. மாதர் மருத்துவம் 4. இராவணன் – 12000 5. நாடி, எண்வகை பரிசோதனை நூல் 6. இராவணன் வைத்திய சிந்தாமணி 7. இராவணன் மருந்துகள் - 12000 8. இராவணன் நோய் நிதானம் - 72 000 9. இராவணன் – கியாழங்கள் – 7000 10. இராவணன் வாலை வாகடம் – 40000 11. இராவணன் வர்ம ஆதி நூல் 12. வர்ம திறவுகோல் நூல்கள் 13. யாழ்பாணம் – மூலிகை அகராதி 14. யாழ்பாணன் – பொது அகராதி 15. பெரிய மாட்டு வாகடம் 16. நச்சு மருத்துவம் 17. அகால மரண நூல் 18. உடல் தொழில் நூல் 19. தத்துவ விளக்க நூல் 20. இராவணன் பொது மருத்துவம் 21. இராவணன் சுகாதார மருத்துவம் 22. இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம் 23. இராவணன் அறுவை ம…
-
- 0 replies
- 6.2k views
-
-
உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகையில் 24 நிமிடங்கள், நாழிகைக்கு 360(15*24) மூச்சு எனச் சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது. (இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது) ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது. இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கின்றீர்களா? சம்பந்தம் இருக்கிறது. இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216(உயிர்மெய்) சார்பெழுத்துகள் உருவாக்கப்பட்டன. மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம். மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி ம…
-
- 4 replies
- 4.6k views
-
-
தேனினும் இனிய தெள்ளு தமிழில் வான் புகழ் வள்ளுவன் யாத்த 1330 குறட்பாக்களில் பல அதிசயச் செய்திகள் உள்ளன. இவைகளை அப்படியே நம்புவதா? அல்லது உவமைக்காகக் கூறப்படும் மரபுச் செய்திகளா? என்று தெரியவில்லை. இவைகள் குறித்து அறிவியல் முறையில் ஆராய்ந்தால் உண்மை புலப்படும். கவரி மானின் மயிர் நீங்கி விட்டால் அது இறந்து விடும் என்றும், முகர்ந்து பார்த்தாலே அனிச்சமலர் வாடி விடும் என்றும், பத்தினிப் பெண்கள் மழை பெய் என்றால் மழை பெய்யும் என்றும் பல அதிசயச் செய்திகளை அடுக்குகிறார் வள்ளுவர். தற்காலத்தில் திருக்குறளுக்குப் புதிய உரை எழுதி வருவோர் பழங்காலத்தில் உரை எழுதியோர் விஷயங்களைத் தள்ளி விட்டு வள்ளுவர்க்குப் புதிய "வியாக்கியானம்" செய்ய முனைந்துள்ளனர். இது தவறு. 1500 ஆண்டுகளுக்கு முன் வா…
-
- 0 replies
- 542 views
-
-
சமீபத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய "வில்லோடு வா நிலவே" என்ற புத்தகத்தை படித்தேன். இது 1993ல் வெளிவந்தது. இப்பொழுது தான் எனக்கு அதை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. சேரன் செங்குட்டுவனின் தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், காக்கை பாடினியார் நச்செள்ளை எனும் புலவரை பக்கத்தில் கொண்டதாக புறநானுற்றில் ஒரு குறிப்பு காணப்படுகிறது. "பக்கத்து கொண்டான்" எனபதற்கு பட்டத்து மனைவியாகக் கொண்டான் என்ற பொருளைக் கொண்டு எழுதப்பட்ட கவித்துவமான நாவல். கவிதை இனிது.. காதல் இனிது... வீரம் இனிது. இந்த மூன்றையும் சங்க காலத்து பிண்ணனியில் கொடுத்த இந்தக் கதையும் இனிதாக இருக்கிறது. அம்பைத் தீண்டுவது வீரனின் செயல், வம்பைத் தீண்டுவது காதலனின் செயல். இவர் இரண்டையும் தீண்டியுள்ளார். "வம்பு" என்பதன் மற்…
-
- 2 replies
- 7.6k views
-
-
இது மண்ணும், மரமும், மனிதனும் தெடரில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டது பிள்ளையோ பிள்ளை எமது மக்கள் மண்ணை மட்டும் நேசிக்கவில்லை, மரங்களையும் நேசிக்கிறார்கள், பறவைகள், மிருகங்கள், பிராணிகள் என அத்தனையையும் நேசிக்கிறார்கள் என்பது நீங்களும் நானும் அறிந்த ஒரு விடயமே, ஆனால் சிறு வயது முதலே என்னை ஆச்சரியப் படவைத்த தமிழ் மக்களின் 'சொல்வழக்கு' பற்றி இந்த வாரம் சிறிது ஆராய இருக்கிறேன். முதலாவதாக எமது கற்பக தருவாம் பனை மரத்தை எடுத்துக் கொண்டால், அது பாண்டியர்களின் கொடியிலும், கம்போடியாவின் தேசியச் சின்னமாகவும், அதேவேளை உலகின் மிகப்பெரிய சிவன் கோவிலாகவும் விளங்கிய(தற்போது அது பௌத்த கோவிலாக மாற்றப்பட்டு விட்டது) கம்போடியாவின் 'அங்கோர் கோயில்'(ankor wat) அ…
-
- 0 replies
- 1k views
-
-
சங்க இலக்கியத்தில் விலங்கியல் - 8 - குரங்கு முன்னுரை: குரங்கு - என்று சொன்னவுடனே நாம் சாதாரணமாகப் பார்த்தாலும் நம்மை முறைத்துப் பார்த்தவாறு 'உர் உர்' என்று சத்தமிடுவதும் நம் கையில் இருக்கும் உணவுப் பொருட்களை எப்போது பிடுங்கிக் கொண்டு செல்லலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஓரிடத்தில் இல்லாமல் அங்கும் இங்கும் தாவிக்கொண்டிருப்பதுமான குறும்பு நிறைந்த கூனிய உடலுடைய உருவம் தான் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும். குரங்கு என்றாலே அதன் சேட்டைகளுக்குப் பஞ்சமில்லை. குழந்தைகளுக்குக் குரங்கைப் பார்த்துவிட்டால் போதும்; அதன் அருகில் செல்வதற்கு அஞ்சினாலும் அதன் செயல்பாடுகளைக் கண்டு சிரித்து மகிழ்வர். தமிழகத்தில் பரவலாகப…
-
- 0 replies
- 1.3k views
-
-
இதுபற்றிய யாழ் தமிழ் உறவுகளின் கருத்துக்கள் என்ன என்பதுபற்றி அறிவதற்கு ஆவல்....🙏
-
- 0 replies
- 1.1k views
-
-
அறியத்தருவீர்களா கழுதையறியுமா கற்பூரவாசனையை என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? கற்பூரத்துக்கு அப்படி என்ன வாசனையுள்ளது கழதைக்கும் கற்பூரவாசனைக்கும் என்ன தெடர்பு? பி.கு: தயவு செய்து நக்கலடிக்காதீர்கள் உண்மையாகவே தெரியாது
-
- 45 replies
- 12.4k views
-
-
வலி்ச்சாலும் பிடிச்சிருக்கு! மீன் கொடித் தேரில் மன்மத ராசன் ஊர்வலம் போகின்றான் என்றொரு திரைப்படப் பாடல் கேட்டிருப்பீர்கள்.. மன்மதன் கரும்பை வளைத்து வில்லாக வைத்திருப்பானாம் அவனுடைய தோள்களில் தொங்கும் அம்பறாத்துணியில் மலர்கள் நிரம்பி வழியுமாம் அந்த மலர்களை அம்புகளாக (கணைகளாக) ஆண்களின் மீதும் பெண்களின் மீதும் எய்துகொண்டிருப்பானாம். அப்படி எய்யப்படும் மலர்(க்கணைகள்) அம்புகள் எவர் மீது விழுகின்றனவோ, அவர்களுக்குக் காதல் அரும்புமாம். இது பழந்தமிழர் நம்பிக்கை. இது சரியா? தவறா? என்று ஆய்வு செய்யும் முன்னர்... ஆண் மீது பெண்ணுக்கும் - பெண் மீது ஆணுக்கும் ஏற்படும் ஈர்ப்புக்கு இன்றைய அறிவியல் கூறும் வேதியியல் (ஆர்மோன்) விளக்கத்தோடு ஒப்புநோக்கத்தக்கதாக இச்சிந்தனை வி…
-
- 9 replies
- 1.7k views
-
-
மறைக்கப்பட்ட வரலாறுகள் மனித வாழ்வியலில் திருக்குறளின் அவசியம்.... உயர் கல்வியின் பொருட்டு வெளியூர் செல்லவேண்டிய நிற்பந்தம், இவ்வளவு காலமும் தாய் தந்தையரின் அரவணைப்பில் வாழ்ந்த ஒரு இளைஞன் முதல் முறையாக பெற்றோரை பிரிந்து செல்லுகின்றான். அவனுக்கு எதை கொண்டு செல்லவேண்டும் எதை தவிர்க்கவேண்டும் என்பதில் ஒரு தடுமாற்றம். எப்படியான ஆடைகளை தெரிவுசெய்வது? இதுவரை படித்த நூல்கள் ஏதேனும் தேவைப்படுமா? புதிய மொழி, கலாச்சார அமைப்புக்கொண்ட பிரதேசத்தில் எப்படி சவால்களை எதிர் கொள்வது? போன்ற எண்ணற்ற கேள்விகள் அவனது ஆழ் மனதில் எழுந்தன. அதற்கு அவனுடைய தந்தை புறப்படும் பொழுது அவனுக்கு ஒரு திருக்குறள் நூலை கொடுத்து மூன்றே மூன்று வார்த்தைகளை மட்டுமே கூறி வழியனுப்பினார் புதிய கலாச்சாரம், புத…
-
- 1 reply
- 3.2k views
-