Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. போன வாரம் துவிட்டரில் "தமிழ் வக்கற்ற மொழி" என்றான் சமற்கிருத வெறியன் ஒருவன். ஏனடா என்றால், மற்ற இந்திய மொழிகளில் நான்கு க, நான்கு ச என வகை வகையாக வல்லின எழுத்துக்கள் இருக்கின்றன; தமிழில் இல்லையே என்றான் சிறுபிள்ளைத்தனமாக. ➵ உண்மையிலேயே தமிழில் வல்லின எழுத்து வகைகள் இல்லையா? ➵ ஆம் எனில் அதற்குக் காரணம் என்ன? ➵ இது தமிழின் குறைபாடா இல்லையா? இவற்றுக்கான விடையே இப்பதிவு. ஆனால் தொடங்கும் முன், “அப்படியா கேட்டான்! தமிழையா இழித்துரைத்தான்!” என உங்கள் நெஞ்சு கொதிக்கும் இல்லையா? அதைத் தணிவிக்கும் முயற்சியாக இதோ அந்த அறிவிலிக்கு நான் தந்த எதிரடிகள் சில உங்கள் பார்வைக்கு. என்ன, பார்த்து விட்டீர்களா? ஆனால் என்னதான் நாம் இப…

    • 7 replies
    • 3.4k views
  2. இன்று எனக்குத் திருக்குறளின் 'மின்னியல் வடிவம்' ஒன்று மின்னஞ்சலில் வந்தது! அதைக் கள உறவுகளுடன் பகிர விரும்புகின்றேன்! பின்வரும் இணைப்பைச் சொடுக்கி, இதனை ஒரு 'PDF' வடிவத்தில், உங்கள் கணனியில் சேமித்து வையுங்கள். உங்கள் வருங்காலச் சந்ததிக்காவது உதவும்! https://docs.google.com/a/punkayooran.com/file/d/0ByCu4KeqKCulRGFWeldTUlZaOEE/edit முழுப்பக்க வடிவத்தைத் தெரிவு செய்து பார்க்கவும்! களப் பெருசுகளுக்கு, வாசிக்க இலகுவாக இருக்கும்!

  3. அன்பு கமழ் நெஞ்சங்களே! வட அமெரிக்காவின் மூத்த முதல் தமிழ்ச் சங்கமான நியூயார்க் தமிழ்ச் சங்கம் ‘வெள்ளிதோறும் இலக்கிய உலா’ எனும் நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. புகழ் பெற்ற தொல்லியல் ஆய்வாளரான ஆர்.பாலகிருட்டிணன், இ.ஆ.ப., அவர்கள் முதல் பார் போற்றும் எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் அவர்கள் வரை தமிழுலகின் சிறப்புக்குரிய பெருமக்கள் பலரும் உரையாற்றிய அந்த மேடையில் இந்தச் சிறுவனையும் அழைத்துப் பேச வைத்தது சங்கத்தினரின் பெருந்தன்மையே தவிர வேறில்லை. கடந்த 18.12.2021 அன்று நடந்த அந்த நிகழ்ச்சியில் ‘அன்றாட வாழ்வில் தமிழ்ப் பயன்பாடு’ எனும் தலைப்பில் நான் ஆற்றிய உரையை இதோ உங்கள் மேலான பார்வைக்கு முன்வைக்கிறேன், சங்கத்துக்கு என் பெயரை முன்மொழிந்த அதன…

  4. அதிசய அற்புத பாடல்கள் ஆங்கிலத்தில் palindrome என்றும், தமிழில் இருவழி ஒக்கும் சொல் என்றும் குறிப்பிடக் கூடியவைகளைக் காண்போம். MALAYALAM - இது ஆங்கிலத்தில் இடது புறத்திலிருந்து வலப்புறமாக படித்தாலும், வலது புறத்திலிருந்து இடது புறமாக படித்தாலும் ஒரே மாதிரியாக, அதே சொல்லாக அமையக்கூடியது. palindrome என்பது இவ்வகை.தமிழில் - விகடகவி - இடதிலிருந்து வலமாக, வலமிருந்து இடமாக படித்தாலும் ஒரே சொல் அமையக் கூடியது. ஆங்கிலத்தில் பாலிண்டிரோம்கள் அதிகம். I PREFER PI MADAM I'M ADAM NEVER ODD OR EVEN என்பவை சில பிரபலமான பாலிண்டிரோம்கள். இவை போல ஆயிரக்கணக்கான எழுத்துக்களைக் கொண்ட பாலிண்டிரோம்கள் ஆங்கிலத்தில் உள்ளன. தமிழில் பாலிண்டிரோம்கள் மிகக் குறைவே. …

  5. தூரக்கிழக்கு கரை ஓரந்தான் தாழப்பறந்து வரும் மேகந்தான் உங்கிட்டே சேராதோ !! எம்பாட்ட கூறதோ !! ஒண்ணாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ !! ஏகாந்த அமைதியில் சுழலும் இன்னிசையும் என்னவளின் நினைவுகளும் இணைந்துவிட்ட ஒர் இனிய இரவில், கற்பனையெனும் காற்றுக் குதிரை ஏறி பால்ம வீதிகளில் பாய்ந்தோடிக் கொண்டிருந்த கணத்தில் எழுந்த ஒரு சின்ன சிந்தையே இந்தப் பதிவின் மூலம்... கற்பனை என்ற சொல்லுக்கும் சிந்தனை என்ற சொல்லுக்கும் அதிக வேறுபாடு கிடையாது என்றே நினைக்கிறேன். ஒழுங்குபடுத்தப் படாத எண்ண ஓட்டங்களை கற்பனை என்றும் சீர்படுத்தப்பட்ட எண்ண ஓட்டங்களை சிந்தனை எனலாம் என்று நினைக்கிறேன். நாளைய பற்றிய ஏக்கங்களும், எண்ணங்களும்தான் மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் புது புதிதாக எதையா…

  6. காதலின் எடையை அறிந்துகொள்ள... காதல் வாழ்வின் பொருளை உணரச் செய்கிறது! காதல் இல்லாத வாழ்க்கை துடுப்பில்லாத ஓடம் !! காதல் பற்றிப் பாடாத கவிஞர்களே இல்லை. பெரும்பாலும் காதலின் உயரத்தையும்,அகலத்தையும், ஆழத்தையும் திருமணத்துக்கு முந்தைய காலப்பகுதியிலேயே அதிகமாகப் பாடியுள்ளனர். காதலித்தல் என்பது திருமணத்துக்கு முந்தைய வாழ்க்கை என்றே பலரும் வாழ்ந்து வருகிறோம். இதனையே கவிஞர் கண்ணதாசனும்... காதல் என்பது எதுவரை? கல்யாண காலம் வரும் வரை கல்யாணம் என்பது எதுவரை? கழுத்தினில் தாலி விழும் வரை பெண்ணுக்கு இளமை எது வரை? பிள்ளைகள் பிறந்து வரும் வரை கழுத்தினில் தாலி விழுந்த பின்னும் தன் மனைவியைக் காதலிப்பவர்கள் உலகில் எத்தனைபேர்? பெண…

  7. தமிழ் அறிக - 1 கையெழுத்தும் தலையெழுத்தும் சகாயம் பற்றிய இரண்டாம் கட்டுரையைப் படித்த நண்பர் ஒருவர் அதில் கையாண்டிருந்த இரு சொற்கள் குறித்து வினவினார். அவரது முதல் வினா கையெழுத்து , கையொப்பம் ஆகிய இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதாகும். இன்று பேச்சு வழக்கில் Hand writing , signature ஆகிய இரண்டு பொருள்களுக்கும் கையெழுத்து என்னும் ஒரே சொல்லைக் கையாள்கிறோம். அது சரியல்ல. 'புரியாத மாதிரி அவன் கையெழுத்து இருக்கிறது', 'புரியாத மாதிரி அவன் கையெழுத்துப் போடுகிறான்' இந்த இருதொடர்களிலும் வெவ்வேறு பொருள்களில் கையெழுத்து என்னும் சொல் வருகிறது. 'கையெழுத்துப் போடுதல்' என்று வந்துவிட்டால் அது Signature எனப் புரிந்துகொள்கிறோம். ஆனால் கையொப்பம் என்பதுதான் அதற்குச் சரி. வெவ்…

  8. "வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில் பட்டு உருவுங்கோல் பஞ்சில் பாயாது-நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும்" - நல்வழி யானையின்(வேழத்தில்) மீது பட்டு துளைத்துச் செல்லும் அம்பானது, பஞ்சின் மேல் வீசுங்கால் அதைப் பாய்ந்து செல்லாது. இரும்பை வைத்து அடித்தாலும் பிளக்க முடியாத கரும்பாறையானது பசுமையான மரத்தின் வேருக்கு நெகிழ்வதைப் போல வன்சொற்களால் யாரையும் வெல்ல முடியாது. மென்சொற்களே மேன்மையாகும்... இன்றைய பொழுது இனிதாக அமைய என் வாழ்த்துகள் !!

  9. ஆயகலைகள் அறுபத்து நான்கு எது தெரியுமா!!! முகநூலிலிருந்து

  10. ஆசிரியர் இன்னார் என்று திருக்குறள் கூறாததின் மறைதிறவு! - கம்பனுக்கே குரு ஆன ஏற்றப்பாட்டு உழவர்கள்! பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ல் பல்கலைக்கழக ஆசிரியர் தின விழாவில் அறிவியற்புல முதன்மையர் என்ற முறையிலும், மூத்த பேராசிரியர் என்ற முறையிலும் வாழ்த்திப் பேச அழைக்கப்பட்டிருந்தேன். புதிய செய்தியினை இவ்வாண்டு ஆசிரியர் தின வாழ்த்தாகத் தெரிவிக்க மனம் விரும்பியது. ஆசிரியர் இன்னார் என்று வரையறுக்காத குறளாசான்! வேண்டுவதை வேண்டியபடி எளிதில் தரும் அட்சய பாத்திரம் என்ற வகையில் திருக்குறளைப் புரட்டினேன். கல்வி க…

  11. வணக்கம், சூரியன், சந்திரன், உதயம் இதெல்லாம் தமிழ் சொல்லுகள் இல்லையாம்; வடமொழிச் சொல்லுகளாம். இப்பிடி வழமையில பயன்படுத்துகிற சொற்களில அரைவாசிக்கு மேல வடமொழிச் சொல்லுகளாம். ஓர் தமிழ் அறிஞருடன் கதைச்சபோது சொன்னார். அவருடன் தொடர்ந்து நான் தமிழில் (?) உரையாடிய போது இப்பிடிச் சொன்னார்: தமிழில இருக்கிற பலவித கிளைகளை பாவிச்சு தேவையான அளவுக்கு புதிய தமிழ்ச் சொல்லுகளை உருவாக்கலாமாம். உதாரணமாக, ஆங்கிலத்தில இருக்கிற குளோரபில் - Chlorophyll எனப்படுகிற சொல்லிண்ட அர்த்தத்தை புரிந்து அதற்கு நிகராக தமிழில பச்சையம் என்று ஓர் சொல் உருவாக்கப்பட்டதாம். காந்தம் எண்டுறது தமிழ்ச்சொல் இல்லையாம். நான் கேட்டன் அப்ப அதுக்கு என்ன தமிழ்சொல்லு எண்டு. அவரால் உடனடியாக பதில் சொல்ல முட…

  12. எரிதழல் -சுப.சோமசுந்தரம் நான் இதற்கு முன் எழுதிய ‘என்னே இந்த நகைமுரண் !’ என்ற கட்டுரைக்குப் பின்னூட்டம் அளித்த நண்பர் ஒருவர் பின்வரும் கருத்துக்களைக் கூறியிருந்தார் : “ பாண்டிய மன்னனும் கோப்பெருந்தேவியாரும் தம் தவறுக்குத் தண்டனையாக தம் உயிர் மாய்த்த பின் கண்ணகி மதுரையை எரித்தது ஏற்புடைத்தன்று.” “ இராவணன் சூழ்ச்சிப் படலத்தில் இலக்குவன் மீது சீதை கடுஞ்சினம் பொழிந்ததன் விளைவே இலக்குவனால் மூட்டப்பெற்ற சிதையில் சீதை பாய நேரிட்டது.” இவ்விரண்டினையும் ஒன்றாய்க் கட்டும் இழையாக ‘எரிதழல்’ எனும் இத்தலைப்பு அமைந்ததுடன், இலங்கையில் அனுமன் இட்ட தீயும் இண…

  13. சித்திரையில் புத்தாண்டா, தையில் புத்தாண்டா என்று வெட்டி மடிபவர்களில் எத்தனை பேர் உண்மையிலேயே இப்படி ஆண்டுகளைக் கணக்கீடு செய்வது பற்றி ஆராய்ந்து பார்த்திருப்பார்கள்? தமிழ் இலக்கியங்களில் எப்போது தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடினார்கள் என்று தேடிப்பார்த்தால், தேடுபவர்களைப் பொருத்து தை, சித்திரை, ஆவணி என்று வெவ்வேறு விடை கிடைக்கும். தமிழர்கள் ஆண்டுகளையும், மாதங்களையும், கிழமைகளையும், நாள்களையும் எப்படிக் கணக்குப் போட்டார்கள்? நமக்குத் தெரியாது. சித்திரைதான் புத்தாண்டு என்று வாதிடுபவர்களுக்க்குச் சித்திரை வேண்டும் என்பதை விட, தை வேண்டாம் என்பதுதான் முக்கியம். கருணாநிதி ஆணையிட்டால் அது நடந்து விடக் கூடாது என்பதற்காக மூர்க்கத் தனமாக எதிர்ப்பவர்களைப் பார்க்கிறேன். அதே போல், சி…

  14. முதலில் மருத நிலத்தில் உழவர் என்னும் ஒரு வகுப்பினர் இருந்தனர். பின்பு அவர்கள் காலப்போக்கில் பிரிந்து உழவர், அரசர், வணிகர், அந்தணர் எனப்பட்டனர். ஒரே குலமாய் இருந்த தமிழர்கள் தமது தொழில் முறைக்கு ஏற்ப அதே தொழில் செய்வோரிடம் கொண்டும் கொடுத்து வந்ததால் நாளடைவில் வெவ்வேறு குலத்தினராயினர். அதாவது வேறு தொழில் செய்வோரிடத்தில் பெண் எடுத்து பெண் கொடுத்தால் தத்தம் தொழிலுக்கு ஒத்து வராது என்பதால் தம்மை ஒத்த தொழில் செய்வோரிடத்திலே பெண் எடுத்து பெண் கொடுத்து வந்தனர். பின்னாளில் அது தொடர்பற்ற வெவ்வேறு குலமெனும் கருதும் நிலையை அடைந்து ஒவ்வொருவரும் தத்தம் குலமே பெரிதென எழுதி தனித் தனி குலமாயினர். அந்தணன் என்னும் பெயர் அந்தணாளன் (அம் + தண் + ஆளன்) என்ற வடிவில் தான் பல இடங்களில் வழங்கப்பட…

  15. திருக்குறளும் திருக்குர்ஆனும் திருக்குறளுக்கும் திருக்குர்ஆனுக்கும் அப்படியொரு பெயரொற்றுமை வரக் காரணமென்னவென்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. இது ஒரு தற்செயல் நிகழ்வா அல்லது திருக்குர்ஆனுக்குப் போட்டியாக எழுதப்பட்டதனாலா? என்ற சந்தேகம் எழுகிறது. திருக்குறள் எழுதப்பட்ட காலப்பகுதிபற்றிச் சரியான தெளிவில்லை. அக்காலம் இந்தியாவிற்குள் இஸ்லாம் நுழைவதற்கு முன்னரா அதன் பின்னரா என்பது புரியவில்லை. திருக்குறள் பழைய ஏற்பாட்டிற்கு முற்பட்டது அல்லது கிறிஸ்துவுக்கு முற்பட்டது என்றெல்லாம் கூறி நாம் தமிழருக்கெனத் திருக்குறளைப் பின்பற்றி ஆண்டுக்கணக்கொன்றை வேறு வைத்திருக்கிறோம். இது எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது? திருக்குறளிலிருந்து காமத்துப்பாலை நீக்கிவிட்டாலும் அது உ…

  16. கடிகாரம் - சரியான தமிழ் சொல் தானா? நான் அறிந்த வரை 'நேரம்காட்டி' தான் 'Watch' எனும் ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ் சொல் ஆகத் தெரிகிறது. கடிகாரம் என்றால் என்ன? எங்கிருந்து வந்தது? கடி + காரம் (காரமான உணவை கடிப்பது) என்றும் பொருள் கொள்ளலாம். யாழின், நல்லதமிழ் அறிந்தோர்கள் விளக்குவார்களா? நன்றி

  17. 1610 ல் கலிலியோ கலிலி தனது முதல் தொலைநோக்கி மூலம் அதன் வளையங்களை கண்டுபிடித்தார்.ஆனால்,முதன் முதலில் சனிக்கிரகத்தை கண்டுபிடித்தவர் கபிலர் காலம்:கி.மு 3-ம் நூற்றாண்டு! கபிலர் சங்க காலத்து தமிழ்ப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். ... இன்னா நாற்பது என்ற பதினெண் கீழ்கணக்குத் தொகுதியில் உள்ள நூலின் ஆசிரியரான ”கபிலரும்” இவரும் ஒருவரல்லர். சங்க கால புலவர் கபிலரின் காலம் கி. மு 3 ம் நூற்றாண்டின் ஆரம்ப காலமாகும்.எந்தவொரு தொழில் நுட்பமும் இல்லாத காலத்திலேயே சனிக்கிரக்தை கணடறிந்தவர்கள் நம் முன்னோர்கள். சனிக் கோளை மைம்மீன் என்று சங்கத்தார் அழைத்துள்ளனர். மைம்மீன் என்றால் கருமையான கோள் என்று பொருள். ‘‘மைம்மீன் புகையினும் ’’ ( புறம் 117) என்ற…

    • 6 replies
    • 1.4k views
  18. பல பொருள் கொண்ட ஒரு சொல்லை இங்கே இணையுங்கள். அவற்றின் விளக்கத்தையும் தாருங்கள். உதாரணமாக 1. குடை - வெயில் மழையில் சாதாரணமாக பாவிப்பது. (சிறப்பான பாவனைக்கு சைவனை கேட்கவும்) 2. குடை - மனதில் ஏதேனும் தொடர்ந்து வந்துகொண்டிருத்தல்.( இது சரியான விளக்கம் இல்லை). 3. குடை - ஒரே அணியில் ஏனைய அணிகள் இணைந்து செயற்படல் 4. குடை - பேரூந்து குடை சாய்ந்தது. 5. குடை - துருவித்துருவி கேள்வி கேட்டல் 6. குடை - அவன் அதை வைத்து குடைந்து கொண்டிருந்தான். அவன்தான் அதனை பழுதாக்கியிருக்கவேண்டும். எங்கே உங்களாலும்முடியும். நினைவுக்கு வருவதை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    • 6 replies
    • 58.9k views
  19. இணையத்தில் மனம் போன போக்கில் ஏதோ தேடிக் கொண்டிருக்கும்போது சட்டென்று பாரதிதாசனின் இந்த கவிதை தென்பட்டது. ஏற்கனவே படித்த ஒன்றுதான் என்றாலும் ஒவ்வொரு முறை படிக்கும்போதும் உடலெங்கும் ஒரு பரவசம்... இந்தப் பரவசம் உங்களையும் தழுவட்டும்... இந்தப் பாடலை வாசித்தும் பள்ளி நாட்கள் தான் நினைவுக்கு வந்தது. பெண்கள் நீலவண்ண பாவாடை அணிந்து வெண்ணிற சட்டை அணிந்து வருவார்கள். இந்த உவமை சரியா வரும்தானே "நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து,நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தை" நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து, நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக் கோல முழுதும் காட்டிவிட்டால் காதற் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? - வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்! சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்…

  20. அனிச்சத்தின் மென்மை இவள் அன்னத்தின் தன்மை இவள் செங்காந்தளை மேவிய சிவப்பு இவள் மரபுகளை மீறிய வார்ப்பு இவள் வம்புக்குள் அடங்கா வனப்பு இவள் வளிமண்டலத்தை மீறிய ஈர்ப்பு இவள் தேர்ந்தெடுத்த வார்த்தைகளை கோர்த்து ஆகா! அற்புதம்!! என்று உற்சாகம் கொள்ளும் வேளையில், தழைகளை தழுவிய தென்றலொன்று முன்னிரவுப் பொழுதில் என் காதோரமாய் தந்த இந்தப் பாடல் என் கர்வம் கொன்று நித்திரை தின்று ஆசை எனும் ஆண்ட வெளியில் ஆர்ப்பரித்து அடங்கச் செய்கிறது. இசையா! இன்பத் தமிழா! தெரியவில்லை. கேட்டவுடன் கிறங்கடிக்கும் இதன் இனிமையை என்னவென்று சொல்வது !! ஆசைகளிலும் நிராசைகளிலும் தொலைந்துவிட்ட வாழ்க்கையின் கணங்களை இந்தச் சின்னஞ் சிறிய பாடல் மீட்டு பூமிப்பந்தை என் கண்ணின் கருவிழிக்குள் சுழலச் செய்கிறது. க…

  21. தமிழர் புலமை -- யாப்பிலக்கணம் பல டுப்பாகூர்கள் புது கவிதை என்ற பெயரில் சகட்டுமேனிக்கு அள்ளி தெளித்தாலும் .. சிலவற்றை மற்றும் ரசிக்க முடிகிறது.. உண்மையில் கட்டுடைத்தல் .. பில்டிங்க் உடைத்தல் போல ... பலது கண்றாவியாக இருக்கிறது... தமிழ் இலக்கியம் 6 வகுப்பு முதல் துணைபாட நூல் ஆக கல்லூரி இளநிலை (BSC BCA BA BCOM)இரண்டாம் வகுப்பு வரை தனி பாடபகுதி வருவதால் .. பலருக்கு யாப்பிலக்கணம் பற்றி அறிய தர வேண்டியுள்ளது... அப்போதான் ஒழுங்காக பாடல்களை தருவார்கள்.... யாப்பு இலக்கண அறிமுகம் இலக்கியங்களை இயற்றும்போது இரண்டு வகையானஊடகங்களில் இயற்றுவார்கள். அவற்றில் ஒன்று செய்யுள், மற்றதுஉரைநடை. பழைய காலத்தில் தமிழ் இலக்கியங்கள் யாவும்செய்யுளிலேயே இயற்றப்பட்டன. செய்யுளில் இ…

  22. பழந்தமிழரின் வாழ்வில் அணுவில் தொடங்கி அண்டம்வரையிலும் அறிவியல் பரவிக் கிடக்கின்றது. இலக்கியம் என்பது வெறும் இரசனைக்குரிய ஒன்றாக மட்டும் இல்லாமல் அனுபவமும் அறிவியலும் கலந்த படைப்பாகவே ஆக்கப்பட்டுள்ளன. அன்றைய தமிழர் கண்ட கனவுகளே இன்றைய நிஜங்களாக உருவாகி வருகின்றன. இன்று நம் வாழ்வின் அறிவியல் வளர்ச்சியின் ஆணிவேராக பழந்தமிழர் வாழ்க்கை அமைந்தது என்றால் மிகையில்லை. இதனைப் பல தமிழ் இலக்கியங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன. இயற்கை அறிவியல் ஔவை திருக்குறளின் பெருமையை உரைக்கும்போது, அணுவைப் பிளந்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தெறித்த குறள். என்கிறார். அணு என்பது கண்களுக்குப் புலப்படாத மிகச் சிறிய மூலக்கூறு என்பது அறிவியலின் கண்டுபிடிப்பு. ஆயினும் பன்னூறு ஆண்டுகட்கு முன்பு…

  23. தாலாட்டுப் பாடத்தெரியுமா? தாயின் கருவறையில் இருக்கும்போது அவளின் இதயத்துடிப்பையே தாலாட்டாகக் கேட்டுவந்த குழந்தை மண்ணுலகிற்கு வந்தவுடன் அந்த பாட்டுக் கேட்காமல் திருதிருவென விழிக்கிறது. சில நேரம் அழுகிறது. குழந்தையைத் தாய் தூக்கியவுடன் அழுகை நின்றுபோகிறது. குழந்தையைத் தூக்கிக்கொண்டே வைத்திருக்கமுடியுமா? அதனால் தான் பழந்தமிழர் கண்டறிந்தனர் தாலாட்டு என்னும் சீராட்டை! நான் சிறுவனாக இருந்தகாலத்தில் பல வீடுகளிலும் தாலாட்டுப் பாடும் ஓசை கேட்டிருக்கிறேன்.. நான் வளர வளர தாலாட்டின் பரிணாமமும் வளர்ந்துவந்திருக்கிறது. முதலில் திரைப்படப்பாடலைத் தாலாட்டாகப் பாடினார்கள்.. அடுத்து வானொலி...தொலைக்காட்சி...சிடி..டிவிடி..அலைபேசி... என இந்தக் காலத்துக் குழந்தைகளும் 'இவர்கள் பாடும…

  24. திருஞானசம்பந்தர் தேவாரம் சமணர் பெண்களைக் வன்புணரச் சொல்லுகிறதா? பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் "பெண்ண கத்தெழில் சாக்கியப் பேய்அமண், தெண்ணர் கற்ப ழிக்கத்திரு வுள்ளமே" என திருஞான சம்பந்தர் சமணப் பெண்களை வன்புணர இறைவனிடம் வேண்டுவது ஏன்? வரலாறு நெடுக மதம் என்பது வன்முறை சார்ந்தே வளந்திருக்கும்போது அது அன்பை போதிக்கிறது என பொய்யுரைகள் புகல்வதேன்? மேற்கண்ட வினா 'Quora' தமிழ் தளத்தில் வினவப்பட்டு, பலநாட்கள் கழித்தே என் கண்ணில்பட்டது. ஐயம் வினவுவதற்குப் பதிலாக, தீர்ப்பை எழுதிவிட்டு, குற்றப்பத்திரிக்கை வாசிக்கும் தொனியில் இரு…

    • 6 replies
    • 8.6k views
  25. காமமா? இன்பமா? -------------------------- சிவஸ்ரீ வித்தியாசங்கரசிவம் ஸ்ரீ வேம்பத்தூர் மடம். திருநெல்வேலி தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் என்பன வடசொல். அவற்றின் தமிழ் முறையே அறம் பொருள் இன்பம் வீடு ஆகும். திருக்குறள் அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என மூன்று பால்களையுடையது. அறத்துப்பால் பொருட்பால் என்ற தலைப்புக்கள் தமிழ். காமத்துப்பாலில் காமம் வடசொல். திருக்குறள் முந்திய பதிப்புக்களில் எல்லாம் காமத்துப்பால் என்ற தலைப்பே இருக்கிறது. முதலிரண்டுபாலுக்கும் தமிழ்ப்பெயர்கொடுத்தவள்ளுவர் இந்தப் பாலுக்கு மாத்திரம் வடசொற் பெயர் கொடுத்தார்; அது பொருத்தமா என்பது ஆராய்ச்சி. மற்றப் பாலின் பெயரை நோக்கும்போது மூன்றாவது பாலுக்கு இன்பத்துப்பால் என அவர் பெயர் கொடுத்திருப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.