Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கக்கத்தில் இடுக்கடி, பாயைச் சுருட்டடி, அரங்கத்திற்கு ஏகடி! காளமேகப் புலவர் வீட்டுத் திண்ணையில் நண்பர்களோடு அமர்ந்திருந்தார். அப்போது வெளியூர்க்காரர் ஒருவர் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டார். புலவர் சிலேடைப் பாடல்களைப் பாடி விளக்கம் கூறியதைக் கேட்ட அவர், புலவரின் புலமையைக் கண்டு வியப்படைந்தார். ""ஐயா, தங்கள் பாடல்கள் தேனும் தினைமாவும் சேர்த்து உண்டதைப்போல சுவையாக உள்ளன. தங்களிடத்து எனது வேண்டுகோள் ஒன்றுண்டு. என்னை இடுக்கடி, பாயைச் சுருட்டடி, ஏகடி அம்பலத்தே என்னும் சொற்கள் பயின்றுவர ஒரு பாடல் தர வேண்டும்'' என்றார். அதை ஏற்றுக்கொண்ட புலவர், சில வினாடிகள் கண்களை மூடித் தலையை அசைத்தார். அடுத்த நொடியில், ""வெளியூர் நண்பரே, நீங்கள் கேட்ட பாடல் வருகிறது…

  2. கடற்கரை புக்குளி **************** தமிழுக்கும் சைவத்திற்கும் பெரும் தொண்டாற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் ஒருசமயம் நீதிமன்றத்திற்கு ஆட்சியாளர்களின் வழக்கு ஒன்றிற்கு சாட்சி கூறவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.ஆறுமுக நாவலர் தமிழ் மொழியில் மட்டுமல்ல ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்றவர்.[பைபிள் கிறீஸ்தவ மதநூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்தவரும் இவரே] வழக்கு வேறொன்றுமில்லை மரத்தாலான கப்பலொன்றை கடற்கரையில் யாரோ தீ இட்டு கொழுத்தியதை கண்ணால் கண்ட சாட்சியத்தை கூறவேண்டும் அதற்கான சந்தர்ப்பம் வந்தபோது மிகவும் தெளிவாக ஆங்கிலத்தில் கூறினார். அப்பொது இடை மறித்த வழக்கறிஞர் ஆறுமுகநாவலரை பார்த்து எங்களிடம் மொழி…

  3. கடிகாரம் - சரியான தமிழ் சொல் தானா? நான் அறிந்த வரை 'நேரம்காட்டி' தான் 'Watch' எனும் ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ் சொல் ஆகத் தெரிகிறது. கடிகாரம் என்றால் என்ன? எங்கிருந்து வந்தது? கடி + காரம் (காரமான உணவை கடிப்பது) என்றும் பொருள் கொள்ளலாம். யாழின், நல்லதமிழ் அறிந்தோர்கள் விளக்குவார்களா? நன்றி

  4. கணிதத்தின் மகுடம் கணக்கதிகாரம்.. முன்னுரை கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மையான இடம் உண்டு. பண்டைய தமிழ் இலக்கியங்கள் அக்காலப் புலவர்களின் கணித அறிவினைப் பறைசாற்றுகின்றன. கணிதம் ஒரு கலை என்பதினை ‘கணக்கதிகாரம்’ என்ற நூலால் அறியலாம். கொறுக்கையூர் காரி நாயனார் என்ற புலவரால் கணக்கதிகாரம் என்னும் கணித நூல் 15-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இவர் காவிரி பாயும் சோழ நாட்டு மன்னர் வழி வந்தவர் என்றும், இவரின் தந்தை பெயர் புத்தன் என்றும் நூலின் சிறப்புப் பாயிரம் கூறுகிறது. இந்நூலில் காணப்படும் வியப்பான கணித முறைகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். கணக்கதிகாரம் இந்நூல் காரிநாயனாரின் கற்பனைத் திறனையும், கவிதை நயத்தையும், கணிதத்தில் இவர் பெற…

    • 2 replies
    • 3.8k views
  5. கணினித் தமிழுக்கு ஒரே 'யுனிகோட்' : ஜனாதிபதி அப்துல் கலாம் செப்டம்பர் 05, 2006 சென்னை: இணையத்தில் தமிழை முன்னணி மொழியாக்க வேண்டுமானால் உலகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான யுனிகோட் தமிழ் எழுத்துரு முறையை அமல்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார். ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தொல்காப்பியர் விருதை கலாம் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களில் இன்று தமிழ் கொடி கட்டிப் பறக்கிறது. ஆனாலும் பல்வேறு வகையான எழுத்துருக்கள் இருப்பதால் ஆங்கிலத்தைப் போல தமிழ் புகழ் பெற முடியாமல் உள்ளது. இதைப் போக்க உலகம் முழுமைக்கும் ஒரேமாதிரியான தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்தும் வகையில…

    • 0 replies
    • 1.5k views
  6. பின்வரும் குறுந்தொகைப் பாடலை நம்மில் பலரும் வாசித்திருப்போம். பாடலின் பொருளை எளிமையாக்கும் நோக்கில், நான் அறிந்த தமிழில் விளக்கங்களுடன் இங்கு படைத்துள்ளேன். இணைய நண்பர்கள் அனைவரும் இப்பாடலை வாசித்துச் சுவைத்து, தங்களின் கருத்துரையை இணைக்க வேண்டுகிறேன். பாடலுக்குச் செல்லும் முன் பாடல் அமைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ஆராய்வோம். இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்தது. குறிஞ்சித் திணை என்பது ``மலையும் மலை சார்ந்த இடமும்’’, அதாவது இயற்கை எழில், வளம் கொண்ட நிலப்பரப்பாகும். அந்நிலப்பரப்பில் நிகழும் வாழ்வியல் பற்றிக் கூறுவது குறிஞ்சித் திணையாகும். பொதுவாக குறிஞ்சித் திணையாவது - தனித்திருக்கும் தலைவனும் தலைவியும் அல்லது வேட்டைக்குச் செல்லும் ஒரு இளைஞனும…

  7. கண்ணதாசனின் செப்பு மொழிகள் 1. வசந்த காலத்தில் உன்னைச் சிறையில் வைப்பான். கோடைக் காலத்தில் பாலைவனத்தில் கொண்டு போய் விடுவான். அவனை நீ கோபித்துப் பயனில்லை. கூடவே வைத்துக்கொள். நீ படும் துயரத்தை அவனும் படட்டும். 2. கொய்யாப் பழத்தைஅறுக்கும் முன்பே, அதற்குள் விதை இருப்பது உனக்கு தெரிய வேண்டும். ஒருவனோடு நன்கு பழகுவதற்கு முன்பே, அவனைப் பற்றி நீ புரிந்து கொண்டு விட வேண்டும். 3. சிங்கத்தின் நகத்தையும் பல்லையும் பிடுங்கி விட்டுப் பெதடின் ஊசியையும் போட்டுவிட்டு அதன்மீது உட்கார்ந்து துப்பாக்கியோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்குப் பெயர் தான் அரசியல். 4. ஆணவமும் அழிவும் இரட்டைக் குழந்தைகள். இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும். அவ்வளவுதான் . 5. தம்புரா மீட்டு…

  8. கண்ணதாசன் காப்பியடித்தானா? அப்துல் கையூம் அன்று நானும் என் நண்பர்களும் அரட்டை அடித்துக் கொண்டிருக்கையில் கண்ணதாசன் பற்றிய பேச்சு எழுந்தது. புதிதாக அறிமுகமான ஒரு அன்பர் எங்களை எரிச்சலூட்டும் வகையில் “Kannadasan is a Copy-cat” என்ற அவதூறை எடுத்துப் போட்டுச் சென்றார். அவருடைய ‘மேதாவித்தனம்’ எனக்கு எரிச்சலை ஊட்டியது. யாரோ புரிந்த வாதத்தை அரைகுறையாகக் கேட்டுவிட்டு இப்படி ஒரு தப்பான ஒரு முடிவுக்கு அவர் வந்திருக்கலாம். ஒன்று, இவர் கண்ணதாசனை முற்றிலும் அறியாதவராக இருக்க வேண்டும் அல்லது ‘காப்பி’ என்பதன் பொருள் என்னவென்று தெரியாதவராக இருக்க வேண்டும். சொல்ல வந்த கருத்தை தமிழில் கூட சொல்லத் தெரியாத ஒருத்தரிடம் போய் நான் என்ன தர்க்கம் செய்ய முடியும்? அந்த இடத்த…

  9. கண்ணுக்கே தெரியாத காற்றை விவரிக்க தமிழில் இத்தனை சொற்களா ? உலகில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு ! இந்த உலகம் உள்ளவரை நம் தமிழ் வாழவேண்டும் ! (அ) திசை பொருத்து காற்றின் பெயர்கள்: (௧) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று (௨) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று (௩) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று (௪) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று (ஆ) காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்: (௧) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று" (௨) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்" (௩) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல்" (௪) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று" (௫) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற…

  10. கந்தபுராணம் தெரிந்த தமிழனுக்கு கந்தப்பனை தெரியுமா? மணி ஸ்ரீகாந்தன். ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று ஆரம்பித்து ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் மாபெரும்; படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், அய்யன் திருவள்ளுவர். உலகத்தின் ஒட்டுமொத்த தத்துவத்தையும் ஒரே நூலில் முப்பாலாக பிரித்து உலக அரங்குகளில் தமிழனின் பெருமையை பறைசாற்றியவர் வள்ளுவர். “தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்…” என்று குறளின் பெருமையை அக்கால புலவரான கபிலர் வியந்து பாடியிருக்கிறார். அதிகாலை நேரம், கபிலர் பசும் புல் ஒன்றைப் பார்க்கிறார்.தரையுடன் ஒட்டிக் கிடக்கும் அந்தச் சிறிய புல்லின் …

  11. Started by Jamuna,

    ராஜ மார்த்தாண்ட சோழனுடைய காலம். சோழ சாம்ராஜ்யம், பழையவர்கள் சொல்லும் மாதிரி, ஏழ் கடலையும் தாண்டி வெற்றிப் புலிக்கொடியைப் புதிய தேசங்களில் நாட்டிப் பெருமிதமாக வளர்ந்தது. இந்து - சீனத்திலே தமிழனின் கலை, தமிழனின் வீரம், தமிழனின் கீர்த்தி எல்லாவற்றையும் நிலைநாட்டி... அதெல்லாம் பழைய கதை, மார்த்தாண்டன், தான் இருந்த தலைநகர் இப்பொழுது பெயர் தெரியாமல் இருக்கும் என்று கண்டானா? சோழனுடைய தலைநகர் உறையூர். யவன வீரர்கள் இந்து - சீனப் போரில் அவன் படையிலே தங்கள் இரத்தத்தைச் சிந்தினார்கள்; அவன் அரண்மனைத் தலைவாயிலைக் காத்திருந்தார்கள். அகழிக்கப்புறம் அண்ணாந்து பார்த்தால் தலையறுந்து விழுந்து விடும்படி பெரிய வாயில். உள்ளே சற்றுத் தள்ளி வெண்கலத்தினால் ஆன துவஜஸ்தம்பம். அதன் …

    • 4 replies
    • 1.6k views
  12. கபிலர் பாடல்களில் அகப்புற மரபுகள் முன்னுரை எல்லாவற்றிலும் புதுமையை விரும்புவது மனித இயல்பு. இருப்பினும், பழமையை சுலபமாக விட்டுவிட முடிவதில்லை. அத்தகைய பழமை பாராட்டுவதே மரபின் அடிப்படை. கலை, இலக்கியங்கள் மரபைப் பின்பற்றியதால்தான் இன்றும் நிலைத்து நிற்கின்றன. அகத்திணைப் பாடல்கள் அனைத்தும் மரபின் அடிப்படையிலேயேயாக்கப் பெற்றுள்ளன. இவ்வகத்திணைப் பாடல்கள் மிகப் பழமையனவாக இருப்பினும், இன்றும் அவை ஆளுமைத்தன்மை மிக்கதாக விளங்குவதைக் காணலாம். சங்க அகப்பாடல் உருவாக்கத்தில் திணை, துறை அமைப்புகள் வழி நின்று கபிலர் எத்தகைய மரபைப் பின்பற்றியுள்ளார் என்பதை சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அகமும் புறமும் சங்கப்பாடல்களை அகம், புறம் என்ற இரு பெரும்பிரிவுகளுள்…

  13. கம்பனும் கண்ணதாசனும் வளவ.துரையன் இந்த இரண்டு மகாகவிகளும் காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் காவியம் தரவல்லவர்கள். ஒருவர் கவிச்சக்கரவர்த்தி, மற்றொருவர் கவியரசர். தேரழுந்தூரில் தோன்றி, சடையப்ப வள்ளலால் திருவெண்ணை நல்லூரிலே ஆதரிக்கப்பட்டு ”ஒரு பூனை பாற்கடலைக் குடிப்பதுபோல மாபெரும் இராமகாதை இயற்ற வந்தேன்” என்ற கம்பனும், சிட்டுக்குருவிகள் கூட கூடுகட்டப் பயப்படும், பொட்டல்வெளியான சிறுகூடற்பட்டியிலே பிறந்து, “போற்றுபவர் போற்றட்டும், புழுதிவாரித் தூற்றுபவர் தூற்றட்டும்; ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன், எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்” என்று ஐம்பத்திரண்டு வயதுவரை வாழ்ந்து சிகாகோ நகரில் தம் வாழ்வை முடித்த முத்தையாவான கண்ணதாசனும் தமிழன்னையின் இரு கண்களைப் ப…

  14. கம்பராமாயணம்: இலக்கிய வழக்கும் உலக வழக்கும் பெருமாள் முருகன் தமிழ்க் காப்பிய இலக்கியத் தொடக்கம் சிலப்பதிகாரம். தொடர்ந்தவை மணிமேகலை, பெருங்கதை. மூன்றும் ஆசிரியப்பாவால் ஆனவை. ஆசிரியப்பா உரைநடைத் தன்மை கொண்டது. உணர்ச்சி விவரணைகளுக்கு இடமில்லாமல் கதையைச் சொல்வதற்கு ஆசிரியப்பா ஏற்றது. அதன் போதாமையை உணர்ந்த இடங்களில் விருத்தப்பாக்களை இளங்கோவடிகள் கையாண்டிருக்கிறார். விருத்தப்பாவை முழுமையாகக் கையாண்டது சீவக சிந்தாமணி. பின் தோன்றிய காப்பியங்கள் அனைத்தும் விருத்தப்பா முதலிய பாவினங்களிலேயே இயன்றன. கலிவிருத்தம், கலித்துறை, அறுசீர் ஆசிரிய விருத்தம் ஆகிய பாவினங்களே காப்பியங்களில் அதிகம் பயின்றவை. கரைக்குள் அடங்கியிருந்த ஆற்றுநீர் வெள்ளப் பெருக்கில் கரையுடைத்து எல்லையற்றுப் பரவ…

    • 1 reply
    • 11.1k views
  15. கயமூழ்கு மகளிர் கண்கள். தலைவன் தன்னைவிட பரத்தையரையே பெரிதும் விரும்புகிறான். இதைத் தோழிக்குத் தெரியக்கூடாது என்று மனதுக்குள்ளே மறைக்கிறாள் தலைவி. தலைவனோடு ஊடல்கொள்ள தலைவிக்கு இது போலப் பல காரணங்கள் இருந்தாலும், அவற்றைத் தன் மனதில் கொள்ளாமல் தோழி வாயிலாக வந்தமை ஏற்றுத் தலைவனின் தவறை மறந்தாள் மறைத்தாள். உப்பங்கழியில் நெய்தல் மலர்கள் மலர்ந்துள்ளன. அம்மலர்களின் காம்பு இலைகளுக்கு மேல் உயரமாக வளர்ந்துள்ளது. அலைபெருக்கெடுத்து வரும்போதெல்லாம், நெய்தல் மலர்கள் நீருள் மறைந்து மறைந்து தோன்றுகின்றன. இக்காட்சி, குளத்திலே குளிக்கும் போது நீருள் மூழ்கி மூழ்கி எழும் பெண்களின் கண்களைப் போலவே காட்சியளிக்கின்றன. கண்களல்லாத நெய்தல் மலரானது, மகளிர் கண்கள் போலக் காட்சி தருகிறது. க…

  16. வணக்கம் எல்லோருக்கும்.. இந்தப்பகுதியில் கலகலப்பாக தமிழின் பொருளை...., புலவர்களின் கலகலப்பை... தமிழால் விளைவிக்கப்பட்ட கிண்டல் கேலிகளை இணைக்கலாம். எனக்கு அதிகம் தெரியாது இருப்பினும் தேடலின் அவா நிறையவே உள்ளது. அத்தேடலின் அவா கைகொடுக்கும் தருணங்களில் நான் இரசித்த அல்லது இரசிக்க எத்தனிக்கும் தமிழ் மொழியின் பொருள் நிறைந்த நயங்களை பதிவிடலாம் என்று ஒரு சின்ன அடியெடுத்து வைக்கின்றேன்... இது இவளுக்கானது என்று நீங்கள் எவரும் ஒதுக்கி விடாமலும் ஒதுங்கிப் போகாமல் கூட இணைந்து தமிழை நயந்து நடக்கலாம் வாருங்கள். “கரிக்காய் பொரித்தேன் கன்னிக்காய் நெய்து வட்டலாக்கினேன் பரிக்காயைப் பச்சடியாகப் பண்ணினேன்” கொஞ்சம் இதன் பொருளைக் கற்பனை பண்ணிப்பாருங்கள்..... என்னட…

  17. தமிழரின் தலையாய சொத்து தொல்காப்பியம். மொழியியல் அறிஞர்கள் அதன் எழுத்து, சொல் இலக்கணங்களைப் பார்த்து, படித்து வியக்கின்றனர். பொருள் இலக்கணம் அவற்றினும் மேலானதாகப் போற்றப்படுகிறது. தொல்காப்பியர் தமிழரின் அக வாழ்க்கையை பொருள் இலக்கணத்தில் கூறியுள்ளார். அதில் அறிவியல் நுட்பங்கள் பலவற்றை அவர் பதிவு செய்துள்ளார். கற்பு வாழ்க்கை மேற்கொண்ட (குடும்ப வாழ்க்கை) தலைவன்-தலைவி இருவரும் குழந்தைப்பேறு பெறுதலுக்கான சூழ்நிலையை இன்றைய மருத்துவத்துறை வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிற அதே நேரத்தில், "உண்மைதான்' என்று சொல்கிற செய்தியைத் தொல்காப்பியம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பறைசாற்றியுள்ளது வியப்புக்குரியது! உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் காண்போம். ""பூப்பின் புறப்பா டீரறு நாளும் நீத்தகன் று…

  18. கருத்தும் காட்சியும். அதாகப்பட்டது இங்கு நமக்குத் தெரிந்த பழமொழிகளைக் காட்சிப்படுத்தினால் எப்படியிருக்கும் என்ற சிந்தனையால் உள்ளத்திற்குள் கருத்தும் காட்சியும் எட்டிப்பார்த்தது. இது நமக்கு மட்டும் இல்லீங்க உங்களுக்குந்தான் அதனால என்ன செய்யிறீங்க நீங்களும் உங்களுக்குத் தெரிந்த பழமொழிகளை காட்சிப்படுத்தினால் நம்ம களக்குழந்தைங்களுக்கு தெரியாத பாம்பு பல்லி என்று கனவிடயத்தை அறிமுகப்படுத்தலாம் வாங்க.இப்போது ஆரம்த்து வைக்கிறேன் வெற்றிகரமாக நகர்த்தி நடக்க இல்லையில்லை ஓடவைக்கிறது வாசிக்க, எழுத வருகிற உங்க பொறுப்பு..... 1. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. 2. விளையும் பயிரை முளையிலேயே தெரியும். 3. எறும்பூரக் கற்குழியும். 4. நுணலும் தன் வாயால் கெ…

  19. கர்நாடக இசை தமிழிசையிலிருந்து திருடப்பட்டதா? - பொ.வேல்சாமி இருபதாம் நூற்றாண்டிலிருந்துதான் தமிழகத்துக்கு வரலாறு தொடங்குகிறது. ஏன் அதற்கு முன்னர் வரலாறு இல்லையா என்ற ஐயம் எழுவது இயல்புதான்.அதற்கு முந்தைய காலங்களில் வரலாறும் புராணங்களும் செவிவழிச்செய்திகளும் ஒன்றாகக் கலக்கப்பட்டுக் கர்ண பரம்பரைக் கதைகள்தான்வழக்கிலிருந்தன. இதனால் கரிகால் சோழனுக்கு இளங்கோவடிகள் பேரனானார். 1 ஒளவையாரும் புகழேந்திப் புலவரும் நூற்றாண்டுகள் தோறும்அவதரித்தனர். திருவள்ளுவர் நக்கீரரோடு இணைக்கப்பட்டார். 2 பேராசிரியர் உரை எது, நச்சினார்க்கினியர் உரை எது, பரிமேலழகர் உரை எதுஎன்னும் வேறுபாடு தெரியாமல் எல்லோரும் ஒன்றாகப் போட்டுக் குழப்பப்பட்டனர்.…

    • 5 replies
    • 1.4k views
  20. இது ஒரு பழைய பாடல் தான்.. பல முறை கேட்டு கடந்து சென்று இருக்கிறேன். ஆனால் சில நாட்களாக அப்படி இல்லை. புத்தனுக்கு ஞானம் வந்ததுபோல், ஓர் மாலையில் காதில் விழுந்த இந்த வரிகளும் எண்ணுறக்கம் திண்கிறது. பாடல் வரிகளை கேட்பதனால் இன்பமா இல்லை அது மீட்டுத்தரும் நினைவுகள் இன்பமா தெரியவில்லை. பாடலில் ஒளிந்திருக்கும் மறைபொருள் இதுவோ!? அதுவோ ?!! என்று என் கற்பனைகளையும் அதனுடன் பொருத்திப் பார்க்கும்போது உடலெங்கும் இன்பம் தோய்கிறது. உங்கள் கற்பனைகளே.. உங்கள் உயிர்ப்பினை உறுதி செய்யும்..! கீழ் உள்ள வரிகள் உங்களுக்காக. சுட்டிக்காட்டிய வரிகளுக்கு பொருள் அறிந்தாலும் / புரிந்தாலும் பதிவிடுங்கள். அறிய ஆவல் !! மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே மரகத மணியே என் மயில் இள மய…

  21. Started by karu,

    கலித்தொகை சங்க நூல்களில் நற்றிணை, குறுந்தொகை, அகநாநூறு, புறநாநூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை ஆகியவற்றை எட்டுத்;தொகை நூல்களுள் அடக்குவர். அகவற்பா, விருத்தப்பா(ஆசிரியம்), வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பாவென்னும் ஐந்து பாவினங்களுள் கலிப்பாவென்னும் பாவகையைச் சார்ந்து பல புலவர்களால் இயற்றப்பட்ட செய்யுள்களின்; தொகுப்பாயமைந்தது கலித்தொகையாகும். கலித்தொகையும் பரிபாடலும் இசைகலந்து எடுத்துப் பாடப்படக்கூடிய இன்னிசைப் பழம்பாட்டுவகையினவென்று இசைவல்லார் கூறுவர். கலித்தொகை பண்டைய தமிழரின் அகவாழ்வைப் படம்பிடித்துக் காட்டும் அகத்திணைநூலாகும். பாலை, குறிஞ்சி, மருதம் முல்லை, நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த பண்டைத்தமிழரின் காதல் வாழ்வுபற்றிய செய்திகளை அந்நூல் க…

    • 2 replies
    • 7k views
  22. கலித்தொகையில் நகைச்சுவைக் காட்சிகள் -முனைவர். மா. தியாகராசன். முன்னுரை சங்ககால அக இலக்கிய நூல்களில் கலித்தொகை தனிச்சிறப்பு மிக்க நூலாக விளங்குகிறது. இந்நூல் சொற்சுவையால் பொருட்சுவையால் உயர்ந்து நிற்கின்றது. பண்டைத் தமிழர் கண்ட ஐந்தினைப் பாகுபாட்டின் மேன்மையும் அவர்தம் ஒழுக்கமும் விழுப்பமும் இந்நூலைக் கற்பார்க்குத் தெள்ளிதின் பிலனாகும். கலிப் பாவகையுள் சிறந்த ஒத்தாழிசையாலியன்ற நூற்றைம்பது பாக்களைக் கொண்ட இந்நூல் தேன் சிந்தும், இனிய சொற்களாலும் வானார்ந்த கற்பனைகளாலும், தெளிந்த உவமைகளாலும் சீர்சால் உருவகங்களாலும் உயந்தோங்கி நிற்கின்றது. சொல்வதைச் சுவைபடச் சொல்லும் பாங்கில் இந்நூல் வெல்லும் நூலாக விளங்குகின்றது. அதனால் தான் சுவைகளுள் மிகச் சிறந்த சுவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.