பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
Annanagar Ganesh Admk பழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்... 1. ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம். விளக்கம்: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல. ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்என்பதாகும். அதாவது, நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால், அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது. 2. அடியாத மாடு படியாது. விளக்கம்: உண்மை பொருள் என…
-
- 5 replies
- 56.9k views
-
-
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்) நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி. உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள். க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்) நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடும். இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது. உயிர் எழுத்துக்கள்: 12 மெய் எழுத்துக்கள்: 18 உயிர்மெய் எழுத்துக்கள்: 216 ஆய்த எழுத்து: 1 தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247 நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்ப…
-
- 5 replies
- 16.6k views
-
-
திருவள்ளுவர் எப்போது பிறந்தார்? இன்று திருவள்ளுவர் தினம் என்று தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவர் கிமு 31-ம் ஆண்டில் பிறந்ததாகவும் (கிறிஸ்துவுக்கு 31 ஆண்டுகளுக்கு முன்), 60 ஆண்டு சுழற்சி முறையிலான ஆண்டு முறை தமிழருக்கு ஏற்புடையதன்று என்பதால் தொடர்ச்சியான ஓர் ஆண்டு முறை வேண்டும் என்றும் பல தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி முடிவெடுத்ததாகவும் நீங்கள் கேட்டிருப்பீர்கள். தில்லைக்குமரன் எழுதியுள்ள இந்தக் கட்டுரை ( http://siragu.com/?p=1574 ) இதன் பின்னணியை விவரிக்கும். தை முதல் நாள்தான் ஆண்டின் முதல் நாளாக இருக்கவேண்டும்; ஏனெனில் அது solstice-க்கு அருகில் உள்ள நாள் என்பது அறிஞர் கூற்று. சோல்ஸ்டைஸ் என்பது கதிரவன் கடக அல்லது மகரக் கோட்டுக்கு நேர் மே…
-
- 5 replies
- 3.5k views
-
-
மிகவும் தேவையானதும் துணிச்சலுமான பேச்சு. பங்குபற்றிய சகல மாணவர்களுக்கும் பாராட்டுக்கள்.
-
-
- 5 replies
- 453 views
- 1 follower
-
-
தமிழர்களால் கைவிடப்பட்டவை... அம்மி குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல். அண்டா அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம். அடுக்குப்பானை ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர். ஆட்டுக்கல் வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும், குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம். அங்குஸ்தான் தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை. ஒட்டியாணம் பெண்கள் இடுப்பைச் சுற்ற…
-
- 5 replies
- 1.1k views
-
-
தாவரத்தின் இலைகளை... வகைப் படுத்தி, பெயர் வைத்த தமிழன். ஆல், அரசு, வேம்பு, அத்தி, மா, பலா, வாழை, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும்... ‘இலை’என்று பெயர். அகத்தி, பசலி, வல்லாரை, முறுங்கை போன்றவற்றின் இலை ‘கீரை’ ஆகின்றது. மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப் ‘பூண்டு’ என்று பெயர். அறுகு, கோரை முதலியவைகளின் இலைகள்... ‘புல்’ ஆகின்றன. மலையிலே விளைகின்ற... உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர்... ‘தழை’. நெல், வரகு முதலியவற்றின் இலைகள்... ‘தாள்’ ஆகும். சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்குப் பெயர்... ‘மடல்’. கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள்.. ´தோகை’ என்றாகின்றது. தென்…
-
- 5 replies
- 467 views
-
-
மொழி அழிந்தால் இனம் அழியும்.! தீபச்செல்வன். மாசி 21, உலக தாய் மொழி தினம். தாய்மொழி மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் ஈழத் தமிழர்களுக்கு இது மிக முக்கியமானதொரு நாளாகும். தாய் மொழி என்பது ஒவ்வொரு மனிதரதும் பிறப்புரிமை. அதனை அதனை மனிதர்கள் தம் தாய் வழி சமூகத்திடமிருந்து கற்றுக்கொள்ளுகின்றனர். மொழியற்று பிறக்கும் ஒரு குழந்தை தன் தாயிடமிருந்து மொழியை பெறுகிறது. தாய் மொழியின் ஊடாக தன்னுடைய பண்பாட்டை, வரலாற்றை, வாழ்வை கற்றுக்கொள்வது எளியது என்பதால் ஒவ்வொருவருக்கும் தாய்மொழி மிக முக்கியமாகிறது. தாய்மொழியை எவரும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த நாள் வருடம் தோறும் உலக மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஈழத்தில் தாய்மொழியை மறந்துபோனவர்கள் பலருண்டு. தம் த…
-
- 5 replies
- 1.3k views
-
-
-
கரிகால் சோழன் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் தந்தையின் பெயர் இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு. கரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான். சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன. சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான், கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர்…
-
- 5 replies
- 2.7k views
-
-
மலேசியத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் மலேசியாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிறைக் கொட்டடியில் வாடும் செய்தி மனதைப் பதைக்க வைக்கிறது. சொந்த நாட்டில் பிழைக்க வழியின்றி, வருமானமின்றி, செய்வதறியாது, இருப்பவற்றை எல்லாம் அடகு வைத்தும் விற்றும், யார் யாரையோ நம்பிப் பிழைப்புத் தேடி அன்றாடம் பலரும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். பல கனவுகளோடும், எதிர்கால நம்பிக்கையோடும் அங்கு சென்று, இன்று சரியான ஆவணங்கள் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருக்கும் எவரும், பெரிய படிப்புப் படித்து, பெரிய வேலைகளுக்குச் சென்றவர்கள் அல்லர். பெரும்பாலானோர் உடல் உழைப்பை உறிஞ்சும் வேலைகள் செய்யவே அங்கு சென்றனர். படிப்பறிவும…
-
- 5 replies
- 2.2k views
-
-
மூப்பில்லா தமிழே தாயே ஏ.ஆர்.ரகுமான் கவிஞர் தாமரையின் பாடல்
-
- 5 replies
- 988 views
- 1 follower
-
-
இராசேந்திரசோழனை நினைவுகூரல் தமிழரின் வீரத்தையும், அறத்தையும், கலையையும் உலகிற்கு பறைசாற்றிய பேரரசன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா நேற்று கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை பொதிகை தொலைக்காட்சி மட்டுமே முழுவதும் ஒளிபரப்பியது. அரசியல் கட்சி தலைவர்கள் எவரையும் காணமுடியவில்லை. நியாயமாக தமிழக முதல்வரே நேரில் வந்து இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்திருக்க வேண்டும். தமிழகம் தழுவிய விழாவாக இதை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். திராவிட அமைப்புகள், கட்சிகள் சோழர்களின் புகழ்பாட ஒருபோதும் முன்வர மாட்டார்கள் . அதேபோல் ஆரிய இந்துத்வா அமைப்புகளும் சோழர்களை சிறப்பிக்க முன்வர மாட்டார்கள். காரணம் சோழர்கள் தமிழ்த் தேசத்தின் பெருமைமிகு சின்னமாக விள…
-
- 5 replies
- 3.6k views
-
-
நான் ஏன் எழுதுகிறேன்? பரந்த வயல்வெளி. நடுவே பிள்ளையார் கோயில். அருகே குளம். அந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் எங்கள் வீடு. ஒரு நாள் காலை நேரம். என்னைத் தன் தோளில் சுமந்து சென்றவர் அப்பா. கூட வந்தவர் என் தாயாரும் என் அக்காவும். வெற்றிலை, பாக்கு, பழம், அரிசி. தாம்பாளங்கள் இவற்றுடன் அப்பாவின் உதவியாளர்கள் பின்னாலே வந்தனர். வயல் வரப்புகளில் நடந்து கோயிலுக்குப் போனோம். அங்கே முன் மண்டபத்தில் என் தந்தையாரின் தாயாரும் அவரது தம்பியும் காத்து இருந்தனர். அன்று 1944ஆம் ஆண்டின் கலைமகள் பூசை. மறவன்புலவு வள்ளக்குளப் பிள்ளையார் கோயில் முன் மண்டபத்தில் தாம்பாளத்திலே அரிசியைப் பரப்பினர், அருகிலே நிறைகுடம் வைத்தனர், குத்துவிளக்குகள் ஏற்றினர். பழம், பாக்கு, வெற்றி…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஏ.ஜே.என்றொரு மனிதன்! -மு.பொ.- * ஏ.ஜே. இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பு நூல்கள் என தொகைக் கணகில் பார்க்கையில் சிறியதாயினும் மகத்தானது... ஒரு முறை நான், யாழ்ப்பாணத்தில் ஏ.ஜே.யோடு பலதையும் பற்றிக் கதைத்தவாறு றோட்டில் நடந்துகொண்டிருந்த போது பின்வருமாறு கேட்டேன். "நீங்கள் ஏன் சிறுகதை, நாவல் போன்ற ஆக்க இலக்கியங்கள் எழுதுவதில் அக்கறைகாட்டுவதில்லை?" இதைக் கேட்டதும் அவர் ஒருதரம் என்னைப்பார்த்து லேசாக சிரித்துவிட்டு இப்படிச் சொன்னார். "I Know My Limit And limitations' ( எனக்கு எனது எல்லைகளையும் போதாமைகளையும் நன்கு தெரியும்) அவர் மிகக் குறைந்த சொற்களைப் பாவித்து, மிக நுட்பமான முறையில் அளித்த பதில் என்னை வியப்புற வைத்தது. இன்று கவிஞர்கள், சிற…
-
- 4 replies
- 1.3k views
-
-
நலவாழ்வும் உடையும்: உடலுக்கு அழகைத் தருவதுடன் நல்வாழ்வுக்கு அரணாகவும் விளங்குவது உடை. ‘உணவு, உடை, உறையுள்’ எனும் அடிப்படைத் தேவைகளுள் நடுநாயகமாக இருக்கும் ‘உடை’ உடலுக்கு அழகையும் தந்து, தட்பவெப்ப நிலைகளாலும், புற அழுக்குகளாலும் உடல் தரக்குரவு பெறாமல் பாதுகாக்கும் இரட்டைப் பயனைத் தருகின்றது. புறத் தூய்மைகள் என இன்றைய அறிவியல் மருத்துவர்கள் குறிப்பிடுவனவற்றுள் உடைத் தூய்மையும் ஒன்றாகும். ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ எனும் மூதுரை, உடைத் தூய்மையை வலியுறுத்தும். அழகுணுர்ச்சியும், நலவாழ்வு நோக்கும் இணைந்ததன் இனிய சின்னம் ‘உடை’, தசைகளின் போர்வையாக அமைந் துள்ள தோலின் பாதுகாப்பிற்கும், அதன் மூலம், உள்ளுறுப்புகளின் சிதைவைத் தடுப்பதற்கும் பேருதவி புரியும் உடையின் முதல் நோக்கம்…
-
- 4 replies
- 7.2k views
-
-
ஈழத்துக் கீழைக்கரை – ஓர் வரைவிலக்கணம் - விவேகானந்தராஜா துலாஞ்சனன் இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே இக்கட்டுரைத்தொடர். ஒரு வரலாறு என்பது எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது என்பதை சென்ற தொடரில் பார்த்த நாம், அதன் வழியே கீழைக்கரை வரலாற்றை எழுதத் தொடங்குவோம் என்று கூறியவாறு, போன இதழில் விடைபெற்றிருந்தோம். ஆனால் வரலாறுக்குள் நுழைவதற்கு முன்னர்,…
-
- 4 replies
- 1.7k views
-
-
கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல் யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சி.. கேட்டதுமே ஒரு வித குற்ற உணர்வு எம்மை உறுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. எமக்கே உரித்தான வாழ்வியலைப் பற்றி எமக்குக் கூற ஒரு கண்காட்சி.. அதை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை ஏற்பாடு செய்திருந்தது என்பது இக்கண்காட்சிக்கான அங்கீகாரத்தை வழங்கியிருந்தது. இந்தக் கண்காட்சியால் ஏற்பட்டிருக்கும் சகல சாதகமான மாற்றங்களுக்குமான பெருமைகூட வரலாற்றுத் துறையையே சாரும். எமது நிலையை எண்ணி நாம் நாண வேண்டிய தருணம் இது; இனியும் தூங்கிக் கொண்டிருக்காமல், விழித்தெழ வேண்டிய தருணம் என்று சொல்லாமல் சொல்லிய பெருமையும் இந…
-
- 4 replies
- 5.3k views
-
-
ஆப்பிரிக்கர்கள் பேசும் தமிழ் மொழி Posted By:தமிழ் ஆதவன் வெல்லும் வரை செல்வோம் Affricaஒரு காலத்தில் உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் பேசிய மொழி ”தமிழ்” தான் என்பது மீண்டும் ஒரு முறை நிருபனமாகியுள்ளது… ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள காமெரூன் பழங்குடி மக்கள் பேசிக்கொண்டு இருக்கிற மொழி தமிழ் என்பது அவர்களின் பேசுவதிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிவது இந்த ஆய்வறிக்கையில் நிருபனமாகியுள்ளது. தமிழின் தாக்கம் அவர்களின் பேச்சு வழக்கில் இன்றும் அப்படியே இருக்கிறது. மேலும் எரித்திரியா, சூடான், எத்தியோப்பியா என்பவை நாடுகளின் பெயர்கள் வெப்பத்தை குறிக்கும் தமிழ் பெயர்கள் என்பதை ஆதாரத்தோடு இந்த ஆய்வறிக்கை வெளிச்சத்திற்கு கொண்டுள்ளது.. ஆப்பிரிக்கர்களின் எழுத்துமுறையான தமசைட் (Tamazit) தமிழ…
-
- 4 replies
- 1.7k views
-
-
மீனாட்சி அம்மன் கோவில் குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது இக்கோவில், திருமலை நாயக்கர் காலத்தில் முடிவுற்றது. மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் இன்று வரை முழுமையாக கண்டறியப்பட வில்லை. முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரல…
-
- 4 replies
- 932 views
-
-
கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 1620ல் போர்த்துக்கீசரின் ஆட்சியின்கீழ் கொண்டுவரப்படும் வரை யாழ்ப்பாண அரசு நிலவிவந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் உண்டெனினும், அதன் தோற்றம் பற்றிய வாத எதிர்வாதங்கள் தொடர்ந்தும் நிலவியே வருகின்றன. எனினும் பல ஆய்வாளர்கள் யாழ்ப்பாண அரசு கி.பி. 13ஆம், 14ஆம் நூற்றாண்டை அண்டிய காலப் பகுதிகளிலேயே தொடங்கியிருக்கக் கூடும் எனக் கருதுகிறார்கள். 11ஆம் நூற்றாண்டில் இராஜேந்திர சோழனின் இலங்கைப் படையெடுப்பு, 13ஆம் நூற்றாண்டில் கலிங்க மாகனின் படையெடுப்பு என்பன யாழ்ப்பாண அரசு உருவாவதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தன. யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்தவையென சிங்கைநகர், நல்லூர் என இரண்டு பெயர்கள் கூறப்படுகின்றன. தற்போதைய யாழ்ப்பாண நகருக்கு அருகேயுள்ள நல்லூ…
-
- 4 replies
- 8.9k views
-
-
- ஆரியர்
- தமிழர்
- திருக்குறள்
- நாகசாமி
-
Tagged with:
திருக்குறள் ஆரிய சாத்திர நூற்களின் வழிநூலா? ஆய்வுத் தொடர்-1 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" -பாவேந்தர் பாரதிதாசன் இப்போது இந்தக் கேள்வியின் அவசியம் ஏன் வந்தது என்று தமிழ் கூறும் நல்லுலகம் நினைக்கலாம். திருக்குறள் ஆரிய சாத்திரங்களிலிருந்து தொகுக்கப்பட்ட ஒரு வழிநூலே என்றும், குறிப்பாக, பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று தரப்படுத்தி, பிராமணருக்கு ஏனையோர் கீழ்நிலை என்றும், குறிப்பாக, சூத்திரர் பிராமணருக்கு அடிமை ஊழியம் செய்யவே கடவுளால் படைக்கப்பட்டவர் என்று சொல்லும் நால்வருண வருணாசிரம தருமத்தைத் தூக்க…
-
- 4 replies
- 4.3k views
- 1 follower
-
2300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய தமிழ் கல்வெட்டுக்கள் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இவையே மிகவும் தொன்மை வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சைப் பல்கலைக்கழக கல்வெட்டியியல் மற்றும் தொல்லியல்துறையினரால் கடந்த மாதம் தேனி மாவட்டத்தின் ஆண்டிப்பட்டி பகுதிக்கு அண்மையாகவுள்ள புலிமான்கோம்பை என்ற ஊரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராட்சியில் இக்கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழரின் பொற்காலம் என போற்றப்படும் சங்க காலத்திற்குரிய மூன்று கல்வெட்டுக்கள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஒவ்வொன்றும் அண்ணளவாக மூன்று அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்டவையாக உள்ளன. இ…
-
- 4 replies
- 3.3k views
-
-
இலங்கையின் ஆதிகுடிகள் தமிழர்கள்தான். 1956-ல் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும், இந்த தபால் தலை அமைந்திருந்தது .தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. விஜயன் வந்தபோதே ,இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள்என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை வாபஸ் பெறவேண்டும்'' என்று கூறினார்கள்…
-
- 4 replies
- 6.4k views
-
-
'மங்கள விளக்கு ஏற்றல்' பற்றிய ஓர் பார்வை தமிழர்களாகிய நாம் எந்த ஓர் நல்ல காரியம் செய்ய தொடங்கும் போதும் மங்கள விளக்கு ஏற்றியே ஆரம்பிப்பது வழக்கம். அதன் பொருள் என்ன? ஏன் இப்படி செய்கின்றோம்? முதலில் விளக்கு என்றால் என்ன? விளக்கு என்பது: ஒன்றை தெளிவுபடுத்துதல், புரிய வைத்தல், தெரியாத ஒன்றை தெரியவைத்தல், ஒளிவீசுதல் ஆகும். விளக்குகளில் பல வகை உண்டு. அவற்றில் சில: - ஒற்றைக் கால் விளக்கு: ஓர் பெண் தன் இரு கரங்களிலும் விளக்கை ஏற்றி ஓர் காலை பின்னோக்கி நீட்டி மறு காலை முன் நோக்கி மடித்து இரு கரங்களிலும் உள்ள விளக்கை முன் நோக்கி நீட்டினால் எப்படி இருக்குமோ அந்த உருவில் அமைந்ததே ஒற்றைக் கால் விளக்கு. - தூண்டாமணி விளக்கு: இதை மணி போன்று ஒர் கயிற்றிலோ,…
-
- 4 replies
- 24.6k views
-
-
''தினகரன் வாரமஞ்சரி" ****************************** 06 - 06 - 2021 ------------------------------- ஆழ்ந்தடங்கிய தமிழ்ச் சான்றோன்.. வித்துவான் பொன். அ. கனகசபை..!! *********************************************** ஈழத்தில் எங்கெல்லாம் தமிழ் ஓசை முழங்கியதோ, அங்கெல்லாம் குறிப்பிடத்தக்க மூன்று தமிழறிஞர்களில் ஒருவரின் குரலாவது நிச்சயம் ஒலித்திருக்கும். ஐம்பதுகளின் ஆரம்பம் முதல் சுமார் அரை நூற்றாண்டு காலம் அவர்கள் குரல் யாழ் குடாநாட்டுத் தமிழ் விழா மேடைகளில் தவறாது ஒலித்தது எனலாம். அந்த மூவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். ஒருவகையில் உறவினர்கள் கூட.. புகழ்பெற்ற புலவர்களையும், அறிஞர்களையும், …
-
- 4 replies
- 858 views
-