சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
985 topics in this forum
-
-
கோவிலுக்கு வந்த ஒரு மணி நேரத்துக்கிடையில் தனது பணம், கிரடிட் காட் போன்ற பெறுமதியான பொருட்களை திருடர்களிடம் இழந்த வெளிநாட்டுப்பெண் சமூகவலைத்தளத்தில் அதைப் பதிவு செய்துள்ளார். https://www.facebook.com/reel/9991376287630968
-
-
- 3 replies
- 424 views
-
-
2009 ஆம் ஆண்டு இரண்டாம் மாத காலப்பகுதியில் நான் நோர்வே சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு உணவு தயாரிக்கும் இடத்தை துப்பரவு செய்யும் தொழிலாளியாக வேலை செய்தேன். நோர்வேயில் துப்பரவு தொழில் நிறுவனங்களை வழிநடத்திய கோபால், மோகன், செல்வா, சிவா, அண்ணா இவர்களிடம்தான் நான் நோர்வேயில் வசித்த காலத்தில் வேலை செய்தேன்.கோபால் அண்ணா புற்று நோய் வந்து மரணித்து விட்டார்.இறுதியாக சிவா அண்ணாவிடம் நோர்வே சர்வதேச விமான நிலையத்தில் கடமையாற்றினேன். பெயர் விபரங்களை தெரியப்படுத்துவதற்கு காரணம் என்னை அடையாளப்படுத்துவதற்கு எண்ணில் ஒரு பழக்கம் எந்த பதிவாக இருந்தாலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் உடன் பதிவு செய்ய வேண்டும் என்பது. மாலை 4 மணிக்குப் விமான நிலையத்திற்கு வேலைக்கு ச…
-
- 3 replies
- 1.1k views
-
-
திரு பிமல் ரத்நாயக்க என்கின்ற ஜேவிபி அமைச்சர் வடக்கு மக்களிடம் நீங்கள் உப்பில் பார்ப்பது பெயரையா அல்லது ருசியையா என கேள்வி எழுப்பியிருக்கின்றார் ஒரு பொருளின் Authenticity யும் , பெறுமதியையும் அதிகரிக்க அந்த உற்பத்திப் பொருளின் பெயருக்கு, அதனை உற்பத்தி செய்த இடத்தின் அடையாளத்தை வழங்க வேண்டும் அதேபோல், குறிப்பிட்ட உற்பத்தி பொருளுக்கு பிராந்தியத்தின் அடையாளம் (Regional identity) ஊடக Value சேர்க்கவும் பெயரிடல் அவசியமானது. இவை மட்டுமன்றி, இந்த அணுகுமுறை Branding மற்றும் Storytelling-க்கும் முக்கியத்துவமானது குறிப்பாக Himalayan Pink Salt, Maldon Sea Salt, Darjeeling Tea, Scotch Whisky, Manuka Honey உட்பட பிரபல உற்பத்திகள் பிராந்திய அடையாளங்கள் ஊடாகவே புகழ் பெற்று இருக்…
-
-
- 3 replies
- 394 views
-
-
Sivasubramaniam-jothilingam Jothilingam · #யாழ்ப்பாணத்திற்கு_ஒரு_ஆறு யாழ் குடாநாடானது மிகவும் குறைந்தளவான 30' மழைவீழ்ச்சியினை பெறுகின்ற அதே வேளை வட மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் 60' இற்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. குடாநாட்டின் வேளாண்மையை அபிவிருத்தி…
-
-
- 3 replies
- 1.2k views
-
-
ஜோசெப் பரராசசிங்கம் கொலை தொடர்பில் நேரடி சாட்சி என நம்பப்படுகிறது.
-
-
- 3 replies
- 893 views
- 1 follower
-
-
முஸ்லிம்கள் நாம் சுயபரிசீலிப்போம்! பாத்திமா மாஜிதா வெடிகுண்டுத் தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. ஆனால், அரசை மட்டுமே நாங்கள் பொறுப்புக்கூறுவது ஒருவிதத் தப்பித்தல்தான். “தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லிம்கள் அல்ல; அவர்கள் பயங்கரவாதிகள்; அவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை” என்று சப்பைக்கட்டுவதை நிறுத்துங்கள். இப்போதுகூட நம்மை நாமே சுயபரிசீலனை செய்துகொள்ளாவிட்டால் எங்கேயோ போய் முட்டி மோதிவிடுவோம். கிட்டத்தட்ட இரு தசாப்தங்கள் முன்னோக்கிப் பார்க்கிறேன். என்னையும் என்னைச் சுற்றி இருந்தவர்களும் படித்த பாடசாலை, பல்கலைக்கழகங்கள், வேலை செய்த இடங்கள் எல்லாவற்றிலும் மனிதம் இருந்தத…
-
- 3 replies
- 1.8k views
-
-
தேங்காய்க்கு Coconutனு ஆங்கிலத்தில் பேருன்னு எல்லாருக்கும் தெரியும். அது ஏன்னு தெரியுமா? o 0 o Coco என்றால் ஸ்பானிஷ், போர்த்துகீசிய மொழிகளில் தலை, மண்டை என்று பொருள். தேங்காயைப் பார்த்தால் மூன்று புள்ளிகளுடன் ஒரு முகத்தைப்போலத் தோன்றியதால், போர்த்துக்கீசிய நாட்டுப்புற இலக்கியங்களில் வரும் பேயையும் குறிக்கும் கோகோ என்ற சொல்லால் கோகோ நட் எனப் பெயர் வைத்தார்கள். அதுதான் coconut ஆனது. உலகில் இரண்டு வகை தேங்காய்கள் உள்ளன. ஒன்று இந்தியப் பெருங்கடலை ஒட்டிய நிலப்பகுதியில் உருவான தேங்காய். மற்றொன்று பசிபிக் கடலை ஒட்டிய நிலப்பகுதியைச் சேர்ந்த தேங்காய். எந்தெந்த நாடுகளில் தென்னை மரங்கள் உள்ளன என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். (தெரியாவிட்டால் கூகுளில் பார்க்கவும்.) இந்தியப் பெருங…
-
-
- 3 replies
- 381 views
-
-
நல்லூர் கந்தசுவாமி கோவில் கட்டடக்கலை வரலாறு. ❤️ 1917 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய கோயில் அதிகாரியான 4ஆம் இரகுநாத மாப்பாண முதலியார் சிந்தையில் முருகப்பெருமானுக்கான தீர்த்தக்கேணியைத் திருப்பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதன் பலனால் 1922 – 1923 ஆம் ஆண்டுப் பகுதியில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கான தீர்த்தக்கேணி சற்சதுர வடிவில் சுண்ணாம்புக் கற்களாலும் வெள்ளைக் கல்லாலும் அமைக்கப்பட்டது. குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தந்தையார் காலத்தில் அமைக்கப்பட்ட தீர்த்தக்கேணியானது, கடப்பாக் கற்களைக் கொண்டு தற்போது திருப்பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. குபேர கோபுரவாசல் கும்பாபிஷேகம் நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்பட்ட கேணித் தீர்த்தத் திருப்பணி இரண்டு வருடங்களில் நிறைவடைந்துள்…
-
-
- 3 replies
- 688 views
-
-
அன்னம்... பாலையும் ,தண்ணீரையும் பிரிக்கும் என்பது நமக்குப் பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயம். ஏதோ அன்னப்பறவை என்று ஒன்று அந்தக்காலத்தில் இருந்ததாகவும், அது தண்ணீர் கலந்த பாலை வைத்தால் தண்ணீரைப் பிரித்து அப்படியே பாலை மட்டும் உறிஞ்சி விடும் என்றும் சொல்லி இருக்கிறார்கள். நான் சில மிருகக்காட்சி சாலைகளில் அன்னப் பறவையைப் பார்த்தேன். அவற்றைப் பராமரிப்பவரிடம் இந்த அன்னத்திற்குப் பால் வைக்கிறீர்களா? என்று கேட்டபோது, அவர் கிண்டலாகச் சிரித்தார். அன்னம் நீரில் உள்ள மீன்களையும் புழு பூச்சிகளையும் தின்று வசிக்கும் ஒரு உயிரினம் என்றும், பாலைச் சாப்பிடாது என்றும் தெரிவித்தார். எனக்கு ஒரு குழப்பம். நம் முன்னோர்கள் தப்பாகவா சொல்லியிருப்பார்கள் என்ற…
-
- 3 replies
- 736 views
-
-
க.பொ.த. சாதாரணம் – சரியான முறையில் எதிர்கொள்வோம்! ======================================= இலங்கையில் மீண்டும் ஒருமுறை மாணவர்கள் பலருக்கு மகிழ்ச்சியையும் பலருக்கு கவலையையும் தரக்கூடிய சூழ்நிலை இப்போது. கல்விப் பொதுத் தராதரப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. வழமைபோல அனைத்துப் பாடங்களிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்களைப் பலரும் பாராட்டித் தள்ளவும், பாடசாலைகள் தமது சாதனைப் பட்டியலை மீண்டும் தூக்கிப் பிடிக்கவும் இன்னொரு சந்தர்ப்பம் வந்துள்ளது. அதேபோல பிரபல பாடசாலைகள் தாம் பொறுக்கியெடுத்து வைத்துக்கொண்ட மாணவர்களின் சிறந்த பெறுபேறுகளை கல்வெட்டுகளில் பொறித்துக்கொள்வார்கள். ஊரெங்கும் தண்டோரா போட்டுச் சொல்வார்கள். அதே நேரம் இந்தப் பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுக…
-
- 3 replies
- 894 views
-
-
“ போதி மரம்” காலமை எழும்பி கடனை முடிக்க கிணத்தடிக்குப் போனா ,அடுப்புச் சாம்பலையும் கரியையும் கலந்து தும்பால இயத்துக்களை மினுக்கின படி “ கொஞ்சம் தண்ணி அள்ளித்தாவான்” எண்டு அம்மம்மா கேட்டா . மனிசிக்கு விடியல் கிணத்தடீல தான். அள்ளிக்குடுத்திட்டு் நானும் ,கடனை வைக்காமல் முடிக்க வேண்டும் இல்லாட்டி துன்பம் தான் எண்ட படியாத்தான் காலைக கடன் எண்டு சொல்லிறவங்களோ ? எண்டு யோச்சபடி வாளியோட நடந்தன் ,கடனை அடைக்க. ஒவ்வொருத்தனுக்கும் கிணத்தடியும் கக்கூசும் கூட போதி மரங்கள் தான் ஏனெண்டால் இங்க தான் கன பேருக்கு தத்துவம் பிறக்கிறது. ஓட்டைக்கிணத்து வாளீல தண்ணி அள்ளி ஒழுகிற கக்கூஸ் வாளீக்குள்ள விட்டிட்டு போய் குந்தி இருந்து போட்டு ,எட்டிப்பாக்க தண்ணி இல்லை எண்டேக்க தான் எனக்கு விளங்…
-
- 3 replies
- 930 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில எப்பயுமே கடல் உணவு எண்டா மீன், இறால், கணவாய், நண்டு தான் கிடைக்கும், எங்கயாச்சும் தேடி போன, மட்டி, சங்கும் எடுக்கலாம் , இத எல்லாம் விட கொஞ்சம் வித்தியாசமா, ஒரு Exotic கடல் உணவு எண்டு பாத்தா இந்த Oyster ஆஹ சொல்ல ஏலும் ஆனா யாழ்ப்பாணத்தில எடுக்க ஏலாம இருந்த, அதுவும் இதுவரைக்கும் english படங்களையும் TV Series களிலையும் மட்டும் கேட்டு ஒருதரமாவது சாப்பிடு பாக்கணும் எண்டு பெரிய ஆசை இருந்தது. கொழும்பில இது விக்கிறாங்க எண்டு சொன்னதும் ஒருக்கா டேஸ்ட் பண்ணி பாத்த காணொளி இது. பாருங்கோ. இதுக்கு முதல் நீங்க சாப்பிட்ட அனுபவம் இருந்தா சொல்லுங்கோ
-
- 3 replies
- 1.2k views
-
-
👉 https://www.facebook.com/100065609049057/videos/612353310393761 👈 பெண்ணின்... காதுக்குள், புகுந்த பாம்பு 🐍. திக்... திக்... நிமிடங்கள். 😎
-
- 3 replies
- 1.1k views
-
-
பழைய திரைப்படங்கள் அதுவும் குறிப்பாக எம்ஜிஆரின் திரைப்படங்களைப் பார்த்தால், நாயகன் 100 வீதம் நல்லவனாக இருப்பான். வில்லன் செய்த சதியால் வீண்பழி சுமந்து அவன் சிறைக்குப் போவான். படத்தில், “ஓடி வந்து மீட்பதற்கு உண்மைக்கோ கால்கள் இல்லை ஓய்ந்திருந்து கேட்பதற்கு நீதிக்கோ நேரம் இல்லை பார்த்த நிலை சொல்வதற்கு பரமனுக்கோ உருவம் இல்லை பழி சுமந்து செல்வதன்றி இவனுக்கோ பாதை இல்லை..” போன்ற சீர்காழியார் பாடும் ‘கணீர்’ பாடல்களும் இருக்கும். பின்னர் நாயகன் சுற்றவாளி என நிரூபணமாகி, விடுதலையாகி, “தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும்” என்று கதை முடியும். யேர்மனியில், கடந்த வெள்ளிக்கிழமை(07.07.2023) ஒரு வழக்கில் கிடைத்த தீர்ப்பு எனக்கு இப்படியான பழைய திரைப்படங்களை நினைவ…
-
- 3 replies
- 573 views
-
-
PrayForNesamani | டிவிட்டரில் டிரெண்டாகும் 'காண்டிராக்டர் நேசமணி' ஹேஷ்டேக்- வீடியோ தேசிய அளவில் இன்று நேசமணிதான் ஒரே பேச்சாக உள்ளது. அந்த அளவுக்கு மறந்து போன நேசமணியைத் தூக்கிக் கொண்டு நாட்டையே அல்லோகல்லப்படுத்திக் கொண்டுள்ளனர் வடிவேலு ரசிகர்கள். ஹூ இஸ் திஸ் நேசமணி.. நேஷன் வான்ட்ஸ் டு நோ என்று அர்னாபே அலறும் அளவுக்கு டிரெண்டிங்கில் உள்ளது நேசமணி. தமிழக மக்களின் வாழ்வில் ஒரு அங்கம்தான் நேசமணி. ஒவ்வொரு தெருவிலும் ஒரு நேசமணி கேரக்டரை சந்திக்க முடியும். அந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கையில் உள்வாங்கிப் போனவர் இந்த நேசமணி. பிரண்ட்ஸ் படத்தில் வரும் வடிவேலு கேரக்டர் பெயர்தான் நேசமணி. மின்னலென வந்து மனங்களை அள்ளிச் சென்ற காமெடிக் காட்சிகள் அவை. அதை வைத்துத்தான் இப்…
-
- 3 replies
- 1.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கம் தனியான தமிழீழ கோரிக்கையில் இருக்கவில்லை என சிரேஷ்ட ஊடவியலாளர் நந்தன வீரரத்ன தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பட்டலந்த வதைமுகாம் நூல் தொடர்பில் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், தனியான ஈழம் இல்லை “1993ஆம் ஆண்டு அன்ரன் பாலசிங்கத்தை சந்தித்த போது நான் கேட்ட கேள்வி, “இப்போது உங்களின் தனியான ஈழம் கிடைக்கும் தானே? ஆதலால் பாணமையில் இருந்து மன்னார் வரை எல்லையை நிறுவினால் எவ்வாறு எல்லையில் பாதுகாப்பு வழங்குவீர்கள் மேலும் அதற்கான ஆள்பலம் போதுமா? அதன் தூரம் சுமார் 400 கிலோமீட்டராகும். இந்தியாவில் இருந்து கூலிக்கா ஆட்கள் கொண்டுவரப் …
-
-
- 3 replies
- 484 views
- 1 follower
-
-
கந்தரோடை கத்துறுகோட என சிங்கள பெயர் மாற்றம் செய்யப்படுவதற்கு GOOGLE உடந்தை. இவ்வாறே மாதகல் ஜம்புகோளபாடுன என்றும் இன்னும் பல தமிழர் பிரதேசங்களில் எமக்கு தெரியாமலே பெயர் மாற்றம் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இதை எவ்வாறு தடுத்து நிறுத்தலாம் ?
-
- 3 replies
- 1.3k views
-
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலை புளூம்பர்க் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், உலக பணக்காரர்கள் பட்டியலில் 2008 ஆம் ஆண்டு முதல் உலகின் முதலாவது பணக்காரராக சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருந்த மைக்ரோசொப்ட்டின் தலைவர் பில் கேட்ஸ் தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டுக்கு, பிறகு, அலிபாபா, அமேசன் போன்ற பல புதிய நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு, மைக்ரோசொப்டை பின்னுக்குத் தள்ளத் தொடங்கியன. அப்படி தொடங்கப்பட்ட அமேசன் நிறுவனத்தின் தலைவர் இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். பில் கேட்ஸ் கடந்த சில ஆண்டுகளாக உலகின் முதலாவது பணக்காரர் என்கிற தன் சிம்மாசனத்தை, அமேசன் நிறுவனத்தி…
-
- 3 replies
- 1.3k views
-
-
· தேச தமிழ் செய்திகள் Nation Tamil News Ot…
-
- 3 replies
- 1.6k views
-
-
சாண் ஏற பப்பா சறுக்கும் நேற்றைக்கு விட்டதை எப்பிடியாவது இண்டைக்குப் பிடிக்கோணும் எண்ட எண்ணம் இரவு நித்திரையைக் குழப்பிச்சுது. நித்திரையால காலமை எழும்பி வீட்டில ஒருத்தரும் பாக்காத நேரம் அலுமாரிப் பெட்டீக்க பயந்து பயந்து வைச்ச கைக்கு அம்பிட்டதோட போனன் , “ எப்பிடியும் விட்டதை இண்டைக்கு பிடிக்கிறதெண்டு “ . காலமை முழுக்க கவனம் சிதறினபடி இருக்க மத்தியானம் சாப்பாட்டு மணி அடிச்ச உடனயே ஓடிப்போய் ரகசியமா விக்கிறவனைக் கண்டு பிடிச்சு கையில இருக்கிற காசை குடுத்தா மூண்டு தந்தான். புளியமரத்தடீல போய் நிண்ட ஆக்களோட சேர மூண்டு இருந்தால் சேக்கேலாது , குறைஞ்சது நாலாவது வேணும் எண்டு சொல்லி திருப்பி அனுப்பினாங்கள். என்னை மாதிரி மூண்டோட நிண்ட ஒருத்தனைக் கண்டு பிடிச்சுக் “…
-
- 3 replies
- 780 views
- 1 follower
-
-
'தமிழ் இந்து‘ வில் ‘இலங்கைத் தேர்தல்கள் உணர்த்தும் செய்தி என்ன?‘ என்ற கட்டுரையைப் படித்தேன். அதில் உண்மைக்கு மாறான தகவல்கள் உண்டு. குறிப்பாக – 1. வடக்குக் கிழக்கைச் சேர்ந்த எவரும் அமைச்சுப் பதவிகளில் இல்லை என்பது. அருண் ஹேமச்சந்திர கிழக்கு மாகாணம்– திருகோணமலையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதிநிதியாவார். 2. தனிச் சிங்கள அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது என்பது. இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள், இரண்டு துணை அமைச்சர்கள் என நான்கு அமைச்சர்கள் தமிழர்கள் உண்டு. 3. 1971 ல் அதிபர் பதவியைக் கைப்பற்றுவதற்காக ஜே.வி.பி போராடியது என்பது. அது ஜே.வி.வியின் முதலாவது கிளர்ச்சி. அதில் அவர்க…
-
- 3 replies
- 701 views
-
-
நல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறம் முருகனுக்கு வந்தமைந்த வரலாறு. 🙏 இலங்கையின் மிக உயரமான அசையும் கட்டுமானம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சப்பறம். ஆங்கிலேயரின் குறிப்பேடுகளில் தகவல் லண்டன் அருங்காட்சியகத்தில் ஆவணங்கள். நல்லூரானின் சப்பறம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே கட்டப்பட்டு வருகின்றது. அக்காலத்தில் இலங்கையின் உயரமான அசையும் கட்டுமானம் என்று ஆங்கிலேயர்களின் குறிப்பேடுகளில் எழுதப்பட்டுள்ளது. அக் குறிப்பேடுகள் இப்போதும் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளன. ஒருமுறை வண்ணை வைத்தீஸ்வரன் கோயில் தர்மகத்தா வைத்திலிங்க செட்டியாரும் அவரது மனைவியும் நல்லூர் கந்தசுவாமி ஆலய சப்பறத் திருவிழாவிற்கு வருகை தந்திருந்தனர். அப்போது வைத்திலிங்கச் செட்டியாரின் மனைவி செட்டியாரிடம் ஒரு குறுணி வே…
-
- 3 replies
- 354 views
-
-
எமக்கென ஒரு நாடு இருந்தது .. ..! அங்கு தமிழ் மட்டும்தான் வாழ்ந்தது.. .! மதம் என்பதை யாருமே கொண்டாடியதோ .. வெறுத்தத்தோ .. போற்றியதோ இல்லை .. ..! அவரவருக்கு வேண்டிய சமயச் சொற்பொலிவுகள் அந்தந்த இடங்களில் நடந்தது .. பிரிவினைவாதம் மதவாதம் இங்கு இருக்கவில்லை .. ..! பிராமணர்களும் இருந்தார்கள் .. அவர்கள் தங்கள் வேலையைப் பார்த்தார்கள் .. ! மொத்தத்தில் எல்லோருமே தமிழர்களாக மட்டுமே வாழ்ந்தார்கள் .. ..! அந்த நாட்டையும் ஒரு பெருமை மிகு தமிழ் மன்னன் ஆண்டான் .. .! சேர ,சோழ, பாண்டிய ஆட்சி எல்லாளன் தொடக்கம் பண்டாவன்னியன்வரை அத்தனை வீரத்தையும் ஒருவனாய் சுமந்து நின்றார் ....! சுபாஸ் சந்திரபோஸ் தொடக்கம்…
-
- 3 replies
- 1.1k views
-
-
உயர் கல்விக்கான வாய்ப்பை மேம்படுத்துதல் - பகுதி 1 ================================ மாறிவரும் கல்விச் சூழலும் வளப் பாவனையும் ---------------------------------------------------------- நடப்பு காலங்களில் தமிழர்களின், குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கின் கல்வி வீழ்ச்சி குறித்த அதிக விவாதிப்புக்கள் உள்ளூர் , மற்றும் புலம் பெயர் சமூகத்தின் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறி நிற்கின்றது. கல்வியை ஒரு மூலாதாரமாகப் பற்றிக் கொண்டிருக்கும் ஒரு சமூகமாக பல தலைமுறைகளாக இலங்கைத் தீவில் தமிழ்ச் சமூகம் இயங்கி வந்திருக்கிறது. அதாவது கல்வித் தகமை என்பது அரச தொழில் ஒன்றைப் பெறுவதற்கான உத்தரவாதமாகவே பார்க்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த சில வருடப் பெறுபேறுகளால், தமிழர்கள்…
-
- 3 replies
- 1.6k views
-