Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. அரசியல் ஆதிகாலம் தொட்டு எம்மை ஆட்டுவிக்கும் அரசியல் வேதனைக்குள் மக்கள்தன்னை விட்டுவிட்ட அரசியல். சாதியென்ற சகதியுள்ளே தாழ்ந்து விட்ட பேயரை மோதவிட்டி லாபம்காண முயலுகின்ற அரசியல் கட்சியென்ற பேரில்சேரும் கள்வர்தம்மை ஆட்சியில் எச்சரிக்கை ஏதுமின்றி ஏற்றிவைக்கும் மக்களை உச்சநிலை வறுமைக்கேற்றி ஒன்றுமற்ற கையராய் பிச்சையேற்க வைத்திடும் ப…

    • 0 replies
    • 740 views
  2. அரசியல் ஆட்சி பிழைத்திடும்வேளையில் அறம் கூற்றாகும் என்றார் ---ஆன்றோர் அறம் கூற்றாகும் என்றார். கூற்றனும் வரவில்லை, கொள்தலும் நிகழலை,அரசியல் பிழைக்கலியோ ? இல்லை, அறனும் கொலையானானோ ? பள்ளிக்குச் செல்லும்பாலகர்,முதியவர் பால் குடி மழலை எல்லாம்,அன்று பால்குடி மழலை எல்லாம் முள்ளிவாய்க்காலில் கொள்ளி வைத்தழித்தானே முழுப்பெரும் சேனையுடன்,பாவி முழுப்பெரும் சேனையுடன். அண்ணனும் தம்பியும் ஆனஅவர் சேனையும் ஆட்சியில் கோலோச்சிறார் இன்றும் ஆட்சியில் கோலோச்சிறார் அனைத்தையும் இழந்திட்ட அப்பாவி மனிதர்கள்அழுதுதான்வடிக்கின்றாரே உறவை நினைத்திங்கு மாய்கின்றாரே அநீதிக்கு ஆட்சியும் நீதிக்குப் பாடையும் ஆண்டவா நீதி எங்கே உந்தன் அருள் ஆட்சி செத்ததிங்கே …

    • 2 replies
    • 1.2k views
  3. அன்று.. புட்டுக்கும் தேங்காய் பூவுக்கும் கொழுவல்.. பரிகாரம் சொந்த மொழி பேசிய சொந்தவனை எதிரி என்று வரிந்து பொது எதிரியை நண்பனாக்கி காட்டிக் கொடுத்தோம் வெட்டிக் கொன்றோம் துரத்தி அடித்ததோம் கள்ளமாய் காணி பிடித்தோம்.. கிழக்கின் பூர்வகுடிகளை அகதியாக்கினோம் வடக்கில் பள்ளிவாசல்களில் ஆயுதங்கள் குவித்து ஆயத்தமானோம். அதற்குள்.. வரிகளுக்கு விளங்கிவிட கூட்டோடு காலி பண்ணி விட்டது அசைவது அசையாதது இழந்து புத்தளத்தை அடைந்தோம். அல்லாவின் நவீன தூதன் அஷ்ரப்பின் உதவியுடன் அடிப்படைவாத வெறிக்குள் மூழ்கினோம்.. ஹிஸ்புல்லாவின் வழியில் ஊர்காவல் படை அமைத்தோம்... ம…

    • 7 replies
    • 2.6k views
  4. Started by தமிழ்நிலா,

    அழகெனப்படுவது யாது...? அழகெனப்படுவது நல் அகத்தினின் முகிழ்ப்பு! அழகெனப்படுவது நல் எண்ணத்தினின் முனைப்பு! அழகெனப்படுவது நற்கல்வியின் செழிப்பு! அழகெனப்படுவது உள்ளுயிரின் இயக்கம்! அழகெனப்படுவது குணநலத்தின் முயக்கம்! அகத்தினில் அழகெழுந்தால் நல் அறம் பெருகும்... அகத் திறம் பெருகும்... அதன் உரம் பெருகும்... தீமைக் கெதிர் நிற்கும்... மறம் பெருகும்... மருள் விலகிப் போகும்! புறம் பெயரும் பொய்மையெலாம்! புதுமை பெறும் வாழ்வு! பாடிக் களைத்தோம் புற அழகின் பொய்மையினை! தேடிக் களைத்தோம் உண்மை அழகின் மெய்யுணர்வை! நாடிக் களைத்தோம் உரவோரின் மெய்யழகை! பாடியும் தேடியும் நாடியும் சலித்தோம் இத் தரணியிலே... தூய்மை அழகுடையோர் எவரும் காண்கிலமே! …

  5. ஆகாயத்தில் இருந்த நிலவு ஆடிப்பாட வந்ததாம் ஆடிப்பாடி முடித்தப் பின்னே அசந்து போனதாம் வீதியெல்லாம் புகைக்காற்று திணறி மேலே சென்றதாம் மேகமெல்லாம் அனல்காற்று தொப்பென்று கீழே விழுந்ததாம் மயக்கம் தெளிய நட்சத்திரம் தண்ணீர் கொண்டு வந்ததாம் மதி கொஞ்சம் மதி தெளிந்து விண்ணிற்கு சென்றதாம் புகை நமக்கு பகையென்று மறக்கின்றோம் தானே புகையிலையாலே தினந்தோறும் இறக்கின்றறோம் வீணே நற்பழக்கம் வேண்டும் உடல்நலம் பேணவே நம்பிக்கை பரிசளிக்கும் மகிழ்வுடன் வாழவே சரவிபி ரோசிசந்திரா

  6. எமது உடலின் சதைகளை மட்டும் உண்டு விட்டு எங்களின் எலும்புகளை எறிந்து விட்டு மதம் என்ற போர்வைக்குள் போய் ஒளிந்து கொள்கின்றன ஆண் ஆதிக்கம் என்னும் மனித மிருகங்கள் அன்பே சிவம் என்று அறியாதவர் ஆயிரம் முறை ஆண்டவனை தொழுது என்ன பயன் .

    • 1 reply
    • 998 views
  7. Started by தமிழ்நிலா,

    ஆண்கள் பொறுப்பு எனும் சிற்பத்தின் வரிவடிவங்கள்..... வீரம் எனும் சொல்லின் சிறப்பு வடிவங்கள்.... அன்பிற்கும் ஆசைக்கும் கடிவாளமிட்டு நாளும் இயந்திரமாக உழைக்கும் உறுதியின் உறைவிடங்கள்.... என்றும் தன் குடும்பத்துக்காக சுமையைச் சுமைதாங்கியாய் தாங்கும் தனி வடிவங்கள்... தன் குடும்பத்துக்காக தன்னை மெழுகுதிரியாக உருக்கி வாழ்க்கை எனும் விளக்கிற்கு ஒளியைக் கொடுக்கும் உன்னத மகான்கள்.... வாழ்க்கை எனும் அழகிய மலரை என்றும் வாடி விடாமல் காக்கும் பூந்தோட்ட காவல்காரர்கள்.... மொத்தத்தில் ஆண்கள் எல்லோரும் பரிசுத்த தேவதைகள் என்றும் போற்றி மதிக்கப்பட வேண்டியவர்கள்!!!! -தமிழ்நிலா.

  8. ஆண்டவன் எந்த மதம்-பா.உதயன் ஆண்டவன் எந்த மதம் அறிந்தவர் சொல்லுங்கள் ஆளுக்கு ஒரு மதமாய் ஆண்டவன் படைத்தானா ஆளுக்கு ஒரு சாதி அந்த ஆண்டவன் படைத்தானா அவன் பெரிது இவன் சிறிது அட ஆண்டவன் சொன்னானா உன் மதமா என் மதமா பெரியதடா உலகில் மனிதன் சண்டையடா அட மனிதனின் மனங்கள் மாறல்லையே மனிதம் இங்கு வாழல்லையே நிறங்களில் பெயரில் நிறவாதம் இனங்களின் பெயரில் இனவாதம் மனிதனை மனிதன் கொலை நாளும் அட ஆண்டவன் எந்த நிறம் அறிந்தவர் கண்டவர் சொல்லுங்கள் வெய்யிலும் மழையும் இங்கே வேற்றுமை பார்ப்பதில்லை பெய்யெனப் பெய்யும் மழை நல்லார் உலகிருந்தால் எத்தனை மதங்கள் இருந்தாலும் அவை எழுதிய தத்துவம் ஒன்றெல்லோ எத்தனை கடவுள்கள் இரு…

  9. தையில் பிறப்பாய் மாசியில் குளிர்வாய் பங்குனியில் உலர்வாய் சித்திரையில் புலர்வாய் வைகாசியில் மிளிர்வாய் ஆனியில் அடிப்பாய் ஆடியில் கூழல்வாய் ஆவணியில் மங்குவாய் புரட்டாதியில் நனைவாய் ஐப்பசியில் பொழிவாய் கார்த்திகையில் சுடர்வாய் மார்கழியில் வீழ்வாய்..! ஆண்டே இது தான் ஆண்டவர் வரலாறு.

  10. ஆதியும் அந்தமும் கவிதை [துன்பம் / பிரிவில்லையே] "துன்பம் ஒன்றும் புதிது எனக்கல்ல இன்பம் என்றும் நிலைத்ததும் அல்ல! விண்ணில் பறந்தது நிலத்துக்கு விழும் மண்ணில் முளைத்தது மேகம் நோக்கும்!" "காதல் கொண்டேன் அவளை நம்பி மோதல் தந்து பிரிந்து போனாள் சாதல் தேடி குதித்தும் பார்த்தேன் நோதல் தந்தும் உயிர் பிரிவில்லையே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  11. மனதுக்கும்…..உதடுகளுக்கும் , தொடுசல் அறுந்து நாளாகி விட்டது! வேடம் போடுவதில், நாடக நடிகர்களையும்…., மிஞ்சியாகி விட்டது! மாடு மாதிரி உழைச்ச, களைப்புப் போக, உல்லாசப் பயணம் போனால்…, அந்தக் கடற்கரை….., ஊர்க் கடற்கரையிடம்…, பிச்சை வாங்க வேண்டும்…, போலத் தெரிகின்றது! வசதியில்லாததுகள், வறுமையில் வாழ்பவர்கள்…, விற்கின்ற பொருட்களை…, அறாத விலை பேசி வாங்குவதில்…, ஒரு திருப்தி…! உறுத்துகின்ற மனதுக்கு.., நாங்களும் வாங்கா விட்டால்…, அதுகள் பட்டினி தான்…, என்று ஒரு சமாதானம்! வங்கியட்டைகளின் கனதி…., வீட்டுக்கடனின் பரிமாணம், கட்ட வேண்டிய சிட்டைகளின…

    • 11 replies
    • 2.1k views
  12. ஆபாசமென தமிழ்நாட்டு சஞ்சிகைகள் சில எனது “பாவைக் கூத்து” கவிதையை பிரசுரிக்க முடியாது என்றார்கள். தயவு செய்து இக்கவிதையை வாசித்து உங்கள் கருத்தை எழுதுங்கள்.பத்திரிகையாளர்கள் துணிச்சலுடன் பிரசுரிக்க விரும்பினால் பிரசுரியுங்கள். , பாவைக் கூத்து - வ.ஐ.ச.ஜெயபாலன் * அம்ம வாழிய தோழி, யார் அவன் என்று வினாக்குறியானாய் அறிந்திலையோடி? * வீட்டுக் காவல் மறந்து சந்து பொந்து மரங்களில் எல்லாம் காலைத் தூக்கி நின்றாடி பெட்டை நாய்களுக்கு மூத்திரக் குறுஞ்சேதி எழுதி அலையுமே அந்த சீமை நாயின் பேர் இல்லத்து வம்பனடி அவன். போயும் போயும் அவனையா கேட்டாய்? * பொம்மலாட்டப் பாவையைபோல் ஒருவர் சொல்லுக்கு ஒருவர் ஆடிய இனிய நம் நாட்கள் போய்விடும் தோழி. உன் மழலை அ…

    • 2 replies
    • 1.6k views
  13. Friday, December 6, 2013 ஆபிரிக்காவின் விடிவெள்ளியே மண்டேலா ! நிறவெறிக்கெதிராய் நெருப்பெடுத்த கறுப்புச் சுடர். காலம் ஆபிரிக்க இருளகல கைபிடித்தேற்றிய பேரொளி. இருள் கொன்று ஆபிரிக்கர் ஒளிகொண்டெழ உதித்த மூத்தவன் மண்டேலா. …

    • 4 replies
    • 891 views
  14. ஆயிரங்களில் ஒன்று ------------------------------ எப்படி மறைந்தார்கள் என்று தெரியாத ஆயிரம் ஆயிரம் மனிதர்களில் ஒரு குடும்பத்தின் கதை இது ஊரில் அழகான பெண்களில் அவர் ஒருவர் தெரிந்தவர் தான் பலர் கவனம் கொண்டிருந்தார்கள் அந்த நாட்களில் அடிக்கடி ஊரையே துலாவித் தேடும் இலங்கை இராணுவமும் காவல்துறையும் அடிக்கடி ஊரில் கொன்றும் குவித்தது ஒரு முறை அகப்பட்டவர்களை ஒரு கான்கிரீட் கட்டடத்துக்குள் அடைத்து அதற்கு குண்டு வைத்து அப்படியே கொன்றது இன்னொரு முறை எங்கள் கடற்கரையில் முழங்காலில் வரிசையில் இருக்கச் சொல்லி சுட்டுக் கொன்றது நாட்டில் எங்கு தாக்குதல் நடந்தாலும் எங்கள் ஊரையே திருப்பி அடித்தார்கள் எங்கு கண்டாலும் எங்களை இறக்கி அடையாள அட்டை பார்த்து அடித்தார்கள் ஊரே உயிர் காக்க சித…

  15. ஆளுக்கு ஒரு முகமூடிகள் நாளுக்கு ஒரு நாடகங்கள்-பா.உதயன் வெள்ளாடை வேட்டி கட்டி வேதங்கள் பல சொல்லி எல்லோர்க்கும் உதவுவதாய் எல்லாமே தெரிந்தவராய் நல்லாக நடிப்பாரடா சிலர் நல்ல பெயர் வேண்ட அலைவாரடா இவர்கள் பொல்லாத மனிதரடா புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா நட்பு என்றும் உறவு என்றும் நல்ல பல கதைகள் பேசி கோவில் என்றும் பள்ளி என்றும் கொக்கரித்து திரிவாரடா பின்பு கட்டியதை உடைப்பாரட கண்டபடி கதைப்பாரடா கன வித்தைகளும் செய்வாரடா புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா ஒற்றுமையை தொலைத்து விட்டு ஆளுக்கு ஆள் கல் எறிந்து பகைப்பாரடா கள்ளம் பல செய்வாரடா கண்ணை மூடிப் பால் குடிக்கும் கள்ளப் பூனை போல் தானடா பின்பு வல்லவர் தான் என்பாரடா வெறும் வாய்ப் புளுகில் வ…

  16. விதியின் சிக்கலான கோடுகளுக்கிடையே இணைந்த சுதந்திரத்துடன், மென்மையாக்கப்பட்ட சொற்கள் இன்னும் உச்சரிக்கப்படுகின்றன. முந்தைய வாழ்க்கை மற்றும் சந்தோசமான நாட்கள் இன்னும் அழைக்கின்றன. மாத்திரைக் குடுவைகள் மட்டுமே நிவாரணமளிக்குமாதலால், மரியாதைக்குரிய தலைகள் குனிந்து, முதுகுத் தண்டுகள் வளையத் தொடங்கின. ஒருபோதும் திருப்பிச் செலுத்தப்படாத சபிக்கப்பட்ட வாழ்வு கிடைத்தபின், எம் பரிபூரண ஆத்மாவின் சபதங்களின் குரல் அடங்கிப் போனது. ஆழ்மனதில் நேசித்த பூமி நினைவுகளுடன் கலந்தது. ஒரு சிறகு காற்றில் மிதந்து வருவதைப் போல, …

    • 0 replies
    • 546 views
  17. புலனங்களில் கடலை போடும் உரையாடல் படிப்புக்கான தகவல் தேட மறந்திடல் பிறர் நசை நிலையை தகுதி பக்கத்தில் 30 நிமிடம் குறும்படமாக காணாமல் தவிர்த்தால் சிலர் உறவுகள் முறிந்திடல் விடலை பருவத்தில் விளையும் உணர்வுகள் வன்மமும் திகைக்கும் மோதல்கள் காமமும் பகைக்கும் பலருடன் பாலியல் உறவுகள் கிளை இல்லாத மரங்களா வலைதளத்தில் வரதா தகத விளம்பரங்களா நற்பண்புகள் வளர்வது நாம் கொண்ட எண்ணங்களாளா தீமைகள் விளைவது உள்ளுணர்வை கட்டமைக்காததளா பாலையின் கானலில் நீரில்லை பாலும் கல்லும் ஒன்றில்லை இலையின் நிறம் பச்சை என்றுமே நீரின் மீது அதற்கில்லை இச்சை அதே போல் என் மனசாட்சியை மதிப்பிடல் செய்திடுங்கள் பரிச்சயம் இல்லாமல் பா…

  18. இறுதியில் கிடைத்த உனதன்பு இளைப்பாறிக் கொண்டு இருக்கிறது இதயத்தில்.... சரவிபி ரோசிசந்திரா

  19. நேற்று மழை பெய்தது நான் பெய்யச் சொல்லும் போது வந்த மழை அல்ல அது யாருக்காகவோ எவருக்காகவோ பெய்த மழை அது நான் துயர் ஊறிய கண்களும் வெப்பம் மிகுந்த மூச்சும் வெறுப்பேறிய பொழுதும் கொண்ட நேரத்தில் மழையை பெய்யக் கேட்டிருந்தேன் அது பெய்யவில்லை பொய்மையின் வீச்சில் மனம் பொசுங்கிய போது வெறுமையின் அடர் இருள் மனம் சூழ்ந்த போது எல்லாவற்றிலும் வெப்பம் படர்ந்த போது இந்த மழையை வா எனக் கேட்டேன் வரவில்லை நேற்று எவருக்காகவோ பெய்தது எவர் நிலத்தையோ நனைத்தது வீதி ஒன்றில் எவருமற்ற பூங்காவில் தனித்திருந்த ஒரு நிழற் குடையை சரித்துச் சென்றது யாருமற்ற இரவொன்றை நனைத்துச் சென்றது. பறவையின் கூடு புகுந்து சிறகுகளை…

    • 9 replies
    • 1.2k views
  20. நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு புதிய முயற்சியுடன்

    • 14 replies
    • 2k views
  21. இது குளிர் காலம்..! ***************** பார்க்கின்ற மரமெல்லாம் பட்டதுபோல் தெரிந்தாலும் உள்ளுக்குள் உயிர் இருந்து உறக்கமின்றி முளித்திருக்கும். அடுத்த சமர் வரவையெண்னி அரும்புவிட காத்திருக்கும் இழந்த இலையனைத்தும் இருமடங்காய் வளருமென்ற உறுதியுடன் நம்பித்தான் உள்ளுக்குள் உயிர் இருக்கும். இதைப்போலே… சோகங்கள் துக்கங்கள் சுற்றியெமைத் தாக்கினாலும் மனவுறிதி எமக்கிருந்தால் மரம்போலே துளிர் விடலாம் குளிரென்ன கோடையென்ன கொரோனாவே விலகியோடும். -பசுவூர்க்கோபி-

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.