Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. ஒரு கிராமத்தில் முதலாளி ஒருவர் இருந்தார் . அவருக்கு கீழே சில வேலையாட்களும் வேலை செய்தார்கள். அந்த முதலாளி சரியான கஞ்சன் . ஒரு நாள் அவன் தன் நிறுவனத்துக்கு செல்லும் போது, தெருவோரத்தில் ஒரு இளைஞ்சன் செருப்பு தைத்து கொண்டிருப்பதைக் கண்டான். அவரிடம் அவருக்கு விருப்பமான, வார் அறுந்த செருப்பு காரில் இருந்தது . இளைனனுக்கு அருகில் சென்று ஏய் இங்கே வா ...இதை தைத்து கொடு ..எவ்வளவு ஆகும் என்றார். அவனும் ஐயா 50 ரூபாய் ஆகும் என்றான். தன் சடடைப்பையில் கை வைத்து ஒரு நூறு ரூபாத் தாளை எடுத்து , காட்டி என்னிடம் சில்லறை இல்லை .மீண்டும் வரும் போது தருகிறேன் என்றார் . பையன் சற்று தயங்கி ஐயா ...ஒரு பத்து ரூபா தருவீர்களா? என்றான். அட நீயும் அட்வான்ஸ் வேறு கேட்கிறா…

  2. Started by theeya,

    நேற்றைய இரவுச் செய்தியில் சொன்னது போலவே இன்று அதிகாலையில் இருந்து பனிப்பொழிவு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. வழமைக்கு மாறாக எனது கார் மிகவும் மெதுவாக ஊர்ந்தபடி போய்க்கொண்டிருந்தது. காரின் வெப்பமானியில் அப்போதைய வெப்பநிலை -37F எனக் காட்டியது. அமெரிக்காவுக்கு வந்த இந்தப் பத்து வருடத்தில் இருந்து இந்தப் பாதையால்தான் வழமையாக நான் வேலைக்குப் போய் வருவது வழக்கம். தினசரி போய்வரும் பாதை என்பதால் கண்ணை மூடிக்கொண்டு காரை ஓட்டினாலும் வலம் - இடம், சந்திச் சிக்னல், மேடு - பள்ளம் எல்லாம் தாண்டிப் பதினேழு நிமிடங்களில் வேலையில் இருப்பேன். இருந்தாலும் இன்றைய பனிப் பொழிவு இன்னும் கொஞ்சம் கூடிய எச்சரிக்கை தேவை என்பதை என் மண்டைக்குள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தது. அந்த…

    • 15 replies
    • 3.9k views
  3. முந்தைய இரவின் மெல்லிய பனித் தூறலிலும் சில்லென்று வீசும் காற்றிலும் மெல்லிதாக அவனுக்கு குளிரத் தொடங்கியது. ஆனாலும் அவனது நோக்கம், எண்ணம் எல்லாம் அந்த வீடு பற்றியதாக இருந்தமையால் அவன் எதையும் பொருட்படுத்தாதவனாக நடக்கிறான். இன்னும் அந்த வீட்டில் யாரோ இருக்கிறார்கள் என்பதற்கான அடையாளமாக மெழுகுவர்த்தியோ அல்லது ஏதோ ஒன்றின் வெளிச்சத்தில் இரண்டு உருவங்கள் அங்கும் இங்குமாக அசையும் விம்பம் மட்டும் யன்னலூடாகத் தெரிந்தது. *** பனிக்காலம் முடிந்து வசந்த காலம் வந்துவிட்டது. இன்னும் அந்த வீட்டில் வசந்த காலத்துக்குரிய எந்த விதமான அறிகுறியும் தெரியவில்லை. பனிப்பொழிவு தொடங்கிய இந்த ஆறு மாத காலத்தில் ஒரு தடவை கூட அவளைக் காணவில்லை என்பதும் இதற்கான காரணங்களில் ஒன்றாகியது. அவ…

    • 5 replies
    • 2.3k views
  4. Started by pri,

    இலங்கையில் ஜேபி (justice of peace) என்று பதவி ஒன்று இருக்கிறது. சுத்த தமிழில் சமாதான நீதிவான் என்று சொல்வார்கள். கையொப்பம் போடுவது அவர்களின் வேலை. சில ஜேபிகள் காசு பார்க்காமல் கையெழுத்து போடுவார்கள். "இப்ப சரியான பிசி " பிறகு வரும்படி சொல்லி படம் காட்ட மாட்டார்கள். அவர்களை பொதுவாக நல்ல ஜேபி என்று சொல்வதுண்டு. ஜேபியாக என்ன படிக்க வேண்டும் என்பது மட்டும் இன்றைவரைக்கும் யாருக்கும் தெரியாத பரம இரகசியம். எங்கள் ஊரில் ஒரு ஜேபி இருந்தார். பகலில் பாடசாலையில் வேலை செய்வார். பின்னேரத்தில் ஜேபி வேலை பார்ப்பார். இருட்ட முன்னம் போனால் எல்லா படிவத்தையும் படித்து பார்த்து தேவையான இடத்தில் சீலை குத்தி முத்து போன்ற எழுத்தில் கையொப்பம் வைப்பார். கொஞ்சம் நேரம் செல…

    • 0 replies
    • 1.9k views
  5. நானும் கொரோனாவும் ஒரு கொண்டாட்டமும் மகளின் திருமணம் 2019 நவம்பரில் பதிவுத்திருமணம் நடைபெற்றது 2020 செப்ரெம்பரில் திருமணவிழா என்ற நிலைப்பாட்டில் இருந்தபோது மார்ச்சில் கொரோனா வந்திட்டுது என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்த போது கொரோனாவின் முதல் அலை குறைந்து வருவதால் ஆனி ஆடியில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வந்தது . திருமண விழாக்கள் செய்யலாம் ஆனால் 150 விருந்தினருடன் என்ற கட்டுப்பாட்டுத் தளர்வில் எல்லாமே சடுதியாக நடந்தேறியது இரண்டு வாரங்களில் எல்லா ஏற்பாடுகளும் செய்து மிகவும் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களுமாக 80 விருந்தாளிகளை அழைக்க இரு வீட்டாரும் முடிவு செய்து அழைப்பும் விடுத்தாயிற்று . ஆவணி நடுவிற்குப்பின்னர் நல்ல நாள் இருக்கு எ…

  6. " பார்த்திபன் " இன்று உங்கள் பிறந்தநாள். 24 வயது..., இன்னும் என் கைகளுக்குள் குழந்தையாகவே இருக்கிறாய். கருவிலிருந்து இந்த வினாடி வரையும் நீ போராட்டக்காரனாகவே இருக்கிறாய். உன் குழந்தைக் காலம் உனக்கு மகிழ்ச்சியானதாக இருக்கவில்லை. அம்மாவுக்காக அம்மாவோடு கூட வந்த குழந்தை நீ. அம்மா அழக்கூடாது என்பதற்காகவே எல்லாச் சுமைகளையும் என்னோடு சுமந்தவன். இலகுவாய் கிடைக்க வேண்டியவற்றையும் நீ போராடித்தான் பெற்றாய். நாங்கள் கடந்து வந்த தடைகள் கண்ணீர்ச் சுவடுகள் நீங்கும் காலம் 2019ம் ஆண்டாக நம்பியிருக்…

  7. Started by ரஞ்சித்,

    1992 அல்லது 1993 ஆக இருக்கும். நான் கொழும்பில் இருந்து எனது உயர்தர பரீட்சைகளுக்காகப் படித்துக்கொண்டிருந்த காலம். வெள்ளவத்தையில் பிரேம்நாத் மாஸ்ட்டரின்ர இன்டர் மொட் ஸ்டடி சென்டரில், புறாக்கூடு போன்ற அறையில் நெருக்கமாக அமர்ந்து, அவர் சொல்லித்தரும் கணக்கினை ஒரு வரி மீதமில்லாமல் கொப்பியில் பதிந்துகொண்டு, பரீட்சைக்குக் காத்திருந்த காலம். தன்னிடம் படிக்கும் அனைத்து மாணவர்களையும் செல்லப்பெயர் ( பட்டப்பெயர்தான்) கொண்டுதான் பிரேம்நாத் மாஸ்ட்டர் அழைப்பார். அவர் ஒரு வகுப்பில் எங்கள் பெயரை அழைத்து ஒரு கேள்வி கேட்டார் எண்டால், அது எமக்கு ஆத்மதிருப்தி. வகுப்பில் முன்னால் இருந்த சரக்குகளுக்கெல்லாம் எங்கள் பெயர் தெரிந்துவிடும் என்கிற சந்தோஷம், "விலாசம்", இப்படி ஏதோ ஒன்று. அந்…

  8. தெய்வமும் மனிதனாகலாம் எழுத்து: முல்லை சதா சோளகக் காற்று தொடங்கிவிட்டதால் இன்று வெப்பம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது.இயக்கச்சி சோதனைச்சாவடியில் இராணுவ பரிசோதனைகளை முடித்துக்கொண்டு கைப்பையை தோளிலே கொழுவிக்கொண்டு நடக்கத் தொடங்கினேன்.போர் நடந்த ஆனையிறவு முகாம் சூழல் பார்ப்பதற்கு பயங்கரமாகவும், பரிதாபமாகவும் இருந்தது.உடைந்த கட்டடங்களும்,எரிந்த வாகனங்களும் யுத்தத்தின் சாட்சியாய் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.இராணுவம், விடுதலைப் புலிகளென ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலியிட்ட இடம் என்று எண்ணும்போது காலுக்குக் கீழே இரத்தம் பிசுபிசுப்பது போன்ற உணர்வில் உடல் கூசத் தொடங்கிது. மக்களோடு மக்களாய் நடந்து இராணுவத்தின் கண்ணிலிருந்து மறைந…

  9. அமெரிக்காவுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகின்றன. புதுசா வீடு வாங்கின போது அவனுக்கு இருந்த ஒரே எதிர்பார்ப்பு வீட்டுக்குப் பின்னுக்கு நிறையக் காணி வேணும். அந்தக் காணி நிறைய அப்பிள் நட வேணும் என்பதுதான். அப்பிள் நடுறதெண்டால் ஒரு மரம் நடக் கூடாதாம் ரண்டு மரம் நட்டால் தான் அதுக்குள்ளே மகரந்தச் செயற்கை நடந்து கலப்படம் இல்லாத பழம் வரும் எண்டு தெரிந்த ஒருவர் சொன்னதைக் கேட்டு, மங்களகரமாய் இருக்கட்டுமேன் எண்டு ரண்டு வருசத்துக்கு முதல் வந்த கலியான நாளுக்கு ரெண்டு அப்பிள் மரங்களை வாங்கி வந்து வீட்டின் பின் பக்கம் இருந்த காணியில் நட்டபோது அவனுக்குச் சொல்ல முடியாத மகிழ்ச்சி. சின்ன வயசில இருந்து உந்த அப்பிள் பழம் எண்டால் அவனுக்கு கொள்ளை ஆசை. ஒருக்கா தொட்டுப் பார்…

    • 3 replies
    • 1.3k views
  10. மதியரசி குரு.சதாசிவம் நான் இந்தப் பாடசாலைக்கு ஆசிரியையாக மாற்றலாகி வந்து மூன்று நாட்கள்தான்,ஆகியிருந்தது..பாடசாலைக் கட்டடத்தின் கலையம்சம்மிக்க அழகும், அமைப்பும் பார்ப்பதற்குப் பிரமிப்பாயிருந்தது. சக ஆசிரியர்களும் எனது சேவை அனுபவம் கருதி நெருக்கத்திலும் ஒரு கண்ணியத்தை கடைப்பிடித்தது மகிழ்ச்சியைத் தந்தது. இங்கு“மதியரசி” என்ற பெயர் ஆசிரியர்கள் மத்தியில் சாதாரணமாகப் பேசப்படுவதும் எல்லோராலும் புரிந்துகொள்ளப்படுவதும் இவள் யாரென்று அறியவேண்டுமென்ற ஆவலை தூண்டிவிட்டது.முதலில் பாடசாலையின் எழுது வினைஞராகவோ அல்லது சிற்றூளியராகவோ இருக்கலாமென்றே நினைத்தேன்.அந்த இரு பதவி நிலைகளிலும்…

  11. Started by theeya,

    இந்தக் கொரோனா காலத்தில எல்லாரையும் போலவே வேலைக்குப் போட்டு வாறது அவளுக்கும் ஒரு பெரிய சுமையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. காரைக் கராச்சில் பார்க் பண்ணி விட்டு மாஸ்க் மற்றும் கையுறைகளை குப்பையில் போட்டு விட்டுக் கைகளுக்கு சாணரைசேர் போட்டு இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று உரசினாள். ஐசோபிரோப்பில் போட்டு கார் ஸ்ராரிங் வீலையும் தான் கை பிடித்த எல்லா இடங்களையும் வடிவாய்த் துடைத்த பிறகு கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தவள் கைகளைச் சோப்புப் போட்டுக் கழுவி விட்டு நேராகக் குளியலைறைக்குச் சென்று களைப்புத் தீரும்வரை முழுகிய பின் கிரீமை எடுத்துப் பூசியவள் தலை முடியை அள்ளி உச்சசியில் முடிந்தபடி கண்ணாடியைப் பார்த்தாள். நாற்பது வயதிலும் இளமையும் துடிப்பும் மாறாத …

    • 25 replies
    • 4.8k views
  12. இரத்தக்காட்டேரி! சோழகக் காற்று சுழற்றி அடித்ததில் பால் போன்ற மணல் தரையில், தூரிகை இன்றியே காற்றின் கைகள் தன்னிச்சையாக ஒரு விதமான சித்திரங்களை வரைந்திருந்ததைப் பார்த்த அவள் கால்கள் இயல்பாகவே அவற்றை விலத்தி நடந்தன. மேடுகளாகவும் பள்ளங்களாகவும் காற்றினால் வரையப்பட்டிருந்த அந்த அழகான வேலைப்பாடுகள் நிறைத்த சித்திரங்களை அவள் எப்போதுமே ரசிப்பது வழக்கம். பனை மரங்களும் தென்னம்பிள்ளைகளும் நாவல் மரங்களும் மலை வேம்புகளுமாக பரவிக் கிடந்த அந்த காட்டு வழியில் அவள் கண்கள், பற்றைகளுக்குள் பதுங்கியிருந்து என்னைப் பறித்துக் கொள் என்று அழைப்பு விட்ட ஈச்சை பழங்களையும் பார்க்கத் தவறவில்லை. மண்ணில் அவள் கால்கள் புதைந்து எழும்போது ஏற்பட்ட இதமான உணர்வு அவளை ஆட்கொண்ட போது …

  13. இன்றுடன் அவள் இங்கு வந்து இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டன. எட்டு மாதப் பிள்ளை அங்கு என்ன செய்கின்றதோ என்பதே எந்நாளும் இவள் கவலையாக இருக்கிறது. எத்தனை கெஞ்சியும் பிள்ளையைக் கண்ணில்க் காட்டுகிறார்களே இல்லை. அதுவும் முதல் பிள்ளை. எனக்குத் தெரியாமல் அவனுக்குப் பிள்ளையைக் காட்டுவார்களோ என்று எண்ணும்போதோ மனம் பதட்டப்படத் தொடங்கிவிட்டது தாரணிக்கு. “நீ தேவையில்லாமல் எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகாதை. இன்னும் கொஞ்ச நாள்த்தான். பொறுமையாய் இரு.” “நீ எண்டாலும் தருணை ஒருக்காய் போய்ப் பாரனடா. இரவிலை என்னால நித்திரையே கொள்ள ஏலாமல் இருக்கடா” “நான் இண்டைக்கே போய்க் கதைக்கிறன். நீ நின்மதியாய் இரு அக்கா” விடைபெற்றுச் செல்லும் தம்பியைக்கூட அவளால் முற்றிலுமாக நம்பமுடியாவிட…

  14. Started by nige,

    ஏனோ இந்த கேள்வி இப்போதெல்லாம் சுயாவிற்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்த தொடங்கி இருந்தது. அவள் எவ்வளவுதான் தன்னை கட்டுப்படுத்தி கொள்ள நினைத்தாலும் சில நேரங்களில் அது முடியாமல் போய்விடுவதும் உண்டு.அவள் தன் கட்டுப்பாட்டை இழக்கும் போதெல்லாம் அவள் கணவனிடமிருந்து வரும் விமர்சனம் இப்போதெல்லாம் அவளிற்கு பழக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. அவன் தினமும் “ சுயா எதையும் மறந்து விடுவதுதான் குழந்தைகளின் இயல்பு. நீ அறிவுரை சொல்லும் நேரத்தில் அதை எவ்வளவு வேகமாக ஒரு குழந்தையால் புரிந்து கொள்ள முடியுமோ அதை விட வேகமாக அக்குழந்தை அதை மறந்தும் விடுகின்றது . நாம் வாழும் சூழலும் வாழ்கின்ற வாழ்க்கையும் முன்னுக்கு பின் முரணானது. முரண்பட்ட சூழலில் நேரான ஒரு வாழ்க்கையை வாழ்வதென்பது நமக்கே கடினமாக இருக்கின்ற போது …

    • 10 replies
    • 2.2k views
  15. பனி படர்ந்த ஊதல் காற்று ஒரு காது வழியே ஊசியாய்த் துளைத்து மற்றைய காது வழியே வெளியேறி அவனை ஒரு வழிப் பண்ணிக்கொண்டிருந்தது. பனித்துகள்கள் மெல்லிய மலர் இதழ்களாய் காற்றோடு இழைந்து பூமியெங்கும் வெண்மையான நிலவிரிப்பை படர விட்டிருந்தது. கிராமப்புறமாதலால் பனிக்காலத்தில் கூட பசுமை மாறாத பச்சை மரங்களும் இலை உதிர்ந்திருந்த சாலையோரத்து மரங்களும் பனி படர்ந்து வெள்ளை வெளேரென நத்தார்ப் பண்டிகை மடலில் காட்சியளிப்பது போன்ற தோற்றத்தை அவனுக்கு நினைவூட்டியது. இன்று போலத்தான் அன்றொரு நாள் கொட்டிய பனியும் நடந்த சம்பவமும் அவனுக்கு ஒரே சம்பவம் மீண்டும் அதே போல நடப்பது போன்றதொரு மாயையைத் தோற்றுவிக்கிறது. நினைவுகள் அசை போட்டன. கெலி அவனோடு வேலை பார்க்கும் வயோதிபத்தை நெருங்கும…

    • 38 replies
    • 5.2k views
  16. Started by shanthy,

    Saturday, July 4, 2020 குற்றம் 1 ----------+-++---- அன்று குடும்ப நீதிமன்றிற்கு காலை 10.20 மணிக்கு 74வது இலக்க அறைக்கு அழைக்கப்பட்டிருந்தேன். 24.12.2015 என்மீது நிகழ்த்தபட்ட வன்முறைக்கு எதிராக காவல்துறையினரால் வழக்கு பதியப்பட்ட வழக்கு விசாரணை நாளது. திருமதி.ஆனந்தா அவர்கள் 24.12.2015 அன்று நள்ளிரவு ஈடார் ஓபஸ்ரைன் மலைக்கோட்டை தேவாலயத்திற்கு தனது காதலருடன் போய் வந்திருந்தார். …

    • 0 replies
    • 1.5k views
  17. அப்பா தின குட்டிக் கதை முன்னைய காலங்களில் சில கிராமதுக்கு கிராமம் வழக்கங்கள் நடை முறைகள் வேறுபட்டிருக்கும். இருக்கும் இப்படியான ஒரு கிராமத்தில் குடும்பத்திலுள்ள ஆண் பிள்ளைகள் பதினாறு வயதை அடைந்ததும் ஒரு இரவு காட்டில் தங்க வேண்டும். அங்கு பல வகை கொடிய மிருகங்கள் இருக்கும் . அவர்களது பதினைந்தாவது வயதில் வில் பயிற்சி ஈட்டி எறிதல் விலங்குகளை தாக்கி தப்பித்தல் முதலிய தற்காப்பு கலைகள் யாவும் சொல்லி கொடுக்கப்படும் . இப்படியாக ஒரு குடியானவன் மகனுக்கு பதினாறாவது பிறந்த நாள் வந்தது மறு நாள் அவன் காட்டுக்கு செல்ல வேண்டும். முதல் நாள் குடியானவன் சகல புத்திமதி கள் யுக்திகளை மீண்டும் மீண்டும் ஞாபக படுத்தினான் மறு நாள் மாலையானதும் தந…

    • 9 replies
    • 2.7k views
  18. கிராமத்து வீடு சாய்வு நாற்காலியில் சரிந்து உட்க்கார் ந்து கொண்டு இருந்தாள் ராசம்மா டீச்சர் , மாலை மங்குவதற்கு சூரியன் தன கதிர்களை மெல்ல இறக்கி கொண்டிருந்தான் . துணைக்கு இருந்த சிறுமியிடம் கோழிகள் கூடு அடைந்துவி ட டால் , கதவை மூடி விடாம்மா . இன்று மின்சாரம் தடைப்படடாலும் , உதவியாக இருக்கும் .நான் விளக்கு வைக்க போகிறேன் என்றாள். அரிக்கன் லாந்தர் விளக்கின் கண்ணடியை துடைத்து அளவாக எண்ணெய் விட்டு, தயார் படுத்தினாள். பின் மேசை விள க்கினையும் . கண்ணடியை துடைத்து மேசையின் ந டுப்பகுதியில் வைத்தாள். துணைக்கு இருக்கும் சிறுமி குமுதா ...அப்பாவின் காரோட்டி தியாகு வின் மகள் எடடாம் வகுப்பு படிக்கிறாள் வீட்டுப் பாடம் செய்ய உதவி கேட்டு படித…

  19. Started by pri,

    அப்பா வீட்டில் சட்ட திட்டம் போடுவது குறைவு. அதை செய் இதை செய்யாதே என்று நச்சரிப்பது அரிதிலும் அரிது. இருப்பினும் சின்ன வயதிலிருந்து சில பழக்கங்களை வீட்டில் நடைமுறைக்கு கொண்டு வந்திருந்தார். அதிலொன்று இருட்டியதுவும் புத்தகமும் கையுமாய் மேசையில் போய் குந்த வேண்டும். இலங்கை வானொலியில் பின்னேர செய்தி முடிகிறபோது பெரும்பாலும் பகலை இரவு முழுவதுமாக விழுங்யிருக்கும். அதற்கு பிறகு விளையாட முடியாது. முகம் கழுவி சாமி கும்பிட்ட பிறகு புத்தகத்தோடு மேசைக்கு போக வேண்டும். இரவு சாப்பாடுவரை புத்தகத்தோடு இருக்கவேண்டும். என் பள்ளி காலங்கள் முழுவதும் இது வழக்கத்தில் இருந்தது. படிக்கிற காலத்தில் இது நிறைய உதவியதாக என்னளவிலான எண்ணம். இங்கு கனடாவில் சமர் காலத்தில் இர…

    • 5 replies
    • 3.2k views
  20. Started by putthan,

    கனகரிடம் கிளாசை கொடுத்து " அண்ணே எடுங்கோவன் என்றேன்", "லட்சுக்கு சொல்லாமல் வந்திட்டேன் இரு போனில் சொல்லிபோட்டு வாரேன்" ,கனகர் அந்த காலத்தில காதலிச்சு கலியாணம் செய்த மனிதன் இன்றும் அதே காதலுடன் தான் இருக்கிறார்.மனைவியின் விசயலட்சுமி என்ற பெயரை சுருக்கி லட்சு என்று அழைக்கிறார் இன்றுவரை என்றால் பாருங்கோவன் ஐபோனை எடுத்தார் போன் ஸ்கிர்னில் லட்சுவின் இளமை போட்டோவை ஒர் சின்ன தட்டு தட்டினார் "‍‍ஹலோ " "லட்சுயம்மா நான் சுதா வீட்டை நிற்கிறேன் ,கொஞ்சம் லெட்டாத்தான் வருவன் தேடாதையும்" போனை கையால் பொத்திக்கொண்டு "லட்சுக்கு பொர் அடிக்குதாம் என்ன செய்ய" என்றார் . அவவையும் வரச்சொல்லுங்கோவன் என்றேன். "நான் சொன்னா வரமாட்டா ,சுதாவிட்ட…

  21. காலக்கடனும் கடமையும். 27. 12. 2019 காலை 10மணிக்கு வவுனீத்தாவும் நானும் பார்த்திபனிடம் போய்க்கொண்டிருந்தோம். மழைத்தூறலுடன் கூடிய மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது. 4மாதங்களின் பிறகு அவளும் நானும் சேர்ந்த பயணமது. இம்முறை நத்தார் விடுமுறைக்கு பார்த்தி எங்களிடம் வரவில்லை. அவன் விடுமுறையிலும் வேலை செய்து கொண்டிருக்கிறான். சப்பாத்தைக் கழற்றிவிட்டு காலை மடித்து சப்பாணி கட்டியிருந்தபடி கதைத்துக் கொண்டிருந்தாள். சிறுவயது ஞாபகங்கள் முதல் இன்று வரையான அவளது கதைகள் கேட்டபடி காரோடிக் கொண்டிருக்கிறேன். வெளிவரவிருக்கும் அவளது பாடல்களைத் தனது மொபைலில் இருந்து காருக்கு மாற்றிப் போட்டாள். எனக்குள் இன்னும் குழந்தையாகவே இருக்கும் அவளது எண்ணங்கள் சிந்தனைகள் எப்…

    • 0 replies
    • 1.8k views
  22. Sunday, April 19, 2020 உலையும் மனசோடு அலையும் இரவு. - சாந்தி நேசக்கரம் - குண்டம்மா ? இன்னும் எவ்வளவு நேரத்தில வாறீங்கள்? அவள் வட்ஸ் அப்பில் எழுதியிருந்தாள். இன்னும் ஒரு மணிநேரத்தில்...பதில் எழுதினேன். றெயின் கொலோன் பிரதான நிலையத்தைத் தாண்டி பிராங்போட் நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. எத்தைனயோ ஞாபகங்களும் மனசுக்குள் அலைபோலோடி வந்து உடையும் நுரைகளாய் மணலோடு கலந்து போவது போல பிள்ளைகளுடன் வாழ்ந்த காலங்களும் அவர்களுடனான ஞாபகங்களும் வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. றைன் நதியோரமாக றெயின் ஓடிக்கொண்டிருந்தது. ஆவணிமாதம் ஆற்றோரமெங்கும் பச்சையாகியிருந்தது. ஆங்காங்கே சரக்குக்கப்பல்கள் பயணித்துக் கொண்டிருந்தது. வெயில் ஏறாத கால…

  23. Started by sathiri,

    நானும்அவனும் …................................. ஜீவநதிக்காக .எதோ ஒரு கதை.. சாத்திரி …. இரவு பன்னிரண்டை தாண்டிக்கொண்டிருந்தது வெளியே இடி மின்னலோடு பெரு மழை நீ சாப்பிட்டால் சாப்பிடு இல்லாட்டி பட்டினியா படு ,என்று சொல்லிவிட்டு உணவை ஒரு தட்டில் போட்டு மைக்கிரோவானில் வைத்து விட்டு மனைவி படுக்கைக்கு போய்விட்டார் . இன்னொரு கிளாஸ் குடித்து விட்டு சாப்பிடலாமென நினைத்து படுக்கையறை கதவு சாத்தும் சத்தம் கேட்டதும் .மெதுவாக போத்தலை திறந்து கொஞ்சம் விஸ்கியை கிளாசில் ஊற்றி விட்டு காஸ் வெளியேறும் சத்தம் கேட்காமல் சோடாவை திறப்பதெப்படி என யோசித்துக்கொண்டிருக்கும் போதே இடி இடித்த சத்தத்தில்சட்டென்று சோடாவை திறந்து கிளாசில் ஊற…

    • 8 replies
    • 2.7k views
  24. Started by pri,

    சின்னவளுக்கும் பெரியவளுக்கும் பள்ளிக்கூடம் கிடையாது. எனக்கும் வேலை ஏதும் இல்லை. நீச்சலுக்கும் வேறெந்த வகுப்புக்கும் ஏத்தி இறக்கவேண்டிய தேவையும் கிடையாது. புலம்பெயர் வாழ்வில் வீட்டில் எல்லோரும் சும்மா இருக்க கிடைப்பது எப்போதாவது நடக்கிற குட்டி அதிசயம். கொரோனாவின் புண்ணியத்தில் அது இன்றைக்கு வாய்த்திருக்கிறது. குட்டி அதிசயங்கள் எப்படியும் நிகழலாம். வட்ஸ்அப்பின் புண்ணியத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னம் அது நடந்தது. சின்ன வயதில் பள்ளியில் கூடப் படித்து எண்பதுகளின் மத்தியில் தொலைந்துபோன நண்பர்கள் சிலர் கனடாவில் கிடைத்தார்கள். சின்ன வயது முகங்களும் ஒரு தொகை சம்பவங்களும் பத்திரமாகவே இருந்தது. பார்த்த மனிதர்களோடு பொருத்தி பார்த்தேன். சிலருக்கு சாயல் தெரிந்தது. …

    • 11 replies
    • 3.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.