கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
648 topics in this forum
-
Chapter 1 „ அரோகரா அரோகரா“ என்ற ஒரே கோஷம் எல்லா திசைகளிலிருந்தும் ஒலித்துக் கொண்டு இருந்தது . மக்கள் வெள்ளம் ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக்கொண்டு முன்னேற படாத பாடு பட்டுக்கொண்டு இருந்தனர் . இப்போராட்டத்தில் பக்கத்தில் நிற்பவரை கூட தம்மை அறியாது காயப்படுத்தி விடுவோமோ என்ற எண்ணம் அவ்வேளையில் அவர்களுக்கு கொஞ்சமேனும் இருந்ததாக தெரியவில்லை . எப்படியும் தாங்கள் தாங்கள் முண்டியடித்து முன்னேறி முருகப் பெருமானுக்கு அருகில் சென்று தரிசனம் பெற்று விட வேண்டும் என்பதே அவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது. நல்லூர் ஆறுமுகப் பெருமானும் அழகாக பச்சை சாத்தி மெல்ல ஆடி ஆடி அசைந்து வரும் அக்காட்சி கண்கொள்ள காட்சியாக இருந்தது . ஆதித் அம் மக்கள் வெள்ளத்தில் அகப்படாமல் ஒரு ஓரமாக நின்று மிக சுவாரசியத்…
-
- 40 replies
- 13.5k views
-
-
நாங்கள் பார்த்து ரசித்த சினிமா பிரபலங்கள் பலர் எம்மிடமிருந்து விடை பெற்றுவிட்டனர்.அண்மையிலும் ஒரு இசை அமைப்பாளர் விடைபெற்றார்... வழமையாக இறந்தவர்களை மேலே போய்விட்டார்கள் என்று சொல்லுவோம்.அப்படி மேல போன திரை பிரபலங்கள் எப்படி உரையாடியிருப்பார்கள் என்ற ஒரு சிறு கற்பனை மட்டுமே...... அண்மையில் மேலோகம் போனவர் எம்.எஸ்.வி அவரை வரவேற்பதற்கு பல திரையுலக பிரமுகர்கள் பிரமாண்டமான முறையில் மேடை போட்டு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.பார்வையாளர்கள் பூமி பந்தில் தென்மண்டத்தில் வாழ்ந்து இப்ப மேலோகத்தில் வாழ்பவர்கள். பிரமாண்டமான ஒரு மேடையை, புலம்பெயர்ந்து மேற்கத்தைய நாடுகளில் முதியோர் இல்லங்களில் வாழ்ந்து மேலோகம் சென்றவர்கள் ஒழுங்கமைத்திருந்தனர். …
-
- 9 replies
- 3k views
-
-
அப்பா எங்களை எல்லாம் விட்டுப் போய் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிறது. இன்னும் இரண்டு நாளில் அப்பாவின் முப்பத்தோராம் நாட்கடன். எல்லாப் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளால் வீடு நிரம்பியிருக்க அம்மா கூட சிறிது கவலையற்று இருந்தது போல் தோன்றியது. ஆளாளுக்கு அப்பாவுக்குப் பிடித்த பலகாரங்களைச் செய்து தமது ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டு இருந்தனர். அப்பா பெரிதாகக் கோவிலுக்குப் போவதே இல்லை. ஆரம்பகாலங்களில் பக்கத்து ஊரில் இருந்த கோவிலுக்குத் தனியாகச் செல்ல விருப்பமின்றி அம்மா என்னை அல்லது அப்பாவை அழைப்பார். ஆரம்பத்தில் இரண்டொருநாள் போனபின் எனக்குச் சலித்துவிட்டது. அதன்பின் மாட்டியவர் தான் அப்பா. அப்பாவும் சில நாட்கள் சென்றதன் பின் போவதற்குத் தயங்க அம்மா வேறு யாரும் கோவிலுக்குப் போபவர்களுடன் போகவேண்டி…
-
- 17 replies
- 8.7k views
-
-
என்ர பிரச்சனைக்கெல்லாம்.. ஒரே தீர்வு இந்தக் குதிரையளிட்டத் தான் இருக்குது எண்டு என்ர ‘உள்ளறிவு' அடிக்கடி சொல்லிகொள்ளும்\, மச்சான் ! அவனவன்.. அவனவனிட்டை இருக்கிற திறமையளைப் பாவிச்சு முன்னுக்கு வாறதில ஒரு தப்பும் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியேல்லை என்ற படி பேப்பரை மிகவும் அவதானமாகப் படித்துக்கொண்டிருந்தான்! நானும் எதுவும் பேசாமல், இந்தக் கவனத்தைப் படிக்கிற காலத்தில காட்டியிருந்தால் இப்ப எங்கேயோ போயிருப்பாயே சூட்டி என எனக்குள் மட்டும் நினைத்துக் கொண்டிருந்தேன்! அதோட மாதாவிட்டையும் ஒரு சின்னப் பந்தயம் வைச்சிருக்கிறன்! எனக்குப் பெரிய தொகை விழுமெண்டு சொன்னால்.. அவவுக்கு அரைவாசி தாறதாச் சொல்லியிருக்கிறன்! சரி.. உனக்கு எப்ப குதிரையில ‘காசு' விழுந்து...எப்ப.. உன்ர குடும்பத்த…
-
- 7 replies
- 2.4k views
-
-
மலையின் மஞ்சள் கலந்த மண்ணிறம் மாயத்தோற்றந் தந்தது. மலையினைக் கையால் உடைத்து வாயில் போட்டு மென்று தின்ன முடியும் என்று தோன்றியது. மலை வெண்ணையென்றும் நான் கண்ணனென்றும் கூட ஒரு தடம் மனதுள் விரிந்தது. கண்ணன் என்ற எண்ணம் சிந்தையில் வந்ததும் கோபிகை தோன்றி விடுகிறாள். குதிரை வால் குடுமியில் ஏதோ ஒரு மாந்திரீகத் தன்மையிருக்கிறது என்பது எனது அபிப்பிராயம். கறுத்த முடிப் பெண் குதிரைவால் குடுமி போட்டு என் முன் நடப்பின் என் மனம் ஒரு முகப்பட்டு அவள் முகம் பார்க்கத் துடிப்பது எனக்குப் பரிட்சயம். உடற் பயிற்ச்சி நிலையத்துள் குதிரைவால் குடுமியுடன் ஒரு இளையவள் குதிரையாய் வந்தாள். காதிற்குள் “எம்.குமரன் சன் ஒவ் மகாலட்சுமி படத்தின் ஐயோ ஐயையோ” பாடல் நிஜமாகவே ஒலித்தபடி நான் ஓடிக்கொண்…
-
- 8 replies
- 2.3k views
-
-
புரட் …சீ ( சிறுகதை ) - சாத்திரி ( பிரான்ஸ் ) காலை நித்திரையை விட்டெழுந்த கட்டிலில் இருந்து இறங்குவதற்குள் அருகில் கீழே படுத்திருந்த கார்க்கி துள்ளி எழுந்து மல்லிகா மீது பாய்ந்து வாலையாட்டியபடி முகத்தை நக்கத் தொடங்க அதன் தலையை மெதுவாய் தவிக்கொடுதவள் தனது கண்ணாடியை எடுத்துப் போட முயற்சிக்கும் போது மீண்டும் கார்க்கி அவள் மீது பாய கை தவறி கீழே விழ கார்க்கியை அதட்டியபடி கீழே விழுந்த கண்ணாடியை எடுத்துப் போட்டபடி கார்க்கியின் உணவை எடுத்து அதன் கிண்ணத்தில் போட்டுவிட்டு தேநீரை தயாரித்த மல்லிகா அதை எடுக்கும் போது கை தவறி தேநீர் கோப்பை கீழே விழுந்து உடைந்து போக.. திடுக்கிட்ட கார்க்கி மல்லிகாவை பார்த்து குரைத்து விட்டு மீண்டும் கிண்ணத்தில் தலையை விட்டு கொறிக்கத் தொடங்கியது. “…
-
- 4 replies
- 1.9k views
-
-
வானம் கருக்கட்டத் தொடங்கியது! ஒரு பிரசவத்துக்குத் தயாராகும் தாயின் முனகல்களைப் போன்று... மெல்லிய இடிச் சத்தங்கள் கேட்கத் தொடங்கின! வானத்திலிருந்து பூமியை நோக்கிய மின்னல்கள் கடல் நீரின் மேற்பரப்பில் பட்டுச் சைக்கிள் சக்கரங்களைப் போல உருளத் தொடங்கின! 'சூட்டி' தோளில் ஒரு அலவாங்கொன்றைச் சுமந்த படி கடற்கரையில் நடந்து வந்து கொண்டிருந்தான் ! கோவிலடிக் கேணியில் நீச்சல் பழகி, மழைக்காகக் கேணிக்கட்டில் ஏறி நின்ற எங்களுக்கு அவன் நடந்து வருவதைக் கண்டதும் எந்த விதமான ஆச்சரியமும் ஏற்படவில்லை! ஏனெனில் அவனது பட்டப் பெயரே 'மூளை சூட்டி". அவனுக்கு அப்பா அம்மா வாய்த்த பெயர் 'பிறை சூடி' என்னடா இந்தப் பேரைக் காவிக் கொண்டு சீவியம் முழுக்கத் திரிய என்னால முடியாது! அதால என்ர பேரை மாத்தப் போ…
-
- 14 replies
- 1.8k views
-
-
மச்சான் டி சொல்லு இதில போட்டு டக்கென்று வாறன் என்று சொல்லியபடி கைபேசியின் திரையில் கைகளை அழுத்தியபடி நடந்தான் ரமேஸ் ,உள் மனதில் இன்றாவது அரைவாசி தந்தால் நல்லது வாங்கி அப்படியே அனுப்பி போடலாம் அப்பாக்கு வேற ஒப்ரேஷன் இருக்கு ,முதல் மாறிய வட்டி காசு வேற கொடுக்க வில்லை திரும்பியும் கேட்டால் எப்படி தருவீனம் என எண்ணிக்கொண்டு வேகமா நடந்தான் இரயில் நிலையம் நோக்கி ....... இவன் என்னடா வேலை முடிய வாடா ஊருக்கு காசு போடணும் என்னிடம் விஸா இல்லை நீதான் போட்டு தரனும் என்று சொல்லிப்போட்டு ,டி சொல்லு வாறன் எண்டுட்டு எங்க போறான் இவன் என தனக்குள் கடுப்பாகியபடி நகுலன் வீதியை அலுப்பா பார்த்தான் ,வரட்டும் வரவிட்டு டி குடிப்பம் இப்ப வெளியில நிப்பம் ஏரியாவில் என்ன நடக்கு எ…
-
- 6 replies
- 2.1k views
-
-
காகித ஓடம் நீடித்த மழைக்குப் பின் வானம் வெளுக்க ஆரம்பித்தது. சிலு சிலு வென்ற காற்று உடலை வருடி சிலிர்ப்பூட்டியது. மரத்திலிருந்து சொட்டும் நீர்த்துளிகளின் அழகை ரசித்தபடி அமர்ந்திருந்தாள் அருந்ததி. நட்பு, காதல், திருமணம், குடும்பம், உரசல், மோதல், கசப்பு, பிரிவு, வெறுமை.. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் எத்தனையோ அனுபவங்களுக்கு பழக்கப்பட்டுவிட்ட அருந்ததிக்கு தன் உணர்வுகளை நிதானமாகக் கையாள்வது இலகுவாக இருந்தது. சென்ற வாரம் நடைபெற்ற ஒன்றுகூடலின் பின் சலனமுற்ற மனம் சமநிலைக்கு வந்திருந்தது. பல வருடங்களின் பின் பழகிய பல நண்பிகளும் நண்பர்களும் ஒன்றுகூடிய அந்த தருணம் அற்புதமானது. பசுமை நிறைந்த நினைவுகளை மனதில் விதைத்து பொத்திப் பொத்திப் பாதுகாத்த அந்த இனிய பொழுதுகள் அனைவ…
-
- 13 replies
- 2.3k views
-
-
மனசெல்லாம் மழையே......... பஞ்சுப் பொதியாய் வானப்பரப்பெங்கும் வியாபித்து பரவிக் கிடக்கும் மேகத்திரையைக் கிழித்தபடி விமானம் பியர்சன் விமானநிலையத்திலிருந்து மேலெழந்து வேகமெடுத்து ஓடத்தொடங்கிய நாழிகையில் விமானத்தின் ஐன்னலோர இருக்கையில் விமானப்பட்டியை விலக்கியபடி அமர்ந்து கண்களை மூடியபடிசாய்ந்த மதியின் எண்ணங்கள் பின்னோக்கி வேகமெடுத்து ஓடத்தொடங்கின. ஒன்றல்ல இரண்டல்ல முப்பத்தி ஐந்து வருடங்களின் பின் சந்திக்கப்போகும் தன் சிந்தையில் நிறைந்த சிநேகிதனை வட்டமிட்டது மனம். இமைச்சாளரங்கள் மூடிக்கொள்ள இதயம் மாத்திரம் இயங்கத் தொடங்கியது. கலாச்சார ஈரம் குலையாத அந்தக் குட்டிக் கிராமத்தில் பண்பான தந்தைக்கும் அன்பான அன்னைக்கும் மூத்த மகளாகப் பிறந்தவள் மதி .'அக்கா அக்கா' என்று அவளைச் ச…
-
- 9 replies
- 2.1k views
-
-
இரவு முழுவதும் ‘உறக்கம்' கண்ணாமூச்சி விளையாடியபடி இருந்தது! இளமைக் கால நினைவுகள், மூளையின் எங்கோ ஒதுக்குப்புறத்தில் ‘பத்திரமாகப்' பொத்தி வைத்திருந்திருக்கப் பட்டிருக்க வேண்டும்! மனித மூளை எதையுமே குப்பையில் எறிவதில்லைப் போதும்! அவ்வளவும் ஒரே நேரத்தில் பொங்கிப் பிரவகிப்பது போலப் பிரமை! நினைவுகள் மட்டுமல்ல.. உடலும் இளமையானது போன்ற உணர்வும் கூட ஏற்பட.. அதிகாலையிலேயே எழுந்து அவனது விலாசத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு விட்டேன்! நடக்கும் வழியில் எதிர்ப்படும் பெண்களிடம் அந்த விலாசத் துண்டைக் காட்டிய படியே.. அவர்கள் காட்டும் திசையில் நடந்து கொண்டிருந்தேன்! எங்கிருந்து தான் ‘பிரெஞ்சு' மொழிக்கு இந்த ‘இனிமை' வந்ததோ என மனது சிந்தித்த படியே இருந்தது! ‘சூட்டியினது வீட்டுக்கு முன்…
-
- 3 replies
- 1.2k views
-
-
2012 இல் எழுதப்பட்ட பயணக்கட்டுரைத் தொடர் 12 பகுதிகள் சிதறிய முத்துக்களாக இருந்த தொடரை ஒன்றாக இணைத்து இலகுவாக வாசிக்கவும் எழுதப்பட்ட கட்டுரை வடிவத்தை பாதுகாக்கவும் மீள்பதிவாக்கியுள்ளேன். வாசித்துப்பார்க்காத நண்பர்கள் இலகுவாக முழுவதையும் வாசிக்கக்கூடியவகையில்.......இந்த மீள்பதிவு...... பயணங்கள் முடிவதில்லை - 1 (Punta cana) காலமுகடுகளில் தடக்கி நிற்கும்போது திருப்புமுனைகள் அமைந்துவிடுவதுண்டு இன்று எழுத முற்பட்ட விடயமும் இதுவரை காலமும் எழுதிய எனக்கேயான பிரத்தியேக தன்மையில் இருந்து மாறுபட்டிருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. இது எனது எழுத்துப்பயணத்தில் ஏற்பட்டிருக்கும் நன்மையா..... தீமையா என்பதை தற்சமயம் தீர்மானமாக அறியமுடியாவிட்டாலும் எதிர்காலத்தில் தெரிந்து கொள்…
-
- 18 replies
- 5.7k views
-
-
நீலக் கடலின் ஓரத்தில்... கூட்டைவிட்டு விடுதலையாகிய ஒரு சிட்டுக்குருவியைப் போல மேலே மேலே இயந்திரப்பறவை இறக்கை விரிக்க கனடாவில் எல்லைகள் புள்ளிகளாக கட்டிடக்காடு, வாகன நெரிசல், வேலைப்பளு, நாளைய ஏக்கம், அனைத்தையும் மூட்டைகட்டி ஓர் மூலையில் போட்டு விட்ட உணர்வுடன் வெட்ட வெளியில்; கொட்டிக் கிடக்கும் கொள்ள அழகை ரசித்தபடி மனம் பரவசத்தில் பரபரக்க வேகமெடுக்கும் வெஸ்ற் ஜெட் விமானத்தினுள் நாம். விமானத்தினுள் அமர்ந்திருந்த அனைவருமே தம் விடுமுறையை கழிக்கச் செல்பவர்கள் என்றபடியால் அனைவர் முகத்திலும் உல்லாசமான மனநிலை. எமது குடும்பத்தினர் அறுபது வயது தொடக்கம் ஆறுமாதக் குழந்தைவரை ஏறக்குறைய இருபத்திஜந்து பேர்வரை விமானத்தில் பறந்து கொண்டிருந்தோம். விமானம் புறப்பட ஆயத்தமாகும் முன…
-
- 11 replies
- 2.2k views
-
-
அவள் மனம் போலவே எங்கும் இருண்டுபோய் அடை மழை பெய்துகொண்டிருந்தது. பஸ்ஸில் ஓர இருக்கையில் அமர்ந்திருந்தபடியால் பூட்டிய கண்ணாடி யன்னல்களின் ஊடே தெறிக்கும்மழை நீர் அவள் முகத்திலும் இடைக்கிடை விழுந்தது. ஆனாலும் அதைத் துடைக்க வேண்டும் என்னும் நினைப்பே அற்று மழை நீரில் இருண்ட வானத்தைப் பார்ப்பதற்கான முயற்சியில் தோற்றுக்கொண்டிருந்தாள் சந்தியா. ஏன் தான் இந்த உலகில் பிறந்தேனோ என்னும் சலிப்பு மனதில் எழ, எனக்கு வேறு வழியே இல்லை என்னும் தீர்மானத்துக்கு வருவதைத் தவிர வேறு மாற்று வழி தெரியாது, பெருமூச்சு ஒன்றே வெளிவந்து அவளை அசுவாசப்படுத்தியது. வாழ்க்கை வாழ்வதற்குத்தான் எனில் ஒன்றை மட்டும் இறுகப் பற்றியபடி ஏன் வாழ்வை நாம் எதிர் கொள்ள வேண்டும். அந்த ஒன்றே யாதுமாகி, எதையும் அலட்சியம் செய…
-
- 6 replies
- 1.7k views
-
-
http://www.meeraspage.com/novels-and-kids-stories/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4/
-
- 18 replies
- 2.7k views
- 1 follower
-
-
வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமானது . ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற நாம் படும் பாடு இருக்கிறதே, ஐயகோ, அவற்றை நாம் வெறுமனியே வார்த்தைகளால் கூறி முடிக்க முடியாது . அது சிறு செயலாகவும் இருக்கலாம் அல்லது ஒரு பெரிய பொறுப்பை ஏற்று அப்பணியை செவ்வனவே செய்து முடிக்க வேண்டியும் இருக்கலாம் . ஒவ்வொரு முயற்சிக்கும் முதல்படி நாம் அப்பணியை நாம் எப்படி செய்து முடிக்க வேண்டும் என்று எம்முள்ளேயே ஒரு திட்டம் இயல்பாகவே தோன்றிவிடும் . அப்பணியை செய்து முடிக்கும் வரை எமது உள்ளமும் அமைதியின்றி அல்லலுறும் . நிம்மதியின்றி அடிக்கடி செய்து முடிக்க வேண்டிய அப்பணியை நினைவு கூர்ந்து பார்க்க வேண்டியும் இருக்கும் . ஆனால் எத்தனையோ இடர்பாடுகளின் பின் தீவிர முயற்சி தோல்வி பெற்றால் அது தரும் ஏமாற்றம் ம…
-
- 11 replies
- 1.7k views
-
-
இன்றுடன் மாமா இறந்து ஒன்பது நாட்கள் ஆகிவிட்டன. வீடு முழுதும் ஒரே உறவினர்களும் தேவைக்கு அதிகமான உணவுகளும் யாரினது என்று தெரியாத பாத்திர பண்டங்களுமாய் வாணிக்கு உடல், மன அலைச்சல் இரண்டும் சேர்ந்து இன்றாவது நின்மதியாகத் தூங்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த பின்னும் மாமாவின் மனத்திடம் தான் இத்தனை நாட்கள் அவரை வாழ வைகிறதோ என்று வாணி பல நாட்கள் வியந்திருக்கிறாள். வாரத்தில் இரண்டு நாட்கள் மாமாவை வைத்தியசாலையில் இருந்து வரும் வாகனத்தில் அழைத்துச் சென்று அவர்களே மீண்டும் இறக்கி விடுவார்கள். போகும்போது நடந்து செல்லும் மாமா வரும்போது உற்சாகம் இழந்தபடி கைத்தாங்கலாக அழைத்து வரப்படுவது அவளுக்கு பச்சாதாபத்தை ஏற்படுத்தும். அவள் அவரை என்றும் தன் கண…
-
- 17 replies
- 1.6k views
-
-
'Hello " "Is Kulan there pls" "Speaking" "குலன் நான் இங்க பிரேம்" ... "பிரேம்" ? "பெல்ஜியம் பிரேம் ". "சொல்லும் பிரேம் எப்படி இருக்கின்றீர் ? இப்பவும் பிரசல்ஸ் தானே " ? "பிரேசெல்சில் இருந்து கொஞ்சம் தள்ளி ஒரு கிராமத்திற்கு இடம் மாறிவிட்டேன் ,இப்ப கனடாவில் தான் நிற்கின்றேன் .சின்ன உதவி ஒன்று தேவை .யாரிடம் கேட்கலாம் என்ற போது உம்மிட நினைவுதான் வந்தது அது தான் போன் அடித்தேன்". 'எப்படி தொலைபேசி இலக்கம் கிடைத்தது ,என்ன விஷயம் சொல்லும் ?" "சும்மா கூகிளில் உமது பெயரை போடவே தொலை பேசி இலக்கம் வந்துவிட்டது .நான் டொராண்டோ ஹில்டனில் நிற்கின்றேன் .நேரில் வந்து சந்தித்து கதைத்தால் நன்றாக இருக்கும் ". "ஏதும் பெரிய பிரச்சனையோ ?" "அப்படி பெரிதாய் ஒன்றுமில்லை , எனத…
-
- 35 replies
- 3.5k views
-
-
வினோத்தின் நேர்கொண்ட பார்வையை தவிர்க்கவே அடிக்கடி உடையை சரி செய்வது போல கீழே குனிந்து கொண்டேன். இதை வினோத் அறிந்திருக்க எள்ளளவும் வாய்ப்பில்லை. மனம் ஏனோ ஒரு நிலையில் இல்லாது தவித்தது. அந்த இத்தாலிய உணவகத்தின் யன்னைலினூடே வெளியே பார்க்கிறேன். சவர்க்கார கரைசலை வாயிலே வைத்து ஊதும் வெள்ளை இன சிறுவன். அவன் ஊதும் குமிழி போலவே, என் எண்ணங்களும் வளர்வதும் வெடித்து சிதறுவதுமாக இருந்தன. கடவுள் நிறைய நேரங்களில் எங்கள் எண்ணங்களை எம் கண்முன்னே காட்சி ஆக்குவதில் வல்லவர் என்று யாரோ சொன்னது எனக்குள்ளே வந்து போனது. ஐரோப்பாவில் இருந்து உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்ளவந்திருந்த வினோத்தை சந்திப்பதற்கான ஒழுங்கை மதி ஏற்படுத்திவிட்டு, பழைய நண்பர்களை சந்திக்க என்னை அழைத்தபோது, எனக்குள்ளே ந…
-
- 8 replies
- 1.5k views
-
-
ரஞ்சினியின் கண்கள் மீண்டும் கடிகாரத்தை நோக்கியது . மணி 6.3௦ யை காட்டியது . இவள் 5 மணியிலிருந்து இப்படி தான் அடிக்கடி கடிகாரத்தை நோக்கிக் கொண்டிருந்தாள் . ஆம் ஆசைக்கணவன் வேலை முடிந்து வீடு திரும்பும் நேரமாகி விட்டதல்லவா ! திருமணமாகி மூன்று மாதங்களே ஆகி இருந்த அவளுக்கு, கணவன் காதல் கணவனாக தெரிந்தாலும் அவனுக்கு என்னவோ அவளிடம் அதே ஈடுபாடு இருப்பதாக தெரியவில்லை . வர வர வேலை முடிந்து வீடு திரும்பும் நேரம் கொஞ்சம் கொஞ்சமாக பிற்போடப் பட்டுக்கொண்டே இருந்தது . ரஞ்சினிக்கும் இது கொஞ்சம் உறைக்கத்தான் செய்தது . என்றாலும் ஒருவரை ஒருவர் தெரிந்துக்கொள்ள காலம் தேவை . என்னை அவர் நன்றாக தெரிந்துகொண்ட பின்னர் எல்லாம் சகஜ நிலைக்கு வரும் என்று தன்னையே சமாதானப்படுத்திகொண்டாள். அன்றும் அறுசுவை…
-
- 17 replies
- 1.6k views
-
-
அம்மா - முதலில் சிறிய குறிப்பு. எனதம்மா எங்கள் குடும்ப விளக்கு.. குடிக்கு அடிமையான எனது தகப்பனாருடன் 60 ஆண்டு பொறுமையோடு குடும்பம் நடாத்தி எம்மை வளர்த்தவர். எனது தகப்பனாருக்கு குடி தான் என்றும் முதலாவது. எப்பொழுதும் வெள்ளை வேட்டி கட்டும் அவர் 3 தலைப்புக்களில் 3 நாளைக்கு குடிக்கத்தேவையான பணத்தை பதுக்கி வைத்து மீதியையே அம்மாவிடம் கொடுப்பார் எம்மை வளர்க்க. 3 அண்ணன்களுக்கு ஒரு பெண் பிள்ளையாக பிறந்த எனது தாயார் பாடசாலைக்கே சென்றதில்லை. இத்தனைக்கும் அவரது 3 அண்ணன்களும் பின்நாளில் அதிபர்களாக இருந்தார்கள். அதிலொருத்தர் இலங்கையில் தமிழ் மற்றும் சைவசமயநெறிப்படிப்பு சார்ந்து இன்றுவரை முதலிடத்திலுள்ள வித்துவான் பொன்.அ. கனகசபையாவார். 34 பேரப்பிள்ளைகளையும் 32 பூ…
-
- 19 replies
- 6.1k views
-
-
அது துனிசியாவில் ஒரு நகரம்.. முகமெட் ஓரளவு வசதியானவன் சொந்தமாக TAXI வைத்திருந்தான்.. திருமணமாகி ஒரு ஆண்குழந்தை அழகான மனைவி சொந்தவீடு ஆனந்தமான வழமாக வாழ்க்கை என வாழ்வு போய்க்கொண்டிருந்தது.. மார்கழி மாசம் சரியான குளிர் மனைவி கேட்டாள் பிள்ளையைக்கூட்டிக்கொண்டு போய் அம்மாவீட்டில் 2 நாள் தங்கி வரட்டா என. இன்றைய தினத்தின் முக்கியத்தை உணராதவன் அதற்கென்ன ஆனால் நான் வேலைக்கு போய்விட்டு அங்கு வரமாட்டேன் அங்கு வந்தால் ஆட்கள் அதிகம் அவர்களுடன் பொழுது போகும் ஆனால் நான் ஓய்வெடுக்கமுடியாது என. அது வழமையாக நடப்பது என்பதால் மனைவியும் ஒத்துக்கொண்டாள். வழமை போல டக்சியை எடுத்துக்கொண்டு புறப்பட்ட முகமெட் மனைவியைக்கொண்டு போய் தாய்வீட்டுக்கு போகும் புகையிரத ந…
-
- 97 replies
- 10.1k views
- 1 follower
-
-
இம்மாத ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகையில் வெளிவந்த என் சிறுகதை சிவாவுக்கு இன்னும் தூக்கம் கலையவில்லை. இரவு அடித்த வொட்காவின் தாக்கம் தலையிடியாய் மாறி அவனை எழுப்பியிராவிட்டால் இன்னும் கன நேரமாக அவன் தூங்கியிருப்பான். அப்பவும் எழும்ப மனமின்றிப் புரண்டே படுத்தான். இதமாக இளங்காலையில் வீசிய காற்றினால்கூட அவனை எழுப்ப முடியவில்லை. அதற்காக அவன் இரசனை அற்றவனும் அல்ல. மதுவையும் பெண்களையும் எப்படி இரசிக்கின்றானோ அதுபோல் இயற்கையின் விந்தைகளையும் தன்னை மறந்து இரசித்துமிருக்கிறான். வேலை அற்ற நாட்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏனோ அவனுக்கு வெள்ளனவே விழிப்பு வந்துவிடும். அந்த நாள் முழுவதையும் அமைதியாக வீட்டிலிருந்தபடியே கரைப்பதான அவனின் அந்தத் தீர்மானத்தை யாராலும் கலைக்க முட…
-
- 3 replies
- 1k views
-
-
வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில் ! “லெப்.கேணல்.சிரித்திரன் (முருகுப்பிள்ளை சிவரூபன்) வீரனாய் – 07.09.1979 வித்தாய் – 20.04.2009 பிறந்த இடம் – இடைக்காடு கல்வி கற்றது – இடைக்காடு மகாவித்தியாலம்” ‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் லெப்.கேணல்.சிரித்திரன். சிரித்திரன் பெயரைப் போலவே சிரித்த முகம். வீரத்தை விழிகளில் சுமந்த விசித்திரம் அவன். தமிழீழ வான்புலிகள் சரித்திரத்தில் சிரித்திரனும் ஒரு விடி நட்சத்திரம். விடிவெள்ளிகளின் ஒளிக்கதிர்கள் பார்வையில் சிறுபுள்ளயே. எனினும் அதன் வீரியம் என்பது உலகைவிடவும் ஒளிபொருந்தியது. அப்படியே எங்கள் சிரித்தின…
-
- 21 replies
- 5.2k views
-
-
கார்லா பிரவுண்..! ஐந்து அடிகள் தான் உயரம். ஆனாலும் அந்தச் சிறிய உருவம் இள வயதிற்கேற்ற வனப்புடனும், வளைவுகளுடனும் வாலிபர்களை கிறங்க வைக்கத் தவறுவதில்லை. அவளை பெண் நண்பியாக அடையப் போவது யார் என்கிற போட்டிதான் அந்த அமெரிக்க ஊரின் இளைஞர்களுக்குள் முக்கியமான ஒரு போட்டியாக இருந்தது. அவளைப் போல பல பெண்கள் வனப்புடன் இருந்தாலும் கார்லா நன்கு பிரபலம் ஆகிவிட ஒரு சம்பவம் காரணமாக அமைந்தது. ஒரு சமயம் அவள் கடற்கரை ஒன்றில் நடந்து சென்றபோது பத்திரிகைக்காரர் ஒருவர் அவளது அனுமதியுடன் ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொண்டார். அந்தப்படம் அவளது பெயருடன் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் ஒன்றில் வெளிவரவரவும் அவளது மீட்டர் இளைஞர் மத்தியில் சும்மா ஜிவ்வென்று எகிறியது. இளைஞர்கள் அவளது வீட்டுக்கே தொடர்பு க…
-
- 25 replies
- 2.6k views
-