கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
648 topics in this forum
-
"மச்சான் சிவாசிகணேசன் நடித்த சவாலே சமாளி.... திறமான படமாம், நாளைக்கு ராணித் தியேட்டரிலை முதல் காட்சி 10மணிக்கு, கட்டாயம் போய்ப் பார்க்கவேண்டும்." பாலா சொன்னான். ஆனால் பசை வேண்டுமே ? மூன்று ரூபாதான் இருக்கு. ஆறு பேரும் போவதென்றால் !நுளைவுச்சீட்டு... இன்னமும் 90சதம் வேணும். தேங்காய்க்கடையில் 180 தேங்காய் உரித்தால் 90 சதம் கிடைக்கும். ஆளுக்கொரு அலவாங்கு நாட்டி தேங்காய்கள் உரிக்கப்பட்டன. எண்ணியபோது முந்நூறை நெருங்கி வந்துவிட்டது. தேங்காய்களுக்கு முற்கூட்டியே பணம்கொடுத்து சொல்லிவைத்தவன் நாளை விடிய வரப்போகிறான். வழக்கமாக உரிப்பவனைக் காணவில்லையே...? என்ற கவலையில் இருந்த முதலாளிக்குப் பரம சந்தோசம்!!. இரண்டுரூபா நோட்டு ஒன்றை எடுத்து எங்களை ஆசிர்வதிப்பதுபோல நீட்டினார். 10 மணிக…
-
- 10 replies
- 2.3k views
-
-
1975 - யாழ் மத்திய கல்லூரி யில் அரைமணி நேரம். மூன்றாவது தவணைப்பரீட்சை கடைசி நாள். கணிதப்பரீட்சை அன்று வழமைக்கு மாறாக 12 மணிக்கே அன்றைய நாளின் பாடசாலை முடிவு. புத்தகப்பை கையில் இல்லை. ஏழுத்து உபகரணங்களை வகுப்பில் வைத்துவிட்டு வரும்போது ஏதோ எல்லாப்பாரமும் குறைந்தது போலிருந்தது. அப்பாடா இனி புதிய வருடம் புதிய வகுப்பு மனம் எங்கோ பறந்தது. முதலாம் இரண்டாம் தவணைப் பரீட்சையின் பின் என்றால் மணிக்கூட்டுக்கோபுரத்தில் நேரம் பார்த்தபடி கிரிக்கெட் அல்லது புட்போல் இல்லை யாழ் நூலகத்தில் மித்திரனில் வரும் ஜி நேசனின் தொடர் முதல் அம்புலி மாமாவரை மேய் ந்துவிட்டு 3:30க்கு வீட்டிற்குப் போகலாம். ஆனால் இப்போ மழைக்காலம் மைதானத்தில் வெள்ளம், திங்கட்கிழமை நூலகமும் பூட்டு. மத்தியானத்திற்கும் …
-
- 26 replies
- 3.6k views
-
-
Neasden நகரின் பிரதான வீதியில் Black Bird Hill வளைவில் இருக்கும் Texaco பெற்றோல் நிரப்பு நிலையம். நேரம் காலை பத்தரை என்பதால் வேலைக்கு ,பாடசாலைக்கு செல்வோரின் போக்குவரத்து சற்று அடங்கி வீதிகளில் வாகன நெருக்கடி குறைந்திருக்கு .கறுப்பு நிற மோட்டார் பைக் ஒன்று பெற்றோல் நிலைய ஆறாவது Pump இன் முன் நிற்கின்றது .வெவ்வேறு PUMP களில் இரண்டு கார்கள் பெற்றோல் நிரப்பபட்டுகொண்டிருக்கின்றன .மோட்டார் பைக்கில் வந்தவன் Helmet ஐ கழட்டாமல் மோட்டார் பைக்கின் பெற்றோல் நிரப்பும் தாங்கியின் மூடியை திறக்கின்றான் . பெற்றோல் நிலைய Cashier மோட்டார் பைக் முழுக்க தெரியாமல் பெற்றோல் pump இன் பின் சற்று மறைத்து தரித்திருந்ததால் அதன் இலக்கத்தை பார்க்க முடியாமல் முதலில் உள்ளே வந்து காசை செலுத…
-
- 8 replies
- 1.7k views
-
-
ஜீவா எண்ணியும் பார்த்ததில்லை தமக்கும் இப்படி ஒரு நிலை வரும் என்று. வழமையாக அதிகாலையில் நித்திரையால் எழுவதுதான். பாடசாலைக்குச் செல்லும் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் காலை உணவு செய்து பாடசாலைக்கும் கட்டி ஒழுங்கு செய்ய எப்பிடியும் ஒன்றை மணி நேரம் கடந்துவிடும். அதன்பின் எல்லோரையும் எழுப்பி பால் காச்சித் தேத்தண்ணியும் போட்டு எல்லாருக்கும் சேவகம் செய்யவே நாரிப்பூட்டு விண்டுவிடும். இப்ப மேலதிகமாக டாங்கிகளில் வரும் தண்ணீரைப் பிடிப்பதற்கு அரை மணி முன்னதாக எழுந்து வேலைகளை முடித்துவிட்டுக் காத்திருக்க வேண்டும். கொஞ்சம் பிந்தினாலும் பிறகு அரைவாசி தண்ணீர்தான் கிடைக்கும். எதோ தான் மட்டுமே தண்ணீர் பாவிப்பதுபோல கணவன் ஒருநாள் கூட உதவி செய்வதில்லை. சரி அவர் படிப்பிக்கப் போகவேணும்தான். அத…
-
- 5 replies
- 1.5k views
-
-
என்ன நினைத்தானோ தெரியவில்லை கையில் எடுத்த பிரஸ்சை திரும்பவும் எடுத்த இடத்தில் வைத்துவிட்டு சரத்தை தூக்கிச் சண்டிக்கட்டு கட்டினான் சுரேந்தர். சுவரில் பொருத்தப்பட்ட கண்ணாடியை நிமிர்ந்து பார்த்தவன், கம்பியில் கொழுவி இருந்த துவாயை எடுத்து கழுத்தால் சுற்றி முதுகை மறைத்துப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு முன்புறம் வந்து வேப்பம் மரத்தில் சாய்த்துக் கிடந்த கொக்கத் தடியை எடுத்து ஒரு வேப்பம் கோப்பை வெட்டி விழுத்தினான். மொக்கு நீக்கு இல்லாத நேரான குச்சியை முறித்து இலைகளைப் பிடுங்கி எறிந்துவிட்டு நுனியை வாயில் வைத்து சப்பித் தும்பாக்கிகொண்டு வீட்டின் முகப்பு கேற்றை நோக்கி நடந்தான். கேற்றின் மேல் கொழுவியை தூக்கி கேற்றை திறந்தபோது மெல்லிய காற்று கழுத்தில் போட்டிருந்த துவாயை த…
-
- 17 replies
- 2.2k views
-
-
முத்தப்பா, வயது எழுபது . ஊரின் கால அடையாளம். பெரு மழை இரவுகளிலும் நூலகத்தின் வாசலில் குந்தி இருப்பார். அல்லது கோயிலடி மடத்தில் படுத்திருப்பார். கம்பராமாயணம் முதல் சகுந்தலா காவியம் வரையும், கிளிண்டன் முதல் ஜாக்கிசான் வரையும் அவரிடம் தகவல் இருந்தது. பட்டிமன்றங்களிலும் சரி ஐயர் ஓதும் மந்திரங்களிலும் சரி பிழை பிடித்து ஒரு குரல் ஒலிக்கிறது என்றால் அது முத்தப்பாவினதாகவே இருக்கும். இப்படிதான் ஒரு திருமண நிகழ்வில் ஐயர் வீடு குடிபுகும் போது சொல்ல வேண்டிய மந்திரத்தை சொல்லிவிட்டார் என்று சண்டையைக் தொடக்க..ஐயர் இங்கேயும் இப்ப நடப்பது புது வீடு குடிபுகுதல் மாதிரித்தான் அதனால் இந்த மந்திரமும் சொல்லலாம் என்று சமாளிச்சு போனதை அம்மா நெடுக சொல்லுவார். எந்தளவு படிச்ச …
-
- 6 replies
- 1.7k views
-
-
அமெரிக்க தீர்மானம் பாகம் 1: மாசி மாதத்தின் இறுதி நாட்களுள் ஒன்று. விடிகாலையிலேயே தொலைபேசி அலறியது. யாரப்பா அது இந்த நேரத்தில் என்று எரிச்சலுடன் தொலைபேசிய எடுத்துக் காதில் வைத்தேன். "ஹலோ.. என்ன நித்திரையா?! ஜெனீவாவில நிண்டுகொண்டு நான் தான் டி.எஸ். கதைக்கிறன்.. அவசரம் இங்கை.." தொலைபேசியின் மறுமுனை படபடத்தது. "ஓ.. நீங்களா.. என்ன இந்த நேரத்தில?!" இது நான். "இந்த நேரத்திலயோ? நல்லா கேப்பீங்களே.. இங்க முதல் வரைவுத் தீர்மானம் வந்திட்டிது.. பார்த்தியளோ? அல்லது அதுவும் இல்லையா?" "ம்ம்ம்.. பார்த்தனான்... உப்புச் சப்பில்லாமல் இருந்தது.." "அதேதான்.. இதுக்கு உங்களால எதுவும் செய்ய முடியுமே.. ஒரு ஃபோன் அடிச்சு பார்க்கிறது.." "ஓ.. அங்கையா.. இதோ அடிச்சுப் பா…
-
- 122 replies
- 11.1k views
-
-
மீண்டும் வசந்தகாலம் மரம் ,செடி, கொடி பூத்து குலுங்க தொடங்கிவிட்டன.வீட்டுத்தோட்டம் வைக்கும் சிட்னிவாழ் பெரும் குடிமக்கள் தங்களது முயற்சியில் தீயா வேலை செய்யத்தொடங்கி விட்டார்கள்.அவர்கள் தீயா வேலை செய்வதைப் பார்த்து சுரேஸும் கொஞ்சம் மிளகாய் கன்றுகளை வாங்கி வந்து நடத்தொடங்கினான். சுரேஸின் நடமாட்டத்தை அறிந்த பின் வீட்டு நாய் குரைத்தது.உடனே நாயின் உரிமையாளர் ஆங்கிலத்தில் நாயைவிட அதிக சத்தத்தில் குரைக்க நாய் குரைப்பதை நிறுத்தியது. மீண்டும் குரைக்க தொடங்க ஆத்திரமடைந்த சுரேஸ் "ஏய் நாயே நானா, நீயா இந்த ஏரியாவுக்கு முதல் வந்தது"உரத்த குரலில் கத்தியவன் ஊரா இருந்திருந்தால் பொட்டுக்குள்ளால் பூர்ந்து வந்து உன்ட காலை அடிச்சு நொருக்கியிருப்பேன் என் மனதில் திட்டியபடியே மிளகாய் கன்றுகளை ந…
-
- 14 replies
- 4.7k views
-
-
பரணி கபேயை குடித்து முடிக்கும்போது நேரம் எட்டரை காட்டியது வேகமா இன்று வேலை முடிகவேனும் என்னும் மனக்கணக்கில் தொடங்கினான் தண்ணியில் சலாட்டை தூக்கி போட்டு விட்டு ,தக்காளி பழத்தை எடுத்து எட்டா வெட்ட தொடங்க ,சவா(நலமா) என்று கேட்டபடி செப் உள்ளே வந்தான் . உய்(ஓம் ) என்று சொல்லின்கொண்டு சலாட்டை வெட்ட தொடங்கினான் பரணி இன்று பின்னேரம் வேளைக்கு போகவேணும் ,அதனால் இப்பவே கூட எல்லாம் செய்து வைத்தால் வேளைக்கு இறங்கலாம் என்னும் எண்ணோட்டத்தில் வேகமா வேலை செய்ய தொடங்கினான் .. நாலு ,மணிபோல குகன் வருவான் ஆளை ஏரியாவில் சந்தித்து விட்டு போனா இரவு வளைச்சு அடிக்கலாம் ஆளுக்கு இண்டைக்கு எப்படியும் ஆளை தப்ப விடக்கூடாது அவருக்கு சொறிக்கதை ,வேலை முடியும் நேரம் குகன் தொலைபேசியில் மச்சி நான் வந்திட…
-
- 27 replies
- 4.4k views
-
-
இரவு வேலைக்குப்போய் வந்து தன் தனிமை வாழ்க்கைக் கதையை தலையணையோடு பகிர்ந்துவிட்டு போர்வைக்குள் புகுந்த குமரன், பத்து மணி நேர வேலை அலுப்பின் அசதியை நித்திரையில் கரைத்துக்கொண்டு இருந்தான்.அந்த நேரம்பார்த்து சிவபூசையில் கரடி புகுந்தால்போல் அவன் தொலைபேசியின் அழைப்பு "நித்திரையா தமிழா நிமிர்ந்து பாரடா" என்ற பாடலுடன் ஒலித்தது.தூக்க அசதியில் கைபேசியை கையில் எடுத்து ஒருவாறாகாத் தடவி இணைப்பை காதுக்குள் வைத்தான் மறு முனையில் அவன் தாய் ஊரில் இருந்து "தம்பி என்ன நித்திரயா"?எனக் கேட்கவே "ஓம் அம்மா சொல்லன" என்று தன் தூக்க அலுப்பிலும் தன் பாசத்தை அன்போடு பகிர்ந்தான். தாயும் "அப்பன் அப்பாட துவசமடா இன்டைக்கு விரதமா இரையா" என்றவே அவனுக்கு சுருக்கென்று கோவம் வந்தது "இங்க என்ணண்டு என? வேலைக்கு…
-
- 6 replies
- 1.4k views
-
-
2000ம் ஆண்டுக்கு முதலான யாழ்ப்பாணம், பல பொருட்கள் பொருளாதார தடை காரணமாக யாழ்ப்பாணத்து வராத காலகட்டம், பண்டிகைக்காலங்களில கொழுத்தும் "சீன வெடி" கூட அந்த காலத்தில தடைசெய்யப்பட்ட ஒன்று . அதால ,பண்டிகைகளுக்கு வெடி நாங்களே செய்யவேண்டிய கட்டாயம் , அப்ப எங்களுக்கு வெடி செய்ய தேவையான பொருட்கள் எண்டு பார்த்தால் , சைக்கிள் ரியூப்பில இருக்கிற வால்கட்டை (இது பேச்சுவழக்கு ,ஆங்கிலத்தின்ர VALVE எண்டததான் சொல்லுறது) நெருப்பெட்டி வால்கட்டைக்க பட்டும்படாமலும் போய்வரக்கூடிய ஆணி பொதுவாக ,கருக்கு மட்டைலயோ ,சைக்கிள்ட முன் பிறேக் கட்டை கம்பியிலயோதான் வால்கட்டைய பூட்டுறது ,கருக்குமட்டை கொஞ்சம் பாதுகாப்பு எண்டதால அதில செய்தால் வீட்டில கொஞ்சமா பேச்சுவிழும். அதுக்குள்ள குட்டி வால்…
-
- 3 replies
- 1.4k views
-
-
எனது கனவிலும் நினைத்து பார்த்திராத ஒரு நகரத்திற்கு காலம் என்னை இழுத்துக்கொண்டுபோய் விட்டிருந்தது .நள்ளிரவு டெல்கி விமான நிலையத்தில் நண்பருடன் இறங்கி சக பயணிகளுடன் பச்சை நிற லைட் எரியும் வெளியே செல்லும் பாதையில் நிற்கும் போது ஒரு சீக்கிய அதிகாரி வந்து எமது சூட்கேசுகளை பரிசோதிக்க வேண்டும் என்று உள்ளே அழைத்துசெல்லுகின்றார் .என்னுடன் கையில் கொண்டுவந்த கைப்பையில் தான் எனது உடுப்புகள் அனைத்தும் இருந்தது . சூட்கேஸ் பாண்டேஜ்,பிளாஸ்டர்கள்,கையுறைகள் ,மருந்துவகைகள் என்று நிரம்பியிருக்கு .நீ ஒரு வைத்தியரா? என்று கேட்டார் அந்த அதிகாரி . இல்லை, இது தமிழ் நாட்டு அகதி முகாம்களில் இருக்கும் எமது மக்களுக்கு கொண்டு செல்லுகின்றேன் என்றேன் .இந்த பொருட்களை நாட்டிற்குள் கொண்டுவர முன்அனுமதி …
-
- 15 replies
- 2.9k views
-
-
டிசம்பர் மாதம் என்று சொல்ல முடியாதவாறு வானமும் நிலமும் வெயில் குடித்துக் கிடந்தது. இன்னும் பத்து நாட்களில் அடுத்த ஆண்டு வந்துவிடும். சில்லென்ற காற்று வீசுவது யன்னலூடாக வெளியே அசையும் மரங்கள் உணர்த்தின. குளிர் காலத்தில் வெயில் வந்தாலே லண்டனில் ஒரு ஊசிக் காற்றும் அதனோடு சேர்ந்து வீசும். அபிக்கு வெளியே செல்லவே மனமின்றி இருந்தது அந்தக் காற்றைப் பார்க்க.ஆனாலும் என்ன செய்வது வேலைக்குச் செல்லத்தானே வேண்டும். அண்ணனின் உழைப்பில் சாப்பிட முடியுமா ??? என மனம் கேட்டுக்கொண்டது. அபியின் அண்ணன் வசந்தன் லண்டனில் ஆறு ஆண்டுகளாக வசிக்கிறான்.PR கிடைத்துவிட்டதுதான். ஆனாலும் தங்கைக்கும் மகேந்திரனுக்கும் ஏயென்சியில் கட்டின காசுக்கடன் இன்னும் முடிந்தபாடு இல்லை. அதனால் இரவு பகல் என்று வேலை. இ…
-
- 9 replies
- 2.1k views
-
-
இன்றும் அன்றும் அரசியலிலும் சிங்கள ஆதிக்கத்திலும் மாற்றம் இல்லை என்பதால் இதை இங்கு இணைக்கின்றேன் ---- 1994 இல் இடம்பெற இருந்த தேர்தலில் சந்திரிக்கா ஒரு சமாதான தேவதையாக பிரச்சாரப்படுத்தப்பட்டுக் கொண்டு இருந்தார். சந்திரிக்கா வந்தால் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதாரப் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்றளவுக்கு அவர் மீதான நம்பிக்கை கட்டியெழுப்பட்டுக் கொண்டு இருந்தது. சிங்கள அரசியலமைப்பில், முற்றிலும் சிங்கள இயந்திரமயப்படுத்தப்பட்ட சிவில் நிர்வாக அமைப்பில் தமிழருக்கு எக்காலத்திலும் தீர்வு வராது என்ற அரசியல் ரீதியிலான உண்மையை சரிநிகர் எமக்கு வழங்கியிருந்தது. அந்த உண்மையை ஒற்றி நான் எழுதிய சிறுகதை இது, இதை நான் எழுதியது 1994 இல். சரியாக 20 வயதில். இது பிரசுரிக்கப…
-
- 0 replies
- 1.2k views
-
-
நாம் கடையை வாங்கியதே விற்றவர் சொன்னார்தான். களவு எடுக்க என்றே ஆட்கள் வருவார்கள் கவனம் என்று. ஒரு மாதத்தின் பின் ஒரு தமிழ் பெடியன் கடைக்கு வந்தான். வந்த உடனேயே அக்கா எப்பிடி இருக்கிறியள் என்று அவன் இயல்பாக நலம் விசாரித்தபடி கதைக்கத் தொடங்கினான். ஆளும் நல்ல ஸ்மாட். பார்க்க நல்ல பெடியன் போல் இருந்தது. அதனால் நானும் இயல்பாகி அவனுடன் கதைக்கத் தொடங்கினேன். என்னுடன் மட்டுமல்ல என் கணவருடனும் மிகவும் நட்பாகிவிட்டான் அவன். அவன் பெற்றோர் சகோதரர்கள் பற்றிச் சொன்னவை அவனை ஒரு பண்பான குடும்பத்துப் பிள்ளை என எண்ண வைத்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. நான்கு மாதங்களின் முன்னர் ஒருநாள் நானும் கணவரும் நிற்கும்போது வந்தவன் கணவரைத் தனியே அழைத்துச்…
-
- 39 replies
- 3.8k views
-
-
பேருந்து தரிப்பிடம் மெலிய குளிர் இரண்டு ஜோடிகள் அவள் இருக்கையில் இருதபடி வெறித்து பார்க்கிறாள் வேறு திசையில் ,அவன் நின்றுகொண்டு மறுதிசையில் ஒரு சிகரெட்டை பற்றி ஆழமா இழுத்து புகையை குளிரின் புகாருடன் சேர்த்து வெளியேறுகிறான் .. சட்டென்று திரும்பியவன் அவளை நோக்க அவளே கண்டுக்காதவளா மறுக்க எழுந்து, தன பையில் இருந்து உருவி ஒரு சிகரெட்டை பற்றிக்கொண்டு பேருந்தை எதிர்பார்க்கிறாள் .. வந்து நிக்கிறது பேருந்து அவள் கையில் இருந்த சிகரெட்டை காலில் போட்டு மிதித்து விட்டு ஏறுவதுக்கு தயாராக ,அவனோ அங்கயே நிக்கிறான் திரும்பி பார்த்தவள் தானும் நின்றுவிடுகிறாள் .. திரும்பி வந்து அவளின் காதோரம் எதோ சொன்னவன் அவளின் கைகளை இறுக்கி பிடித்து, மறுகையால் இடையை வளைந்தபடி கொஞ்சலா அவளிடம் ப…
-
- 7 replies
- 1.3k views
-
-
முற்றத்துக் கவிஞன் புதுவை இரத்தினதுரையின் முல்லைத்தீவு முற்றத்தில் ஒருநாள் நினைவில்....! ஊர்முற்றக்கவிஞன் புதுவையின் முற்றத்தில் கரைந்த இனிய பொழுதொன்று. எங்களோடு பகிடி விட்டு , எங்களோடு அரசியல் பேசி , எங்களோடு கவிதைபேசி , எங்களோடு ஒருவனாய் கவிஞனாய் வாழ்ந்து காலநதிக்கரையில் புதுவையென்ற பெயரை மட்டும் ஞாபகம் தந்துவிட்டுக் காணாமற்போன புதுவை இரத்தினதுரை இன்றில்லை. அந்தக் கலைஞனின் முற்றத்தில் கண்ணகையம்மன் உற்வச காலத்தில் நடந்த சந்திப்பின் நினைவோடு கரையும் நாட்களிது. 2003ஆண்டு சமாதான காலத்துச் சந்தோசங்களில் கலந்திருந்த பொழுது. வற்றாப்பளை கண்ணகையம்மனின் உற்சவ காலம். வன்னி நிலத்தின் பெரும்பகுதி மக்கள் மச்சம் தவிர்த்து கண்ணகைக்கு விரதமிருக்கும் மாதம். எங்கும் கண்ணகையின் கதைகளை…
-
- 13 replies
- 4.6k views
-
-
ஊர்களில் பெரும்பாலும் பேசப்படும் சொல் இந்த ஓடிப்போதல் எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லுவா யாராவது பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது, அவன் அவளோட எல்லோ ஓடி போனவள் என்று .அல்லது இன்னாரின் பெடியன் அவற்ற பேத்தியோட ஓடிப்போனவன் என்று ,சொல்லும் போது அறியாத வயதில் விபரம் தெரியாத நாம் என்ன இது ஓடிப்போறது என்று குழம்பி போய், என்ன கிழவி ஓடுறான் ஓடுறாள் என்று சொல்லுற என்ன அது என்று கேட்டா உனக்கு இப்ப முக்கியம் போடா போ போய் வாய்ப்பாடு எடுத்து பாடமாக்கு என்று கிழவி கலைக்கும் .. பிறகு கொஞ்ச காலம் போக எங்க வீட்டுக்கு பக்கத்தில ஒரு கலியாணம் நடந்தது ஊரே ஒரே பரபரப்பு, இந்தா அவனின் மாமன் வாறான் ..மூத்த அண்ணன் வாறன் சரி அடிபாடு தொடங்க போகுது என்று, எல்லோரும் ஆளையால் மாறி மாறி கதையும் ஓடி ஓ…
-
- 5 replies
- 1.8k views
-
-
வசந்த மண்டபத்துத் தெய்வங்கள் (1) ஐப் பார்க்க....http://www.yarl.com/forum3/index.php?/topic/147924-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1/ சரி.. கதைக்கு வருவோம்! விசரனின் தகப்பன் ஒரு தோட்டக்காரன்! பரம்பரை, பரம்பரையாய்க் குடும்ப நிலத்தில் தோட்டம் செய்து வருபவர்! மிளகாய், புகையிலை போன்ற காசுப் பயிர்களுடன் தனது குடும்பத் தேவைக்காக கத்தரி, தக்காளி, பயத்தங்காய், பாகல் மற்றும் கொத்தவரங்காய் என்பனவற்றை நடுவதுடன் அவரது தோட்டம் முடிந்து விடும்! பரம்பரை நிலம் தவிர்த்து, …
-
- 11 replies
- 1.7k views
-
-
வாழ்வின் மரணத்துக்கு பக்கதில் இருந்து திரும்புதல் என்பது இப்பொழுது சுகமான மீட்டலா இருந்தாலும் அவ்வேளைக்ளும் அந்த தருணங்களும் படபடப்பானவை ஒவ்வெரு நொடியும் பொழுதும் பக் பக் என வாங்கும் மூச்சை வேகமா விடவும் முடியாமல் அமைதி காப்பது என்பது அதை விட கொடிது .. அவ்வாறு அனுபவித்த ஒரு சம்பவத்துக்கு உங்களை கூட்டி போகலாம் வாருங்கள் .. பயிற்ச்சிகள் முடித்தா வேளை மூன்று அணிகள் பிரித்து இரண்டு இரவுகள் காட்டில் மறைந்து வாழ்வெனும் ஒரு அணி அவர்களை தேடி மிகுதி இரண்டு அணியும் செல்ல வேணும் கண்டு பிடித்தால் பிடித்து வந்து தண்டனை கொடுக்கலாம் எப்படியும் என்று சொல்லி ஏழு ஏழு பேர்களா பிரித்து குலுக்கள் முறையும் தெரிவு நடக்கு முதல் அணியே எங்கள் அணி தலைமறைவு ஆகணும் இரண்டு இரவு இன்று பின்னேரம்…
-
- 12 replies
- 1.8k views
-
-
உலர்த்திய மஞ்சள் சுடிதாரை காற்றிலே உதறிவிட்டு கயிற்றிலே தொங்கவிட்டு அது காற்றிலே அலையாமல் இருக்க இறுக்கியை அழுத்திவிட்டு, அடுத்த உடைக்காக கொஞ்சம் ஒதுக்கியபோது தான் அவள் முகம் எனக்கு தெரிந்தது. பெண்மைக்கு ஏற்ற உடல், குளித்த பின்னர் வடிவாக துவட்டாமல் அணிந்திருந்த ஆடைகள் சில இடங்களில் ஈரம் மிச்சம் இருந்ததை காட்டின எங்கள் மனசை போல. நீண்ட கரிய முடி, கொடியிலே கதிரை வைக்காமல் எட்டி துணிகளை காயவைக்க கூடிய அளவான உயரம். பிரம்மன் மற்றவர்களிடம் கொடுத்து படைக்காமல், தானே சிரத்தை எடுத்து படைத்த ஒரு அழகுப்பதுமை. கோயில் கோபுரத்திலே இருந்த சிலை உடைந்து கீழே விழுந்து விட்டதோ என்று அண்ணாந்து பார்க்க வைக்கும் ஒரு அழகு தேவதை. நான் வந்த நோக்கம், இலக்கு, கடமை, ஒழுக்கம் எல்லாவற்றைய…
-
- 17 replies
- 2.8k views
-
-
கொஞ்சம் மங்களான பொழுது சூரியன் அப்பொழுதுதான் குளக்கரையின் முடிவில் மீனுடன் பேசிக்கொண்டு இருந்தான் தலையில் கொஞ்ச விறகு கட்டைகளை சுமந்தபடி மணியக்கா வேகமா குளக்கட்டின் விளிம்பில் நடந்தபடி இருந்தார் .... மேச்சலுக்கு போன லட்சுமி வீடு வரமுன் போகவேணும் என்னும் வேகம் மட்டும் மணியக்கா கண்களில் குடிகொண்டுள்ளது தான் போக கொஞ்சம் சுணங்கினாலும் களனி தண்ணியை தட்டி ஊற்றி முற்றம் எல்லாம் சேறா ஆக்கி போடுவாள் என்று சேலை தலைப்பை இழுத்து செருகிக்கொண்டு நடந்தாள் மணி ... அந்த அந்திசாயும் பொழுதுதான் கண்ணனுக்கு பிடிச்ச பொழுது குளக்கரை ஆலமரம் எப்பொழுதும் தனியா வந்து இருத்து ரசிப்பது அவனுக்கு ரொம்ப பிடிக்கும் தனிமையில் இருக்கும் பொழுதுகளில் அவனின் சிந்தனை எல்லாம் எதிர்காலம் எப்படி அமையும் என்பதே .…
-
- 4 replies
- 1.1k views
-
-
அந்தக் கடற்கரையின் அலைகள் அவனது காலடியைத் தொட்டுச் சென்றன! மாலை நேரத்தில் அவன் அந்தக் கடற்கரைக் கோவிலுக்கு வருவதும், அந்தக் கடற்கரையின் ஓரத்தில் காலடிகள் பதிய நடப்பதும், சற்று நேரத்தில் அந்தச் சிற்றலைகள் அவனது காலடிகளை நனைத்து அழிப்பதும், அவனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நடந்து வரும் சம்பவங்கள்! தகிக்கும் தாம்பாளத் தட்டாக, கதிரவனும் தனது அன்றைய பணியைச் செவ்வனே செய்த ஆத்ம திருப்தியுடன், மெல்ல மெல்ல மேல் திசையில் மறையும் காட்சியும் அவனுக்கு மிகவும் பிடிக்கும்! அவனது பெயர், அவனுக்கே மறந்து போய் விட்டு நீண்ட நாட்களாகி விட்டது! இப்போதெல்லாம் அவனுக்கு ஊர்ச்சனம் வைத்த பெயரே, அவனது பெயராக நிலைத்து விட்டது. அந்தப் பெயர் தான் ‘விசரன்' ! கொஞ்சம் வளர்ந்த சனங்கள், கொஞ்சம…
-
- 13 replies
- 1.7k views
-
-
பீனாகொலடா ( சிறுகதை ) / சாத்திரி ( பிரான்ஸ் ) Oct. 17 2014, அக்டோபர், இதழ் 60, இலக்கியம், சிறுகதை, முதன்மை 5 no comments இன்று லீவு நாள் வழக்கம் போல ஆறுதலாக நித்திரையால் எழும்பி சோம்பல் முறித்து எழும்பி போய் ஒரு பிளேன் டீ யை போட்டு எடுத்த படி ஹாலுக்குள் வந்து டிவியை போட்டு விட்டு சோபாவில் அமர்ந்து டீ யை ஆசையாய் ஒரு உறுஞ்சு உறுஞ்சும் போதே "என்னாங்கோ ஒருக்கா வாங்கோ "எண்டு அறையில் இருந்து மனைவியின் சத்தம்.."லீவு நாளிலை கூட நிம்மதியாய் ஒரு டீ குடிக்க முடியேல்லை" என்று சின்ன சினத்தோட அறைக்குள் போய் எட்டிப்பார்க்க கட்டிலில் குவிந்து கிடந்த துணிகளில் சிலதை எடுத்து என்னிடம் நீட்டியபடி இதுகளை கொண்டு போய் ரெட் குறொஸ் பெட்டிக்குள்ளை போடிட்டு வாங்கோ முக்கியமா இந்த பச்சை…
-
- 19 replies
- 3.1k views
-
-
ஒரு அறை நடுவில் ஒரு விளக்கு எதிர் எதிர் மூலைகளில் இரண்டு ஆண் பூனைகள், இரண்டு பெண் பூனைகள் விளக்கு அணைக்கப்படுகின்றது அடுத்து என்ன நடக்கும்? ------------------- இதனை கள உறவுகளே தொடருங்கள்
-
- 13 replies
- 1.3k views
-