கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
648 topics in this forum
-
சாரதாஸ் இலவசம் ---------------------------- அவரை அங்கே பார்த்தது மிகவும் சந்தோசமாக இருந்தது. அவருக்கு அப்பொழுது 75 அல்லது 80 வயதுகள் இருக்கும். ஆனாலும் அவரில் என்றுமே வயது தெரிவதில்லை. நல்ல உயரமும், அவரின் திடகாத்திரமான நிமிர்ந்த உருவமும் என்றும் அப்படியே இருக்கின்றது. நான் மிகச் சிறுவனாக இருந்து போது அவர் கால்ப்பந்து விளையாடியதை பார்த்திருக்கின்றேன். பின்னர் நான் வளர்ந்து, ஓரிரு வருடங்கள் அவருக்கு எதிராக விளையாடியிருக்கின்றேன். அங்கிருந்த பல கழகங்களில் அவர் ஒரு கழகம், நான் வேறு ஒரு கழகம். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். தனக்கு ஞாபகமில்லை என்று மிகவும் தயக்கத்துடன் சொன்னார். என் தந்தையை அவருக்கு ஞாபகம் இருந்தது. என்னைப் போல ஆயிரம் பேரை பார்த்திருப்பீர்கள் என…
-
-
- 5 replies
- 658 views
-
-
-
-
- 5 replies
- 631 views
-
-
உலகம் சுற்றும்.. குருவிகளுக்கு ஒரு திமிர் இருந்தது.. தமிழில "டிஸ்ரிங்சன் - (Distinction) எடுத்தது என்று. அந்தத் திமிரோட.. புலம்பெயர்நாடுகளில் ஆண்டு தோறும் நடக்கும் தமிழ் மொழி பொதுப்பரீட்சைக்கான ஆயத்தம் நடந்து கொண்டிருக்கிறது... அதில்.. ஆண்டு 7 பயிற்சி வினாக் கொத்து ஒன்று குருவிகளின் கண்ணில் பட அதைக் குருவிகள் கொத்தி பார்க்கத்துடிச்சுதுங்க.. சும்மா இல்ல..show off க்குத்தான்.. தமிழில.. படம் காட்ட. முதல் கேள்வியே.. ஈழத்தில் வன்னிப் பகுதி எத்தனை "பற்று"களாகப் பிரிக்கப்பட்டிருந்தது..??! போச்சே வடை போச்சே. டிஸ்ரிங்சன் கிழிஞ்சு போச்சு. சிங்களவன் டிசைன் பண்ணின தமிழைப் படிச்சிட்டு.. தமிழிலை டிஸ்ரிங்சனை எடுத்திட்டு... சோ காட்ட வெளிக்கிட்டா..தமிழன் டிசைன் பண்ணின பேப்பரில கவுண்…
-
- 5 replies
- 1.4k views
-
-
காலை நாலரைக்கு அடிக்கும் முதல் விசில் கேட்பதுக்கு சந்தர்ப்பம் இல்லை நித்திரை அமுக்கி வைத்து இருக்கும் அதுக்கு பிறகு இரண்டாவது விசில் இரண்டுதரம் பறக்கும் திடுக்கிட்டு முழிச்சா அவன் அவன் இது என்ட இது உண்ட என்று இழுபாடு நடக்கும் பொழுது வெளிக்கும் வெளிச்சத்தில் இதால நாங்க எப்பவும் கலட்டி மடிச்சு தலைமாட்டுக்கு கீழவே வைத்து படுக்கிறது ..எழும்பின வேகத்தில் நித்திரை வெறியில் மாறி மாறி எடுத்துக்கொண்டு ஓடினா வரிசை கட்டி நின்று நம்பர் சொல்லிட்டு அவர் அவர் தங்கள் குழுக்களுடன் தங்களுக்கு கொடுத்த கிணத்தடிக்கு போனா வாளி சண்டை நடக்கும் சரி ஒருத்தன் குளிக்க பக்கத்தில நின்று குளிப்பம் என்றால் மற்றவன் காலுக இருப்பன் அங்கால போடா என்று வாளிய விட்டா அது கீழ உள்ளவன் தலையில விழும் ஐயோ என்று அவன்…
-
- 5 replies
- 1.7k views
-
-
வித்தியாசமான வீரன் கப்டன் ஊரான் அல்லது கௌதமன் அழியாச்சுடர் ஓவ்வொரு குழந்தையும் மண்ணில் பிறக்கின்ற போது அந்தக் குழந்தையைப் பெற்ற குடும்பத்தின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் வித்தியாசமானவை. ஒவ்வொரு அம்மாக்களும் உலகின் பெருமைகளையெல்லாம் தன் பிள்ளை பெற்றுச் சிறப்படைய வேண்டுமென்றே கனவுகள் காண்பார்கள். அத்தகைய கனவுகள் ஊரான் அல்லது கௌதமனின் அம்மாவுக்கும் நிச்சயம் இருந்திருக்கும். 2அக்காக்களுக்குப் பிறகு திரு.திருமதி.அடைக்கலம் தம்பதிகளுக்கு 01.05.1974 அன்று பிறந்தான் இன்பசோதி. அந்தக் குடும்பத்தின் ஒரேயொரு ஆண் பிள்ளையும் அவனே. இன்பசோதியின் பிறப்பு வீட்டாருக்கு மட்டுமல்ல ஒருநாள் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்த்துப் புலியாவான் என்று யார் அன்று நினைத்திருப்பார்கள் ? இன்பசோதிய…
-
- 5 replies
- 1.3k views
-
-
கூண்டினுள் சோகமே வடிவாக அமர்ந்திருந்தன அப்பறவைகள். "லவ் பேர்ட்ஸ்". காதல் பறவைகள். கூண்டைத் திறந்து விரல்களைக் குவித்து, கையை உள்ளே நீட்ட, அதில் தாவி அமர்ந்துகொண்டது காதல் சோடியில் ஒன்று. அலகைத் தாழ்த்தி அவனது கரத்தை மென்மையாகக் கொத்தி, மீண்டும் அவனது முகத்தில் ஏதோ தேடி.... மறுபடியும் கையை உற்றுப் பார்ப்பதுமாக.... அவனது முகத்தில் முகிழ்த்த உணர்ச்சிரேகைகளையும், கரத்தின் ரேகைகளையும் ஒப்பிட்டு, எதிர்காலத்துக்குப் பதில் தேடுகிறதோ? யாரது எதிர்காலம்.... தனதா? எனதா....? எதிர்காலத்திற்கான கேள்விகளை விதைத்துச் சென்ற யாழினியின் தாக்கம்.... அவள் தானே உருவாக்கி, வளர்த்து, தீர்மானித்து, முடிந்த முடிவாய் அவனின் நிம்மதியை முடித்த செயலுக்குப் பரிகாரம் உண்டா என …
-
- 5 replies
- 1.2k views
-
-
1988ஆம் ஆண்டு வீரகேசரியினால் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற சிறுகதை. மீள் பிரசுரம் - 13-12-2015 ஞாயிறு வீரகேசரி வாரவெளியீடு நன்றி வீரகேசரி. மானுடம் தோற்றிடுமோ! அந்த நள்ளிரவில் தூரத்தே வெடிச்சத்தங்கள் கேட்டன. குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த அவளுக்கு நெஞ்சுக்குள் சிலீரென்றது. வந்திற்றானுகள் ரவண்டப்புக்கு! இவர இப்ப என்ன செய்யிற! என்ன மாதிரி ஒளிக்கிற! - குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்தாள். மனம் கிடந்து பதறியது. தற்செயலா வந்து இவரையும் கூட்டிற்றுப் போனாஎனக்கும் என்ர புள்ளக் குஞ்சுகளுக்கும் என்ன கெதி! போட்டு அடிச்சுப் போடுவானுகளோ தெரியா? இவர் அதுகளத் தாங்கவும் மாட்டார். - கணவனை …
-
- 5 replies
- 3.9k views
-
-
காலை வேலையை முடிச்சிட்டு மெட்ரோவில் பப்பரக்கா என்று முன்சீட்டு வரை காலை நீட்டி இருந்தது வந்தேன் ஒரு இடத்தில ஒரு அண்ணை ஏறினாறு அப்படியே வந்து என் முன்னாடி இருந்தாரு நானு காலை மடிச்சு மரியாதையா இருந்தேன் .. காரணம் ஏறினவர் நல்ல அழகா உடை அணித்து ஒரு உயர்தர வேலைக்கான மிடுக்குடன் அவ்வளவு அழகா இருந்தார் சிறிய புன்னைகையை தவழவிட்டபடி .. ஒரு சிறிய அமைதியின் பின் பேச்சு கொடுத்தார் தம்பி நீங்க தமிழா நான் மனதில் (படிச்சபயல் நம்மகூட பேசுது )நினைத்தபடி ஆமா அண்ணே என்று சொல்லிட்டு இருக்க சொன...்னாரு உலகத்தில வன்முறை ;பயங்கரவாதம் தலை தூக்கி ஆடுது (ஒருவேளை இவன் ரகசிய போலீஸோ) இதில இருந்து மீள ஒருவழிதான் இருக்கு .. நான் ஆவலா என்ன வழி அண்ணே நீங்கள்எல்லோரும் ஆண்டவரிடம் சரண் அடையவேணும் (இத…
-
- 5 replies
- 971 views
-
-
குரு பார்வை -------------------- அது எங்களின் பரம்பரைப் பள்ளிக்கூடம், அங்கே தான் படிக்க வேண்டும் என்று சொல்லியே அங்கே முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். வீட்டிலிருந்து அந்தப் பாடசாலைக்கு போகும் வழியில் இன்னும் இரண்டு பாடசாலைகள் இருந்தன. ஆனாலும், அவை இரண்டையும் தாண்டிப் போய், பரம்பரையை தொடரும் கடமை எனக்கு அந்த தூரத்துப் பாடசாலையில் இருந்தது. அத்துடன் அங்கே சில ஆரம்ப வகுப்புகள் மட்டுமே இருந்தன. அந்த வகுப்புகள் முடிந்த பின்னர் என்ன செய்வதென்ற இக்கட்டான நிலை இந்தப் பரம்பரையில் இதற்கு முன்னர் ஏற்பட்டிருக்கவில்லை. அந்த நிலை எனக்கு ஏற்படும் போல இருந்தது. பின்னர், வேறு வழியில்லாமல், சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பெரிய பாடசாலைக்கு, பெரிய வகுப்புகளுக்காக …
-
-
- 4 replies
- 651 views
-
-
1995 ம் ஆண்டு, சாள்ஸ் அன்ரனி படையணி திருமலையில் செயற்பட்டுக் கொண்டிருந்த காலம். திரியாய்க் காட்டுப்பகுதியில் படையணியின் ஒரு பகுதி தங்கியிருந்தது. திருமலை மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் இருக்கும் மினிமுகாம் மீது தாக்குதல் நடாத்துவதற்கான திட்டமிடல்கள் பூர்த்தியாகி, அப்பகுதிக்கு செல்வதற்காக அணிகள் தயாராகிக் கொண்டிருந்தன. நீண்ட தூரம் நடந்து சென்று, தங்கியிருந்து மறுநாள் தாக்குதலை நடாத்த வேண்டும், ஆகையால் தேவையான ஆயுதவெடிபொருட்கள், ஏனைய அத்தியாவசிய பொருட்கள், சமையல் உபகரணங்கள் என்பவற்றை ஒழுங்குபடுத்திக் கொண்டு எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென ஒரு வெடிச்சத்தம் காட்டை அதிரவைத்தது. மரங்களில் இருந்து குருவிகள் கீச்சிட்டுக்கொண்டு பறந்தன. குரங்குகள் சத்த…
-
- 4 replies
- 1.6k views
-
-
பக்கத்து வீட்டு அழகிய அரக்கி. புதிதாக குடிவந்த எனக்கு பக்கத்து வீட்டுக்காரர்களின் அறிமுகம் இல்லாத காலமது. பக்கத்து வீட்டை ஒரு காரில் சிலர் வந்திறங்கியது எனது கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் சில நிமிடங்களில் பக்கத்து வீட்டில் இருந்து வந்த "மியாவ்" என்னை நிலை குலைத்தது. அந்தக்குரல் அவ்வளவு இனிமை. அது பூனையில்லை, பூனையைக் கூப்பிடும் ஒரு பெண்ணின் குரல். குரலே இப்படியென்றால் அவள் எப்படி இருப்பாள்? மனமும் அலையத் தொடங்கியது. அவள் வீட்டில் இருக்கும் போது எப்போதும் கதைத்துக் கொண்டிருப்பாள். குரல் என்னைக் கொல்லும். எனக்கோ எப்படியாவது அவளைப் பார்த்து விட ஆசை. நடுவே மதில் எட்டிப் பார்த்தால் ஏதாவது ஏடாகூடமாகி விடுமோ என்ற பயம். அப்படியும் வீட்டுக்குள்ளிருந்து யன்னலில…
-
- 4 replies
- 2.5k views
-
-
மனவலி யாத்திரை.....! (ஒரு போராளியின் பிரிவின் நினைவு) இக்கதை 19.03.03 எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 11 வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்) அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அவனது குரல் அழைக்கிறது. விழிப்புலனில் சிக்காத முகம் ஆனால் அந்தக்குரல் …
-
- 4 replies
- 915 views
-
-
2010 ஜனவரியோடு அவனும் அஞ்சலியும் பிரிந்து மூன்று வருடங்கள் ஆகிவிடும். இந்த நிலையில்தான், அஞ்சலி அவனுடன் பேசும்போதெல்லாம்.... அடிக்கடி அவனிடம் ஒரு விடயத்தைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தாள். "எப்பயடா உன்னை பாக்கிறது?" என அவள் அடிக்கடி கேட்க ஆரம்பித்ததிலிருந்தே, அஞ்சலி அவனை ரொம்பவே மிஸ் பண்ணுறாள் என்பதனை இவனால் உணரமுடிந்தது. ஆனால் இவனது அப்போதைய சூழ்நிலை அவளது விருப்பத்தை உடனடியாக நிறைவேற்றக்கூடியதாக அமைந்திருக்கவில்லை 'அஞ்சலியை பார்க்கவேணும்... அவளோடையே இருக்கவேணும்....ரொம்ப சந்தோசமாக.... மனம் நிறைந்த காதலோடு வாழவேணும்..... !' இதைத்தவிர அவனுக்கு அதிகபட்ச ஆசைகள் என்று எதுவும் இருந்ததில்லை. அவனது எண்ணமும் சிந்தனையும் அதுமட்டுந்தான். அவனது மனம் பூராவும் அஞ்சலியும் அவ…
-
- 4 replies
- 1.7k views
-
-
மூண்டாவது சீட்டுக்கு கூடியாச்சு. கழிவு இன்னும் பெரிசா தான் இருக்கு, கட்டாய கழிவு 13‘600. இந்த முறை 22‘500 மொத்த கழிவு. ஆறுமுகம் வாங்கீற்றார். கழிவு எப்புடியும் பெரிசா இருந்தாலும் இவருக்கு தேவையா இருக்கு. கழுத்தில கத்திய வச்சமாதிரி நிலமை. 130‘000ல நிண்ட கடன் சீட்ட கழிச்சு இப்ப 77‘000 கிட்ட நிக்குது. சீட்டு எடுத்ததால அந்த மாசத்தில கட்டுப்பணம் இல்ல. சொந்தக்காரர் யாரோ 15‘000 ஆயிரம் வட்டிக்கு தாறினம் எண்டதால இன்னும் 52‘000 எங்க போறது எண்ட யோசினை. வேற சீட்டுகள் நடக்குறதால அங்க தெரிஞ்ச ஆளுக்கு சீட்டு விழுந்திருக்கு. 65‘000 சீட்டுக்கு 11‘000 கழிவில 54‘000 வந்து இருக்கு. அத தர சொல்லி கெஞ்சி கூத்தாடி வாங்கீற்றார். யாரோ பாவம் வாங்குற சம்பளத்துக்கு ஏத்த சீட்டு போட்டிருக்கிறார். அந்த …
-
- 4 replies
- 2.5k views
-
-
நட்சத்திரங்களுக்கு அப்பால் --------------------------------------------- உடனடியாக உங்களுடன் நாங்கள் கதைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்ன போது நேரம் இரவு 10:30 மணி. நேற்றிலிருந்து அங்கேயே நின்று கொண்டிருந்தேன். இந்த இரண்டு நாட்களில் எங்களுடன் வேலை செய்யும் வேறு பலரும் மாறி மாறி எங்களுடன் வந்து நின்றனர். இன்றிரவு மற்றவர்களை வீடுகளுக்கு போகச் சொல்லி விட்டு நானும் நண்பனும் மட்டுமே அங்கே இருந்தோம். இங்கிருக்கும் மிகச் சிறந்த மருத்துவமனைகளில் இது ஒன்று. உலகத்திலேயே மிகச் சிறந்தவற்றில் இது ஒன்று. அதி அவசர மற்றும் இதயம் சம்பந்தான பிரிவுகளிற்கு என்று இருக்கும் கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் நண்பனின் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்தார். இரண்டு வாரங்களாக இன்னொரு மரு…
-
-
- 4 replies
- 452 views
-
-
"நன்றியுள்ள நண்பன்" [நாய்] பூனையும் நாயும் வளர்ப்புப் பிராணிகளில் முன்னணி வகித்தாலும், தான் கக்கியதையே திரும்பவும் உணவாகக் கொள்ளும் நாயின் மேல் எனக்கு ஒரு அருவருப்பு எப்பவும். அது. மட்டும் அல்ல, ஒரு துண்டு பிஸ்கட் போட்டால் போதும். வாலை ஆட்டி, நம்முடன் வரும் அதே நாய், வெறி பிடித்து விட்டால், பிஸ்கட் போடுபவனையே கடித்து குதறியதும் கேள்விப்பட்டுள்ளேன். அதனாலோ என்னவோ நான், நாய் வளர்ப்பதை எங்கள் வீட்டில் தடுத்துவிட்டேன். என்றாலும் பக்கத்து வீட்டில் நல்ல அழகான நாய் வளர்ந்து வந்தது. நான் வேலைக்கு போகும் பொழுது அல்லது திரும்பி வரும் பொழுது, அந்த வீட்டு அம்மா, தன் செல்ல நாயுடன் படலையில் பிராக்கு பார்த்துக்கொண்டு நிற்பார். என்னை கண்டால் தம…
-
-
- 4 replies
- 602 views
-
-
அஞ்சலி தன் சந்தோசம் என்றாலும் துக்கம் என்றாலும்.... முதலில் இவனோடுதான் பகிர்ந்துகொள்வாள். அன்றும் அப்படித்தான்..... அவள் இந்தியாவிலிருந்து போன் பண்ணியிருந்தாள். வழமைக்கு மாறான அவளது கனமான குரல்... அவள் நன்கு அழுதிருக்கிறாள் என்பதனை உணர்த்தியது. "என்ன அஞ்சு... என்ன ஆச்சு? ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?" என அவன் கனிவாக விசாரிக்க... மறுமுனையில், விம்மத் தொடங்கினாள் அஞ்சலி. "என்ன நடந்தது அஞ்சு....? என்ன ஆச்செண்டு சொன்னாத்தானே தெரியும்.... " என மீண்டும் வினவ, "நான் நாளைக்கே மலேசியா வாறன். எனக்கு இங்க இருக்க விருப்பமில்லை. நான் லண்டனுக்கு திருப்பிப் போகேலடா. உன்னோடயே வந்து இருக்கப்போறன்.... !" சொல்லிவிட்டு மீண்டும் விம்மியழத்தொடங்கினாள். "அஞ்சு.... என் செல…
-
- 4 replies
- 3.7k views
-
-
Thursday, April 20, 2017 மனவெளி அலைவு (சாந்தி நேசக்கரம்) அவனுக்கும் அவளுக்குமான உறவு உரையாடல்கள் மூலம் உருவாகி வளர்ந்து விருட்சமாகி நிற்கிறது. எந்த விடயங்களைப் பற்றி அவர்கள் பேசிக்கொள்ளவில்லை ? அவர்களுக்கிடையே பேசாப்பொருள் என்று எதுவுமே இருந்ததில்லை. உரையாடலில் ஒருநாள்....., நாங்கள் முற்பிறப்பில ஒண்டாப் பிறந்திருக்கிறம் போல....அதுதான் இந்தப் பிறப்பிலயும் தொடருது. என்றான் அவன். முற்பிறப்பெல்லாம் நம்பிறியேடா ? இது அவள். தெரியேல்ல..., ஆனால் உங்களுக்கும் எனக்குமான உறவு நுற்றாண்டுகளுக்கு மேல இருந்திருக்கு. நீங்கள் அப்…
-
- 4 replies
- 1.8k views
-
-
"காதல் தந்த தண்ணீர் குடம்" நான் வேலை முடிந்து, வீடு திரும்புகையில், நான் வேலை செய்யும் ஊர் சந்தியில் இருந்த பெட்டி கடை ஒன்றில் சூடாக வடை அருந்திக் கொண்டு இருந்தேன். இது தான் என் இரவு சாப்பாடும் கூட. நான் இந்த ஊருக்கு அண்மையில் வேலை மாற்றம் பெற்று வந்தவன். எனக்கான அரச விடுதி பெற ஒன்று இரண்டு மாதம் பொறுத்து இருக்கவேண்டும். ஆகவே தற்காலிகமாக ஒருவரின் வீட்டில் ஒரு அறையில் தங்கி உள்ளேன். ஆகவே சமையலுக்கு அங்கு பெரிதாக வசதி இல்லை. எனவே காலை, மதிய உணவை வேலை தளத்திலும், இரவு உணவை இலேசாக இந்த பெட்டி கடையிலும் இப்போதைக்கு சமாளிக்கிறேன் ஆனால், இன்னும் ஒன்றையும் நான் சொல்லத்தான் வேண்டும், இந்த பெட்டிக் கடையுடன் சேர்ந்த வீட்டில் தான் கடைக்கார…
-
-
- 4 replies
- 308 views
-
-
அவனுடைய கையில் UK வீசா அலுவலகத்தால் கொடுக்கப்பட்ட ஆவண உறை இருந்தது. அந்த மூடிய உறைக்குள்தான் வீசா கிடைத்திருக்கின்றதா இல்லையா? என்ற அவனதும் அஞ்சலியினதும் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முடிவும் அடங்கியிருந்தது. ஒருவித படபடப்போடு அதைத் திறந்தவனுக்கு அதிர்ச்சியுடன் கூடிய மிகப் பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. சில அநாவசியக் காரணங்களை வீசா நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களாகக் கூறி அதை மூன்று பக்கத்தாள்களில் விளக்கமாகக் குறிப்பிட்டிருந்தனர். 'அஞ்சலியுடன் கூடிய விரைவில் சேரப்போகிறோம்' என்ற கனவில் இருந்தவனுக்கு.... 'அது இப்போதைக்கு இல்லை' என்பது... மிகப்பெரும் ஏமாற்றத்தையும் கவலையையும் கொடுத்திருந்தது. இவன் தன்னை நினைத்து கவலைப்பட்டதைவிட... அஞ்சலி இந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள…
-
- 4 replies
- 2.1k views
-
-
சட்டி (நிமிடக்கதை(யல்ல)) பூனகரியை அண்மித்த யுத்தம் கோரத்தாண்டவமாடியபோது அவளது ஊரும் இடம்பெயரலானது. கணவன் கடந்த ஆண்டு போர்முனையில் வித்தாகிவிட இருபிள்ளைகளோடு இடர்களைத்தாங்கித் தனது பிள்ளைகளுக்காக வாழ்ந்தவள் வினோதா. அமைதியிழந்த சூழலில் உணவோ நித்திரையோ இல்லாது மக்களோடு மக்களாக நகர்வதும் ஒதுங்குவதும் பின் இன்னொரு இடம் நோக்கி நகர்வதுமாய் இன்று புதுக்குடியிருப்பிலே. எங்கும் மரணமும் பட்டினியும். பணமிருந்தாலும் பசியாற வழியில்லை. சற்று ஓய்வாக இருக்க எண்ணினாலும் முடியாது. பிள்ளைகள் பசியால் துடிக்க என்ன …
-
- 4 replies
- 2.5k views
-
-
வன்னி மண்ணும் நட்புக்களும் என்பது எழுத்துக்களில் சொல்லவோ கண்முன் கொண்டுவரவோ முடியாத ஒரு அடன்பன்கொடி உறவுனலாம் .. வழமையா வேலை வெட்டி இல்லாமல் சுற்றி திரியும் எமக்கு சாயங்காலம் ஆகிட்டாசைக்கிளை தூக்கிட்டு போறது சந்தைக்கு பக்கமா ஒரு வீதி இருக்கு அதில் எல்லோரும் கூடி நிப்பது வழமை பம்மல் ...பகிடி ..சேட்டைகள் என்று போகும் அந்த இனிய சாயங்கால பொழுது .. சந்தையில் வேலை முடிந்து நிக்கும் பெடியளும் அதில வந்துநின்று ஒரு குட்டி மகாநாடு நடக்கும் ஒரு ஓரமா போகும் போது கடைக்கண் பார்வை பார்த்து போகும் பெண்பிள்ளைகளும் என்ன இன்னும் நம்மாளை காணவில்லை என்று உள்மனதில் ஏங்கும் தோழனும் தூரத்தில் ஆளைக்கண்டால் கண்களால் ஆள் வருது என்று சொல்லும் பாலாய நட்பும் என்று அந்த பொழுதுகள் இனிமையானவை ..(காவ…
-
- 4 replies
- 1.3k views
-
-
காமாட்சி அம்மா, பேரன் விளையாடி கொண்டு இருப்ப தை பார்த்து கொண்டு அருகில் இருந்த படிக்கட்டில் இருந்தார். பக்கத்து வீட்டு பொபி .. பேரன் சங்கர் ...முன் வீட்டு மைக் ...இவர்கள் விளையாட ஆரம்பித்தால் பொழுதுபோவதே தெரியாமல் விளையாடுவார்கள் .கால நிலை நன்றாக் இருந்தால் மட்டு இது நடக்கும் இடையிடையே பேரன் சங்கர் ... அம்மம்மா ஜூஸ் என்றும் சிப்ஸ் என்றும் உள்ளே வந்துபோவான். குளிர் காலங்களில் கம்புட்டர் கேம் என்று ... கூப்பிடுவதும் கேட்காமல் வி ளை யாடுவார்கள். அன்று வழக்கம்போலவே விளையாடி விட்டு . குளிக்க செல்லும்போது அம்மாம்மா எனக்கு முட்டையும் பானும் தாங்கோ என்றான். ஓம் ராசா என்றவள் ..இவள் வேணி யையும் இன்னும் காணவில்லை மணி ஏழாகி விட்டது பேரனுக்கு பசி போலும் என்ற…
-
- 4 replies
- 1k views
-
-
"மாயா" செப்டம்பர் 22, 1995 , என்னால் மறக்க முடியாத ஒருநாளாக இன்னும் என் மனதை வருத்திக்கொண்டு இருக்கிறது. அன்று தான் என் அன்பு சிநேகிதி இறந்த தினம். அவர் சாதாரணமாக இறக்கவில்லை, அந்த கொடுமையை நினைத்தால் எவருமே கதிகலங்குவார்கள். அவளும் அவளின் மாணவிகளும் புத்தரின் தர்ம போதனைக்கும் உலக நீதிக்கும் எதிராக துண்டு துண்டாக உடல்கள் சிதறி நாகர்கோவில் மகாவித்தியாலத்தில் பிற்பகல் 12.50 மணியளவில் விமானப் படையினரின் குண்டுத் தாக்குதலில் 21 - 26 மாணவர்கள் உட்பட கொல்லப் பட்ட தினம் ஆகும். அது தான் நான் இன்று, இந்த கார்த்திகை தினத்தில் நேரத்துடன் துயிலில் இருந்து எழும்பி யன்னல் வழியாக ஆகாயத்தை வெறுத்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அரசியல், யுத்தம…
-
-
- 4 replies
- 650 views
-
-
70வதுக்கு முந்திய இலங்கை தமிழர்களின் ஆதிக்கம் நிறைத்து இருத்தது சிங்களவனை எவரும் மதிப்பது இல்லையாம் கேட்டால் மோட்டு சிங்களவன் எண்டு சொல்லுவார்கள் எதுக்கும் அவன் தமிழ் வர்த்தகர்கள் முதலாளிகளிடம் கைகட்டி நின்று ஊதியம் வாங்குவது இவர்கள் சொல்வதை செய்வது ஆக தென்னிலங்கையில் நாங்கள் தான் ராஜாக்கள் என்கிற நினைப்பில் எம்மவர் இருத்தனர் என்பது உண்மை ஒரு உதாரணம் கொழும்பு செக்கட்டி தெருவில ஒருமுறை கோயில் திருவிழா நடத்து கொண்டு இருந்தது தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதால் மக்கள் கூட்டம் மிக அதிகம் அரோகரா ஒலிகள வானை பிளக்க நடந்த திருவிழாவில் தேர் அசைந்து வர தேரின் சில்லுக்கு கட்டை வைத்து திருப்பிய படி ஒருவர் வர அதை கவனித்த படி இருத்த சிங்கள போலிஸ்காரன் கட்டை வைத்தவரை பிடித்து …
-
- 4 replies
- 950 views
-