கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
649 topics in this forum
-
சுவரில் இருந்த கடிகாரம் 'டாண்... டாண்...' பன்னிரண்டு முறை அடித்து ஓய்ந்தது. திடுக்கிட்டவளாக தன் நினைவுகளில் இருந்து மீண்டாள் சந்தியா. சாய்ந்திருந்த தூணில் இருந்து சற்று நிமிர்ந்தமர்ந்து பார்வையை சுற்றுமுற்றும் ஓடவிட்டாள். அவள் அருகில், அவளின் ஒரே மகனான ராஜு நன்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அடுத்த அறையில் இருந்து வரும் 'லொக்கு... லொக்கு...' இருமல் ஒலி அவள் தாயாரின் உடல் நிலையை ஊருக்குகே பறைசாற்றியது. எதிரே கண்ணாடி பிரேமினுள் இருந்து அவளது அப்பா அவளை தன் சோடப்புட்டி கண்ணாடியோடு பார்த்து சிரித்தார். " ம்..." நீண்ட பெருமூச்சு அவளிடம் இருந்து வந்தது. 'அப்பா செத்து ஐந்து வருடமாச்சு' தனக்குள் நினைத்துக் கொண்டாள். அவள் நினைவுகளில் மீண்டும் புதைந்துகொண்டாள் அவளை அ…
-
- 5 replies
- 1.3k views
-
-
பேருந்து தரிப்பிடம் மெலிய குளிர் இரண்டு ஜோடிகள் அவள் இருக்கையில் இருதபடி வெறித்து பார்க்கிறாள் வேறு திசையில் ,அவன் நின்றுகொண்டு மறுதிசையில் ஒரு சிகரெட்டை பற்றி ஆழமா இழுத்து புகையை குளிரின் புகாருடன் சேர்த்து வெளியேறுகிறான் .. சட்டென்று திரும்பியவன் அவளை நோக்க அவளே கண்டுக்காதவளா மறுக்க எழுந்து, தன பையில் இருந்து உருவி ஒரு சிகரெட்டை பற்றிக்கொண்டு பேருந்தை எதிர்பார்க்கிறாள் .. வந்து நிக்கிறது பேருந்து அவள் கையில் இருந்த சிகரெட்டை காலில் போட்டு மிதித்து விட்டு ஏறுவதுக்கு தயாராக ,அவனோ அங்கயே நிக்கிறான் திரும்பி பார்த்தவள் தானும் நின்றுவிடுகிறாள் .. திரும்பி வந்து அவளின் காதோரம் எதோ சொன்னவன் அவளின் கைகளை இறுக்கி பிடித்து, மறுகையால் இடையை வளைந்தபடி கொஞ்சலா அவளிடம் ப…
-
- 7 replies
- 1.3k views
-
-
செல்லப்பிராணி ------------------------ நான் அங்கு போன போது அது என்னைப் பார்த்து இரவில் வந்த ஒரு திருடனைப் பார்த்து குலைப்பது போல குலைத்தது. பின்னர் அவர்கள் சில வார்த்தைகள் அதட்டிச் சொன்ன பின் தான் அது என்னை உள்ளே விட்டது. என்னை முழுவதுமாக மோப்பம் பிடித்து வைத்துக் கொண்டது. அதை நாய் என்று சொல்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதற்கு ஒரு பெயர் இருந்தது. அதன் பெயர் சொல்லியே அதைக் குறிப்பிட வேண்டும் என்பது அங்கு ஒரு விதியாக இருந்தது. நான் அங்கு பத்து நாட்கள் தங்க வேண்டி இருந்தது. அங்கு போய் அடுத்த நாளிலிருந்தே அது என்னுடன் மிகவும் நெருங்கி விட்டது. காலையில் கண் விழித்தால் அது கட்டிலின் அருகில் நிற்கும். எங்கு அமர்ந்தாலும் அது அருகே வந்து முதுகால் தேய்த்து விட்டு என் கால…
-
-
- 20 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகின்றன. புதுசா வீடு வாங்கின போது அவனுக்கு இருந்த ஒரே எதிர்பார்ப்பு வீட்டுக்குப் பின்னுக்கு நிறையக் காணி வேணும். அந்தக் காணி நிறைய அப்பிள் நட வேணும் என்பதுதான். அப்பிள் நடுறதெண்டால் ஒரு மரம் நடக் கூடாதாம் ரண்டு மரம் நட்டால் தான் அதுக்குள்ளே மகரந்தச் செயற்கை நடந்து கலப்படம் இல்லாத பழம் வரும் எண்டு தெரிந்த ஒருவர் சொன்னதைக் கேட்டு, மங்களகரமாய் இருக்கட்டுமேன் எண்டு ரண்டு வருசத்துக்கு முதல் வந்த கலியான நாளுக்கு ரெண்டு அப்பிள் மரங்களை வாங்கி வந்து வீட்டின் பின் பக்கம் இருந்த காணியில் நட்டபோது அவனுக்குச் சொல்ல முடியாத மகிழ்ச்சி. சின்ன வயசில இருந்து உந்த அப்பிள் பழம் எண்டால் அவனுக்கு கொள்ளை ஆசை. ஒருக்கா தொட்டுப் பார்…
-
- 3 replies
- 1.3k views
-
-
மேமாத நினைவும் இருகண்களை இழந்த போராளியின் கதையும். Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Sunday, May 19, 2013 தாயகத்தில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டிருந்த காலம் அது. 08.06.2003 மகளின் 5வது பிறந்தநாள். அந்தமுறைப் பிறந்தநாள் செஞ்சோலையில் காலையும் , மாலை காந்தரூபன் அறிவுச்சோலையிலும் , மதியம் நவம் அறிவுக்கூடத்தில் பல்துறை அறிவுசார் கற்கை நெறிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்த ஊனமுற்ற போராளிகளோடும் அன்றைய பொழுதை செலவிடுவதென முடிவாகி காலை 8மணிக்கு வள்ளிபுனம் செஞ்சோலைக்குச் சென்று மதியம் 12மணிக்கு விசுவமடுவில் அமைந்துள்ள நவம் அறிவுக்கூடத்திற்குச் சென்றோம். ஏற்கனவே இருமுறை நவம் அறிவுக்கூடம் போயிருந்ததில் ஏற்பட்ட அறிமுகம் பல பாடகர்கள் , இசைக்கலைஞர்கள் , கவிஞர்கள் , எழுத்…
-
- 1 reply
- 1.3k views
-
-
மீன்கொத்திப் பறவை மீன் கொத்தும் லாவகம் அவள் தேனீர் தயாரிப்பதில் இருக்கும். சிப்பந்தி வேலையென அவள் தன் வேலையினைக் கருதியதாய்த் தோன்றவில்லை. வீடு தேடி வந்தவரை உபசரிக்கும் பாங்கில் அந்தத் தேனீர்ச்சாலையில் அவள் நடந்துகொண்டாள். நான்காம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் எங்கள் காணிகளை நானே சென்று பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற ஒரு நாட்டாமைக் குணம் எனக்குள் விளித்துக் கொள்ள வீட்டில் சொன்னேன். கொடுப்பிற்குள் பெருமை சிரிப்பாக அம்மா ஒரு தொழிலாளியுடன் என்னை அனுப்பி வைத்தாள். தென்னங்காணிக்குள் ஒளிந்திருந்த ஒரு துரவோரம் நின்ற காட்டுமரம் என்னைக் கட்டிப்போட்டது. அது என்ன மரமென்று தொழிலாளியிடம் கேட்க அவர் 'ஓம் தம்பி அது வெட்டோணும், நெடுக நினைக்கிறது நேரம் கிடைக்கிறதில…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஒரு அறை நடுவில் ஒரு விளக்கு எதிர் எதிர் மூலைகளில் இரண்டு ஆண் பூனைகள், இரண்டு பெண் பூனைகள் விளக்கு அணைக்கப்படுகின்றது அடுத்து என்ன நடக்கும்? ------------------- இதனை கள உறவுகளே தொடருங்கள்
-
- 13 replies
- 1.3k views
-
-
வன்னி மண்ணும் நட்புக்களும் என்பது எழுத்துக்களில் சொல்லவோ கண்முன் கொண்டுவரவோ முடியாத ஒரு அடன்பன்கொடி உறவுனலாம் .. வழமையா வேலை வெட்டி இல்லாமல் சுற்றி திரியும் எமக்கு சாயங்காலம் ஆகிட்டாசைக்கிளை தூக்கிட்டு போறது சந்தைக்கு பக்கமா ஒரு வீதி இருக்கு அதில் எல்லோரும் கூடி நிப்பது வழமை பம்மல் ...பகிடி ..சேட்டைகள் என்று போகும் அந்த இனிய சாயங்கால பொழுது .. சந்தையில் வேலை முடிந்து நிக்கும் பெடியளும் அதில வந்துநின்று ஒரு குட்டி மகாநாடு நடக்கும் ஒரு ஓரமா போகும் போது கடைக்கண் பார்வை பார்த்து போகும் பெண்பிள்ளைகளும் என்ன இன்னும் நம்மாளை காணவில்லை என்று உள்மனதில் ஏங்கும் தோழனும் தூரத்தில் ஆளைக்கண்டால் கண்களால் ஆள் வருது என்று சொல்லும் பாலாய நட்பும் என்று அந்த பொழுதுகள் இனிமையானவை ..(காவ…
-
- 4 replies
- 1.3k views
-
-
கறுப்பி ஒரு பேப்பருக்காக கோமகன் அமாவாசையின் கரிய நிறம் அந்தக் கிராமத்தில் அட்டைக் கரியாக மண்டியிருந்தது . அவ்வப்பொழுது வவ்வால்களின் பட பட சிறகடிப்பும் , கூவைகளின் புறுபுறுப்பும் , சில்வண்டுகளின் சில்லெடுப்பும் , ஒரு சில கட்டாக்காலி நாய்களின் ஊளையும் அந்தக் கிராமத்தின் அமைதிக்கு உலை வைத்துக்கொண்டிருந்தன . கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த கந்தப்புவின் மனதுக்கு இந்த முன்னெடுப்புகள் எதோ ஒன்று நிகழப் போவதை உணர்த்தியது . கந்தப்பு மெதுவாகக் கயிற்றுக் கட்டிலில் இருந்து எழுந்து சென்று தனது கொட்டிலின் மூலையில் இருந்த சாமி படத்தின் முன்னால் இருந்த திருநீற்றுக் குடுவையினுள் கையை விட்டு நெற்றி நிறைய திருநீற்றை அள்ளிப் பூசி வாயிலும் சிறிது போட்டுக்கொண்டு மீண்டும் கயிற்றுக…
-
- 8 replies
- 1.3k views
-
-
வித்தியாசமான வீரன் கப்டன் ஊரான் அல்லது கௌதமன் அழியாச்சுடர் ஓவ்வொரு குழந்தையும் மண்ணில் பிறக்கின்ற போது அந்தக் குழந்தையைப் பெற்ற குடும்பத்தின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் வித்தியாசமானவை. ஒவ்வொரு அம்மாக்களும் உலகின் பெருமைகளையெல்லாம் தன் பிள்ளை பெற்றுச் சிறப்படைய வேண்டுமென்றே கனவுகள் காண்பார்கள். அத்தகைய கனவுகள் ஊரான் அல்லது கௌதமனின் அம்மாவுக்கும் நிச்சயம் இருந்திருக்கும். 2அக்காக்களுக்குப் பிறகு திரு.திருமதி.அடைக்கலம் தம்பதிகளுக்கு 01.05.1974 அன்று பிறந்தான் இன்பசோதி. அந்தக் குடும்பத்தின் ஒரேயொரு ஆண் பிள்ளையும் அவனே. இன்பசோதியின் பிறப்பு வீட்டாருக்கு மட்டுமல்ல ஒருநாள் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்த்துப் புலியாவான் என்று யார் அன்று நினைத்திருப்பார்கள் ? இன்பசோதிய…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஆளையே அடையாளம் காணமுடியாதளவுக்கு பயங்கர இருட்டு, கையில் அரிக்கன் லாம்புடன் அருகில் இருக்கும் வைரவர் கோயிலுக்கு தனிய நான் போய்க்கொண்டிருக்கிறேன். பென்னாம் பெரிய புளியமரம் அது கீழே ஒரே ஒரு சூலம் அதற்கு நாற்புறமும் சூழ சீமெந்தால் சுற்றிக்கட்டிய அரைச் சுவர். பனங்குற்றியாலான தூண், ஓட்டுக்கூரை நேர் எதிரே ஒற்றைப்பனை மரம் ஒன்று. கீழே ஒரு நடுகல் அது காளியின் சிலை. இது தான் அந்தக் கோயிலுக்குரிய அடையாளம். சற்று அகன்ற ஒற்றையடிப் பாதையும், சுற்றி வர பனங்கூடலும்,சிறுபற்றைக்காடுகளும் ஆங்காங்கே தெரியும் சிறு வீடுகளும் பகலில் கூட அமானுஸ்யத்தை உணர்த்தும். அரிக்கன் லாம்பை வைத்து விட்டு வைரவருக்கு விளக்கை ஏற்றிவிட்டு காளிக்கும் கற்பூரம் ஏற்றி விட்டு வருகிறேன். என்றைக்குமில்லாதவாறு அன்ற…
-
- 7 replies
- 1.3k views
-
-
கூண்டினுள் சோகமே வடிவாக அமர்ந்திருந்தன அப்பறவைகள். "லவ் பேர்ட்ஸ்". காதல் பறவைகள். கூண்டைத் திறந்து விரல்களைக் குவித்து, கையை உள்ளே நீட்ட, அதில் தாவி அமர்ந்துகொண்டது காதல் சோடியில் ஒன்று. அலகைத் தாழ்த்தி அவனது கரத்தை மென்மையாகக் கொத்தி, மீண்டும் அவனது முகத்தில் ஏதோ தேடி.... மறுபடியும் கையை உற்றுப் பார்ப்பதுமாக.... அவனது முகத்தில் முகிழ்த்த உணர்ச்சிரேகைகளையும், கரத்தின் ரேகைகளையும் ஒப்பிட்டு, எதிர்காலத்துக்குப் பதில் தேடுகிறதோ? யாரது எதிர்காலம்.... தனதா? எனதா....? எதிர்காலத்திற்கான கேள்விகளை விதைத்துச் சென்ற யாழினியின் தாக்கம்.... அவள் தானே உருவாக்கி, வளர்த்து, தீர்மானித்து, முடிந்த முடிவாய் அவனின் நிம்மதியை முடித்த செயலுக்குப் பரிகாரம் உண்டா என …
-
- 5 replies
- 1.2k views
-
-
இரவு முழுவதும் ‘உறக்கம்' கண்ணாமூச்சி விளையாடியபடி இருந்தது! இளமைக் கால நினைவுகள், மூளையின் எங்கோ ஒதுக்குப்புறத்தில் ‘பத்திரமாகப்' பொத்தி வைத்திருந்திருக்கப் பட்டிருக்க வேண்டும்! மனித மூளை எதையுமே குப்பையில் எறிவதில்லைப் போதும்! அவ்வளவும் ஒரே நேரத்தில் பொங்கிப் பிரவகிப்பது போலப் பிரமை! நினைவுகள் மட்டுமல்ல.. உடலும் இளமையானது போன்ற உணர்வும் கூட ஏற்பட.. அதிகாலையிலேயே எழுந்து அவனது விலாசத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு விட்டேன்! நடக்கும் வழியில் எதிர்ப்படும் பெண்களிடம் அந்த விலாசத் துண்டைக் காட்டிய படியே.. அவர்கள் காட்டும் திசையில் நடந்து கொண்டிருந்தேன்! எங்கிருந்து தான் ‘பிரெஞ்சு' மொழிக்கு இந்த ‘இனிமை' வந்ததோ என மனது சிந்தித்த படியே இருந்தது! ‘சூட்டியினது வீட்டுக்கு முன்…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஐந்தாம் வகுப்புப் படிக்கும் வரை நான் கல்வி பயின்றது கலவன் பள்ளியில். ஆண்களும் பெண்களும் ஒன்றாகவே படித்தோம். விளையாட்டில் நான்தான் முதல் எனது பள்ளியில். ஓட்டப் போட்டியில் என்னை வெல்ல யாரும் இல்லை என்று அப்போது எனக்கு கொஞ்சம் தலைக்கனமும்தான். மாவட்ட ரீதியான போட்டி இரு வாரங்களில் நடைபெற இருந்தது. அதற்காக ஆண்களில் மூன்று பெண்களில் மூன்று பேராகத் தெரிவு செய்து ஆசிரியர்கள் எமக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தனர். பெண்களில் நான் என்றால் ஆண்களில் கண்ணன் என்னும் ஒருவன் நன்றாக ஓடுவான். சாதாரணமாகவே எனக்கும் அவனுக்கும் சரிவருவதில்லை. எப்போது பார்த்தாலும் எலியும் பூனையும் தோற்றுப்போகுமளவு சண்டை போட்டபடி இருப்போம். அவன் போய் வாத்தியாரிடம் கோள் சொன்னாலும் அடி அவனுக்குத்தான். அதன…
-
- 13 replies
- 1.2k views
-
-
தொடர்மாடிக் கட்டிடத்தின் அறையொன்று அதிர்ந்துகொண்டிருந்தது. வயலின் கருவியின் தந்திகளிற்குள்ளால் மனித மனமொன்று பேசிவிட முனைந்து கொண்டிருந்தது. பேச்சு, யாரையும் நோக்கியதாய்த் தோன்றவில்லை. பேசவேண்டியது தவிர்க்கமுடியாததாய்த் தந்தி அதிர்ந்துகொண்டிருந்தது. நேற்றைய இரவில் ஓரு உணவகத்தில் மாயை கச்சிதமாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. 'நம்புங்கள்' என்ற கோரிக்கைக்கு அவசியமற்று நம்பிக்கை பிரவாகித்துக்கொண்டிருந்தது. எதிர்ப்பின்றிப் பிரவாகிப்பதாய்த்தோன்றும் ஆற்றில் துருத்திக்கொண்டு வெளித்தெரியும் மரக்கட்டைபோல, இந்த வயலின்காரன் அங்கு துருத்திக்கொண்டமர்ந்திருந்தான். பேச்சால் நிறைந்திருந்த மண்டபத்தில் இவன்மட்டும் வார்த்தைப்பிரவாகம் வெளிவராது, ஆட்டுக்குட்டியினை விழுங்கிக்கொண்டிருக்கும் பாம்பை…
-
- 2 replies
- 1.2k views
-
-
'ரி-56 ஆல் 'ரச்' அடிச்சுப் பாத்தபோது, ற்றிகரை விரல் அமுக்கியதற்கும், குண்டு வெளிக்கிட்டு இலக்கை அடைந்ததற்குமிடையேயான நேரம் எத்தனை சிறியது என்பது என் மூளை கிரகிக்க முடியாத சிறியதாய் இருந்தது.... படங்களிலும் கதைகளிலும் துப்பாக்கி சுடுதலைப் பார்த்ததற்கும் சுட்டபோது உணரப்பட்டதற்குமிடையேயான வித்தியாசம் வர்ணனைக்கு அப்பாற்பட்டது. சுடுதலின் ஒலி எத்தனை பெரியது! அது செவிப்பறையில் எத்தனை கடினமாய் உதைத்தது என்பதும், துப்பாக்கியின் எனது தோளின் மீதான உதைப்பின் பரிமாணமும் நான் நினைத்திருந்ததைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு பெரிதாய் இருந்தது. சண்டைகளைத் திரைப்படத்தில் பார்ப்பதற்கும் ஒரு குண்டு சுடுவதில் உள்ள உடல் வருத்தத்திற்குமிடையேயான வேறுபாடு அப்போது தான் என்னால் உணரப்பட்டது. அந்த சுடுக…
-
- 9 replies
- 1.2k views
-
-
பிரான்சுக்கு முதல் முதலில் வந்தவர் என்பதால் அவரை எல்லோருக்கும் தெரியும் வருபவர்கள் எவரும் அவரது விலாசத்தை மட்டும பிடித்தபடியே தான் பிரான்சுக்குள் புகுவர். அது போதும் என்ற நம்பிக்கை. வந்தவுடன் தங்க இடம் சாப்பாடு உடுப்பு விசா வேலை.......... எல்லாமே அவர் செய்வார். நானும் பார்த்திருக்கின்றேன். அவரது வீட்டில் உலை எப்பொழுதும் கொதித்தபடியே தான் இருக்கும். சோறு போட்டபடியே இருப்பார்கள். கறி என்றால் இறைச்சி அல்லது மீன் சிலவேளை கருவாடு. இது முடிந்தால் சமாளிக்க கத்தரிக்காய் கறியும் இருக்கும். பின்காலங்களில் பருப்பு. ஒரு ரூம்தான். சாய இடமிருந்தால் எவரும் படுத்து நித்திரையாகலாம். நின்று கொண்டே நித்திரை செய்தவரை பார்த்திருக்கின்றேன். இவ்வளவையும் பார்த்த…
-
- 13 replies
- 1.2k views
-
-
நம்மூரில ஓர் அக்கா. அவாக்கு புது சிமாட் ரீவி மேல ஆசை. வீட்டில இருந்த பழைய ரீவியோ.. பாழாகிற மாதிரி தெரியல்ல. அவா ஆத்துக்கார் போல அதுவும் அவா கூடவே ஒட்டிகிட்டு இருந்திச்சாம். ஓர் நாள் அந்த அக்காக்கு ஒரு ஐடியா தோனிச்சாம். "வேண்டாததை தலை முழுகிறது" என்றதைப் பற்றி.. இணையத்தில படிச்சு தெரிஞ்சுக்கிட்டாவாம். செலவைப் பார்க்காம.. சிமாட் ரீவி கனவில.. உடன ஒரு வாளி தண்ணியை அள்ளி வீட்டில் இருந்த பழைய ரீவி மேல ஊத்தினாவாம். தலை முழுகிட்டன் என்ற சந்தோசத்தில.. ஆகாசத்துக்கும் பூமிக்கும் பாய்ஞ்சாவாம். ஆனால்.. ரீவியோ.. தலை முழுகுப்படல்ல. அவ ஆத்துக்கார் எப்படி இத்தனை வருசமா அவாவ சுத்திசுத்தி வாறாரோ.. அது போல.. அதுவும் உன்னை விட்டுப் போகமாட்டேன் கணக்கா.. நல்ல சமர் வெக்கையில குளிச்ச மகிழ்ச்ச…
-
- 4 replies
- 1.2k views
-
-
கனடாவில் வாழும் கணபதியும் கந்தையாவும் அயல் வீட்டுக் காரர்கள் . க ந்தையர் அந்த வதிவிடத்தில் பத்து வருடங்களுக்கு மேல் வசிக்கிறார் . கணபதியார் இங்கு இடம் மாறி மூன்று வருடங்கள் இருக்கும். க ந்தையரும் மனைவியும் பென்சனியார். இரு மகன்மார் திருமணமாகி குழந்தைகளுடன் வேறு பகுதியில் வாழ்கின்றனர் . இடைக்கிடை கந்தையர் வீட்டில் அவர்கள் வந்து தங்குவர். சில சமயங்களில் பாட்டியுடன் சிறார்களை தங்க வைத்து பலசரக்கு கடை உடுப்புடவைக் கடை என சுற்றி விட்டு குழந்தைகளை அழைத்து செல்வர். கணபதி வீடு மாறி வந்த புதிதில் அச்சுற்றடலைப்பற்றி கந்தையர் தாமாகவே முன்வந்து பேசுவார். இருவரும் காணும் பொது ஹை பை சொல்லிக் கொள்வர் . கணபதி புல் வெட்டும் போது க ந்தையர் கார் தரிக்கும் இடத…
-
- 2 replies
- 1.2k views
-
-
மூன்றாவது காலை விடிந்திருக்கின்றது. காய்ச்சல் கொஞசம் குறைந்திருக்கிறது. இன்னமும் எழுந்து நிற்க முடியவில்லை. எனது அணியோடு தொடர்பில்லை. திசையும் சரியாகத் தெரியவில்லை. சாதுவாகப் பசிக்கிறது. மனிதநடமாட்டம் மருந்திற்கும் இல்லை. நகர்ப்புற மக்கள், வேடர்களைக் கதைகளிற் தான் கேட்டிருப்பர். ஆனால் கதிர்காமத்திலிருந்து தென்தமிழீழம் வழியாக வன்னியை இணைக்கும் பிரதேக்காடுகளிற்குள் வேடர்கள் இன்னமும் வாழ்கி;றார்கள். அவர்களை முன்னர் நான் கண்டுள்ளேன் என்பது மட்;டுமன்றி, ஒரு வேலைத்திட்டத்தில் வேடர்களோடு வேடர்களாக நான் எதிரி நாட்டிற்குப் பயணித்தும் உள்ளேன். என்னால் வேடர்போன்று பேசமுடியும். வேடர்களோடு பேசமுடியும். ஆனால் நான் பேசுவதற்கு வேடர் எவரையும் தற்போது காணவில்லை. காடு முற்றாக விழித்திரு…
-
- 3 replies
- 1.2k views
-
-
இன்றும் அன்றும் அரசியலிலும் சிங்கள ஆதிக்கத்திலும் மாற்றம் இல்லை என்பதால் இதை இங்கு இணைக்கின்றேன் ---- 1994 இல் இடம்பெற இருந்த தேர்தலில் சந்திரிக்கா ஒரு சமாதான தேவதையாக பிரச்சாரப்படுத்தப்பட்டுக் கொண்டு இருந்தார். சந்திரிக்கா வந்தால் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதாரப் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்றளவுக்கு அவர் மீதான நம்பிக்கை கட்டியெழுப்பட்டுக் கொண்டு இருந்தது. சிங்கள அரசியலமைப்பில், முற்றிலும் சிங்கள இயந்திரமயப்படுத்தப்பட்ட சிவில் நிர்வாக அமைப்பில் தமிழருக்கு எக்காலத்திலும் தீர்வு வராது என்ற அரசியல் ரீதியிலான உண்மையை சரிநிகர் எமக்கு வழங்கியிருந்தது. அந்த உண்மையை ஒற்றி நான் எழுதிய சிறுகதை இது, இதை நான் எழுதியது 1994 இல். சரியாக 20 வயதில். இது பிரசுரிக்கப…
-
- 0 replies
- 1.2k views
-
-
மரணம் கொன்ற மாவீரர்களின் அப்பா. அப்பாவை அன்புச்சோலை முதியோர் இல்லத்தில் சமாதான காலத்தில் சந்தித்தேன். மகள் என்று சொல்லி தனது இருப்பிடம் பிள்ளைகளின் படங்களையெல்லாம் காட்டினார். எனது பிள்ளைகளை தன்னோடு கூட்டிச்சென்று தனது உணவிலிருந்து பங்கு கொடுத்தார். அன்புச்சோலையில் இருந்த பல அப்பாக்கள் அம்மாக்களில் அந்த அப்பாவும் ஒருவர். தலைவரிடம் கவுரவம் பெற்ற படமொன்றை தன்னோடு வைத்திருந்தார். அன்புச்சோலைக்கு பொறுப்பாயிருந்த டிஸ்கோ அண்ணா அங்கிருந்த பலரது சோகக்கதைகளை கதைகதையாகச் சொன்னார். அன்புச்சோலையை விட்டு வெளியேறும் போது பலரது பாசத்தையும் சுமந்து கொண்டே திரும்பினேன். யுத்தம் முடிந்து அனாதைகளான பலரைத் தேடியது போல அன்புச்சோலையின் அம்மாக்களை அப்பாக்களையும் தேடினேன். வவுனிய…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாரும் தன்ர கதையை காது கொடுத்து கேக்கினம் இல்லை என்ற இயலாமையை மெல்லிய முனுமுனுப்பால் ஒருத்தருக்கும் கேட்டுவிடக்கூடது என்ற கவனத்துடன் கொட்டிக் கொண்டிருந்தாள் கண்மணி. என்னதான், தான் புறுபுறுத்தாலும், யாரும் தன்னை கண்டுகொள்ளப் போவதில்லை என்ற உண்மை கண்மணிக்கும் புரிந்திருந்தது. இருந்தும், அவளால் புறுபுறுப்பதை விட்டு விட முடியவில்லை. புறுபுறுத்துக்கொண்டே வீட்டின் உற்புறத்தை எட்டிப் பார்த்தாள். ஒரு பேத்தி ரிவியிலும், மற்றவள் கணணியிலும் தங்கள் தலையை புதைத்துக்கொண்டிருத்தார்கள். அவர்களை சொல்லிக் குற்றமில்லை உதுகளை வேண்டிகொடுத்து பிள்ளையளைக் கெடுத்து வச்சிருக்கிற தாயையல்லோ சொல்லணும், உதுகளை அடிச்சு கலைக்கனும் ஓடிப்போய் விளையாடுங்கோ எண்டு, கண்டறியாத கரண்டு ஒண்ட கொடுத்து …
-
- 12 replies
- 1.2k views
-
-
காணாமற்போனவர்கள் இனி வர வேண்டாம் நீலக்கோடுகள் அடர்த்தியாய் வரையப்பட்ட சாரமும் வெள்ளைச் சேட்டும் அணிந்திருந்தான். சன நெரிசலை விலக்கி வந்து கொண்டிருந்தவன் தனது நடையின் வேகத்தைக் கூட்டி ஓடிவரத் தொடங்கினான். கையில் ஒரு பை அதனுள் எதையோ வைத்துக் காவிக்கொண்டு ஓடிவந்தான். அவளைப் பெயர் சொல்லி அழைத்தான். கையில் இருந்த பையிலிருந்து ஒரு அழகான பெட்டியை அவளிடம் நீட்டினான். இது உன்னுடைய மகனுக்காக நான் எடுத்து வைச்சிருந்தனான். இத அவனிட்டைக் குடு மாமா தந்தனெண்டு....! அவன் கொடுத்த பெட்டி தவறி கீழே விழுந்தது. அதனுள் சில்லறைக்காசுகள். நிலத்தில் சிதறிய காசுகளைப் பொறுக்கிப் பெட்டியில் பத்திரப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தாள். பச்சையுடையுடுத்த சட்டித் தொப்பியணிந்தவர்கள் அவனைச் சூழ்ந்தா…
-
- 3 replies
- 1.1k views
-
-
பிள்ளையார் கதையும் குளறி சின்னத்தம்பியரும் கிட்டடியிலை ஒரு படம் ஒண்டு முகனூலிலை பாத்தன் . எனக்கு பழைய நினைவுகள் மண்டைக்குள்ளை சாம்பிராணி புகை மாதிரி சுழண்டு ஊரிலை போய் றொக்கி எடுத்துது . எங்கடை ஊரிலை பிள்ளையார் கதை படிக்கிற காலங்களிலை பிள்ளையார் கோயிலடி முழுக்க ஒரே பக்தி பழமாய் இருக்கும் ஊரிலை நிண்ட ஆடு கோழியெல்லாம் தாங்கள் தப்பீட்டம் எண்டு சந்தோசமாய் திரிவினம் . பிள்ளையார் கோயிலடியிலை காலமை பூசை தொடங்கி ஒரு மத்தியான நேரம் மட்டிலை ஒரு பழசு பிள்ளையார் கதை படிக்க தொண்டைய செருமும் . இந்தக் கதை படிச்சு முடிய கிட்டமுட்ட ஒரு அரை மணித்தியாலம் எண்டாலும் எடுக்கும் . இப்பிடி 21 நாளைக்கு ஒவ்வருநாளும் இந்த றொட்டீனிலை நடக்கும் . அந்த நேரம் எங்கடை பிரச்சனையள் வேறை . எங்கடை…
-
- 10 replies
- 1.1k views
-