Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. தேசியத்தலைவர் பற்றி - 02 2001 ம் ஆண்டு முகமாலைப்பகுதியில் சிங்களத்தின் பாரிய படைநகர்வை எதிர்கொள்ள படையணிகள் தயாராகிக் கொண்டிருந்தன. விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் இந்தச் சமரை வென்றேயாகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது. ஏனெனில் ஓயாத அலைகளில் கிடைத்த தொடர் வெற்றிகள், யாழ்ப்பாணத்திலிருந்து பின்வாங்கியதில் ஆட்டம் கண்டது. அதனைத் தொடர்ந்து தென்மராட்சியில் இராணுவத்தினர் மேற்கொண்ட 'கிணிகிர' இராணுவ நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தமுடியாமல் கணிசமான இழப்புடன் பின்வாங்கலைச் செய்து முகமாலையில் நிலையமைத்தது ஒரு பின்னடைவாகவே இருந்தது. மறுவளம், இந்த இழப்புக்கள் எல்லாம் இராணுவத்திற்கு உற்சாகத்தைக் கொடுத்திருந்தது. அந்த உற்சாகத்தில் ஆனையிறவைப் பிடிப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து…

  2. சாத்திரி ஒரு பேப்பரிற்காக மேஜர்..டொச்சன்.(கந்தசாமி.ஜெயக்குமார்)பிறப்பு.21.06.1966...வீரச்சாவு.24.11.1992 .............................................................. டொச்சன் காலை எழுந்து துலாவில் தண்ணீர் இழுத்து இறைக்க அவனது அம்மம்மா வழிந்தோடி வந்த தண்ணீரை தோட்டத்தின் வாழைப்பாத்திகளிற்கு மாற்றி விட்டுக்கொண்டிருந்தார்.ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் மணி சத்தம் கேட்டதும் அவசர அவசரமாக உணவை வாயில் அடைந்து விட்டு நேரமாச்சு அம்மம்மா நான் போறன் என்றபடி பாடசாலைக்கு புத்தகப் பையை தூக்கிக் கொண்டு வெகு வேகமாக வசாவிளான் மத்திய மகா வித்தியலத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாகப் போய்க்கொண்டிருந்தவனிற்கு வடக்கு புன்னாலைக்கட்டுவன் சந்தி இலுப்பைபை மரத்தை தாண்டும் போது…

  3. எனது நண்பர் ஒருவருடன் லெப் கேணல் மகேந்தியண்ணையைப் பற்றிய நினைவுகளைப் பரிமாறிக் கொண்டிருந்தோம். மகேந்தி அண்ணையின் தனிச்சண்டைகள் பற்றியும் அவருடைய துணிச்சலான சம்பவங்களைப் பற்றியும் கதைத்துக் கொண்டிருந்த போது, மகேந்தி அண்ணையைப் போலத்தான் சூட்டியும் என்று சொன்ன நண்பர், அவர்களிருவரும் ஒன்றாக இருந்தபோது நடந்த சில சுவாருசியமான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ‘‘அது 1989 ம் ஆண்டு காலப்பகுதி, இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் காலகட்டம், வன்னிக் காடுகளில் போராளிகள் அணி அணியாகப் பிரிந்து தங்கியிருந்தனர். இந்திய இராணுவம் காட்டுக்குள் இராணுவ நடவடிக்கைகளுக்காக இறங்கினாலன்றி போராளிகள் வழமையான பம்பலும் பகிடியுமாகத்தான் இருப்பார்கள். பல யாழ்மாவட்டப் போராளிகளுக்குக் காடு புதிது, காட்டு …

  4. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பிரிந்திருக்கும் காதலர்களுக்கு பேருதவியாக இருக்கின்ற இந்தக் காலத்தில், அஞ்சலியையும் இவனையும் பற்றி சொல்லியா தெரியவேண்டும். நேரம் கிடைக்கும் பொழுதுகளிலெல்லாம் பேசிக்கொள்வார்கள். 'ஸ்கைப்' என்கின்ற ஒன்று அவர்கள் இருவரும் முகம்பார்த்துப் பேசுவதற்கு பெரும் வசதியேற்படுத்திக் கொடுத்திருந்தது. அவனுக்கு வேலைப்பழு அதிகமாக இருந்தாலும் அஞ்சலியுடன் கதைப்பதற்காக நேரம் ஒதுக்கத் தவறுவதில்லை. இருந்தாலும் சில சமயங்களில் வேலைப்பழு காரணமாக சரியான நேரத்தில் ஃபோன் எடுப்பதற்கு அவ்வப்போது மறந்துவிடுவான். அப்பொழுதெல்லாம் அஞ்சலி கொஞ்சம் கோபப்பட்டாலும் இவனது கெஞ்சும் வார்த்தைகளினால் பின்னர் சமாதானமாகிவிடுவாள். அவனுக்கும் அவளுக்குமிடையில் சண்டை வருவதென்றால், …

  5. அது பகலா அல்லது இரவா என்று வாணருக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும், யாழ்தேவியில் இருந்து பிள்ளைகள் வந்திருந்த படியால், அது பின்னேரம் என்று நினைத்துக்கொண்டார். அவர் ‘அடங்கிப்' போனார் என்று பரியாரியார் எல்லாருக்கும் சொல்லிக்கொண்டிருந்தது,வாணருக்குத் தெளிவாகக் கேட்டது. இந்த ‘அடக்கம்' வருவது அவருக்கு மூன்றாவது முறையாகும். அவருக்கு ஒரே ஒரு ஆம்பிளைப் பிள்ளையும், இரண்டு பொம்பிளைப்பிள்ளைகளும் உண்டு. எல்லாரும் கலியாணம் கட்டிப் பிள்ளை குட்டிகளோட கொழும்பில் தான சீவியம். .கண்கள் மூடிய நிலையில் இருந்தாலும், தனது உடல், பூவரசம் மரத்தால் செய்யப்பட்ட , தலைமாடும், கால்மாடும் இல்லாத ஒரு கட்டிலில் வளர்த்தப் பட்டிருப்பது அவருக்குத் தெரிந்தது. அத்துடன், அவரால் வெளியில் நடக்கும் சம்பவங்…

    • 27 replies
    • 2.4k views
  6. தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமை, ஆளுமை, உறுதி, கொள்கை வழுவாத்தன்மை பற்றி எவருக்கும் தெரியாமலிருக்காது. அதற்கு அப்பால் அவர் சிறந்த பண்பாளனாகவும் பிறர்மேல் கரிசனை கொண்ட அன்புள்ளம் கொண்டவராகவும் இருந்தார். தலைமைக்குரிய கண்டிப்பும் நேர்மையும் அதேநேரம் பிறருடைய உணர்வுகளைg; புரிந்தவாராக, அவர்களுடைய உணர்விகளிற்கும் மதிப்புக் கொடுக்கும் ஒருவராக இருந்தார். வெறுமனே தலைவர் அவர்களின் ஆளுமைக் கவர்ச்சியில் மட்டும் இளைஞர்கள் அவரை நோக்கி ஈர்க்கப்படவில்லை. அவரிடம் இருந்த பனமுகப் பண்புகளே அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ள வைத்தது. ஒரு நாள் தலைவர் வாகனத்தில் முகாமை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். அப்போது சைக்கிளில் மீன் வித்துக் கொண்டு சென்றார் ஒரு வியாபாரி. அவரைப்பார்த்ததும் தலைவருக்கு மீன…

    • 65 replies
    • 16.2k views
  7. வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர் புலிகளின் போரியல் வரலாற்றில் ஒரு மைற்கல் மட்டுமல்ல அது ஒரு திருப்புமுனை. 1997 ம் ஆண்டே, கிளிநொச்சி ஆனையிறவுப்பகுதிக்கான வேவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. கிளிநொச்சி ஆனையிறவு வேவு நடவடிக்கை கடினமானதாகவே இருந்தது. ஏற்கனவே ஒரு படைப்பிரிவு வேவு நடவடிக்கையை ஆரம்பித்தபோதும் எதிர்பார்த்த பெறுபேற்றை அடைய முடியவில்லை. இதனால் செம்பியன் வேவு அணி, சாள்ஸ் அன்ரனி வேவு அணிகள் வேவு நடவடிக்கையைப் பொறுப்பெடுத்தன. பாரிய நிலப்பகுதியை உள்ளடக்கி, பல கட்டமைப்புக்களுடன் கூடிய காப்பரண்களைக் கொண்டு அமைந்த இப்படைத்தளங்களின் தாக்குதல் திட்டத்தை வகுப்பதற்கு உட்பகுதி வேவுத்தகவல்களே மிக அவசியம் ஆனவையாக இருந்தன. உட்பகுதி வேவுத்தகவல்கள் இன்றி திட்டத்தை த…

  8. அவனுக்கு வயது ஒரு பூக்கும் காலத்துடன் சேர்த்து இருந்தது இளமை வசீகரமும் அவனை நன்றாக வளப்படுத்தி இருக்க தன்னை இன்னும் மெருகேற்ற அடிக்கடி ஜிம்மிலும் போய் இருக்க தவறுவது இல்லை. என்ன ஆளும் வடிவு கெட்டிக்காரனும் வேற. முதல் பார்க்கும் எந்தப்பெண்ணும் ஒருமுறை இருமுறை திரும்பி பார்க்கும் அழகன். பழைய இதிகாச கதாநாயகன் போல வர்ணிக்கும் அளவு அழகு இருத்தும் என்ன பண்ணுறது. பிறக்கும் போது அவனுடன் கூடி பிறந்தது வெட்கம். எவரையும் திரும்பி பார்க்க அவன் கண்கள் தயங்கும். அவனுடன் போவது அவனை பார்க்கும் பெண் நம்மளையும் பார்ப்பாள் என்கிற நட்பாசை. சரி விசயத்துக்கு வருவம். ஆலை இல்லாத ஊரில் இலுப்பம் பூ சக்கரை என்பதைபோல நம்ம ஏரியாக்கு நாம்தான் கீரோ. லுமாலா சைக்கிள மடக்கி வெட்டுற வெட்டில நாலு பெட்ட…

  9. 01 திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர்ப்பிரதேசம் விடுதலைப்போராட்டத்திற்கு மிக முக்கிய பங்காற்றிய பிரதேசங்களில் ஒன்றாகும். மேஜர் கணேஸ், லெப் கேணல் புலேந்தியம்மான் காலம் தொடக்கம் அந்த மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்பை வைத்து, பல உதவிகளைச் செய்து, போராட்ட அமைப்பு வளர்ச்சியடைய காரணமாக இருந்திருக்கிறார்கள். அந்த கிராமத்தின் பெரும்பான்மையானோர் இறுதிவரை விடுதலைப்போராட்டத்தோடு பயணித்திருக்கின்றார்கள். அதற்காக அவர்கள் இழந்தது ஏராளம். இக்கிராமத்தில் ஒரு போராளி குடும்பம் இருந்தது. அக்குடும்பத்தில் தந்தை, தாய், மூன்று பெண்பிள்ளைகள் இரண்டு ஆண்கள் என ஏழுபேரைக் கொண்ட குடும்பம். அதில் மூன்றாவது மகன்தான் தன்னைப் போராட்டத்தில் (காந்தன் புனைபெயர்) இணைத்திருந்தான். 2002…

  10. நான் 10ஆம் வகுப்பை நிறைவு செய்யமுன் என் முன்னால் அடிக்கடி வந்து போவாள். எப்படியாவது அவளை தொட்டு பார்க்கும் ஆசை எனக்கு ஆனால் வயது இல்லை என என்னை போக தடுப்பார் உறவுகள். ஆனாலும் என்னுள் ஆசை தீயாய் எரிய முயற்சி செய்தவண்ணம் அவளின் காதலர்களுடன் அடிக்கடி தொடர்பில் இருப்பேன். அவர்கள் அவளை பலமுறை கொண்டு வந்து காட்டி போவார்கள். ஆசை அதிகமாக நானும் சண்டை பிடித்து அவர்களுடன் போய் விட்டேன். விளைவு மூன்று மாதங்களில் எனக்கு சொந்தம் ஆனாள். அவளை கழட்டி பிரித்து சுத்தம் பண்ணி அணைத்து தூங்கும் சுகம் எவளவு இனிமை. அவளில் வரும் வாசனை ஒரு தனி சுகம். உறக்கத்திலும் பாதுகாப்பை உறுதிப்படித்தி வெட்கம் அற்று உறங்குவாள். கைகளில் ஏந்தி அவளை காடுமலை வயல்கள் எல்லாம் நடப்பேன்.என்னுடன் சுற்றுவது எண்டால் அவ…

  11. நாங்கள் திருமலைக்காடுகளில் செயற்பட்டுக் கொண்டிருந்த காலம். காட்டு முகாம் ஒன்றில் தங்கியிருந்தோம். காட்டு வாழ்க்கையில் கடினமாக இருப்பது உணவுதான். பசிக்குச் சாப்பிடலாம் ஆனால் சுவைக்கு சாப்பிடுவது என்றால் சற்றுக்கடினம் தான். வேவுக்காகவோ அல்லது வேறு நடவடிக்கைக்காகவோ சிறு அணிகளாகப் பிரிந்து செல்லும் நேரம், இடையில் உடும்பு அகப்பட்டால் அன்றைக்கு நல்ல சாப்பாடுதான். அல்லது, ஆறு, குளம், என தண்ணீர் தேங்கி நின்று ஓடும் இடமாகப் பார்த்து ஓட்டை வலைகளை வைத்து மீன் பிடித்து சாப்பிடமுடியும். அணிகள் தங்கியிருந்த இடத்திலிருந்து சில மைல்களுக்கு அப்பால் சென்றால் பன்றி, மான், மரைகளை வேட்டையாடித் தூக்கி வந்து நல்ல இறைச்சியுடன் சாப்பாடு சாப்பிடலாம் என்ற நிலையும் இருந்தது. ஆனால், அந்த இடங்களில் …

  12. 1998 ம் ஆண்டு, ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை மூலம் வன்னிப்பெருநிலப்பரப்பைத் துண்டாடத் தீவிரமாகப் போர் தொடுத்துக் கொண்டிருந்தது சிங்களப்படை. மாங்குளச் சந்தியைக் கைப்பற்றுவதற்காகப் பல பகுதிகளால் புதிய போர் முனைகளைத் திறந்து முன்னேற முயற்சித்தது. மறுபுறம், புலியணியும் புதிய முனைகளில் முன்னேறிய இராணுவத்தின் மீது உக்கிரமான மறிப்புத் தாக்குதலை முன்னெடுத்தது. ஆனால், தினசரி வீரச்சாவும், காயப்பட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் சென்றதால், படையணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் காயப்பட்டு, காயம் ஆறி (முழுமையாகக் குணமடைவதற்கு முன்) களமுனைக்கு வந்து பணியாற்றியவர்கள் பலர். அதில் சிலர் வீரச்சாவடைந்து கூட இருக்கின்றனர். நிர்வாகத்திலிருந…

  13. Started by arjun,

    வேலையால் வீடு திரும்பும் போது ரோரோன்டாவில் இந்த வாரம் அடிக்கும் சணல் வெக்கை என்னையும் வாட்டி எடுத்தது .பாடசாலை விடுமுறை என்பதால் வீட்டில் சின்னவனை காணவில்லை. பாஸ்கெட் போல் விளையாட நண்பர்களுடன் போயிருப்பான் .மனுசி வேலையால் வந்து ஏ சி யை உச்சத்தில் விட்டு உண்ட களைப்பு தீர தூக்கம். பெரியவன் வில் ஸ்மித் இன் பழைய சீரியலுடன் டி வி யில் மூழ்கியபடி. ஏழு முப்பதற்கு தொடங்கும் அலெக்ஸ்இன் ஜேப்படியில் யார் கூடுதல் பதில் சரியாக சொல்லவதாக தினமும் அவனுக்கும் எனக்கும் போட்டி.. இன்று எனக்கு ஐந்து அவனுக்கு மூன்று. குளிர்சாதன பெட்டியில் நன்கு உறைந்த ஸ்ரவுட்டை உடைத்து வாயில் விட்டபடி வீட்டிற்கு பின்னால் இருக்கும் தோட்டத்தை பார்க்கிகின்றேன். அத்தனை தாவர உயிர்களும் தண்ணீர் வேண்டி அழுது ஓய…

    • 8 replies
    • 1.8k views
  14. கொக்கும் கெழுத்திமீனும் பொன்னேரிக் கிராமத்தின் வயல்களின் நடுவே அகன்று விரிந்திருந்தது அந்தப் பொன்னேரி வாவி . பொன்னேரி என்றுமே வழங்கொளிக்கும் கிராமம் . எங்கும் பச்சைப்பசேல் என அந்தக்கிராமத்தைப் பார்க்கவே கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும் . அந்தக் கிராமத்தின் விவாசயத்திற்கு தேவையான நீரை வழங்குவது இந்தப் பொன்னேரி வாவியே . அந்த வாவியில் தவளைகள் , மீன்கள் , ஆமைகள் என்று பல நீர்வாழ் உயினங்களுக்கும் வாழ்ந்து வந்தன . இதனால் எப்பொழுதும் அந்த வாவி கொக்குகளாலும் நாரைகளாலும் நிறைந்து காணப்படும் . பொன்னேரிக் கிராமத்திற்கும் , வாவிக்கும் யார் கண்பட்டதோ தெரியவில்லை , கடந்த நான்கு வருடங்களாக பெய்ய வேண்டிய மழை பொய்த்துவிட்டது . படிப்படியாக பொன்னேரிக் கிராமமும் , வாவியும் வறட்சி…

  15. தர்சினி லண்டனில் பிறந்து வளர்ந்தவள். அழகானவள். தன்னம்பிக்கை மிக்கவளும் கூட. ஆனால் இப்ப ஒரு மாதமாகத்தான் அவளது நம்பிக்கை தடம்புரண்டு போனதில் தன்மீதே நம்பிக்கை அற்றவளாகி செய்வது அறியாது தவிக்கிறாள். பெற்றோர்கள் அவளை எப்படிப் பொத்திப் பொத்தி வளர்த்தனர். அவளும் பெற்றோர் சொல் கேட்டு ஒழுங்காக வளர்ந்தவள் தான். இப்ப கொஞ்ச நாட்களாக குற்றம் செய்யும் உணர்வு. சதீசை என்று சந்தித்தாலோ அன்று பிடித்தது சனி. அடிக்கடி தாய் சொல்வதுதான் உந்த பேஸ் புக் நல்லதில்லை அம்மா. நெடுக உதுக்குள்ள கிடக்காதேங்கோ என்று. அப்ப விளங்கவே இல்லை. பேஸ் புக் இல் சதீசை பார்த்த உடனேயே இவளுக்கு மனம் தடுமாற தொடங்கிவிட்டது. அவனும் எப்ப பார்த்தாலும் சற் பண்ண தயாராக இருப்பான். இவளும் நிர்பாட்டுவதில்லைத்தான். ஆனாலும்…

  16. 1995 ம் ஆண்டு, சாள்ஸ் அன்ரனி படையணி திருமலையில் செயற்பட்டுக் கொண்டிருந்த காலம். திரியாய்க் காட்டுப்பகுதியில் படையணியின் ஒரு பகுதி தங்கியிருந்தது. திருமலை மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் இருக்கும் மினிமுகாம் மீது தாக்குதல் நடாத்துவதற்கான திட்டமிடல்கள் பூர்த்தியாகி, அப்பகுதிக்கு செல்வதற்காக அணிகள் தயாராகிக் கொண்டிருந்தன. நீண்ட தூரம் நடந்து சென்று, தங்கியிருந்து மறுநாள் தாக்குதலை நடாத்த வேண்டும், ஆகையால் தேவையான ஆயுதவெடிபொருட்கள், ஏனைய அத்தியாவசிய பொருட்கள், சமையல் உபகரணங்கள் என்பவற்றை ஒழுங்குபடுத்திக் கொண்டு எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென ஒரு வெடிச்சத்தம் காட்டை அதிரவைத்தது. மரங்களில் இருந்து குருவிகள் கீச்சிட்டுக்கொண்டு பறந்தன. குரங்குகள் சத்த…

  17. பிரான்சுக்கு முதல் முதலில் வந்தவர் என்பதால் அவரை எல்லோருக்கும் தெரியும் வருபவர்கள் எவரும் அவரது விலாசத்தை மட்டும பிடித்தபடியே தான் பிரான்சுக்குள் புகுவர். அது போதும் என்ற நம்பிக்கை. வந்தவுடன் தங்க இடம் சாப்பாடு உடுப்பு விசா வேலை.......... எல்லாமே அவர் செய்வார். நானும் பார்த்திருக்கின்றேன். அவரது வீட்டில் உலை எப்பொழுதும் கொதித்தபடியே தான் இருக்கும். சோறு போட்டபடியே இருப்பார்கள். கறி என்றால் இறைச்சி அல்லது மீன் சிலவேளை கருவாடு. இது முடிந்தால் சமாளிக்க கத்தரிக்காய் கறியும் இருக்கும். பின்காலங்களில் பருப்பு. ஒரு ரூம்தான். சாய இடமிருந்தால் எவரும் படுத்து நித்திரையாகலாம். நின்று கொண்டே நித்திரை செய்தவரை பார்த்திருக்கின்றேன். இவ்வளவையும் பார்த்த…

  18. 1990 ம் ஆண்டு, இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பகாலகட்டம். தாயகத்தின் சகல மாவட்டங்களிலும் சண்டைகள் பரவலாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. யாழ்மாவட்டம் கோட்டையைச் சுற்றி தளபதி பிரிகேடியர் பானு அண்ணை தலைமையில் உருவாக்கப்பட்ட இறுக்கமான முற்றுகையைத் தகர்க்க முடியாமல் சிறிலங்காப்படை திணறிக்கொண்டிருந்தது. முற்றுகையை உடைக்கச் சிறிலங்கா தனது முப்படைகளின் முழுப்பலத்தையும் பிரயோகித்தது. நூற்றியேழு நாட்கள் கடுமையாகப் போரிட்ட சிறிலங்கா இராணுவம் இறுதியில் இரவோடிரவாக யாழ்; கோட்டையைக் கைவிட்டு ஒடிவிட்டது. யாழ்க்கோட்டையின் பின்னடைவை ஈடு செய்வதற்காக, ஒரு மாதத்திற்குள்ளாகவே பலாலி இராணுவத்தளத்தில் இருந்து பாரிய நகர்வைச் செய்தது சிங்கள இராணுவம். தாக்குதலணிகள் கடுமையான …

  19. நாங்கள் சிறியவர்களாக இருந்த காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று எப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்பை வரவழைக்கும். காட்சியைக் காணாது கதையை மட்டும் நீங்கள் வாசிப்பதனால் உங்களுக்கு சிலவேளை சாதாரணமாக இருக்கலாம். அயலில் உள்ளவர்கள் நாங்கள் வயது வித்தியாசமின்றி விளையாட்டு நண்பர்களாக இருந்த காலம். எனக்கு ஒரு பத்து வயது இருக்கும். எங்கள் அயலில் ஒரு குடும்பம் இருந்தது. அதில் இருந்த மூத்த மகளுக்கு ஒருவருடன் காதல். அயலட்டை எல்லாம் ஒரே இது பற்றித்தான் கதை. எமக்குப் பெரிதாக விவரம் இல்லாவிட்டாலும் எதோ கொஞ்சமாவது விளங்கும்தானே. அவர்கள் வீட்டுக்குப் பின்புறமாக என் பெரியம்மாவின் வீடு இருந்தது. பெரியம்மா வீட்டுக்கு சாதாரணமாகச் செல்வதானால் சுற்றுப் பாதையில் செல்லவேண்டும். இவர்களின் வீட்டின் கு…

  20. தனிமையில் அதுவும் பாரில் இருந்து குடிப்பது என்பது மிகவும் அசவுக்கியமான ஒரு விடயம். கதைக்க ஆளில்லாமல் தண்ணியடிப்பது கண்ணை கட்டி கடலுக்க விட்டது போல, இன்று அந்த நிலை தான் நகுலனுக்கு, ஏனடா இதற்குள் தனியே வந்தம் என்றிருந்தது அவனுக்கு . நாலு பியரை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு போனால் தொலைக்காட்சியில் ஒரு நல்ல சினிமா படத்தையோ அல்லது பிரகாஷ்ராஜ் இன் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியை பார்த்துக்கொண்டு தனது இந்திய சினிமா, பொது அறிவையும் செக் பண்ணிக்கொண்டு இருந்திருக்கலாம். ஒவ்வொரு வெள்ளி பின்னேரமும் வேலை முடிய வேலையிடத்து நண்பர்களுடன் டாப்ஸ் ரெஸ்டோரண்டில் இல் போய் இரண்டு பியர் அடித்துவிட்டுத்தான் வீட்டிற்கு போவது நகுலனின் வழக்கம். வேலை செய்யும் பல்லின நண்பர்களுடன் இந்த பழக்கம் பழகி …

    • 20 replies
    • 2k views
  21. அறிமுகம் ஓவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பல்வேறு வகையான சம்பவங்களின் தொகுப்பு அழிக்க முடியாத பதிவுகளாக மனதில் பதிந்து இருக்கும். நல்லது, கெட்டது, இன்பம், துன்பம், கசப்பு, வியப்பு, கடினம், வலி எனப் பல சம்பவங்களும், அந்த சம்பங்களின் உணர்வோட்டங்களும் ஆள்மனப்பதிவில் இருந்து கொண்டேயிருக்கும். அப்படி, எனது நினைவுகளில் அழிக்க முடியாமல் பதியப்பட்டிருக்கும் சில விடயங்களை, சம்பவங்களை இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். ஒரு பொது வாழ்க்கையின் சம்பவத் தொகுப்புக்களாக என்னுடைய பதிவுகள் இருக்கப்போவதில்லை. சாதாரண மனித வாழ்வில் இருந்து வேறுபட்ட தடத்தில் பயணித்த எனதும் என்னுடைய நண்பர்களினதும் பதிவுகள் சில சம்பவங்களுக்கு வாய்மொழிச்சான்றாக அமையலாம் என்ற ஒரு எடுகோளின் அடிப்படையில்…

  22. அஞ்சலி தன் சந்தோசம் என்றாலும் துக்கம் என்றாலும்.... முதலில் இவனோடுதான் பகிர்ந்துகொள்வாள். அன்றும் அப்படித்தான்..... அவள் இந்தியாவிலிருந்து போன் பண்ணியிருந்தாள். வழமைக்கு மாறான அவளது கனமான குரல்... அவள் நன்கு அழுதிருக்கிறாள் என்பதனை உணர்த்தியது. "என்ன அஞ்சு... என்ன ஆச்சு? ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?" என அவன் கனிவாக விசாரிக்க... மறுமுனையில், விம்மத் தொடங்கினாள் அஞ்சலி. "என்ன நடந்தது அஞ்சு....? என்ன ஆச்செண்டு சொன்னாத்தானே தெரியும்.... " என மீண்டும் வினவ, "நான் நாளைக்கே மலேசியா வாறன். எனக்கு இங்க இருக்க விருப்பமில்லை. நான் லண்டனுக்கு திருப்பிப் போகேலடா. உன்னோடயே வந்து இருக்கப்போறன்.... !" சொல்லிவிட்டு மீண்டும் விம்மியழத்தொடங்கினாள். "அஞ்சு.... என் செல…

  23. அருணாவுக்கு தம்பியாரை நினைக்கப் பாவமாக் கிடக்குதுதான். ஆனால் அவளும்தான் என்ன செய்யிறது. முப்பத்தஞ்சு வயதுதான் எண்டாலும் இப்பத்தே பெட்டையளுமெல்லே வடிவு, வயது எல்லாம் பாக்கிதுகள். என்ன தம்பிக்குக் கொஞ்சம் முன் மண்டை வழுக்கை. அதுக்காக எத்தின பெட்டையள் வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டாளவை. ஊரில அம்மாவைப் பாக்கச் சொன்னால் அவவும் என்ன காரணத்துக்கோ தெரியேல்ல இந்தா அந்தா எண்டு இழுத்தடிக்கிறா. கடைசீல என்ர தலை தான் உருளுது என சலித்துக்கொண்டாள். கிட்டத்தட்ட ஒரு வருடமாகப் போகிறது சந்திரனுக்கு பெண் பார்க்கத் தொடக்கி. இன்னும் பலன் தான் வரவில்லை. உள்ள கோயில் குருக்கள், புரோக்கர்களிடம் எல்லாம் சாதகத்தைக் குடுத்துத்தான் அருணா வைத்திருக்கிறாள். அவர்களும் பெண்களை புதிதாக உற்பத்தியா செய்ய முட…

  24. அமுதா.. எணேய் பிள்ளை எழும்பணை ராசாத்தி பள்ளிக்குடத்துக்குப் போகவேணுமெல்லே இன்னும் என்ன படுக்கை வேண்டிக்கிடக்கு, கெதியா எழும்பணை. ம்ம்ம்ஹ்ஹ்ம்ம்ம்.. காலங்காத்தாலையே புலம்ப ஆரம்பிச்சிட்டியேம்மா, போங்கோ போய் அப்பாவை வரச் சொல்லுங்கோ எப்ப உங்கண்டை முகத்திலை முழிச்சனான் இண்டைக்கு புதுசா எழும்ப .. அப்பாவை வரச்சொல்லணை. எத்தனை நாளைக்குத்தான் இப்படி அப்பா முகத்திலை முழிக்கப் போறியோ, குமரா விட்டாய் கலியாணம் கட்டி போற இடத்திலை என்ன பாடுபடப்போறியோ... என்னங்க, உங்கண்டை ஆசை மகள் கூப்பிடுறாள் போங்கோ நான் ஏதும் சாப்பாடு தேடவேணும், பாவம் அவள் பசி இருக்க மாட்டாள், அப்படியே உவன் மதனையும் எழுப்பி விடுங்கோ பள்ளிக்குடம் போற பஞ்சியிலை படுத்திருக்கிறான். கணபதிப்பிள்ளை,சரஸ்வதியின் மூத்த மகள் அ…

  25. கோழிகள் கூட்டமாக வாழ்ந்த அந்த வளவுக்குள் தான் பூனையும் ஒருநாள் வந்து சேர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இடத்தை பிடித்து வசதியாக இருந்துகொண்டு அந்த வளவிலேயே கிடைத்த உணவுகளை உண்டு வளர்ந்தும் வந்தது. சும்மா கிடக்கிற இடம் தானே என்றும் மென்மையான வனப்பான தேகத்தைபார்த்தும், கவர்ச்சியான கண்களை ரசித்தும், அமைதியாக அரைகண்ணை மூடி தியானம் செய்யும் அழகையும் பார்த்து கோழிகள், ரொம்பவே நல்லவர் இருக்கட்டும் எங்களுக்கும் இவரால் மோட்சம் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டன. கோழிகள் எப்போதும் கொத்துப்படுவதும், கத்திக்கொண்டு திரிவதும் கிண்டி கிளறி களைத்துப்போனதும் அப்படியே அங்கினேக்கை சூடுகண்ட இடங்களில் கண்ணை மூடி சுகங்களை அனுபவித்தும் நாட்களை கடத்திக்கொண்டு இருந்தன. வளவுக்குள்ள இடைக்கிடை கு…

    • 7 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.