Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. அக்கினிக்குஞ்சு இணையத்தில் இம்மாதம் வெளியாகியிருந்தது . அந்த மேளச் சத்தத்தின் அதிர்வில் கண்விழிக்கிறார் தேவர். டகு டகு டகு டகு டகு டகு டகு டகு டண் டண் டண் டண் டாடாண்டு டண் டண் டாடாண்டு டண் டண் டகு டகு டகு டகு டகு டகு டகு டகு டண் டண் டண் டண் டாடாண்டு டண் டண் டாடாண்டு டண் டண் பறை மேளத்துக்குச் சொல்லியிருக்கு எண்டல்லோ சொன்னவை. இதென்ன கர்ண கடூரமான ஒரு அடி. சத்தத்தைக் கேட்டால் பறை மேளச் சத்தம் போல இல்லையே. மெதுவாக யார் அடிக்கிறார்கள் என்று எட்டிப் பார்த்தார் தேவர். அதில் ஒன்றே ஒன்றுதான் பறை மேளம். மற்ற இரண்டும் வேறு வடிவத்தில் இந்தியாவில் கிந்திக் காரங்கள் அடிக்கிற மேளத்தின்ர வடிவில இருக்க, எல்லாமே இப்ப மாறிக்கொண்டேதான் வருகுது என்னைத் தவி…

  2. மரங்கள்.! (குறுங்கதை) பலாமரம் ஒன்று வேலிக்கு அப்பால் நின்ற புளியமரத்தை ஏளனமாகப் பார்த்து என்னைபோல் இனிமையான பழம் உன்னால் தரமுடியுமா என்றது. இதைக்கேட்ட புளிய மரம் இயற்கையோடு நாம் வாழ்ந்த காலத்தில் இப்படி எந்தமரமும் கேட்டதில்லையே என மனதுக்குள் யோசித்தது. பின் சிரித்துவிட்டு சொன்னது என்னைப் போல புளிக்கின்ற பழமும் உன்னாலும் கொடுக்க முடியாது.ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்குதென்று ஏற்றுக்கொள். பழங்களில் நீதான் பெரியவன் இனிப்பானவன் என்று எண்ணிக்கொண்டு பெருமை பேசாதே என்றது. மனிதர்கள் போல் உயர்வு தாழ்வு போட்டி பொறாமை இருக்கக் கூடாதென்று எட்டத்தில் நின்ற வேப்பமரம் பிசின் வடிய கத்தியது. எங்கள் காலம் என்ன ஆகுமோ என ஏங்கி அசைந்தன சுற்றிநின்ற சிறுமரக்கூட்டம்.மரபணு மாற…

  3. வழிப்போக்கன்..! ****************** வறுமையின் காரணமாக உலக சந்தையில் நாட்டை துண்டு துண்டாக்கி விற்றுக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.வந்த வழிப்போக்கன் கேட்டான் உள்ளுரில் ஒரு துண்டைக்கேட்டவர்களுக்கு கொடுத்திருந்தால் உங்களுக்கே உணவு தந்திருப்பார்களே! இந்தநிலை வந்திருக்காதே! என்றான்.மீசையில் மண் ஒட்டவில்லையென எழுந்த பெரியவர் அவர்களை வைத்துத்தான் ஆட்டமே நடக்குது என்றார். அரசமரத்தடியில் இருந்த புத்தபெருமான் இது எத்தனைநாளுக்கென்று சிரித்தார். உணவின்றி,உடையின்றி,எரிபொருளின்றி,நோய்க்கு மருந்தின்றி குழந்தைகளுக்கு மாப்பாலின்றி எத்தனை எத்தனை கொடுமைகளைப் புரிந்தும் வெண்றவர்கள் அவர்கள். அதுபற்றி உனதுமக்களும் புரிந்துகொள்ள இதுவொரு அரிய சந்தர்ப்பம்.கொடுத்திருக்கிறீர்களென வழி…

  4. சைக்கிளும் நானும்.... அப்பா அரச உத்தியோகம், அவரிடம் ஒர் றலி சைக்கிள் இருந்தது அதில் தான் அவர் வேலைக்கு சென்று வருவார் .அந்த சைக்கிளில் தான் நான் சைக்கிள் ஒட கற்றுக்கொண்டது.அப்பா வேலையால் வந்தவுடன் வீட்டு சுவரின் சாத்திவிட்டு செல்வார் சைக்கிளுக்கு ஸ்டாண்டு வாங்கி பூட்டுவது வீண் செலவு என நினைத்திருக்கலாம் ...அவர் வைத்து விட்டு சென்றவுடன் வீட்டு முற்றத்தில உருட்டிக்கொண்டு திரிவேன் ,பிறகு பெடலில் காலை ஊண்டி ஒரு பக்கமாக ஒடி திரிந்தேன் ஒரு படி முன்னேறி பாருக்கு கீழே காலை போட்டு மற்ற பக்க பெடலை மிதிச்சு பலன்ஸ் பண்ணி அடுத்த காலையும் பெடலில் வைத்து ஓடதொடங்கி விட்டேன்.அந்த காலத்தில் ஆண்களின் சைக்கிள் தான் அதிகம் விற்பனையில் இருந்தது ,பெண்கள் சைக்கிள் யாழ் மாவட…

  5. வழமைபோலவே காலைக் கதிரவன் குதூகலத்துடன் தன் கதிர்பரப்பிப் பூமியின் வெப்பத்தை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டான். இரண்டு நாட்கள் பெய்த கடும் மழையில் நிலமும் மரங்கள் செடிகளும் மகிழ்வுடன் காலை வெய்யிலை வரவேற்றுக் குதூகலிக்க ஜீவாவின் மனம் மட்டும் மகிழ்விழந்து போர்களமாகி எதிரும் புதிருமான நிகழ்வுகளை அசைபோட்டு சலிப்படைந்திருந்தது. இனியும் நான் இப்படியே இருக்கமுடியாது. எனக்கும் ஒரு வாழ்வு இருக்கிறது. கானல் நீரை நம்பி எத்தனை நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் காத்திருப்பது?? பண்பாடு கலாச்சாரம் எல்லாம் முக்கியம் தான். ஆனால் அவற்றுக்காக என் வாழ்க்கையை நான் வாழாது ஏன் சமூகத்துக்குப் பயந்து காலத்தை வீணடிக்கவேண்டும். இப்பவே வயது முப்பதாகிவிட்டது அரைவாசி இளமையைத் தொலைத்தாகிவிட்டது. இனியும் அம்மா, அ…

  6. கனடாவில் வாழும் கணபதியும் கந்தையாவும் அயல் வீட்டுக் காரர்கள் . க ந்தையர் அந்த வதிவிடத்தில் பத்து வருடங்களுக்கு மேல் வசிக்கிறார் . கணபதியார் இங்கு இடம் மாறி மூன்று வருடங்கள் இருக்கும். க ந்தையரும் மனைவியும் பென்சனியார். இரு மகன்மார் திருமணமாகி குழந்தைகளுடன் வேறு பகுதியில் வாழ்கின்றனர் . இடைக்கிடை கந்தையர் வீட்டில் அவர்கள் வந்து தங்குவர். சில சமயங்களில் பாட்டியுடன் சிறார்களை தங்க வைத்து பலசரக்கு கடை உடுப்புடவைக் கடை என சுற்றி விட்டு குழந்தைகளை அழைத்து செல்வர். கணபதி வீடு மாறி வந்த புதிதில் அச்சுற்றடலைப்பற்றி கந்தையர் தாமாகவே முன்வந்து பேசுவார். இருவரும் காணும் பொது ஹை பை சொல்லிக் கொள்வர் . கணபதி புல் வெட்டும் போது க ந்தையர் கார் தரிக்கும் இடத…

  7. திறமைகள்..! ********** ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு திறமையுண்டு-மனிதா உன் திறமை எங்கே? கசக்கினால் இறக்கும் கறையான்கூட அதன் உமிழ்நீரில் மண்குழைத்து அடுக்குமாடி கட்டி அதற்குள் வாழுது புற்றெனும் வீட்டில். ஓரிடத்தில் இருந்தே வலை பரப்பி வீடு கட்டி வந்து விழும் உணவை உண்டு உயிர்வாழும் சிலந்தி. உயரத்தில் இருந்தும் ஒழுகாமல் தேனை அறைகட்டி சேமிக்கும் தேனி. அலகால் தும்பெடுத்து அந்தரத்தில் கூடமைத்து உள்ளே குஞ்சு பொரித்து உயி வாழும் தூக்கணாம் குருவி. சுறு சுறுப்பாக எழுந்து வரிசைகட்டி வாழ்வதற்காக உணவெடுத்த…

  8. வணக்கம் உறவுகளே! என் பல வருடக் கனவு இது. இன அழிப்புப் போரில் நாங்கள் பட்ட இன்னல்களை எங்கள் இளந்தலைமுறைக்குச் சொல்ல ஏதாவது வழி உண்டா என்று தேடிய போது எனக்குத் தெரிந்த "கதைகூறல்" மொழியில் "எறிகணை" நாவலைப் படைத்துள்ளேன். இந்த இணைப்பில் சென்று நீங்கள் புத்தகத்தை எளிதாக வாங்க முடியும்! ஈழத்தில் உள்ள நண்பர்கள் பலர் கேட்டவாறு உள்ளார்கள். பொது முடக்கம் முடிந்ததும் விரைவில் அனுப்பி வைப்பதற்கான சூழ்நிலைகளைப் எதிர்பார்த்தவாறு உள்ளோம். வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் வகை: நாவல் ஆசிரியர் : தியா விலை.ரூ.180 "கொண்டாட்டமும் பண்பாடும் என வாழ்ந்த ஓர் ஈழக் குடும்பத்தைத் துரத்துகிறது ‘எறிகணை’! வழிநெடுகிலும் சிந்தப்படுகிற குருதியும், தொ…

  9. ஸ்வேதா தன் இரண்டு வயதாகப் போகும் குழந்தை இழுத்த இழுப்புக்கு மறுப்பேதுமின்றி முன்னே இருந்த வரபேற்பறைக்கு நகர்ந்தாள். அங்கு மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த தன் விளையாட்டுப் பொருட்களைக் குழந்தை ஆழமாக ஊடுருவிப் பார்த்தது. அவற்றைப் பரபரவென விதம் விதமாக மாற்றியடுக்கி தன்னுடைய குழந்தை உலகை இன்னும் அழகாக்கி மகிழ்வடைந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு . பரசவத்தில் கைகளைக் கொட்டிச் சிரித்தது. ஸ்வேதா தன் மழலையின் உலகோடு தன்னை சேர்த்துக் கொள்ள முயன்று, தோற்றுப் போனவளாய் குழந்தைக்குப் பக்கத்தில் இருந்த கதிரையில் தன்னைச் சாய்த்துக் கொண்டாள். அன்று மதியம் தன் கணவனோடு நடந்த சம்பாசனையோடு அவள் மனசு தானாக ஒட்டிக்கொண்டது. "என்ர கார் திறப்பைக் கண்டன…

  10. மௌனமான யுகங்கள் இன்பமான அதிர்ச்சியோடு தான் இந்த நாள் ஆரம்பித்தது, இன்னொரு புதிருக்கு விடை தரப்போவதும் தெரியாமலே! எதிர்பாராத விதமாக இன்று காலையில், அவசர அவசரமாக, எண்ணி ஒரு சில ஊழியர்களை மட்டும், அவர்கள் கடின உழைப்பை அங்கீகரித்து, பணி உயர்வு குறித்துப் பேச வேண்டும் என, முகாமைத்துவ அதிகாரி தனது அலுவலகத்துக்கு வருமாறு பணித்திருந்தார். அந்த ஒரு சிலரில் அவனும் ஒருவராக இருந்தான். அழைக்கப்பட்ட அனைவருமே நேர்மையான, கடின உழைப்பை விரும்புகின்ற ஊழியர்களாக இருந்தது அங்கு தொழில் புரிகின்ற அனைவருக்கும் தெளிவாகவே தெரிந்தாலும் எப்படி இவர்களைத் தெரிவு செய்தார்கள், யார் இவர்களைக் கண்காணித்தார்கள், எப்படி இது சாத்தியமாயிற்று என்பதெல்லாம் தெரியாத, புரியாத புதிராகவே இருந்தது. …

  11. பிறிதின் நோய் தந்நோய் - சுப. சோமசுந்தரம் நம் கதாநாயகன் ஓர் ஆசிரியர். எதிலும் படிம நிலை கொண்டே பழகிய உலகம் அவரைப் பேராசிரியர் என்று விளிக்கலாம். அவரோ, "ஆசிரியரில் என்ன பெரிய ஆசிரியர், சிறிய ஆசிரியர் ?" என்று கேட்கும் தன்மையர் என்பதால், ஆசிரியர் என்பதே அவருக்கு ஏற்புடைய அடையாளம். தோழர்களின் சகவாசம் மனிதனை மனிதனாக மட்டுமே அடையாளப்படுத்தும் ஆற்றல் பெற்றது என்பதற்கு அவரே தரச்சான்று. தந்தையார் அடிக்கடி இடமாற்றலாகும் பணியில் இருந்தமையால் இளம் வயதில் பாட்டன் - பாட்டியிடம் சிறிது காலம் வளர்ந்தவருக்கு, அவர்களது பரிவிற்கும் பாசத்திற்கும் சற்றும் …

  12. ஒர் அகதியின் கதை என் ஈழத்திரு நாட்டிலே யுத்தகால வேலைகளில் ...நம்மவர்கள் அடைந்த துயரங்கள் உயிரிழப்புகள் சொத்து இழப்புகள் உறவுகளைத் தொலைத்த சோகங்கள் சொல்ல வார்த்தையில்லை . சொந்த மண்ணிலே அகதியாகிய சோகம் ஏழேழு தலைமுறைக்கும் வரலாறாய் இருக்கும். கண்ணீரோடும் செந்நீரோடும் கலைந்து போன உறவுகள் . உயிரிலும் மேலாக மதிக்கும் போராளிகள் அவர்களை ஈந்த பெற்றோர் கணவனை இழந்த மனைவி , தந்தையை ,தாயை இழந்த குழந்தைகள், உறவுகளை இழந்த உள்ளங்கள் , படட துன்பங்கள் வார்ததையில் வடிக்க முடியாத சோகங்கள் இத்தனையும் சந்தித்த ஒரு அகதியின் கதை. 1990இல் ஒரு ஆவணி மாதத்தில் யாழ் நகரையும் அதன் சூழ உள்ள தீவுகளையும் இலங்கையின் ராணுவத்தினர் தரையாலும் கடலாலும் ஆகாயத்தின் பரப்பி…

    • 2 replies
    • 1.8k views
  13. வணக்கம் சேர் ..... இந்த வருட இறுதி பரீடசை நல்ல படியாக பாஸ் செய்யவேண்டுமென குல தெய்வம் கருப்புசாமியிடம் வேண்டுதல் செய்துள்ளேன். எனது அடுத்த கல்லூரி நுழைவுக்கு ஆங்கிலம் கடடாய பாடம் . தயவு செய்து 40 புள்ளியாவது போட்டு பாஸ் பண்ணி விடவும். எப்படியும் மற்ற பாடங்களில் தேறி விடுவேன். ஆங்கிலம் மட்டும் ஏறவே ஏறாது பக்கத்துவீட்டு ராமு டுஷன் வகுப்புக்கு போகிறவன் பாஸ் செய்து விடுவான். நான் பெயிலானால் அவன் அம்மா , என் அம்மவை ஏளனமாக கதைப்பார் . நாங்க வறுமை படட குடும்பம் அம்மா களை எடுக்க போய் தான் எங்களுக்கு சாப்பாடு தந்து வளர்கிறா. அப்பா கோவித்துப்போய் மூணுவருஷங்களாகிறது . எனக்கு கீழே இரண்டு தங்கைமார். நான் படிச்சு வேலைக்கு போய் அம்மா வுக்கு ஓய்வு கொடுக்கவேண்ட…

    • 3 replies
    • 1.7k views
  14. அவுஸ்ரேலியாவுக்கு வந்த பின்புதான் சொந்தமாக தொலைபேசி வைத்திருக்க கூடிய நிலை வந்தது.அந்த கால கட்டத்தில் பட்டன் அழுத்தி இலக்கங்களை தெறிவு செய்யும் தொழில் நுட்பம் கொண்ட தொலை பேசிதான் பிரபலம் .வீட்டின் வரவேற்பறையில் ஒரு தொலைபேசியை தொலைபேசி நிறுவன ஊழியர்கள் இணைத்து விட்டு சென்றார்கள்.அத்துடன் இரண்டு மகாபாரத புத்தகத்தையும் இலவசமாக தந்துவிட்டு சென்றார்கள்.ஆர்வக் கோளாறு காரணமாக புத்தகத்தை உடனடியாக திறந்து பார்த்தேன் ,ஒரு புத்தகம் தொலைபேசி பாவனையாளர்களின் பெயர்களும் இலக்கங்களும் ,மற்றது வியாபார ஸ்தாபனங்களின் இலக்கங்களும் பெயர்களுமாக இருந்தது.தொலைபேசி வைக்கும் மேசையாக அந்த புத்தகத்தை பாவிக்கலாம் என்ற யோசனை இந்த புத்திஜீவிக்கு வரவே அதை அமுல் படுத்திவிட்டு மனைவியின் பாராட்டுக்காக கா…

  15. புனிதப்போர்-சிறுகதை-சாத்திரி நடு இணைய இதழுக்காக ஓவியம்: சமித்திரா ஸ்ரீரங்கநாதன் 2005-ம் ஆண்டு யூலை மாதம் 25 நள்ளிரவை தாண்டிய நேரம் பிரான்சின் அதிபருக்கு உளவமைப்பன டி ஜி எஸ் சின் தலைவரிடமிருந்து அவசரமாக சந்திக்கவேண்டும் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சரும் உடனிருந்ததால் விரும்பத்தக்கது என்றொரு தகவல் வந்திருந்தது.சிறிது நேரத்தில் அதிபரின் வீட்டிலேயே அந்த இரகசிய சந்திப்பு நடை பெற்றது. ஆப்கானிலிருந்த பிரெஞ்சு இராணுவத் தளத்திலிருந்து சங்கேத மொழியில் புலனாய்வு பிரிவு அனுப்பிய அந்த செய்தியை உளவமைப்பின் தலைவர் விபரமாக சொல்லி முடித்தபின்னர், “எல்லாமே தயார் நிலையிலுள்ளது. திட்டம் கூட வகுத்து விட்டார்கள்.உங்களின் சம்…

  16. அன்புள்ள கடவுளுக்கு தம்மா துண்டு தமிழ்நாட்டை ஆளுகின்ற தலைவர்களே நிக்க நேரமில்லை, உட்கார பொழுதில்லை என்று லொங்கு லொங்குயென வேலையிருக்கோ இல்லையோ ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். நீ ரொம்ப பாவம் இவ்வளவு பெரிய உலக்கத்தை ஒத்த ஆளா ஆட்சி நடத்தற, உனக்கு எம்புட்டு வேலையிருக்கும். கண்ணுக்கே தெரியாம நிறைய உசுரு இருக்காமே. அதுங்க தொடங்கி வயிறு பெருத்த மனுஷன் வரைக்கும் தினசரி நீ சோறு போட்டாகனும். கோடம்பாக்கத்துல மழை வந்துதா? கோவில்பட்டியில வெயில் அடிக்கிறதா? என்பதையும் பார்த்தாகனும். செத்தது எத்தனை பேரு, புதுசா பொறந்தது எத்தனை பேரு, அவனுக்கு என்ன கதை, என்ன பாத்திரம் என்று பிரிச்சு கொடுத்தாகனும். ரெண்டு செகண்டு கண் மூடி உன் வேலையை பற்றி யோசிச்சா தலையே கிறுகிற…

  17. சுப்பவைசர் அசுவத்தாமனை சிலர் காட்டேரி என்றும் வேறு பலர் சாமக்கோடாங்கி என்றும் பட்டப்பெயரிட்டு அழைத்த போதிலும் அநேகரை கேட்டால் கடுமையான நேர்மையான உழைப்பாளி என்றே சொல்லுவார்கள். சிங்கபுரியில் இரவு பகலாக 24 மணித்தியாலமும் வேலை நடக்கும் இந்த கட்டுமான தளத்தில் தொழிலாளர்கள் இரண்டு சிப்டுகளில் மாறி வேலை செய்த போதிலும் அசுவத்தாமன் இரண்டு சிப்டுகளையும் தனி ஆளாக பார்த்துக்கொள்வான். காலை நேரத்தில் வலது கண்ணாலும் இரவு வேளையில் இடது கண்ணால் தூங்குவதாலேயே இப்படி முழுநாளும் வேலை செய்ய முடிகிறது என வேலையாட்கள் தமக்குள் பேசிக்கொள்வதை கேட்டிருக்கிறேன். புறஜெக்ட் மனேச்சராக பெயருக்கு நான் இருந்த போதிலும் அசுவத்தாமன்தான் சைட்டை தனியாளாக ஓட்டுகிறான் என்பது எல்லோருக்குமே தெரியும். எனது சம்பளத்த…

  18. செவ்வந்தித் தோட்டம் காணவில்லை என்ற செய்தியுடன் காவல் அதிகாரிகளின் தகவல் பிரிவு தொலைக்காட்சியூடாக தமது கடமையைச் செவ்வனே செய்து கொண்டிருக்க, அதையும் பார்த்தவாறே மாதவி அழுது சிவந்த கண்களுடன், மெத்திருக்கையில் புதைந்து போயிருந்தாள். குளிர் காற்று மிதமாக அவளிருந்த இருப்பறைக்கு வந்து போய்க்கொண்டிருந்தது. கோடை காலத்தின் ஆரம்பம் ஆதலால் வீட்டின் முன்னே நின்றிருந்த மரத்தில் இலை தெரியாமல் பூத்திருந்த செரி ப்லோசம் (cherry blossom) இனிமையான ஒரு சுகந்தத்தைக் காற்றோடு அனுப்பிக் கொண்டிருந்தது. அவளுக்கு அதன் மென்மையான சுகந்தம் மனதுக்கும் இதமாக இருந்தாலும் அவள் முகம் வாடி, வதங்கிப்போயிருந்தது. இன்றோடு அவள் சகோதரி, அவளுடன் ஒரே நாளில், ஒரு சில நிமிட வித்தியாசத்தில் பிறந்தவள் …

  19. Started by putthan,

    வெரி வெரி குட்டி கிறுக்கல் பிறந்து கிட்டதட்ட 18 மாதங்களுக்கு மேலாகி விட்டது .ஒன்றரை வருடம் என்று சொல்லலாம் .பிறந்தது சிவப்பு புரட்சி வெடித்த மண்ணில் என்ற‌ காரணத்தால் சிவப்பு சித்தாத்தங்களை ஆறு மாதங்களில் நன்றாகவே மூளைச்சலவை செய்து கொண்டான் .தனது சித்தாந்தை உலகம் பூராவும் பரப்ப வேண்டும் குறுகிய காலத்தில் என்ற நல்லெண்ணத்தில் புரட்சிப்படையை உருவாக்கி பிறந்தமண்ணை தவிர்த்து வெளிநாடுகளுக்கு பறந்தான். எல்லோருக்கும் தனது சித்தாந்தங்களை இன,மொழி,மதம் கடந்து சமதர்மத்துடன் பரப்பி சோசலிச பார்வையுடன் சிவப்பு வெள்ளத்தில் மூழ்கடித்தான்.வென்றது அவனது புரட்சி .. China variant UK variant South Africa variant Indian variant போன்ற பல பல தேசிய நாடுகளை உருவாக்கி ம…

    • 9 replies
    • 2.1k views
  20. குறிப்பு- கீழ்வரும் கதை புகழ்பெற்ற ஷெர்லக் ஹோம்சும், வாட்சனும் யாழ் நகர வீதிகளில் உலாவினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் புனையப்பட்டதாகும். பேக்கரி ஒழுங்கைக்குள் நுழையும் போது இடதுபக்கமாக இருக்கும் நீர்ப்பாசன திணைக்களத்தால் 221B என இலக்கமிடப்பட்ட மதகுதான் எனக்கும் ஷெர்லக் ஹோம்ஸிற்கும் பகல் வீடு.அடித்து கொளுத்தும் யாழ்ப்பாண வெயிலில் கூட அந்த இடம் குளு குளுப்பாய் இருக்கும்.தலைக்கு மேல் இலங்கை மின்சாரசபையின் மர அழிப்பையும் மீறி வியாபித்திருக்கும் ஆலமரம் குளுமைக்கு ஒரு காரணம் என்றால் பிரதான வீதியின் மறுபுறம் இருக்கும் ரியூசன் கொட்டிலில் படிக்க வந்து போகும் இளம் சிட்டுக்கள் அதற்கு இன்னொரு காரணம்.காலை ஆகாரத்தை முடித்தபின் முழு பற்றரி சார்ஜ் ஏற்றிய கலக்சி S3 யோடு இங்கே வ…

  21. Started by pri,

    வேதவனம் ஒழுங்கை பருத்தித்துறையில் இருந்தது. இருந்தும் என்ன? பருத்தித்துறை நகரத்தில் இறங்கி வேதவனம் ஒழுங்கைக்கு போகிற வழியை யாரிடமாவது விசாரித்தால் அவர்கள் விழி பிதுங்குவார்கள். அப்படி ஒரு ஒழுங்கை இங்கே இல்லை என்று வேண்டுமானால் சத்தியம் கூட செய்வார்கள். அந்தளவுக்குத்தான் அது பிரபலமானது. கல்லடி ஒழுங்கை என்றும் சங்கக்கடைக்கு முன்னால் இருக்கிற ஒழுங்கை என்றும் அவரவர் தங்கள் வசதிக்கு ஏற்றபடி சொல்வதுண்டு. தபால்காரன் மாத்திரம் வாங்குகிற சம்பளத்திற்கு நாணயமாக சரியான பெயரை மறக்காமல் ஞாபகத்தில் வைத்திருந்தார். அவரின் கடமை விசுவாசத்தால் கடிதங்கள் எந்த பொல்லாப்பும் இல்லாமல் வீடு வந்து சேர்ந்தது. அப்பேர்ப்பட்ட வீதியில் இடப்பக்கத்தில் மூன்றாவதாக எங்கள் வீடு இருந்தது. ஐந்தாவத…

    • 0 replies
    • 1.6k views
  22. Monday, December 28, 2020 றைன் நதியோடு நானொருநாள் --------------------------------------------------- (4/2019 எழுதப்பட்ட கதை. 2020 நவம்பர் தேசத்தின் குரல் இணையஇதழில் வெளியானது) நேரத்தைப் பார்க்கிறேன். காலை 6.56. இன்னும் 2 மணித்தியாலங்கள் இருக்கிறது என் பயணத்தின் இலக்கையடைவதற்கு. இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று மகளிடம் போகிறேன். ஒரு குழந்தையென்ற எனது கனவுகள் விலக்கி அவள் 4வது செமஸ்ரர் தொடக்கத்தில் நிற்கிறாள். இன்னும் இரண்டு செமஸ்ரர் முடிந்தால் அவளது கற்றலின் இளமானிப் பட்டப்படிப்பை நிறைவு செய்வாள். காலமே என் குழந்தையைக் காத்திடு. அவள் கனவுகள் மெய்ப்பட உன் கைகளால் ஆசீர்வதித்து ஒளியிடு. நீயே நிதர்சனம் நித்தியம். உன…

  23. Started by pri,

    ஞாபகங்கள் ஒரு வகையில் விசித்திரமானவை. அண்மையில் நடந்த சம்பவமொன்று மறந்து போகிறது.கடைத்தெருவில் சந்திக்கிற மனிதர் ஒருவர் என்னை ஞாபகமிருக்கிறதா என கேட்கிறபோது அசடு வழியவேண்டிவருகிறது. எங்கேயோ பார்த்த முகம் போல இருக்கும். பெயர் நினைவுக்கு வராமல் அடம் பிடிக்கும். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னர் நடந்த சில சம்பவங்கள் இப்போதும் அச்சொட்டாக ஞாபகத்தில் இருக்கிறது. பல நூறு மனிதர்களையும் சில ஆயிரம் சம்பவங்களையும் கடந்திருப்போம். சிலது ஒட்டிக்கொள்கிறது. சிலது தொலைந்து போகிறது. எது தொலையும் எது தங்கிநிற்கும் என்பதற்கு ஏதேனும் எளிய சூத்திரம் இருக்கிறதோ தெரியாது. இது இன்னும் மறையாமல் எங்கையோ ஓரமாக ஒட்டிக்கொண்டிருகிற இரண்டு பள்ளிகால கனவுகள் பற்றியது. சின்ன வயதில்…

    • 12 replies
    • 3.9k views
  24. அம்மாவின் அன்பான அழைப்பும் துயில் எழுப்பலும் எதுவும் இல்லை. தங்கையின் அலட்டல் ஆர்ப்பாட்டம் இல்லை. அப்பாவின் கம்பீரக் குரல் இல்லை. எனக்குப் பிடித்த இன்னும் பலதும் இங்கில்லைத்தான். ஆனாலும் அவர்கள் எல்லோருடனும் இருக்கும்போது இல்லாத ஒருவித நிம்மதியும் அதனூடே தெரியும் வெறுமையுமே இப்ப எனக்கு இருந்தாலும் சுவாசக் காற்றில் எதோ ஒரு சுகத்தை கவலையினூடும் என்னால் உணர முடியிது. நான் இரண்டு நாட்களாக என் அறையில் ஒருவித இலயிப்போடு சுருண்டு படுத்திருக்கிறேன். ஏழாம் மாடியின் அறை ஒன்றில் திரைச்சீலையற்ற யன்னலினூடே தெரியும் வானத்தையும் அப்பப்போ கடந்து போகும் மேகங்களையும் சில பறவைகளையும் கூட பல காலத்துக்குப் பின்னர் இப்பிடிப் படுத்தபடியே பார்த்து இரசிக்க முடியும் என்று ஒரு இரு மாதங்களுக்…

  25. சபீதா-சிறுகதை-சாத்திரி இம்மாத நடு இணைய சஞ்சிகையில் . இப்போதெல்லாம் வரும் தமிழ்ப்படங்களையோ செய்தி சனல்களையோ பார்ப்பதை விட நசினல் ஜியோ கிராபி சனலை பார்க்கலாம். அதை பதிவுசெய்யும் கமராமேன்களுக்குத்தான் உண்மையில் அவார்டு கொடுக்கவேண்டும். காலை எழுந்ததுமே தேநீரோடு கொஞ்சநேரம் ஜெயோ கிராபி சனலை பார்க்கத் தொடங்கி விடுவேன். அதுவும் சிறுத்தை ஒரு மிருகத்தை வேட்டையாட பதுங்கியபடி நடக்கும்போதே ஒரு அழகியின் நடையை பின்னிருந்து இரசிப்பது போல அதன் அசைவுகளை அங்கம் அங்கமாக இரசிக்கத் தொடக்கி விடுவேன். குறி தவறாமல் அது தன் இலக்கின் கழுத்தை பாய்ந்து கவ்வும்போதே நானும் பாய்ந்து டிவியை கவ்வாதகுறையே தவிர அந்த சிறுத்தையாகவே மாறி விட்டிருப்பேன். பொதுவாகவே …

    • 26 replies
    • 4.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.