அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3270 topics in this forum
-
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் என ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. சீனாவில் 1,425.7 மில்லியன் சனத்தொகை காணப்படுவதாகவும் இருப்பினும் இந்தியாவின் மக்கள் தொகை 1,428.6 மில்லியனை எட்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், 2011 க்குப் பிறகு நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாததால், இந்தியாவின் மக்கள்தொகை எண்ணிக்கை ஒரு ஊகம் என்றும் கூறப்படுகின்றது. இதேநேரம் தங்கள் மதிப்பீட்டில் சீனாவின் இரண்டு சிறப்பு நிர்வாகப் பகுதிகளான ஹாங்காங் மற்றும் மக்காவ் – மற்றும் தாய்வான் மக்கள் தொகையும் இல்லை என்…
-
- 19 replies
- 1.5k views
- 1 follower
-
-
மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்.! - பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டிய மோடி.! பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மன்கிபாத் நிகழ்ச்சி அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பானது. இன்று காலை 11 மணியளவில் 59-வது மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது இந்தியாவின் கலாசாரம் மொழி குறித்து பேசியவர் `முப்பது கோடி முகமுடை யாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ என்ற மகாகவி பாரதியாரின் வரிகளை மோடி மேற்கோள் காட்டி பேசினார். இந்தியாவில் 30 கோடி முகங்கள் இருந்தாலும் அதன் உருவம் ஒன்றே. 18-க்கும் ம…
-
- 0 replies
- 1.5k views
-
-
விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் 68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி! விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத 68 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக ரிசேர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் காங்கிரஸ் கட்சி முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக தகவலை வெளியிட்டுள்ள ரிசேர்வ் வங்கி, தொழில்நுட்ப ரீதியாகவும், விவேகமான நடவடிக்கையாகவும் மொத்தம் 68 ஆயிரத்து 607 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக பதிலளித்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்த…
-
- 11 replies
- 1.5k views
-
-
முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் இன்று (ஆக்.06) காலமானார். பா.ஜ.,வின், மூத்த தலைவர்களில் ஒருவர், சுஷ்மா சுவராஜ், 67 , கடந்த 2014 லோக்சபா தேர்தலில், மத்திய பிரதேச மாநிலம், விதிஷா தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். மோடி அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக திறம்பட பணியாற்றினார். சர்க்கரை நோயாளியான சுஷ்மாவுக்கு, 2016ல், சிறுநீரகங்கள் செயல் இழந்தன. டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில், அவருக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இதையடுத்து நடந்து முடிந்த 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் தீவிர அரசியலில் இருந்து விலகினார். இந்நிலையில், சுஷ்மாவுக்கு இன்று (ஆக.,06) திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டில்லி எய்ம்ஸ் மருத…
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
கேரளாவில் ஏர் இந்தியா விமானம் இரண்டாக பிளந்து விபத்து கேரளாவில் ஏர் இந்தியா விமானம் இரண்டாக பிளந்து விபத்து: மீட்புப்பணிகள் தீவிரம் கேரள மாநிலம் கோழிக்கோடில் துபையில் இருந்து வந்த சுமார் 200 பேருடன் வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோழிக்கோடு காரிபூர் விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குறைந்தபட்சம் 24 அவசரஊர்தி வாகனங்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. துபையில் இருந்து கோழிக்கோடுக்கு ஏர் இந்தியாவின் X1344 விமானம் இன்று இரவு 7.41 மணியளவில் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இந்த சம்பவம…
-
- 7 replies
- 1.5k views
-
-
ஓரினச்சேர்க்கை குற்றமல்ல: சட்டப்பிரிவு 377 குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு #LGBTRights பகிர்க இரு சட்டபூர்வ வயதை அடைந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் பாலுறவு கொள்வதை குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377ஐ ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. "இயற்கையின் விதிகளுக்கு மாறாக ஓர் ஆண், பெண் அல்லது விலங்குடன் பாலுறவு கொள்பவர்கள் ஆயுள் சிறை தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை ஆகிய தண்டனைக்கு உள்ளாவார்கள். அவர்கள் அபராதம் செலுத்தவும் பொறுப்பானவர் ஆவார்கள்," என்று பிரிவு 377 கூறுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் 150 ஆண்டுகளுக்கும் மே…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஜம்மு காஷ்மீர் தாக்குதல்: அவசரமாக கூடுகிறது மத்திய அமைச்சரவை குழு ஜம்மு காஷ்மீர் தாக்குதல் குறித்து ஆராயும் வகையில், மத்திய அமைச்சரவை குழு அவசரமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை கூடியுள்ளது. ஜம்மு காஷ்மீர், புல்வமா பகுதியில் மத்திய ஆயுத பொலிஸ் படை வீரர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர். இப்பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலியாக குறித்த பகுதியின் பாதுகாப்பு குறித்து ஆராயும் வகையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 44 படை வீரர்களின் உயிரை காவுகொண்ட குறித்த பயங்கரவாதத் தாக்குதலை ஜெய்ஷ், முகம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், இக்கொடூரத் தாக்குதலுக…
-
- 13 replies
- 1.5k views
-
-
சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தில் பயணித்த மூவர் கைது!- பாக். தெரிவிப்பு (2ஆம் இணைப்பு) பாகிஸ்தானினால் சுட்டுவீழ்த்தப்பட்ட இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்களில் பயணித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அதில் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் கஃபூர் தெரிவித்துள்ளார். மேலும், காஷ்மீர் எல்லையை கடந்து பயணித்தமையினால் தற்பாதுகாப்பு நிமித்தமே குறித்த இந்திய விமானங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதனை நிராகரித்துள்ள இந்தியா, தமது விமானங்களதும், விமானிகளதும் உண்மை நிலை குறித்து தாம் அறிந்திருப…
-
- 18 replies
- 1.5k views
-
-
இந்திய குடியுரிமையை கைவிட்ட சுமார் ஒரு லட்சம் பேர் - என்ன காரணம்? சுபம் கிஷோர் பிபிசி செய்தியாளர் 26 ஜூலை 2022, 01:51 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES 2021 ஆம் ஆண்டில், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 370 பேர் இந்திய குடியுரிமையை கைவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. இவர்கள் "சொந்த காரணங்களுக்காக" குடியுரிமையை கைவிட முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 78,284 பேர் அமெரிக்க குடியுரிமைக்காக இந்திய குடியுரிமையை விட்டுள்ளனர். 23,533 பேர் ஆஸ்திரேலிய குடியுரிமையும், 21,597 பேர் கனடாவின் குடியுரிமையும் பெற்ற…
-
- 15 replies
- 1.5k views
- 1 follower
-
-
இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்! இந்தியாவை தாக்க முயன்றால் கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு உச்சி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் இதனை தெரிவித்தார். இதேவேளை போர் தொடுக்க எல்லா காலகட்டத்தில் நாம் இருக்கவேண்டும் என்றும் அமைதி காலகட்டத்திலும் நாம் தயார் நிலையில் இருத்தல் அவசியம். மேலும் நிலம், வான், கடல் என எந்தவழியிலும் எவரேனும் இந்தியாவை தாக்கினால் அவர்களுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். ம…
-
-
- 23 replies
- 1.4k views
-
-
பாகிஸ்தானில் 1300ஆண்டுகள் பழமையான கோயில் கண்டுபிடிப்பு! November 21, 2020 வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாத் (Swat ) மாவட்டத்தில், சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயிலை பாகிஸ்தான் மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த தொல்லியத்துறை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பரிகோட் குண்டாய் (Barikot Ghundai) பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியின்போது இப் புராதன கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோயிலுக்கு அருகே படைநிலைகளும், நேரத்தைக் காட்டும் கோபுரங்கள், நீர்த்தொட்டி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொல்லியல் துறை முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இந்த ஸ்வாத் மாவட்டம் இருந்தாலும், இந்து சாஹி காலத்தில் கட…
-
- 9 replies
- 1.4k views
-
-
ராஜீவ்காந்தி உயிரோடு இருந்திருந்தால்... இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றியிருப்பார் -தங்கபாலு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 29-வது நினைவு தினம் இன்று அணுசரிக்கப்படும் நிலையில், அவரை பற்றிய நினைவலைகளை நம்முடன் பகிர்ந்துள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு. மேலும், ராஜீவ் உயிரோடு இருந்திருந்தால் என்னென்ன மாற்றங்களை செய்திருப்பார் என்பது பற்றியும் அவர் தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தியை பற்றி தங்கபாலு தெரிவித்ததாவது;''இளைய பாரதத்தை கட்டி எழுப்பியவர் ராஜீவ் காந்தி, அவர் கொண்டு வந்த திட்டங்களால் தான் இன்று இந்தியா இந்தளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ராஜீவ்காந்தி தான் அடித்தளமிட்டார். நாட்டின் வளர்…
-
- 8 replies
- 1.4k views
- 1 follower
-
-
22 APR, 2025 | 08:58 PM தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் இன்று (ஏப்ரல் 22) தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் சில சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கிடைக்கப்பெற்ற தகவலின் படி, பஹல்காமில் உள்ள சாலைக்கு அப்பாற்பட்ட புல்வெளியான பைசரன் என்ற இடத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். "பைசரானில் சுற்றுலாப் பயணிகள் மீது இரண்டு அல்லது மூன்று தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக எங்கள் அறிக்கைகள் கூறுகின்றன" என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பி…
-
-
- 30 replies
- 1.4k views
- 1 follower
-
-
இந்தியா-சீனா எல்லை பதற்றம்: கைலாய மலையை கைப்பற்றியதா இந்திய இராணுவம்? #BBCFactCheck உண்மை கண்டறியும் குழு பிபிசி இந்தி சேவை 19 செப்டெம்பர் 2020 பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் லடாக்கில் மெய்யான கட்டுப்பாட்டு கோட்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் தொடர்கிறது. இந்த வரிசையில், லடாக்கின் வெவ்வேறு இடங்களைப் பற்றி தினசரி செய்திகள் வெளிவருகின்றன. இந்திய இராணுவம் கைலாய மலையையும் மானசரோவரையும் கைப்பற்றியதாக சமூக ஊடகங்களில் கடந்த ஒரு வாரமாக, கூறப்பட்டு வருகிறது. இது பற்றிய செய்திகள…
-
- 2 replies
- 1.4k views
-
-
போர்க்குற்றவாளியாக சர்வதேசத்தினால் பார்க்கப்படும் இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு டெஹ்ராடூனனில் உள்ள இந்திய இராணுவ கல்லூரியில் வரவேற்பு வழங்கப்பட்டமை தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இனப்படுகொலை குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவேந்தல் மற்றும் கண்ணியம் நாளாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 9 அன்று, ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்ட இந்த மரியாதையால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக நாடு கடந்த தமிழீழு அரசாங்கத்தின் இனப்படுகொலை மற்றும் பாரிய அட்டூழியங்களைத் தடுப்பதற்கான அமைச்சு தெரிவித்துள்ளது. போர்க்குற்றவாளி 2019 ஆகஸ்ட் 19ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மி…
-
- 15 replies
- 1.4k views
-
-
பெங்களூர் சம்பவம் - சமூக வலைத்தள பயன்பாட்டின் மறுபக்கம். சமூக வலைத்தளங்களில் என்ன விடயங்களை பகிர்கின்றோம் என்பதில் கவனமா இருக்காவிடில், முதலுக்கே மோசமாகிவிடும் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஹிதேசா என்பவர், வட இந்திய பெண். ஒரு மாடல் அழகியான இவர், பெங்களூரில் வசிக்கிறார். இன்ஸ்டாகிராம் மூலம், மேக்கப் சம்பந்தமான விடயங்களை சொல்லி, யாவாரம் செய்பவர். ஒரு 12,000 பேர் வாடிக்கையாக தொடர்பவர்கள். இவர் அண்மையில் ஒரு நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்தார். அதனை கொண்டு வந்தவர் சோமாட்டோ எனும் நிறுவனத்தின், ஊழியர் காமராஜ், ஒரு தமிழர். உணவை கொண்டு வருவதில் தாமதமாகி விட்டது. என்ன நடந்ததோ தெரியவில்லை, உணவு கொண்டு வந்தவர் தன்னை தாக்கியதால், மூக்கில் ரத்தம் ஓடுகிறது. எனத…
-
- 8 replies
- 1.4k views
-
-
பட மூலாதாரம்,SHAHNAWAZAHMAD/BBC படக்குறிப்பு, 'ராதே ராதே' என்ற சொற்களுடன் கூடிய துப்பட்டாவை அணிந்துள்ள சீமா குலாம் ஹைதர் கட்டுரை தகவல் எழுதியவர், அபினவ் கோயல் பதவி, பிபிசி நியூஸ் 26 நிமிடங்களுக்கு முன்னர் 'கையில் சிவப்பு வளையல், நெற்றியில் குங்கும பொட்டு வைத்து, கழுத்தில் ராதே ராதே என்ற சொற்கள் அடங்கிய துப்பட்டா மற்றும் மந்திர சொற்கள் அடங்கிய பாசியை அணிந்திருக்கிறார் அந்தப் பெண். செய்தியாளர்கள், கேமராக்கள் மற்றும் மைக்குகளால் சூழப்பட்ட சீமா குலாம் ஹைதர் தனது இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் இருந்து செய்தியாளர்களின் அனைத்து கேள்விகளுக்கும் நம்பிக்கையுடன் பத…
-
- 18 replies
- 1.4k views
- 1 follower
-
-
சந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைISRO கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று திங்கள் கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு ஏவப்பட்டது. ஸ்ரீஹரிக்கோ…
-
- 2 replies
- 1.4k views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் இந்து சிறுமிகளுக்கு கட்டாய திருமணம் – விசாரணைக்கு இம்ரான் கான் உத்தரவு பாகிஸ்தானில் 13 மற்றும் 15 வயதுடைய இந்து சிறுமிகளை கடத்தி கட்டாய திருமணம் செய்தது தொடர்பாக விசாரணை நடத்துமாறு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அவ்விரு சிறுமிகளையும் உடனடியாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிந்து மாகாண அரசுக்கு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அரசு தீவிரம் காட்ட வேண்டும் என இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்குட்பட்ட கோட்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த…
-
- 2 replies
- 1.4k views
-
-
"டிரம்ப் வருவதால் 7 நாட்களில் குடிசைகளை காலி செய்யுங்கள்” : குஜராத் பா.ஜ.க அரசு கெடு விதித்து அராஜகம்.! குஜராத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையால் அகமதாபாத்தில் மோடோரா பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து காலி செய்யவேண்டும் என அகமதாபாத் மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது. அமெரிக்க அதிபர்டொனால்டு டிரம்ப், தனது மனைவியுடன் வரும் 24ம் தேதி இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் வருகிறார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வரும் டிரம்ப்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மோடி அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடியுடன் டிரம்ப் ம…
-
- 14 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூவர் இந்தியாவில் கைது தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இலங்கையைச் சேர்ந்த மூவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கசின் குமார், அமில நுவான் மற்றும் ரங்க பிரசாத் ஆகியோரும் இவர்களுக்கு பெங்களூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்த பரமேஷ் என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களுக்கு இலங்கை பாதாள உலகத்துடன் தொடர்பு இருப்பதை சிசிபி அதிகாரிகள் விசாரணையின் போது கண்டுபிடித்துள்ளனர். https://athavannews.com/2023/1346648
-
- 17 replies
- 1.4k views
-
-
''பிராமணர்கள் எப்போதும் உயர்பொறுப்பில் இருக்க வேண்டும்'' - கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGODONG Image captionகோப்புப் படம் முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - "பிராமணர்கள் எப்ப…
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
முப்படைகளும் தயார்...கர்ஜிக்கும் இந்தியா...! எத்தனை நாடுகள் வந்தாலும் பதிலடி உண்டு..! ஜம்முகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று இரவு கூடுகிறது , இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்தும், அதில் தங்கள் நாடுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்தும் மிக ரகசியமாக விவாதிக்கப்படும் என்று கூறப்படும் நிலையில், கூட்டம் தொடர்பான தகவல்கள் வெளியில் தெரியாத அளவிற்கு அதில் ரகசியம் காக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து ரத்துசெய்யப்பட்டு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்பட்டுள்ளது, இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டத்தை தெரிவித்ததுடன், சினாவுடன் இணைந்து இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்…
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல் திபெத்தின் மொசோ மாவட்டத்தில் உள்ள பள்ளத் தாக்கில் பிரமாண்ட மான அணை ஒன்றைக்கட்ட சீனா முடிவு செய்துள்ளது. இந்நிலையில், சீனா இந்த அணையை கட்டினால் இந்தியாவுக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகிலேயே மிகவும் நீளமான மற்றும் ஆழமான பள்ளத்தாக்கில் இந்த அணையை சீனா கட்டுகின்றது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 900 அடி உயரத்தில் இந்த அணையை கட்ட சீனா திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சேமிக்கும் நீரைக் கொண்டு 30 ஆயிரம் கோடி கிலோவாட்ஸ் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீனாவின் 14 ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த அணை க…
-
- 14 replies
- 1.4k views
-
-
இந்திய ராணுவ வீரரின் ஒரே அடியில் வெலவெலத்துப்போன மசூத் அசார்.. அதிகாரி வெளியிட்ட பரபர தகவல் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் இந்திய ராணுவ வீரரிடம் கன்னத்தில் அறை வாங்கி வெலவெலத்துப்போன ஒரு சம்பவம் இப்போது வெளியாகியுள்ளது. புல்வாமாவில், சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் தீவிரவாத தாக்குதலில் பலியாகினர். இந்த தாக்குதலுக்கான பொறுப்பை பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு ஏற்றுள்ளது. இந்த தீவிரவாத அமைப்பின் தலைவன் பெயர் மசூத் அசார். 1968ம் ஆண்டு பாகிஸ்தானின் பஹவல்புர் என்ற ஏரியாவில் பிறந்தவன். ஹர்குத்-அல்-அன்சார் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டு படிப்படியாக அந்த தீவிரவாத அமைப்பில் பெரிய பதவிக்கு வந்தான். இந்த தீவிரவ…
-
- 2 replies
- 1.4k views
-