Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

  1. தைரொய்ட் குறைபாடும் அதற்கான நிவர்த்திகளும் தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும் தேவையானது.மூளையில் உள்ள கபச்சுரப்பியின் TSH (ஹோர்மோன் ) உத்தரவுப்படி செயல்படும். சிலவேளைகளில் TSH போதிய அளவு இருந்தாலும் தைரொய்ட் சுரப்பி தேவையான அளவு தைரொக்ஸினை சுரக்காது. இதற்கு முக்கிய காரணம் மரபு அணு சம்பந்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி செயல்பாடாகும். Autoimmune என்று சொல்லப்படும், எமது வெண்குருதி கலங்கள் தமக்கு கொடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு வேலையை செய்யாமல் எமது உடலின் பல பாகங்களையும் தாக்கும். அந்த வழியில் தைரொய்ட் சுரப்பியையும் தாக்கும். அதனால் தைரொக்சின் அளவு குறைந…

  2. இப்போதெல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்கொள்ளும் பெரிய சவால் அல்லது பிரச்சனை என்றால் அது தம் பிள்ளைகளுக்குத் திருமணம் பேசுவதுதான். பிள்ளைகள் படிக்கும் காலங்களில் ஒருத்தனையும் நிமிர்ந்தும் பார்க்கக் கூடாது. படி படி என்று கூறிவிட்டு அவர்களும் எமது அதீத கட்டுப்பாட்டால் ஆண்பிள்ளைகளுடன் அதிகம் பலரது விட்டுவிட்டு அல்லது பழகினாலும் காதல் கீதல் என்று போகாது ஒதுங்கிவிடுவார்கள். பிள்ளைகள் படித்து முடித்து நல்ல வேலை சம்பளம் என்று சுதந்திரமாய் இருக்கவாரம்பித்ததும் திருமணம் பேச ஆரம்பித்துவிடுவர். சில பிள்ளைகள் மிக அன்பாக வெளியுலகம் அதிகம் தெரியாதவர்களாகவும் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றனர். சிலர் தன்னம்பிக்கை அதிகம் உள்ள பிள்ளைகள் பலர் இப்போது ஐரோப்பிய நாடுகளில் முப்பத்தைந்து நாற…

  3. நேற்று காலையில் பாலைவனத்தில் திட்டப்பணிகளை ஆய்வு செய்யும்போது மனதில் ஒரே தவிப்பு..! 'நாளை ரமலான் நோன்பு ஆரம்பிக்கப்போகுதே.. ஒரு பயலும் கடையை திறக்க மாட்டானுக..சாப்பாட்டுக்கு என்ன செய்வது..?' இங்கே ரமலான் நோன்பு மாதத்தின்போது தினமும் உணவகங்கள் மாலை ஏழு மணிக்கு மேல்தான் சில கடைகள் திறந்தாலும் திறக்கும், ஆனால் மறுபடியும் எட்டு மணிக்கு கொரானா ஊரடங்கால் மூடிவிட வேண்டும்..! காலை பத்து மணியிலிருந்து தமிழகத்திலிருக்கும் என் மனைவியிடமிருந்து எனக்கு அடிக்கடி தொலைபேசியில் பல அறிவுறுத்தல்கள், சமையல் குறிப்புகள், கெஞ்சல்கள்..! "சரி.. சரி..சரியம்மா.. வேலை முடிந்தவுடன் போய் சூப்பர் மார்க்கெட்டில் மளிகை பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிடுறேன்.. வேலையில் இருக்கிறேன், நீ…

  4. டிஸ்கி : இந்தாண்டு நம்மளும் ஏதாவது கிறுக்குவோமே..! என்ற முயற்சிதான்..கீழே..! ஏறக்குறைய 45 வருடங்களுக்கு முன்.. புகுமுக வகுப்பை (PUC) முடித்துவிட்டு, மதிப்பெண்கள் வெளிவரும் நேரம்.. 'திக் திக்' மனதோடு அடுத்த எதிர்கால படிப்பை 'எந்தப் பிரிவில் தொடரலாம்..?' என மனதில் ஆயிரம் கேள்விகள்..குழப்பங்கள்..! தோட்டத்திற்கு சென்றால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள், அக்கம்பக்கம் உள்ளோர் எனது ஐயாவிடம் "மைனர் அடுத்து என்ன செய்யப்போறார்..?" எனக் கேள்விகள்.. மதிப்பெண்கள் வரும்வரை என்னிடம் பதிலில்லை.. ஒருமாத கால காத்திருப்பிற்கு பின் பெறுபேறுகள் வந்தாயிற்று.. எதிர்பார்த்தபடியே நல்ல மதிப்பெண்கள்..! நிச்சயம் எனது கனவான பொறியாளராக முடியும…

  5. மகளின் 21 வது பிறந்த தினத்துக்குத் தன்னை தான் விரும்பும் மூன்று நாடுகளுக்குக் கூட்டிக்கொண்டு போவீர்களா அம்மா?? செலவும் அதிகம் இல்லை என்றாள். சரி நாம் மற்றவர்கள் போல் ஆடம்பரமாக எதையும் கொண்டாடுவதில்லை. மகளின் சாட்டில் நானும் போய்வரலாம் என்று எண்ணி சரி என்று கூறி இரு மாதங்களுக்கு முன்னர் விமானச்சீட்டுக்களை வாங்கியாகிவிட்டது. மூன்று நாட்கள் ஒரு நாட்டிலும் இரண்டு நாட்கள் இன்னொரு நாட்டிலும் மூன்றாவதாக சுவிசுக்கும் போவதாக ஏற்பாடு. நான் பலதடவை சுவிஸ் போயுள்ளேன். என் கடைக்குட்டி போகாதபடியால் கட்டாயம் அங்கும் தான் போகவேண்டும் என்றதனால் சரி மீண்டும் அந்நாட்டின் அழகை இரசிப்போம் என்று காத்துக்கொண்டிருக்க உந்தக் கொரோனா வந்து தடையாய் நிக்குது. டிக்கற் தங்குமிடம் இரண்டும் சேர்த்து…

  6. (ஜேர்மன் நிதியமைச்சர்) என்னுடைய... தலை மயிரும், கனக்க வளர்ந்து... காதை மூடும் போல இருப்பதை பார்க்க,அரியண்டமாக இருந்தது. வழக்கமாக போகும்... "மசூதி சலூனுக்கும்" போக பயமாக இருந்த படியால்... சென்ற.. திங்கள் கிழமை, ஈஸ்டர் லீவு என்ற படியால்.... பிள்ளைகள் குழந்தைகளாக இருந்த போது... 25 வருசத்துக்கு முதல், அவர்களுக்கு... தலைமயிர் வெட்ட வாங்கின "மெசின் ஒன்று"... நில அறையில்... இருந்தது நினைவுக்கு வர, அதை எடுத்துக் கொண்டு வந்து, முயற்சி பண்ணிப் பார்த்தால்... படத்தில் உள்ளதை போல, வந்திட்டுது. இனி... யோசிக்க, நேரமில்லை என்று விட்டு... பிள்ளைகளும் வீட்டில் நின்ற படியால்.... "அப்பாவுக்கு.... தலைமயிர் வெட்ட, ஆருக்கு விருப்பம்?... என்று, ஒருமுறை தா…

  7. உ. நிலம் தழுவாத நிழல்கள். நிலம் ..... 1. அழகிய பாரிஸ் நகருக்கு அணிகலனாய் விளங்கும் ஷேன்நதி கடல் காதலனின் கரங்களில் தவழ இரு கரைகளின் தழுவலில் அடங்கி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறாள். ஆங்காங்கே ஓரிரு சுற்றுலாப் படகுகளும் சுமைதாங்கிப் படகுகளும் நதியன்னைக்கு வலிக்காமல் நீரை விலக்கி நகர்ந்து செல்கின்றன. படகின் மேல் தளத்தில் சில சிறுவர்கள் நின்று வீதியில் போய் வருகிறவர்களையும், கரையோர பூங்காக்களின் கதிரைகளில் இருப்பவர்களையும் பார்த்து குதூகலத்துடன் கையசைத்துக் கொண்டு செல்கின்றனர். …

    • 73 replies
    • 8.3k views
  8. நான் வடிவோ வடிவில்லையோ என்று உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை. நேற்றிரவு நான் எனது படமொன்றை Facebook இல் போட்டுவிட்டுப் படுத்து விட்டேன். இன்று காலையில் எழுந்து பார்த்த போது அந்தப் படத்துக்கு முந்நூறுக்கு மேல் லைக்ஸ். நூறுக்கு மேல் கொமென்ற்ஸ். உள் பெட்டியில் ஊருப்பட்ட செய்திகள். 'வடிவு, நீங்கள் நல்ல வடிவு' 'உங்களோடை கதைக்கோணும். போன் நம்பரைத் தாங்கோ' 'உங்களுக்கு ஒண்டு சொன்னால் கோவிப்பிங்களோ? நீங்கள் நல்ல வடிவு' 'உங்கடை வடிவாம்பிகை என்ற பெயரைப் போலயே நீங்கள் வடிவா இருக்கிறிங்கள்' 'மடம், பிளீஸ் போன் நம்பர் தாங்கோ' 'அக்கா, ஐ லவ் யூ" இப்படித்தான் அந்தச் செய்திகள் என்னை மயக்கும் எண்ணத்தில் எழுதப் பட்டிருந்தன. நான் Teenage இல் இருந்தி…

    • 39 replies
    • 5.4k views
  9. தனித்திருந்து பார்…… ஏகாந்தம் என்பது இனிமையா? கொடுமையா? என்பது தெரிய வேண்டுமா? எவருமில்லாத உலகில் நீ மட்டும் வலம் வர வேண்டுமா? பூமியின் எல்லைகளுக்கப்பால் பூகோள விதிகளைத் தாண்டி வானவீதியில் இறக்கை விரித்துப் பறக்க வேண்டுமா? தனித்திருந்து பார். கொட்ட முடியாத சோகங்களை கண்ணீரில் கொட்டி கவலைகளை மறக்க வேண்டுமா? எட்ட முடியாத சிகரங்களை கற்பனையில் ஏறி கலகலப்பாய் கரமசைக்க வேண்டுமா? தழுவவும் தலை தடவவும் ஆளில்லாமல் உனக்குள் நீயே உடைய வேண்டுமா? தனித்திருந்து பார் கடந்து போன காலங்களின் களிப்பான நிகழ்வுகளை அசைபோட்டு மனம் ஆர்ப்பரிக்க வேண்டுமா? உறவுகளின் உரசலும் பிரிவுகளின் விரிசலும் தொலைந்து விட்ட காலமும் தோளில் பாரமாகிட வி…

  10. ஒன்று காலைக் கதிரவன் கதிர்பரப்பிக் கடைவிரித்த பின்னும்கூட நயினி கட்டிலில் இருந்து எழுந்திருக்க மனமின்றி படுத்தே கிடந்தாள். எழுந்து என்னதான் செய்வது? இந்தப் பரபரப்பான பாரீஸ் நகரின் எல்லையான பொண்டி என்னும் இடத்தில் தான் அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி வீடு அமைந்திருந்தது. ஐம்பது குடும்பங்களாவது வசிக்கும் அக்கட்டடம் பிரதான வீதியிலிருந்து சற்று உள்ளே அமைந்திருந்ததால் எவ்வித வாகன ஓசைகளும் இன்றி அமைதியான பிரதேசமாகக் காணப்பட்டதனால் நாமாக அலாரம் வைத்து எழுந்தாலோ அல்லது நித்திரை முறிந்து எழுந்தாலோ அன்றி யாரும் இடைஞ்சல் தர மாட்டார்கள். முகுந்தன் காலை ஆறுமணிக்கு எழுந்து வேலைக்குச் சென்றானென்றால் மாலை ஐந்து மணிக்குத்தான் திரும்ப வருவான். அதுவரை அவதியாகச் சமைக்க வேண்டிய …

  11. Started by Kavallur Kanmani,

    இல்லறம் இருமனம் இணைந்த திருமண வாழ்வில் இது ஒரு சுகராகம் பிரிவினை விரும்பும் இருவரின் வாழ்வில் இது ஒரு பெரும் சோகம் சரிநிகர் என மன உணர்வினை மதித்தால் இது ஒரு மலர்த் தோட்டம் பெரியவர் நான் என ஒரு மனம் நினைத்தால் இது ஒரு சிறைக் கூடம் அன்பெனும் கடலில் இதயங்கள் மிதந்தால் இல்லறம் ஒரு சொர்க்கம் துன்பங்கள் அங்கு தொடர்கதையானால் நிரந்தரமாய் நரகம் வாதங்கள் இல்லா வாழ்க்கையில் என்றும் வாசங்கள் பாரங்கள் பேதங்கள் எல்லாம் நேசங்களாக நெஞ்சினில் தாபங்கள் ராகங்கள் இசைக்க வாத்தியம் தேவை தாளங்களும் தேவை பாசங்கள் நெஞ்சில் பூத்திடும் வேளை சோகங்கள் தூரங்கள் தமிழொடு இனிமை இணைந்தது போல தம்பதிகள் இணைந்தால் அமிழ்தோ…

  12. உ. காமரூபினியும் கற்சிற்பியும். அயிரை மீன்கள் உருண்டு பிரண்டு நிரை நிரையாய் விளையாடும் ஆறு. கரையினில் குறுமணல் மேடுதனில் தரையிலே இருந்தது தங்குமோர் குடில். கற்சிற்பியவன் கலங்கி நின்றான் --- கையில் சிற்றுளி கொண்டு செதுக்கி செப்பனிட்ட கற்சிற்பத்தை கண்ணால் வருடியபடி கண்ணில் நீர் ஒழுகியபடி. மெய்தீண்டாது வான் பார்த்து சிந்தனையுடன். அலைபுரண்டோடும் ஆற்றின் கரைபுரண்டு தெறிக்கும் திவலையின் நுரைகளுடன் கையளைந்து நிரை கொங்கைகள் சதிராட நீந்திக் களிக்கும் மங்கையவள் ஈரேழு அகவையவள் இளமைப் பருவத்தின் தலைவாசல் தீண்டுவாள். சிற்றிடை தள்ளாட தண்டை கிண்கிணியென ஒலிக்க சின்ன பாதங்களால் தாவி கரையேறி --- அவள் எடைபோல் குறைந்த உ…

  13. Started by putthan,

    எப்ப இளைப்பாரலாம் என்ற சிந்தனையுடன் கட்டிலை விட்டேழுந்தேன்.எனது வயதையும் இளைப்பாறுவதற்கு அரசாங்கம் வைத்திருக்கும் வயதெல்லையையும் எண்ணிபார்த்தேன் இன்னும் 10 வருடங்கள் வேலை செய்தால் தான் ஓய்வுதியம் கிடைக்கும் என்பதை உணர்ந்தேன் .சிறிலங்காவிலிருந்தால் நான் இப்ப‌ பென்சனியர் ஆனால் இங்க பொல்லுபிடிச்சு கொண்டு வேலைக்கு போகவேண்டி இருக்கு என சலித்தபடியே காலைக்கடன்களை முடிக்க தொடங்கினேன். "டேய் நீ சிறிலங்காவிலிருந்தால் உனக்கு அரசாங்க உத்தியோகம் கிடைத்திருக்குமா?அரச உத்தியோகம் இல்லாவிடின் பென்சனே இல்லை".. மனச்சாட்சியின் அதட்டலினால் காலைகடன்களை விரைவாக முடித்து கொண்டு வேலைக்கு புறப்பட தயாரானேன். "இஞ்சயப்பா வரும் பொழுது வூலியில் டொய்லெட் டிசுவும்,தமிழ் கடைகளில் போய் அரிசி…

    • 10 replies
    • 3.3k views
  14. அவரை எனக்கு பார்த்த அந்த கணத்திலேயே பிடிக்காமல் போய்விட்டது. ஒரு சிலரை பார்த்தவுடன் பிடிக்காமல் போய், பிறகு பழக வேண்டி வந்து அதன் பின் பிடித்து போய்விட்ட சந்தர்ப்பங்களும் உள்ளது. ஆனால் இந்த மனிசனை கண்டவுடன் ஒரு போதுமே ஆளுடன் பழகக் கூடாது எனும் அளவுக்கு எனக்கு அப்படி ஒரு வெறுப்பு வந்து விட்டது. அரைவாசி மட்டுமே திறந்து பார்க்கும் கண்கள், மற்ற எல்லாரும் மயிருகள் என்ற மாதிரி பார்க்கும் அந்த ஏளனப் பார்வை, முகத்தில் எப்பவும் இருக்கும் ஒரு கிழமைக்கும் மேல் சவரம் செய்யாத தாடி, சாயம் போனது போன்று தோன்றும் முழுக்கை ஷேர்ட்டும் காக்கி நிற டவுசரும், அருகில் வந்தால் மூக்கில் அடைக்கும் சிகரெட் மணமும் என்று ஆள் ஒரு டைப்பாகவே இருப்பார். இலங்கை இந்திய உணவுப் பொருட்களை வாங்கு…

    • 18 replies
    • 3.2k views
  15. வணக்கம், வரலாற்றை பின் களமாக வைத்து வரும் புனைகதைகள் என்றால் எனக்கு சிறு வயது முதலே மிகவும் ஆர்வம். அந்த வகையில் ஈழத்தின் வரலாற்றை பின் புலமாக வைத்து நானும் ஒரு உரை நடை கவிதை எழுதலாம் எனவிழைகிறேன். கவனிக்க - இது வெறும் புனை கதை. இதில் வரலாற்றின் பாத்திரங்கள் வருவர், போவர் ஆனால் இது வரலாறுஇல்லை. சொல்லப்போனால் இதில் இப்போ இலங்கையில் வரலாறு என ஏற்கப்பட்டிருக்கும் நிகழ்வுகள் பலதும், 180 பாகை நேரெதிர் திசையில் சித்தரிக்கப் படுகிறன. இந்த முயற்சிக்கு கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி, அவதார புருசன், ராமானுஜகாவியம் என்பனவே இன்ஸ்பிரேசன். ஆனால் அந்த தரத்தில் எதிர்பாராதீர்கள். உயர, உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது 😂. நன்றி, கோஷான் சே …

    • 22 replies
    • 3k views
  16. நேற்று, புதன்கிழமை. தமிழ்க்கடைக்கு புது மரக்கறியள் வந்திருக்கும். முருங்கைக்காய்க்கு, பிலாக்கொட்டை போட்டு சமைத்துச் சாப்பிட்டால் அந்தமாதிரி இருக்கும். நினைக்கவே வாயூறியது. நானே தனியப் போய் வேண்டியிருக்கலாம். மனுசியையும் கூட்டிக் கொண்டு போகலாம் என்ற நினைப்பில் 'தமிழ்க்கடைக்குப் போறனப்பா. வாவன்" என்றன். "உதிலை போறதுக்கு நானேப்பா" "நீயெண்டால் பாத்து நல்ல மரக்கறியளா எடுப்பாய்..." அவளுக்கு உச்சி குளிர... உடனையே வெளிக்கிட்டிட்டாள். தனிய போயிருப்பன். பிறகு "நீங்கள் அதை வேண்டேல்லையப்பா, இதை வேண்டேல்லையப்பா. வெண்டிக்காய் என்ன முத்தலாக் கிடக்கு. முறிச்சுப் பார்த்து வேண்டத் தெரியாதோ..…

  17. Started by நியாயம்,

    செயற்கை சுவாசக்கருவி மூலம் மூச்சு உள்ளே சென்று வெளியே வருகின்றது. ஒவ்வொரு மூச்சுமே ஒரு போராட்டம். சுயநினைவு திரும்புமா? தெரியாது. ஆனால், திரும்பவேண்டும். பின்பு...? கண்கள் விழிக்கவேண்டும். சாதுவாக அல்ல, அவை நன்றாய் அகல விழிக்கவேண்டும். ஆட்கள், பொருட்கள் தெளிவாய், துல்லியமாக தெரியவேண்டும். மேலும்? காதுகள் கேட்கவேண்டும். இரண்டு காதுகளும் கேட்கவேண்டும். மனித குரல்கள், குருவியின் ஓசை, கோயில் மணியோசை, வாகன இரைச்சல் அனைத்துமே காதுகளில் ஒலிக்கவேண்டும். இவை மட்டும் போதுமா? இல்லையே. படுத்த படுக்கையாக சரிந்த ஆள் மீள எழவேண்டும். எழுந்து நடமாடவேண்டும். நாளாந்த வாழ்க்கை வழமைக்கு திரும்பவேண்டும். சிரித்து கதைத்து பேசவேண்டும். ஒன்…

  18. எனது குடும்பத்திற்கு, கொரோனா ஏற்படுத்திய மரண பயம். - தமிழ் சிறி.- 2019´ம் ஆண்டு விடை பெற்று, செல்லும் போது..... 2020´ம் ஆண்டை வரவேற்க உற்சாகமாக இருந்த நேரம். இப்படியான... ஆண்டு மாற்றங்கள், நடக்கும் தருணங்களில்.... எனது பிள்ளைகள்... சிறுவர்களாக இருக்கும் போது.. அவர்களுக்கும், எனக்கும்.. உற்சாகமாக இருப்பதற்காக, நிறைய... வாண வேடிக்கைகள் செய்து, புத்தாண்டை வரவேற்போம். இப்பிடி, "காசை கரியாக்தேங்கோ... " என்று, மனைவி சொன்னாலும், வழக்கம் போல்... ஒரு காதால்.. வாங்கி, மறு காதால், வெளியே விட்டு விடுவேன். அதை நான்... கணக்கில் எடுப்பதில்லை. (அதுதான்... காதல், என்பார்கள்) ஆனால்.... கடந்த சில ஆண்டுகளாக, பிள்ளைகளுக்கு படிப்பில்... கவனம் செலுத்…

  19. தலைமுறைகள் விடைகாண்பர்! ---------------------------------------------------------------------- விடுதலைக்கு உரமான வீரத் தளபதிகாள் கலையாது நினைவுகளில் வாழும் வீரர்களே விழிநீரால் நினைந்துருகும் நிலையாகப் போனவரே கலையாத கனவொருநாள் மெய்ப்படும் வேளைவரும் உறங்காத உணர்வுடனே உயிர்பெறும் பொழுதினிலே விடிவுபெறும் தேசத்தில் விழிதிறப்பீர் வீரர்களே! விழிதிறக்கும் வழிகாணும் தலைமுறைகள் எழும்போது விலங்குடைத்து நிமிர்கின்ற வழிதேடி விடைகாண்பர் புலமெங்கும் வளம்பெற்று நிமிர்கின்ற இளையோரும் தாய் நிலமெங்கும் தமிழோடு வாழ்கின்ற இளையோரும் அறிவோடு இணைந்தே அறப்போரைத் தொடுத்தாலே நிலத்துயரை நீக்கிவிடும் நிலைகாண வழிபிறக்கும்! சாவுகளை எதிர்கொண்டு சரித்திரமாய் வாழ்பவரே…

  20. கலைந்து சென்ற கார்மேகம். கார்குழலில் இருந்து நழுவிய மலரொன்று நர்த்தனமாடுகின்றது அசைந்து வரும் அவள் அசைவுகளில் அவள் நடந்து வருகின்றாள்........! பெருமழையின் தூறல்களில் விழும் சிறு துளிகள் முகமலரில் விழுந்து முன்னழகில் மோட்சமடைகின்றன அவள் ஓடி வருகின்றாள்......! எதிரே பார்த்து புன்னகைக்கையில் என்னிடமும் சிறு மலர்ச்சி மழைநீரில் குமிழ்களாய் மனசுக்குள் சிதறுகின்றன அவள் சிரிப்புடன் வருகிறாள் ........! என்னை கடந்து செல்கையில் என் மனசில் சிறு சலனம் குழந்தையோடும் குடையோடும் என் பின்னே வருகின்றான் அவள் கணவன் அவள் அவர்களிடம் செல்கிறாள் ......! …

    • 16 replies
    • 2.5k views
  21. என்னை உணரவைக்க வந்ததா? ------------------------------------------------------------------- இறுமாப்பில் எழுந்தாய் நீ மானிடனே என்னை வென்றதாய் என்னைப் புறந்தள்ளி இமயத்தையும் கடந்தாய் ஈரேழு உலகும் பறந்தாய் மறந்தாய் உன்னை; உன்னை மட்டுமல்ல என்னையும் மறந்தாய் எங்கெங்கோ பறந்தாய் என்னைப் பாதுகாக்க என்னோடு இணைந்து செல்ல சிந்திக்கவும் மறந்தாய் காணும் பொருளெங்கும் கண்கள் அலைபாய விண்ணையும் மண்ணையும் உன் எண்ணப்படி கடந்தாய் உன்னை அளப்பாய் என்னையும் அளப்பாய் ஆனால் அழிக்காதே! முன்னோர் சொன்னவற்றை உதறித் தள்ளவிட்டு உன் போக்கில் போகின்றாய் எனக்காக எல்;லாம் என்று சொன்னாய் உனக்காக ஏதும் இல்லை என்று சொல்லி வந்தது கொறொனா! பணமருக்கும்…

    • 22 replies
    • 2.4k views
  22. கொரோனா என்னும் கொடுநோய் காணுமிடமெங்கும் கரகமாடுகிறது கொள்ளைபோல் வந்து மனங்களை கொதிநிலையில் கதிகலங்க வைக்கிறது கூட்டம்கூட முடியவில்லை கொஞ்சிப்பேசவும் முடியுதில்லை குடும்பமாய்க் கூட நாமெல்லாம் குதூகலிது மகிழ்ந்திருக்க முடியாது கொடுங்கோல் ஆட்சியாளனாய் கொத்துக்கொத்தாய் மனிதர்களை கொன்றேதான் குவிக்கின்றது வைரஸ் என்னும் விழியில் தெரியா சிறுகிருமி வல்லவர்களைக் கூட விழிபிதுங்க வைக்கிறது மானிடர்கள் கண்ட மதி நுட்பமெல்லாம் பேரிடரில்க் கூடக் கைகொடுக்க மறுக்கிறது மாளிகையில் வாழும் மகாராணி கூட மனங்கலக்கம் இன்றி இருக்கவா விடுகிறது வீதியில் இருப்போரும் வீடுகளில் இருப்போரும் வேறில்லை என்றேயது வினைகூறி நிற்கிறது வீதியெங்கும் வாகனம் விரைந்த…

  23. அழகிய பனிபடர் அல்ப் மலைத்தொடர் ஐக்கிய நாடுகள் சபை தலைமைக்காரியாலம்.. மற்றும் போர் வேண்டாம் என்பதை உணர்த்த வைப்பட்டுள்ள பீரங்கியும். பல்லாயிரம் சொந்தங்களைப் பறிகொடுத்த பின்னும்.. தமது உரிமைக்காக பாதுகாப்பான ஜெனிவாவில் கூடிக் கூட போராட மனநிலையற்ற தமிழர்கள் பலர். ஒரு சிலரின் சொந்த முயற்சியால்.. ஜெனிவா வாழ் பிற இன மக்களிடம் உள்ள ஈழத்தமிழர் துயர் பட்டறிவு அதிகம். ஐநா சபை. ஐநா வின் முன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கால் முறிந்த கதிரை. இதன் அர்த்தம்.. இன்னும் சரிவரப் புரியவில்லை.. தெரிந்தவர்கள் சொல்லலாம்..?! எனி ஐநாவில் இருந்து அறிவியல் நோக்கி.. இங்கு தான் இந்தப் பிரபஞ்சத்தை ஆக்கியுள்ள.. கடவுளின் துகள…

  24. கொறோனாவே என்னிடம் நெருங்காதே! நீ நினைக்கும் உணவு நான் இல்லை... கொறோனாவே என்னிடம் மயங்காதே! நீ தேடும் partner என்னிலில்லை.... Winterல் சில நாள் flu வரலாம்! நீ seasonஏ பார்க்காமல் வந்தாயே! (2) குடிநீரும், ரசமும் வாங்கி வைத்தேன் - அது Peace of mindக்குத் தான் என யாரறிவார்?! கொறோனாவே என்னிடம் நெருங்காதே..... Normal flu வரும் காலத்திலே, வேலைக்கு லீவு போட்டு மெடிக்கல் கொடுப்பேன்... (2) இப்ப Work-from-home செய்கின்றேன் - இனி மெடிக்கலை எந்த மனேஜர் கேட்பார்?! கொறோனாவே என்னிடம் நெருங்காதே... "தனித்திரு" என்று அந்நாளில், ஞானியர் இறைவனை அடைய வழி கூறினரே! (2) உன் பயத்தால் இன்று தனித்துள்ளேன் - எனினும் நீ பீடித்தால் நானும் இறைவனைக் காண்பேனோ?! கொறோ…

  25. கொரோனோ காலத்தின் கதையொன்று. ---------------------------------------------- போர்க்காலத்தில் பிள்ளைகளை உறவுகளைப் பிரிந்திருந்து அவலமுற்ற அம்மமாக்களும் உறவுகளும் இப்போது கொரோனோ காலத்தை கடந்து செல்ல அடையும் துயரத்தை எழுதவோ விளக்கவோ வேண்டியதில்லை. கொரோனோ காலம் எனக்குத் தந்த அனுபவம் பற்றியதே இப்பகிர்வு. மகள் இத்தாலி றோம் நகரின் பல்கலைக்கழகம் ஒன்றில் ஒருவருட கல்விக்காக கடந்த வருடம் போயிருந்தாள். இவ்வருடம் யூன்மாதம் படிப்பு முடிந்து திரும்பவிருக்கிறாள். யேர்மனியில் படித்தவரை மாதம் ஒருமுறை மவளைச் சந்திக்க ரயிலேறிவிடுவேன். அதுபோல மகனையும் சந்திக்க ரயிலேறுவது வளமை. அந்த நாட்களை எண்ணியபடியே எல்லாத் துயர்களையும் கடக்கும் தைரியம் பிள்ளைகளும் அவர்களது சந்திப்புகளும் தா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.