யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். மேலதிக விளக்கங்களை / விதிகளை இங்கே பார்வையிடலாம்.
41 topics in this forum
-
நான் அந்தத் அஞ்சலகத்தில் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே அவனை அந்தக் கடைக்கு முன்னால் பார்த்தேன். அது குளிர்காலமாதலால் லண்டன் காற்றில் இருந்து தப்ப நல்ல குளிராடைகள் அணியாமல் போக முடியாது. ஒரு பல்பொருள் அங்காடியின் உள்ளேயே நான் வேலை செய்யும் அஞ்சலகம் அமைந்திருந்தது. முன்பக்கம் முழுக்க கண்ணாடித் தடுப்புடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்கும் அதற்குள் நிற்கும்போதே குளிராக இருக்கும். ஆனால் அவனோ ஒரு கடதாசி மட்டையை விரித்து அதன்மேல் அமர்ந்திருப்பான். அவன் முன்னால் ஒரு பிளாஸ்டிக் பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டிருக்கும். ஆளைப் பார்த்தால் நன்றாகத்தான் ஆடை அணிந்திருப்பான். ஆனாலும் அதில் ஒரு அசாதாரணமும் இருக்கும். முதல் சில நாட்கள் எனக்கு அவனைப் பார்க்க எரிச்சலாக இருந்தது. அவனை நான் ப…
-
-
- 27 replies
- 15.8k views
-
-
காலம்: டிசம்பர் 2026 இடம்: வெசாயில்ஸ், பிரான்சு அன்பு நண்பன் அமுதனுக்கு, உன் பால்ய நண்பன் உடான்ஸ்சாமியார் எழுதிக்கொள்வது. மச்சான் இங்க இப்ப நிலைமை ரொம்ப மோசமடா. ரஸ்யாகாரன் போலந்துக்கால வந்து ஜேர்மனியில் பல பகுதியை பிடிச்சிட்டான். எங்கட சனம் கொஞ்சம் ஜேர்மனில இருந்து வெளிக்கிட்டு இஞ்ச ஒரு சேர்ச்சில வந்து அகதியளா இருக்குது. நல்லா வாழ்ந்த குடும்பங்கள்…ஒரு டெண்டுக்குள்ள ஒரு குடும்பமே ஒண்டி கொண்டு சாப்பாட்டுக்கு அடுத்தவன்கையை எதிர்பார்த்து நிற்குதுகள். 45 வயதுக்கு கீழ்பட்ட ஆக்கள் எல்லாம் கட்டாயா இராணுவத்திலசேந்திட்டினம். மிஞ்சி வந்திருக்கிற ஆக்கள் கண்ணில் அப்படி ஒரு மரண பயம் தெரியுது மச்சான். என்ர மகனையும் பிரான்சு கட்டாய இராணுவ பணிக்கு…
-
-
- 57 replies
- 6.4k views
-
-
நான் யாழ் தளத்தை பல ஆண்டுகளாக அறிவேன் என்றாலும் இப்பொழுது தான் உறுப்பினர் ஆக இணைந்து கொண்டேன். நான் உக்ரைனில் 2006 புரட்டாசி மாசம் மருத்துவம் படிக்க போனேன்.2014 - 2015 அளவில் இலங்கைக்கு திரும்பினேன். இலங்கையில் சில வருடம் வேலை செய்து விட்டு இப்பொழுது கனடாவில் Alberta வில் வசிக்கிறேன். Canadian emergency Ambulance service இல் வேலை செய்கிறேன். படிக்க போன இடம் luhansk ( லூகான்ஸ்க்,டன்பாஸ் இல் உள்ள Donesk (டோனேஸ்க் ) க்கு அடுத்த பெரிய province. போன புதிதில் நான்கு இலங்கை மாணவர்கள் தான்போனோம். அப்பொழுது நாங்கள் தான் ஒரே இலங்கை மாணவர்கள். கொஞ்சம் தமிழ் நாட்டு மாணவர்களும் இருந்ந்தார்கள்.லீவு கிடைக்கும் பொழுது பல வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா இலங்கை போய் விடுவார்கள். நான…
-
-
- 27 replies
- 3.7k views
- 1 follower
-
-
நற்கல்வியும் நல்லாசிரியருமே நாட்டுக்குத் தேவை! *********************************** ஆதிகால மனிதனென காட்டுக்குள் அலைந்தோம் அதன் பின் ஆரம்ப மனிதராய் நாட்டுக்குள் வந்தோம் மற்றைய உயிரினத்திலிருந்து மாறுபட வைத்த -அந்த ஆறாம் அறிவு எம் கல்விக்கென்றே கிடைத்தது. கல்வி இல்லையேல் இரு கண்களுமில்லை-நாட்டில் பள்ளிகளில்லையேல் வாழ்வில் பற்றேதுமில்லை ஆளுமை கொண்ட ஒரு சமுதாயம் நிமிர-நல்ல ஆரம்பக் கல்வியில் அத்திவாரமிடுவோம். சொல்லில் அடங்காத ஆசிரியத் தொண்டும் சுறுசுறுப்பாய் கற்கின்ற மாணவர்கள் பங்கும் எல்லைகள் கடந்தே நல்லதைச்செய்யும்-இல்லையேல் தொல்லைகள் நிறைந்த சமுதாயமாகும். வேலைக்கு மட்டும் படிக்கின்ற ப…
-
-
- 3 replies
- 1.1k views
-
-
டமார்…..காதை கிழிப்பது போல ஒரு பெரும் சப்தம். எங்கும் கந்தக நெடி… நாசி எங்கும் ரத்தமும், சதையும் கந்தகமும் நிரம்பி மூச்சு முட்டுவதை போல ஒரு உணர்வு. ஓடு…ஓடு…பங்கருக்குள் ஓடு…மனம் ஆட்காட்டி பறவையாய் ஓலமிடுகிறது. எப்படியாவது உயிர் வாழ்ந்து விட்டால் போதும் என்ற உத்தரிப்பு. பெரியார், கால்மார்க்ஸ், கடவுள் மறுப்பு எல்லாம் கண நேரத்தில் மறந்து போக, வாய் தன் பாட்டில் “நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க” என முணுமுணுக்கிறது. இங்கே அருகில் மரம் போல கிடப்பது அப்பாவா? “அப்பா எழும்புங்கோ, மிக் அடிக்குது பங்கருக்க ஓடுவம்”. இந்த மனிசன் ஏன் அசையாமல் கிடக்குது…. உடம்பு வேற சில்லிட்டு போச்சு…. ஐயோ அப்பா…எழும்பனை எண்ட ராசா…. இதோ இன்னொரு மிக்கின் மிகை ஓலி வெடிப்பு. வ…
-
-
- 4 replies
- 1.2k views
-
-
ஆயு போவான் அதி உத்தம, மேன்மைதங்கிய, சிங்கள பெளத்த தேசியத்தின் காவலனே, சிங்க லே ஒடும் சிங்கராஜாவே, சிறிலங்கா சோசலிச குடியரசின் රාජපුත්ර ஜனாதிபதி அவர்களே வணக்கமுங்கோ.... இது உங்களது இனவாத கொள்கைகளால் பாதிக்க பட்ட இன்னுமோரு தமிழ் தேசிய பும்பெயர் தமிழனால் உங்களுக்கு வழங்கப்படும் மரியாதை ..... எம் இனம் உங்களிடமும் உங்கள் தேசியத்திடம் கேட்டது ஒன்றே ஒன்று தான் சம அந்தஸ்துடன் எமது பிரதேசத்தில் தனித்துவத்துடன் வாழவிடுங்கள் என்று மட்டும் தான்... எம்மக்கள் இந்த 74 வருடத்தில் பான் தா,பால் தா,டிசல் தா,காஸ் தா, மின்சாரம் தா என போரடவில்லை. வாழ உரிமை மட்டுமே கேட்டார்கள்.அந்த உரிமைக்காக முதலில் அகிம்சை வழியாகவும் பின்பு 30 வருட ஆயுத போராட்டம் நடத்தினார்கள் இ…
-
-
- 9 replies
- 1.9k views
-
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால் சரியாகப் 12 வருடங்கள், 10 மாதங்கள், 9 நாட்களுக்கு முன்னர் ஈழத்தமிழினம் தனது சரித்திரத்தில் மிகப்பெரும் மனித அழிவைச் சந்தித்தது. தீவிர பெளத்த இனவாத அரசின் தலைமையில் மொத்த சிங்களத் தேசமும் அதன் ராணுவமும் உருவேற்றப்பட்டு 2006 ஆம் ஆண்டு, ஆடி 26 ஆம் திகதி தமிழர் மீதான இனக்கொலை யுத்தம் தொடங்கப்பட்டது. கிழக்கில் சிங்கள விவசாயிகளுக்கான நீர் வழங்கலை புலிகள் தடுக்கிறார்கள் என்கிற காரணத்தை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட தமிழினம் மீதான இனக்கொலை யுத்தம் 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 18 ஆம் திகதி கொடூரமான இரத்தக் குளியலுடன் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. இனக்கொலை யுத்தத்தினைத் தொடங்கும் நடவடிக்கைகளில் முதலாவதாக தனது திட்டம் வெளியுலகிற்குத்…
-
-
- 187 replies
- 16.2k views
-
-
என் அன்பு யாழ் இதயங்களுக்கு.. பல ஆண்டுகள் நான் நாட்டை விட்டு புலம்பெயர்து வாழ்ந்தாலும் இன்றும் என்னுக்குள் அன்றைய எனது ஊரின் நினைவுகள்தான் இனிமை தருகிறது. இதேபோல் உங்கள் ஊர்களையும் நினைத்துப் பார்க்க இந்த சிறு கவிதை உதவினால் எனக்கு மகிழ்ச்சியே. அன்றுபோல் என் தீவு வேண்டும் ************************ அம்மாவின் அன்பு வேண்டும் அப்பாவின் கருணை வேண்டும் பனை தென்னை உணவு வேண்டும் பாசத்தின் உறவு வேண்டும் பனம் பாளைக் கள்ளு வேண்டும்-ஓலை பாய்தன்னில் உறங்க வேண்டும் கூள் காச்சிக் குடிக்க வேண்டும் கொண்டாடி மகிழவேண்டும். உரல் இடித்து சம்பல் வேண்டும் ஒடியல் பிட்டு கலந்து வேண்டும் மண்சட்டி…
-
-
- 2 replies
- 1.1k views
-
-
பல தமிழ் பெற்றோருக்கு மருத்துவம் மட்டுமே படிப்பாக தெரிகிறது அதுக்கென்ன படிப்பது நல்லதுதான் என்ன தான் இருந்தாலும் சும்மாவா மருத்துவ படிப்பும் ஆழமா அறிவோட படித்தால் தானே அங்கும் நுழைய முடியும் எத்தனை தமிழன் மருத்துவர் என்று எங்களுக்கு பெருமை தானே ஆனால் மருத்துவம் மட்டும் படித்தால் போதுமா கழுவவும் துடைக்கவும் தேடவும் தெரியவும் ஆடவும் பாடவும் அறிவோடு எழுதவும் அரசியல் பொருளியல் உளவியல் உயிரியல் சட்டம் சமூகவியல் சர்வதேச அரசியல் தத்துவம் என்றும் இலக்கியம் கலை கவிஞன் என்று எழுதவும் பேசவும் உந்தன் உரிமையை வெல்லவும் புவியியல் அரசியல் பூகோளத்திற்காய் என்றும் எத்தனை பேர் தே…
-
-
- 3 replies
- 1.1k views
-
-
பேரினவாதத்தின் பிரலாபம் சித்தி கருணானந்தராஜா உலகமே எங்கள் உறுபசியைப் போக்காயோ பேரினவாதப் பெரும்பூதத்தால் வயிற்றில் பற்றியெரியும் பசித்தீயைத் தீர்ப்பதற்காய் நக்குவாரப் பெயர்பெற்று நாடெல்லாம் அலைகின்றோம் சர்வதேச நாணயஸ்தர் தருவாரா ஏதாச்சும்? பெரிய இடமென்று பிச்சைக்குப் போயுள்ளோம் கரியை வழித்துக் கையில் தருவது போல் ஆனைப் பசியில் அலறுகிற எங்களுக்கு சோளப் பொரிதூவிச் சோர்வகற்றச் சொல…
-
- 4 replies
- 1.2k views
-
-
முள்ளி வலி முள்ளி வாய்க்கால் - இனவாதம் ஆடிய வெறியாட்டம் மனிதம் மடிந்துபோனது. சிறிய வாய்க்கால் செந்நிறமானது முன்தோன்றிய மூத்த குடி -பெயரளவில்மட்டுமே. இலங்கையின் வடதிசையும் பாரதத்தின் தென்திசையும் கலங்கி நின்றது, அடிவருடிகளைத்தவிர. வலி தமிழனுக்கு மட்டுமே தரணிக்கு இல்லை. பல பத்தாண்டுகள் அழுது கிடந்தோம் முள்ளி வாய்க்கால் நாம் கடைசியாய் அழுதது அழுவதுக்கு எம்மிடம் கண்ணீரும் இல்லை வலி மட்டும் நெஞ்சில் உயிருள்ளவரையில் பிஞ்சுக்குழந்தைக்கும் நெஞ்சினில் குண்டு கூடி இருந்தவரே குழி பறித்தனர்- கொலைக்கும்பலுக்கு ஆணை கொடுத்தனர். மீண்டும் ஒரு உணர்வு உருவாக்கா வண்ணம் தாயக கவிஞனையும் காணாமல் செய்தனர் ஆடு நனைந…
-
-
- 7 replies
- 1.6k views
-
-
பரNaகோர்ட்..... பரNaகோர்ட் "பழைய போத்தல்,பேப்பர், பித்தளை,அலுமினியம் சருகை சேலை இருக்கா" "அண்ணே நில்லுங்கோ பழைய புத்தகம் கொஞ்சம் இருக்கு எடுத்திட்டு காசு தாங்கோ" " ஒரு கிலோ இருக்கு இந்தா இரண்டு ரூபா" காசை வாங்கி பொக்கற்றுக்குள்ளே போடுற நேரம் குகனின் அம்மா "தம்பி யாரோட கதையுச்சுகொண்டிருக்கிறாய் படலையில் நின்று" "அம்மா அது பழைய அலுமினிய சமான்கள் வாங்கிற பரனகோர்ட்அண்ண" "நிற்க சொல்லு இரண்டு அலுமினிய சட்டி கிடக்குது கொடுத்திட்டு ஏதாவது வாங்குவோம்" இரண்டு பழைய அலுமினிய சட்டியை கொண்டு வந்து கொடுத்தா ,அவரும் சட்டியை காலால் மிதித்து நெளித்து நிறுத்து பார்ட்த்து விட்டு சைக்கிளில் கட்டி வைத்திருந்த ஒரு பிளாஸ்டிக் பக்கற்றையும் சின்ன அல…
-
-
- 12 replies
- 1.7k views
- 1 follower
-
-
ஆண்டு 1955. Zavalichi எனும் உக்ரைனில் இருக்கும் ஒரு சிறு கிராமம். இரவு 11 மணி. வெளியில் இலேசாக பனி பெய்து கொண்டு இருந்தது. குளிர்காலத்தின் ஆரம்பகாலம் இது. நீண்ட தூரத்தில் இருக்கும் மாதா கோயிலின் மணி அடித்து 11 என்பதை காட்டியது. இரவை இருள் மூடி இருந்தது. கிராமத்தில் உள்ள எல்லாரும் எப்பவோ உறங்க போயிருந்தனர். புலோவிச் தன் நரைச்ச தாடியினை மெதுவாக தடவி விட்டுக் கொண்டு தன் கபினில் மாட்டியிருந்த அட்டவணையை மீண்டும் ஒருமுறை பார்த்து இனி அடுத்த 6 மணித்தியாலங்களுக்கு எந்த ரயிலும் வரப்போவதில்லை என்பதை நிச்சயத்துக் கொண்டார். வீட்டுக்கு சென்று மனைவி சினிக்கா சமைத்து வைத்து இருக்கும் சூப்பை குடித்து விட்டு 5 மணித்தியாலங்கள் உறங்கலாம் என நினைத்து மதியம் பாதி குடித்து மிச்சம் வைத்த…
-
-
- 6 replies
- 1.3k views
-
-
"கொழும்பிற்கு வந்து இரண்டு மாதங்களாகிவிட்டது , மாதம் பதினைந்தாயிரம் ரூபாய்க்குள் வண்டியை ஓட்டவேண்டும். வேலைக்கு சேர்ந்த பின்னும் செலவிற்காக வீட்டில் தொங்கிக்கொண்டிருக்க முடியாது. மாமியின் வீடாக இருந்தாலும் வேண்டா விருந்தாளியாக மாறிவிடும் முன் நானாகவே வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிடுவது நல்லது....ம் பார்க்கலாம் மார்க்கஸ் என்ன சொல்கிறான் என்று" என்றவாறு மனதிற்குள் தன்னுடனேயே பேசிக்கொண்டு பாதையின் இருபுறமும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான் அவன். மணிக்கட்டிலிருந்த கடிகாரமோ விநாடியை நிமிடங்களாக மாற்றிக்கொண்டிருக்க, இந்த மார்க்கஸை மட்டும் காணவில்லை. தொலைபேசியை சட்டைப்பையில் இருந்து உருவி உயிர்கொடுத்து மார்க்கஸ் எனும் பெயரை தேடி அழைப்பை ஏற்படுத்திய மறுகணமே அங்கு ......தொடரும…
-
-
- 25 replies
- 3.2k views
-
-
நீண்ட நாட்களாக சன்பிரான்ஸ்சிஸ்கோவில் இருந்து லாஸ் அங்கிலஸ் கடற்கரை ஓரமாக உள்ள ஒற்றையடிப் பாதையில் (அனேகமான இடங்கள்)போக வேண்டுமென்று ஒரு கனவு இருந்தது. ஒரேஒரு முறை ஒரு 50 மைல் தூரம்வரை குடும்பமாக ஒரு நிகழ்வுக்கு போயிருந்தோம்.அப்போதே இந்த பாதையின் மகத்துவம் பற்றி சொன்னார்கள்.அப்போதே எல்லாவற்றையும் கேட்ககேட்க கடற்கரையையும் பார்க்க ஒருமுறை இந்த பாதையில் போனால் என்ன என்று யோசித்தேன். அதன் பின் 2012-14 (சரியாக ஆண்டு நினைவில் இல்லை)ஆண்டளவில் அவுசிலிருந்து அண்ணனின் மகன் நண்பியுடன் வந்திருந்தான்.அவனும் இந்த பாதையை கேள்விப்பட்டோ ஏதோ இதே பாதையில் கொன்வேட்டர் கார் வாடகைக்கு எடுத்து அதுவும் கோடை காலத்தில் மேலே துறந்துவிட்டுட்டு அவ்வளவு தூரமு…
-
-
- 59 replies
- 6.7k views
- 2 followers
-
-
தலை நகரின் பிரதான மையத்தில் அமைந்து இருந்தது அந்த அந்தோனியார் கோவில். செவ்வாய்க் கிழமைகளில் மத வேற்றுமை பாராது மக்கள் தம் வேண்டுதலுக்காக அங்கு கூடுவர். சில இளையோர் தம் சோடிகளுடனும் , வேலை தேடும் இளையவர் தமக்கு வேலை கிடைத்துவிட வேண்டும் எனும் வேண்டுதலுடனும் , இளம் பெண்கள் தங்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை அமைந்துவிட வேணுமென்றும் வேளையில் இளையோர் வெளிநாட்டுப்பயணம் அமைந்து விட வேணுமெனவும் இன்னும் பல தேவைகளுக்கு நேர்த்தி வைத்து அங்கு கும்பிட வருவார்கள். அந்த வாயிலில் மெழுகு திரிக்க கடை கச்சான் கடலைக் கடை குளிர் பானக கடை என்பன கடைவிரித்து காத்திருப்பார்கள். அவர்களுக்கு அண்மையில் வறுமைப்பட்டோர் சில ர் யாசகம் செய்யவும் கூடி இருப்பார்கள். அங்கு அவர்களுக்கிடையில் வயது…
-
-
- 6 replies
- 1.9k views
- 1 follower
-
-
இவ்வருட 'துபை எக்ஸ்போ 2020-இளையராஜா கலந்துகொண்டு இசைக் கச்சேரி செய்யவிருக்கிறார்' என சென்ற வாரம் அறிந்தவுடன் எனக்கு இருப்பு கொள்ளவில்லை.😉 சுமார் 12 வருடங்களுக்கு முன் ஏ.ஆர்.ரகுமான் இசைக் கச்சேரியை துபையில் பார்த்த இனிய அனுபவத்தால், இம்முறை இசைஞானி கச்சேரி என்பதால் '80களில் வந்த இனிய பாடல்களை நேரில் கேட்கலாம்' என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.😎 சென்ற வாரமே 'எக்ஸ்போ-2020' தளத்திற்கு சென்று கச்சேரி நடக்கப்போகும் இடத்தை பார்வையிட்டு வந்துவிட்டேன். மிக அருமையான எற்பாடுகள்..! ஜூப்ளி பார்க் இன்று அலுவலக திட்டப்பணிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு பிற்பகல் 2 மணிக்கே சென்றுவிட்டேன்.. பல நாடுகளின் காட்சிதளங்களை(Pavilions) பார்வையிட்டு…
-
-
- 32 replies
- 3k views
-
-
இது மூட்டைப் பூச்சிகள் பற்றியது இல்லை. ஆகவே இறுதிவரை வாசியுங்கள். 2019 ஒக்டோபர் மாதம் நானும் மகளும் கம்போடியா போயிருந்தோம். அங்கே விலை மலிவு என்பதால் பத்து நாட்களும் ஐந்து நட்சத்திர தங்குவிடுதியை முற்பதிவு செய்திருந்தாள் மகள். இரண்டு கட்டில்கள் கொண்ட பெரிய அறை அனைத்து வசதிகளுடனும் இருந்தது. முதல் நாள் மாலை வரை சுற்றிப் பார்த்துவிட்டுக் களைப்புடன் வந்து கட்டிலில் படுத்தால் ஒரு அரை மணிநேரம்தான் நின்மதியாகப் படுக்க முடிந்தது. முதுகு கால் கை எங்கும் ஒரே கடி. எனக்குத்தான் நினைப்போ என்று திரும்பிப் படுத்தால் கன்னத்திலும் கடிக்க மின்விளக்கைப் போட்டுவிட்டு எழும்ப, “என்ன அம்மா நித்திரை வரேல்லையா” என்று மகளும் தூக்கம் கலைந்து கேட்கிறாள். “சரியான மூட்டைக் …
-
-
- 44 replies
- 6.2k views
- 1 follower
-
-
உ பார்வை ஒன்றே போதுமே கண்கள் பேசும் காதல் மொழிக்கு வார்த்தைகள் வெறும் சுமையே. இருநாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் அந்த மண்சாலை குண்டும் குழியும் சேறும் சகதியுமாக இருந்தது.இரு மருங்கிலும் வயல்கள். கதிர்கள் அலைபோல் அசைய பச்சைபசேல் என்று குளிர்ச்சியாக இருந்தது. கதிர்களைத் தழுவிவரும் காற்றில் மண்மணம் கமழ்ந்து உடலுக்கு புத்துணர்சியைத் தருகின்றது. அந்தப் பாதையில் ஒரு மனிதர் தனது வீட்டை விட்டு வெளியேறி பல நாட்களாக…
-
-
- 61 replies
- 6.6k views
- 2 followers
-
-
கவிதையைப் பிரித்த ஐபிஎல் தூய வெள்ளை அரம்பையர் நின்றுமே துணங்கைக் கூத்திட வீரர் குழாத்தினர் ஆய தம்திறன் காட்ட, எறிந்த பந்(து) அண்டை வந்திட வீசி அடித்ததை பாயச் செய்து பவுண்டரி சிக்ஸராய் பலத்தைக் காட்டும் ஐபிஎல் களமதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அணிதிரண்டு குதிக்குமழகிலே நேயமுற்றனன் ஆதலினால் என்றன் நெஞ்சை நீங்கினளாம் கவிக்காதலி காலை மாலையிரவெனத் தேர்ந்திடாக் காதல் மேவ ஐபிஎல் லைப் பார்த்ததால் வேலையாவும் ஓர் மூலையிற் போனத…
-
- 3 replies
- 1.8k views
-
-
இலங்கைச்..சாப்பாடுதான் வேணுமாம்.. பல்லாயிரம் மைல் கடந்து பரதேசத்தில் கனடாவில் வாழும்நான் படும் கஸ்டம் என்னென்று தெரியுமோ..மூ பத்து ஆண்டு கடந்தும்…முசுப் பாத்திக்கு தன்னும் நோ கனடியன் பூட்.. பக்கத்திலை பத்துத் தமிழ்க் கடை… பலகாரம் முதல் பத்தியச் சாப்பாடுவரை பகலிராவாக் கிடைக்கும்… பகிடி என்ன தெரியுமோ.. வடை மூன்று ஒரு டொலர் அப்ப.. வடை இரண்டு ஒன்றரை டொலர் இப்ப…. இலங்கையில் விலைவாசி ஏற்றமாம்.. இடியப்பம் இருபத்தைந்து மூன்று டொலர் அப்ப இப்ப இந்தப்பெட்டி…ஆறு டொலர்.. இதுக்கும் அதையே சொல்லுகினம்… கொத்து ரொட்டியிலும் கொல்லுகினம் விலையை.. கொடுவாமீன் சாப்…
-
-
- 9 replies
- 1.7k views
-
-
கொரோனா வந்து உயிரை வாங்குது.. ஒருக்கால் ஊர் போய் உறவுகளைப் பார்த்திட்டு வருவம்.. என்று வெளிக்கிட்டால்.. ரிக்கெட் போட.. ஒரு மாதம்.. ஒவ்வொரு நாளும்.. kayak க்கோடு கட்டிக்கிடந்தாலும்.. விலை ஏறுவதும் இறங்குவதும்.. கோவிட் கேஸுக்கு ஏற்றமாதிரி இருக்க.. வந்த கடுப்பில்.. இண்டைக்கு புக் பண்ணியே தீருவது என்று முடிவுகட்டி.. 575 பவுனுக்கு ரிக்கெட் போட்டாலும்.. காசு கட்டும் போது விசா கிரடிட் காட்டால பணம் செலுத்தினால் பாதுகாப்புன்னு சொல்லக் கேட்டு அதை பயன்படுத்தினால்.. அவனோ.. விசா டெபிட் காட்டுக்குரிய 25 பவுன் கழிவை கட் பண்ணிட்டு..25 பவுனைக் கூட்டி எடுத்திட்டான். முதற்கோணல் முற்றிலும் கோணல்.. என்ற எங்கட ஆக்களின் பழமொழி ஞாபகத்திற்கு வந்து தொலைச்சாலும்.. அதெல்லாம்.. தாழ்புச் சிக்கலின…
-
-
- 33 replies
- 3.8k views
-
-
உனக்குமட்டுமா?உலகம். ********************** எமக்கு கிடைத்தது ஒரு பூமி-இங்கு பிறப்போர் அனைவற்க்கும் சமநீதி பிறப்பும்,இறப்பும் எம்மிடமில்லை-நீ பெரியவன் என்பது யாருக்குத் தெரியும். உலகில் பிறந்தது எத்தனைகோடி-எனி உலகுக்கு வருவது எத்தனை கோடி உலகு எனக்கு கீழென நினைத்தவன் ஒருவன் கூட உயிரோடு இல்லை தெரிந்தும்,தெரிந்தும் செய்யும் பிழைகளை தேசம் ஒருபோதும் வாழ்த்துவதில்லை. வாழும் போது பணக்காரன்,ஏழை வாழ்வு முடிவில் பெட்டிக்குள் சமமே காலையும் மாலையும் சூரிய,சந்திரன் காணாமல் போனால் உன்னிலை என்ன வாழும் வயசோ நூறாண்டு காலம் வையகம் உனதென போர்கள் செய்கிறாய். காலைச் சூரியன் உதி…
-
-
- 3 replies
- 1.4k views
-
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம். நேற்று... நள்ளிரவு, ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா... அதன் நட்பு நாடான... இலங்கையை, பாதுகாக்கும் நோக்கில்.... டெல்லி.. இந்திய விமானப் படைத் தளத்தில் இருந்து 180 இந்திய இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும்... பஞ்சாப் ரெஜிமெண்டில் இருந்து.. 215 இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும், தமிழ்நாடு, தாம்பரம் இந்திய இராணுவத் தளத்திலிருந்து.... மட்றாஸ் ரெஜிமென்ட் படையை சேர்ந்த.... 200 இராணுவ வீரர்களும், முதல் கட்டமாக... கொழும்பு கட்டுநாயக்கா... விமான நிலையம் வந்து இறங்கி உள்ளார்கள். இன்று இரவும்... மீண்டும் வன்முறை பெரிய அளவில், தலை தூக்கும் என கருத…
-
-
- 135 replies
- 11.8k views
- 2 followers
-
-
எங்கே போகிறது எம்திருநாடு! ************************* அழகிய இலங்கை ஆக்கிரமிப்புகள் இருந்தாலும்-மக்கள் ஒருகாலமும் உணவுக்கு கையேந்தியதாய் வரலாறு இருந்ததில்லை. இடையில்.. உண்னமுடியாத வாழைக்கிழங்கையும் உணவாய்யுண்டு தேங்காயோடு தேனீர் குடித்தோம். பாணுகாக கியூவில் பட்டினி கிடந்தோம்-என சிறிமாவின் காலமும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகிப் போச்சு. ஆனால் இன்றோ அதைவிடவும் கொடுமை பார்க்குமிடமெல்லாம் கியூ பாணுக்கும், பல்பொருளுக்கும் பால்குடிகளின் பால்மாவுக்கும் சமையல்எரி வாயுவுக்கும் சாம்பாறு மரக்கறிகட்கும் மண்ணெண்ணை பெற்றோள் மாவு அரிசி யாவுக்…
-
- 6 replies
- 1.9k views
-