நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
இரத்த குழாய் அடைப்பு நீங்க...! வீட்டுவைத்திய முறை. [Monday 2014-08-25 22:00] பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்..!! தனது இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டரை சந்தித்தார். தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். அதே நேரம் ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் மறுமுனையில் நோயளிக்கு பரிந்துரைத்தார் அதனை செய்தவாறு நோயாளி இருந்தார். எனினும் மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறு…
-
- 6 replies
- 5.2k views
-
-
வாழைப்பூவைப் பற்றி அறியாத தமிழர்கள் இருக்க முடியாது. வாழையை இந்தியாவிலும் இலங்கையிலும் வீட்டுத் தோட்டமாகவும், பெரிய தோட்டங்களாகவும் வளர்க்கின்றனர். வாழைத் தடல், வாழைத்தார், வாழை இலை, வாழைக்காய், வாழைப் பழம் என எல்லாமே அன்றாட சாப்பாட்டுப் பொருளாகவும், பூசைப்பொருளாகவும் பாவனையில் உள்ளன. வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன. இது செடி இனத்தைச் சேர்ந்தது. மரம்போல் நெடித்து வளர்வதால் வாழைமரம் என அழைக்கின்றனர். வாழைப்பூவில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் சித்தர்கள் குணப்படுத்தியுள்ளனர். வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொண்டால் வையித்தியரிடம் செல்லாமலே சில நோய்களில் இருந்த…
-
- 4 replies
- 5.2k views
-
-
ஆண்களுக்கான ரொமான்ஸ் ஃபுட்ஸ் பற்றி தெரியுமா? பெண்களுக்கு பல்வேறு பொறுப்புகளும் பிரச்னைகளும் உள்ளன. குடும்ப பராமரிப்பு, மகப்பேறு, குழந்தைகளை வளர்த்தல் முதலியன. ஆனால் ஆண்களுக்கு வருபானம் ஈட்டுவது போக உள்ள பெரும் பொறுப்பு பாலியல் உறவில் மனைவியை மகிழ்விப்பதுதான் என்கிறது சமீபத்திய ஓர் ஆய்வு முடிவு! அந்த உறவின் போது சிறிய குறைபாடு இருந்தால் கூட ஆண்கள் மனமுடைந்து போகின்றனர். எனவே தான் ஆதி காலத்திலிருந்து பாலுணர்வை தூண்டி உடலுறவை மேம்படுத்தும் உணவு, மருந்துகளை ஆண்கள் அதிகமாக நாடுகின்றனர். தங்கபஸ்பம், சிட்டுக்குருவி லேகியம் போன்றவை ஆணுக்கான “ரகசிய” மருந்துகளாக இருந்தன. கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி ஜனங்கள் பால…
-
- 0 replies
- 5.2k views
-
-
சப்பாத்திக் கள்ளியின் உயர்ந்த மருத்துவ குணம். சப்பாத்திக் கள்ளி வறண்ட நிலங்களிலும் சாலையோரங்களிலும் காணப்படும் முள்செடியான இதற்கு பாதாளமூலி, நாகதாளி என்ற வேறு பெயர்களும் உண்டு. சப்பாத்தியைப் போன்று வட்ட வடிவத்தில் பச்சைப் பசேல் என செழித்து வளரும். இந்த மூலிகைச் செடியில் ஆங்காங்கே முட்கள் காணப்படுவதால் ஆடு, மாடுகள் நெருங்காது. ஆகவே பெரும்பாலும் கிராமப்புறத்து வயல் வெளிகளிலும், நகர்ப்புறத்து தோட்டங்களிலும் வேலிகளில் வளர்ப்பார்கள். மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் பூக்கள் பூக்கும்; ரோஸ் மற்றும் அடர் சிவப்பு நிறத்தில் பழங்கள் பழுக்கும். சப்பாத்திக் கள்ளியில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற சத்துகளும் உயர்தரமான நார்ச்சத்தும் நிறைந்துள்ளத…
-
- 2 replies
- 5.1k views
-
-
உடற்பயிற்சி செய்தாலும் தொப்பை குறையாதாமே?! உடற்பயிற்சி செய்தால் தசைகள் வலுப்பெறும்.ஆனால் தொப்பை குறையுமா? இதைப்பற்றி ஒருவர் புத்தகம் எழுதியதாக படித்தேன்.ஆனால் அப்போது எனக்கு சரியாக புரியவில்லை.ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்து சொல்லிக் கொண்டிருப்பார்கள்.நாணயத்தின் இருபக்கம் போலத்தான்! இரண்டு வித கருத்துக்களும் இருக்கும்.பலரும் உடற்பயிற்சி தொப்பையை குறைக்கும் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு பெரும் வயிற்றை பார்த்தேன்.வியாதியெல்லாம் இல்லை.சந்தேகமில்லாமல் பெரும் தொப்பைதான்.உடல் உழைப்பு உள்ள பலருக்கும் தொப்பை இருக்கத்தான் செய்கிறது.ஆனால் அந்த தொப்பை கொஞ்சம் உறுதியானது.அலுத்துக் கொள்ளும் பலரை நான் பார்த்திரு…
-
- 23 replies
- 5.1k views
-
-
வணக்கம், ஒரு சிறிய ஆராய்ச்சி.. உங்களுக்கு வாயில் சூட்டுப்பரு வருவதற்கான காரணங்கள் என்ன என்று தெரியுமா? வாய் என்றால் நாக்கு, உள்சொண்டுகள், முரசு.. இப்படி வாயினுள் காணப்படும் பகுதிகளில் காயம் மாதிரி வந்து துன்பம் ஏற்படுதல். பலர் குளிக்காவிட்டால் சூட்டுப்பரு வரும் என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள், குளிக்காவிட்டால் சூட்டுப்பரு போடும் என்று சொல்வார்கள். ஆனால், இதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால், நான் ஆகக்குறைந்தது ஒன்றுவிட்ட ஒரு நாளாவது குளிப்பேன். ஆனால், எனக்கு இருந்திட்டு சூட்டுப்பரு வரும். பல வருடங்களாக நான் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் சூட்டுப்பரு வருவதற்கான அடிப்படைக் காரணங்களாக கீழ்வருபவை உள்ளன. ஆளுக்கு ஆள், இதற்கான காரணிகள் வேறுபடலாம்.…
-
- 2 replies
- 5.1k views
-
-
வயதைச் சொல்லும் கழுத்து வியாழன், 9 ஆகஸ்ட் 2007 ஒரு பெண்ணின் கழுத்தைப் பார்த்து அவரின் வயதைச் சொல்லி விடலாம். அதற்கு காரணம் கழுத்திலே ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுகள். வழவழப்பான கழுத்தைப் பெறுவது அரிது. ஆனால் கீழ்வரும் பயிற்சிகளைச் செய்வதன் மூலம் கழுத்தை சுருக்கமில்லாமல் நன்றாக வைத்துக் கொள்ள முடியும். தினசரி கழுத்துப் பயிற்சி தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்க்கவும். தலையை நன்றாக பின்நோக்கி வைத்துக் கொண்டு, வாயை நன்றாகத் திறந்து அசைத்து மூடவும். தலையை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு திருப்பவும். பிறகு தலையை வலது தோள்பட்டை வரை கொண்டு சென்று மறுபடி இடது தோள்பட்டைக்கு கொண்டு செல்லவும். இது போல் 10 முதல் 20 தடவை …
-
- 15 replies
- 5.1k views
-
-
வாழ்வில் அனைத்து வளங்களைப் பெற்றிருந்தும், இல்லற சுகம் என்ற உன்னதத்தை முழுவதும் அனுபவிக்க முடியாத ஆண்கள் ஏராள மானோர் உள்ளனர், இயற்கையின் வரப்பிரசாத மான சாதாரணமாகக் கிடைக்கக் கூடய சமையல் அறை உணவுகள், வாசனைப் பொருட்களை சாப் பிட்டாலே நல்ல பலனைக் காணமுடியும் என்பது பலருக்கு தெரிவதில்லை. உணவே மருந்து பொதுவாக, செக்ஸ் உந்துதலானது, சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முதியவனையும் நிமிர்ந்து உட்காரச் செய்யக்கூடிய ஈர்ப்பு சக்தி உடையது. உடல் உறவுக்கும், உணவுக்கும் தொடர்பு உண்டு. நாம் தினசரி சாப்பிடும் சாதா ரண சமையலுக்குப் பயன்படும் பொருட்கள் வயோதிகர்களையும் முறுக்கேறிய வாலிபர்களாக மாற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. கறிவேப்பிலையின் மகத்துவத்தை உணராமல் எப்படி தூக்கி ஏறிகிறோமோ, அதைப் …
-
- 8 replies
- 5.1k views
-
-
பாற்பற்கள் முளைத்தல் - வேதனையும் கொண்டாட்டமும் 'பிள்ளைக்கு காய்ச்சல் அடிக்குது. பல்லு முளைக்கிறதுக்கோ தெரியவில்லை' என்றாள் அந்த இளம் தாய். அந்தப் பருவத்தில் வயிற்றோட்டத்துடன் குழந்தையைக் கொண்டு வரும்போது கூட அது பல்லு முளைப்பதற்காக என்றே பல தாய்மார்கள் நினைக்கிறார்கள். உண்மையில் குழந்தைகளில் முதற் பல்லுகள் முளைப்பதற்கும் காய்ச்சலுக்கும் வயிற்றோட்டத்திற்கும் எது வித தொடர்பும் கிடையாது. அதேபோல வாந்தி, மூக்கால் வடிதல். இருமல் போன்றவற்றிற்கும் பல் முளைத்தலுக்கும் தொடர்பில்லை. பல் முளைப்பது ஒரு இயற்கையான நிகழ்வு. அது நோயல்ல. என்றபோதும் அது பற்றி பல்வேறு விதமான தவறான கருத்துக்கள் நம்பிக்கைகள் எமது சமூகத்தில் இருக்கிறன. மறுபக்கத…
-
- 0 replies
- 5.1k views
-
-
உங்களுக்கு களைப்பாயிருக்கா? உங்களுக்கு மட்டுல்ல..... மருத்துவரிடம் வருபவர்களில் பலர் களைப்பாயிருக்கு என்று சொல்லுவார்கள்.டொனிக் குடித்தால், அல்லது ஒரு சேலைன் ஏற்றினால் அது குணமாகிவிடும் எனப் பலரும் நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையா? காய்ச்சல் வயிற்றோட்டம், வாந்தி போன்ற நோய்களால் போஷாக்கு இழந்தவர்கள் களைப்பாக இருந்தால் அது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி மிகவும் ஆரோக்கியமான உடல் நிலையில் இருப்பவர்கள் அல்லது அவ்வாறு பார்வைக்குத் தென்படுபவர்கள் கூட களைப்பு எனச் சொல்லிக் கொண்டு வருவார்கள். 'சத்தெல்லாம் பிழிஞ்சு எடுத்த மாதிரிக் கிடக்கு', 'உடம்புக்கு ஏலாதாம்', 'ஒண்டுமே செய்ய முடியுதில்லை' இப்படி …
-
- 2 replies
- 5k views
-
-
ஆல்கஹால் குடிப்பது எப்போதுமே தீங்கு என்று நினைப்பது தவறானது. ஏனெனில் அவற்றிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்காக நிறைய குடிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான். அதிலும் இதுவரை ஆல்கஹாலிலேயே ஒயின் மற்றும் பிராந்தி போன்றவற்றை சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் என்பது தெரியும். ஆனால் விஸ்கியை குடித்தாலும், அதுவும் அளவாக குடித்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இப்போது விஸ்கியை குடித்தால் என்ன நன்மை இருக்கிறது என்று பார்போமா!!! நல்ல தூக்கம்: உடல் அதிக களைப்புடன் இருக்கும் போது 1-2 சின்ன பெக் விஸ்கியில் ஐஸ் போட்டு குடிக்கலாம். அதுவும் அவ்வாறு குடிக்கும் போது, அவசரமாக குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இத…
-
- 5 replies
- 5k views
-
-
சமையலுக்கும், நறுமணத்துக்கும் முக்கியமாக பயன்படுத்தப்படும் பூண்டு பல்வேறு நோய்களை விரட்டும் மருந்தாக செயல்படுகிறது. பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. குறிப்பாக பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக(antibiotic) செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. மேலும், இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. பச்சை பூண்டை சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சி…
-
- 4 replies
- 5k views
-
-
தக்காளி சமையலிற் காயாகவும் பழமாகவும் பயன்படும் ஒரு காய்கறிச் செடியினமாகும். இது கத்தரிக்காய், கொடை மிளகாய் போன்றே சோலானேசியெ (Solanaceae ) அல்லது நிழல்சேர் (nightshade) செடிக் குடும்பத்தைச் சேர்ந்த செடியினமாகும். இதனை அறிவியலில் சோலானம் லைக்கோபெர்சிக்கம் (Solanum lycopersicum) அல்லது இணையாக லைக்கோபெர்சிக்கன் லைக்கோபெர்சிக்கம் (Lycopersicon lycopersicum) என்று அழைக்கிறார்கள். இதன் தாயகம் (தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் தென் பகுதியாகும். குறிப்பாக பெரு, மெக்சிக்கோவில் இருந்து அர்ஜெண்டைனா வரையான பகுதியாகும். ஓராண்டுத் தாவரமான இது 1-3 மீ உயரமாக வளர்கிறது. ஆங்கிலத்தில் இதற்கு வழங்கும் பெயரான டொமேட்டோ (அல்லது டொமாட்டோ) என்பது நஃகுவாட்டில் (Nahuatl) …
-
- 1 reply
- 5k views
-
-
கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்! தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன? புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன? தேங்காய்ப் பால் உடல் வன்மைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மரு…
-
- 24 replies
- 5k views
-
-
பேலியோ டயட்! ஏன்? எதற்கு? யாருக்கு? ‘நம் உணவும் மனமும்தான் நம் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன. மனிதன் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த காலத்தில், வேட்டையாடிய மிருகத்தின் இறைச்சி மற்றும் மீன் உள்ளிட்டவற்றைத்தான் சாப்பிட்டான். சிறிது காய்கறி, பழங்கள் சேர்த்துக் கொண்டாலும், விவசாய சமூகமாக மாறியபிறகே நெல், கோதுமை உள்ளிட்டவற்றுக்குப் பழகினான். 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலத்தை கற்காலம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். அதற்கு முன்பு வரை பல லட்சம் ஆண்டுகள் வேட்டைச் சமூகமாக, கற்கால மனிதனாகத்தான் வாழ்ந்துவந்தான். அந்த மரபணுக்கள்தான் இன்றும் நம் உடலில் தொடர்கின்றன.கற்கால மனிதனின் உணவுப் பழக்கம் அவனை ஆரோக்கியமாகவும் ஆற்றல் மிக்கவனாகவும் வைத்திருந்த…
-
- 3 replies
- 5k views
- 1 follower
-
-
புருவங்கள் முகத்தின் சிறந்த அம்சங்களில் ஒன்று. புருவங்கள் அழகாக இருந்தால் கண்களில் அழகு கூடும். முகமே புது பொலிவு பெறும். ஆனால் புருவங்களை சரியாக வடிவமைப்பதே பலருக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. புருவங்களை முகத்துக்கு ஏற்ற விதத்தில் வடிவமைக்க சில குறிப்புகள்: தேவையான பொருட்கள்:- * டுவீஜர் (புருவத்தில் உள்ள தேவை இல்லாத முடிகளை அகற்ற) * புருவத்திற்கான பிரஷ் (பல் தேய்க்கும் பிரஷ் கூட உபயோகிக்கலாம்) * ஆஸ்ட்ரின்ஜென்ட் (சருமத்தை மிருதுவாக்கி, வலியை குறைக்க) * கண்ணாடி (அவசியம் தேவை) * சிறிய கத்தரிக்கோல் (புருவத்தின் முடியை சரி செய்ய) * ஐப்ரோ பென்சில் முதலில் புருவத்தை மேல் நோக்கி பிரஷ் செய்து விடவும். புருவத்தின் வளைவை விட நீட்டமாக உள்ள முடிகளை கத்தர…
-
- 22 replies
- 5k views
-
-
கண்கள் எதுக்கு அடிக்கடி துடிக்குதுன்னு தெரியுமா ? சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். அவ்வாறு துடிக்கும் போது, ஒருசில மூடநம்பிக்கைகளானது மக்கள் மத்தியில் உள்ளது. அது என்னவென்றால், ஆண்களுக்கு வலது கண் துடித்தால், நல்லது நடக்கும், அதுவே பெண்களுக்கென்றால் தீமை ஏற்படும் என்றும், ஆண்களுக்கு இடது கண் துடித்தால் கெட்டது நடக்கப் போகிறது, அதுவே பெண்களுக்கானால் நல்லது நடக்கும் என்று நம்புகின்றனர். உண்மையில் இது மிகப்பெரிய முட்டாள்தனமான ஒரு மூடநம்பிக்கை என்று தான் சொல்ல வேண்டும். ஆம், நல்லது கெட்டது நடப்பதற்கும், கண்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சிந்திக்காமல், குருட்டுத்தனமாக பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த மாதிரி கண்கள்…
-
- 3 replies
- 4.9k views
-
-
(Aloe vera) கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எ...த்தனை மருத்துவக் குணங்கள். கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ…
-
- 12 replies
- 4.9k views
-
-
இந்தப் பதிவிற்கு இந்தப் பகுதி பொருத்தமானதென்று நினைக்கிறன்... (நீங்கள் புள்ளிகளை பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் பறவாய்யில்லை, கீழே உள்ள விடைகளை முதலில் பார்க்காமல் நேர்மையாக பதிலளியுங்கள்) நீங்கள் சோம்பேறியா? உற்சாகமானவரா? - பலப்பரீட்சை உற்சாகம் இருந்தால்தான் வாழ்வில் உன்னதங்களை நிகழ்த்த முடியும். வெற்றிபெற முடியும். நீங்கள் உற்சாகமானவர்தான் என்பதை உங்களுக்கு நீங்களே ஒரு பரீட்சை வைத்துக் கண்டுபிடித்துக் கொள்ளலாம். அதற்காக இங்கே சில வினாக்கள்... 1. காலையில் எழுந்ததும் எப்படி உணர்கிறீர்கள்? அ. உற்சாகமாக ஆ. சோம்பலாக இ. வெறுமையாக 2. லட்சியத்தை அடைய முடியவில்லை என்றால்.... அ. கடும் வருத்தம் மற்றும் ஏமாற்றத்துடன் காணப்படுவேன். …
-
- 18 replies
- 4.9k views
-
-
"மாரடைப்பு" வருவதற்கான, இயல்பில்லாத சில அறிகுறிகள்!!! பல பேருக்கு மாரடைப்பு/நெஞ்சு வலி ஏற்படுவதற்கு முன்பு நெஞ்சின் நடுப்பகுதியில் அல்லது மார்பெலும்பின் பின்புறத்தில் மிகுந்த வலியை உண்டாக்கும். பொதுவாகவே நெஞ்சு வலிக்கான அறிகுறிகளை விநோதமாக அனுப்பும் நம் உடல். அதனால் அது நெஞ்சு வலி தானா என்று சம்பந்தப்பட்டவரால் கண்டுப்பிடிப்பது கடினமானதாகிவிடும். டோபிவாலா நேஷனல் மருத்துவ கல்லூரி மற்றும் BYL நாயர் சாரிட்டபில் மருத்துவமனையின் கார்டியாலஜி துறை தலைவர் டாக்டர் அஜய் சௌரசியா கூறுகையில், "பொதுவாக நெஞ்சுவலி தொடர்பான வழியை ரெஸ்டோஸ்டேர்னல் என்று அழைப்போம். அதாவது மார்பெலும்புக்கு பின்னால் ஏற்படும் வலி. மேலும் அசிடிட்டியால் இதய எரிச்சலும் ஏற்படும்." நெஞ்சு வலிக்கான இயல்பில்ல…
-
- 1 reply
- 4.9k views
-
-
கோடைகாலம் என்றாலே உணவு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்லித் தர வேண்டியதில்லை. அந்த எச்சரிக்கை உணர்விற்கு சில யோசனைகள் இங்கே: இளநீர் 1. இளநீரில் இருப்பவை : சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புகள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. 2. மருத்துவக் குணம் எப்படி? தினமும் இளநீர் நம்மை இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக, கோடைகாலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்னபிற பொதுவான சத்துக்களும் உடலில் இருந்து வியர்வை மூலமாக வெளியேறி விடுவதால், உடல் வெளிறிவிடும். மயக்கம், நாடித்துடிப்பு தளர்ந்து, தசைகள் இறுகுவது நடக்கும். இதற்கெல்லாம் முக்கியமான காரணம், உடலில் உள்ள உப்பு சுத்தமாக வெளியேறுவதுதான். இளநீரி…
-
- 3 replies
- 4.9k views
-
-
தற்புனைவு ஆழ்வு நோயின் அறிகுறிகள் பிறந்த குழந்தைகளின் மூளையைத் தாக்கி அவர்களது இயல்பான நிலையை பாதிக்கச் செய்யும் நோய் தான் ஆட்டிசம் எனப்படுகிறது. இதன் முக்கியப் பிரச்சினை என்னவென்றால் இந்நோய் குறித்து மருத்துவ உலகால் கூட இதுவரை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான். ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் பிறந்த 6 மாதத்தில் செய்ய வேண்டிய சின்ன சின்ன செயல்களைக் கூட செய்யாமல் முடங்கி இருக்கும். அதாவது தாயின் முகத்தை அடையாளம் காணுதல், சிரித்தல், மழலையின் ஒலி எழாமல் இருப்பது, அருகில் நின்று கூப்பிட்டாலும் எந்த சலனமும் இல்லாமல் இருப்பது, பொம்மைகளோடு கூட விளையாட மற…
-
- 14 replies
- 4.9k views
-
-
`கொழுப்பைக் குறைக் கிறேன் என்று இடைவிடாமல் உடற்பயிற்சி, நடைப்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டும போதாது. உண்ணும் உணவிலும் கட்டுப்பாடு அவசியம். உணவின் மூலம் தேவையற்ற கொழுப்பைக் குறைத்து... உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்” என்று சொல்லும் உணவு ஆலோசகர் யசோதரை கருணாகரன், கொலஸ்ட்ராலைக் குறைக்கும் சில உணவுகளைச் செய்து நமக்காக வழங்கியிருக்கிறார். ‘‘உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகளுக்கு கொலஸ்ட்ரால் அவசியம். கல்லீரலில் இருந்து கொலஸ்ட்ராலை உடலில் உள்ள செல்களுக்கு எடுத்துச் செல்வது எல்.டி.எல் (Low Density Lipo protein). செல்களுக்குத் தேவைப்படாத அதிகப்படியான கொலஸ்ட்ராலைத் திரும்பவும் கல்லீரலுக்கே எடுத்துச் செல்வது எச்.டி.எல் (High Density Lipo protein). எச்.டி.எல்-ஐ…
-
- 4 replies
- 4.9k views
-
-
பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவனிப்பிற்குரிய உறுப்பாக இருப்பவை, மார்பகங்கள். இவை, பலருக்கு கவலைக்குரிய உறுப்பாகவும் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்கள் என்றால், ”சிறிதாக இருக்கிறது என்றும், ஒன்றுக்கொன்று அளவில் மாறுபாடு இருக்கிறதென்றும்” நினைக்கிறார்கள். திருமணமான பெண்கள் என்றால், 'சரிந்து, தொங்கி காணப்படுகிறது' என்று கவலைப்படுகிறார்கள். பெண்களின் இத்தகைய கவலைகள் நீங்க வேண்டுமானால் அவர்கள் மார்பகங்கள் பற்றிய உடலியல் உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். மார்பகங்கள் என்பவை கொழுப்பு திசுக்களால் சூழப்பட்ட பால் சுரப்பு நாளங்களை உள்ளடக்கியவை. ஒரு செடியைப் பிடுங்கிப் பார்த்தால், அதன் அடியில் எவ்வாறு பல கிளைகளாக வேர்கள் பரவிச் செல்லுமோ அதைப் போன்றுதான் மார்ப…
-
- 3 replies
- 4.9k views
-
-
மதுரை வாசகர் ஒருவர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், ரத்த வங்கிப் பிரிவில், "டெக்னீஷியனா'க பணியாற்றுகிறார். இவரும், இவருடன் பணிபுரியும் சில நண்பர்களும், வித்தியாசமான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, அதன் முடிவையும் எனக்கு எழுதியுள்ளனர். ஆய்வு: ஒவ்வொருவருடைய ரத்த வகையின் அடிப்படையில் அவர்களுடைய செயல்பாடுகள், குணங்களை கண்டுபிடிப்பதுதான்! ஆய்வின் முடிவு இதுதான்: "ஏ' குரூப் ரத்தம் கொண்டவர்கள்: பிடிவாத குணம் அதிகமாக இருக்கும், காரியம் சாதிக்கத் தெரிந்தவர்கள். கோபம் காட்டத் தயங்கமாட்டார்கள், சென்டிமென்ட் பார்க்கக் கூடியவர்கள். வாக்குவாதம் பிடிக்காது. எங்கே, எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று இவர்களிடம் மற்றவர்கள் கேட்டுக் கொள்ளலாம், தலைக்கனம் அதிகம். 'பி'…
-
- 4 replies
- 4.8k views
-