நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
பேலியோ டயட் பகுதி- 1 நாகரிக மனிதனின் வியாதிகள்! By நியாண்டர் செல்வன் First Published : 05 July 2015 10:00 AM IST என் நண்பர் ஒருவருக்கு 25 ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. இந்த வியாதிக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கும் சர்க்கரைதான். இருவரும் ஒரே மருந்தைச் சாப்பிட்டு, ஒன்றாகத்தான் வாக்கிங் போகிறார்கள். ஆனாலும் நோய் குணமான பாட்டைக் காணோம். மற்ற மேலைநாடுகளைப் போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்பருமன், புற்றுநோய், மாரடைப்பு போன்ற பல நோய்கள் பரவி வருகின்றன. இவை ஏன் வருகின்றன, இதை எப்படிக் குணப்படுத்துவது என மருத்துவர்களுக்கும் தெரிவதில்லை. அதனால் இவற்றை எல்லாம் குணமாக்கும் முயற்சியை மருத்துவ உலகம் கைவிட்டுவிட்டது. ‘சர்க்கரையைக் குணப்படுத்த முடியாத…
-
- 29 replies
- 25.5k views
-
-
காது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்? மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை, காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இரு…
-
- 36 replies
- 25.2k views
-
-
உடலின் சில குறிப்பிட்ட பகுதிகளில் விறைப்பது போல அல்லது உணர்விழந்தது போன்ற உணர்வு ஏற்படுவது புதினமானது அல்ல. கையை எங்காவது இசகு பிசகாக வைத்து தூங்கிக் காலை விழித்து எழுந்தவுடன் அவ்விடம் விறைந்தது போலவும், கூச்சம் போல அல்லது அதிர்வு போலவும் தோன்றுவதை உதாரணம் கூறலாம். ஆனால் இது கைகளில் மட்டும்தான் ஏற்படும் என்றில்லை. கைகளில், கால்களில், விரல்களில் மேல்கைகளில் தொடைப்புறத்தில், தோள் பட்டையில் என உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தோன்றலாம். விறைப்பு எரிவு வலிகள் உண்டாக காரணங்கள்: ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்;ந்திருக்கும்போது, அதுவும் காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கும்போது மரப்பதற்கான சாத்தியம் அதிகம். ஆனால் இது தற்காலிகமானது. சிறிது நேரத்தில் குணமாகிவிடு…
-
- 6 replies
- 24.6k views
-
-
உடல் இளைத்து இருப்பதுதான் அழகு என்றுதான் பெரும்பாலான பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் சொல்லப்படுகிறது. ஆனால் சத்துக்களை குறைத்து உடலை ஒல்லியாக்குவது தேவையற்றது. அது உடலை பலவீனமாகத்தான் ஆக்கும். உடலில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசிய சத்துக்களும் வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் போதுமான அளவு இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இச்சத்துக்கள் குறையும்போது உடல் பலவீனமடைகிறது. இவற்றைப் போக்க மருந்து மாத்திரைகள் உண்பதை விட ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். உணவில் அதிகளவு காய்கறி பழங்கள் கீரைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. வாழைப்பழம், கொய்யாப்பழம் சாப்பிடலாம். மதிய உணவில் மோர் சாப்பிடவேண்…
-
- 0 replies
- 24.4k views
-
-
நாம் உண்ணும் உணவுக்கும் நமக்கு ஏற்படும் உணர்ச்சிகளுக்கும் அதிக தொடர்பு உள்ளது. அதனால்தான் சித்தர்களும், முனிவர்களும் சாத்வீக உணர்வுகளை தரும் உணவுகளை உட்கொண்டு வாழ்ந்தனர். ஆணோ, பெண்ணோ சில நேரங்களில் சில உணர்வுகள் நமக்கு ஏற்பட வேண்டும். அப்பொழுதுதான் மனிதர்கள் என்ற இயல்பான நிலையில் வாழமுடியும். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் பெண்களுக்கு லிபிடோ எனப்படும் பாலுணர்வு சக்தி குறையத் தொடங்கும். இதனால் தாம்பத்ய வாழ்க்கையில் தடுமாற்றங்கள் ஏற்படும். எனவே லிபிடோ சக்தியை உற்சாகம் குறையாமல் வைத்துக்கொள்ள சில உணவுகள் உதவி புரியும் என்கின்றனர் நிபுணர்கள். ஆவகேடோ வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் ஆவகேடோ பழத்தில் உயர்தர பி6 வைட்டமின்கள் உள்ளன. இது டெஸ்டோஸ்ட்டிரான் உற்பத்திய…
-
- 38 replies
- 24k views
-
-
வாயு உலகெங்கும் வியாபித்திருப்பது போல, உடலெங்கும் வியாபித்து இருக்கிறது என்பது பரவலான கருத்து. நடுத்தர வயதினர், முதியவர்கள், வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்த தொடங்கி மூட்டுவலி, கால் வலி எல்லாவற்றுக்கும் வாயுவை பழி சொல்லாமலிருப்பதில்லை! அட இந்த காலத்தில இதுவெல்லாம் பற்றி எழுதுறாங்கப்பா என யோசிக்கலாம். ஆனால் அன்றாடம் நடக்கிற,முக்கியமான, நம்ம மானத்தை வாங்குகிற விசயம் என்கிறதால எழுதியே ஆகவேண்டும். எங்களில் அனேகமானோர் ‘குயுசுவு’ வாயு உடலிலிருந்து பிரிவதை யாருமே விரும்புவதில்லை. பலர் முன்பு இது ஏற்பட்டால், தர்ம சங்கடமாக நாம் நினைக்கிறோம். மரியாதைக்குறைவு என நினைக்கின்றோம். சிறுபராயத்தில் இருந்து பாடசாலை, கூடும் இடங்கள், பயணம் செய்யும் நேரங்களில் எவ்வளவு சங்கடப்பட்டுள்ளோம். இயற்…
-
- 10 replies
- 23.8k views
- 1 follower
-
-
இதய நோய்களில் முக்கிய இடம் வகிப்பது அரித்மியா (arrhythmia) என்கிற சீரற்ற இதயத் துடிப்பு நோய்.இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதயத் துடிப்பு நின்றுபோவது மட்டுமே இதயச் செயல் இழப்பு ஆகாது. மார்புக் கூட்டின் உள்ளே பாதுகாப்பாகத் துடித்துக்கொண்டு இருக்கும் இதயத்தில் ஏற்படும் அதீத மின் உற்பத்தி அல்லது மின் தடங்கலும்கூட இதயச் செயல்பாட்டை நிறுத்தி உயிரைப் பலிவாங்கிவிடும்.தாயின் கருவறையில் மூன்று வாரக் குழந்தையாக இருக்கும்போதே, இதயம் துடிக்க ஆரம்பித்துவிடுகிறது. அது தானாகத் துடிப்பது இல்லை. இதயம் இயங்கவும் ஓர் ஆற்றல் தேவைப்படுகிறது. இதயத்தை இயங்கவைக்கும் அந்த மின் உற்பத்தி நிலையம் இதயத்தின் மேல் பகுதியில் வலது அறையில் இருக்கிறது. இதற்குப் பெயர் …
-
- 18 replies
- 23.5k views
-
-
கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்! என்ன கொழுப்பு அதிகமாயிடுச்சா?' என்று கேட்டால், எல்லோருக்கும் கோபம்தான் வரும். கொழுப்பு அதிகரிப்பதுதான் இன்றைக்கு பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் வருவதற்குக் காரணம். குறிப்பாக உடல் பருமன், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கு, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதுதான் முக்கியக் காரணம். கொலஸ்ட்ரால் என்றால் என்ன, அது ஆபத்தானதா, கண்டறிவது எப்படி என்று இதய நோய் சிகிச்சை நிபுணர் ஆர்.ரவிகுமாரிடம் கேட்டோம். 'இன்றைக்கு 'கொலஸ்ட்ரால்’ என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போதுதான் பிரச்னை. நம் உடல் செல்கள் உற்பத்திய£வதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொலஸ்ட்ரால் அவ…
-
- 2 replies
- 23.2k views
-
-
விதை வீக்கம் தொடர்பில் அவதானம் தேவை ஆண்களின் ஆணுறுப்பு விதைகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகள் தொடர்பில் அவதானமாக இருக்கவும். ஆமாம், வயது வந்த ஆண்களாக இருந்தாலும் சரி அல்லது சிறுவர்களாக இருந்தாலும் சரி, சிலருக்கு அவர்களின் விதைகளில் வீக்கம் ஏற்பட்டு அதனால் உருவாகும் வலியினால் அவர்கள் துடி துடித்துப் போய் விடுவதை நாம் அவதானித்து இருக்கின்றோம். ஏன் எமக்கும் அவ்வாறான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். அந்த வகையில் விதைகளில் ஏன் வீக்கம் ஏற்படுகின்றது, அதனை நாம் எப்படி தவிர்த்துக் கொள்ளலாம் என்பதை பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். ஆண்களின் விதைகளில் வீக்கங்கள் இரண்டு வெவ்வேறான முறைகளில் ஏற்படுகின்றன. ஆணுறுப்பு விதைகள் தனது இயல்பான தோற்றத்திலிருந்த விலகி தானாகவே முறுக்க…
-
- 4 replies
- 21.8k views
-
-
இந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் நிறைந்த சைவ உணவே இந்திய உணவாகும். இந்திய உணவில் இரண்டு வகை உண்டு. தென்னிந்திய உணவு வகை, வட இந்திய உணவு வகை. தென்னிந்திய உணவுகளை விருந்தோம்பல் உணவு என்பார்கள். அறுசுவை கொண்ட உணவு இதுதான். குறிப்பாக தமிழக மக்களின் பிரசித்திபெற்ற உணவு இட்லிதான். தமிழக இட்லியை விரும்பி உண்ணாதவர் உலகில் எவரும் இருக்க முடியாது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இவை உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலை பாதுகாக்கிறது. இந்த இட்லியில் இவ்வளவு மருத்துவக் குணம் உள்ளதற்குக் காரணம் உளுந்துதான். மனிதனுக்கு தேவைய…
-
- 17 replies
- 21.1k views
-
-
இயற்கை மருத்துவம்-மஞ்சள் தமிழ் உணவிலேயே மிக முக்கியமாக சேர்க்கப்படும் −ம்மஞ்சள், சமையல் பொருளாகவும் மருந்து பொருளாகவும் பயன்படுகிறது. நோய் பரவாமல் தடுக்கும் மிகச் சிறந்த கிருமி நாசினியாக செயல்படும் மஞ்சள் உலகிலே இலங்கையில் மிக அதிகமாக வளர்கிறது வகைகள்/பயன்கள் மூன்று வகை முதல் வகை முகத்திற்கு போடும் மஞ்சள். −தற்கு முட்டா மஞ்சள் என்று பெயர். உருண்டையாக −ருக்கும். பயன் முகத்திற்கு பூசும் மஞ்சள், முகத்தில் முடி வளர்வதை தடுக்கிறது. முகத்திற்கு ஒருவித மினுமினுப்பை வசீகரத்தைத் தருகிறது. மஞ்சளை அரைத்து −ரவில் பூசி காலையில் கழுவ தேவையில்லாத முடி நீங்கும். −ரண்டாவது வகை கஸ்தூரி மஞ்சள் வில்லை, வில்லையாக தட்டையாக −ருக்கு…
-
- 22 replies
- 20.7k views
-
-
மதுவால் வரும் கேடு மது ஓர் உணவு அல்ல. போதைப் பொருள். பதார்த்தங்கள் கெடுவதிலிருந்து தயாரிக்கும் பொருள். மிகக் கொடிய விஷம். மதுவினால் குடிகள் பல கெட்டன என்பதை நாம் அறிவோம். அகால மரணம், கொலை, திருடு, விபச்சாரம் எல்லாம் மதுவினாலேயே உண்டாகின்றன. ஞாபகசக்தியும் சிந்தனை ஆற்றலும் சிதைந்து போகும். புத்தி, நிதானம் குலைந்து மன ஒழுங்கையும் அடக்கத்தையும் சீரழித்து விடுவது மதுபானம். பெருங்குடியர்களும் யோகாசனப் பழக்கத்தினால் கொடுமை நிறைந்த இப்பழக்கத்தை விட்டொழித்திருப்பது அனுபவ உண்மையாகும். மதுவால் இரைப்பை, கல்லீரல், இரத்தக் குழாய்கள், சிறுநீரகம், நரம்பு மண்டலம் இவற்றிற்குப் பெரும் கேடு உண்டாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். பஞ்சமாதபாதங்களில் மது குடிப்பதும் ஒன்…
-
- 10 replies
- 20.2k views
-
-
கொண்டை அலங்காரம்...! 1. மயில் ஜடை முதலில் முன் பகுதியை சரி செய்யவும். பிறகு முடி எடுத்து போனி டைல்ஸ் போடவும். பிறகு சுற்றிலும் சுருள் மற்றும் நடுவில் ஒரு சுருள் போடவும் பிறகு மீதமுள்ள முடியில் சவுரி வைத்து பின்னல் போட்டு குஞ்சலம் வைத்து பின்னவும். பிறகு மயில் வடிவத்தை அதில் இணைக்க வேண்டும். 2. கதம்ப ஜடை நேர் வகிடு எடுத்து முன் பகுதியை சரி செய்து உச்சியில் முடி எடுத்து பில்லை செட் செய்யவும் பில்லை சுற்றி கதம்ப மலர் சுற்றி வைத்து கதம்ப இணைப்பை வைக்கவும். 3. மல்லிகை மற்றும் கோழிகொண்டை ஜடை முகத்திற்கு தக்கபடி வகிடு எடுக்கவும். பிறகு தேவையான நீளத்திற்கு பின்னல் போட்டு தேவையான நிறத்தில் குஞ்சலம் வைத்து கொள்ளவும். அதன் பின்னர் மல்லிகை மற்றும் கோழி கொண்டை பூ…
-
- 51 replies
- 20k views
-
-
நீங்கள் குறட்டை விடுபவரா?????? யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நின்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம்.குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது உடல் மிகவும களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும் தெளிவற்ர சிந்தனை வரும் அதிக மாக கோவம் வரும் இது மட்டுமன்றி உடலுக்கு போதிய அளவு பிராண வாயு கிடைக்காது. இதனால் இரத்த அழுத்தம் சக்கரை நோய் இதய நோய் பக்க வாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இரக்கிறது. அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடு?வார் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது அதனால் இவற்ரை தடுக்க நடவடிக்கை எட…
-
- 22 replies
- 19.8k views
-
-
இதய நோய் Heart Attack வராமல் தடுக்கும் சிறந்த வழிகள்! 2020-ம் ஆண்டில், இதயநோய் ஒரு கொள்ளை நோய் போலப் பரவும் என்று ஒரு மருத்துவ ஆய்வு கூறியிருக்கிறது. அந்த அபாயத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, இப்போதிலிருந்தே உணவு, உடற் பயிற்சி, வாழ்க்கைமுறை இதிலெல்லாம் கவனம் செலுத்தவேண்டும். உணவுக் கட்டுப்பாடு: முதலாவதாக, உடல் எடையைக் குறைப்பதற்காக. அடுத்து, ரத்தத்தில் கொழுப்பு சத்தைக் குறைக்க, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க, பாதுகாப்பான சத்துகளைப் பெற… என்று மேலும் பலவித காரணங்களுக்காக உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது. கட்டுப்பாடான உணவால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய் களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். கட்டுப்பாடான உணவும் அதன் அளவுகோலும்: …
-
- 7 replies
- 19.7k views
-
-
இயற்கையின் அரிய படைப்புகளில் இந்த பூக்கள்தான் எத்தனை அழகு... நறுமணம் கொண்ட இவை கண்களுக்கு விருந்தாக மட்டுமல்ல... மருந்தாகவும் பயன்படுகின்றன. வீட்டின் முன்பும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும் அழகு சேர்க்கும் செம்பருத்திப் பூவை சீனாவும் இந்தியாவும் தங்கள் நாட்டு பூ என வருணிக்கின்றன. ஆசியாவே இதன் பிறப்பிடம். மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்திதான். இந்தப் பூக்களின் நிறத்தையும், அடுக்கையும் வைத்து பலவகைகளாக பிரித்துள்ளனர். சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர். இதனை சப்பாத்து எனவும் அழைக்கின்றனர். செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள…
-
- 3 replies
- 19.5k views
-
-
குப்பைமேனி இலையை பயன்படுத்தி நலம் பெறுவோம். குப்பைமேனி : மூலிகைகள் என்றால் ஏதோ பெரிய மலைக்காடுகளில் காணப்படுவது என பலர் நினைக்கலாம். மலைக்காடுகளிலும் மூலிகைகள் வளர்கின்றன. அதேபோல் நம் வீட்டருகே, சாலை ஓரங்களிலும், வீதிகளிலும், தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் ஏராளமன மூலிகைகள் வளர்கின்றன. நாம் களைகள் என்று ஒதுக்கும் புல், பூண்டு, செடி, கொடிகள் அனைத்தும் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்டவை. மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன. அதில் குப்பைமேனியும் ஒன்று. குப்பைமேனி பூண்டு இனத்தைச் சார்ந்தது. இவை தோட்டங்களிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்திருப்பதைக் காணலாம். இது இந்தியா முழுவதும் வளரும் செடியாகும். …
-
- 0 replies
- 18.9k views
-
-
வெங்காயம் வெங்காயம் வெறும் உணவுப் பண்டமாக மட்டுமின்றி அற்புதமான மருத்துவ ஆற்றல் படைத்த ஒரு பண்டமாகவும் இருக்கிறது என்ற உண்மையை மிகவும் தொன்மைக் காலத்திலேயே நமது நாட்டு மக்கள் அறிந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. வெங்காயத்தின் தாயகம் தமிழகமோ அல்லது பாரத நாட்டின் பிற மாநிலங்களோ அல்ல. எகிப்து நாடு. உலகிலேயே முதன் முதலாக எகிப்து நாட்டு மக்கள்தான் வெங்காயத்தைச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். எகிப்திய மக்கள் அந்நாளில் வெங்காயத்தை தெய்வீக அம்சம் பொருந்தியதாகக் கருதி வந்துள்ளனர். பக்தி பூர்வமாகச் செய்யப்படும் பெரிய பூஜைகளின்போது வெங்காயமும், வெள்ளைப் பூண்டும் பூசனைக்குரிய மூர்த்திகள் போன்ற மதிப்புடன் மரியாதையுடன் பூஜையில் இடம் பெ…
-
- 1 reply
- 18.8k views
-
-
கடந்த பல மாதங்களுக்கு முன் இடப்பக்கத்தில் உள்ள மேற்பகுதியின் மூலையில் இருக்கும் கொடுப்புப் பல் ஒன்றில் வலி ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக பெரிசாகி இப்ப அடிக்கடி கடுமையாக வலிக்குது. பெரிய சாப்பாடு (இறைச்சி, ஆட்டு எலும்பு போன்றன) எல்லாம் சாப்பிடும் போது அப்பாவியாக தானுண்டு தன் பாடுண்டு என இருக்கும் பல் கடுகு, தானியங்களின் தோல், பர்கர் துண்டு, கடலை போன்ற சின்ன உணவு சாப்பிடும் போது மட்டும் உயிரே போற மாதிரி வலிக்குது. சின்ன உணவுகள் மாவாக அரைபடும் போது, அவை போய் பல்லில் அடையும் போதுதான் இந்த வலி கடுமையாக வருகுது. என்னடா சாப்பாட்டு ராமன் எனக்கு இப்படிச் சோதனை வந்துட்டுதே என்று பல் வைத்தியரிடம் போய் பல்லைக் காட்டினால், அந்தாள் இதுதான் சாக்கு என்று பல X-Ray களை எடுத்துப் பார்த…
-
- 27 replies
- 18.6k views
-
-
-
உங்கள் பற்கள் பள பளக்க பற்களிள் இருக்கும் மஞ்சள் நிறத்தைப் போக்க எலுமிச்சம் பழச்சாறும் உப்பும் கலந்து பற்களை தேயுங்கள் உங்கள் முகத்தோல்லுக்கு தினமும் கரட் சாப்பிடவது தோல் அழகுக்கு நல்லது. உங்கள் முகத்தில் ரத்த ஓட்டம் குறைவாகவும் பொழிவாகவும் இல்லையா??பளிச்சென்ற வசீகரம் கிடைக்க வேண்டுமா??? ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி துளசிச்சாறு கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடியுங்கள். மூன்று மாதம் இதை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும் பி.கு இதை அனைத்தையும் கடைபிடியுங்கள், உங்கள் எதிர்காலம் மென்மையாக இருக்கும்!!!!!!! நம்பிக்கையில்லாதவர்கள் இதை செய்ய வேண்டாம்!!!!!
-
- 92 replies
- 18.5k views
-
-
எனக்கு கன நாட்களாக மூச்சு விடுதலில் சிரமம் அடிக்கடி வந்து போகுது. மூச்சு முழுமையாக விட முடியாமல் அவதிப் பட்டு (short Breath ) பின் சில தடவை முயன்ற பின் முழுமையான மூச்சு வரும். இது முக்கியமாக இரவு படுக்கும் போதே அடிக்கடி ஏற்படுகின்றது. இதனால் நித்திரை எவ்வளவு வந்தாலும் முதல் இரண்டு மணி நேரம் அவதிப் பட்டு மூச்சு சரியாக வந்த பின் தான் நித்திரை கொள்ள முடிகின்றது. இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றல், சிறிதளவு மது (முக்கியமாக விஸ்கி) அருந்தினால் உடனடியாக பிரச்னை சரியாகின்றது. மருத்துவரிடம் காட்டி எல்லா பரிசோதனை செய்தும் ஒன்றும் இல்லை என்று விட்டார். ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளும் இல்லை. உயர் இரத்த அழுத்தம் இருந்தாலும், அதுவும் இப்ப தான் எல்லையை தாண்டுவதும் இல்லை பொதுவாக…
-
- 20 replies
- 18.4k views
-
-
நவீன மருத்துவ உலகில் இன்று பாவிக்கப்படும் சொற்களில் டயாலிசிஸ் (dialysis) உம் ஒன்று. இதுபற்றி கேள்வி பதில் வடிவில் இப்போ அறிந்து கொள்வோம்..??! டயாலிஸிஸ் என்றால் என்ன..??! வெளியக குருதி சுத்திகரிப்புச் செயன்முறை என்று சொல்லலாம். இதனை குருதி மாற்றீடு (blood transfusion) என்று சொல்வதில்லை. அது வேறு. இது வேறு. டயாலிசிஸின் தேவை..?! குறிப்பாக சிறுநீரக பாதிப்பு நிகழ்ந்திருந்தால் இந்த டயாலிசிஸ் குறித்து மருத்துவர்கள் சிந்திப்பார்கள். சிறுநீரகம் என்றால் என்ன..??! சிறுநீரகம் என்பது எமது வயிற்றுப் புற பின்பகுதியில் அவரை வடிவில் உள்ள இரண்டு வடிகட்டி அங்கங்கள். இவை இரத்தத்தில் உள்ள யூரியா போன்ற நச்சுக்களையும் மேலதிக உப்பு மற்றும் நீரையும் வடிகட்டி சிறுநீராக …
-
- 11 replies
- 18.2k views
-
-
கற்றுக் கொண்டால் குற்றமில்லை - சோம்பல் அறுங்கள் ஆக்கம்: 'எழுத்துச் சித்தர்' பாலகுமாரன் சங்கருக்கு தூக்கம் என்பது மிக மிகப் பிடித்தமான விஷயம். குறிப்பிட்ட நேரத்தில் சோறு இல்லாமல் இருந்துவிடலாம். தூக்கமில்லாமல் இருந்துவிட முடியுமா? தூங்கினால் தானே சோம்பல் நீங்கும். சோம்பல் நீங்கினால் தானே சுறுசுறுப்பாக இருக்க முடியும். சுறுசுறுப்பாய் இருந்தால் தானே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். எனவே, வாழ்வை ஜெயிப்பதற்ககு தூக்கம் அவசியம் என்பது சங்கரின் வாதம். வாதம் சரிதான். ஆனால், எப்போது தூக்கம்... எவ்வளவு நேரம் தூக்கம் என்பது மிகப் பெரிய கேள்வி. எட்டரை மணிக்கு பள்ளிக்கூடம் என்றால், ஏழு ஐம்பத்தைந்து வரை தூங்குவது சங்கரின் வழக்கம். ஒன்பது மணிக்கு கல்லூரி என்றால், எட்டு நாற்பது வரை…
-
- 0 replies
- 17.8k views
-
-
ஒட்டு குடல் (Appendix) என்றால் என்ன? - கேள்விகளும் பதிலும் [Monday, 2013-02-04 09:27:25] Appendix அதாவது ஒட்டு குடல் / குடல் வால் என்பது ஒரு வியாதி அல்ல. மக்களிடையே அவ்வாறு ஒரு வார்த்தை வழக்கமாக பயன்படுத்தப்பட்டுவருகிறது, சமயங்களில் மருத்துவரும் கூட அவ்வாறே உச்சரிப்பதுண்டு - காரணம் மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக. அப்படியென்றால் சரியான உச்சரிப்பு முறை? " ஒட்டுக்குடல் வீக்கம்" என்பது மிகச்சரியானது. எங்கு அமைந்துள்ளது? அடிவயிற்றின் வலப்புறத்தில் (Right Lower Abdomen) உள்ளது. உணவுப்பாதையில் சிறுகுடலும் பெருங்குடலும் சேரும் இடத்தில அமைந்துள்ளது இந்த appendix எனப்படும் இருந்தும் பயனில்லா (Vestigial organ) உறுப்பு. இதன் அமைப்பு பார்பதற்கு ஒரு குடலை போலவே இருந்தாலு…
-
- 1 reply
- 17.6k views
-