Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. உலகலாவிய ரீதியில் தொற்றுக்களை ஏற்படுத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் சுவைன் புளு (swine flu )எனப்படும் தடிமன் - காய்ச்சல் நோய், H1N1 எனப்படும் வீரியம் குறைந்த வைரஸ் துணிக்கையின் தொற்றால் உருவாகிறது. ((இருப்பினும் இதன் வீரியத்தன்மை குறித்து எதையும் இப்போது அறுதியிட்டுக் கூறிட முடியாத நிலையில் ஆய்வாளர்கள் இருக்கின்றனர். மரணத்தை விளைவிக்கக் கூடிய அளவுக்கு கூட இதன் வீரியத்தன்மை அவதானிக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும்.)) இந்த வைரஸ் தொற்றுக் கண்டவர்களில் சாதாரண தடிமன் - காய்ச்சலுக்குரிய இருமல், தும்மலுடன் கூடிய குணம் குறிகள் ஒப்பீட்டளவில் சிறிதளவு கடுமையானதாக இருப்பதோடு நியுமோனியாவுக்குரிய குறிகளும் தென்படலாம். இந்த வைரஸ் துணிக்கைகள் வழமையாக எம்மைச் சுற்றிக் கா…

  2. இது தெரிந்தால் தினமும் கண்டிப்பாக நடப்பீங்க | Dr.Sivaraman speech on walking நிணநீர் கழிவுகள் வெளியேறணும் என்று புதிதான ஒரு தகவலை கூறுகிறார். @Justin அண்ணா இது பற்றிய உங்கள் பதிலை அறிய ஆவல்.

  3. எதற்கும் கட்டுப்படாமல் உங்களின் தலைக்கு உள்ளே தொடர்ந்து வரும் இந்த ஒற்றைத் தலைவலியை விரட்ட நம்முடைய பாரம்பரிய பாட்டி வைத்தியம் இருக்கும் பொழுது கவலை எதற்கு. உடலையும் உள்ளத்தையும் உருக்குலைக்கும் ஒற்றைத் தலைவலி – மைக்ரோன் தலைவலி (Migraine) என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்யாகும். குறிப்பிடத்தக்க ஒற்றைத் தலைவலியானது, தலையின் ஒருபக்கமாக ஏற்படும், துடிப்புடைய (pulsating), 4 தொடக்கம் 72 மணித்தியாலங்களுக்கு நீடித்திருக்கக் கூடிய கடுமையான தலைவலியால் அடையாளம் காணப்படுகின்றது. இந்த ஒற்றைத் தலைவலியை தூண்டி விடும் காரணிகளை கண்டறிந்து தடுப்பது என்பத…

  4. உடற்பருமனைக் குறைக்க வழி உடற்பருமனைக் குறைக்க வழி உடல் எடையைக் குறைப்பதற்காக எடுத்த உணவுகளினால் எடைகுறையாமல் விரக்தியா? எல்லா முறைகளிலும் கொழுப்பு உண்பதைக் குறைத்தாலும் எடை இன்னும் போடுகிறதா? நீண்ட காலமாக உணவில் அதிகரித்த வெல்லம அல்லது மாச்சத்து மற்றும் உணவுகளை உண்டுவந்திருப்பதனால், தற்பொழுது உடலானது மாச்சத்து ஆக்கசிதைவுச்செயற்பாடுகளை செவ்வனே செய்ய முடியாது போய்விடுகிறது. அத்துடன் மேலதிக மாச்சத்து கொழுப்பாக உடலில்; குறிப்பாக உடலின் இடைப்பகுதியில் சேமிக்கப்படுகிறது. எமது உணவில் கொழுப்பினளவையும், அது தரும் சக்தியின் கலோரிக் அளவையும் கவனத்தில் கொள்ளும் நாம் எமக்குத் தெரியாமலே அதிகமாக வெல்லம் அல்லது மாச்சத்து உள்ளெடுத்துவிடுகின்றோம். பிரித்தானியாவைப் பொறுத்தவரையில் தற்பொ…

  5. அதிக நேரம் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தினால் மனநிலை பாதிக்கும் அதிக நேரம் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவோருக்கு மன உளைச்சல், கோபம் அதிகரிக்கும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். கையடக்க தொலைபேசிகளை அதிகநேரம் பயன்படுத்துகிறவர்கள் இளைஞர்கள், இளைஞிகள் தான். மணிக்கணக்கில் அவர்கள் நண்பர்களுடனும் காதலனுடனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எஸ்.எம்.எஸ். அனுப்புவதிலும் அதைப் பார்ப்பதிலும் கூடுதல் நேரத்தை செலவிடுகிறார்கள். ஸ்பெயின் நாட்டுக் கிரினேடா பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றி ஓர் ஆய்வு நடத்தினார்கள். 18 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களிடம் 10 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்படி 40 சதவீத வாலிபர்கள் மற்றும் இளம்பெண்க…

    • 3 replies
    • 1.6k views
  6. *குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்* உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.**அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!**சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?* *குளியல் = குளிர்வித்தல்**குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.* *மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.* *இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.* *காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.* …

    • 2 replies
    • 1.6k views
  7. இன்றைய திகதியில் தெற்காசிய நாடுகளில் முழங்கால் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உலகளவில் முழங்கால் மூட்டுவலியால் 240 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் தெற்காசிய நாடுகளில் 150 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை காட்டிலும், பெண்கள் இரண்டு மடங்கு கூடுதலாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முழங்கால் மூட்டு வலி பிரச்சனை பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் உடலியல் கோளாறுகளில் நான்காம் இடத்தைப் பிடித்திருப்பதாகவும், இதுகுறித்த முறையான விழிப்புணர்வு இல்லாததால் 20 மில்லியன் மக்களுக்கு மூட்டு மாற்று …

  8. நூறாண்டு காலம் வாழ்வது எப்படி நூறாண்டு காலம் வாழுவதற்குரிய மந்திரம் எது ? நீண்ட காலம் உடலை உயிருடன் வைத்திருக்க இரண்டு திசைகளே உள்ளன.. டேனிஸ் மக்களிடையே நூறாண்டு காலம் வாழ்வது எப்படியென்ற தேடல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசும் ஒவ்வொரு தேர்தலிலும் மூன்றாண்டு காலம் உங்கள் உயிர் வாழும் காலத்தை எமது ஆட்சி நீட்டிப்பு செய்யும் என்று பிரச்சாரம் செய்து வருகிறது. 50 இலட்சம் குடித்தொகை கொண்ட டென்மார்க்கில் தற்போது 867 பேர் நூறு வயதையும் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 733 பேர் பெண்களாகும். டென்மார்க்கின் சராசரி இறப்பு வயது பெண்கள் 81 ஆகவும், ஆண்கள் 76 ஆகவும் உள்ளது. ஆண்களை விட பெண்கள் அதிகமாக வாழ்வதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன, ஆனால் அனைத்திலுமே முக்…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 14 நவம்பர் 2023, 03:35 GMT புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் முன்பு எல்லாம் சர்க்கரை நோய் இருக்கிறதா என்று கேட்டால் ஆம், இல்லை என்று இரண்டு பதில்கள் தான், ஆனால் இப்போது “இருக்கு, ஆனா இல்லை” என்று கூறும்படியாக ப்ரீ டயபடிக் என்ற நிலை உள்ளது. ப்ரீ டயபடிக் எனப்படுவது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை ஆகும். அதாவது சர்க்கரை நோய் இல்லாத நிலைக்கும், சர்க்கரை நோய் ஏற்பட்ட நிலைக்கும் இடையில் உள்ள நிலையாகும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பொதுவாக இரண்டு விதமாக பரிசோதித்து தெரிந்துக் கொள்ளலாம். வெறும் வயி…

  10. இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? புதன், 05 ஜனவரி 2011 13:21 சர்க்கரை அதிகமாக சாப்பிட்டால் சர்க்கரை நோய் (நீரிழிவுநோய்) வரும் என்று சிலர் கூறுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். உண்மையிலேயே சர்க்கரை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? அது பற்றி இங்கே பார்ப்போம். உடல் ஆரோக்கியமாக இருக்கும் சராசரி மனிதர் ஒருவர் தினமும் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை அல்லது இனிப்பின் அளவுக்கும், அவருக்கு சர்க்கரை நோய் வருவதற்கும் நேரடி தொடர்பு இல்லை. ஆனால், ஒருவரது பெற்றோர் இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்து, அவர் உடற்பயிற்சி செய்யாதவராகவும், அவரது உடல் அதிக பருமனாகவும் இருக்கும்பட்சத்தில், அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான மரபு காரணிகளும், சுற்றுப்புறக் காரணிகளும் அதிகபட்சமாக …

  11. வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமை…

  12. இன்று புதிய புதிய வியாதிகள் மனிதர்களைத் தாக்குகின்றன. Systemic Luspus Erythemetosus என்ற வியாதி, மூட்டுகளைத் தாக்கும் ஒரு கொடிய வியாதி. ஆங்கில மருத்துவப்படி அதை, auto immune disorder என்றும், இது போன்ற வியாதிகளுக்கு அந்த மருத்துவத்தில் சிகிச்சை கிடையாது என்றும் கூறுகின்றனர். இந்த வியாதி பெரும்பாலும் இளம்பெண்களை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வியாதியால் தாக்கப்படும் நோயாளிகளுக்கு, வலி நிவாரணி என, பல வித மருந்துகளைப் பயன்படுத்தி, தற்காலிக நிவாரணத்திற்காக மட்டுமே வைத்தியம் நடக்கிறது. இந்தி வியாதியால் தாக்கப்படும் இளம் பெண்களுக்கு, வேறு பிரச்னையும் உண்டு; கர்ப்ப காலத்தில், கருச்சிதைவு ஏற்பட்டு, கரு வயிற்றில் தங்க இயலாத நிலை ஏற்படுகிறது. இந்த நோயால் தாக்கப்பட்ட பெண்…

  13. சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது. இந்த ஏலக்காயில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை... « குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும். « ஜலதோசத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும். « மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ‘ஏலக்காய் தேனீர்’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். தேயிலை குறைவாகவும், ஏ…

  14. கண்ணும் உணவும் நம் தினசரி உணவுப் பழக்க வழக்க முறைகளிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன, உதாரணமாக பச்சைக் காய்கறிகள் கண்கள் ஆரோக்கியத்திற்கு ஆற்றும் பணிகளைப் பற்றி நாம் சுருக்கமாக பார்ப்போம். பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. பார்வைக்கு தெரியும் ஒளியின் நீலமான பகுதிக்குத்தான் கண்களின் விழித்திரை அதிகமாக பாதிக்கப்படுகிறது, இது கண் விழித்திரைக்கு பின்பகுதியில் உள்ள ஆயஉரடய-வை சேதம் செய்யலாம். இந்தப் பகுதிதான் நம் கூர்மையான பார்வைக்கு உதவும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பச்சைக் காய்கறிகளுள்ள வைட்டமின் சத்துகள் (ஆன்டி - ஓxஇடன்ட்ச்) Mஅcஉல -வை ஆரோக்கியமா…

    • 2 replies
    • 1.6k views
  15. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கல்லீரல் 500க்கும் மேற்பட்ட உடல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் உறுப்பு (பிரதிநிதித்துவ படம்) 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரபல ஹிந்தி தொலைக்காட்சி நடிகை தீபிகா கக்கர் தற்போது தனது வாழ்வின் மோசமான கட்டத்தைக் கடந்து வருகிறார். தீபிகாக்கு கல்லீரல் புற்றுநோய் (இரண்டாம் நிலை) பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரது கணவர் ஷோயப் இப்ராஹிம் கூறியுள்ளார். நடிகை தீபிகா கக்கர், தனது உடல்நிலை குறித்த தகவல்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தனது ரசிகர்களுடன் உடல்நலன் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்டு, தான் எதிர்கொண்ட கடினமான நாட்களைப் பற்றி நினைவுகூர்ந்தார். தனது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் தீபிகா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "கடந்த சில வாரங்களாக கடினமான சூழ…

  16. ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் கத்தரி! கத்தரிக்காயின் சுவையை கி.மு 600 ஆம் நூற்றாண்டுகளிலேயே மக்கள் அறிந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலிருந்து ஜரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கத்தரிக்காய் தற்பொழுது அங்கும் விளைவிக்கப்படுகின்றது. இது காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கு அழற்சியினைப் போக்க வல்லது. செயல்திறன் மிக்க வேதிப…

  17. ஏழைகளின் ஆப்பிள்! மருத்துவ உலகில் நீண்ட நெடுங்காலமாக ஒரு ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. நரை, திரை, மூப்பு, மரணம் இவற்றைத் தள்ளிப்போட்டு நீண்ட காம் ஆரோக்கியமாக வாழும் வழி என்ன? என்பதே அந்த ஆராய்ச்சியின் நோக்கம். தமிழ்நாட்டுச் சித்தர்கள் சுருக்கமாக இந்த ஆராய்ச்சியை காயகல்ப ஆராய்ச்சி என்றனர். காயம் என்றால் உடம்பு; கல்பம் என்றால் உடம்பைக் கல் போன்று இறுக வைத்து நீண்ட காலம் வாழவைத்தல். ஆக, காயகல்பம் என்றால் ஆரோக்கியமான நீண்ட ஆயுள் என்று அர்த்தம். இந்த காயகல்ப ஆராய்ச்சிக்குப் பிள்ளையார்சுழி போட்டவர்கள் நம் தமிழ்நாட்டுச் சித்தர்கள் 2500 ஆண்டுகட்கு முன்பே குமரிகண்டத்தில் வாழ்ந்த அறிவர் என்ற சித்தர்கள் (சித் என்றால் அறிவு: சித்தர் என்றால் அறிவர்) 108 …

  18. இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி பார்த்தால், அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அமெரிக்க நிபுணர்களின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. குழந்தை மருத்துவத்துக்கான அமெரிக்க அக்கடமி, குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டது. ஆராய்ச்சியின் முடிவில், 2 வயதுக்குள்பட்ட குழந்தைகள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்து வருவார்களேயானால் அவர்களின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அத்தகைய குழந்தைளின் பேச்சுத்திறன் தாமதப்படுவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர். இந்தக் குறைபாடுகளைப் போக்க, இந்த வயது வரம்புக்குள்பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க அவர்களிடம் பெற்றோர்கள் பேச்ச…

    • 2 replies
    • 1.5k views
  19. குழந்தை வளர்ப்பு - பிறப்பு முதல் பத்து வயது வரை குழந்தைகளை வளர்ப்பது தாய்மார்களைப் பொறுத்தவரையில் பயம் கலந்த அனுபவமாக இருக்கிறது. ஆனால் அடிப் படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டால், குழந்தை வளர்ப்பு மகிழ்ச்சி யான பாசம் நிறைந்த கலை என்பதை புரிந்து கொள்ளலாம். குழந்தை வளர்ப்பில் அடிப்படையான விஷயங்கள் இங்கே தரப்படுகின்றன. பிறப்பு முதல் ஒரு வயது வரை: பிறந்த குழந்தைக்கு தினமும் எத்தனை முறை பாலூட்ட வேண்டும் என்ற சந் தேகம் பல தாய்மார்களுக்கும் ஏற்படு கிறது. குழந்தை ஒவ்வொரு முறை அழும் போதும் பசியால்தான் அழுகிறதோ என்று நினைக்கிறார்கள். குழந்தைக்கு தேவையான அளவு உணவு கிடைக்கிறதா என்பதை அறிய பலவழிகள் இருக்கின்றன. அதில் ஒன்று குழந்தையின் எடையை கவனிப்பது.…

    • 0 replies
    • 1.5k views
  20. வைட்டமின் என்றால் என்ன?அதன் தேவை எந்தளவுக்கு மனிதனுக்கு அவசியம் மனித உடல் சீராக செயல்படுவதற்கு பலவகையான பொருட்கள் அதற்குத் தொடர்ந்து தேவைப்படுகின்றன. தொடர்ந்து மூச்சுவிடுவதன் மூலமும், சாப்பிடுவதன் மூலமும் அந்தப் பொருட்களை நம்முடைய உடலுக்கு நாம் வழங்கி வருகிறோம்.வளர்ச்சி, பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுதல், அவற்றுக்குத் தேவையான ஆற்றல் - இவைதான் மனித உடலின் அடிப்படைத் தேவைகள். மனித உடல் பலவகையான திசுக்களால் ஆனது என்றாலும் அவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது செல்கள்தான். இந்த செல்களில் நிகழும் பல்லாயிரக்கணக்கான வேதிவினைகள்தான் மனித உடலின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுவதற்கும், அவற்றுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதற்கும் காரணமாக இ…

  21. மனித உடலில் ஓடும் இரத்தத்தின் நிறம் சிவப்பு மட்டுமே. ஆனால் அனைவரின் ரத்தமும் ஒரே வகை அல்ல. இரத்த வகைகள் பற்றிய விவரம் அறியப்படாத காலத்தில் இரத்தம் தேவைப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற இயலவில்லை. அவர்களுக்கு இரத்தம் செலுத்துவது மிகக் கடினமாக இருந்தது. ஏனெனில் பல எதிர்விளைவுகள் ஏற்பட்டன. உயிர்களைக் காக்க முடியவில்லை. 1900 ஆம் ஆண்டில் டாக்டர். லான்ஸ்டைனர் என்பவர் ரத்தத்திலுள்ள பிரிவுகளைக் கண்டு பிடித்தார். இரத்தமானது பொதுவாக 4 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1. “A” வகை ரத்தம், 2. “B” வகை ரத்தம், 3. “AB” வகை ரத்தம் 4. “O” வகை ரத்தம். இவற்றில் “A” வகை ரத்தத்தை A1, B2 என்ற துணை வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. இரத்தப் பிரிவுகளில்... A வகையினர் 42%ம், ஆ வகையினர் 8%ம், AB வகைய…

  22. இங்கிலாந்தின் சவுத்வேல்ஸ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஹென்னாகிளார்க். 10 ஆண்டுகளுக்குமுன்பு இவர் சிறுமியாக இருந்த போது இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். ஹென்னா கிளார்க்கின் இருதயம் இயங்க மறுத்ததால் அவருக்கு டாக்டர்கள் ஆபரேஷன் செய்தனர். இயக்கம் நின்று போன இருதயத்தின் அருகிலேயே தானமாக கொடுத்த இன் னொரு இருதயத்தை பொருத் தினார்கள். 10ஆண்டுகளாக அந்த புதிய இருதயம் செயல்பட்டு வந்தது. ஆனால் திடீர் என்று அந்த இருதயத்தை அவரது உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. மருந்து மாத்திரைகளும் அவரது உடலுக்கு ஏற்றுக் கொள்ளவில்லை. இதுபற்றி டாக்டர்கள் சோதனை செய்து பார்த்த போது 10 ஆண்டுகளுக்கு முன்பு நின்று போன அந்த சிறுமியின் இருதயம் மீண்டும். இயங்க ஆரம்பித்ததே இந்த மாற்றத்துக்கும் கோளா றுகளுக்கும் …

  23. Started by Nellaiyan,

    DRINK WATER ON EMPTY STOMACH It is popular in Japan today to drink water immediately after waking up every morning. Furthermore, scientific tests have proven its value. We publish below a description of use of water for our readers. For old and serious diseases as well as modern illnesses the water treatment had been found successful by a Japanese medical society as a 100% cure for the following diseases: Headache, body ache, heart system, arthritis, fast heart beat, epilepsy, excess fatness, bronchitis asthma, TB, meningitis, kidney and urine diseases, vomiting, gastritis, diarrhea, piles, diabetes, constipation, all eye diseases, womb, cancer and menstrual …

  24. “இந்த டொக்டர்மாரோடை பெரும் தொல்லை. நார்ப்பொருளைச் சாப்பிடு சாப்பிடு எண்டு எங்கை பாத்தாலும் சொல்லிக் கொண்டிருக்கினம்.” சொன்னவர் ஒரு பெரியவர். வயதில் பெரியவர் அல்ல, எடையில் பெரீயவர். ‘நாங்கள் என்ன பொச்சு நாரையே தின்னுறது. பிரஸர் எண்டு போனாலும் சொல்லுகினம், முழங்கால்;வலி என்றாலும் சொல்லுகினம், வியர்க்கிறது எண்டாலும் நாரைத் தின் என்று சொல்லுகினம். இதென்ன இந்த நார்ப் பொருள்’ பொரிஞ்சு சொல்லாத குறையாக மன அவலத்தைக் கொட்டித் தள்ளினார். அண்மையில் (மார்ச் 2013) வெளியான ஒரு ஆய்வு உணவில் அதிகம் நார்ப்பொருளைச் சேர்;ப்பவர்களுக்கு பக்கவாதம் வருவதுற்கான சாத்தியம் குறைவு என்கிறது. இது ஏற்கனவே தெரிந்த விடயம் என நீங்கள் சொல்லக் கூடும். ஆனால் இந்த ஆய்வின் பிரகாரம் ஒருவர் தனது உணவில் த…

  25. கடந்த ஒரு மாதமாக இந்த வகை ஸ்ரோக் வந்த எனது தாயாரோடு நேரத்தை செலவிட்டுக் கொண்டு இருக்கிறேன்...இதனால் ஏற்படப் போகும் தாக்கத்திலிருந்து மீளுவதும் கடினமாக போகிறது.....வைத்தியர்களைப் பொறுத்தரை (thalamus.) என்ற வகை ஸ்ரோக் வந்தவர்கள் உயிர் பிழைப்பது அபூர்வம் என்று சொல்கிறார்கள்..எந்த நிமிடத்திலும் என்னவும் ஏற்படாலம்...ஏற்கனவே நீரளிவு,மற்றும் கிட்னிபெயிலிராகி டயலஸ் போன்றவை நடந்து கொண்டு கொண்டு இருப்பதனால் உயிர் பிழைப்பது கடினம் என்றே சொல்கிறர்கள்..இதனைப் பற்றிய மேலதிக தகவல்கள் அறிய ஆவலாய் உள்ளேன்...நெடுக் அண்ணா மற்றும் யாராவது அறியத் தந்தால் உதவியாக இருக்கும்....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.