நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
வாழைப்பூ இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு விதமான அழகையும் மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது. இந்த இதழில் ஆயுளைப் பெருக்கும் வாழைப்பூ பற்றி தெரிந்துகொள்வோம். நம் முன்னோர்கள் வாழையை பெண் தெய்வமாக வழிபட்டனர். மணவிழா, மங்கள விழாக்களில் வாழை முக்கிய இடம்பெற்றிருக்கும். வாழையின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டுள்ளன. வாழையிலையில் சாப்பிடும் போது ஆரோக்கியத்தைத் தருவதுடன் ஆயுளையும் அதிகரிக்கச் செய்கிறது. குலை வாழையை தலைமகனோடு ஒப்பிடுகின்றனர். வாழைப்பூ எந்த அளவுக்கு நமக்குப் பயன்படுகிறது என்பதற்கு இதுவே மிசச் சிறந்த சான்று. வாழைப்பூ மூலஇரத்தம் மாபிரமி வெட்டைபித்தம் கோழைவயிற் றுக்கடு…
-
- 10 replies
- 14k views
-
-
பார்லி அரிசியின் சில மருத்துவ குணங்கள்! ஊட்டச்சத்து மிகுந்த பார்லி, உடல் வலிமைக்குப் பெரிதும் உதவுகிறது. சிறுநீர்ப் பையில் அழற்சி ஏற்பட்டால்,பார்லி அரிசியில் கஞ்சி அரை லிட்டர் எடுத்துக்கொண்டு, அத்துடன் கருவேலம் பிசினையும் (1 அவுன்ஸ்) கலந்து உட்கொண்டு வந்தால் குணம் தெரியும். பார்லி அரிசியின் மாவுப் பகுதியில் நீரில் கரையக் கூடியதும், பிசுபிசுப்புத் தன்மை உடையதுமான ‘டெக்ஸ்ட்ரின்’என்னும் சத்துப் பொருளும், சர்க்கரையும் அடங்கியுள்ளன. கஞ்சி தயார் செய்ய, பார்லி அரிசியைக் கொதிக்க வைக்கும்போது, இந்தச் சத்துக்கள் கரைந்து, ஊட்டச்சத்தாக மாறிவிடுகின்றன. பார்லி அரிசி ஒரு அவுன்ஸ் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சுங்கள்! தண்ணீர் பாதியாகச் சுண்டியவுடன், அந்தக் க…
-
- 0 replies
- 13.9k views
-
-
நகம் என்றால் கடிப்பதற்கும், ராவி விடுவதற்கும், பாலீஷ் போட்டுக் கொள்ளவும்தான் என்று சிலர் நினைக்கலாம். உண்மையில் அது அனேக வியப்பிற்குரிய விஷயங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். நகத்தினுடைய நிறம், வடிவம், நயம் இவற்றை வைத்து நம் ஆரோக்கியத்தையே கணிக்க முடியும் என்கிறார்கள். அனுபவம் உள்ள மருத்துவர்கள் நகத்தைப் பார்த்தே 'இன்ன நோய்' என்று சொல்லிவிடுவார்கள். நுண்மையான, நரம்பு கூட்டமைப்பிலான நமது விரல் நுனிகளை ஊறுபடாத வண்ணம் காப்பது நகங்களே. நாம் நுட்பமான பொருட்களை கையாளவும், நமது தொடு உணர்வுக்கும் நகம் பெரிதும் உதவுகிறது. நம் உடம்பிலுள்ள ரோமத்தில் போலவே நகத்திலும், 'புரோட்டீன் _ கெராட்டீன்' என்ற ரசாயனப் பொருள் காணப்படுகிறது. நகங்கள்…
-
- 17 replies
- 13.9k views
-
-
கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் பெரும் பங்கு வகிக்கின்றது. அத்தகைய புரோட்டீன்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் அசைவ உணவு பிரியர்கள் என்றால், இறைச்சி, முட்டை போன்றவை உள்ளது. ஆனால் சைவ உணவு பிரியர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான். அதுபோல் ஒரு வகை தான் கொண்டைக்கடலை. இது பலருக்கு மிகவும் விருப்பமான ஒரு உணவுப் பொருள். பொதுவாக இதனை வைத்து பூரி மற்றும் சப்பாத்திக்கு சன்னா செய்து சாப்பிடுவோம். ஆனால் இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. கொண்டைக்கடலை சுண்டல் கடலையை 6 8 மணி நேரம் ஊற வைத்து, மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். கடாய் எண்ணெயில் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய்…
-
- 13 replies
- 13.8k views
-
-
உயிர் வளர்த்தேனே 01: உணவைச் சேமித்த முதல் இனம் ‘உடலை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே’ என்றார் திருமூலர். நம் உயிரை உடலில் நிலைக்கச் செய்வதற்காக உயிரை, வளர்ப்போம் என்கிறார் அவர். மிஞ்சிப் போனால் 120 ஆண்டுகள்வரை உயிரை வளர்த்துச் செல்ல முடியும். அதற்குப் பின்னர் எந்தக் கொம்பனின் உயிரும் உடலில் நிலைத்திருக்க முடியாது. அது சரி, உயிர் எப்படி வளரும்…? பிறக்கும்போது இரண்டு கிலோவாக இருக்கும் உடலை, நான்கைந்து முழுக் கோழிகளைத் தின்று, கன்வேயரில் வைத்துத் தள்ளுவதைப்போலக் கூடைக் கணக்காக முட்டைகளை வாய்க்குள் தள்ளி, மென்று தின்றால் தாடை வலித்துப் போகும். அப்புறம் அதை உணவுக் குழாயில்…
-
- 52 replies
- 13.8k views
- 1 follower
-
-
தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம். இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறதுபரோட்டாகடை, அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே . பரோட்டாவின் கதை என்ன தெரியுமா பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால்,மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது. பரோ…
-
- 9 replies
- 13.8k views
-
-
சக்கரை வியாதிக்கு பெண்ணின் விரலை சாப்பிடுங்கள்...மேலும் படிக்க லேடிஸ் பிங்கர்(பெண்ணின் விரல்) எனப்படும் வெண்டிக்காய் சக்கரை வியாதியை சில மாதங்களில் கட்டுப்படுத்தியுள்ளது... இன்சுலின் பாவித்தவரும் நிறுத்தியுள்ளார்... எமது மக்களில் பலர் அவதிப்படும் இந் நோயை இலகுவாக குணமடைய.. வெண்டிக்காயை நறுக்கி நீரில் ஊறவைத்து காலையில் அந்த நீரைப்பருக வேண்டும்.. மேலும் விபரங்களுக்கு http://equalityco.blogspot.com
-
- 36 replies
- 13.7k views
-
-
நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கொய்யா. கொய்யாக்கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொய்யா முக்கனியான மா, பலா, வாழை இவற்றிற்கு இணையாக வர்ணிக்கப்படும் பழமாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்ட பழம் இது. கொய்யா கோடைக்காலங்களில் தான் அபரிமிதமாக விளையும். தற்போது உயிரி தொழில் நுட்ப முறையில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. கொய்யாவில் பலவகைகள் உள்ளன. தற்போது விற்பனைக்கு வரும் பழங்களில் உள் சதைப்பகுதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ளன. ஒரு சில வகை கொய்யாவின் சதைப்பகுதி ரோஸ் நிறத்தில் காணப்படும். இவை அனைத்தின் மருத்துவப் பயனும் ஒன்றுதான். கொ…
-
- 18 replies
- 13.4k views
-
-
புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டாலே மறைந்து நின்று ஒரு சிகரெட் பற்ற வைப்பார்கள். புகை பிடிப்பது கேடு என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக நண்பர்களை இழப்பானேன். எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று யோசித்தேன். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். பிறருக்கு உதவும் சந்தோசம் கிடைக்கிறது. தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும். …
-
- 16 replies
- 13.4k views
-
-
இன்றைய இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில், உடலுழைப்பு என்பது அனைவருக்கும் குறைந்துவிட்டது. நம் உணவு முறையும் மாறிவிட்டது. இயற்கை உணவு வகைகள், நம்மை விட்டு ரொம்பவே விலகிவிட்டன. செயற்கை உணவு வகைகளும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளும் நம்மை ஆக்கிரமித்துவிட்டன. இதனால், இளமையிலேயே உடற்பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் என்று நோய்களின் வரிசை நீள்கிறது. இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால், உடற்பயிற்சி செய்வதுதான் சிறந்த வழி. உடலுக்கு நன்மை செய்யும் உடற்பயிற்சிகளில், நடைப்பயிற்சி மிகவும் முக்கியமானது; சிரமமில்லாதது; எல்லோருக்கும் ஏற்றது. உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் முழுமைக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கொடுக்க வேண்டுமானால், அது நடைப்பயிற்சியால் மட்டுமே…
-
- 6 replies
- 13.4k views
-
-
பப்பாளியின் சிறப்புக்கள் பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில்தான் உள்ளது 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்து கொண்டால் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழலாம். பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ,போலிக்அமிலம்,பொட்டசியம்,காப
-
- 22 replies
- 13.3k views
-
-
உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது. உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும். துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலு…
-
- 1 reply
- 13.3k views
-
-
நார் சத்து (fiber) என்றால் என்ன அதன் முக்கியத்துவம் பற்றிய முன்னைய பதிவுகள் : 1. http://www.yarl.com/forum3/index.php?showtopic=22811 2. http://www.yarl.com/forum3/index.php?showtopic=22301 மேலே சொன்ன பதிவுகளில் சொன்னது போல் நார்ச்சத்து மல போக்கை, சீரக்குவதுடன், குடல், குதப்புற்று நோய் (colorectal cancer) ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள், உணவில் நார் சத்தின் அளவை அதிகரித்தால், முதல் முறை பாரிசவாதம் (first-time stroke) ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. கனேடிய சுகாதார திணைக்களம் (Health Canada) 28 - 38 கிராம் நார் சத்தை நாளாந்தம் உண்ண வேண்டும் என பரிந்துரைக்கிறது. ஆனால் சராசரியாக கனேடிய மக்கள் 14 …
-
- 4 replies
- 13.2k views
-
-
உடலை அழகாக வைத்துக்கொள்ள யாருக்குத்தான் ஆசை இல்லை. ஆனால் இந்தப் பாழாய்ப்போன மனம் இருக்கிறதே அதுதான் எல்லோருக்கும் பெரிய பிரச்சனை. பல இடங்களில் இந்த எழு நாள் டயட் ஓடித் திரிய சரி எல்லாம் செய்து பாத்தாச்சு இதை மட்டும் ஏன் விடுவான் என எண்ணி செய்வதென முடிவெடுத்தேன். முதல் நாள் தனியப் பழங்கள். பழங்கள் உண்பது என்பது எனக்கு பிடிக்கவே பிடிக்காத விடயம். அதுவும் குளிர் காலத்தில. சரி தொடங்கியாச்சு என்று முதல் நாள் காலையில வெறும் வயிற்றில் உண்டது வாழைப்பழம். காலையில் எழு மணிக்கு காலை உணவை தொடர்ந்து உண்டுவந்த எனக்கு வாழைப்பழம் ஒரு மணிநேரம் கூடத் தாங்கவில்லை. அடுத்தது எதை உண்ணலாம் என்று எண்ணிவிட்டு தோடம்பழத்தை எடுத்து உரித்தால் அது கொஞ்சம் புளி. வேறு வழியில்லை என அதை மருந்து உண்பத…
-
- 128 replies
- 12.9k views
-
-
பித்தவெடிப்பு, பாதத்தின் தோல் உரிதல் போன்றவற்றிக்கு..... எலுமிச்சம் பழத்தின் பலன்களில் ஒன்று...... ''சித்த வைத்தியத் திலகம் '' வைத்தியர் C.P. தண்டபாணி ற்.ஈ.M.Pயின் மருத்துவக் குறிப்பிலிருந்து. கால் பாதத்தில் வெடிப்புக்கள் இருந்தாலும், பாதம் சொரசொரப்பாக இருந்தாலும், பாதம் தோல் உரிந்து இருந்தாலும் புதிய எலுமிச்சை பழத்தை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி காலில் ஒவ்வொரு நாளும் தேய்த்துவர வெடிப்புக்கள் நீங்குவதோடு பாதமும் கன்ணாடிபோல் அழகு பெரும். குறிப்பு: பல ''கிறீம்''கள் இப்படியான பிரச்சனைகளை தீர்க்க இருந்தாலும் இது இயற்கை வைத்தியம் என்பதால் உடலுக்குத் தீங்கில்லை. இளங்கவி
-
- 24 replies
- 12.9k views
-
-
இரத்தம் பற்றிய அறிய தகவல்கள்! இரத்தம் பற்றிய அறிய தகவல்கள்! 1. இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது? ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில்ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள். 2. ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள் தொகைக்கு ஏறக்குறைய இணையான அள…
-
- 1 reply
- 12.7k views
-
-
[size=5]ஆளை மாற்றும் ஆளிவிதை (Flax Seed) [/size] [size=5]இதன் பூர்வீகம் மத்தியகிழக்கு நாடுகள் என்றும் அங்கிருந்து இந்தியாவிற்கு பரவியது என்றும் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் ஆளிவிதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணை சாயங்களுக்கு மேல்பூசி உலரவைக்கப்படுவதற்கும், உயர்ரக கடதாசி, லினன் போன்ற துணிவகைகள் உருவாக்குவதற்கும பயன்படுத்தப்பட்டது. [/size] [size=5]இந்த ஆளிவிதை பற்றி ஊரில் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும், ஆனால் இங்கு FLAX SEED என்றால் தெரியாதவர்கள் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு கடந்த பலவருடங்களாக இதன் தேவை அதிகரித்து விட்டது. அதற்கு காரணம் எமது உணவுப் பழக்கவழக்கமும் அதனால் வரும் நோய்களுமே. சரி இப்போது அதன் பலனையும், பலத்தையும் எப்படி ப…
-
- 14 replies
- 12.5k views
-
-
கொய்யா பழத்தில் முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல் தொண்டை மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. அடங்கியுள்ள சத்துக்கள் கொலஸ்ட்ரால் கிடையாது, சோடியம் – 3 மிகி, பொட்டாசியம் 417 மிகி, கார்போஹைட்ரேட் 14 கி, புரோட்டின் 2.6 கி, விட்டமின் ஏ 12 சதவீதம், கால்வியம், விட்டமின் D, விட்டமின் B12 , விட்டமின் C, இரும்புச்சத்து, விட்டமின் B6, மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. பயன்கள் கொய்யா பழத்தை நன்றாக கழுவிய பிறகு, பற்களால் கடித்து நன்கு மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும். வேறு எந்தப் பழத்திலும் இல்லாத விட்டமின் சி என்ற உயிர்ச்சத்து, இப…
-
- 1 reply
- 12.4k views
-
-
இளைப்பது சுலபம் வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி? அனுபவத் தொடர் - 1 -பா.ராகவன் இந்த லட்டு, பூமி, அறுபது வாட்ஸ் பல்பு இதெல்லாம் எப்படித் தொடக்கத்தில் இருந்தே குண்டாகப் படைக்கப்பட்டதோ, அதேபோல் ஆண்டவன் என்னையும் உருட்டிப் படைத்தான். நான் பிறந்ததும், பிழைப்பது சிரமம் என்று வைத்திய சிரோன்மணி என் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், கணிப்பு களைக் கதறியோடச் செய்கிற பிறப்பல்லவா நம்முடையது? பிழைத்துத் தொலைத்தேன். இந்த சந்தோஷத்தில், என் அம்மாவானவர் என்னைப் போஷாக்காக வளர்க்கிறேன் பேர்வழி என்று புஷ்டியாக வளர்க்க ஆரம்பித்தார். நான் உண்ணப் பிறந்தவன் என்பது அவர் முடிவு. அது நல்ல கணிப்பு என்பதால் பொய…
-
- 36 replies
- 12.4k views
-
-
இன்றைய வாழ்க்கை முறை மிகவும் மாறித்தான் போயிருக்கிறது. பழமை மாறி புதுமை அந்த இடத்தை பிடித்துவிட்டது கூடவே நோயும். பழமை நமது உணவுமுறையும் வாழ்க்கைமுறையும் அறிவியல் நோக்கில் இருந்தன அதை நாம் மறந்து விட்டோம் அதனால் நோய்கள் நம்மை பின்தொடர விட்டுவிட்டோம் . முன்பு குளிக்கும் முறைகூட அறிவியல் அடிப்படையில் இருந்து நோயில் இருந்து காத்தத்து இன்று குளியலே நோயை உண்டாக்குவதாக இருக்கிறது . இன்றைய வழலைக்கட்டி (சோப்பு )வெறுமனே காஸ்டிக்சோடா போட்டு குளிப்பதால் உடலில் இருந்து இயற்கையாக சுரக்கும் எண்ணத் தன்மை முழுவதும் நீங்கி எலும்புகள் கலகலத்து போய் நோயில் மரித்து போகிறனர் . இந்நிலை கூடாதென என எண்ணிய நமது பழம் பெரும் சித்த மருத்துவ அறிவர்…
-
- 1 reply
- 12.2k views
-
-
சென்ற வாரத்தில் புதன்கிழமை அன்று காலை எழுந்தவுடன் முடிதிருத்தி்க் கொள்ளும் பொருட்டு சலூனுக்கு சென்றேன். பல வருடங்களாக வழக்கமாக முடி திருத்தும் நண்பர் அவர்., காலை 7.00 மணி ஆதலால் கூட்டம் ஏதும் இல்லை. முடிதிருத்தும் பணி தொடங்கியது. சுமார் இருபது நிமிடத்தில் பணி முடியும் பொழுது, வழக்கமான செயலாக, கையை உயர்த்தச் சொல்லி அக்குள் பகுதியை சுத்தப்படுத்த தொடங்கினார். அப்போது அவர் கேட்ட கேள்வி. ”உங்ககிட்ட கேட்கவேண்டும் என நினைத்தேன், குளித்து விட்டு வந்தீர்களா?” என்றார். ”இல்லை, எழுந்தவுடன் வந்துவிட்டேன்., ஏன்?” என்றேன் ”பலபேருக்கு கையை உயர்த்தினாலே துர்நாற்றம் வீசும், ’கப்’அடிக்கும், வீச்சத்துடன், முடியில் முடிச்சு,முடிச்சாக அழுக்கு பிரிக்க முடியாதபடி ஒட்டி கிடக்…
-
- 23 replies
- 12k views
-
-
எலும்பு அடர்த்தித் தேய்வு அதாவது எலும்பில் உள்ள மினரல் அடர்த்தி குறைந்து எலும்புகள் பலவீனமடைந்து சிறு விபத்தானாலும் எலும்பு முறிவு ஏற்படும் சாத்தியங்கள் அதிகரிப்பதே எலும்பு தேய்மானம் எனும் ஆஸ்டியோபொரோசிஸ் எனும் நோய். நோயற்றவர்களுடைய எலும்பின் உட்பகுதி தேன் நிறைந்த தேன் கூடு போலவும், நோய் உள்ளவர்களின் எலும்பின் உட்பகுதி தேன் இல்லாத தேன் கூடு போலவும் தோற்றமளிக்கும். உண்மையிலே இது ஒரு நோயல்ல சக்தி குறைபாடே. பலவீனமடையும் எலும்புகள் ஆண்களில் வயதானவர்களையும், பெண்களுக்கு மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலத்திலும் எலும்பு தேய்மான நோய் பாதிக்கிறது. பொதுவாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகளில் மூவரில் ஒருவருக்கு எலும்புத் தேய்மான நோய் இருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகின்றது. …
-
- 4 replies
- 11.9k views
-
-
வாழைப்பழம் வாழைப்பழம் சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதன் முதலாக கடித்து சாப்பிடும் பழம் இந்த வாழைப்பழமாகத்தான் இருக்கும். தமிழர்கள் வகுத்த முக்கனிகளுள் மூன்றாவது கனி இது. எந்த சுபவிழாக்களாக இருந்தாலும், அங்கே முதலிடம் பிடிப்பது வாழைப்பழம்தான். வாழையில் பல வகைகள் இருந்தாலும், அதன் அனைத்து பாகங்களுமே நமக்கு நிறைய பயன்களை அள்ளித் தருகின்றன. ஹோர்மோன்களை ஊக்குவிக்கும் வாழைப்பழம் [வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது…
-
- 1 reply
- 11.8k views
-
-
மனிதர்களுக்கு தோல் பளபளப்பு உபயத்தை அளிப்பது செல்கள்தான். வறட்சியான செல்கள்தான் தோலின் சொரசொரப்புக்கும், பளபளபின்மைக்கும் காரணமாக இருக்கின்றது. வெண்மையாக்கும் சிகிச்சைக்கு (Whitening treatment) அடுத்தபடியாக, இளம் பெண்களின் மனங்கவர்ந்த சிகிச்சை என்னும் அந்தஸ்தைப் பெற்றிருப்பது ஸ்கின் - பாலிஷ் சிகிச்சை தான். இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்தச் சிசிச்சை அறிமுகமாயிருந்தாலும், இப்போதுதான் இளம் பெண்களிடையே உச்சக் கட்ட கவனத்தைப் பெற்றிருக்கிறது. இந்தச் சிகிச்சை புகழ்பெற்ற மருத்துவமனைகளிலும் சில குறிப்பிட்ட அழகு நிலையங்களிலும் செய்யப்படுகிறது. வயது அதிகமாக அதிகமாக சருமத்தில் சுருக்கம், பொலிவிழப்பு ஏற்படுகிறது. ஸ்கின் - பாலிஷ் செய்வதன் மூலம் சருமத்திற்குப் பொலிவும், புத்த…
-
- 56 replies
- 11.7k views
-
-
கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம். வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் வெந்தயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை மற்றும் உடலில் கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது. …
-
- 16 replies
- 11.6k views
-