யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
நம்ம கறுப்பியார் நமது நட்பு வட்டத்தின் மூலம் தொடர்பு கொண்டு தனக்கு யாழில் செய்திகளை பதிவிட்டு போஸ்ட் செய்ய முடியவில்லை என்று தெரிவிக்கிறார். திண்ணையில் எழுத முடிகிறதாம். மோகன் அண்ணாவோடு தன்னை தடை செய்திருக்கா என்று வினவியதில் அப்படி எதுவும் இல்லை என்று மோகன் அண்ணாவும் அறியத் தந்திருக்கிறாராம். கறுப்பி பாவித்த பயர் பொக்ஸ் இணைய உலாவி தவிர்ந்த ஏனையவற்றினூடும் யாழில் பதிவிட முனைந்து தோல்வி கண்டிருக்கிறார். கணணியையும் மாற்றி முயற்சி செய்திருக்கிறார்... அதுவும் தோல்வியில் முடிந்துள்ளது. இப்போ யாழ் வர முடிந்தும் பதிவிட முடியவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார். யாழில் அவரின் கணக்கில் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்து அவர் பதிவிடுவதில் தவறுதல்கள் நடந்திருக்க வாய்ப்பிருக்கா என்பதை …
-
- 30 replies
- 2.2k views
-
-
யாழ் திண்ணையில் அரட்டை அடிக்கும்.. குடும்ப ஆண்களே.. பெண்களே.. இளசுகளே.. தற்போது உங்கள் அரட்டைகளை யாழ் களத்தில் அங்கத்துவம் பெறாதவர்களும் பார்க்க முடிகிறது. அந்த வகையில்.. உங்கள் மனைவியர்.. கணவன்மார்.. காதலிகள்.. காதலன்கள்.. இவற்றை கண்ணுற்றுவிட்டு உங்களை போட்டு சாத்து சாத்தென்று சாத்தினால்.. அதற்கு யாழை குறை சொல்லக் கூடாது. நன்றி. வணக்கம்.
-
- 26 replies
- 2.1k views
-
-
புதிய யாழ் களம், சில சந்தேகங்கள் . ஒரு வீட்டிலிருந்து , இன்னொரு வீட்டிற்கு இடம் மாறினால் ..... சமையலறைப் பொருட்களிலிருந்து ..... சாமியறைப் பொருட்கள் வரை எங்கு என்ன இருக்கின்றது என்று தெரியாமல் ஆரம்பத்தில் சில நாட்கள் மாறி , மாறி தேடிக்கொண்டே இருப்பது வழமை . அதே போல் நிலைமை இப்போ ..... யாழ்களத்தில் ஏற்பட்ட புதிய மாற்றத்தால் ஏற்பட்டுள்ளது . அந்த சந்தேகங்களை , நீங்கள் தீர்த்து வைப்பீர்கள் என்று நம்புகின்றேன். யாழ்களத்தின் ஒரு தலைப்பின் செய்தியை வாசிக்க முற்படும் போது ....... அதற்கு பதில் எழுதியவர்கள் பத்து உறுப்பினர் என்றால் எல்லோரின் கருத்துக்களும் கணனியில் தெரியவில்லை . மாறாக Threads என்பதின் கீழ் அவரின் பெயரும் , அவ…
-
- 129 replies
- 11.8k views
- 1 follower
-
-
நண்பர்களிற்கு வணக்கம் சனல் 4இன் sri lanka's killing fields ஆவணத்தை நான் இங்கு வசிக்கின்ற நாட்டின் மொழியில் subtitle செய்து வெளியிடலாம் என்று உள்ளேன். பிரச்சனை: நான் subtitle செய்வதற்கு எனக்கு ஆங்கிலத்தில் இந்த ஆவணத்தின் வடிவம் தேவை. இந்த ஆவணத்தை நான் ஒவ்வொரு வசனமாக எழுதி பின் மொழி பெயர்ப்பது சற்று காலம் எடுக்கும். இதனை குறைப்பதற்கு உங்களின் உதவியை நாடி நிற்கின்றேன். கேள்வி: இந்த சனல் 4இன் ஆவணத்தின் ஆங்கில அல்லது யேர்மன் மொழி subtitle எங்காவது பெற முடியுமா?
-
- 25 replies
- 2k views
-
-
யாழுக்கு என்ன நடக்கிறது ? கடந்த சில தினங்களாக யாழ் எனக்கு வேலை செய்யவில்லை. யாழுக்கான தொடர்பில் அழுத்தும்போது வேறெங்கோ போகிறது. அப்படியொரு தளமே இல்லை என்று சொல்கிறது. எனக்கு மட்டும்தான் இந்தப்பிரச்சினையா அல்லது வேறு யாருக்காவது இப்பிரச்சினை இருக்கிறதா??
-
- 33 replies
- 2.7k views
-
-
..... யான் பெறா இன்பம், வையகமும் பெறாமால் ..... என்று தயவு செய்து திட்டித் தொலைக்காதீர்கள்! இரண்டு வருடங்களுக்கு முன் யாழில் மோகன் இட்ட இத்திரியை பார்க்க நேர்ந்தது. ... உண்மைதான் ஒருவனின் பணத்தில் எல்லாவித கூத்துக்களும்(நான் உட்பட) ... தேவைதானா???? அதற்கு மேல் தமிழில், தமிழில், தமிழில் எழுதி ... என்னத்தை சாதித்தோம்? மேலும், நாம் இங்கு கொட்டும் சில தகவல்கள் ... எம் இனத்தின் களைகளுக்கும், சிங்களத்துக்கும் தீனி தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்கிறது? ..... ஆகவே, என் கருத்து ... யாழை நிரந்தரமாக மூடுவதினால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதே. இக்களம் மூலம் நல்ல நண்பர்களையும் தேடினோம், நிரந்தர எதிரிகளையும் தேடினோம். கிடைத்த நண்பர்களை தனிப்பட்ட ரீதியி…
-
- 109 replies
- 8.5k views
-
-
என்னைய எங்கையுமே கமெண்ட் எழுதவிடாம தடுத்த, யாழுக்கு நன்றி!!
-
- 4 replies
- 1.3k views
-
-
-
எனக்கு இப்பவெல்லாம் யாழை பார்ப்பது வலும் கஸ்டமாய் உள்ளது...வெகுவாக கஸ்டப்பட்டே யாழை திறக்க முடிகிறது...யாரோ நான் யாழுக்கு வரக் கூடாது என்பதற்காக சதி செய்கிறார்கள் என நினைக்கிறேன்
-
- 18 replies
- 1.1k views
-
-
ஆனந்தசங்கரி சரி இல்லை...டக்ளஸ் சரி இல்லை ..கருணா சரி இல்லை...பிள்ளையான் சரி இல்லை...கே.பி..சரி இல்லை... உருத்திரகுமாரன் சரி இல்லை... நெடியவன் சரி இல்லை!!..எங்களை .கொல்ல உதவி செய்ததால் சீனா, இந்தியா ,பாகிஸ்தான் ...அப்புறம்..புலியை தடை செய்ததால் ..அமெரிக்கா, யுகே..அவுஸ்...கனடா...ஐரோப்பா... யாருமே சரி இல்ல... அதுக்கப்புறம் ...ஐ நா ..சரி இல்ல...அதோட தலைவர் பான்கிமூன் சரி இல்ல...அதுக்கு மேலா முள்ளிவாய்க்கால் வரை மக்களை கூட்டி போனதால(?) ..பிரபாகரனும் சரி இல்ல... அப்போ யார்தான் சரியா இருக்கும் நம்ம நிலமைக்கு?
-
- 10 replies
- 1.4k views
-
-
யாழில் உறுப்பினர்களிடையே ஏதாவது பாகு பாடு காட்டுமா நிர்வாகம்?
-
- 41 replies
- 3k views
- 1 follower
-
-
என்னால் VIDEO இணைக்க முடியவில்லை எப்படி இணைப்பது யாராவது தயவு செய்து உதவுங்கள்.
-
- 2 replies
- 802 views
-
-
எந்த ஆதார அடிப்படைகளும் இன்றி செய்திகள் எழுதப்படுவதுடன்.. தமிழகத்தில் அண்ணன் சீமானின் எழுச்சியை இட்டு அச்சப்படும் சிங்கள மற்றும் இந்திய ஆதிக்க சக்திகளுக்கு துணை போகும் வகையிலும் சீமானின் தனிப்பட்ட வாழ்க்கையை சகட்டு மேனிக்கு விமர்சித்தும் இன்று செய்திகள் ஆக்கப்படுகின்றன. அதுவும் ஈழத்தமிழர்கள் நடத்தும் சில ஊடகங்களும் அண்ணன் சீமான் தேசிய தலைவருக்கு எதிராக செயற்பட முனைவது போலவும் எதிரிகளுக்கு வக்காளத்து வாங்கி கற்பனைகளை எழுதி வருகின்றன. தமிழ் சின் என் என்.. போன்ற இணைய ஊடகங்கள்.. இப்படியான எதிரிக்கு துணை போகும் பிரச்சாரங்களை அடிக்கடி எடுத்து வரும் நிலையில்.. அவற்றின் செய்திகளை இணைப்பவர்கள் தயவுசெய்து அவதானமாக இருந்து செயற்படுங்கள். அண்ணன் சீமானின் தனிப்பட்ட நலன…
-
- 15 replies
- 1.9k views
-
-
முள்ளிவாய்க்களில் வீரமரணம் அடைந்த தேசியத்தலைவருக்கும் அவரோடு தோழ் நின்ற துணைத்தளபதி தேசத்தின் காவலன் பொட்டு அம்மானுக்கும் கேணல் சூசை அண்ணாவுக்குமாக சேர்ந்து வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு யாழில் நினைவு கூறவும் அதை யாழில் இனைக்க யாழ்களம் அனுமதிக்க்குமா? அனுமதிக்குமாயின் வேறு கேள்வி யாழிழில்டம் இல்லை . மறுக்குமாயின் பல கேள்விகள் யாழ்கள நிர்வாகத்திடமும். மட்டுநிறுத்தினரிடமும் குறிப்பாக நிழலி போற ஜதார்த்தவாதிகளிடம் கேக்கலாமா?
-
- 7 replies
- 1.1k views
-
-
யாழ் இணயத்தள நிர்வாகிகளிடம் ஓர் வேண்டுகோள். மே 18 ம் திகதிக்காக ஓர் உணர்ச்சிப்பாடலை இசையமைத்து வைத்திருக்கின்றோம்.அதனை தென்னங்கீற்றில் பதிவு செய்வதற்கு தரவிறக்கம் செய்யமுடியாமல் உள்ளது.எப்படிச்சாத்தியப்படும் என்பதை விளக்குவீர்களா. நன்றி பணிவுடன் தமிழ்ச்சூரியன்.
-
- 2 replies
- 2.5k views
-
-
Podcast Multimedia syndication என்பதை தமிழில் பல்ஊடக பரப்பு எனலாம். இது பல்ஊடக வடிவில் உள்ள தகவல்களை ஒரு கட்டமைப்பான முறையில் பரப்புவது ஆகும். இவற்றின் மூலம் வினைத்திறனான முறையில் நீங்கள் விரும்பும் முக்கியத்துவம் கொடுக்கும் தகவல்களை தாமதம் இன்றி அறிந்து கொள்ள உதவுகிறது. இந்தவகையில் யாழ் இணையத்தில் புதிய பகுதியாக Podcast பகுதியை அறிமுகப்படுத்துகின்றோம். எமது பிரதேசங்களை ஆக்கிரமித்துள்ள சிறீலங்கா அரசு திட்டமிட்ட ரீதியில் தமிழின ஒழிப்பு நடவடிக்கையில் மிகத் தீவிரமாக இருக்கின்ற அதேவேளை இவைபற்றிய செய்திகளை வெளியே செல்லவிடாது தடுப்பதிலும் அல்லது திரிபுபடுத்தி பொய்யான செய்திகளை வெளி உலகிற்கு வழங்கி வருகின்றது. வெளிநாட்டு ஊடகங்களை எடுத்துக்கொண்டால் அவற்றில் சிறீலங்கா பற்ற…
-
- 28 replies
- 8.9k views
-
-
யாழ் இணையம் ஒரு இலட்சம் யூரோ பெறுமதியுடையது எனவும் அது விற்பனைக்காக காத்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
-
- 21 replies
- 3.5k views
- 1 follower
-
-
யான் இங்கு வந்து என் கருத்துகளை சொட்ட வழிமுறை என்ன என்று விழிப்பீர்களா? யான் என்ன கடை செய்தால் என் கருத்துகளையும் நீவீர் எற்பீர்கள் என எனக்கு சிறு ஆலாசனை வழங்க தாழ்மையுடன் வியம்பி நிற்கிறேன்!
-
- 8 replies
- 2.2k views
- 1 follower
-
-
-
அண்ணா ..கவிதை பகுதிக்கு பதில் போடலாமே ..இருக்கு ஏன் ..அண்ணா ...? பிசியா இல்லாட்டி பதில் தாங்கோப்பா ...!
-
- 0 replies
- 1.2k views
-
-
கனடா பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தமிழர்கள் போட்டிடுவது குறித்து ஒரு பதிவை இட்டிருந்தேன். அந்தப் பதிவைக் காணவில்லை. அந்தப் பதிவு நீக்கப்பட்டதாகவும் அறிவிப்பு எதுவும் இல்லை. எனவே யாராவது அந்தக் கருத்தை நீக்கியிருந்தால் தயவு செய்து அதனை அறியப்படுத்துங்கள். ஏனென்றால் என்ன காரணத்திற்காக அந்தப் பதிவு நீக்கப்பட்டது என்பதை அறிந்தால் மீண்டும் அது போன்ற எழுத்துக்களை இணைப்பதை தவிர்த்துக் கொள்ளலாம். அந்தப் பதிவில் யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவும் இல்லை. தயவு செய்து மட்டுநிறுத்துனர்கள் அல்லது அந்தப் பதிவை நீக்கியவர் பதில் தாருங்கள்.
-
- 3 replies
- 1.4k views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மெளனத்தோடும் - ஏக்கத்தோடும் - விடுதலைக்காய் வீழ்ந்தவர் நினைப்போடும் - துயரத்தோடும் - எதிர்காலத்தை எண்ணிய பயத்தோடும் - எங்காவது தெரியாதா நம்பிக்கையின் சிறு கீற்று என்கிற எதிர்பார்ப்போடும்... யாழ் இணையம் தனது 12ஆவது ஆண்டை நிறைவு செய்து கொண்டு - இன்று (30.03.2011) 13ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. "நாமார்க்கும் குடியல்லோம்" என்பதைத் தவிர சொல்வதற்கெதுவும் இல்லை. மண்ணோடும் மக்களோடும் மாவீரர் நினைவோடும் என்றென்றும் இணைந்திருப்போம். நன்றி யாழ் இணைய நிர்வாகம்
-
- 51 replies
- 5.1k views
-
-
இதனை திறக்கமுற்பட்டால் இப்படி வருகிறது இதனை வாசிக்கமுடியாமல் தடைபோடப்பட்டுள்ளது காரணம் என்ன?
-
- 2 replies
- 942 views
-
-
கிறிக்கெட் உலககிண்ண போட்டிகள் ஓசியாக பார்க்க .... இதனை யாரும் முன்னே இணைத்திருக்கலாம் ... சிலசமயம் விடுபட்டிருந்தாலும்... யான் பெற்ற இன்பம்(வேலை இல்லாத நேரத்தில் மட்டும் பார்க்க) .. மற்றவர்களும் அனுபவிக்க ....கீழுள்ள இணைப்புகளின் ஊடு பார்க்கலாம் ... http://crictime.com/ http://cricfire.com/
-
- 5 replies
- 1.2k views
-
-
அன்பான யாழ்கள உறவுகளே எனது நண்பர் ஒருவருக்கு மின்அஞ்சல் மூலம் கிடைக்கப்பெற்ற இந்த தகவலின் நம்பகத்தன்மையைப்பற்றி உங்களில் யாருக்கேனும் தெரிந்திருந்தால் கூற முடியுமா? இந்த தகவல் உண்மையானதா அல்லது போலியானதா என்று??? :unsure: U.S. Department of State U.S. Department of State sent this message to xxxxxxxxxxxxxxxxxxxx Your registered name is included to show this message originated from U.S. Department of State. Congratulations, you've won ! Dear xxxxxxxxxxxxxxxxx Congratulations ! You are among those randomly selected and registered for further consideration in the diversity immigrant program. Selection guarantees that you will receive a United States Per…
-
- 13 replies
- 2.3k views
-