நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
802 topics in this forum
-
தொலைவின் இடைவெளிகளை நிரப்பும் கதைகள் தர்மினி முதன்முதலில் ஆக்காட்டி சஞ்சிகையில் தான் அனோஜன் பாலகிருஷ்ணனின் சிறுகதையொன்றைப் படித்தேன். அதைத் போல சதைகள் சிறுகதைத் தொகுப்பிலுள்ள பத்துக்கதைகளில் அரைவாசிக் கதைகளை சஞ்சிகைகளிலோ இணையத்தளங்களிலோ வாசித்திருந்தேன். ஆனாலும் மீளவுமொரு முறை இத்தொகுப்பில் அவற்றை வாசித்தது சலிப்பைத் தரவில்லை. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு களங்களாகக் கதைகளை நிகழ்த்தியிருக்கின்றன. அவை சுவாரசியத்தை ஏற்படுத்துகின்றன. திரும்பத் திரும்ப உள்நாட்டு யுத்தம் அதைத் தொடர்ந்து வரும் பிரச்சினைகள், புலம்பெயர்ந்து அகதிகளாக வாழும் நாடுகளில் வாழ்வு எனக் கதைகளைப் படித்துப் படித்து இந்தக் கதை எங்கே எப்படிப் போகப்போகிறது? எப்படி முடியப்போகிறத…
-
- 0 replies
- 1.2k views
-
-
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்–1 BookDay18/02/2025 தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்–1 வெகுளியான அந்தப் பறவை கொல்லப்பட்டது ஏன்? – அ. குமரேசன் அரசியல், மதம், சமூகம் என எதை எடுத்துக்கொண்டாலும், அதில் ஆதிக்கம் செலுத்துகிறவர்கள் தங்களுடைய எதிரிகளை விடவும் அஞ்சுகிற ஒன்று இருக்கிறது. அதுதான் புத்தகம்! ஏன் அஞ்சுகிறார்கள் என்றால், புத்தகம் சிந்திக்க வைக்கிறது, கேள்விகள் கேட்கத் தூண்டுகிறது, சரியான கேள்விகளை எழுப்ப வழிகாட்டுகிறது, மக்களிடையே உண்மைகளைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது, மாற்றங்களை நிகழ்த்துவதற்கு சமுதாயத்தைத் தயார்ப்படுத்துகிறது. அடக்குமுறையாளர்களுக்கு இதுவெல்லாம் ஆகாதவையாயிற்றே, ஆகவே அவர்கள் புத்தகங்களை வெறுக்கிறார்கள், முடக்கிவைக்க விரும்புகிறார்கள். அவ்வாறு முடக்கப்பட்ட புத்…
-
-
- 22 replies
- 1.2k views
-
-
“பெயரிடாத நட்சத்திரங்கள்” – சூழும் அரசியல் ரவி மற்றைய நாடுகளின் விடுதலைப் போராட்ட அமைப்புகளில் நிகழ்ந்த இந்த அவலத்தை எத்தனையோ உதிரிப் புத்திஜீவிகள் அந்நேரம் சுட்டிக்காட்டியபோதும் வாழாவிருந்தனர் புலிகள். இந்த நிலைமைகள் இன்று பெண்போராளிகளை இக்கட்டான நிலையில் சமூகத்துள் விட்டிருக்கிறது. பெயரிடாத நட்சத்திரங்கள் கவிதைத் தொகுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து அல்லது இணைக்கப்பட்டு ஆயுதப்போராட்ட களத்தில் இயங்கிய பெண்களின் குரலாக வந்த கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. எனவே இந்தக் கவிஞைகளிலும் புலி அடையாளத்தை மட்டும் வைத்து நோக்கும் எளிமையான போக்கு மறைமுகமான எதிர்ப்பாகவும், கள்ள மௌனமாகவும் பேணப்படுகிறதா என்ற சந்தேகம் எழவே செய்கிறது. இந்த ‘மறுப…
-
- 3 replies
- 1.2k views
-
-
வெண்முரசு நாவல் 16: “குருதிச்சாரல்” ஆசான் ஜெயமோகனின் மகாபாரத காப்பிய மறு ஆக்கமான வெண்முரசு நாவல் வரிசையில் உள்ள 26 நாவல்களில் 16 ஆவது நாவல் “குருதிச்சாரல்” வரை வாசித்துவிட்டேன். குருஷேத்திரப் போருக்கு முன்னரான களநிலையில், போரினை தவிர்ப்பதற்காக கிருஷ்ணன் துரியோதனனிடம் மூன்று முறை செல்லும் தூதுகளையும், தம் மைந்தரையும், கொடிவழியினரையும் போரின் மூலமாக இழக்காமல் பாதுகாக்க முயலும் பாண்டவ, கெளரவ தரப்பு அரசியர்களின் முயற்சிகளையும் “குருதிச்சாரல்” நாவல் விரித்துச் செல்கின்றது. முன்னர் வெறும் பெயர்களாக அறியப்பட்ட அரசியர்களின் - தேவிகை (தருமர்), விஜயை (சகாதேவன்), பிந்துமதி (பீமன்), கரேணுமதி (நகுலன்), பலந்தரை (பீமன்), துச்சளை (கெளரவர்களின் ச…
-
-
- 5 replies
- 1.2k views
-
-
நந்தி கடல் பேசுகிறது நூல் அறிமுக விழா.
-
- 1 reply
- 1.2k views
-
-
லெனின் சின்னத்தம்பி அனோஜன் பாலகிருஷ்ணன் என்னுடைய பல்கலைக்கழக இரசாயன ஆய்வுகூடத்தில் ஆய்வொன்றைச் செய்தோம். சில மூலப்பொருட்களை நீரில் கரைத்துவிட்டு கரைந்த மூலப்பொருட்களின் இயல்பை நீரில் ஆராய்ந்தோம். நீரின் மூலக்கூற்றின் இயல்பை அவை எடுத்தன. ஆனால், எப்போதும் நீரின் இயல்பில் அவற்றால் இருக்கமுடியவில்லை. சில இடங்களில் தங்கள் சுய ரூபத்தைக் காட்டின. உண்மையில் அவை பாவனைதான் செய்கின்றன. ஓர் அந்நிய நாட்டில் புலம்பெயர்த்து வசிக்கக்கூடிய ஒரு தொகுதி மக்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளும் ஏறக்குறைய இவ்வாறான ஒன்றுதான். அங்கே பூர்வீகமாக வாழும் மக்களின் வாழ்க்கை, பண்பாட்டுச் சூழலுக்குள் நுழைந்து அவர்களுடன் கலந்தாலும், அங்கே அவ்வாறு அச்சூழலுக்கு ஏற்ப வாழ்வதாகப் பாவனைதான் செய்ய இயலுமே…
-
- 1 reply
- 1.2k views
-
-
"நஞ்சுண்டகாடு" கருத்துப் பகிர்வும் குணா கவியழகனுடனான கலந்துரையாடலும். காலம்:21-03-2015 மாலை 4:30 மணி. இடம் :07 rue cail 75010 paris. (குளோபல் மொழி பெயர்ப்பு நிலையம்) அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை, நன்றி .
-
- 4 replies
- 1.2k views
-
-
இலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’ குணா கவியழகன் செய்நேர்த்தியில், அரசியலில், சுவாரசியத்தில், கலைமதிப்பில், பாத்திரப்படைப்பில் வெற்றி பெற்று இருக்கிறார்.குணா கவியழகன் செய்நேர்த்தியில், அரசியலில், சுவாரசியத்தில், கலைமதிப்பில், பாத்திரப்படைப்பில் வெற்றி பெற்று இருக்கிறார். பீட்டர் துரைராஜ் பீட்டர் துரைராஜ் இலங்கை எழுத்தாளர் குணா கவியழகன் தமிழுக்கு தந்து இருக்கும் புதிய நாவல் – கர்ப்ப நிலம். ” புலிகளோடு களத்தில் இருந்தவர் குணா கவியழகன் எனவே அவரது வருணனைகள் மிக யதார்த்தமாக இருக்கும் ” என்றார் எழுத்தாளர் முருகவேள். இதனை படித்து முடிக்கையில் இரா.முருகவேள் சொன்னதுதான் என் நினைவுக்கு வ…
-
- 1 reply
- 1.2k views
-
-
இன்று ஒரு புத்தக வெளியீட்டுக்கு நானும் போனேன். மண் மறவா மனிதர்கள் என 17 பேரைப்பற்றி வி.ரி. இளங்கோவன் அவர்கள் குறிப்பிட்டு எழுதி புத்தகமாக வெளியிட்டார். அணிந்துரையை பேராசிரியர் சோ. சந்திரசேகரனும் வாழ்த்துரையை கலாநிதி பண்டிதர் செ. திருநாவுக்கரசுவும் எழுதியிருக்க மேடையில் ஒவ்வொருத்தர் பற்றி ஒவ்வொருத்தர் பேசினர். 1- சர்வதேசரீதியில் புகழ்பெற்ற சண் பற்றி முன்னைநாள் ஈழநாட்டில் வேலைசெய்தவரும் ரிரின் மற்றும் தீபம்தொலைக்காட்சிகளின் செய்தி ஆசிரியருமான கந்தசாமி அவர்களும் 2- டானியல் பற்றி வண்ணை தெய்வம் அவர்களும் 3-பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன் பற்றி நடிகர் கோமாளிகள்புகழ் அப்புக்குட்டி அவர்களும் 4- எல்லோருக்கும்இனிய மனிதர் சிவகுருநாதன் பற்றி அவர…
-
- 1 reply
- 1.2k views
-
-
வரலாற்றின் தன்னிலைகள் ராஜ் கௌதமன் சுமைகளிலெல்லாம் பெருஞ்சுமை அன்னியனைச் சுமப்பது’’ (மெகாலே பிரபு) என்ற வாக்கியம் இங்கே எல்லாச் சாதிகளாலும் அன்னிய சாதிகளாக்கப்பட்ட தலித்துகளுக்கே உரிய வாசகமாகும். தமிழக நெடிய வரலாற்றில் தெலுங்கரின் ஆட்சிக்குப் பின் வந்த ஆங்கிலேயே வணிகமுதலாளிய காலனியாட்சியில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்துச் சாதிய அமைப்பாலும் பிரிட்டனின் வணிக முதலாளியத்தின் ஏகாதிபத்தியக் கொள்ளையாலும் தலித் மக்கள் சுமந்த பெருஞ்சுமையையும் வெற்றுச்சடலங்களாக மடிந்து மக்கிப்போன பேரவலத்தையும் ஜெயமோகனுடைய வெள்ளையானை (எழுத்து 2013) என்னும் வரலாற்று நாவல் காலம், இடம், கருத்தியல் மற்றும் அரசியல் பிரக்ஞையோடு படைத்துக் காட்டுகின்றது. இந்தப் படைப்பு தனியாக இன்றிப் படைப்புக்குள்…
-
- 0 replies
- 1.2k views
-
-
நல்ல பல தகவல்கள் உள்ளது. என்ர தலைமுறை கண்டிபபாக இதை கேட்டறிய வேண்டும். இதன் படி நாம் விழிப்பாக கவனமாக இருத்தல் வேண்டும். கன நாட்களாக இந்த 'நந்திக்கடல் கோட்பாடு' என்ற சொல்லையே கேள்விப்பட்டுள்ளேன். இன்றுதான் அதை முற்றாக அறிந்தேன். இதில் சொல்லப்பட்டுள்ளவற்றின் அடிப்படையில் விழிப்பாக செயல்பட்டு எம்மீதான சித்தாந்த உளவியல் போரை நாம் முறியடிக்க வேண்டும்.
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
"கள்ளத்தோணி" : வரலாற்றை கற்க முனைபவர்களுக்கு ஓர் சிறந்த உசாத்துணைகளில் ஒன்று - பிரகாஷ் சின்னராஜா ஓர் எழுத்தாளர் ஓர் விடயத்தை தகுந்த மூல ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும்பொழுதே அது வலிமையான ஆவணமாக உருமாற்றம் பெறும். சமூக, அரசியல், வரலாற்று விடயங்களை எழுதுபவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டிய மிகமுக்கியமான விடயமாக இது உள்ளது. அவ்வகையில் இலங்கையின் சமூக, அரசியல், வரலாற்றுத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு பேசாப் பொருளை பேசுபொருளாக்கிப் பல விடயங்களை தகுந்த ஆதாரங்களுடன் வெளிக்கொணரும் சரவணன் அவ்வாறான வலுவான நூல்களை எழுதுபவர்களில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றார் என்றால் மிகையல்ல. இவரது படைப்புகளில் "கண்டிக் கலவரம் 1915", "தலித்தின் குறிப்புகள்" வரிசையில் இ…
-
- 2 replies
- 1.2k views
-
-
நவீன இந்திய நாவல்கள்- எனது பார்வை - அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழா 2018 இல், இடம்பெற்ற நாவல் இலக்கிய அரங்கில் சமர்ப்பித்த கட்டுரை - நீலகண்டப்பறவையைத்தேடி - வங்காளம் ஹோமரின் இலியட் மற்றும் ஓடிசியையும் சேர்த்து பார்த்ததை விட பத்து மடங்கு பெரியது மகாபாரதம். காவியங்கள் தோன்றி காலங்கள் சரியாக கணக்கிட முடியாத போதிலும் புராதன இலக்கிய பாரம்பரியத்தின் உரிமையாளர்களைக் கொண்டது அக்காலப் பாரதம், இக்காலத் தென்னாசியா. மிருகங்களை பாத்திரமாக்கிய ஐதீகக் கதைகள் இங்கேயே தோன்றின. அதன் தொடர்ச்சியாகவே உலகெங்கிலும் மிருகங்களைக் கொண்ட ஈசாப் நீதிக்கதைகளில் தொடங்கி மிக்கி மவுஸ் எனும் வால்ட் டிஸ்னியின் கதைகள் உருவாகின. மகாபாரதத்தில் தருமருடன் இ…
-
- 0 replies
- 1.2k views
-
-
பொதுவாக புத்தக வாசிப்பிற்குப் பிறகு அதைப் பற்றிய விமர்சனத்தை இவ்வலைப்பூவில் பதிப்பது வழக்கம். ஆனால் இம்முறை விமர்சனத்தை முன்வைக்காமல், நாவல் பற்றிய எனது அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். பிரபஞ்சம் என்பது ஒரு அதிர்வு. அந்த அதிர்வை வானம் சங்கீதமாக்குகிறது. காற்று மனம் ஆக்குகிறது. ஒளி வண்ணங்களாக ஆக்குகிறது. நீர் சுவைகளாக ஆக்குகிறது. ஜடம் வடிவங்களாக ஆக்குகிறது. விஷ்ணுபுரம் ஒரு கற்பனை நகரம், இதற்குப் பிறப்பும் இறப்பும் உண்டு. மகாவிஷ்ணு ஒருமுறைத் திரும்பிப் படுப்பது ஒரு யுகம் என்று ஐதீகங்கள் குறிப்பிடுகிறது. காலத்தின் சுழற்சியான யுகம் தொடங்கி அழிவது - இந்நாவலின் மூலம். பல விவரிக்க முடியாத கற்பனைகளையும் தத்துவ ஞானங்களையும் உள்ளடக்கிய பிரம்மாண்டம் விஷ்ணுபுரம். …
-
- 4 replies
- 1.2k views
-
-
‘கூண்டு’ (வாசிப்பு மனநிலை விவாதம் -3) October 6, 2012 Comments Off வாசுதேவன் அவர்கள் கார்டன் வைஸ் அவர்களின் ‘கூண்டு’ நூல் குறித்த தனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். வாசுதேவன் அவர்கள் பிரான்சில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்து வருவதோடு, ‘மொழிஆக்கப்’ படைப்பாளியாகவும் தன்னை அடையாளப்படுத்திவருபவர். அவர் பிரஞ்சு இலக்கியங்களையும், பிரான்சின் வராலாற்று நூல்களையும் ஆழமாக கற்றுவருபவர். ஐரோப்பிய அறிவொளிக்கால வரலாற்றில் பிரான்சின் வகிபாகம் குறித்தும் ஆர்வமான தேடல்களை மேற்கொண்டவர். ‘தொலைவில்’எனும் தலைப்பிலான இவரது கவிதைத் தொகுப்பும் வெளிவந்தது. அண்மைக்காலமாக நவீன ஓவியங்கள் வரைவதிலும் ஆர்வம் செலுத்தி வருகின்றார். வாசுதேவன்: நான் இந்த நூல் பற்றி பேசுவதற்கு முன்பாக …
-
- 2 replies
- 1.2k views
-
-
1) காமதேனுவின் முத்தம் இன்று தான் படித்து முடித்தேன் கோவூர் எனும் கிராமத்தில் பெரியவீட்டுகாரர் என அழைக்கப்படும் குடும்பத்தில் கற்பிணிப்பெண்களின் கண்ணில் காம தேனு காட்சிகொடுக்கும் அக்கற்பிணிப்பெண்களுக்கு காமதேனு அம்சம் உள்ள பெண்குழந்தை பிறக்கும் அதன் பின் உள்ள மர்மங்கள் பற்றிய கதை காலசக்கரம் நரசிம்மா எழுதியது 2) ரோலெக்ஸ் வாட்ச் - சரவணன் சந்திரன் 3) மாயப்பெருநிலம் - சென் பாலன் 4) 5 முதலாளிகளின் கதை - ஜோதியி 5) வஜ்ரவியூகம் 6)சாம்ராட் 7) மஹாபாரதத் தேடல் அலெக்ஸாண்டர் இரகசியம் 8)வெண்முரசு ( பாரதப்போரின் துரியோதனன் இறப்பு வரையான பகுதிகள் (கார்கடல்..இருட்கனி.மற்ற பகுதிகளின் பெயர் நினைவில்லை) 9)கௌரவன் ( இன்னும் முடிக்கவி…
-
- 1 reply
- 1.2k views
-
-
அலெக்ஸ் ஹேலி இளம் வயதில் கடலோர காவற்படையில் பணிபுரிந்தார். அதன் பின் பத்திரிகை துறைக்கு வந்தார். எழுத்தாளராக மாறினார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பசிபிக் கடலில் பயணம் செய்யும் ஒரு சரக்கு கப்பலில் அமெரிக்க கடற்கரைப் பாதுகாப்புப் படை சார்பாக சேர்ந்தார். அங்கே இருக்கும் நூலகத்தின் மூலம் ஏற்படும் வாசிப்பு அனுபவம் அவருக்கு எழுத்தார்வத்தைத் தூண்டியது. லண்டனில் ஒரு மியூசியத்திற்கு செல்ல நேர்ந்தது. அங்கே ஒரு பழங்கால எகிப்திய சிலையை கண்டார். அதில் உள்ள எழுத்துக்களை வைத்து அதன் வரலாற்றை ஒரு பிரெஞ்சு அறிஞர் கணிப்பதையும் கண்டார். அப்போதே அவருக்கு தனது முன்னோர்கள் மூலம் வழிவழியாக கடத்தப்பட்டு வரும் சில வார்த்தைகளையும், விசித்திரமான ஒலிகளையும் கொண்டு தமது மூத…
-
- 1 reply
- 1.2k views
-
-
பஞ்சமர் அல்ல, எனது பார்வையில் அது ஒரு வெஞ்சமர்...! பஞ்சமர் அல்ல, அது ஒரு வெஞ்சமர் என்றே சொல்லலாம். சில பகுதிகளை வாசிக்கும்போது தமிழினமா இப்படி என்று எண்ணவைக்கிறது. வன்னியில் வாழ்ந்தமையினாலும், யாழிலே ஒருசில மாதங்களே கழித்ததாலும் இவைபற்றிப் பெரிய அளவில் அறியாதநிலை. ஒடுக்குமுறைகள் குறித்த விடயங்களைக் கேள்விப்பட்டாலும், அவை இந்தப் படைப்பினுள் வருவதுபோன்று கடுமையானதகாவோ கொடுமையானதாகவோ அறியும் வாய்ப்பிருக்கவில்லை. அது ஒருவேளை ஆயுதப்போராட்டம் தொடங்கியதன் விளைவாக அவை அமுங்கியதாகவும் இருக்கலாம். இங்கே மறைந்த எழுத்தாளர் டானியல் அவர்கள் தொடர்பான திரியிலே சில யாழ்க் கள உறவுகளின் விழித்தலை நான் இப்படித்தான் புரிந்துகொள்ள விளைகின்றேன். அதாவது, ஆயுதப்போராட்ட காலத்தில் அமுங்க…
-
- 7 replies
- 1.2k views
- 1 follower
-
-
வாசித்திராத கதைவெளி க.வை. பழனிசாமி கள்ளக் கணக்கு (சிறுகதைகள்) ஆசி கந்தராஜா வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி. சாலை நாகர்கோவில் 629 001 பக். 128 ,ரூ.145 புலம் பெயர்ந்த தமிழர்கள் மொழிமீது ஏற்படுத்துகிற தாக்கமும் நவீன வாழ்க்கைமுறை ஏற்படுத்துகிற தாக்கமும் தமிழைத் தற்கால வாழ்வுக்கானதாக மாற்றுகின்றன. இதனால் தமிழ் மொழி புதுப்பிக்கப்படுவதாகவும் கருதலாம். கந்தராஜாவின் ‘கள்ளக் கணக்கு’ தமிழ் இலக்கியத்தில் நம் வாசகன் அறிந்திராத வாழ்வெளிப் பரப்பை அறிமுகம் செய்கிறது. அவசரம் பற்றிக்கொள்ளாமல் நிதானமாக உரையாடுகிற நவீன கதைசொல்லியாக கந்தராஜாவைப் பார்க்கிறோம். இவர் தேர்வு செய்யும் மனிதர்கள் எப்படி படைப்பின் பாத்திரமாக உருமாறுகிறார்கள் என்பது இவரது ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலக்கியவாதிகள், கவிஞர்களைப் பார்த்தால் எப்போதுமே பிரமிப்பு உண்டு. உடலை வில் போல வளைத்து ஜிம்னாசியம் செய்யும் வீராங்கனைகளைப் பார்ப்பது போல, நம்மால் இது முடியாது என்ற பிரமிப்பு எப்போதும் உண்டு. நாம் அன்றாடம் சாதாரணமாக பார்க்கும் காட்சிகளை இவர்கள் மட்டும் எப்படி வித்தியாசமாக பார்க்கிறார்கள் என்ற வியப்பு ஏற்படும். நாளடைவில், இந்த இலக்கியவாதிகளின் உட்சண்டைகளும், அவர்களின் நடவடிக்கைகளும் முகம் சுளிக்க வைத்து, கவிதைகளை விட்டே காத தூரம் ஓட வைத்தன. யார்தான் இலக்கியவாதி, எதுதான் நல்ல கவிதை என்ற சந்தேகங்கள் படிப்பவனுக்கு, வாசகனுக்கு வரவேண்டும். ஆனால் எழுதுபவர்களுக்குளேயே அந்த சந்தேகமும் சண்டைகளும் வந்தால் ? வாசகன் எப்போதும் பரிதாபத்துக்கு உரியவன். 12 வயதில் தமிழ்வாணன் கதைகளும…
-
- 0 replies
- 1.2k views
-
-
#அவுஸ்திரேலியாவில் ஆயுத எழுத்து # அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஆலோசனைக்கூட்டம் - வாசிப்பு அனுபவப்பகிர்வு . அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டுக்கான (2015 - 2016) முதலாவது ஆலோசனைக்கூட்டமும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 05-12-2015 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணியிலிருந்து இரவு 7.00 மணிவரையில் மெல்பனில் Mulgrave Neighborhood House ( 36 - 42 Mackie Road, Mulgrave - Vic - 3170) மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், புதிய ஆண்டில் சங்கம் மேற்கொள்ளவுள்ள கலை - இலக்கிய நிகழ்வுகள் - மற்றும் இதர மாநில நகரங்களில் நடத்துவதற்கு உத்தேசித்துள்ள நிகழ்வுகள் பற்றிய ஆலோசனைக்கலந்துரையாடல் நடைபெ…
-
- 6 replies
- 1.1k views
-
-
தோற்றுப் போனவர்களின் பாடல் என்கிற தலைப்பில் என்னுடைய புதிய கவிதைத் தொகுதி 02.01.2010 ஞயிறு ஆழி பதிப்பத்தால் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப் படுகிறது. ஏற்கனவே என்னுடைய குறுநாவல்கள் மூன்று அவளது கூரையின்மீது நிலா ஒளிர்கிறது என்கிற பெயரில் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப் பட்டு 31.02.2010 புத்தகக் கண்காட்சியில் விற்ப்பனைக்கு வந்தது. என்னுடைய இந்துசமுத்திர இராணுவ புவியியலும் அரசியலும் மையப் பட்ட நேர்காணல்களும் கட்டுரைகளும் ‘ஈழம் நேற்று இன்று நாழை’ என்கிற தலைப்பில் ஆழிப் பதிப்பகத்தால் 03.01.2010 திங்கள் கிழமை விற்பனைக்கு கொண்டுவரப் படுகிறது. ’தோற்றுப் போனவர்களின் பாடல்’ கவிதைத் தொகுப்பின் முத்ல் பாகத்தில் 2002க்குப் பின்னர் எழுதிய கவிதைகளும் இரண்டாம் …
-
- 1 reply
- 1.1k views
-
-
மயூரனின் கவிதைகள் நல்ல கவிதைகளுக்கான நம்பிக்கை! – ஓர் நூலாய்வு – கனகரவி 47 Views கவிஞர் இணுவையூர் மயூரனின் முதல் படைப்பாக “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்“ கவிதைத் தொகுப்பு படைக்கப்பட்டுள்ளது. இவரின் கவிதைகள் ஈழத்து வாழ்வியலையும் வலிகளையும் பேசுகின்றன. கவிதைகள் மனித மனங்களில் காட்சிகளை உருவாக்கும் சிந்தனையை மேம்படுத்தும் சக்தி மிக்கவையாகவே நான் பார்க்கிறேன். தற்காலத்தில் தமிழ் இலக்கியப் பரப்பில் ஏராளம் கவிதைகள் படைக்கப்படுகின்றன. மரபுக் கவிதைகளாகவும், புதுக்கவிதைகளாகவும் சிலவேளை மரபை விலக்கிவிட இயலாதவையாகவும் கவிதைகளை நாம் காணலாம். தொடர் வாசிப்பில்லாதோர் கவிதைகளை கண்டு கொள்வதில்லை என்பது போல் கவிதைகளைப் படைப்போரும் சிந்தனையைத…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜே டி வான்ஸின் 'ஹில்பிலி எலஜி' ('Hillbilly Elegy' by J D Vance) - மலையக ஒப்பாரி: நூல் அறிமுகம் நம்மூரில் இவர்கள் இப்படித்தான் என்று சாதி, மத, மொழி மற்றும் இன்னபிற காரணிகளின் அடிப்படையில் அவர்களைப் பொதுமைப்படுத்துவது போல, அமெரிக்காவில் வெள்ளையர்கள் என்றால் மேலான வாழ்க்கை வாழ்பவர்கள் என்பது போலவும் கறுப்பர்கள் மற்றும் ஹிஸ்பானியர்கள் கீழான வாழ்க்கை வாழ்பவர்கள் என்பது போலவும் ஒரு பொது எண்ணம் இருக்கும் அல்லவா! மேலானவர்கள் - கீழானவர்கள் என்றில்லை, அவர்களுடைய வாழ்க்கையே மேலானதாகவோ கீழானதாகவோ இருக்கும் என்று எண்ணுவது. அது இயல்புதானே! அது முற்றிலும் உண்மையல்ல என்கிற ஒரு நூல் இது. அது மட்டுமே அல்ல. இன்னும் நிறைய இருக்கிறது. 'ஹில்பிலி' என்பது அமெரிக்காவில் உள்ள…
-
- 5 replies
- 1.1k views
-
-
ஏன் குமரன் கடைசி மட்டும் வெயிட் பண்ணினவன், What was his problem? Girl Is Mine(தமிழில்மேகலா) கதையை வாசித்த ஹர்ஷால், அதை அவர் மனைவிக்கு போய் சொல்ல, அவரும் வாசித்துவிட்டு, பிடித்துப்போய், மூவரும் ஒரு நாள் டின்னர் போனோம். Merlot, கோப்பையில் இன்னமும் தளம்பவில்லை … இரண்டாவது சுற்றில் அந்த கேள்வி வந்தது. அது ஒரு உளவியல். கதையில் வரும் மேகலா படித்தவள். இன்டலிஜண்ட்.. குமரனை காதலிக்கிறாள். எங்கே அது தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் கொஞ்சம் extra cautious ஆக இருப்பதற்காக அவளே அவர்களுக்கிடையில் ஒரு திரையை போட்டுவிட, அதுவே குமரன் அவளை நெருங்க விடாமல் தடுத்துவிட்டது. Anti climax. அங்க தான் ஜேகே நீங்க எழுத்தாளரா தோல்வி அடைஞ்சிட்டீங்க. பெண்களுக்கு ஒருத்தனை பிடித்துவிட்டால…
-
- 0 replies
- 1.1k views
-