நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
அம்மாவின் ரகசியம் வாசிக்கவென எடுத்துவைத்த நூல்களில் இன்று அதிகாலை என் கையில் அகப்பட்ட நூல் ‘அம்மாவின் ரகசியம்’. சுநேத்ரா ராஜகருணநாயகவின் இச் சிங்கள மொழியிலான படைப்பை தமிழில் தந்திருப்பவர் எம்.ரிஷான் ஷெரீப். வாசிப்பை இடறல் செய்யாத மொழிபெயர்ப்பு. எம்.ரிஷான் ஷெரீப்பை இதற்காக பாராட்டலாம். சிங்கள மொழியிலான ஆக்கங்களின் பரிச்சயம் ஈழத் தமிழர்களுக்கு மிகமிகக் குறைவு. சிங்கள மக்களின் வாழ்க்கைகூட மேலோட்டமாகவே தெரிந்திருக்கிறது அவர்களுக்கு. வாழ்க்கை அழைக்கும் பக்கங்களுக்கெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் தேவை மூன்றாம் உலகினைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் விதியாகியிருக்கிற இன்றைய காலகட்டத்தில், தார்மீக நியாயங்களின் காரணமாய் தம் தேசத்து அரசியலை வெறுத்து பல படைப்பாளிகளும் தம் த…
-
- 15 replies
- 5k views
-
-
2000-க்கு பிந்தைய தமிழ் நாவல்களின் உலகம் இமையம் “எல்லாமே நிரந்தரமாய் மாறிக்கொண்டேயிருக்கிறது என்பதுதான் வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம். வாழ்க்கை என்பது தொடர்ந்து செல்லும்”-*1 ‘லீவ் உல்மன்’. மொழியின் வரலாறு என்பது மொழியில் உண்டான இலக்கியப் படைப்புகளின் வரலாறுதான். அந்த வகையில் நாவல் என்ற கலை வடிவம் தமிழ் மொழிக்கு அறிமுகமாகி ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. முதல் நாவல் எழுதப்பட்ட காலத்திலிருந்து 2014ல் எழுதப்பட்ட நாவல்கள்வரை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான போக்கை கடை பிடித்து வந்திருக்கிறது. நாவலின் மையத்தைத் தேர்ந்தெடுப்பதில், கதை சொல்லும் முறையில், கதை சொல்ல தேர்ந்தெடுத்த மொழியில், உத்தியில் என்று காலத்துக்குக் காலம் மாற்றம் பெற்று வந்திருக்கிறது. இந்த …
-
- 0 replies
- 5k views
-
-
யாழ் கள உறவு இளங்கவியின் கவிதை நூலான என் கல்லறைச் சிநேகிதி நூல் வெளிவந்து விட்டது. 0 0 0 என் கல்லறைச் சிநேகிதியே கவிதைத் தொகுப்பு இளங்கவி கருக்கு வெளியீடு 2009 ஆகஸ்ட் இங்கிலாந்தில் வசிக்கும் ஈழத்துக்கவிஞர் இளங்கவியின் ஐம்பது கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது. இளங்கவி தனது கவிதைகளில் சமகால நிகழ்வுகளாகட்டும் பழைய கனவுகளாகட்டும் பட்டவர்த்தனமாக பூடகமேதுமின்றி வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்றார். இவரது இக்கவிதைகள் தனித்த ஒரு குறும்பார்வையின்றி அவரைப்பாதித்த ஈழத்துயரம் தமிழ்வீரம் அன்பு காதல் என பலதடங்களில் பயணிக்கின்றமையே இக்கவிதைகளுக்கான சிறப்பாகவும் உள்ளது. 0 0 0 உடனடியாக இணையத்தில் பெற http://vadaly.com/shop/?page_id=231&ca...p;prod…
-
- 43 replies
- 4.9k views
-
-
இவ்வாரம் முதல் புலம் பெயர்ந்து வாழும் எம்மவர் மத்தியில், எம்மவர்களால் வெளியிடப்படும் முதலாவது உலகத் தரம் வாய்ந்த தமிழ் சஞ்சிகையாக 'பரபரப்பு ஜனரல்' வெளிவருகிறது. இலண்டனில் வியாழக்கிழமையில் வெளிவரும் இச் சஞ்சிகை 'பரபரப்பு வாரப்பத்திரிகையின்' சகோதர வெளியீடாகும்.
-
- 11 replies
- 4.9k views
-
-
2019சென்னை புத்தகக் கண்காட்சியில் விடியல் பதிப்பக வெளியீடாக வெளிவந்த சிவா சின்னப்பொடியின் “நினைவழியா வடுக்கள்“ என்ற நூலின் அறிமுக நிகழ்வு நேற்று பாரிசில் இடம்பெற்றது.நீண்டகால தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் முகுந்தன்,அரசியல் விமர்சகரும் பொதுவுடைமை செயற்பாட்டாளருமாகிய ரயாகரன்,நூலாசிரியரின் மகனும் அரசியல் தத்துவத்துறையை சோர்ந்தவருமான வசந்த ரூபன்,எழுத்தாளரும் இடதுசாரி செயற்பாட்டாளருமாகிய வி.ரி. இளங்கோவன் ஆகியோர் இந்த நூல் சார்ந்தும் ,இந்த நூலில் குறிப்பிடப்படும் சமூகப் பிரச்சனை சார்ந்தும் தமது மதிப்புரைகளைத் தெரித்தனர். வரலாற்றுப் பதிவுகளை நேர்மையுடனும் துணிச்சலுடனும் பதிவு செய்துள்ள இந்த நூல் ஒரு வரலாற்றுப் பொக்கிசம் என்று பாராட்டிய முகுந்தன் இந்த நூலின் 5 ம் அத்தியாயத்தில் க…
-
- 27 replies
- 4.8k views
- 1 follower
-
-
ஜெயமோகனின் இந்திய ஞானம் சுயாந்தன் ஜெயமோகனின் இந்திய ஞானம் என்ற இந்நூல் இந்திய ஞானம் பற்றி எனக்கு மேலதிக தேடலையும் புரிதலையும் உண்டாக்கிய ஒன்று என்றே கூறுவேன். அவருடைய "இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்" என்ற நூல் வழங்கிய அறிதலையும் புரிதலையும் வேறு எந்தவொரு நூலும் இந்து ஞான மரபு பற்றி தெளிவாக்கியதில்லை. அந்த நூலில் இடம்பெற்ற ஆறுதரிசனங்கள் பற்றிய பிரக்ஞை இன்றும் என் ஞாபகத்தில் அறையப்பட்டுள்ளது. அதிலிருந்துதான் பல படைப்புக்களை என் பார்வையில் அணுகவும் வழி செய்தது. படைப்புக்களை வாசிப்பதற்கும் புனைவல்லாத கட்டுரைகளைப் படித்து அறிவைத் தெளிவு படுத்திக் கொள்வதற்கும் இடையில் உணர்வு மற்றும் அறிவு இரண்டும்தான் எல்லையாக உள்ளது.இந்திய ஞானம் என்ற ஜெமோவின் இந்த நூல் அறிமுக…
-
- 36 replies
- 4.8k views
-
-
84 இல் எனது 12 ஆம் வயதில் நான் ஓடத் தொடங்கியது இப்போது சில வருடங்களாகத்தான் ஓய்திருக்கிறேன்.எனது ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஒவ்வொரு விடயங்களில் தீவிரமாக இருந்திருக்கிறேன்.எனது 92 தொடக்கம் 93 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் கொழும்பில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது. கொழும்பு எனக்கு ஏற்கனவே பழக்கமான இடந்தான் (90 இல் இந்துக் கல்லூரியில் சில மாதம் படித்திருந்தேன்) என்றாலும் எதாவது செய்ய வேண்டுமே என்ன செய்யலாம் என்று யோசித்த போது பழம்தமிழ் புத்தகங்களை சேகரிக்கும் எண்ணம் தோண்றியது. மிக நல்ல புத்தகங்களைச் சேர்த்தேன்.நான் நோர்வேக்கு இடம்பெயரும் போது அனைத்து புத்தகங்களையும் இங்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்திருந்தென். ஆனால் பல பொதிகள் வழியில் தொலைந்து போயின. எனது உ…
-
- 8 replies
- 4.8k views
-
-
நீண்ட நாட்களாக கோகுல் சேஷாத்ரி எழுதிய சேரர் கோட்டை படிக்க வேண்டும் என்று வைத்திருந்தேன். ஒருவாராக இந்த வார விடுமுறையில் வாசித்து விட்டேன். சோழ வரலாற்றைப் படித்தவர்களுக்கு இரண்டு விடயம் ஒரு தெளிவில்லாமலேயே இருக்கும். ஒன்று ஆதித்த கரிகாலன் கொலை மற்றொன்று "காந்தளூர்ச் சாலை கலமறுத்த" என்ற வாக்கியத்தின் பொருள். இதைப் பற்றி யாரும் தெளிவாக இதுவரை வரலாற்றுக் குறிப்புகளுடன் எழுதவில்லை. இந்த இரண்டையும் தேடி இணையத்தில் நான் அதிக நேரம் செலவிட்டு இருக்கிறேன். முதன் முதலாக கோகுல் சேஷாத்ரி காந்தளூர்ச் சாலை பற்றி வரலாற்றுக் குறிப்புகளுடன் எழுதியுள்ளார். காந்தளூர்ச் சாலை பற்றி சுஜாதா "காந்தளூர் வசந்தகுமாரன் கதை" என்ற நாவல் எழுதியிருந்தார். ஏனோ அதை முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு செ…
-
- 3 replies
- 4.8k views
-
-
மார்க்சீம் கோர்க்கியின் "தாய்" நாவலிலிருந்து... (முதலாம் பாகம் அத்தியாயம் 24) "இது எனக்குப் புரியவே மாட்டேனென்கிறது!" "எது?" என்று கேட்டான் ஹஹோல். " நாம் உணவுக்காகக் கால்நடைகளைக் கொல்கிறோம். அதுவே மோசம். காட்டு மிருகங்களால் ஆபத்து வருமென்று தெரிந்தால் அவற்றையும் நாம் கொன்று தீர்கிறோம். அது சரிதான். அது எனக்குப் புரிகிறது. ஒரு மனிதன் தன்னுடைய சகமனிதர்கள் மீது காட்டு மிருகத்தைப்போல் பாய்ந்து கடித்துத் தின்ன முனைந்தால், அவனை நாம் மிருகத்தைக் கொல்வதுபோல் கொன்று தீர்க்கத்தான் செய்வேன். ஆனால் இவனை மாதிரி அனுதாபத்திற்குரிய ஒரு ஜந்துவைத் தீர்த்துக் கட்டுவெதென்றால்? இவனை எப்படித்தான் ஒருவன் தாக்க நினைப்பான்?" ஹஹோல் தோள்களைக் குலுக்கிக் கொண்டான். "இவனும் காட்டு மிருக…
-
- 18 replies
- 4.8k views
-
-
2016- ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது வண்ணதாசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது ஒரு சிறு இசை நூலுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. வண்ணதாசன் என்ற பெயரில் கதைகளையும் கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளையும் எழுதி வரும் இவரது இயற்பெயர் சி. கல்யாணசுந்தரம். திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த இவர், 1962-லிருந்து எழுதி வருகிறார். கலைக்க முடியாத ஒப்பனைகள், ஒளியிலே தெரிவது, உயரப் பறத்தல் கனிவு ஆகியவை இவரது சில சிறுகதைத் தொகுப்புகள். தற்போது விருதை வென்றிருக்கும் ஒரு சிறு இசை நூலை, சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சின்னு முதல் சின்னு வரை என்ற நாவலையும் புலரி, முன்பின், ஆதி உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளையும் வண்ணதாசன் கடிதங்கள் என்ற கடிதத் தொகுப்புகளையும் இ…
-
- 5 replies
- 4.7k views
-
-
01 பத்து மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய கவிதைகள் நூலாக்கப்படவுள்ளதாக தெரிவித்து அதற்கு முன்னுரை தரவேண்டும் என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் தீபச்செல்வன். அப்போது நான் கிளிநொச்சியிலிருந்தேன். கிளிநொச்சியை நெருங்கியதாக யுத்தம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. எனினும் கிளிநொச்சியின் சில பகுதிகளில் மின்சாரம் இருந்தது. ஒரு இடத்தில் இணைய வசதியும் கிடைத்தது. என்றபோதும் யுத்தத்தின் தீவிரம் எதையும் நிதானிக்க முடியாத அளவிற்கு நிச்சயமின்மையை உருவாக்கிகொண்டிருந்தது. அதைவிட எப்போதும் அச்சமூட்டிக் கொண்டேயிருக்கும் அபாய நிலை சடுதியாக மாறும் அல்லது வீழ்ச்சியடையும் சூழல். தீபச்செல்வனுக்கு ஒப்புக்கொண்டபடி அவருடைய கவிதைகளுக்கான முன்னுரையினை அனுப்ப முடியவில்லை. யுத்தம் திடீரென வேகமெடுத…
-
- 3 replies
- 4.5k views
-
-
சிவகாமியின் சபதம் “கல்கி” என்றாலே அனைவருக்கும் “பொன்னியின் செல்வன்” தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்குத் தன்னுடைய மந்திர எழுத்துக்களால் அனைவரையும் கட்டிப்போட்டு விட்டார். “பொன்னியின் செல்வன்” விமர்சனம் எழுதிய போது அனைவரும் “சிவகாமியின் சபதம்” படிங்க அதுவும் இதே போல அசத்தலான நாவல் என்று கூறினார்கள். “பொன்னியின் செல்வன்” நாவல் அளவுக்கு இல்லையென்றாலும் இதுவும் மிகச் சுவாரசியமான நாவலே! அதில் சோழர் பெருமை பற்றி என்றால் இதில் பல்லவர்கள் பற்றி. இரண்டுமே வெவ்வேறு களம் ஆனால், இரண்டிலுமே நாம் சம்பந்தப்பட்டு இதில் ஒரு அங்கமாக மாறி விடுவோம். அதாவது நாம் சோழ, பல்லவ குடிமக்களாகவே மாறி விடுவோம். பரஞ்சோதி பரஞ்சோதி என்ற சாதாரண நபர் ஆரம்பத்தில் நாவலை துவக்கி …
-
- 1 reply
- 4.5k views
-
-
தமிழக வாசகர்களின் உற்சாக வருடாந்திரத் திருவிழாவான சென்னைப் புத்தகக் காட்சி வாசகர்கள் எண்ணிக்கை, வாங்கப்பட்ட புத்தகங்கள் எண்ணிக்கை, விற்பனையான தொகை என எல்லா விதங்களிலும் இதுவரை இல்லாத புது உச்சத்தைத் தொட்டு புதன்கிழமையோடு நிறைவடைந்தது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் 37-வது ஆண்டாக நடத்தப்படும் இந்தப் புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் இந்த ஆண்டு நடைபெற்றது. சுமார் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் 777 அரங்குகளுடன் அமைக்கப்பட்டிருந்த இந்தப் பிரமாண்ட புத்தகக் காட்சியில் 435 தமிழ்ப் பதிப்பாளர்கள், 263 ஆங்கிலப் பதிப்பாளர்கள், 59 ஊடகப் பதிப்பாளர்கள் பங்கேற்றனர். ஏறத்தாழ ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புக…
-
- 9 replies
- 4.5k views
-
-
வெண்முரசு – ஒரு பார்வை வெ.சுரேஷ் வெண்முரசு- ஒரு பொதுப்பார்வை நேற்றுதான் தொடங்கியது போல் இருக்கிறது ஜெயமோகனின் மகாபாரத ஆக்கமான வெண்முரசு. அவரே கூறியிருக்கும்படி, இது 10 வருட செயல்திட்டம். ஆண்டுக்கு ஒரு புத்தகம் என்ற கணக்கில் பத்து புத்தகங்கள் வர வேண்டும். ஆனால் தொடங்கிய 7 மாதங்களிலேயே 3 புத்தகங்கள் வந்துவிட்டன. சுமார் 2500 பக்கங்கள் அளவுக்கு எழுதியாயிற்று. இதற்கிடையே பல கட்டுரைகள், கேள்வி பதில்கள், விவாதங்கள், வெண்முரசு பற்றிய கேள்விகளுக்கென்றே தனியாக ஒரு தளம், இலக்கியச் சந்திப்புகள் மற்றும் நெடும்பயணங்கள். ஜெயமோகனின் ஆற்றலும் உழைப்பும், அனைத்துக்கும் மேலாக புறச்சூழல் எப்படி இருந்தாலும் கவனம் குலையாத அவரது படைப்பூக்கமும், இதுதான் யோக மரபில் சொல்லப்படும் ஏகாக்கிர…
-
- 6 replies
- 4.5k views
-
-
என் வாசிப்பின் எல்லைகளை தீவிரமாக்கிய எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றி ஆனந்த விடனில் வந்தவை...அவரின் ஜீனோ தான் நான் வாசித்த முதல் நாவல் சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்... ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3. நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிஇருக்கிறார் சுஜாதா. புத்தகங்கள் எல்லாமே பல பதிப்புகள் கண்டவை. இன்னமும் விற்பனைப் புரட்சி செய்பவை. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு 'நைலான் ரதங்கள்'! முதல் சிறு…
-
- 18 replies
- 4.5k views
-
-
சொல்வனம் இணைய இதழில் படித்தவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். முழுமையாகப் படிக்க: இதழ்: 112 பெர்லினும் தமிழ் இலக்கியத்துக்குள் வந்தாச்சு வெங்கட் சாமிநாதன் தாமறிந்த வாழ்க்கையை, பழகிய மனிதர்களை எழுதுவது என்பதே அக்காலத்தில் இவர்கள் மனதில் தோன்றியதில்லை. ஒரே ஒரு விதிவிலக்கு. எங்கும் நேரும் விதிவிலக்கு. ப.சிங்காரம். ஆனால் தமிழரே ஆனாலும் தமிழ்ச் சூழலால் பாதிக்கப்படாது எங்கோ வாழ்ந்தவர். அவர் கொணர்ந்த வாழ்க்கையும் தமிழ் இலக்கியத்துக்குப் புதிது. விதிவிலக்கு விலகி நின்ற ஒன்றாகவே ஆகியது. இது மாறியது ”சரஸ்வதி” பத்திரிகை காலத்தில். இலங்கையிலிருந்து எழுதுபவர்கள் தாம் வாழ்ந்த வாழ்க்கையை அனுபவங்களை, எமக்கு அவர்கள் பரிச்சயப் படுத்தியது அப்போதிலிருந்துதான். - See more at: htt…
-
- 9 replies
- 4.5k views
-
-
பொயற் ஐயாவும் இடையில் கூட்டத்தை தன் கையில் எடுக்கப்பார்த்தார் (24 ஆவது நிமிடத்தில் இருந்து). ஆனால் ஷோபாசக்தி ஒரு மாதிரி தனது கலந்துரையாடலுக்குள் கொண்டுசேர்த்துவிட்டார்.
-
- 15 replies
- 4.5k views
-
-
எதிர்வரும் மே 12 சனிக்கிழமை - அ.இரவி எழுதிய பாலைகள் நுாறு நுால் வெளியீடும் சயந்தனின் ஆறாவடு நாவல் விமர்சன அரங்கும், சோமிதரனின் வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி ஆவணப்பட வெளியீடும் லண்டனில் நடைபெற உள்ளது. இடம் : Tootingஅம்மன் கோயில் சிவயோகம் மண்டபம் 180 – 186 UPPER TOOTING ROAD, LONDON – SW17 7EJ May 12, 2012 Saturday 5 PM வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்க,
-
- 31 replies
- 4.4k views
-
-
எனது பார்வையில் ஷோபாசக்தியின் BOX கதைப் புத்தகம் by கோமகன் அண்மையில் கறுப்புப் பிரதி வெளியீடான ஷோபாசக்தியின் ‘BOX கதைப் புத்தகம்’ நாவல் வாசிக்க நேர்ந்தது. பொதுவாகவே எழுத்தாளர்கள் தங்கள் கதையைச்சுற்றி வரும் சுற்றுப்புறச் சூழல்களை உவமானத்துக்காகவே பயன்படுத்துவார்கள். இந்த உவமான உவமேயங்கள் அச்சுப்பிசகாமல் சங்ககால இலக்கியத்தில் இருந்து இன்றுவரை இருந்து வந்துள்ளது. ஆனால் ஷோபாசக்தியின் BOX கதைப் புத்தகம் வாசிக்கும் பொழுது முதன் முறையாக முதலாவது கதை சொல்லியாக வானத்தில் இருக்கும் நிலாவும், இரண்டாவது கதைசொல்லியாக ஓர் குழந்தையும் நாவலினூடாக கதைசொல்லிகளாக நகர்ந்து சென்று கொண்டிருந்தன. நாவல் ஒருபக்கத்தில் இருந்து மட்டும் வாசகரை நோக்கிச் சுழலாது, கதைக்களத்திலே இருந்த பலதரப்புக் க…
-
- 2 replies
- 4.4k views
-
-
ஆங்கிலத்துடனான ஆரம்ப அறிமுகம் உள்ளவர்களிலிருந்து, ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தும் நூல் இது. பல்வேறு இதழ்களில் பல்வேறு துறைகள் குறித்த கட்டுரைகளை எழுதிவரும் ஜி.எஸ். சுப்பிரமணியனின் நகைச்சுவை ததும்பும் நடை ஆங்கிலம் படிப்பதை இனிமையான அனுபவமாக்குகிறது. சுவாரஸ்யமான உதாரணங்கள், எளிய உதாரணங்கள், அழகான சித்திரங்கள் ஆகியவற்றின் மூலம் ஆங்கிலத்தை இலகுவாகப் புரியவைக்கும் நூல் இது. Price: Rs.190.00 Price: Rs.320.00 http://tamil.thehindu.com/publications/befriending-the-english-language/article7698664.ece
-
- 15 replies
- 4.2k views
-
-
இதில் சில நாவல்கள் அது பற்றிய சிறு குறிப்புகளையும் பகிர்கிறேன் விருப்பமுள்ள ஆர்வமுள்ளவர்கள் படித்து பயன்பெறுங்கள் உப்பு நாய்கள் கதை மாந்தர்கள் போதை கடத்தல் கொலை பாலியல் வல்லுறவு நண்பனின் அம்மாவோடு படுப்பது என லைவ் ஸரெயிலை படு இயல்பாக வாழ்வார்கள். சோலி சுருட்டல் இல்லாத மிடில்கிளாசை சேர்ந்த ஒருவன் இந்த புத்தகத்தை படித்தால் சென்னையின் மறுபக்கம் அவனை ஒரு உலுக்கு உலுக்கி விடும்..... வட சென்னையை சேர்ந்தவர்களை சௌகார்பேட்டை சேட்டுகள் எப்படி குற்றபின்னனியில் use பண்ணுகிறார்கள் சௌகார் பெண்ணை அடைய சென்னை பையங்கள் எவ்வளவு தூரம் போவர்கள் என கதை நெடுகிலும் பேசுது வாசகனை சென்னையின் மோசமான பக்கத்துக்கு கொற கொற என இழுத்துச்செல்லுகிறது முடிவு தான் பழை…
-
- 12 replies
- 4.2k views
- 1 follower
-
-
'கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும் தமிழீழத் தேசியத் தலைவரும்' இது தமிழரின் வரலாற்றை எதிர்வு கூறும் ஒரு நூலாகும். 1960 ஆண்டில் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் கோமாவில் இருந்த போது அவருடைய கனவில் 'காலமுனி' என்பவர் தோன்றி கூறிய எதிர்வுகூறல்களை எழுத்து வடிவில் புத்தமாக ஆக்கி 1970 ஆம் ஆண்டளவில் வெளியிட்டார். அவ்வாறு வெளிவந்த புத்தகமே 'தமிழன் கனவு' என்பதாகும். இனி இந்த புத்தகத்தில் என்னென்ன விடயங்கள் இருந்தது என்று பார்போம். கீழ்வரும் தகவல்கள் யாவும் எனது தந்தையார் என்னிடம் தெரிவித்தவை. எனது தந்தை இந்த புத்தகத்தை 10 தடவைக்கு மேல் வாசித்தவர். ஆனால் இந்த புத்தகம் கையில் இருந்த காலத்தில் இதில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளினை அது நடந்தேறிய பின்னரே அறிந்துகொள்ள முடிந்தது. அந்த அளவ…
-
-
- 24 replies
- 4.1k views
-
-
யாழ் கள உறவுகளுக்கு வணக்கம் சிறிது காலம் முன்னே களத்தில் ஈழத்து நூல்களை இணையத்தில் அனைவரும் படிக்கும் வகையில் மின்வெளி நூலகம் ஒன்றை அமைக்கும் முயற்சி பற்றிக் குறிப்பிட்டு உதவி கேட்டிருந்தேன்.அந்த முயற்சி இப்போது கைகூடி வந்திருக்கிறது www.noolaham.net என்னும் முகவரியில் நீங்கள் அதனைப் பார்வையிடலாம் எரித்தழிக்கப்பட்ட ஈழத்தமிழனின் சொத்து யாழ் நூலகத்தை நினைவுகூரும் வகையிலும் எங்களில் அரிய இலக்கியங்கள் தற்காலிகமாகவேனும் ஈழத்துக்கு வெளியே பாதுகாக்கப்படவேண்டியதன் தேவையை வலியுறுத்தியும் யாழ் நூலகத்தின் படம் நூலகத்தின் முகப்பிலே இடம்பெற்றிருக்கிறது நூலகம் மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கியது 1) ஈழத்து எழுத்தாஅர்களின் நூல்கள்(ஈழத்திலும் புலத்திலும் எழு…
-
- 14 replies
- 4.1k views
-
-
உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் தமிழ்மக்கள் தொலைத்த இடங்கள் ஏராளம். சொந்த இடங்களை விட்டு ஏங்கிய நிலையில் வாழ்கின்றோம் என யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் தெரிவித்தார். கவிஞர் கு.வீராவின் ‘கண்ணடிக்கும்காலம்’, ‘இரண்டாவது உயிர்’ எனும் கவிதை நூல்களின் வெளியீட்டுவிழா யாழ். பல்கலைக்கழக ஓய்வுநிலை தமிழ்த்துறை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் இணுவில் சிவகாமியம்மன் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சண்முகலிங்கன் இதனைக் கூறினார். அகதி முகாம்களில் வாழ்கின்ற மக்களுக்கு வீடு என்பதே இல்லை. துன்ப, துயரங்களை சந்திப்பவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். கு.வீராவினுடைய கவ…
-
- 6 replies
- 4.1k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், இன்று மீண்டும் ஓர் நூல்விமர்சனத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. அண்மையில் நான் வடலி வலைத்தளம் ஊடாக நோர்வேயில் வாழ்கின்ற ஈழத்து கவிஞர் கவிதா அவர்கள் படைத்த "என் ஏதேன் தோட்டம்" கவிதைத்தொகுப்பை பெற்று இருந்தேன். ஓர் இனிய மாலைப்பொழுதில் கவிதாவின் கவிவரிகளை படித்துச்சுவைக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. யார் இந்த கவிதா? எனக்கும் யார் என்று தெரியாது. ஓர் ஆர்வக்கோளாற்றில் கவிதாவின் நூலை வடலியூடாக வாங்கியிருந்தேன். கவிதா ஓர் நாட்டிய தாரகை, ஈழத்தில் குரும்பசிட்டியை சேர்ந்தவர், தற்சமயம் நோர்வேயில் வசிக்கின்றார், இது இவரது இரண்டாவது கவிதைத்தொகுப்பு, "பனிப்படலத் தாமரை" எனப்படுகின்ற இவரது முதலாவது கவிதைத்தொகுப்பு நோர்வேஜிய ம…
-
- 19 replies
- 4k views
-