மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
இன்று திருநீற்றுப் புதன் (ASH Wednesday) February 18, 2015 உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களால் இன்று பெப்ரவரி 18 திருநீற்றுப் புதன் என்று அழைக்கப்படும் தவக்காலத்தின் ஆரம்ப நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த திருநீற்றுப் புதன் வி பூதிப் புதன், சாம்பல் புதன் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இன்றைய நாளில் ஒரு சந்தியும் சுத்தபோசனமும் (மாமிச தவிர்ப்பு) அனுஷ்டிக்க கத்தோலிக்க திருச்சபை கட்டளையிட்டுள்ளது. சிறியவர்களும் நோயாளர்களும் முதியவர்களும் இந்தக் கட்டளையிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.இப்புதனன்று முதல் நாம் தவக்காலத்தில் நுழைகிறோம். இதனைத் தொடர்ந்து வரும் 40 நாட்களும் நமது செப, தவ , ஒறுத்தல் முயற்சிகளுக்காக நமக்கு கொடுக்கப்பட்ட காலமாக இந்த 40 நாட்களும் கருதப…
-
- 2 replies
- 2.4k views
-
-
போகர் அளித்த பெருஞ்செல்வம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களின் வரலாறுகளைப் பார்க்கும்போது அவை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் அல்லது விஜயநகரப் பேரரசு, நாயக்க மன்னர்களால் உருவாக்கப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இங்கு உள்ள முருகனின் திருவுருவம் போகர் எனும் சித்தரால் உருவானதாகும். தமிழிலக்கியங்களில் பழநி தலம் 'சித்தன் வாழ்வு' எனவும் கூறப்பட்டுள்ளது. சித்தரான போகர் தன்னைக் காண வரும் பக்தர்களுக்கு மருத்துவ உதவி செய்ததுடன், ஆன்மிக உணர்வையும் வளர்த்து வந்தார். திருமலையின் மீது போகரின் கருணைப் பார்வை விழுந்ததால் முருகன் எனும் ஞான தண்டாயுதபாணியின் திருமேனி உர…
-
- 2 replies
- 1k views
-
-
ஆண்டாளின் திருப்பாவை வைணவப் பாசுரங்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தைப் பாடிய ஆழ்வார்கள் மொத்தம் பன்னிருவர் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள் பின்வருமாறு: பொய்கையாழ்வார் நம்மாழ்வார் ஆண்டாள் பூதத்தாழ்வார் மதுரகவியாழ்வார் தொண்டரடிப்பொடியாழ்வார் பேயாழ்வார் குலசேகர ஆழ்வார் திருப்பாணாழ்வார் திருமழிசையாழ்வார் பெரியாழ்வார் திருமங்கையாழ்வார் இவர்கள் மொத்தம் 4,000 பாசுரங்களைப் பாடியுள்ளனர். அப்பாசுரங்களைப் பின்வரும் 24 தலைப்புகளில் அடக்கலாம்: திருப்பல்லாண்டு அமலனாதிபிரான் நான்முகன் திருவந்தாதி பெரியாழ்வார் திருமொழி கண்ணிநுண்சிறுத்தாம்பு திருவிருத்தம் திருப்பாவை பெரிய திருமொழி திருவாசிரியம் நாச்சியார் திருமொழி திருக்கு…
-
- 2 replies
- 3.1k views
-
-
தன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்குஇ ஆபிரகாம் லிங்கம் எழுதிய கடிதம் இது: மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்குஇ என் மகன்இ அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல; அனைத்து மனிதர்களும் உண்மையான வர்களும் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும்இ மனிதர்களில் கயவன் இருப்பது போலஇ பின்பற்றத்தக்கவரும் இருக்கிறார் என்பதையும்இ ஒவ்வொரு தன்னல அரசியல்வாதி இருப்பது போன்றுஇ அர்ப்பணிப்பு மிக்க தலைவரும் இருக்கிறார் என்பதையும்இ ஒவ்வொரு பகைவனைப் போலஇ ஒரு நண்பரும் இருக்கிறார் என்பதையும் அவனுக்கு கற்றுக் கொடுங்கள். அடுத்து நான் சொல்ல வருவதைஇ அவன் கற்றுக் கொள்ள நாளாகும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும்இ உழைத்துச் சம்பாதித்த ஒரு டாலர்இ உழைக்காது பெற்ற ஐந்து டாலரை விட அதிக மதிப்புடையது…
-
- 2 replies
- 2.2k views
-
-
[size=4]வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 9.பொலிவிய படையினரால் சே குவேரா கைது செய்யப்பட்டதற்கு மறுநாள் சுட்டுக்கொல்லப்பட்டார்.[/size] 1967: பொலிவிய படையினரால் மார்க்ஷிச புரட்சியாளர் சே குவேரா கைது செய்யப்பட்டதற்கு மறுநாள் சுட்டுக்கொல்லப்பட்டார். சே குவேராவின் மீதும் தானியாவின் மீதுமான, அதனோடு பிடல் காஸ்ட்ரோவின் மீதுமான வரலாற்றுக் கறைகள் அனைத்தையும் துடைத்தழித்தபடி 2005 ஆம் ஆண்டு தானியாவின் வாழ்வும் மரணமும் குறித்த ஒரு நூல் ஆஸ்திரேலியப் பதிப்பகமான ஓசன் பதிப்பகம் வழி வெளியானது. தானியாவின் காதலரும், கியூப உளவுத்துறை அதிகாரியும், ஆப்ரோ கரீபியரும், கியூப விடுதலைப் போராளியும் ஆன யுலிசஸ் எஸ்ட்ராடா இந்த நூலினை எழுதியிருக்கிறார். 356 பக்கங்கள் கொண்ட இந்த …
-
- 2 replies
- 1.4k views
-
-
அனைத்து மதத்தவரும் விரும்பும் அன்னை வேளாங்கண்ணித் திருவிழா! நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் அமைந்துள்ளது உலகப் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம். ஒவ்வொரு வருடமும் இந்தப் பேராலயத்தில் ஆண்டு விழாக் கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். கடந்த ஆகஸ்ட் 29 - ம் தேதி கடல் போல் கூடிய மக்கள் வெள்ளத்தின் நடுவில் கொடியேற்றப்பட்டுத் தொடங்கப்பட்ட திருவிழா, மேரி மாதா பிறந்த தினமான செப்டம்பர் 8 ம் தேதி நேற்று மாலையுடன் கோலாகலமாக நிறைவுற்றிருக்கிறது. வங்காள விரிகுடா கடற்கரையோரம் பனை மரங்கள் சூழ்ந்த, கடற்காற்றும் வீசும் பரவசமான சோலையில் அமைந்திருக்கிறது புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோயில். இயேசுநாதரின் தா…
-
- 2 replies
- 1.9k views
-
-
கந்தர் சஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை என்ன? சில வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்கே தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் சில வகுப்புகள் நடத்தப்படுவதுண்டு. அது ஒரு பங்குச்சந்தை வியாபார நிறுவனமாக இருந்ததால் மார்க்கெட்டிங் வேலை மிக முக்கியமானதாக இருந்தது. பங்குச்சந்தை மார்க்கெட்டிங் என்றால் சாதாரனம் இல்லை. உங்களிடம் இருக்கும் பணத்தை நீங்கள் முழித்திருக்கும் போதே உங்கள் சட்டைப்பையிலிருந்து எடுத்து நிறுவனத்திற்கு கொடுத்துவிட வேண்டும். இது குளோப்ளைசேஷன் மூலமாக வந்த புதிய வியாபார உத்தி. அது ஒரு புறம் இருக்கட்டும். தொழிலாளர்களுக்காக நடத்தப்படும் இந்த வகுப்பில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும், உடலைப் பேணிப் பாதுகாக்கவும் சில விஷயங்…
-
- 2 replies
- 3.5k views
-
-
மாசு , மருவற்ற நம் சம காலத்து மகாத்மா - தான் பதவியில் அமர்ந்ததால் , குடியரசுத் தலைவர் பதவிக்கே பெருமை சேர்த்த Dr . APJ அப்துல் கலாம் அவர்களின், பள்ளிப் பருவத்தில் நடந்ததாக கூறப்படும், ஒரு சுவையான நிகழ்ச்சி. நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதில், பெரு மகிழ்ச்சி.. அறிவியலுக்கு அனைத்திற்குமே ஆதாரம் வேண்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ....... அவரது ஆசிரியருடன்... ஆசிரியர்: ஆக, கடவுள் இருப்பதை நீ நம்புகின்றாயா? கலாம்: கண்டிப்பாக ஐயா ஆசிரியர்: கடவுள் நல்லவரா? கலாம்: சந்தேகமேயில்லை ஆசிரியர்: கடவுள் அனைத்து சக்திகளும் பெற்றவரா? கலாம்: ஆமாம…
-
- 2 replies
- 4.1k views
-
-
ஒருவர், தான் செய்த கொலைக்கு பரிகாரமாக, கொலை செய்யப்பவரின் குடும்பத்தினர் சம்மதித்தால், ஈட்டுத்தொகை கொடுத்து கொலை குற்றத்திற்கான தண்டனையில் இருந்து தப்பிவிடலாம் என்பது அறிவுசார்ந்த சட்டமாக இருக்க முடியுமா..? அடிப்படையில் இது பணவசதி உடைய, பொருளாதாரத்தில் சமூக அடுக்கில் உயரத்தில் இருப்பவர்களுக்கு சாதகமாகவும், ஏழைகளுக்கு பாதகமானதுமான சட்டம் இல்லையா..? சாதாரண மனிதர்கள் இயற்றும் சட்டத்திலேயே இம்மாதிரியான வர்க்க பேதத்தை தூக்கிப்பிடிக்கும் சட்டங்கள் இல்லாதபோது, இறவனால் அருளப்பட்டதாக நம்பப்படும் சட்டத்தில் இது இருப்பது அபத்தம் இல்லையா..? குரான் 4:92 ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்…
-
- 2 replies
- 1.1k views
-
-
பிரம்மாவின் புத்திரர்களில் ஓருவரான புஸ்திய மகரிஷி, மேரு மலையில் தவம் செய்து வந்தார். அப்போது அங்கே வந்த தெய்வ நங்கையர்களது கூச்சலால் புலஸ்தியரின் தவத்துக்கு இடையூறு ஏற்பட்டது. கோபம் கொண்ட புலஸ்தியர், இங்கு வரும் கன்னிப் பெண்கள் கர்ப்பிணியாக கடவர் என்று சபித்தார். இதை அறிந்த பெண்கள் அந்த பகுதிக்கு வருவதையே தவிர்த்தனர். இந்த நிலையில் திரணபிந்து என்ற ராஜரிஷி யன் மகள் ஆவிற்பூ. முனிவரது சாபம் பற்றி அறியாமல், அவர் தவம் செய்யும் இடத்துக்கு வந்தாள். அவரை பார்த்த மறு நிமிடமே கர்ப்பமானாள். பின்னர். தன் மகளை ஏற்க வேண்டும் என்று திரணபிந்துவேண்டிக் கொள்ள அவளையே மணம் புரிந்தார் புலஸ்தியர். மனைவியின் நல்ல குணங்களால் மனம் மகிழ்ந்த புலஸ்தியர் நம் மகன் என்னை போலவே மகாதபஸ்வியாக …
-
- 2 replies
- 2.7k views
-
-
மெளனிப்பு ஏன்..? பாசமான தந்தை, தனது மகனை அழைத்துக்கொண்டு ஒரு காட்டிற்குச் சென்றார். அங்கே மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும், ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான். அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு தூரத்தில் ஆந்தை கத்துவதும், நரி ஊளையிடுவத…
-
- 2 replies
- 2.6k views
-
-
பிப்.,18 - எறிபத்தர் குருபூஜை குடும்பம் மற்றும் தொழில் ரீதியாகவும், இன்னும் பல வகைகளிலும் நமக்கு எதிரிகள் இருப்பர். அவர்கள் நமக்கு செய்த கெடுதல்கள், மன்னிக்க முடியாத அளவில் கூட இருக்கும். இருப்பினும், அப்படிப்பட்டவர்களையும் மன்னிக்கும் பக்குவத்தைப் பெற வேண்டும் என்பதையே, எறிபத்தர் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. புகழ்ச்சோழ மன்னர், கரூரை ஆண்ட காலத்தில், அங்கு எறிபத்தர், சிவகாமியாண்டார் என்ற சிவபக்தர்கள் வாழ்ந்து வந்தனர். கரூரில் அருள்பாலிக்கும் பசுபதீஸ்வரரை தினமும் வணங்கி வந்தனர். சிவகாமியாண்டார், பசுபதீஸ்வரருக்கு தினமும் பூஜைக்குரிய பூக்களை பறித்துச் சென்று கொடுத்து, சிவ கைங்கர்யம் செய்து வந்தார். ஒருநாள், அவர் பூக்கூடை யுடன் வரும் போது, மன்னரின் பட்டத்து யானை, மதம…
-
- 2 replies
- 826 views
-
-
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். ஜனவரி 15, 2012 அன்பர்கள், நண்பர்கள் மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உனக்கு என்ன ஆச்சு!, சித்திரை ஒண்ணுதானே தமிழ் புதுவருடம், , என்று என் மீது அக்கறையோடு கேட்க நினைப்பவர்கள் தயவு செய்து இனி வரும் பத்திகளை படிக்க வேண்டுகிறேன். நமது நாட்காட்டிகள் சூரியனை அடிப்படையாக வைத்தே அமைக்கப் பட்டிருக்கின்றன. பள்ளி நாட்களில் பூமத்திய ரேகை, கடக ரேகை, மகர ரேகை என்றெல்லாம் படித்திருப்போம். இதெல்லாம் புவியியல் அறிஞர்கள் பூமிப் பந்தின் குறுக்கே ஏற்படுத்திய கற்பனைக் கோடுகள். இதில் பூமத்திய ரேகையானது நடுவிலும், இதற்கு மேலும் கீழுமாக கடக ரேகை, மகர ரேகைகள் ஓடுகின்றன. அதாவது…
-
- 2 replies
- 2.5k views
-
-
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தே ஞானவாழ்விற்குரிய இலச்சனை பதித்த பல சாதுக்களையும், தபோவனங்களையும் தன்னகத்தே கொண்ட தபதியாக ஒளிர்ந்தது இணுவில். அத்தகு திருப்பதியில் கந்தப்பர் சின்னக்குட்டி தம்பதியருக்கு ஐந்து பெண் மகவுகளின் பின்னர் ஆறவதாக 1906.05.24 பராபவ வைகாசி 11 வியாழன் ரோகிணியில் பிறந்தவர் வடிவேல். உரிய வயதிலே வித்தியாரம்பம் செய்விக்கப்பெற்ற குழந்தை அவ்வூர்ப் பாடசாலை ஒன்றிலே ஆரம்பக்கல்வியை கற்று வந்தது. வைத்திலிங்க உபாத்தியாயரிடமும், மாணிக்கச் சட்டம்பியார் என்பட்ட மாணிக்கத்தியாகராசா விடமும் தனிப்பட்ட முறையிலும் கல்வி பயின்று வந்தார். மாலை வேளைகளில் சேதூர் சட்டம்பியரிடம் நிகண்டு நன்னூல், இலக்கண நூல்கள் ஆத்திசூடி முதலான நீதி நூல்களையும் கற்றார். குழந்தையின் நடைம…
-
- 2 replies
- 642 views
-
-
உழவும் பசுவும் ஒழிந்த கதை! ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின் இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு. ஒன்று குருகுலக்கல்வி,மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம். அப்போதைய பிரிட்டிஷ் இந்திய கவர்னரான ராபர்ட் கிளைவ் நம் விவசாய முறையைப் பற்றி நீண்ட விரிவான ஆய்வு செய்தார். இந்திய விவசாய முறை பிரிட்டிஷாரைச் சார்ந்திருக்கவும் அவர்களுக்குச் சாதகமாகவும் மாற்ற நினைத்தார். அவருடைய ஆய்வின்படி, இந்தியக் கால்நடைகள், குறிப்பாக, பசுக்கள்தான் நமது விவசாயத்தின் முதுகெலும்பு. பசுக்கள் இல்லை என்றால் இந்திய விவசாயம் அழியும். இப்பசுக்களை அழித்துவிட்டால்விவசாயம் அழிவுப்பாதையை நோக்கித் திரும்பும். அதன் மூலம் ரசாயன உரங்களுக்காகவும், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காகவும், ஆங…
-
- 2 replies
- 606 views
-
-
மத விழாக்கள் / பண்டிகைகள் பற்றிய விழிப்புணர்வு என்ற பெயரில் முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களில் அடிக்கடி பல தேவையற்ற விவாதங்களைக் காணக்கூடியதாக இருக்கிறது. அண்மையில் கூட நவராத்திரி விழா பற்றி மிக கீழ்தரமாக கேலி செய்தும் சில பதிவுகள் உலாவந்தன. மக்களை நெறிப்படுத்தும் நோக்கில் தான் எந்த ஒரு மதமும் தோற்றுவிக்கப்பட்டது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. மத விழாக்கள், சடங்குகள் தேவை தானா என்ற கேள்விக்குப் பதிலாக இன்னொரு கேள்வியை நாம் கேட்கலாம். இன்று அதிகரித்துள்ள சமூகப் பிரச்சினைகள் பலவற்றை எண்ணி வருந்தும் நாம், அதற்கான மூல காரணங்கள் பற்றி உற்று நோக்குவதில்லை. போதைப்பொருள் பாவனை, பாலியல் கொடுமைகள், மதுவுக்கு அடிமையாதல் இப்படி இன்னும் ஏராளமான பல பிரச்சினைகளை நமது …
-
- 2 replies
- 439 views
-
-
விடைகள் இல்லாதவரை…..! நீதிபதி:- உமது பெயர் என்ன? கடவுள்:- கடவுள் நீதிபதி:-உம்மை கல்லிலும் ,மண்ணிலும் ,உலோகத்திலும் மனிதர் செய்யலாமா? கடவுள்: எனது சக்தியை ஒருவராலும் ஒன்றுக்குள் அடக்க இயலாது.சிந்திக்காமல் மனிதன் செய்கிறான். நீதிபதி:- மனிதர்களைப் படைத்தது நீர்தானே? கடவுள்:- ஆமாம்! நீதிபதி:-சாதிப் பிரிவினை உருவாக்கியவர் நீதானே? கடவுள்:ஆம். செய்யும் தொழிலே தெய்வம் என்று இந்துகளுக்கு மட்டும் சாதிப்பிரிவினை உண்டாக்கினேன். இந்துத் தத்துவங்களில் ஒன்று வர்ணாச்சிரமக்க கொள்கை இதைக் கடைப்பிடிக்காமல் போனால் நீ மறுபிறப்பில் வெளவால் இனத்தை சேர்ந்த வாயாலை உண்டு வாயாலை மலம் கழிக்கிற இனமாக பிறப்பாய். நீதிபதி:- மனிதர்களில் பணக்காரர்கள் என்றும் ஏழைகள் என்ற…
-
- 2 replies
- 1.6k views
-
-
செல்வச் சந்நிதி ஆலயத்தில் கடல் நீரில் விளக்கெரியும் அற்புதம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆடி குளிர்த்தி பொங்கல் வைபவத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு கடல் நீரில் விளக்கு எரிக்கும் வைபவம் காலங்காலமாக இடம்பெற்று வருகின்றது. இவ் வருட ஆடி குளிர்த்தி பொங்கலுக்குஒரு வாரத்திற்கு முன்னரான காலத்தில் முருகப்பெருமானுக்கு விசேட பூசைகள் நடத்தப்பட்டு இரவு 12 மணியளவில் ஆலய பூசகர்கள், பெருங் கடலும் தொண்டமானாறு வாவியும் இணையும் இடத்திற்கு சென்று வெள்ளை துணியினால் வாய்கட்டப்பட்ட மண் குடத்தில் கடல் நீர் எடுத்து வந்து விசேடபூஜை வழிபாடுகள் நடாத்தி ஆலய மூலஸ்தானத்தில் வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை வரையான ஒரு வார காலத்திற்கு…
-
- 2 replies
- 694 views
-
-
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மகோற்சவத்திருவிழா நேற்று ஆரம்பம். (படங்கள்) வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நேற்று காலை விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகிய இந்த திருவிழாவின் முக்கிய அம்சமான கொடியேற்றம் சரியாக நண்பகல் 12 மணியளவில் சுபமுகூர்த்தவேளையில் இடம்பெற்றது. நேற்று முதலாம் நாள் கொடியேற்றத்திருவிழாவில் நாட்டின் பலபாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அம்மன் அடியார்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 16 நாட்கள் நடைபெறவுள்ள இத்திருவிழாவில் எதிர்வரும் 21ம் திகதி சப்பரத்திருவிழாவும், 22ம்திகதி தேர்த்திருவிழாவும், 23ம்திகதி தீர்த்த உற்சவமும் இடம்பெற்று கொடிய…
-
- 2 replies
- 821 views
-
-
உன்னால் ஒன்றை திருத்த முடிய தெரியாதிருந்தால்..... தயவு செய்து... அதை உடைப்பதை நிறுத்து!
-
- 2 replies
- 1.3k views
-
-
சிவராத்திரியின் மகிமை என்ன? "லூமினிபெரஸ் ஈத்தர்" ( Luminiferous Eather ) எனப்படும் ஒரு பிரம்மாண்ட சக்தி மகா சிவராத்திரி அன்று மட்டுமே ராக்கெட் வேகத்தில் ஸ்பிரிங் என்ற தன்மையில் பூமியை நேரடியாக வந்து இறங்கும். இந்த நேரத்தில் முதுகை நேராக வைத்து தூங்காமல் இருந்தால் அபரிமிதமான சக்தி கிடைக்கும். இதனால் பல நன்மைகள் உண்டு. இந்த சக்தி வேறு எந்த நாளும் கிடைக்காது. எனவேதான் மகாசிவராத்திரியன்று தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அறிவியல் பூர்வமாக ஆதாரம் வேண்டும் என்றால் இங்கே நான் கொடுத்திருக்கும் சில படங்களை பார்த்துக்கொண்டே நான் சொல்வதைக் கேளுங்கள். ஈத்தர் எனப்படும் சக்தி தான…
-
- 2 replies
- 1k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் ஏகபாதமூர்த்தி "வெய்யதிரி சூலம் விழைவோ டினிதேந்தும் கைகளொரு நான்குமலர் கண்களொரு மூன்றும் செய்யமலர் வென்றவொரு நாளுமுறு தேவை யொய்யென அமைத்தவர்கள் முத்தியுறுவாரே" - இலிங்க புராணம்
-
- 2 replies
- 2k views
-
-
பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை..... 1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே! 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி. 4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய். 5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி. 6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை. 7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை. 8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே. 9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும். 10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு. 11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே. 12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு. 13. அவ்வப்போது பரிசுகள…
-
- 2 replies
- 4.8k views
-
-
மனதில் உறுதி வேண்டும்! ஒரு அரசனுக்கு திடீரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது.. அதை குணப்படுத்த, 'சஞ்சீவி மலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும்' என மருத்துவர் கூறினார். அதற்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால் தான் முடியும்.. அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள்.. அதில் முதலாமவன், 'மூலிகையை நான் கொண்டு வருகிறேன்' என கிளம்புகிறான்.. தேவதை, வழிகாட்ட ஒர் நிபந்தனை விதித்தது.. ''நான் உன்பின்னால் வருவேன்..நான் இடது பக்கம் திரும்பு என்றால் இடது பக்கம் திரும்ப வேண்டும்.. வலது பக்கம் திரும்பு என்றால் வலதுபக்கம் திரும்ப வேண்டும்...நீ நடப்பதை நிறுத்தக்கூடாது..நடந்து கொண்டே இருக்கவேண்டும்..எது நடந்தாலும் பின்னால் திரும்பி பார…
-
- 2 replies
- 1.3k views
-
-
"உயிரே போனாலும் பெண்களை விட மாட்டோம் என்னும் சபரிமலை பக்தர்களுக்கு... " எல்லா சமயங்களும் மக்களுக்கு உண்மையை யும், நேர்மையையுமே போதிப்பதாகவும் அவை சகோதரத்துவத்தை வலியுறுத்துவதாகவும் ஆனால் மனித ர்கள் தான் தங்களுக்குள் சாதி, வர்க்க, பாலின பிரிவுகளை ஏற்படுத்திக் கொள்வதாகவும் கூசாமல் பொய் சொல்லும் மதவாதிகளை, நீதியின் தீர்ப்பின் பின்பும், சபரிமலை ஐயப்பன் கோவில் சுற்றாடலில், பெண்களை போகவிடாமல் தடுத்து நடைபெறும் அடாவடித்தனமும், அறிக்கைகளும், எச்சரிக்கைகளும், வன்முறைகளும் அம்பலப்படுத்தி இருக்கின்றது. இதற்கு திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் கேரள அரசின் நடவடிக்கைகள் உடந்தையாகவும் உள்ளன. பத்து அகவைக்கும் ஐம்பது அகவைக்கும் இடைப் பட்ட காலத்தில்…
-
-
- 2 replies
- 575 views
-