Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சமூகம் சிந்திக்க வேண்டிய அம்சங்களைப் பற்றி பிரதிபலிக்கும் படங்களை.. ஓவியங்களை.. இங்கு இணைக்க உள்ளோம். கள உறவுகளே நீங்களும் அப்படியான படங்களை அல்லது ஓவியங்களை கண்ணுற்றால் இங்கு இணைக்கலாம். (காட்டூன்களாக வேண்டாம்.) நன்றி முகநூல். நன்றி முகநூல்.

  2. ஓய்வூதியம் - சுப. சோமசுந்தரம் திருநெல்வேலி மாவட்டம் காரியாண்டி என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி தாத்தா தமது தொண்ணூறு வயதிலும் பனையேறும் தொழில் செய்து தம்மையும் தமது மனைவியையும் காப்பாற்றிக் கொள்கிறார் எனும் தகவல் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. அவர் போற்றுதலுக்குரியவர்; போற்றப்பட்டார் என்பது சரிதான். காட்சித் திரையில் இதனைக் கண்ட ஒவ்வொருவரும், "நம்மிடையே வாழ்வையே சாகசமாக ஏற்று இப்படி ஒருவர் வாழ்கிறார் !" என்று பெருமிதத்தில் நெஞ்சு விம்மியது வரை கூட சரிதான். "நம்மிடையே அரைசாண் வயிற்றுக்காக ஒருவரை தள்ளாத வயதிலும் அல்லல்பட வைத்தோமே !" என்னும் குற்ற உணர்வு இச்ச…

  3. படிக்கறை - சுப.சோமசுந்தரம் படிப்பில் கரை காண வேண்டியவன் படியில் கறை கண்ட அவலத்தை என்னவென்பது ? நாங்குநேரியில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த மாணவர்கள் தாழ்த்தப்பட்ட மாணவன் மற்றும் அவன் தங்கையின் மீது வீடு புகுந்து நிகழ்த்திய கொலை வெறித் தாக்குதல் இன்னும் தமிழ் நிலத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த சாதி வெறியின் குறியீடாய் வீட்டில் ரத்தக்கறை தோய்ந்த வாசற்படி சமூக வலைத்தளங்களில் வலம் வருவது ஈரக்குலை நடுங்க வைத்து நம் அடிவயிற்றைப் பிசைகிறது. சமூகப் பொறுப்புள்ள அனைவரும் நிலைகுலைந்து போய் நிற்கையில் சந்துக்குள் புகுந்து சிந்து பாடும் …

  4. வாருங்கள் பேசுவோம் ! இன்றைய கால கடடத்தில் நம் சமுதாயம் தாயகத்தில் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பல அதில் இதுவும் மிக முக்கியமான ஒன்று . "போதை காடடும்பாதை ". நம் இளைய சமுதாயம் சீர் கெட்டுப்போகிறது. வெளி நாட்டுக்கு காசு ...பெற்றோரின் கவனிப்பு இன்மை . உடல் உழைப்பின்மை அரச இயந்திரத்தின் திட்ட் மிட்ட் சதி ..போதையூட்டும் மருந்துகளின் தாராளா வரவு. என்பன ,. இதை தடுக்க என்ன செய்யலாம். உளவள ஆற்றுப்படுத்தலின் மையங்கள் ஒரு சில தான் உள்ளன. பணம் இதில் பெரும்பங்கு வகிக்கிறது.

  5. ``என்னைத் துரத்தின கணவர் முன்னால வாழ்ந்து காட்டணும்!'' - தன்னம்பிக்கை மனுஷி பிரியா துரை.வேம்பையன்நா.ராஜமுருகன் உளுந்தங்கஞ்சி விற்கும் பிரியா ( படம்: நா.ராஜமுருகன் ) வேலாயுதம்பாளையம் கடைவீதியில் சைக்கிளில் உளுந்தங்கஞ்சி விற்றுக்கொண்டிருந்த பிரியாவை எதேச்சையாகப் பார்த்தோம். அவரிடம் பேசினோம். ``என்னைக் காதலிச்சு திருமணம் பண்ணிக்கிட்ட என் வீட்டுக்காரர், ஏழு வருஷம் என்கூட வாழ்ந்தாரு. அப்புறம் என்னை விரட்டிவிட்டுட்டு, வேற பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. ரெண்டு பிள்ளைகளையும் விட்டுட்டு, செத்துடலாமானு எல்லாம்கூட எனக்குத் தோணுச்சு. ஆனா, `நாம ஏன் சாகணும். நம்மை உதாசீனப்படுத்தினவங்க முன்னாடி கம்பீரமா வாழ்ந்து காட்டணும்'னு நினைச்சே…

  6. ``என் 57 வயசு வரை பெண்ணாகத்தான் வாழ்ந்தேன்'' என வியக்கவைக்கிறார் திருச்சியைச் சேர்ந்த மூத்த திருநங்கை மோகனா அம்மா. தற்போது 75 வயது. திருநங்கைகள் தங்களுடைய உரிமைகளைப் பெறுவதற்கு எவ்வளவு போராடவேண்டியிருக்கிறது என்பது நாம் அறிந்ததே. இப்போதே இப்படி என்றால், அந்தக் காலத்தில் எப்படி இருந்திருக்கும்? ``என் சொந்த ஊர் ஆர்.எஸ்.மாத்தூர். அப்பா, அம்மா கூலிக்காரங்க. எனக்கு 4 அண்ணன், 3 அக்கா. 8 வது மகனாப் பிறந்தேன். 5 வயசுலேயே அப்பா இறந்துட்டாங்க. என் அம்மாதான் எல்லாமுமா இருந்தாங்க. சின்ன வயசிலிருந்தே பொம்பளை புள்ளைக விளையாட்டுன்னா ஆர்வம் அதிகம். பொம்பளை புள்ளை மாதிரிதான் நடந்துப்பேன். அதுக்குப் பெயர் `திருநங்கை'ன் எல்லாம் தெரியாது. 10 வயசுல வீட்டைவிட்டு வெளியேறினேன். லோக்கல்…

  7. குருபிரசாத் அனுபமா ``ரொம்ப இயல்பா, குழந்தை முன்னிலையில் பாலூட்டும்போது, `பாப்பாவுக்கு பசிக்குது, அம்மா பால் கொடுக்குறாங்க அவ்ளோதான்...'னு குழந்தையும் அதை இயல்பா எடுத்துக்கும். மார்பு குறித்த அதன் குழப்பமும் ஆர்வமும் குறையும்." டிஜிட்டல் யுகம் என்று வீறுகொண்டு நடந்தாலும், நம் சமூகத்தில் இப்போதும் மூடநம்பிக்கைகள் குறைந்தபாடில்லை. அதிலும், கர்ப்பம், தாய்ப்பாலூட்டுதல் இரண்டிலும் மூடநம்பிக்கைகள் அதிகம் உலாவிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த கர்ப்பகால ஆலோசகர் அனுபமா, கர்ப்பம், தாய்ப்பாலூட்டலில் உள்ள ஸ்டீரியோடைப்களைத் தொடர்ந்து உடைத்து வருகிறார். `விருக்ஷம்' என்ற தனது அமைப்பின் மூலம் கோவை, திருப்பூரில் …

  8. `அவரது செயலை சகிக்க முடியாமல் தயக்கத்தோடு அம்மாவிடம் சொன்னேன்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES 'சித்தப்பா தினமும் வீட்டுக்கு வருவார். அனைவரிடமும் கலகலப்பாக சிரித்துப் பேசுவார், தின்பண்டங்கள் வாங்கிவருவார். அவரை எல்லோருக்கும் பிடித்தாலும் எனக்கு அவரை ஒருதுளி கூட பிடிக்காது.' 'சித்தப்பா வீட்டுக்கு வந்ததும் அவரது மடியில் என்னை உட்கார வைத்து தொட்டுத்தொட்டு பேசுவார். மீசையால் என் முகத்தில் உரசுவார். அவர் மடியில் இருந்து எழுந்து ஓடிவிடலாம் என்று தவிப்பேன். அவரது கன்னத்தில் பளார் பளார் என்று அறைய வேண்டும், நகங்களால் பிறாண்ட வேண்டும் என்று உத்வேகம் உந்தும்.' இதைச் சொல்லும் 23 வயது அனாமிகாவின் முகத்தில் வேதனையும், கண்ணில் சீற்றமும் பொங்குகிறது. ஏழு அல…

  9. `பெண் மனது ஆழமானது’ என்று ஆணுக்கு சொல்லியிருக்கிற இந்த சமூகம், ஆண் மனது எப்படிப்பட்டது என்று பெண்ணுக்குச் சொன்னதாகவே தெரியவில்லை. தான் நேசிக்கிற ஒரு காரணத்துக்காகவே, `அவர் ரொம்ப நல்லவர்’ என்று சர்ட்டிஃபிகேட் கொடுப்பதற்கும், பொள்ளாச்சி சம்பவம் போல ஆபத்தில் மாட்டிக் கொள்வதற்கும், ஆண்களைப்பற்றிய சரியான புரிந்துணர்வு பெண்களுக்கு இல்லாததுதான் காரணம். அந்த வகையில் ஆண்களைப் பற்றி பெண்களுக்கு முழுமையாகப் புரிய வைத்துவிட வேண்டும் என்பதற்காக அவள் விகடனில் `ஆண்களைப் புரிந்துகொள்வோம்' என்கிற தொடரை எழுத ஆரம்பித்திருக்கிறோம். இந்தத் தொடர் ஆண்களின் தவறுகளை மட்டுமல்ல; அவர்கள் உலகத்து அவஸ்தைகளையும் பேசும். சென்ற இரு இதழ்களில், பிளேபாய் மற்றும் சாக்லெட் பாய் இயல்புகளையும், பெண்…

  10. ஜொமோட்டோ வாடிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு, `உணவுக்கு எந்த ஒரு மதமும் இல்லை' எனப் பதில் வந்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஜபால்பூர் நகரில் வசித்துவருபவர், அமித்சுக்லா. இவர் ஜொமோட்டோவில் உணவு ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், டெலிவரி கொடுக்கும் நபர் பெயரைக்கண்டதும், `ஆளை மாற்ற வேண்டும்' என நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு ஜொமோட்டோ சார்பில், `ஆளை மாற்ற முடியாது' என்று பதில் வந்ததால் அந்த நபர் உணவைக் கேன்சல் செய்துள்ளார். ட்விட்டரில் இது தொடர்பாக ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், `ஜொமோட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன். டெலிவரி எக்ஸிகியூட்டிவின் பெயர் ஃபயாஸ் என்று இருந்ததால், ஆர்டரைக் கேன்சல் செய்தேன். இது `ஷர்வான்’ என்ற புனித மாதம். ஆகவே முஸ்லிம் நப…

    • 0 replies
    • 427 views
  11. `உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்றால், உணவை வீணாக்குபவர்களை உயிரைப் பறிக்கும் எமனுக்கு சமமானவர்கள் என்றுதானே சொல்ல வேண்டும். covai hotel கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு எதிரே, தொடர்ந்து 81 வருடங்களாக ஹோட்டல் நடத்திவருகிறார், ரத்னவேல். `டேஸ்ட்டான உணவை, வேஸ்ட் பண்ணாம சாப்பிட்டா 5 ரூபாய் நாணயம் வழங்கப்படும்’ என்ற அறிவிப்போடு நம்மை வரவேற்றது, ராயல் ஹிந்து ரெஸ்டாரன்ட் (ஆர்.ஹெச்.ஆர்). லாபம் என்ற கடிவாளத்தில் கண்ணைக் கட்டி இயங்கும் ஹோட்டல்களுக்கு மத்தியில், சமூகப் பார்வையை விசாலமாக்கியிருந்தார் ஆர்.ஹெச்.ஆர் மேலாளர் ரத்னவேல். மேலாளரின் மகன் குருமூர்த்தி நம்மிடம் பேசினார். …

    • 2 replies
    • 666 views
  12. `உண்மையான போராளி அவர்!' - ஐ.ஏ.எஸ் கனவுக்காக ஆக்ஸிஜன் உதவியுடன் போராடிய லத்தீஷா மரணம் குருபிரசாத் லத்தீஷா ``எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நாம் அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். என்னால் முன்னேறிச் செல்ல முடியும் என்ற உந்துதல் தான் நம்மை வெற்றியை நோக்கி நகர்த்திச் செல்லும்” - இது லத்தீஷா உதிர்த்த வார்த்தைகள். ``ஒரு விஷயத்தைதான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன். நெருக்கடி சூழ்நிலைகளை தகர்த்து வெளியில் வருவதற்கு நாம் தயாராக வேண்டும். எதற்காகவும் பின்வாங்காமல், எப்போதும் பாசிட்டிவ்வாக சிந்திக்க வேண்டும். ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என முடிவெடுத்த பிறகு, எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்க வேண்டும். மனச்சோர்வு…

  13. #NoMoreStress "கல்யாணத்துக்குப் பிறகு மனைவியை சிவன், பார்வதி மாதிரி நம்மோட பாதியா நெனைச்சி மதிப்புக்கொடுக்கணும்னு ஒவ்வொரு ஆம்பளையும் நினைக்க ஆரம்பிச்சா குடும்பத்துக்குள்ள சண்டை, சச்சரவு இல்லாமப் போயிரும்!" தம்பதியருக்குள் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டால்கூட விவாகரத்து பத்திரம் வாசிப்பது மிகச் சாதாரணமாகிவிட்டது. ஏன், திருமணம் முடிந்த ஒரு வாரத்துக்குள்ளேயே தம்பதிக்குள் ஒத்துப்போகாவிட்டால் பிரிந்துவிடுவது என்று பரஸ்பரம் பேசி முடிவு செய்வதும் அதிகரித்து வருகிறது. தம்பதிக்குள் பெருக்கெடுக்க வேண்டிய காதல், அன்பு, பாசம், நேசம், புரிந்து கொள்ளும் பக்குவம், வெளிப்படுத்தவேண்டிய அந்நியோன்யம், விட்டுக்கொடுக்கும் பண்பு குறித்த அக்கறை இல்லாததால் இனிக்க வேண்டிய இல்ல…

    • 1 reply
    • 739 views
  14. கட்டுரை தகவல் எழுதியவர்,சுஷீலா சிங் பதவி,பி பி சி நிருபர் 6 மே 2023 "அவள் ஒரு இந்து, நான் ஒரு முஸ்லீம், ஆனால் அது எங்களுக்கு ஒரு பொருட்டில்லை. எங்களிடையிலான அன்பும் அதற்காக எந்த எதிர்ப்பையும் இணைந்து எதிர்கொள்வோம் என்பதும் மட்டும் உறுதி. எங்களின் மதங்கள் எங்களுக்கு ஒரு பொருட்டில்லை” இது மாலதியும் ருபீனாவும் சொல்லும் வார்த்தைகள். (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டு அவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன.) மாலதியும் ருபீனாவும் மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இவர்களின் காதல் கதை, அவர்கள் சந்தித்துக்கொண்ட பள்ளியில் தொடங்கியது. இருவரும…

  15. கந்தர்வக்கோட்டை அருகே காட்டுநாவல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கண்ணகி என்ற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்த பிரபுக்கும், கண்ணகிக்கும் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னிலையில் காட்டுநாவலில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. கண்ணகியை கரம்பிடித்த பிரபு, திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, முதலில் வீட்டுக்குச் செல்லாமல், தான் படித்த காட்டுநாவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மனைவியை கையோடு அழைத்துச் சென்றார். திருமணக் கோலத்தில், புதுமணத் தம்பதி பள்ளிக்கூடத்துக்கு வருவதை ஆசிரியர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். ஆசிரியர்களிடம் தன்னை அறிமுகப்படுத…

  16. `கறுப்புத் தோல் மீது ஏன் இந்த வெறுப்புப் பார்வை? `#being me?' பகிர்க பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் முதல் கட்டுரை இது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழ் சமூகத்தில், பல சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட நிறம் கறுப்பு. ஆனால் மனிதர்கள் கறுப்பாக இருந்தால்? அதுவும் பெண் என்றால்? பார்த்த நொடியில் உங்கள் தகுதி, குணம் என்று எதையும் யோசிக்காமல் உங்கள் நிறத்தை கொண்டு எடைபோட்டு ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள். நம்மில் பலரும் இதனை பிறர் கூற கேட்டு இருப்போம் "பொண்ணு கறுப்பா இருந்தாலும் கலையாக இ…

  17. `காதலர் நாள்` கொண்டாட்டம் தமிழர் மரபா? ::வி.இ.குகநாதன் 02/14/2021 இனியொரு... பெப்ரவரி 14 இல் உலகெங்கும் காதலர் நாள் கொண்டாடப்படுகின்றது. இந்த நாள் வந்தால் போதும், சிலர் தம்மைக் கலாச்சாரக் காவலர்கள் எனக் கூறிக் கொண்டு, அடாவடிகளில் இறங்கி விடுவார்கள். கேட்டால்: “காதலர் நாள் தமிழ்க் கலாச்சாரமன்று, ஆங்கிலேயக் கலாச்சாரம்” எனப் பொங்குவார்கள்; உண்மையில் அவர்களுக்குக் `கலாச்சாரம்` என்ற சொல்லே தமிழல்ல எனத் தெரியாத போது, தமிழ்ப் பண்பாடு எப்படித் தெரியப் போகுகின்றது. அவர்களை அணுகிப் பார்த்தால், அவர்களில் மிகப் பெருமளவானோர் சாதி வெறியர்களாக /மத வெறியார்களாக இருப்பதனைக் காணலாம். ஆண்டு முழுவதும் தமக்கிடையே சண்டை இட்டுக் கொள்ளும் இந்து-இசுலாமிய அடிப்படைவாதிகள் ஒ…

  18. `மகனுக்கு 18 வயது ஆனதும் தந்தையின் கடமை முடிந்து விடாது!' - ஜீவனாம்ச வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் மு.ஐயம்பெருமாள் Court (Representational Image) சம்பந்தப்பட்ட பெண் சம்பாதிக்கும் பணம், இரண்டு குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் செலவுகளுக்கே போதுமானதாக இருக்கிறது. இதனால் மகனின் படிப்புச் செலவுக்குப் பணம் இருப்பதில்லை. இரண்டு குழந்தைகளும் அம்மாவுடன் வசிக்கின்றனர். கணவன், மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளில் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொள்கின்றனர். ஆனால், குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பு பெரும்பாலான நேரங்களில் அம்மாவிடமே வழங்கப்படுகிறது. இதுபோன்ற விவாகரத்துகளில் விவாகரத்து பெறும் பெண்ணுக்கு குடும்ப நல நீதிமன்றங்கள் சொ…

  19. கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ரதி மேனனுக்கு வயது 59. அவரின் கணவர் கடந்தாண்டு உயிரிழந்துவிட்டார். மகள்கள் இருவரும் திருமணமாகி தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இதுபோன்ற சூழ்நிலையில், பெரும்பாலும் அம்மாக்கள் தங்கள் மிச்ச ஆயுளை தனிமையில் கழிக்கத் தள்ளப்பட்டிருப்பார்கள். ஆனால் ரதியின் மகள் பிரசீதா தன் தாயை அப்படி விட்டுவிடவில்லை. ‘வயது வெறும் எண்ணிக்கைதான். வாழ்வின் மீதி நாள்களுக்கு அம்மாவுக்கு துணை தேவை’ என்று எண்ணினார். தன் அம்மாவுக்கு, குடும்பத்தின் உதவியுடன் மறுமணம் செய்து வைத்துள்ளார். இதுகுறித்து பிரசீதா கூறுகையில், ``அம்மா, நான், என் சகோதரி நண்பர்களை போலத்தான் வளர்ந்தோம். எந்த வ…

  20. 'மனித நேயம்' என்ற வார்த்தை மரித்துக்கொண்டிருக்கும் இன்றைய அவசர உலகில், தன்னலமற்ற ஒருசில மனிதர்கள் தங்களின் செயல்களால் அதை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படியான ஒருவர்தான், புதுச்சேரியைச் சேர்ந்த ஜோசப். மாற்றுத்திறனாளியான இவர், புதுச்சேரி சாரம் பகுதியில் சிறிய அளவில் பிரின்டிங், பைண்டிங் மற்றும் ரப்பர் ஸ்டாம்ப் செய்யும் கடை வைத்திருக்கிறார். சமூகத்தின்மீது மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் இவர், தனது சொற்ப வருவாயில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருவதோடு, விளிம்புநிலையில் இருப்பவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவருகிறார். ஒப்பீட்டளவில், சராசரி மனிதர்களைவிட உயரம் குறைந்து காணப்படும் இவரின் சட்டைப் பையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஸ்மைலிகள், ர…

    • 0 replies
    • 904 views
  21. நண்பனுக்காக ஒரு மதிய வேளையில் செல்போன் Recharge கடையில் நின்றிருந்தேன் .. கடைக்காரர் சாப்பிட்டுக்கொண்டிருந்ததால் சிறிது நேரம் கடை வெளியே காத்திருக்க வேண்டியதாகி விட்டது . 1-2 மணியென்பதால் , பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. [size=4]வெயில் வேறு கொளுத்தியது..[/size] [size=4]அப்போது .......[/size] [size=4]45 - 50 வயதிருக்கும் ஒரு பெண்மணி அந்த கடையின் வாயிலைப் பார்த்தவாறே கடையின் நிழலில் நின்றார் . [/size] [size=4]சரி கடைக்கு வந்திருக்கிறார் என்று [/size]நானும் நண்பனும் தள்ளி வேறு பக்கம் போய் நின்றோம் . அவரோ முகத்தில் எவ்வித சலனமுமின்றி எங்களைப் பார்த்தவாறே நின்றிருந்தார் . சரி ஏதோ கேட்க வருகிறார் என்றால் அதுவும் இல்…

    • 0 replies
    • 782 views
  22. '' நீ நீயாக இருக்கக் கற்றுக்கொள்' : கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கம்பவாரிதி உரை _ வீரகேசரி இணையம் 3/12/2010 2:06:13 PM 4 Share _ கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நேற்று நடைபெற்ற அறிவொளி மன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கம்பவாரிதி இ. ஜெயராஜ் ஆற்றிய உரை அனைவரையும் சிந்திக்க வைத்தது. சிறந்த பேச்சாற்றல்மிக்க கம்பவாரிதி நடைமுறையில் நாம் கைக்கொள்ளும் பிழையான பழக்கவழக்கங்களை சுவாரஸ்யமாகக் கூறியதுடன் எமது சிந்தனை வட்டத்துக்குள் அந்த வார்த்தைகளை சுழலவும் விட்டமை சிறப்பம்சம். "நீ, நீயாக இருக்கக் கற்றுக்கொள்... எதற்காகவும் உனது சுயத்தை மாற்றிக் கொள்ளாதே" என்பதுதான் அவரது உரையின் பிரதான கருப்பொருளாக இருந்தது. கம்பவாரிதி உரைத்தவை சுருக்கமா…

  23. Started by நவீனன்,

    இன்று முதல் ''100 பெண்கள்'' தொடர் மீண்டும் ஆரம்பம் பிபிசியின் 100 பெண்கள் தொடர் நவம்பர் 21, திங்கள்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகிறது. ''100 பெண்கள்'' அடுத்த மூன்று வாரங்களுக்கு, பெண்கள் சந்தித்துள்ள முன்மாதிரி எதிர்ப்பு தருணங்களையும், கறுப்பு பெண்ணிய ஆராய்ச்சி, இசை, விளையாட்டு மற்றும் அரசியல் துறைகளில் உள்ள புகழ் பெற்ற பெண்களுடன் உரையாடல் என சுவையான பல அம்சங்களை உங்களுக்கு வழங்க இருக்கிறோம். அதில், நீங்கள் இதுவரையில் கேள்விப்பட்டிராத, வியத்தகு அனுபவங்களைப் பெற்ற பல பெண்களின் உணர்வுகளையும் உங்களுக்கு வழங்கவுள்ளோம். 100 பெண்கள் தொடர் என்றால் என்ன? ஒவ்வொரு ஆண்டும், உலகெங்கிலும் உள்ள செல்வாக்கான மற்றும் உத்வேகம் அளிக்கக்கூடிய 100 பெண்…

  24. Started by நவீனன்,

    100 பெண்கள்: உலகத்தை ஒரே வாரத்தில் பெண்களால் மாற்ற முடியுமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES உலகெங்கிலும் உள்ள செல்வாக்கான மற்றும் உத்வேகம் அளிக்கக்கூடிய ''100 பெண்கள்'' தொடரை ஆண்டுதோறும் பிபிசி வெளியிடுகிறது. உலகம் முழுதும் பெண்களை பாதிக்கும் பிரச்சனைகளை பற்றி விவாதிக்கப்படும் ''100 பெண்கள்'' இந்த ஆண்டு தொடரில், மாற்றம் ஏற்படுத்துவதற…

  25. ''இந்தச் சமூகம் எனக்குக் கொடுத்த பரிசுதான் இது'' - திருநங்கை ஷானவி தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் நாடு எவ்வளவுதான் வளர்ந்தாலும், திருநங்கைகள் தினம்தினம் போராடித்தான் அவர்களுடைய உரிமையைப் பெறுகிற நிலை இந்த நொடி வரை நிலவுகிறது. எங்களிடம் திறமை இருந்தும் இந்தச் சமூகம் ஏன் புறக்கணிக்கிறது? எங்களது உரிமைகளைக் கொடுப்பதற்கே ஏன் இவ்வளவு தயங்குகிறது என்கிற அவர்களின் வேதனையான கேள்விகளுக்கு, அரசும் சமூகமும் காதுகளைப் பொத்திக்கொண்டு இருக்கிறது. அந்தப் புறக்கணிப்பின் உச்சம்தான், 'தயவுசெய்து என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்' என்கிற ஒரு திருநங்கையின் முறையீடு. இந்த முறையீட்டால் கருணைக் கொலை செய்யப்பட்டிருப்பது, நமது மனிதத்தன்மைதான். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.