சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
மனைவி மட்டும்….. தந்தை பெரியார் காங்கிரஸ் மகா இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றிவந்த காலம் அது. தீவிர காந்தியவாதியாகத் திகழ்ந்த பெரியார், தானும் கதராடை உடுத்தி தன்னைச் சார்ந்தவர்களும் கதராடையை உடுத்த வேண்டும் என விரும்பினார். அது மட்டுமல்லாது கதர் துணிகளைத் தோளில் சுமந்து கொண்டு ஊர் ஊராகச் சென்று கூவி விற்று அனைவரும் கதராடை உடுத்தவேண்டிய அவசியத்தையும் உணர்த்தி வந்தார், ஆண்கள் மட்டும் அல்லாது பெண்களும் கதராடை உடுத்த வேண்டும் என்று கூறிவந்தார். இந்த சமயத்தில் பெரியாருக்கு ஒரு பிரச்சினை எழ ஆரம்பித்தது, ஊர் மக்கள் எல்லாரும் பெரியாரின் சொல் கேட்டு கதராடைகளை உடுத்த தொடங்கியபோது அவரது மனைவி திருமதி, நாகம்மை மட்டும் கதர் புடைவையை உடுத்த மறுத்துவிட்டார்.’ தன் மனைவியே கதர…
-
- 10 replies
- 1.7k views
-
-
எனக்குப்புரியவில்லை... இந்த மனிதர்கள்..உலகில் எவ்வளவு அசிங்கம்.. அக்கிரமம் பண்ணுபவர்கள் உள்ளனர்கள் .. அவர்களையெல்லாம் விட்டு நல்ல மனசுள்ள சில மனிதர் மனதை ஏன் காயப்படுத்துகின்றனர் என்று சிலர் வேலை அடுத்தவர் விடயங்களில் தலையிடுவதும் அவர்கள் மனதில் ரணம் ஏற்படுத்துவதுமாக இருக்கிறது.. அஜீவன் அண்ணா எனக்குத்தெரிந்த நல்ல மனிதர் அவரைக்கூட ஒருவர் அவதூறு பேசி இருக்கிறார்.. அது பொய்யான கருத்து என்பதே உண்மை.. சில ஜீவன்களுடைய வேலைப்பளு..வீட்டின் நிலவரம்..என்பன காரணமாக இங்கே அன்பாக உரையாடுகிறார்கள்.. ஏன் அவர்கள் மனதை புண்செய்கிறீர்கள்.. கண்டு கொள்ளாமல் செல்வது அவ்வளவு கடினமா.. கருத்துக்கள்.. அரட்டையாவதில் அவ்வளவு குற்றம் ஏன் காண்கிறீர்கள்..
-
- 6 replies
- 1.7k views
-
-
விழிப்பாய் மனமே... நாளை மறுதினம் விடியப்போகும் ஒரு பொழுதுக்காக இன்று எத்தனை எத்தனையோ இதயங்கள் ஏங்கிக்கொண்டிருக்கும். ஆம்! பெப்ரவரி 14ஆம் திகதி, உலகளாவிய ரீதியில் அன்பைப் பரிமாறும் தினமான 'வெலன்டைன் டே' கொண்டாடப்படவுள்ளது. இத்தினம் ஆரம்பித்தமைக்கான கதைகள் பல உலாவருகின்றன. எனினும், பெரும்பாலானவர்கள் நம்பும் கதை, காதலர்களைச் சேர்த்து வைத்த 'வெலன்டைன்' என்ற பாதிரியார் கொல்லப்பட்ட தினத்துக்குரிய கதையே. கி.பி. 2ஆம் நூற்றாண்டில் ரோமப் பேரரசை 2ஆம் கிளாடியஸ் மன்னர் ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்காலத்திலின்போது இராணுவத்தில் சேர்வதற்கு ஆண்கள் மறுத்தனர். மக்கள், குடும்பம் குடும்பமாக இருப்பதும், காதல் ஜோடிகளாகத் தி…
-
- 0 replies
- 1.7k views
-
-
எனக்கு ஒவ்வொரு விடியலும் சோகமாக இருக்கிறது. யாராவது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தால் நான் துடித்துப்போய் அழுது விடுகிறேன். ஏன்என்றால் எனக்கு இப்போது அப்பா இல்லை. அம்மா இல்லை. அண்ணன் இல்லை. அனைவருமே தற்கொலை செய்து கொண்டார்கள். நான் மட்டும் இப்போது தனியே... தன்னந்தனியே...! என் குடும்பமே தற்கொலை செய்யவேண்டிய காரணம் என்ன? என்ன நடந்தது எங்கள் குடும்பத்தில்? நான் மட்டும் எப்படி தப்பிப்பிழைத்து- எப்படி இருக்கிறேன்?... எல்லாவற்றையும் நானே சொல்கிறேன்.. என் அப்பா பெயர் வினோத். அம்மா சியாமளா. எனக்கு அகில் என்ற அண்ணனும் இருந்தான். அவன் ஐந்தாம் வகுப்பிலும், நான் இரண்டாம் வகுப்பிலும் படித்துக்கொண்டிருந்தோம். என் அப்பா ஆட்டோ டிரைவர். அவருக்கு ஒரு பைக்கும் இருந்த…
-
- 1 reply
- 1.7k views
-
-
பண்புக்கு கிடைத்த பரிசு மரியாதையுடனும் நாகரிகமாகவும் நடந்து கொண்ட ஒரு எளிமையான செயல் பிலிப்பைன்சில் ஒருவருக்கு பெரும் பலனை அளித்திருக்கிறது. அந்தநபர் தேசிய லாட்டரியில் 17 மில்லியன் டாலர்கள் இந்த செய்கையால் வென்றுள்ளார். லாட்டரி சீட்டை வாங்க வரிசையில் நின்ற அவரை, நாகரிகமில்லாமல் தள்ளிவிட்டு முந்திக்கொண்டு பரிசுச்சீட்டை வாங்கினார் ஒரு பெண்மணி. ஆனால் அவரோ, அந்தப் பெண்ணை மிகவும் வினயமாக முன்னால் செல்ல அனுமதித்தார். அந்தப் பெண் வாங்கிய சீட்டுக்கு ஒரு பரிசும் விழவில்லை. ஆனால் இவர் வாங்கிய சீட்டுக்கு பெரும் பரிசுத் தொகை கிடைத்தது. பரிசை வென்ற இந்த ஆண் யார் என்ற விவரம், அங்கு ஆள் கடத்தல்கள் நடக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதால், ரகசியமாக வைக்கப்பட்…
-
- 3 replies
- 1.7k views
-
-
புகைத்தல் வெறும் பழக்கமல்ல, அது ஒரு நோய் புது வருஷத்தைத் தொடங்கும்போது “இந்த வருஷமாவது சிகரெட் பிடிக்கிறதை நிறுத்திடணும்” என்று வைராக்கியத்துடன் கிளம்புபவர்கள் பொங்கல் முடிவதற்குள் புகைபிடிப்பதை மீண்டும் தொடர்வதைப் பார்த்திருப்போம். பலரும் சொல்வதைப் போல் புகைப் பழக்கத்தை நிறுத்துவது சற்று சிரமமான காரியம்தான். ஆனால், மனது வைத்தால் முடியாதது எதுவும் இல்லை. எனது அனுபவமே அதற்கு உதாரணம். அப்பா ஆசிரியர். ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டவர். ஆயுளுக்கும் பள்ளிக் கூடத்தில் தொண்டை வறளக் கத்தியதும், ஓய்வுநேரத்தில் புகைத்த கோபால் பீடிகளும் அவருக்குத் தீராத இருமலைத் தந்தன. பள்ளியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, திடீரென்று ஆஸ்துமா தாக்குலுக்கு ஆளாகி, உடுமலை அரசு மருத்துவமனையில் சேர…
-
- 6 replies
- 1.7k views
-
-
சேர்ந்துவாழும் உறவு திருமணத்துக்கு மாற்றாகுமா? ஆர்.அபிலாஷ் சேர்ந்துவாழும் (Live-in together) உறவுகள் பற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் முன்னேயே இதைப் போன்று திருமணமற்ற உறவுகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் தீர்ப்புகள் 2008இல் இருந்தே சில வந்துள்ளன. ஆனால் சமீப தீர்ப்பு, அதில் செக்ஸுக்கு தரப்பட்ட அதிகாரபூர்வ அந்தஸ்து காரணமாக பரபரப்பான விவாதத்துக்கு உள்ளானது. ஏற்கனவே விவாதங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதைப் போல இத்தீர்ப்பு செக்ஸ் வைத்தால் திருமணம் என எளிமைப்படுத்தவோ வலியுறுத்தவோ இல்லை. தொடர்ந்து குறிப்பிட்ட ஒரு கால அளவுக்குத் தம்பதியினர் சேர்ந்திருந்தால் அது திருமணமாக அங்கீகரிக்கப்படலாம் என்கிறது. கூடவே “உடலுறவு கொண்டிருந்தால்” எனும் சொற்களும் சேர, சிலர் அதை…
-
- 1 reply
- 1.7k views
-
-
"மாற்றம் தேவை" -------------------------- இன்றைய பள்ளிச்சாலைகளில் நாம் பயிலும் விஷயங்கள் நமது ஆன்ம லாபத்திற்கு எந்த அளவு துணை புரிகிறது என்று அறிதல் இன்றியமையாதது. தனிப்பட்ட மதபோதனை கல்வி நிலையங்களில் இடம் பெறக் கூடாதாம். ஆனால் அறநெறிப் போதனையை (Moral Instruction) அலட்சியம் செய்தலும் கூடாதாம். இது இப்போது நிலவும் கொள்கை. கல்வியின் பயன் என்ன என்பது பற்றி நன்கு சிந்தியாத, சிந்திக்க மறுக்கும் மாந்தரின் செயலால், சமயபோதனையை முற்றிலும் மறந்து நிற்கிறது நமது தமிழகம். திருவள்ளுவரின் "கற்றதனால் ஆயபயனென்கொல் வாலறிவன், நற்றாள் தொழா அரெனின்" என்ற பாடல் கல்விக் கொள்கையை உருவாக்குவோர் உளத்தில் அழியா இடம் பெறவேண்டிய பாடலாகும். வாலறிவன் யார்? அவன் நற்றா…
-
- 2 replies
- 1.7k views
-
-
ஒரு நண்பர், 'கடைக்கு போனேன். இரண்டு லாட்டரி சீட்டுகள் வாங்கினேன். உனக்கு ஒன்று இந்தா. அதிஷ்டம் இருந்தால் வெல்லு' என்று சொல்கிறார். நீங்கள் காலைல சாப்பாடு வாங்கிக் கொடுத்தபடியால்.... லாட்டரி சீட்டுக்கான பணம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. உங்களுக்கு அதிஷ்டம் இருந்தது. ஒரு இலட்ச்சம் விழுந்து விட்டது. சும்மா இரகசியமா வைச்சிருக்காம, உடனே போனைப் போட்டு மச்சி விழுந்திடுது மச்சான்... வா... தண்ணி அடிச்சு கொண்டாடலாம் என்கிறீர்கள்.. ஒரு 5,000 நண்பருக்கு கொடுத்துவிடலாம் என்று மனதில் நினைக்கிறீர்கள். நல்ல தண்ணீல, மச்சான், நீ 5,000 எடு, மிகுதியை எனது பாங்குக்கு மாத்து என்று நண்பர் உறுதியாக, தெளிவாக சொல்கிறார். இப்ப என்ன செய்வது ? ( ஓ, கொஞ்சம் பொறுங்கோ…
-
- 10 replies
- 1.7k views
-
-
பெயரும் ஆண் அல்லது பெண்ணும் எனக்கு ஒரு சந்தேகம் இங்கு மட்டுமல்ல பல இணையத்தளங்களிலும் கருத்துக்களங்களில் எழுதுபவர்கள் ஆண்கள் பெண் பெயருடனும் பெண்கள் ஆண் பெயருடனும் தம்மை பதிந்துவிட்டு எழுதுகின்றார்கள். நாம் வேறு எங்கும் போகவேண்டியதில்லை யாழிலேயே அது தற்போது அதிகரித்துவருகிறது. அதற்கு அத்தாட்சியாக ஆளையாள் தேடுவதையும் தனி மடல் போடும்படி கேட்பதையும் தற்போது கூடுதலாக பார்க்கக்கூடியதாக இருக்கிறது. ஆனால் என்னைப்பொறுத்தவரை ஆண் பெண் இருபாலாருக்கும் மனதளவிலும், எழுத்தளவிலும், ஏன் சிந்திக்கும் அளவிலும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. உதாரணமாக (ரதி மன்னிப்பீர்களாக) சாதாரணமாக ரதி படுக்கத்தான் கூப்பிடுகின்றேன் என்று எழுதுவார். என்னைப்பொறுத்தவரை ஒரு பெண் இப்படி …
-
- 2 replies
- 1.7k views
-
-
உண்மையான அர்த்தம் என்ன..? ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்....???
-
- 4 replies
- 1.7k views
-
-
மீ டூ: பத்திரிகையாளர் பல்லவி கோகோயின் கதை! பல்லவி கோகோய் சமீப காலமாக மீ டூ விவகாரம் பூதாகரமாக வெடித்துவருகிறது. இயக்குநர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரின் மீதும் மீ டூ புகார்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. இந்நிலையில், தன்னுடைய வாழ்க்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பரால் ஏற்பட்ட கொடூரமான நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் பத்திரிகையாளர் பல்லவி கோகோய். ஏசியன் ஏஜ் செய்திதாளில் எடிட்டர் இன் சீப் ஆக இருந்த எம்.ஜே.அக்பரை எனக்குத் தெரியும். அவர் சிறந்த பத்திரிகையாளர். அவரும், தன்னுடைய அதிகாரத்தை வைத்து என்னை இரையாக்கினர் என்கிறார் பல்லவி கோகோய். 23 ஆண்டுகளாக மூடிவைத்திருந்த வாழ்வின் மிக வலி மிகுந்த நினைவுகளை…
-
- 4 replies
- 1.7k views
-
-
பெண்கள் உயர் பதவிகளில் இல்லை ஏன்? ஆரம்பப் பள்ளி முதல் மேல் நிலைப்பள்ளி வரை மாணவர்களை விட மாணவிகளே சிறந்த முறையில் படிக்கின்றனர். பொதுத் தேர்வுகளிலும் அதிக விழுக்காட்டில் தேறுகின்றனர். மதிப்பெண் பெறுவதிலும் முதலிடத்தில் உள்ளனர். இவை எல்லாம் மகிழ்ச்சி அடைய கூடியவைகள் தான். இந்த திறமைகள், புத்திசாலித்தனம் எங்கு சென்று அடைக்கலம் ஆகின்றன. பெண்கள் ஏன் தொழில் வர்த்த நிறுவனங்களில் உயர் பதவிகளை எட்டிப்பிடிப்பதில்லை. நாம் ஏற்றுக் கொண்டாலும், மறுத்தாலும் அத்தி பூத்தார் போல் 3.3 விழுக்காடு பெண்களே உயர் பதவிகளில் உள்ளனர். இது பெண்களை குறைத்து மதிப்பிடவோ அல்லது கற்பனையான தகவல் அல்ல. அசோசெம் என்று அழைக்கப்படும், இந்திய வர்த்தக மற்று…
-
- 3 replies
- 1.7k views
-
-
''சாகுற வரைக்கும் என் உழைப்புல வயிறு நிறையணும்!'' - 78 வயது வைராக்கிய பால்காரம்மா "எனக்கு வயசு 78. மூணு பொண்ணுங்க இருந்தாலும், என் உழைப்பில் கிடைக்கும் வருமானத்துலதான் என் வாழ்க்கையை நடத்திட்டிருக்கேன். இந்த உசுரு இருக்கிற வரை இப்படித்தான் வாழ்வேன்" என வைராக்கியக் குரலில் பேசுகிறார் பத்மாவதி. சென்னை, கோடம்பாக்கம் பகுதியின் 'பால்காரம்மா'. "நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். ரொம்பவே கஷ்டமான குடும்பம். நல்லா படிப்பேன். ஆனாலும் வசதி இல்லாத காரணத்தால் ஆறாவதுக்கு மேல பெற்றோர் என்னைப் படிக்க அனுப்பலை. அக்கம் பக்கத்துல வீட்டு வேலைகள் செய்துட்டிருந்தேன். 2…
-
- 1 reply
- 1.7k views
-
-
` எதற்காக மஞ்சள், சிவப்பு நிறக் கயிறுகள்?' - பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பதறவைத்த அரசுப் பள்ளிகள் தங்கள் சாதியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக, கைகளில் பச்சை, சிவப்பு, மஞ்சள், காவி நிறங்களில் கயிறு கட்டிக்கொள்வது தென் மாவட்ட இளைஞர்களிடையே பரவலாக இருந்துவருகிறது. ஒருசில கிராமங்களில் மின்கம்பங்களில் தங்கள் சாதியைக் குறிக்கும் கலர் பெயின்ட் அடித்து அடையாளத்தை வெளிப்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது. இச்சூழலில், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சாதியை அடையாளப்படுத்தும் வகையில் மாணவர்கள் கையில் கயிறு அணிந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. இது…
-
- 14 replies
- 1.7k views
-
-
புலம்பெயர் நாட்டில் அல்லது இலங்கையில் ஒரு அறக்கட்டளை அல்லது தொண்டுநிறுவனம் ஆரம்பிக்கவேண்டும் என்றால் யாரிடம் அனுமதி பெறவேண்டும்? அதிலுள்ள சட்டச்சிக்கல்கள் என்ன? மேலதிக விபரங்கள் தேவை தெரிந்தவர்கள் தயவுசெய்து கூறுங்கள்.
-
- 9 replies
- 1.7k views
-
-
'' நீ நீயாக இருக்கக் கற்றுக்கொள்' : கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கம்பவாரிதி உரை _ வீரகேசரி இணையம் 3/12/2010 2:06:13 PM 4 Share _ கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நேற்று நடைபெற்ற அறிவொளி மன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கம்பவாரிதி இ. ஜெயராஜ் ஆற்றிய உரை அனைவரையும் சிந்திக்க வைத்தது. சிறந்த பேச்சாற்றல்மிக்க கம்பவாரிதி நடைமுறையில் நாம் கைக்கொள்ளும் பிழையான பழக்கவழக்கங்களை சுவாரஸ்யமாகக் கூறியதுடன் எமது சிந்தனை வட்டத்துக்குள் அந்த வார்த்தைகளை சுழலவும் விட்டமை சிறப்பம்சம். "நீ, நீயாக இருக்கக் கற்றுக்கொள்... எதற்காகவும் உனது சுயத்தை மாற்றிக் கொள்ளாதே" என்பதுதான் அவரது உரையின் பிரதான கருப்பொருளாக இருந்தது. கம்பவாரிதி உரைத்தவை சுருக்கமா…
-
- 2 replies
- 1.7k views
-
-
ஹாய் யாழ் கள உறவுகளே..... நாளைக்கு ஏப்ரல் பூல் யார் யார எப்பிடிலாம் ஏமாத்தலாம் என்று ரூம் போட்டு யோசிச்சிட்டு இருப்பிங்க........ இதெல்லாம் நாங்க ஊரில இருந்த பொழுது தான் சிறப்பா ஏமாத்தி இருப்பம்.... இல்லை ஏமாந்து இருப்பம்.... So நான் கேக்க வாறது என்னனா...... உங்க அனுபவங்களா எங்களோடும் பகிர்ந்துக்கலாமே....... யார் யார எப்பிடிலாம் fool பண்ணினிங்க? யார் கிட்ட நீங்க ஏமாந்திங்க? அதனோட அனுபவங்கள்..... இந்த வருஷம் யாருக்கு எப்பிடி அல்வா கொடுக்க இருக்கிங்க..... மனசுல வாரத்தை எல்லாம் எடுத்து விடுங்க..... கேக்க நாங்க ரெடி.... சொல்ல நீங்க ரெடியா....
-
- 12 replies
- 1.7k views
-
-
முணுக்கென்றால் நிகழும் விவாகரத்துகள் - ஆர். அபிலாஷ் சமீபத்தில் ஒரு தோழி தனது மணமுறிவு பற்றி பேசிக் கொண்டிருந்தார். “என் திருமண வாழ்வு மகிழ்ச்சியற்றதாகி விட்டது. இனிமேலும் இதையே பொறுத்துக் கொள்ள முடியாது. யாருக்காகவும் நான் என் நிம்மதியை தியாகம் செய்ய இயலாது. நான் என் மன ஆரோக்கியத்தை காப்பாற்ற வேண்டுமல்லவா? ஆகையால் என் கணவரிடம் இதைப் பற்றி ஒருநாள் விவாதித்தேன்.” “அவர் என்ன சொன்னார்?” “அவர் என்ன சொல்வதற்கு? எல்லா கணவர்களையும் போல முரண்டு பிடித்தார். என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார். மிரட்டினார். அடிக்க வந்தார். அடுத்த நாள் முகத்தை திருப்பிக் கொண்டு பேசாமல் இருந்தார். மறுநாள் வந்து என்னிடம் அழுதார். ஆனால் அவரை விட்டு விலகுவது என நான் அப்போது உறுதிய…
-
- 3 replies
- 1.7k views
- 1 follower
-
-
அண்மையில் சில செய்திகளும் கருத்துக்களும் என்னில் சில கேள்விகளை விதைத்தன... சிறுவர்களை வைத்து வியாபாரங்கள் நடக்கின்றன சிறுவயதிலேயே பிலபல்யம் ஆக்கப்படுவதால் சிறுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது சிறுவர்கள் அவர்களை அறியாமலேயே ஆபத்துக்குள் தள்ளப்படுகிறார்கள் என்பன போன்ற கருத்துக்களை பார்க்கமுடிந்தது. இதை யோசித்துப்பார்த்தபோது இது தமிழர்களுக்கு மட்டும் பிரச்சினையான ஒன்றில்ல. அண்மையில் நானும் ஒரு கேள்வியை எனது பிள்ளைகளிடம் எழுப்பியிருந்தேன் ஒரு கார் விளம்பரத்துக்கு ஒரு சிறுவன் விளம்பரம் செய்வது பிரெஞ்சுத்தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது மக்களிடம் கேட்டேன் இதற்கு அவருக்கு சம்பளம் கொடுக்கப்படும் அப்படியாயின் சிறுவர்களை தொழிலாளர்களாக பாவித்தல் தடை என்…
-
- 8 replies
- 1.7k views
-
-
புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் கருவிகளை எளிதில் வாங்கக்கூடியவர்கள், வாங்கியபிறகு அதன் முழுபயன்பாட்டை தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள், அவர்களுக்கு உதவுபவர்தான் தாஸ் என்கின்ற தணிகாசலம் ஸ்ரீதர் தாஸ்.சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவரான தாஸ் அங்குள்ள அசோக் லேலண்டு நிறுவனத்தின் வெள்ளிவிழா ஊழியர். அங்கு வேலை பார்த்த நேரம் போக மீதி நேரம் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக கிட்டாரில் ஆரம்பித்து போட்டோகிராபி வரை பல விஷயங்களை கற்றுக்கொண்டார். அதிலும் ஆப்பிள் ஐமேக் நிறுவனத்தில் இரண்டு வருடம் பைனல் கட் புரோ (fcp)வீடியோ எடிட்டிங் படித்து உயர் சான்றிதழ் பெற்றவர். இவருக்கு உள்ள நல்ல பழக்கம் தான் கற்றதை தனக்குள் வைத்துக்கொள்ளாமல் கேட்பவர்களுக்கு எல்லாம் சொல்லித்தருவார்.…
-
- 0 replies
- 1.7k views
-
-
பரீட்சையில் பாஸாக வேண்டுமா? வேலை கிடைக்க வேண்டுமா? வெளிநாடு போக வேண்டுமா? தீராத நோய்கள் தீர வேண்டுமா? காதலன்/காதலியைக் கைப்பிடிக்க வேண்டுமா? பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டுமா? சினிமாவில் சேர ஆசையா? கவலை வேண்டாம். உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள எளிய வழி உங்கள் மசிரை திருப்பதிக்கு வந்து மழுங்க வழித்துக் கொள்வது. ஏற்கெனவே மொட்டையடித்தவர்கள் பயன் பெற்றுளார்கள். பயன்பெற்றவர்கள் மீண்டும் மொட்டையடிக்க வருகிறார்கள். * உலகத்தில் வத்திக்கானுக்கு அடுத்தபடியான பணக்கார ஆலய நிர்வாகம் திருப்பதிதான் என்கிறார்கள். கோயில் நிர்வாகம் சுமார் 120 கோடி டொலர்களை வருடாந்தம் செலவழிக்கிறதென்றால், கிடைக்கும் வருமானம் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பக்த கோடிகளால் கிடைக்கும் கோடிக்கணக்…
-
- 2 replies
- 1.7k views
-
-
[size=4]“இவ ஒன்றும் சாப்பிடறா இல்லை.” கடுப்பாகச் சொன்னான்.[/size] [size=4] RAJA RAVI VARMA'S PAINTING OF A NORTH INDIAN VILLAGE GIRL அவளில் அக்கறையும் கனிவும் காட்டுவதைவிட குற்றம் சாட்டும் தொனி ஓங்கியிருப்பதாகத் தெரிந்தது. ஷோ கேசில் உள்ள பொம்மைபோல அலங்கரிக்கப்பட்டிருந்தாள்;.[/size] உடைகளையும், நகைகளையும் பளிச்சென அணிந்திருந்ததைப் பார்த்தபோது புதுமணத் தம்பதிகளாகத் தோற்றினர். “எதைக் கண்டாலும் ஓக் ஓக் என ஓங்காளித்துக் கொண்டே இருக்கிறா. ஷி இஸ் நொட் ஈடிங் அட் ஓல். ஒண்டையும் விரும்பிச் சாப்பிடுகிறா இல்லை.” அவனது ஆங்கிலம் கலந்த தமிழ் உச்சரிப்புத் தொனி லண்டன்வாசி என்பதைக் கோடி காட்டியது. “…வயிறும் ஊதல…
-
- 0 replies
- 1.7k views
-
-
இளம் வயதில் பதின்ம வயதுப் பருவம் காதலுக்கான முதல் பருவம். இந்த வயதில்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் துவங்குகிறது. காதலிக்க விரும்புபவர்களுக்காக மட்டுமல்ல, காதலைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காகவும் காதலைப் பற்றி சிலரின் கருத்துக்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது. * காதல் - இருமல் - புகை - பணம் ஆகியவைகளை நீண்ட காலம் மறைக்க முடியாது. - பாரசீகப் பழமொழி * சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும். அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும். - காத்தரின் ஹெப்பர்ன் * காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை. - பிரயன் வாங் * காதலும், குருட்டுத்தனமும் இரட்டைச் சகோதரிகள் -ரஷ்யப் பழமொழி * ஒருவனுக்குக் காதல் எ…
-
- 13 replies
- 1.7k views
-
-
பேஸ்புக்கை விட்டு ஏன் விலக நினைக்கிறோம்? ஆர்.அபிலாஷ் ஒரு குடும்பச் சண்டை எப்படி இரண்டு நாட்களில் சமூக வலைத்தளம் மூலம் வெடித்துக் கட்டுப்பாட்டை கடந்து வளர்ந்து சுனந்தா புஷ்கரைத் தற்கொலைக்கு தூண்டியது என்பதை சமீபத்தில் பார்த்தோம். சமூக வலைத்தளங்கள் நம்மைத் தேவைக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட வைப்பதுடன், யாரையும் பழிவாங்கும் அபார அதிகாரமும் நமக்கு உள்ளதாக ஒரு போலி தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது. இது தன் கணவனின் காதலியாகத் தான் நம்பின பாகிஸ்தானியப் பத்திரிகையாளரைப் பழிக்கும்படி, ஒற்றர் என அவமானிக்கும்படி சுனந்தாவை வெறியேற்றுகிறது. பிறகு இந்தப் பிரச்சினை அவர் கைமீறிப் போகிறது. டிவிட்டரில் குற்றச்சாட்டை சுனந்தா எழுதவில்லை, யாரோ அதை ஹேக் செய்து விட்டார்கள் என சசி தரூர் கூ…
-
- 14 replies
- 1.7k views
-